Sunday, July 30, 2006

வலைப்பதிவர் விளக்க கையேடு

தமிழ்மணத்தின் உறுப்பினர்களே தங்களின் செயல்பாடுகள் இன்னும் சிறப்பாக அமையவும், இன்னும் சிறந்த பதிவுகளை எழுதவும் ஒரு நல்ல பயனாளர் கையேடு இது இதை பிடிஎஃப் இல் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்

உங்கள் வலைப்பக்கத்தை தமிழ்மணம் திரட்டியில் இணைத்தவுடன் வலைப்பூ சங்கம் எதாவது ஒன்றில் காக்காய் பிடித்தோ, ஜல்லியடித்தோ, ரோடுபோட்டோ, சேர்ந்துவிடுங்கள்

இன்றைய தேதியில் தமிழ் வலைப் பதிவுகளில் சங்கங்களின் ஆதிக்கம் அதிகமாக இருக்கிறது. சில அறிவிக்கப் பட்டவை சில அறிவிக்கப் படாதவை. இந்த வலைப்பூ சங்கங்களால் என்ன நன்மைசினிமாவில் சொல்லப்படும் ஒரு வார்த்தை இதற்கு கச்சிதமாய் பொருந்துகிறது "மினிமம் கியாரண்டீ"மினிமம் கியாரண்டீ என்பது பின்னூட்டங்களுக்கு.

எதைப்பற்றி எழுதினாலும் உங்களின் பதிவுக்கு மினிமம் 100 பின்னூட்டம் நிச்சயம். அவற்றை எத்தனை போட்டு சாதனைபுறிவது என்பது உங்கள் விருப்பம் அடுத்த பதிவு போட நாளாகும் என்றால் ஒரு வாரத்தில் 500 கியாரண்டீ. சத்யராஜ் படம் போல.

நகைச்சுவை சங்கம்: இந்த சங்கங்களின் உள்ளே சென்றுவிட்டால் அவர்களின் கூத்து உண்மையில் வாய்விட்டு சிரிக்க வைக்கும். பிடிக்கவே இல்லை என்றாலும் படிக்கத் தூண்டும் பதிவுகள். ஓடாத படத்துக்கு வடிவேல் மாதிரி. சில பதிவுகள் ஆச்சர்யமூட்டும். இப்படியெல்லாம் பதிவெழுத முடியுமா என்று. இன்னும் கொஞ்ச நாளில் அவர்கள் சிரிப்பான் மட்டும் போட்டு பதிவை வெளியிட்டாலும் ஆச்சர்ய படுவதற்கில்லை அதற்கும் ஒரு சிரிப்பு சிரித்துவிட்டு வரலாம். பொதுவாக வெளிப் பார்வையாளர்களை விட உறுப்பினர்களே ரசிகர்கள் என்பதால் மாற்றி மாற்றி கலாய்க்கலாம்.

இரண்டாவது வகை கொஞ்சம் சீரியசானவை. இதில் அனல் பறக்கும் வாதங்களும் ஆறுபக்க பின்னூட்ட துண்டுகளும் ஆரியமும் திராவிடமும் அடித்துக்கொள்ளும். நிறைய வலைகளின் லிங்க் கிடைக்கும். பொதுவாக ஆங்கிலத்தில் இருக்கும். அல்லது ஏதேனும் ஆராய்ச்சிகளின் முடிவுகளின் இணைப்பு இருக்கும். சீரியஸ் விரும்பாத பதிவர்கள் கொஞ்சம் எட்ட நிற்பது நல்லது. பொதுவாக அரசியல் களம் சமூக களம் விவாதிக்கப் பட்டு அதன் முடிவே தெரியாமல் அடுத்த பதிவு வந்துவிடும். அதில் நிறைய அனானிமஸ் பின்னூட்டங்கள் கிடைக்கும்.


மூன்றாம் வகை அறிவிக்கப் படாத ஆறி(ரி)ய ஸங்கம். இதில் யார் வேணுமானாலும் பின்னூட்டம் போடலாம் அதர் மற்றும் அனானி ஆப்ஸனை உபயோகிக்காமல் இருக்கவேண்டும். அவர்களுக்கு அனுமதியில்லை. நிறய்ய வடமொழி எழுத்துக்களும் இருக்கும் நல்ல தமிழ் விரும்பும் அன்பர்கள் தூர விலகியிருப்பது நல்லது. அதைகிட்ட நின்று பார்த்தால் ஆபாஸமாக இருக்கும். முக்கியமாக எலிக்குட்டி ஸோதனை ஸெய்யத் தெரிந்திருக்க வேண்டும். அப்படி யிருந்தால் உங்களுக்கு விருந்துபஷாரம் உண்டு. அத்தோடு வலைப்பூவில் போலிகளை ஒழிப்பது எப்படி என்ற விளக்கக் கையேடு பிடிஎஃப் பில் அனுப்பி வைப்பார்கள். நீங்கள் ஒரு ஸ்மைலி போட்டாலும் நன்றிக்கடன் நிவர்த்தியாகும். திராவிடப் பெத்தடினுக்கும் ஈ.வே.ராமஸாமி நாயக்கருக்கும் புது விளக்கம் கிடைக்கும். ஆனால் அங்கே ஏதும் ஆதரிக்கும் வேலையிருந்தால் பின் உங்களுக்கு வரும் பின்னூட்டத்துக்கு ஸங்கம் பொருப்பல்ல. எதிர்ப்பவர்களுக்கும் அதே கதி. ஸமீப காலம் என்பது 1945 களில் என்று அர்த்தம் கொள்ள தெரிந்திருத்தல் அவஸியம்.

ஊர்க்கார பதிவர்கள்: ஒரே ஊரைச் சேர்ந்த பல்வேறு பதிவர்கள் ஒன்றாக இருப்பது, யாருக்கேனும் எங்காவது பின்னூட்ட பிரச்சினை என்றால் உடனே ஓடிவந்து நிவர்த்திசெய்வது. தங்களை யாரும் சீண்டுவதில்லை என்றாலும் அவர்களின் சங்கத்தில் சேர அழைப்பு விடுப்பது. பொதுவாக அவர்களின் பக்கத்தை படிக்க ஸ்க்ரோர்ரோரோரோரோலிங்க் செய்துகொண்டே வந்தால் கடைசியாக ஒரு போஸ்ட்கார்டில் இருக்கும் ஸ்டாம்ப் அளவு பதிவு இருக்கும் பாட்டாளிகளை வெறுப்பவர்கள், மரங்கள் மேல் பெருத்த நேசம் கொண்டவர்கள். மனிதர்களை கண்டு கொள்ளாதவர்கள் , திமுக டிவி குடுக்காவிட்டாலும் குடுத்தாலும் குற்றம் காண்பவர்கள். இடஒதுக்கீட்டை விரும்பாத வெளிநாடு வாழ் தேசிய வாதிகள்

ரசிகர் சங்க சங்கங்கள்: வலைப்பூ உலகில் அறிவிக்கப் படாத சங்கம் அதிலும் ரஜினிக்கு மட்டுமே உண்டு. சொல்லுவதற்க்கு எதுவும் இல்லை. அவர்களும் அவர் பற்றிய செய்தி எதுவும் எழுத மாட்டார்கள் நீங்களும் எதுவும் கேட்க விடமாட்டார்கள் கொஞ்சம் கோபக்காரர்கள் அதனால் எதுவும் நீங்களும் எழுதாமல் இருப்பது நல்லது. என்ன சொல்கிறீர்கள் என்பதையே கேட்காமல் தர்ம பின்னூட்டம் கிடைக்கும். கடைசியில் நீங்கள் சொல்லவந்தது திருவிழாவில் தொலைந்த குழந்தை.

தனிப் பதிவர்கள் சங்கம்: இது சங்கமில்லை என்றாலும் இவர்கள் தனிப்பட்ட முறையில் எழுதுபவர்கள். முகம் காட்ட மறுப்பவர்கள் சொல்லடிகளும் பின்னூட்ட அடிகளும் கிடைப்பதுபற்றி கவலையின்றி தங்களின் கொள்கைகளில் திடமாய் நிற்பவர்கள். இவர்களின் அடயாளம் இவர்கள் தங்களுக்கும் தங்களின் பதிவுகளுக்கும் வைத்துக்கொள்ளும் பெயர்களில் இருந்து விளங்கும். மிக நாகரீகமான முறையில் தனிமனித தாக்குதலும் சிலநேரம் நடக்கும். தேர்தல் நேரங்களில் இவர்கள் நல்ல பணியாறுவதும் உண்டு. இவர்களில் சிலருக்கு நாய்களை பிடிக்கும்/பிடிக்காது.

