Thursday, June 01, 2006

போலிகள் யார்?

இன்று காலை முதல் ஒரு விவ"காரம்" வலைப் பதிவர்கள் இடையே தொடர்ந்து பரபரப்பாகியுள்ளது.என் பெயரில் எழுதுபவர் நானல்ல அவர் போலி என்றும் இல்லை அவர்தான் போலி என்றும்.
முதலில் சில கருத்துக்கள்:
1. போலி யாரென்று யாரும் யாரையும் குறைசொல்ல முடியாது.
2. நான் எனது சொந்த பெயரில் வெளியிடும் என் கருத்துக்கள் எனது பெயரிலேயே எழுதும் மற்றவரின் கருத்துடன் மாறுபட்டிருந்தால் நான் போலியா? அல்லது அவர் போலியா?
3. சொல்பவரின் கருத்துக்கு முதலிடம் தர வேண்டுமா சொன்னவருக்கு முதலிடம் தர வேண்டுமா?
4. தனது பெயரில் வந்திருக்கும் பின்னூட்டம் தன்னுடையது அல்ல என்பவர் எதற்க்கு முதலிடம் கொடுக்கிறார்?
5. அதிமுக. திமுக இரண்டு கட்சிகளை சார்ந்தவரும் வெளியிடும் கருத்துக்கள் சரியென கருதும் போது அவற்றை வெளியிடுவது தவறரா?
6. அப்படி கருத்து சொன்னவர் திமுகவை சேர்ந்தவராக இருப்பின் அவர்கள் அடிவருடிகள் என்பதும் அதிமுகவை சேர்ந்தவராக இருப்பின் அடியாள் என்பதும் சரியா?
7. தனது பெயரில் வெளியாவதால் மட்டுமே இன்னொருவர் வெளியிடும் கருத்தில் தனக்கு உடன்பாடில்லை என்பதால் அவரை போலியென்பதும் அவரின் பின்னூட்டங்களை வெளியிடுவது கூடாது என்பதும் சரியா?
8. கருத்து மோதல்கள் நிகழும்போது தனது கருத்துக்களை சொல்பவர் எதிராளியின் கருத்தோடு உடன்படாத சமயத்தில் தனது கருத்தை வாபஸ்செய்துகொள்கிறேன் என்பது சரியான முடிவா? இதைவிட இடுகைகளுக்கு எதுவும் எழுதாமலேயே இருக்கலாமே?

