Monday, July 24, 2006

குழலி மீது வழக்கு

தமிழ்மணம் சூடேறிக்கிடந்தது அதை பாலச்சந்தர் கணேசன், பாஸ்டன் பாலா, முத்து (தமிழினி) மற்றும் விடாது கறுப்பு போன்றவர்கள் சூட்டை தனிக்கும் பெருமுயர்ச்சியில் ஈடுபட்டிருக்கும் இவ்வேளையில் ஒரு புது சர்ச்சை

குழலி எனும் பெயரில் கடலூர் காட்டானின் களத்து மேடு எனும் வலைப்பூ நண்பர் குழலி அவர்கள் எழுதிவருவது அனைவரும் அறிந்த ஒன்றே. பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் ராமதாஸ் அன்புமணி போன்றவர்களை ஆதரித்தும் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவாகவும் அவர் தெரிவித்த கருத்துக்களும் அதன் மூலம் அவர் சார்ந்த திராவிட தமிழர்கள் முன்னனி எனும் ஒரு இனைய கழகமும் பெரிதும் அனைவராலும் கவனிக்கப் பட்டே வருகின்றன. இன்னிலையில் சிங்கப்பூரில் இருந்து எழுதிவரும் குழலிமீது ஒரு சரியான தகவலை சரியாக சொன்ன காரணத்துக்காக அவர்மேல் மானம் காத்த வழக்கும் சாகும் வரை சரக்கு சாப்பிடும் விரதமும் இருக்கப் போவதாக எனது நண்பரும் அரசியல் குழப்ப ஆலோசகருமான திரு. குவாட்டர் கோவிந்தன் அவர்கள் முடிவிலிருப்பதாக பேஜர் மூலம் பேஜாரான செய்தி வந்தது இது குறித்து கிழுமத்தூர் எக்ஸ்பிரஸின் ஒரே செய்தியாளர் மற்றும் ஆசிரியரான எனக்கு குவாட்டர் கோவிந்தனின் சிறப்பு பேட்டி:

கே: கோவிந்தன் எப்படி இருக்கிறீர்கள்?

ப: எங்க தெருவுல தலைகாட்ட முடியில எல்லாபயலும் என்னை பாத்து சிரிக்கிறான்..

கே: எதனால் என்று கூற இயலுமா?

ப: உங்களிடம் சொல்ல என்ன தயக்கம்... என்னை பற்றி ஒரு தகவலை ஒரு மதிப்புக்குறிய நண்பர் வெளியே சொல்லிவிட்டார்.

கே: யார் அது?

ப: குழலிதான் அது

கே:என்ன சொன்னார்?

ப: குழலி பக்கங்கள் எனும் தனது வலைப்பூவில் இந்த தன்மான சிங்கம், சாயாத சரக்கு வண்டி, வாந்தியெடுக்காத வாலிபக் காளை, குவாட்டர் கோவிந்தன் "சரக்கு அடிக்காமலேயே மயங்கி கிடப்பதாக"ஒரு பொய்யான தகவலை திரித்து வெளியிட்டதோடு" இல்லாமல் அதற்க்காக எனக்கு வரவேன்டிய பின்னூட்டங்களையும் அவரே வாரிக்கொண்டும் போகிறார்.

கே: இதில் தவரென்ன?

ப: உங்களுக்கு அதன் உள்நோக்கம் தெரியவில்லை. இப்படி ஒரே கழகத்தில் இருக்கும் கண்மனி மீது ஒரு தவறான, உண்மைக்கு புறம்பான, உண்மையில்லாத, பொய்யான, நிஜமே இல்லாத, கற்பனையான, தகவல் ஒன்று இன்னொரு தோழரின் கழகத்தில் இருந்து வெளிவந்தால் என் கழகம் சார்ந்த கண்மனிகள் என்ன நினைப்பார்கள்? நான் கட்சி மாறி திருந்திவிட்டதாக ஒரு பின் நவீனத்துவ பார்வை என்மேல் விழுந்துவிடாதா?

கே: அதென்ன பின் நவீனத்துவ பார்வை?