புலம்பெயர்ந்த தமிழீழப் பதிவர்கள் தங்களின் வேதனைகள் அத்தனைக்கும் வடிகால் கிடைக்கும் விடுதலை கிடைக்கும் என்ற உறுதியான நம்பிக்கையுடன் உலகை எதிர்கொள்பவர்கள். கவிதைகளும் உடனடி செய்திகளும் கிடைக்கும். தங்களின் பதிவுகளை எவரும் தமிழக தமிழர்கள் யாரும் ஆதரிக்கவில்லை என்றாலும் தொடர்ந்து பதிவுகள் எழுதுபவர்கள்.

பக்திப் பதிவர்கள்.வலைப்பூ உலகில் என்ன நடக்கிறதென்றே தெரியாமல் இல்லாத கடவுளுக்கு எழுதப்பட்ட பாடல்களை எங்காவது அலமாரிகளில் உறங்கும் பஜனைப் பாடல்களை எழுதி அவற்றுக்கு விளக்கம் கொடுப்பவர்கள்.

திரைஇசை பதிவர்கள் மறந்து போன திரைப்பாடல்களை ஒவ்வொறு வரியாய் எழுதி காப்பிரைட் இல்லாமல் பக்கம் நிரப்பும் பாடலாசிரியர்கள்

பின்னூட்டப் பதிவர்கள் : தனிப்பட்ட முறையில் தங்களுக்கு ப்ளாக் இல்லாவிட்டாலும் பின்னூட்டம் மட்டும் போட்டு சில நல்ல பதிவுகளின் குட்டை குழப்பும் வலைப்பூ சுப்பிரமணிய சுவாமிகள்.

இளிச்சவாய் பதிவர்கள்: இந்த வகைப்பாடுகள் எதிலும் வராமல் கருத்து சொல்கிறேன் என்று கந்தசாமிகளாய் அலையும் பதிவர்கள் பொதுவாக உணர்ச்சிவசப்படுபவர்கள். சொன்னது சரியெனப் பட்டபோது அடிகளை வாங்க தயங்காதவர்கள். மிகச்சரியான வார்த்தை அலங்காரம் செய்யத் தெரியாத அறிமுகம் ஆகாத பதிவர்கள். யாருக்கும் அதிகம் பின்னூட்டம் போட்டு காக்காய் பிடிக்காதவர்கள். அல்லது வேண்டாத இடத்தில் வேண்டாத பின்னூட்டம் எழுதி தெருவில் நிற்பவர்கள்.

இன்னும் கவிதைப் பதிவர்கள் சினிமாப் பதிவர்கள், கணிதப் பதிவர்கள், தொழில்நுட்ப பதிவர்கள், லிங்க் பதிவர்கள் வண்ணப் பதிவர்கள்,அனானிகள்,உண்மைப் போலிகள் ,போலிப் போலிகள்,
அதர்ஸ், விதண்டா வாதிகள், பிடிவாதப் பதிவர்கள், எழுதாதப் பதிவர்கள், புகைப்படப் பதிவர்கள், கோள்மூட்டும் பதிவர்கள் என்று நிறைய வகைகள் உண்டு அவர்களை பற்றி அடுத்த பதிவில்





Friday, July 28, 2006

உணர்ச்சிகள்

தமிழ் வலைபூக்களில் எழுத ஆரம்பித்து மூன்று மாதம் ஆகிறது. சில நல்லவையும் சில அல்லவையும் எழுதியாயிற்று. இப்போது எழுதிய பதிவுகள் அத்தனையும் முற்றாக திரும்பி ஒரு பார்வை பார்த்தால் சில பதிவுகள் எழுதியிருக்கவே வேண்டாமே எனத் தோன்றுகிறது.

பதிவுகள் என்பவை நான் எனது எண்ணங்களாக ஒரு விஷயத்தில் எடுக்கும் நிலைப்பாடு அல்லது அவ்விஷயம் மீதான எனது விமர்சனம் இது இரண்டும் ஒருசேர அதாவது நடுநிலை பதிவுகளாக வெளிக்காட்டிக் கொள்ள என எழுதப் படும் சில பதிவுகள். சிலவற்றில் எனது உணர்வுகள் அப்படியே வெளிப்பட்டிருக்கின்றன. சிலவற்றில் நான் கொஞ்சம் அதை அப்படியே எழுதாமல் மாற்றி யிருக்கிறேன்.

உணர்சிகரமாக எழுதும் சில பதிவுகள் படிப்பதற்கும் அதன் மீதான விமர்சனங்களை வைப்பதற்கும் படிப்பவர்களை சக பதிவர்களை யோசிக்க வைக்கும். இப்படி சில பதிவுகள்.

மிகச் சூடான ஒருவிவாதத்தில் அதே வேகம் மற்றும் உணர்ச்சிகரமான பதிவுகள் எழுதப் படும் பொழுது இரண்டு சம்பவங்கள் நடக்கின்றன. ஒன்று எனது உணர்வுக்கு தூபம் காட்டி பின்னிடப் படுபவை, இரண்டு எனது எழுத்தில் மற்றவர்கள் கொள்ளும் அவ நம்பிக்கை. அதாவது உணர்ச்சி கரமான வேளைகளில் எழுதப்படும் பதிவுகள் படிப்பவர்களை கோபமூட்டவும் அதன் மீதான விமர்சனத்தை வைக்க தயக்கத்தையும் ஏற்படுத்துகின்றன. இரண்டாவது.

நாம் எழுதும் பொருளுக்கு ஒத்த கருத்தை கொண்டவர்கள் மகிழ்ச்சி அடைகிறார்கள்.மகிழ்ச்சி அடைபவர்கள் எழுதிஅனுப்பும் பின்னூட்டங்கள் போதை தருவதாக அமைகிற வேளையில் ஒரு குரூரமான தர்க்க சிந்தனை மனதில் எழுவதை தவிர்க்க முடியாமல் போகிறது. அதே வேளை எனது கருத்துக்களுக்கு மாற்றுக்கருத்து கொண்டவர்கள் கேட்கும் கேள்விகளும் அதன் நியாயமான வாதங்களும் சரியெனப் பட்டாலும் அதை முற்றாக ஏற்றுக்கொள்ளவியலாத கட்டாயத்துக்கு உள்ளாகிறது.

அதாவது எதிராளி சொல்லும் விஷயம் சரியாக ஆனால் எனது கருத்துக்கு எதிராக இருக்கும் வேளையில் அதை முற்றாக ஏற்றுக் கொள்ள முடிவதில்லை. அப்படி ஏற்றுக் கொண்டாலும் அதற்கு பின்னூட்டம் இடுபவர்களின் பெருந்தன்மை சொல்லவியலாது " என்ன தலை அவரு வந்து சொன்னதும் ஜகா வாங்கிட்ட?" இல்லாவிட்டால் தனது பதிவுகளில் "அவரை பின்னங்கால் பிடரியில் பட விரட்டி அடித்தேன்"என்கிற ரீதியில் எழுதுவது.

இவ்விரண்டுமே சரியானதாக எனக்கு தோன்றவில்லை. இவ்விரண்டும் ஒரு பொய்யான கருத்தை சம்மந்தப் பட்ட பதிவர் மீது உண்டாக்கும் வல்லமை கொண்டவை. " யாருப்பா எழுதுனது ஓ இவரா சரி படிக்க வேண்டாம் பின்னால போயி சும்மா எதுனா எதிர்கேள்வி கேட்டு வருவோம். " எனும் சுயத்தில் மறைந்தே கிடக்கும் ஒரு கற்பனை கருத்தை உண்டாக்கும். இதனால் சில நல்ல பதிவுகள் எழுதப்படும் போது கவனத்தில் வராமல் போக வாய்ப்புண்டு.

இன்னொன்று வலைப்பூ நண்பர்களுக்கிடையே புதைந்து கிடக்கும் சுயத்தை நிரூபிக்கும் தன்மை. அதாவது. நீங்கள் சொல்லும் விஷயத்தில் எனக்கு உடன்பாடில்லை ஆனால் அதை நீ சொல்ல அனுமதியும் இல்லை. அதை விடக் கொடுமையானது பதிவர்களின் எழுத்துக்கள் மேல் வைக்கப் படும் நேரடித் தாக்குதல். "பின்னூட்டம் பெருவதற்க்காகத் தானே நீ இப்படி எழுதினாய்? என்றோ அல்லது நீயெல்லாம் நேற்று முளைத்த காளான் என்றோ பின்னூட்டம் இடுவது"

இதுபோல் பல கருத்துக்கள் தெரிவிக்கப் படும் ஒரு பதிவரிடம் இருந்து அதன் பின் இரண்டு வகைகளில் நாம் பதிவுகளை எதிபார்க்கலாம்.