1. ஜெ.வை ஆதரித்து இங்கு எழுதும் xxxxx xxxxxx , xxxxxxxxx ஆகியோரும் அடியாள்கள்தானா?இவர்களுக்கும் ஜெ. தர்மசங்கடத்தை கொடுக்கிறார் இல்லையா?
சொன்னது:Anonymous
2.இந்த அனானி நீங்க தானே...:)கோச்சுக்கப்படாது...ஏன் தி.மு.க வை ஆதரிக்கும் லக்கிலூக்கை சொல்வீர்களா..எங்க ஊருல அ.தி.மு.க / தி.மு.க எல்லாம் ஒன்னுக்குள்ள ஒன்னா இருக்கோம்...:) நானும் xxxxxx மாதிரி...
சொன்னது:xxxxxxx
3.ஒரு பாப்பாத்திக்காக ஒதை வாங்க இந்த நாய்ங்களுக்கு என்ன புத்தி கித்தி பேதலிச்சுப் போச்சா?
சொன்னது: Anonymous
4.இதே கலைஞரிடம் சொல்லியிருந்தால், "ஆம் நான் அடியாள் தான், மக்களுக்கு அடியாள், என் தொண்டனுக்கு அடியாள்" என்று சொல்லி இருப்பார். இதையே ஜெயேந்திரரிடம் சொல்லியிருந்தால் "ஆம் நான் அடியாள் தான், இறைவனுக்கு அடியால் என்று சொல்லியிருப்பார்".பாவம் அதிமுக. அங்கு வாய்ச்சொல் வீரர்கள் இல்லை.
சொன்னது xxxxx
5 .டர்..டர்..டர்ருருரு...ஆட்டோ ஸ்டார்ட் பண்ணியாச்சு தல..:)
சொன்னது xxxx
6.அதான் ஜெயாவோட அடிமை xxxxxxx இருக்கானே?
7.இப்படி தனிமனித தாக்குதலுடன், எந்த ஒரு நோக்கமும் இல்லாமல் வரும் பிண்ணூட்டங்களையும் வெளியிடும் அண்ணன் மகேந்திரன் வாழ்க!.எண்ணம் போல வாழ்வு வண்ணமயமாகட்டும்!.
8.//பாவம் அதிமுக. அங்கு வாய்ச்சொல் வீரர்கள் இல்லை.//சேகர்பாபு, மதுசூதனன், சமீபத்திய தாதா பாண்டுரங்கன் இவர்கள் எல்லாம் அடியாட்கள் இல்லையா xxxxxxx?
9.//தனிமனித தாக்குதல்களையும்....//நீங்கள் முன்னர் அதே அனானிக்கு எழுதியுள்ள பின்னூட்டத்தை மறுமுறை படிக்கவும்... அதில் நீங்கள் எதுவும் ஆட்சேபனை தெரிவிக்காத காரணத்தால் அனானியின் பின்னூட்டம் வெளியிடப்பட்டது மேலும் நான் முதலில் அதிமுக xxxxxxxxx என்று வேறு தவறாக எண்ணிவிட்டேன். அதனால்தான் அது தனிமனித தாக்குதலாக தெரியாமல் போனது. மன்னிக்கவும். //வாழ்வு வண்ணமயமாகட்டும்// நன்றிகள் கோடி அன்பரே!:))
சொன்னது:
மகேந்திரன்.பெ
10.அய்யா xxxxxxx நீங்க என் பக்கத்துல வந்து படிச்சா படிச்சதுக்கு கருத்து சொல்லுங்க அத விட்டுட்டு கருத்து சொன்னவருக்கு கருத்து சொல்ரதெல்லாம் நல்லால்ல ஆமா:))))
சொன்னது:
மகேந்திரன்.பெ (இதற்கு xxxxxxx இருந்து வந்த பதில் நேரடியாக கருத்து சொன்ன நபரின்மேல் கோபம் காட்டியதால் வெளியிடப்படவில்லை.)
11. என்ன தான் ஜெ.தி.மு.க சட்டங்களை எல்லாம் மீறினாலும் ஜெயா பாப்பாத்தி ஆயிற்றே. அதனால் நாங்கள் ஜெயாவை தான் ஆதரிப்போம்.
சொன்னது:xxxxxxxx
12.கடைசியாக வெளியிடப்பட்டுள்ள,பிண்ணூட்டங்கள் என்னுடையதல்ல.
சொன்னது:xxxxxxxx

13.//என்னடான்னு பாத்தேன் அதான நீங்கதான் கொண்ட கொள்கைல வைகோவ விட உறுதியானவராச்சே?//போலி என்று தெரிந்தும் வெளியிடும் உங்கள் பெருந்தன்மை வாழ்க!என்னுடைய பெயரில் பிண்ணூட்டம் இட்டவரின் profile இதுவாக (xxxxxxxxx) பட்சத்தில் அதை நீக்குங்கள்இதற்கு மேல், போலிகளை அனுமதித்தால் என்னுடைய பிண்ணூட்டங்கள் அனைத்தையும் நான் வாபஸ் வாங்கிவிடுகிறேன்.
சொன்னது:xxxxxxxxxx