ப: உள்ளதை உள்ளபடியே ஆனால் யாருக்கும் புறியாததுபோல் சொல்வது.

கே: இதற்க்காக நீங்கள் வழக்கு தொடரும் அளவுக்கு முகாந்திரம் உள்ளதா?

ப: பின்னே? இல்லையா? இங்கே வலைப்பூவில் பார்ப்பனர்கள் நான் பார்ப்பனன் எனத் தெளிவாக சொல்ல முடிகிறது ஆனால் என்னைப்போல் இருக்கும் கோடிக்கணக்கான பிற்பட்ட தாழ்த்தப்பட்ட வர்கள் சொல்ல முடிகிறதா? இதுபோல் எதாவது வித்தியாசமாக எழுச்சி கொண்டால் தான் உண்டு. இதுபோல் ஒரு வாய்ப்பை உருவாக்கிய திரு குழலிக்கு நான் நன்றி சொல்கிறேன்.

கே: நீங்கள் சொல்வதை பார்த்தால் நீங்களே திரு குழலியிடம் சொல்லி இதுபோல் ஒரு தகவல் பரப்ப சொல்லியிருக்கலாம் போல் தெரிகிறதே?

ப: இல்லை , பொடாவில் கைது செய்த சகோதரியிடம் சேர்ந்தபின் வைகோ சொன்னதே உங்களுக்கும் பதில். இதுபோல் என்னை பொடாவில் கைதுசெய்த சகோதரிக்கு நன்றி. கலைஞர் என்மேல் பாசத்தினால் என்னை வெளியே கொண்டு வரவில்லை என் புகழ் பரவிடக்கூடது என்பதால் தான் வெளியே கொண்டு வந்தார். அப்போது எதுவும் கேள்வி கேட்காமல் இப்போது என்னிடம் கேட்பது உங்களின் பத்திரிகை தர்மம் மீதான எனது நம்பிக்கையை அதிகமாக்குகிறது.

கே: இதுகுறித்து குழலி என்ன சொல்கிறார்?

ப: நோட்டீஸ் அனுப்பியுள்ளேன் பதில் கிடைக்கும். இல்லாவிடின் சாகும் வரை சரக்கடிக்கும் விரதமும் அதற்க்கான குவாட்டர் வாங்கும் செலவுகளை குழலியோ அல்லது அவரோ தரவேண்டும் என்றும் எனது இயக்கம் மூலம் இ.கு.கோ சட்டம் வாட் 69 மூலம் சேலம் ஆர் ஆர் என் வி யில் வழக்கு பதியப்படும்

கே:இ.கு.கோ வா?

ப: இந்திய குடிகாரர்கள் சட்டம்

கே: கடைசியாக ஒரு கேள்வி இனி என்ன செய்யப் போகிறீர்கள்?

ப: அதுதான் எனக்கும் தெரியவில்லை . இரண்டு நாட்களாக வழக்கமாக ஊத்தித்தரும் உடன்பிறந்த சகோதரன் இன்று வரவில்லை வேறு வழி பார்க்க வேண்டும்.. சிறுதாவூர் பங்களாவின் வாடகை தெரிந்தால் கொஞ்சம் சொல்லுங்கள் அங்கே ஒருவேளை அவன் புதிய பார் நடத்த அடிக்கல் நட்டிருக்கலாம்.

கே: அரசியல் வேண்டாமே?

ப: இதிலென்ன அரசியல்?

கே: சிறுதாவூர் பங்களா ஜெவுக்கும் அவரின் சகோதரிக்கும் சொந்தமானது.

ப: இல்லை அது தனக்கோ தனது சகோதரிக்கோ சொந்தமில்லை வாடகைக்கு தங்கிக்கொள்வேன் என அத்தை சொல்லிவிட்டார்.

கே: அத்தையா?

ப: கற்றுக் கொடுப்பவன் தந்தை என்று எனது எழுத்தாள நண்பர் பாலகுமாரன் சொல்வார் அதுபோல் எனக்கு தன்மானம் என்றால் என்னவென்று கற்றுக்கொடுத்தது வைகோ. வைகோ எனக்கு தந்தையென்றால் அம்மா எனக்கு அத்தைதானே?