1. நகைச்சுவை பதிவுகள். உள்ளூர இருக்கும் ஒரு நையாண்டியும் கிண்டலும் பொதுவாக ஒரு சார்பானவை

2. மிகச்சூடான உணர்சிக் கொந்தளிப்பில் எழுதப்படும் கருத்து வன்முறைப் பதிவுகள்.

இவ்விரண்டு தவிற வேறு பதிவுகளை எழுத அவ்வலைஞர் அதன்பின் முயல்வாரா என்பது சந்தேகமே. இது போன்ற நேரங்களில் எழுதுவது மிகக் கடினமானதும் கூட.

இதுபற்றி எனக்கு இரண்டு கேள்விகள் உண்டு எனக்கு.

1.புதிதாக எழுத வருபவர்களுக்கு கிடைக்கும் வரவேற்பு இப்படியென்றால் அதன் பின் அவர் எப்படி நன்றாக எழுத தன்னை தயார் செய்வார்?

2.வலையுலகில் அனுபவம் மிக்க ஒருவர் எழுதுவதால் மட்டும் அவரின் எழுத்துக்கள் எல்லாமே சரியானதாக இருக்குமா.

அதேபோல பின்னூட்டம் பெறுவதை ஏதோ ஒரு பாவச்செயல்/அல்லது புண்ணியச் செயல் எனக் கருதும் அளவுக்கு எழுத்தரின் நேர்மை கிண்டலிடப் படுவது எழுதுபவரை எந்த வகையில் பாதிக்கும்?

இங்கே வலைப்பக்கத்தில் எழுதும் பெரும்பாலானவர்கள் "இக் கருத்தின் மீதான எனது விமர்சனம் இது என்பதை விட உன் மீதான என் விமர்சனம் இது" என்ற தொனியில் எழுதுவது அல்லது.பின்னூட்டம் இடுவது.

இது ஒரு இழிவையும் அதை எழுதியவர் மேல் ஒரு வெறுப்பையும் உண்டாக்குகிறது. இதுபோன்ற பின்னூட்டங்கள் இடப் படாமலேயே போகலாம். பொதுவாக எழுதும் எல்லோருமே மற்றவர்கள் படிக்கவேண்டும் அவற்றின் விமர்சனங்கள் என்னவென்று அறியவேண்டும் என்பதில் ஆர்வமாக இருப்போம்.

நான் எழுதுவது பின்னூட்டம் பெறுவதற்க்காகவென்றால் நீங்களும் அதற்க்காவே எழுதுகிறார்கள். இலாவிடின் நமது கருத்துக்களை வலையில் எழுதவேண்டிய அவசியம் என்ன? ஒரு சிறிய நோட்டுப் புத்தகத்தில் எழுதி நாம் மட்டுமே படித்துக் கொள்ளலாம்.

மேலும் பதிவர்கள் பெரும்பாலும் நமது கருத்துக்கள் ஒலிக்கவேண்டுமென்றால் பிரபலமாகவேண்டும் என நினைப்பதில் தவறெதுவுமில்லை. ஆனால் இது பிரபலமாக இருப்பவர்களுக்கு ஏன் எரிச்சலை தருகிறது என்பதில் வியப்பேதும் இல்லை.

தான் சரியென நினைக்கும் ஒரு கருத்தை தனது வலையில் பதிவிடும் போது அதில் பிடிவாதத்துடன் இருக்கவேண்டும் என்ற அவசியம் இல்லை. அதற்க்கான சரியான மாற்றுக் கருத்துக்கள் வரும் வேளையில் அதையும் ஏறுக்கொள்ளும் ஒரு நிலையை நாம் சக வலைப்பதிவாளர்களுக்கு உருவாக்கிடவில்லை.

அப்படி மாறுபட்ட கருத்துக்கள் சரியாக இருக்கும் போது அதை ஏற்றுக்கொள்ளும் வலைஞர் பயந்தாங்கொள்ளி எனச் சித்தரிக்கப் படுகிறார். சக பதிவர்கள் சொல்வது சரியெனப் பட்டபோது அதை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் இன்னும் நம்மிடையே வரவில்லை அல்லது அதற்கு நாம் தயாராக இல்லை.

கவனிக்கப் படவேண்டும் என்பதற்க்காகவே இங்கே பெரும்பாலும் எழுதுகிறோம் என்பதில் எனக்கு பெருத்த நம்பிக்கை உண்டு. அதே வேளை கவனிப்படைந்தவர்களின் விமர்சனங்கள் ஏற்றுக்கொள்ளக் கூடியதாக இல்லை என்பதுதான் உண்மை.

இதற்கு இரண்டு வழிகளில் தீர்வுகாணலாம்.

1.உணர்சிவயப்படாமல் எழுதுவது.

2.அப்படி எழுதப்படும் பதிவுகள் ஏற்படுத்தும் விளைவுகளை சந்திக்க தயாராக இருப்பது.


Thursday, July 27, 2006

அதனால் என்னன்னா

"மாயவரத்தில ஒரே நாற்றமாம்?

எதனால?

குவாட்டர் கோவிந்தனுக்கு போட்டியா ஒருத்தர் வாந்தியெடுக்கிராறாம்"

முதலில் இப் பதிவுக்கு வேறு ஒரு தலைப்பைத்தான் தெரிவு செய்தேன் ஆனால் அது அவ்வளவு நன்றாக இருக்குமா என்று தெரியவில்லை அதன்பின் தலைப்பை மாற்றி விட்டேன் முதலில் வைக்க நினைத்த தலைப்பு கடைசியில்.

முதலில் அதனால் என்னன்னா வுக்கு வருவோம் அது போனவாரம் இது இந்த வாரம் எழுதியதை படித்த வேகத்தில் பதில் பதிவு எழுதவேண்டுமே என்ற நோக்கில் இந்தவாரம் ஒருவர் எழுதினார் அதனால் என்னன்னு கேட்டீங்களா?. அதாவது அதுல எழுதியிருந்தார்னா பரவாயில்லையே குவாட்டர் கோவிந்தன் எடுத்த வாந்திய விட மோசமா இருக்கு. அதுக்கு பின்னூட்ட ஊறுகாய்வேறு.

அதிலும் திரு.வெட்டிகுமார் மரம் வெட்டி பற்றி ஒரு கருத்து சொன்னாருங்க. அத படிச்சதும் எனக்கு புல்லறிச்சு போச்சு. சினிமா படத்துல அன்னியன் வந்தா அவங்க எல்லாரும் பேப்பர கிழிச்சு போட்டு விசிலடிப்பாங்களாம் ஆனா நேர்ல வந்தா அவங்க மரம் வெட்டி. நல்ல நாய(ம்)ப்பா.

அன்னியன் ஆளக் கொன்னா தப்பில்ல ஆனா மரத்த யாருக்கு வெட்டுனாங்க சக மனுசனுக்குதானப்பா? பேருல மட்டும் வெற்றிய சேத்துகிட்டா எல்லாரும் செயிக்க முடியும்னா உலகத்துல எல்லா பயலும் பேர மாத்திக்க மாட்டானா?.

மாங்கா மடையர்கள்னு ஒரு உள்குத்து வேற வஞ்சப்புகழ்ச்சி அணின்னா என்னன்னு தெரியாதவங்க ஜெயிக்கிர அயோத்தியார் கிட்ட போயி பாடம் படிங்கப்பா. ஆனா அதனால் என்னன்னு நீங்க கேக்கறது புறீது பொறுங்க இன்னும் இருக்கு.

இதுல இடையில இளைய நிலா பிள்ளையார் வந்து "அப்பா தம்பி நீ எழுதுறது சரியில்ல முடிஞ்சா ஒழுங்கா எழுதுன்னு சொன்னாக்க அதுக்கு பதில் என்னவாயிருக்கும் இல்ல இருக்கனும்னு நீங்க எதிர்பாப்பீங்க? நீங்க நினைக்கிற எதுவும் இல்ல

" சங்கத்துல சேந்தாச்சா? "

இதுதான் பதில் இன்னும் இருக்கு அவரு எழுதுனது சரின்னு சொல்ற எல்லாரும் ஆதரிக்கிர எல்லாரும் சொந்த பேருல எழுதுவாங்க ஆனா எதிர்த்து எழுதுனவருக்கு பதில யாரு சொல்லனும்? பதிவிட்டவர் தான? ஆனா அங்க தாங்க வர்றார் அனானி ராசா.