14. இரண்டு ஜெயக்குமார்கள் எழுதுவதால் உங்களுக்குள் இருக்கும் பகை? என் கருத்து சுதந்திரத்தை கேலி செய்கிறது. இரண்டு பேரில் என்னைக் கேட்டால் நீங்கள் இருவருமே போலிகள் என்பேன்.
1.உங்கள் பெயரில் வெளியிடுவதால் மட்டுமே அடுத்தவர் போலி என்று கூறும் நீங்கள் அவர்களின் கருத்துக்களுக்கு வாதிடலாம்.
2. நான் எனது பின்னூட்டங்களை வாபஸ் செய்து கொள்கிறேன் என்பது உங்கள் விருப்பம்.
3. எனது பதிவில் கருத்துக்குத்தான் மதிப்பே ஒழிய நபர்களுக்கல்ல.
4.ஒருவர் தி.முக. அதிமுக என்பது அவர் அவர் விருப்பம்
5.நீங்கள் இரண்டு பேரும் உங்கள் சண்டையை நடத்த எனது தளம் உகந்ததல்ல
6. இங்கே யாரும் போலியுமல்ல உண்மையும் அல்ல
7. எனக்கு வரும் பின்னூட்டங்களில் எதை வெளியிட வேண்டும் என்பதை முன்னறே ஒரு பதிவில் அதாவது என் முதல் பதிவில் கிழுமத்தூர் எக்ஸ்பிரஸில் தெரிவித்துள்ளேன்
8.எனவே கருத்து மட்டும் சொல்லுங்கள். உங்கள் பெயரில் வெளியிடப்படும் பின்னூட்டங்கள் நேரடியாக உங்களை தாக்குவதாக கருதினால் தயவு செய்து பின்னூட்டமிடுவதை தவிர்த்து விடுங்கள்
இன்னும் இது போல நிறைய சொல்லிக்கொண்டே போகலாம் .ஆனால் இதிலிருந்து ஒன்றுமட்டும் தெரிகிறது. அதாவது தனது பெயரில் வெளியாகும் கருத்து தனது கருத்தோடு ஒத்துப்போகாத போது எதிராளி எழுதுவது போலியாக சித்தரிக்கப் படுகிறது. உடனே அவர் போலி என்று இவரும் இவர் போலி என்று அவரும் முரசொலிக்க ஆரம்பித்துவிடுகின்றனர். இது வலைப்பூ தரும் சுதந்திரத்துக்கு ஆரோக்கியமல்ல.
(பின்குறிப்பு:) எனது பதிவுகளுக்கு வரும் அனைவரின் கருத்தும் கருத்து சொன்ன எந்த தனிப்பட்ட நபரையும் தாக்காத சமயத்தில் எனது கருத்துக்கான அல்லது எதிர்கருத்து சொன்னவரின் கருத்துக்கான பதிலாய் அல்லது கேள்வியாய் இருக்கும் பட்சத்தில் அப்படியே வெளியிடப்படும் அனானிமஸ் உட்பட. இதுபோல் எனக்கு வந்த சில பின்னூட்டங்களை சேகரித்து தனியே ஒரு பதிவும் போட எண்ணியுள்ளேன்.

18 comments:

Unknown said...

// இதை எப்படி நியாயப்படுத்த// நான் யாரையும் நியாயப்படுத்தவில்லை . நீங்கள் குறிப்பிடும் போலி ஜெயக்குமார் நான் தான் நிஜம் என்கிறாரே? மீண்டும் எனது கருத்தை தெளிவாக யாருடைய சார்புமின்றி படிக்கவும். நீங்கள் போலி என்று கருதும் யாருக்கும் எதிரான மனோபாவத்துடன் படித்தால் நான் சொன்ன கருத்தில் இருக்கும் நியாயம் புரியாது. நான் சொல்வது இரண்டுபேருக்கும்தான் அதாவது "உங்களுடைய சண்டைகளை உங்கள் இருவரின் பதிவுகளுக்குள் மட்டும் நடத்துங்கள் அதற்கு என் தளம் உகந்ததல்ல மேலும் உங்கள் இருவரின் தனிமனித தாக்குதல் இல்லாத எல்லா பின்னூட்டங்களும் வெளியிடப்படும்" அனானிமஸ் உள்பட.