வாழ்க வைகோ வளர்க அவர் தன்மானம். என்னை பேட்டிகண்டு எனது கருத்துக்களையும் மக்கள் மன்றத்தில் வைக்கும் உமக்கு நன்றி. சென்றுவாருங்கள். போகும் முன் ஒரு குவாட்டர் வாங்க காசுதந்தால் நலம்.

அவரிடம் பேட்டிகண்டபின் குழலி அவர்களின் பதிலையும் கேட்கலாம் என்று அவரின் கடலூர் கலத்து மேட்டை தொடர்பு கொண்டபோது அவர் பின்னூட்டம் பெறுவதில் தற்போது பிசியாக இருப்பதாக ஒரே தகவல் தெரிவிக்கப் பட்டது.

தமிழ்மணம் மற்றும் வலைப்பூ உலகம் கோவிந்தன் மற்றும் குழலி யிடையே நடக்கும் இப் போரை மிகக் கவனமுடன் கவணித்து வருகிறது. மேலும் கோவிந்தன் இன்னும் என்னவெல்லாம் போராட்டம் செய்வாரோ என்று குழலி தெளிவும் ஆர்வமும் அடைந்திருப்பதாக நமது சிறப்பு செய்தியாளர் சொல்கிறார். இதன் மூலம் ஒரு புதிய சூடான களத்தை கோவிந்தன் உருவாக்கி உள்ளார்.

"உலகச் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொல்ல எப்போதாவது படியுங்கள் குவாட்டர் கோவிந்தன்" -ADVT

(குவாட்டர் கோவிந்தன் கிழுமத்தூர் எக்ஸ்பிரஸின் சிறப்பு செய்தியாளர் எப்போதாவது வந்து யாருக்காவது மூளை இருக்கிறதா என்ற கேள்விகேட்டு மொத்து வாங்குபவர்)



8 comments:

Unknown said...

எழுத்துப்பிழை அய்யா வருவதற்க்குள் ஒரு திருத்தம்...
//கடலூர் கலத்து மேட்டை தொடர்புகொண்ட போது//

கடலூர் களத்து மேட்டை தொடர்புகொண்ட போது

பாலசந்தர் கணேசன். said...

மனதை உறுத்தாத மென்மையான நகைச்சுவை.

Boston Bala said...

:-) பாலச்சந்தர் கணேசனை வழிமொழிகிறேன் :-)

பொன்ஸ்~~Poorna said...

இப்படி குவார்ட்டர் கோவிந்தனைக் கடத்தியதுக்கு குழலி வழக்கு போட்டுடப் போறாரு.. பார்த்து ;)

Unknown said...

நன்றி பாலச்சந்தர் கணேசன் , பாஸ்டன் பாலா

பாருங்க ஒரு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியும் இன்னும் அதை குழலி கண்டுக்கவே இல்லை அப்ப அவரு வழக்க சந்திக்க தயார்தானா? குவாட்டர் கோவிந்தன் சவால் விடுகிறார்.

பொன்ஸ் நீங்க அவருக்கு ஐடியா குடுக்காம இருந்தா சரி:)

Unknown said...

குழலி நீங்க சொன்ன கவிஞர் அந்த லிங்குல சொன்னது எனக்கான பதிலா :(
இல்ல இனிமே வந்துதான் எனக்கு பதில் சொல்வாரா? :)
மப்புடன்:
குவாட்டர் கோவிந்தன்
(சிறுதாவூர் பங்களா வாசலில் இருந்து)

குழலி / Kuzhali said...

லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டா வருவான் கவிஞன் கோந்துவாயன், குவாட்டர் கோவிந்தனுக்கு பதில் இங்கே

Unknown said...

///லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டா வருவான் //

நீங்க லேட்டா வாலைங்க டூ லேட்டா வந்திருக்கீங்க ...:)) இருங்க இதோ இப்ப அங்கதான் வரேன்..