நீங்க எல்லாரும் ஒரு விஷயத்த கவனிச்சிருக்கலாம். அதாவது தமிழ் வலைப்பூவில் "எந்த ஒரு பார்ப்பனரும் தான் ஒரு பார்பனர் அப்பிடின்னு சொல்ல தயங்கறதே இல்ல ஆனா வேர யாராவது பூடாகமா அட என்னையே எடுத்துக்குங்க ஒரு வார்த்த சொன்னாக்க அது சாதி வெறி. நல்ல நாய(ம்)ப்பா. யாரும் இன்னும் சொல்லிக்கல ஆனா எதாவது ஒரு விஷயத்துக்கு தான் சார்ந்த சாதிக்கு ஆதரவு சொல்லித்தான ஆகனும்?

அன்னியனுக்கும் வன்னியனுக்கும் ஒரு எழுத்து தான் வித்தியாசம்னு நினைச்சு வார்த்தை வெளையாட்டு வெளையாடுறாங்க,. இங்க தமிழ்மனத்துல என்னா? சொடகு போட்டியா நடக்குது?.

இந்தமாதிரி அடுத்தவனுக்கு பதில் பதிவு போட்டு தாக்கறது. இல்ல ஆதரிச்சு வந்தா பின்னூட்டம் வெளியிட்டும் இல்லன்னா அதுக்கு பதிலா ஒரு அனானி அரசனை வச்சு பின்னூட்டம் போட்டு வெளாட்டு காட்டுறது இதெல்லாம் எதுக்கு.?

எல்லா ஆளுங்களும் தான் பிறந்த ஊருக்கு தனக்கு நல்ல பேரு சேத்துவைக்க ஆசைப் படுவான் ஆனா சில பேரு தன் பேருலயே ஊரையும் வச்சுகிட்டு அதக் கெடுக்கிறதே முதல் வேலையா செயல் படுறாங்க. இப்ப நான் மட்டும் என்னா யோக்கியமான்னு கேட்கிறீங்களா? நான் யோகியன் இல்லன்னு சொல்ல துனிச்சல் எனக்கு இருக்கு ஆனா அந்த போர்வைல இருந்துகிட்டு ஓட்டைவழியா உத்து உத்து பாக்கிற வேலை நான் செய்யமாட்டேன். என்னமோ எழுத வந்து என்னவெல்லாமோ எழுதிபுட்டனுங்க.


ஆனா நான் சொல்ல வந்தது என்னன்னு கொஞ்சம் புறிஞ்சா பதில் எழுதுங்க இல்லன்னா கேள்விய எழுதுங்க நமக்கு பின்னூட்டம் தான் முக்கியம். ஏன்னா எல்லாருமே வேண்டாம்னு தான் சொல்றாங்க நான் அப்பிடி இல்லைங்க நெறையா போடுங்க.

நம்மாளுங்க மட்டும் தான் இடஒதுக்கீடே வேண்டாம்னு சொல்வான் நான் பின்னூட்டத்த க் கூட விட்டு வைக்கமாட்டேன். அதனால் என்னன்னா நிறைய பின்னூட்டம் போடுங்க

இதற்கு முதலில் வைக்க நினைத்த தலைப்பு:

போன வாரமும் இந்தவாரமும் மயிலாடுதுரையும் மரம்வெட்டியும்.

(பின்குறிப்பு- இப்பதிவில் எந்த உள்குத்தும் இல்லை எல்லாமே வெளிக்குத்துதான். என்னை அடிவருடி என்று அழைக்கப் போகிறவர்களுக்கும் .அருமை என்று அணைக்கப் போகிறவர்களுக்கும் இப்போதே நன்றிகள்)

Monday, July 24, 2006

குழலி மீது வழக்கு

தமிழ்மணம் சூடேறிக்கிடந்தது அதை பாலச்சந்தர் கணேசன், பாஸ்டன் பாலா, முத்து (தமிழினி) மற்றும் விடாது கறுப்பு போன்றவர்கள் சூட்டை தனிக்கும் பெருமுயர்ச்சியில் ஈடுபட்டிருக்கும் இவ்வேளையில் ஒரு புது சர்ச்சை

குழலி எனும் பெயரில் கடலூர் காட்டானின் களத்து மேடு எனும் வலைப்பூ நண்பர் குழலி அவர்கள் எழுதிவருவது அனைவரும் அறிந்த ஒன்றே. பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் ராமதாஸ் அன்புமணி போன்றவர்களை ஆதரித்தும் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவாகவும் அவர் தெரிவித்த கருத்துக்களும் அதன் மூலம் அவர் சார்ந்த திராவிட தமிழர்கள் முன்னனி எனும் ஒரு இனைய கழகமும் பெரிதும் அனைவராலும் கவனிக்கப் பட்டே வருகின்றன. இன்னிலையில் சிங்கப்பூரில் இருந்து எழுதிவரும் குழலிமீது ஒரு சரியான தகவலை சரியாக சொன்ன காரணத்துக்காக அவர்மேல் மானம் காத்த வழக்கும் சாகும் வரை சரக்கு சாப்பிடும் விரதமும் இருக்கப் போவதாக எனது நண்பரும் அரசியல் குழப்ப ஆலோசகருமான திரு. குவாட்டர் கோவிந்தன் அவர்கள் முடிவிலிருப்பதாக பேஜர் மூலம் பேஜாரான செய்தி வந்தது இது குறித்து கிழுமத்தூர் எக்ஸ்பிரஸின் ஒரே செய்தியாளர் மற்றும் ஆசிரியரான எனக்கு குவாட்டர் கோவிந்தனின் சிறப்பு பேட்டி:

கே: கோவிந்தன் எப்படி இருக்கிறீர்கள்?

ப: எங்க தெருவுல தலைகாட்ட முடியில எல்லாபயலும் என்னை பாத்து சிரிக்கிறான்..

கே: எதனால் என்று கூற இயலுமா?

ப: உங்களிடம் சொல்ல என்ன தயக்கம்... என்னை பற்றி ஒரு தகவலை ஒரு மதிப்புக்குறிய நண்பர் வெளியே சொல்லிவிட்டார்.

கே: யார் அது?

ப: குழலிதான் அது

கே:என்ன சொன்னார்?

ப: குழலி பக்கங்கள் எனும் தனது வலைப்பூவில் இந்த தன்மான சிங்கம், சாயாத சரக்கு வண்டி, வாந்தியெடுக்காத வாலிபக் காளை, குவாட்டர் கோவிந்தன் "சரக்கு அடிக்காமலேயே மயங்கி கிடப்பதாக"ஒரு பொய்யான தகவலை திரித்து வெளியிட்டதோடு" இல்லாமல் அதற்க்காக எனக்கு வரவேன்டிய பின்னூட்டங்களையும் அவரே வாரிக்கொண்டும் போகிறார்.

கே: இதில் தவரென்ன?

ப: உங்களுக்கு அதன் உள்நோக்கம் தெரியவில்லை. இப்படி ஒரே கழகத்தில் இருக்கும் கண்மனி மீது ஒரு தவறான, உண்மைக்கு புறம்பான, உண்மையில்லாத, பொய்யான, நிஜமே இல்லாத, கற்பனையான, தகவல் ஒன்று இன்னொரு தோழரின் கழகத்தில் இருந்து வெளிவந்தால் என் கழகம் சார்ந்த கண்மனிகள் என்ன நினைப்பார்கள்? நான் கட்சி மாறி திருந்திவிட்டதாக ஒரு பின் நவீனத்துவ பார்வை என்மேல் விழுந்துவிடாதா?

கே: அதென்ன பின் நவீனத்துவ பார்வை?

ப: உள்ளதை உள்ளபடியே ஆனால் யாருக்கும் புறியாததுபோல் சொல்வது.

கே: இதற்க்காக நீங்கள் வழக்கு தொடரும் அளவுக்கு முகாந்திரம் உள்ளதா?

ப: பின்னே? இல்லையா? இங்கே வலைப்பூவில் பார்ப்பனர்கள் நான் பார்ப்பனன் எனத் தெளிவாக சொல்ல முடிகிறது ஆனால் என்னைப்போல் இருக்கும் கோடிக்கணக்கான பிற்பட்ட தாழ்த்தப்பட்ட வர்கள் சொல்ல முடிகிறதா? இதுபோல் எதாவது வித்தியாசமாக எழுச்சி கொண்டால் தான் உண்டு. இதுபோல் ஒரு வாய்ப்பை உருவாக்கிய திரு குழலிக்கு நான் நன்றி சொல்கிறேன்.