//குறைவாக வாங்கி கட்டிக்கொள்ள // நன்றி. தயாராகவே இருக்கிறேன். கிழுமத்தூர் எக்ஸ்பிரஸ்= "எனது கருத்துக்களை மறுப்பதற்கு உனக்கிருக்கும் உரிமைக்காக"

dondu(#11168674346665545885) said...

"நீங்கள் குறிப்பிடும் போலி ஜெயக்குமார் நான் தான் நிஜம் என்கிறாரே?"

என்ன சார் குழந்தை மாதிரி பேசுகிறீர்கள்? பதிவாளர் எண் என்று ஒன்று இருக்கிறது அல்லவா? எது சீனியர் என்பதை பாருங்கள்? பிறகு சம்பந்தப்பட்ட இரண்டு வலைப்பூக்களை போய் படிக்கவும். போலியின் பதிவில், தான் ஜயகுமார், வெறி பிடித்தவன் என்றெல்லாம் தாறுமாறாக எழுதியிருக்கிறார். மனதிருந்தால் போலியை கண்டு கொள்வது பெரிய காரியமே இல்லை.

முதலில் உங்கள் அதர் ஆப்ஷனை எடுத்தாலே பாதி குழப்பம் தீரும். இந்தப் பின்னூட்டத்தை உண்மையான டோண்டுதான் இட்டான் என்பதற்கு மூன்று சோதனைகள் உண்டு. முதலில் என் டிஸ்ப்ளே பெயரில் எலிக்குட்டியை வைத்துப் பார்த்தால் கீழே என் சரியான பிளாக்கர் எண் 4800161 தெரிய வேண்டும், என் போட்டோவும் வர வேண்டும். மேலும், இப்பின்னூட்டத்தை என் தனிப்பதிவு "முரட்டு வைத்தியம்-4" லும் பின்னூட்டமாக இடுவேன். பார்க்க: http://dondu.blogspot.com/2006/05/4.html

மூன்று சோதனைகளும் ஒருபோல வெற்றி பெற வேண்டும். இன்னொரு விஷயம்: போலிப் பின்னூட்டம் என்பது மிகவும் சீரியஸ் விஷயம். ஆபாசமாக இல்லாமல் இருந்தாலும்கூட அவற்றை அனுமதிக்கலாகாது.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Anonymous said...

//நீங்கள் குறிப்பிடும் போலி ஜெயக்குமார் நான் தான் நிஜம் என்கிறாரே//
ஜெயக்குமார் தமிழ்மணத்தில் முறையாகப் பதிவு செய்து கடந்த நான்கு மாதங்களாக எழுதி வருபவர்.
இப்போது திடீரென்று ஒருவர், நான் தான் உன்மையான ஜெயக்குமார் என்று சொல்லிக் கொண்டு வந்தால் யார் போலி?
தமிழ்மணத்தில் பதிவு செய்யப்பட்டிருப்பவெரே உண்மையானவர்.
நான் உங்களின் கிழுமாத்தூர் எக்ஸ்பிரஸ் போன்ற ஒரு வலைத்தளம் அமைத்துக் கொண்டு உங்களைப் போன்று பல இடங்களில் பின்னூட்டமிட்டு வந்தால் நீங்கள் கையைக் கட்டிக் கொண்டு சும்மா இருப்பீர்களா?

நீங்கள் டோண்டுவின் பதிவிற்குப் பின்னூட்டமிட்டு விட்டு அடுத்த நாள் காலையில் பார்த்தால் உங்கள் குடும்பத்தை விசாரித்து(!!???) நிறைய மின்னஞ்சல்கள் வந்திருக்கும். அதனைப் படித்துவிட்டு இன்னொரு பதிவு போடுங்கள்.