கே: நீங்கள் சொல்வதை பார்த்தால் நீங்களே திரு குழலியிடம் சொல்லி இதுபோல் ஒரு தகவல் பரப்ப சொல்லியிருக்கலாம் போல் தெரிகிறதே?

ப: இல்லை , பொடாவில் கைது செய்த சகோதரியிடம் சேர்ந்தபின் வைகோ சொன்னதே உங்களுக்கும் பதில். இதுபோல் என்னை பொடாவில் கைதுசெய்த சகோதரிக்கு நன்றி. கலைஞர் என்மேல் பாசத்தினால் என்னை வெளியே கொண்டு வரவில்லை என் புகழ் பரவிடக்கூடது என்பதால் தான் வெளியே கொண்டு வந்தார். அப்போது எதுவும் கேள்வி கேட்காமல் இப்போது என்னிடம் கேட்பது உங்களின் பத்திரிகை தர்மம் மீதான எனது நம்பிக்கையை அதிகமாக்குகிறது.

கே: இதுகுறித்து குழலி என்ன சொல்கிறார்?

ப: நோட்டீஸ் அனுப்பியுள்ளேன் பதில் கிடைக்கும். இல்லாவிடின் சாகும் வரை சரக்கடிக்கும் விரதமும் அதற்க்கான குவாட்டர் வாங்கும் செலவுகளை குழலியோ அல்லது அவரோ தரவேண்டும் என்றும் எனது இயக்கம் மூலம் இ.கு.கோ சட்டம் வாட் 69 மூலம் சேலம் ஆர் ஆர் என் வி யில் வழக்கு பதியப்படும்

கே:இ.கு.கோ வா?

ப: இந்திய குடிகாரர்கள் சட்டம்

கே: கடைசியாக ஒரு கேள்வி இனி என்ன செய்யப் போகிறீர்கள்?

ப: அதுதான் எனக்கும் தெரியவில்லை . இரண்டு நாட்களாக வழக்கமாக ஊத்தித்தரும் உடன்பிறந்த சகோதரன் இன்று வரவில்லை வேறு வழி பார்க்க வேண்டும்.. சிறுதாவூர் பங்களாவின் வாடகை தெரிந்தால் கொஞ்சம் சொல்லுங்கள் அங்கே ஒருவேளை அவன் புதிய பார் நடத்த அடிக்கல் நட்டிருக்கலாம்.

கே: அரசியல் வேண்டாமே?

ப: இதிலென்ன அரசியல்?

கே: சிறுதாவூர் பங்களா ஜெவுக்கும் அவரின் சகோதரிக்கும் சொந்தமானது.

ப: இல்லை அது தனக்கோ தனது சகோதரிக்கோ சொந்தமில்லை வாடகைக்கு தங்கிக்கொள்வேன் என அத்தை சொல்லிவிட்டார்.

கே: அத்தையா?

ப: கற்றுக் கொடுப்பவன் தந்தை என்று எனது எழுத்தாள நண்பர் பாலகுமாரன் சொல்வார் அதுபோல் எனக்கு தன்மானம் என்றால் என்னவென்று கற்றுக்கொடுத்தது வைகோ. வைகோ எனக்கு தந்தையென்றால் அம்மா எனக்கு அத்தைதானே?

வாழ்க வைகோ வளர்க அவர் தன்மானம். என்னை பேட்டிகண்டு எனது கருத்துக்களையும் மக்கள் மன்றத்தில் வைக்கும் உமக்கு நன்றி. சென்றுவாருங்கள். போகும் முன் ஒரு குவாட்டர் வாங்க காசுதந்தால் நலம்.

அவரிடம் பேட்டிகண்டபின் குழலி அவர்களின் பதிலையும் கேட்கலாம் என்று அவரின் கடலூர் கலத்து மேட்டை தொடர்பு கொண்டபோது அவர் பின்னூட்டம் பெறுவதில் தற்போது பிசியாக இருப்பதாக ஒரே தகவல் தெரிவிக்கப் பட்டது.

தமிழ்மணம் மற்றும் வலைப்பூ உலகம் கோவிந்தன் மற்றும் குழலி யிடையே நடக்கும் இப் போரை மிகக் கவனமுடன் கவணித்து வருகிறது. மேலும் கோவிந்தன் இன்னும் என்னவெல்லாம் போராட்டம் செய்வாரோ என்று குழலி தெளிவும் ஆர்வமும் அடைந்திருப்பதாக நமது சிறப்பு செய்தியாளர் சொல்கிறார். இதன் மூலம் ஒரு புதிய சூடான களத்தை கோவிந்தன் உருவாக்கி உள்ளார்.

"உலகச் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொல்ல எப்போதாவது படியுங்கள் குவாட்டர் கோவிந்தன்" -ADVT

(குவாட்டர் கோவிந்தன் கிழுமத்தூர் எக்ஸ்பிரஸின் சிறப்பு செய்தியாளர் எப்போதாவது வந்து யாருக்காவது மூளை இருக்கிறதா என்ற கேள்விகேட்டு மொத்து வாங்குபவர்)



Wednesday, July 19, 2006

எங்கியாவது மூளை கிடச்சா

ஜெயா டிவியை பார்த்துவிட்டு பாண்டிமடம் பக்கம் போய் சேது சீயானாய் கிடந்தவரை கொஞ்சம் சரியானதும் ஒரு பார்ட்டி கொடுக்கலாம் என நினைத்து குவாட்டர் கோவிந்தனை அழைத்துக் கொண்டு அவரின் பேவரைட் இடமான ஒயின்சுக்கு அழைத்துச் சென்றதும் கொஞ்சமாய் போதையேறியபின் நிதானம் கொஞ்சம் பிடிபட்டது. அரசியல் சினிமா என பேச்சு மாறிக்கொண்டே வந்தாலும் அவரின் முழு கவணமும் அரசியலில் அதன் செய்திகளில் நிறைந்து கிடந்தது, சரிதான் ஆள் தேறிட்டார் இனிமே நெறையா செய்தி கிடைக்கும் என நானும் தூண்டிலை போட்டேன் இனி ஓவர் டு கு,கோ.

என்னாப்பா மகேந்திரா எல்லாம் எப்பிடி போகுது?

என்னத்த என்னமோ போகுது..

ஏன் ஒரே சலிப்பா சொல்ற?

இல்ல அன்னிக்கு நீ ஏன்கிட்ட கேட்ட ஒரு கேள்விய நம்ம ஆளுங்க கிட்ட கேட்டேன்பா எல்லாரும் அடிக்காத குறைதான் அது போகுட்டும் விடு உண்மையச் சொன்னா எல்லாருக்கும் கோபந்தான் வரும்.

ஆமா ஆமா உண்மைய சொன்னா எல்லாருக்கும் கொஞ்சம் கோவம் வரும்தான...

ஆமா ஒங்க தலைவரு என்னா பன்றாரு ?

அவருக்கு என்னப்பா சோக்கா இருக்காரு. இப்ப கூட பாரு நெய்வேலிய விக்கபோறாங்கன்னு சொன்னதும் தலை உட்டார் பாரு ஒரு அறிக்கை ஆதரவு வாபஸ்னு மத்தியில ஆடிபோச்சுல்ல...

ஆமா அவரு நிஜமா அப்பிடி சொல்லவே இல்லன்னு சொல்றாரு?

அதென்னமோப்பா ஆனா நெய்வேலிய வித்திருந்தா நான் கூட ஒரு பத்து சென்ட் இடம் வாங்கி போட்ருப்பேன்.

என்ன கோவிந்தா சொல்ற?

நெய்வேலி நிலக்கரி சுரங்க பங்கதான விகிறதா சொன்னாங்க?

ஆங்? அப்டியா? நான் ஏதோ ஊர விக்க போறாங்கன்னு நினைச்சேன்,,,, சரி விடு.. ஆனா மும்பைல குண்டு வச்சது யாருன்னு எனக்கு தெரியும் நிச்சயமா இது வெளிநாட்டு சதிதான்..

ஆமா இத நீவேற சொல்லனுமா? எதாவது சூடா சொல்லுப்பா நம்ம பாலச்சந்தர் கணேசன் வேற தமிழ்மனம் சூடேருது எல்லாரும் கூலாக்குங்கன்னு சொல்றாரு விட்டா கம்ப்யூட்டர தூக்கி தண்ணில போடுன்னு சொல்வார்..

சூடா வேனும்னா ஒரு ரம்மு சொல்லட்டா? பின்ன என்னடா? அவர் சொன்னா உனக்கென்ன அவரு முன்ன மாறி படம் அதிகமா எடுக்காங்காட்டியும் டிவில எதுனாவது கல்கி அப்டின்னு தொடர் போட்டு சம்பாரிப்பார் நீ ஏன் அதல்லாம் கண்டுக்கிற.. ஆனா பாரு பொய் படம் நல்லா வருமாம்.

டேய் கோவி நான் சொல்றது ஒன்னும் ஒன்னும் ரெண்டு பாலச்சந்தர் நீ டைரக்டர சொல்ற..

ராகுலுக்கு கல்யாணமாமே? ஆனா பாருப்பா இந்த காங்கிரஸ்காரன் சுத்த மோசம் ஒரு கூட்டணி கட்சி மூத்த தலைவர கூப்பிடுல பாரு எல்லாம் பிஜேபி யோட சதி அல்லாரும் போவாங்க ஆனா கலைஞருக்கு மட்டும் அழைப்பில்ல....

ராகுலுக்கு கல்யாணமா? எப்படா?

ஆமாம்பா நான் பாத்தனே மும்பைல நடந்துது ஆனா பிஜேபி காரங்க யாரும் வர்ல.

டேய் அது ராகுல் மகாஜன்டா... நீவேர அய்யரு கிய்யருன்னு திரும்ப சண்டைய உண்டாக்காத...அந்த பொன்னு அவரோட காதலியாம் பைலட்டா இருக்காங்க அப்பா இருக்கும் போதே அனுமதி வாங்கிட்டாராம் ஆனா இப்பத்தான் கல்யாணம்.

ஓகோ...சரி சரி ஆமா இந்தியாவுல இருக்க விவசாயிங்களுக்கு கஷ்டம் மேல கஷ்டம்னு பாத்தியா இப்ப ஒரு பூவ தடை பன்னிட்டாங்க பாவம் இனிமே அவங்க எந்தவகைல விவசாயம் பன்னுவாங்க?

பூவா எனக்கெதும் தெரியாதே.?ஆமாம்பா யாரோ பதியன் போடுறவங்க எல்லாரும் பேசிகிட்டத கேட்டேன் ஒருவேள எதும் கஞ்சா செடியோட பூவா இருக்குமா? ஆனா என்னமோ புது வழியில எல்லாரும் செய்யலாம்னும் அப்ப தமிழ் மணத்த பாக்கலாம்னும் சொல்றாங்க...


டேய் கோவிந்தா வர வர ஒனக்கு மூளையே இல்லாம போகுதுபாரு அது வலைப்பூடா ப்ளாக் எழுதுறது இப்ப நான் எழுதுறன்ல அந்த மாறி அது நம்ம இந்தியாவுல வரல்லையாம் அதுதான் சேதி .

நீ மூளை பத்தி கேட்டதும்தான் எனக்கு ஒரு ஞாபகம் வருது ஒரு பிளேட் மூளை சொல்லுப்பா..

ஆமா இல்லாதத கேளு கெடைக்கும்? இன்னைக்கு என்னா நாள் மூளை கிடையாதுன்னு வெளில போர்டு போட்டிருக்கு பாரு..

அதுக்கு ஏண்டா கத்துற இல்லன்னா இல்லன்னு சொல்லு இருந்தா வாங்கிகுடு ஒனக்கு போதை அதிகமா போச்சு அதான் இப்பல்லாம் சீக்கிறமா டென்ஸனாவுற..

இல்லடா அதென்னமோ தெரீல மூளைய பத்தி பேச்செடுத்தாவே கோவம் தானாவருது

திருமாவளவன் புலிகளும் ஈழமும் ஒன்னுன்னு சொல்லீருக்காறே அப்ப அவரு புலிகளுக்கு ஆதரவா?

ஆமா

ஆனா அவரு சிறுத்தைன்னு சொன்னாங்க? இப்ப பொடா சட்டத்துல உள்ள போடுங்கன்னு ஏன் ஜெயா சொல்லல? ஒருவேள அம்மாவும் புலிகளுக்கு ஆதரவா?

இருக்காதுடா சும்மா அறிக்கைவிட்டு என்னா திருமா கேட்கவா போரார்னு சும்மா இருக்காங்க.

ஆனா ஒன்னு மகேந்திரா... ஜெயாம்மா தான் ஒரு விவசாயிங்கறத நிரூபிக்கிறாங்க இப்ப பாரு களையெடுக்க போறாங்களாம். தான் ஒரு முன்னாள் முதல்வர்ங்கறத மறந்து வயல்ல வேலை செய்ய யாருக்கு மனசு வரும்.

கோவிந்தா அந்த கிளாஸ்ல இன்னொரு ரவுண்டு ஊத்திகிட்டே கேளு அவங்க வயல்ல களையெடுக்கல கட்சில எடுக்கிறாங்க..அதாவது தன்னோட கட்சி எலக்சன்ல தோத்து போனதுக்கு காரணமா இருந்தவங்கள பதவிகள விட்டு தூக்குறாங்க.

அவங்கமட்டும் பொதுச்செயலாளரா இன்னுமிருக்காங்க? என்னாப்பா ஞாயம் இது?

கோவி நீ மெதுவா குடிச்சுட்டு வா நான் கொஞ்சம் அவசர வேலையா போய்ட்டு வாரேன்.

சீக்கிரமா வாடா அப்பிடியே எங்கியாவது மூளை கிடச்சா வாங்கியா..............










Friday, July 14, 2006

கெவின் கார்ட்டருக்கு அஞ்சலி

















நம்மில் எத்தனை பேருக்கு கெவின் கார்ட்டரை (1960-1994) தெரியும் என்று தெரியவில்லை. மனிதன், மனிதம் , மனித நேயம், பஞ்சம், வருமை என வாய்கூசாமல் பேசிக் கொண்டிருக்கிறோம். இந்த கையாலாகா தனத்தை தன் கண்முன் கண்டு சொல்லவியலா துயருக்கு ஆளாகி தன் வாழ்வை தானாகவே முடித்துக்கொண்ட ஒரு புகைப்படக்காரர் தான் கெவின் கார்ட்டர். 1993 ல் தென் சூடானில் இருக்கும் போராளிகளின் நடவடிக்கை குறித்த ஆவனப் படம் எடுக்கப் போனவரின் பார்வையில் பட்ட கொடூரத்தின் பின் அவர் தற்கொலை செய்துகொண்டார் தனது கடைசி யில் தானெடுத்த இந்த புகைப்படம் குறித்து அவர் சொன்ன வார்த்தைகள் இவைதான் "

" The man adjusting his lens to take just the right frame of her suffering might just as well be a predator, another vulture on the scene"

... இதன் பின் 1994 ஜூலை 27 ம் தேதி தற்கொலை செய்துகொண்டார் இவரை பற்றி எடுக்கப் பட்ட ஆவனப் படம் புகழ்பெற்ற புலிட்சர் விருதை பெற்றது.
Portions of Carter's suicide note read:
"I am depressed ... without phone ... money for rent ... money for child support ... money for debts ... money!!! ... I am haunted by the vivid memories of killings & corpses & anger & pain ... of starving or wounded children, of trigger-happy madmen, often police, of killer executioners...I have gone to join Ken if I am that lucky."