போலியால் அதிகம் பாதிக்கப்பட்டவர் திரு.டோண்டு. அவரைக் கேளுங்கள்.

//உங்களுடைய சண்டைகளை உங்கள் இருவரின் பதிவுகளுக்குள் மட்டும் நடத்துங்கள் அதற்கு என் தளம் உகந்ததல்ல//
ஜெயக்குமாருக்கும், போலிக்கும் எந்த விதமான முன் விரோதமும் இல்லை. மேலும் ஜெயக்குமார் போலியுடன் சண்டை எதுவும் போடவில்லை.
உங்களுக்குச் ஜெயக்குமாரின் பின்னூட்டங்கள் பிடிக்கவில்லையெனில் தாராளமாக நீங்கிவிடுங்கள். அது உங்களின் உரிமை.
அல்லது உங்களின் பதிவுகளுக்கு யார் யார் மட்டும் பின்னூட்டம் இடலாம் என்று சொல்லிவிட்டால் எல்லோருக்கும் மிகவும் வசதி.

Unknown said...

நன்றி திரு.டோண்டு அவர்களே. நான் சொல்லவந்தது சரியாக சொல்லப்படவில்லை என்றே எண்ணுகிறேன். நிஜத்தையோ அல்லது போலியையோ நான் ஆதரிக்கவில்லை. நான் சொல்வது கருத்தை பார்க்க வேண்டுமா அல்லது கருத்து யாரால் சொல்லப்பட்டது என்று பார்க்கவேண்டுமா என்பதே . அது அனானிமஸே சொன்ன கருத்தாக இருந்தாலும் அதில் நியாயம் இருக்கும் போது வெளியிடுவேன் என்று சொல்ல வந்தேன். மற்றபடி வேறில்லை . நான் உண்மை அவர் போலி எனவே அவரின் பின்னூட்டங்களை வெளியிடக் கூடாது என்று கூறுவது சரியா என்றுதான் கேட்டிருந்தேன்.
ஆனால் நீங்கள் சொல்வது வேறுதளம் அது இருவரின் அடையாளம் பொருத்த விஷயம். முகமூடிகள் வேண்டாம் என்ற எனது முந்தைய பதிவிலும் இதை குறிப்பிட்டுள்ளேன்.

//பார்ப்பனராய் இருக்கும் ஒருவர் சொன்ன சரியான கருத்தை ஆதரித்தோ //
எனக்கென்ன பார்ப்பனர்கள் எதிரியா அவர்கள் சொல்லும் கருத்தில் நியாயமிருப்பின் அதை ஆதரிக்க தயங்க மாட்டேன்

ஜெயக்குமார் said...

என் பெயரில் ஆயிரம் பேர் எழுதினாலும், அதனால் நான் என்னுடைய அடையாளத்தை இழந்திவிடப்போவதில்லை. ஆனால் இங்கே குறிப்படப்படும் போலி அவர்கள், நான் ஏற்கனவே பயன்படுத்திய என்னுடைய புகைப்படத்தை தன் பதிவில் வெளியிட்டு, மிகவும் தரக்குறைவான வகையில் பதிவுகளை எழுதியுள்ளார்.

இதுபோன்ற நிகழ்வுகள், தமிழ் மணத்தில் மீதுள்ள வலைப்பதிவாளர்களின் நம்பிக்கையை இழக்கச்செய்யும். நாளை யாரும் தங்களைப் பற்றிய தகவல்களை வெளியிட விரும்பமாட்டர். இன்று எனக்கு நிகழ்ந்தது நாளை யாருக்கு வேண்டுமானாலும் நிகழலாம். இது போன்ற நிகழ்வு ஏற்கனவே நடந்துள்ளதை எனக்கு அறிவுறித்தி என் நண்பர் ஒருவர் தான் என்னுடைய புகைப்படத்தை நீக்கச்சொன்னார். நான் சில நாட்களுக்கு முன் தான் என்னுடைய புகைப்படத்தை என்னுடைய blog-ல் இருந்து நீக்கினேன்.