Monday, July 10, 2006

ரஜினி ரசிகர்களுக்கு மூளை இருக்கிறதாம்

சமீபத்தில் ஆனந்த விகடனுக்கு இயக்குனர் தங்கர் பச்சான் அளித்த பேட்டியில்
"இப்போ இருபது கோடி, முப்பது கோடின்னு போட்டுப் படமெடுக்கி-றீங்களே... யாரை நம்பி? இந்தியாவுக்கு வெளியே உலகமெல்லாம் வாழ்கிற ஈழத் தமிழர்கள் உருவாக்கியிருக்கிற சந்தையை நம்பித்தானே? அப்போ அவங்க துயரத்-திலும் நீங்க பங்கெடுக்-கணுமா, இல்லையா?
ரஜினி, கமலெல்லாம் ஒரு வார்த்தை சொன்னா, அதைக் கேட்கவும் எடுத்துச் செய்யவும் எவ்வளவோ பேர் இருக்காங்க. அவங்ககிட்ட நிறைய மக்கள் பலம் இருக்கு. ஏன் பேச மாட்டேங்கிறாங்க? ஒவ்வொருத்-தருக்கும் ஒரு அரசியல் பார்வை இருக்கணும். சமூகப் பிரச்னையோட தங்களை இணைச்சுக்கணும். சும்மா மார்லன் பிராண்டோ நடிப்பைப் பத்தி சிலாகிச்சா மட்டும் போதுமா?
ரஜினி, கமல், விஜயகாந்த், விஜய், விக்ரம், அஜீத், சூர்யான்னு ஆரம்பிச்சு இன்னிக்கு இருக்கிற ஆர்யா, பரத் வரைக்கும், ஒவ்வொருத்-தரும் இந்தப் பிரச்னையில் தங்கள் கருத்து என்ன என்பதைப் பத்திரி-கைகள் மூலமா தெரிவிக்கணும். ஒரு படம் முடிச்சுட்டு, துட்டை அள்ளிட்டு, ஆயில் மசாஜ் எடுக்கவும், இமய-மலைக்கும், ஓய்வெடுக்க வெளி-நாட்டுக்கும் போனா நாங்க எங்கே போறது? மனச்சாட்சி வேண்டாமா? நம்ம மக்களுக்கு ஒரு துன்பம் வரும்-போது அதுக்கான பொறுப்பு வேண்டாமா? இந்தப் பிரச்னை-யைக் கண்டுக்காம இருக்கோமேன்னு ஒரு குற்ற உணர்ச்சி வேண்டாமா?
"
இதில் தனது தலைவனை ஆயில் மஸாஜ் செய்துகொள்ள போய்விடுவதாக தங்கர்பச்சான் சொன்ன வரிகளை மட்டும் கவ்விப் பிடித்துக்கொண்டு துள்ளிக் குதிக்கும் ரஜினியின் பட்டதாரி பேரவை ரசிகர்கள் ஈழத்தமிழர் விவகாரத்தை அடியோடு மறந்தது மட்டுமின்றி தங்கரை மன்னிப்பும் கேட்கவேண்டும் என்றும் கோரியுள்ளனர் அப்படியென்றால் ரஜினி ரசிகர்கள் ஈழத்தமிழர் விவகாரத்தில் எடுக்கும் நிலை என்ன எவன் செத்தால் எனக்கென்ன தலைவர் படம் ஓடுனா சரிதான் "சிவாஜி வாயிலே ஜிலேபி" என்ற முடிவெடுக்கும் இவர்களுக்கு உண்மையில் மூளை இருக்கிறதா அப்படி யிருந்தால் அதில் தமிழனை பற்றியும் தமிழகம் பற்றியும் சிந்தனை இருக்கிறதா?

Thursday, July 06, 2006

வேணுகோபால் என்ன கடவுளா

அகில இந்திய மருத்துவர் கழகத்தில் இருந்து வேணுகோபால் எனும் ஆரியரை நீக்கியதற்க்கு (அவர் மருத்துவர் என்பதில் எனக்கு சந்தேகம் உண்டு) எதிர்ப்பு தெரிவித்து உடனடி வேலை நிறுத்தம் செய்துவரும் சேவை மனம் கொண்ட மருத்துவர்கள் குழு அவசர சிகிச்சை மற்றும் அணைத்தையும் செய்யாமல் போராடுவதும் (வேணுகோபாலுக்காக) தங்களின் சேவையை வேலைசெய்யாமல் தொடர்வதும் குறிக்கோளாய் கொண்டு செயல்படுகிறது. ஹிந்துவில் இன்று
"RDA president Binod Patro said: "The strike will continue till Dr. Venugopal is reinstated. We will not accept any other person in Dr. Venugopal's place. This decision is not acceptable to us"
அப்படியென்றால் வேணுகோபால் என்ன கடவுளோ அவர் இல்லாமல் போனால்? நீங்கள் எல்லோரும் என்ன செய்வீர்கள் ஒருநாள் துக்கம் அனுசரித்து வேலைக்கு போவீர்களா இல்லையா? அப்போதும் இதையே சொல்லுவீர்களா?தனக்கென வேணுகோபால் எத்தனை பெரிய லாபியை உருவாக்கியிருந்தால் அவரின் வேலை பறிக்கப்பட்டதுக்கு உடனடி வேலைநிறுத்தம் செய்ய முடியும்.
மருத்துவர் என்ற முகமூடியில் இருக்கும் நாலாம் தர அரசியல்வாதிதானே அவர். பிஜேபி எனும் ஆரியர்களின் குழு வேணுகோபாலின் நீக்கத்தை கடுமையாக எதிர்க்கிறது இது மூலம் இடஒதுக்கீட்டில் அவர்களின் நிலை என்ன என்பது தெளிவாக்கப் பட்டிருக்கிறது. அரசிடம் இத்தனை நெருக்கடிகள் தரும் அரசு மருத்துவர்கள் தங்கள் வேலைகளை வேண்டுமானால் ராஜினாமா செய்துவிட்டு தனியார் மருத்துவமணைகளில் தஞ்சம் புகட்டுமே. கூழுக்கும் ஆசை கூழுக்கும் ஆசை (மீசை எங்கே இருக்கிறது)
வேனுகோபால் எனும் ஒரு தனிமனிதனுக்கு எதிராக நியாயமாண முறையில் எடுக்கப்பட்ட ஒரு முடிவை தவறு என கூறி குதிக்கும் இவர்கள் அன்புமணியும் ஒரு மருத்துவர் என்பதை கவணத்தில் கொள்ளட்டும். மீசையுள்ள மருத்துவர். சேவைத்தொழில் என்பதை மறந்து சேவைக்கு பணமும் பதவியும் மட்டுமே குறிக்கோளாக செயல் படும் வேணுகோபால்கள் கொஞ்சம் அடக்கி அடங்கி இருப்பது சில மருத்துவ சேவை கிட்டாமல் நடக்கும் மரணங்களை குறைக்கும். ஒருவேளை அதிலும் மந்திரம் சொல்லி லாபமீட்ட துடிக்கிறார்களோ வேனுகோபால்கள்?
பிற பதிவுகள்:
அன்புமணி *வேணுகோபால் (முத்து (தமிழினி)

Tuesday, July 04, 2006

கற்பை விற்று கண்ணகிக்குக் கோயில்

மீண்டும் வேதாளம் முருங்கை மரம் ஏறத் துடிக்கிறது. நம்முடைய ஜனநாயக ராஜாக்கள், இந்தியாவை ஏலக் கடையாக்கி இருக்கிறார்கள்.
பொதுத்துறை நிறுவனமான நெய்வேலி _ என்.எல்.சி.யின் பத்து சதவிகிதப் பங்குகளை விற்கப் போகிறார்களாம். அதேபோல், ஒரிசாவில் செயல்படும் தேசிய அலுமினிய ஆலையின் (நால்கோ) பத்து சதவிகிதப் பங்குகளை விற்கப் போகிறார்களாம். ஏலத்திற்கு முதல் மணி அடித்திருக்கிறார்கள்.
இந்த இரண்டு நிறுவனங்களுமே லாபத்தில் நடைபெறும் பொதுத்துறை நிறுவனங்கள். சென்ற ஆண்டு மட்டும் நெய்வேலி என்.எல்.சி. நிறுவனம் 704 கோடி ரூபாய் லாபம் ஈட்டியிருக்கிறது. நாட்டின் உயிர் நாடியான மின்சாரத்தையும் உற்பத்தி செய்து தருகிறது. அதேபோல், நால்கோ நல்ல லாபத்தில் நடைபெறுகிறது.
நெய்வேலி என்.எல்.சி.யில் மொத்தம் 31 ஆயிரம் பேர் பணி செய்கின்றனர். இவர்களில் 19 ஆயிரம் பேர் நிரந்தர ஊழியர்கள். இரு பிரிவுகளாகச் செயல்படும் நால்கோவில், ஏறத்தாழ எட்டாயிரம் பேர் பணி செய்கிறார்கள்.
‘எங்களால் பணி செய்ய முடியவில்லை. எனவே, இந்த ஆலைகளைத் தனியாருக்கு விற்று விடுங்கள்’ என்று, இந்த ஆலைத் தொழிலாளர்கள் கோரவில்லை. இந்த ஆலைகள் நட்டத்திலும் முழிக்கவில்லை.
புதிய ஆலயங்களான பொதுத்துறை நிறுவனங்களை விற்பதற்காக, இவர்களை மக்கள் ஆட்சிக்கு அனுப்பவில்லை.
‘லாபத்தில் நடைபெறும் பொதுத்துறை நிறுவனங்களைத் தனியாருக்கு விற்கமாட்டோம்’ என்ற கோட்பாட்டை ஏற்றுத்தான், இவர்கள் ஆட்சியில் அமர்ந்திருக்கிறார்கள். அந்த அம்சமும் அடங்கிய குறைந்த பட்சத் திட்டத்தை இவர்கள் ஏற்றுக்கொண்டதால்தான், இடதுசாரிக் கட்சிகள் இவர்களுக்கு ஆதரவு அளிக்கின்றன.
எவருமே ஏற்றுக்கொள்ளாத போது, இவர்கள் எதற்காக பொதுத்துறை நிறுவனங்களைத் தவணையில் விற்கத் தவிக்கிறார்கள்?
நெய்வேலி என்.எல்.சி.யின் 51 சதவிகிதப் பங்குகளைத் தனியாருக்கு விற்க, வாஜ்பாய் அரசு முன் வந்தது. இன்றைக்கு தி.மு.க. கூட்டணியில் இருக்கும் அத்தனை கட்சிகளும் அதனை எதிர்த்துப் போராடின. ஏன்? காங்கிரஸ் கட்சியும் குரல் கொடுத்தது. ஒரு கடுதாசி எழுதி மத்திய அரசிற்கு எதிர்ப்பைத் தெரிவித்துவிட்டு, இந்தக் கட்சிகள் ஓய்ந்து விடவில்லை. அதனையே சாதனையாகச் சந்தனம் பூசிக்கொள்ளவில்லை.
தமிழகத்தின் மனஉணர்வுகளுக்கு மதிப்பளித்து, நெய்வேலி என்.எல்.சி.யைக் கூறுபோட்டு விற்கும் திட்டத்தை வாஜ்பாய் கைவிட்டார்.
ஆனால், அப்படி அவரை விற்கும்படி நிர்ப்பந்தித்தது யார்? ‘விரைவில் விற்றுத் தொலை’ என்று இன்றைக்கு மன்மோகன் சிங் அரசிற்குக் கட்டளை பிறப்பிப்பது யார்? என்றைக்கு மன்மோகன் சிங் பிரதமராகப் பதவி ஏற்றாரோ அப்போதே, ‘நெய்வேலி என்.எல்.சி.யை விற்று விடு’ என்று அவருக்கு மட்டுமல்ல, நிதி அமைச்சரையும் நிர்ப்பந்தித்தனர். ஐக்கிய முன்னணி அரசு அதனை ஏற்றுக் கொண்டது.
இங்கே அரசியல் நீரோட்டத்தை நிதானமாகப் பார்க்க வேண்டும். வாஜ்பாய் அரசு, என்ன கொள்கை கோட்பாடுகளைச் செயல்படுத்தியதோ, அதனை அப்படியே மன்மோகன் சிங் அரசு செயல்படுத்துகிறது. ஒரே வேறுபாடு என்னவெனில், மன்மோகன்சிங் அரசு மதச் சார்பற்ற அரசு. அதனால்தான் அவர் பிரதமராக இருக்கிறார்.
நெய்வேலி என்.எல்.சி. நிறுவனப் பொன் விழாவிற்கு, பிரதமர் மன்மோகன் சிங் வந்தார். ‘நெய்வேலி என்.எல்.சி. நிறுவனப் பங்குகளைத் தனியாருக்கு விற்காதீர்கள்’ என்ற கோரிக்கை எழுந்தது.
அன்றே சேலத்தில் நடந்த நெடுஞ்சாலைத் திட்ட விழாவிலும், மன்மோகன் சிங் கலந்துகொண்டார். ‘நெய்வேலி என்.எல்.சி. நிறுவனப் பங்குகளை விற்கவேண்டாம் என்று, நிதி அமைச்சர் சிதம்பரத்திடம் சொல்லியிருக்கிறேன்’ என்று அந்த விழாவில் அவர் குறிப்பிட்டார்.
இப்போது மீண்டும் நெய்வேலி என்.எல்.சி. நிறுவனம் விற்பனைக்கு என்று அறிவித்திருக்கிறார்கள். அதன் சூத்திரதாரி நிதி அமைச்சர் சிதம்பரம்தானா? அப்படி நாம் வரையறை செய்யமாட்டோம்.
‘பொதுத் துறை நிறுவனங்களை இழுத்து மூடு. தனியாருக்கு விற்பனை செய்’ என்று, அன்றைக்கு வாஜ்பாய்க்கு உத்தரவு போட்ட சர்வதேச நிதி நிறுவனங்கள்தான், இன்றைக்கு சட்டாம்பிள்ளைத்தனம் செய்கின்றன. அதனை அன்றைக்கு வாஜ்பாய் ஏற்க மறுத்தார். மன்மோகன் சிங் _ சிதம்பரம் _ அலுவாலியா கூட்டணி அதனை ஏற்க முன்வந்திருக்கிறது. இதுதான் உண்மை.
‘தனியார் மயம், தாராள மயம் என்ற கோட்பாட்டை என்றைக்கு ஏற்றுக் கொண்டாயோ, அன்றைக்கே உனக்குச் சுதந்திரமாகச் சுவாசிக்க உரிமை இல்லை’ என்று உலக வங்கிகள் வாதாடுகின்றன. ஏமாந்தால் அந்த வங்கிகள், இந்தியாவின் இதயத்தையே ஏலம் கேட்கும்.
அமெரிக்காவின் ஆளுகையில் உள்ள எல்லா சர்வதேச நிதி நிறுவனங்களும் தங்கப் பலி பீடம்தான். அதில் வாஜ்பாயும் தலைகொடுத்தார். தப்பித்தார். மன்மோகன் சிங்கும் தலை கொடுக்கிறார். ஆனால், அதனை இந்திய மக்கள் ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்கள். அந்த முரண்பாட்டு முனையில்தான், மன்மோகன் சிங் அரசு ஊசலாடிக் கொண்டிருக்கிறது.
லாபம் கொழிக்கும் நெய்வேலி என்.எல்.சி.யையும், நால்கோவையும் விற்று, நலிந்த ஆலைகளை உயிர்ப்பிக்கப் போகிறோம் என்று காரணம் சொல்கிறார்கள். அதாவது, கற்பை விற்று கண்ணகிக்குக் கோயில் கட்டப்போகிறோம் என்கிறார்கள்.
இந்தியத் தொழிலதிபர்களும் செல்வந்தர்களும் வங்கிகளை ஏமாற்றி இன்னும் கட்டாமல் இருக்கின்ற தொகை, ஒரு லட்சத்து 17 ஆயிரம் கோடி ரூபாய் என்று ஒரு கணக்குச் சொல்கிறார்கள். அந்தப் பக்கத்தை லேசாகக் குண்டூசியால் குத்தினால் போதும். நலிந்த நிறுவனங்களை நிமிர வைக்க, தேவைக்கு அதிகமாகவே வரவு வரும். அதனை விடுத்து மூலதனத்தை விற்று பொரி கடலைக் கடை வைக்க முயற்சிக்கிறார்கள்.
இது தனியார் மயக் கொள்கையைப் பின் வாசல் வழியாகக் கொண்டு வருவதற்கான தந்திரமாகும். அர்ஜென்டைனா, பிரேசில், மெக்சிகோ ஆகிய நாடுகள், அமெரிக்க உலக வங்கியின் நிர்ப்பந்தத்திற்கு அடி பணிந்து, பொதுத்துறை நிறுவனங்களைப் படிப்படியாக விற்பனை செய்தன. இன்றைக்கு மீள முடியாத கடனில் தத்தளிக்கின்றன.
முன்னர் திருச்சி பாரத் மிகு மின்கலத் தொழிற்சாலையின் (பெல்) பத்து சதவிகிதப் பங்குகளை விற்க முன் வந்தனர். தமிழகத்தின் ஒன்றுபட்ட எதிர்ப்பு, அவர்களுடைய முயற்சியைத் தகர்த்தது.
அதேபோல், இப்போது நெய்வேலி அனலோடும் நால்கோ கனலோடும் விளையாட, மன்மோகன் சிங் அரசு முயற்சிக்கிறது. இந்த நிறுவனங்களுக்கு நெருக்கடி என்றால், மன்மோகன் சிங் அரசிற்கு நெருக்கடி என்று அர்த்தம்.
இடதுசாரி சக்திகளின் எச்சரிக்கை, அதற்கு அபாய அறிவிப்புச் செய்திருக்கிறது.
கலைஞரின் அறிவிப்பு அதற்குக் கட்டியங் கூறியிருக்கிறது.
சோலை