ஒவ்வொருத்தருக்கும் தனிப்பட்ட கருத்துகள் இருக்கும். அவற்றை பரிமாரிக்கொள்வதற்கும், விவதிப்பதற்கு மட்டுமே இது போன்ற வலைத்தளங்கள் உதவுகின்றன. ஆனால் இது போன்ற விரும்பத்தகாத செயல்கள் தொடருமானால். யாரும் தங்களின் கருத்தை சுதந்திரமாக வெளியிடும் நிலை இல்லாமல் போக வாய்ப்புள்ளது.

Nakkiran said...

உங்கள் பதிவில் எனக்கு உடன்பாடில்லை. நீங்கள் ஒரு தடவை போலி ஜெயக்குமாரின் வலைப்பூவிற்கு சென்று பாருங்கள், பிறகு யார் போலி என்பதை நீங்களே உணருவீர்கள்.

Unknown said...

//போலியின் வலைக்கு சென்றுபாருங்கள்//
நான் சொன்னவரின் கருத்துக்களை பாருங்கள் என்கிறேன் அது யாரையும் நேரடியாக அதாவது நான் சொன்ன கருத்துக்கு பின்னூட்டமிட்டவரின் மீதான தனிமனித தாக்குதலாக இல்லாத போது அந்த கருத்தை வெளியிடுவதில் என்ன தவறு? என்பெயரில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு மட்டுமே கருத்து சொல்லுமாரு கேட்டுக்கொள்கிறேன். பின்னூட்டங்களுக்கு பின்னூட்டமிடுவது தேவையற்ற ஒன்று என்றே இருவரையும் கேட்கிறேன். அப்படியில்லாவிட்டால் எனது தளம் அடுத்தவர்களின் சண்டைக் களமாகிவிடாதா? அதனால் தான் நீங்கள் சண்டைபோட்டுக்கொள்ள எனது தளம் உகந்ததல்ல என்றும் கூறுகிறேன்.
தங்களுடைய கருத்துக்கு நன்றி

Unknown said...

//நீங்க பேரச்சொல்லவே பயந்துகிட்டு முட்டுச் சந்துக்கு பின்னால ஓளிஞ்சி நிக்கறீகங்கறத மறந்துட்டு கருத்துச் சொல்றியளே!...வெளிய வந்து தைரியமா எதிர்கருத்து சொல்லுங்கன்னா...//

இங்கு நீங்கள் குறிப்பிட்ட ஒருவர்கூடத்தான் பெயர் மற்றும் இமெயில் முகவரியை வெளியிடாமல் பிதற்றிக்கொண்டிருக்கிறார். யார் கூறினார் என்று பார்க்காதீர்கள். என்ன கூறியுள்ளார் என்பதை மட்டும் பாருங்கள்.

சில ஆயிரம் வெள்ளைக்காரனால், பல கோடி இந்தியர்களை எப்படி அடிமையாக்க முடிந்தது?.

பல நூற்றாண்டுகளுக்கு முன்னால் வந்த சில சில ஆயிரம் மக்களால், பல லட்சம் மக்களை எப்படி பிரிக்க முடிந்தது?.

முதலில் நமக்குள் ஒற்றுமை தேவை. அடுத்தவனை குறை சொல்லுவது, காட்டிக்கொடுப்பது என பல குறைகள் நம்மிடம் உள்ளன. அவற்றை அகற்ற என்ன செய்யவேண்டும் என்று விவாதியுங்கள். கும்முவதெல்லாம் பிறகு வைத்துக்கொள்ளலாம்.

dondu(#11168674346665545885) said...

அதற்குத்தான் மட்டுறுத்தல் என்று ஒன்று இருக்கிறது. மட்டுறுத்தலுக்காக உங்களிடம் பின்னூட்டங்கள் மின்னஞ்சலில் வரும்போது அப்போதே போலியா இல்லையா என்பதை பார்த்து விடலாம்.

இப்போது நடப்பவை விஷமாக இருக்கும் சூழ்நிலையில் போலியின் பின்னூட்டங்களை அப்படியே நிராகரிப்பதுதான் நல்லது. அவை சாதாரணமான பின்னூட்டமா அல்லவா என்பதெல்லாம் இந்தத் தளத்தில் வராது. இன்னொருவர் பெயரில் கோழைத்தனமாக எழுதுபவன் கூறுவது மகாத்மா காந்தியின் பொன்மொழியாக இருந்தாலும் நிராகரிக்கத்தான் வேண்டும், ஏனெனில் அவன் இன்னொருவர் அதைக் கூறியது போன்ற தோற்றம் தருகிறான்.

இதில் காம்ப்ரமைஸே இருக்கக் கூடாது.

இப்பின்னூட்டத்தின் நகலை நான் என் தனிப்பதிவில் போடப் போவதில்லை. எலிக்குட்டி சோதனை, மற்றும் என் போட்டோ ஆகிய இரண்டு சோதனைகளும் சேர்ந்து வெற்றி பெற்றால் போதும் என நினைக்கிறேன்.

துர் உபயோகம் ஆகக்கூடிய அதர் ஆப்ஷனை எடுத்து விடுமாறு மறுபடியும் கேட்டுக் கொள்கிறேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Anonymous said...

What a waste of time!!! You simply dun understand or refusing to understand what Mr.Jeyakumar is trying to say! You and your blog!!!

Unknown said...

test

Unknown said...

அனைவரின் ஆலோசனைக்கும் இனங்க நான் எனது பெயரின் பின் எனது ப்ரொபைலின் எண் 10398736 சேர்த்துள்ளேன் எலிக்குட்டி சோதனை வேண்டுவோர் சோதிக்கவும். நன்றி

Unknown said...

பெயரில் எண் சேர்ப்பது அவ்வளவு சரியாய் படவில்லை எனவே மீண்டும் மாற்றுகிறேன் மகேந்திரன்.பெ
போதும் போலிகளுக்கு பயந்தால் கருத்து எதுவும் சொல்லமுடியாது போகும் எனக்கு மறுமொழி மட்டுறுத்தல் போதும் என்றே எண்ணுகிறேன் அன்பர்களின் ஆலோசனைக்கு நன்றிகள் பல என் படத்தின் பின் எண் தெரியும்.

Anonymous said...

enna sir? oru arumaiyaana karuththai unga perula poli dondu profile-la pOttEnE? En athai publish pannalai? antha karuththula ethaavathu thappu irunthathaa? unga pathivaip paththi thaana athu pEsichchu? entha commentukkum reply pannalaiyE? unga conditions padi athu okay aana comment thaanE? unga pErula vanthavudanE publish panna kasakkuthaa ungalukku? athu thaana sir maththavangalukkum?

Unknown said...

இதைத்தான் நான் எதிர்பார்த்தேன் கருத்தை எதிர்த்து என் பதிவில் என்ன வேண்டுமானாலும் எழுதுங்கள் ஆனால் அதற்கு மறுமொழியிட்டவரின் மறுமொழிக்கு நீங்கள் மறுமொழியிடுவது தான் வேடிக்கை. அதை நீக்கியது என் பெயர் என்பதால் மட்டுமல்ல ஏன் என்ற காரணம் எழுதியவருக்கு தெரியும். உங்கள் கருத்துக்கு நன்றி.

Unknown said...

என்னவோ போங்க.. உங்களுக்கு உங்க வீட்டு பெண்களை அநாகரிகமாக பேசும் பின்னூட்டம் இன்னும் வரல போலிருக்கு.

Unknown said...

//அநாகரிகமாக பேசும் பின்னூட்டம் இன்னும் வரல போலிருக்கு//
ஆச்சர்யமா? பொறாமையா? :))

Unknown said...

test comments