இரண்டாயிரம், மூவாயிரம் ஆண்டுகளுக்குள் தோன்றியதுதான் இந்தக் கடவுள் சங்கதி. அதுவும் இந்தக் கடவுளை நமது ஆள் உண்டாக்கவில்லை. வெள்ளைக்காரன்தான் இந்தக் கடவுளையே உண்டாக்கியவன். அதைப் பார்ப்பான் ஒன்றுக்குப் பத்தாகப் பெருக்கி விட்டான். ஒரு கடவுள் பெயர் கூடத் தமிழ்ப் பெயரே கிடையாது. இங்கு இருக்கிற கடவுள்களின் பெயர்கள் எல்லாம் வடமொழிச் சொற்கள்தான். கடவுள் என்ற சொல்லே தமிழில் கிடையாது. தமிழனுக்குக் கடவுளே இல்லை. இன்றைக்கும் தமிழ்ச் சொல்லில் உள்ள ஒரு கடவுளும் கிடையாது.
வெள்ளைக்காரனும் காட்டுமிராண்டியாக இருந்த காலத்தில்தான் கடவுளைக் கற்பித்தான். அந்தக் கடவுளுக்கு நிறம் மஞ்சள் வர்ணம் என்றும் சொன்னான். அந்தக் கடவுளைக் காட்டு மனிதன் சிங்காரித்தான். அதற்கு உடை என்னடா என்றால் புலித்தோல் என்றான். தலை எல்லாம் சடை. காது எல்லாம் பெரிய ஓட்டை. நகைகள் எல்லாம் பாம்புகள். குடி இருக்கிற இடமோ சுடுகாடு. கையில் இருக்கிற கருவிகளோ மண்டை ஓடுகள். இவை எல்லாம் மனிதனுக்கு இருக்கக் கூடிய யோக்கியதையா? இவை எல்லாம் காட்டுமிராண்டித்தனமான சின்னங்கள் அல்லவா?
வெள்ளைக்காரனைப் பார்த்துதான் பார்ப்பான் இங்குக் கடவுளை உண்டு பண்ணினான். வெள்ளைக்காரன் கடவுள் ஜுபிடர்; பார்ப்பான் அதற்கு கொடுத்த பெயர் இந்திரன். வெள்ளைக்காரன் - மைனாஸ்; பார்ப்பான் வைத்த பெயர் எமன். வெள்ளைக்காரன் - நெப்டியூன்; பார்ப்பான் - வருணன். வெள்ளைக்காரன் - லூனஸ்; பார்ப்பான் - சந்திரன். வெள்ளைக்காரன் - சைனேஸ்; பார்ப்பான் - வாயு. வெள்ளைக்காரன் - அப்பல்லோ; பார்ப்பான் - கிருஷ்ணன். வெள்ளைக்காரன் - மெர்குரி; பார்ப்பான் - நாரதன். வெள்ளைக் காரன் - மார்ஸ்; பார்ப்பான் - கந்தன். இப்படியாக வெள்ளைக்காரனைப் பார்த்து காப்பி அடித்தவன்தான் இந்தப் பார்ப்பான். அப்படிக் காப்பி அடித்த கடவுள்களுக்கும் கதைகள் எழுதி, புராணங்கள் எழுதி, பார்ப்பான் வயிறு வளர்க்க ஆரம்பித்து விட்டான். அதை அப்படியே தமிழன் நம்பி ஏற்றுக் கொண்டு விட்டான்.
அப்படி ஏற்றுக் கொண்ட கடவுள்களில் ஒன்றுதான் இந்த விநாயகன். விநாயகன் என்ற சொல்லே தமிழ் கிடையாது. கடவுளுக்கு நாட்டில் என்ன பொதுவாக இலக்கணம் சொல்கிறார்கள். கண்ணுக்குத் தெரியாது - கைக்குச் சிக்காது புத்திக்கும் எட்டாது என்கிறான். அப்படியானால் எப்படிக் கடவுளை நம்புவது என்று கேட்டால், நம்பு என்கிறான். நம்பு என்பதில்தான் கடவுளை வைத்து இருக்கிறான். கிறித்துவனும், துலுக்கனும் அதைத்தான் சொல்கிறான். கண்ணுக்குத் தெரியாத கடவுளுக்கு எப்படி உருவத்தை உண்டாக்கினான்? கருணையே வடிவானவர் என்கிறான். அவன் கையில் ஏன் சூலாயுதம்? வேலாயுதம்? அரிவாள், மண்வெட்டி, கோடாரிகள் எல்லாம்? இவை எல்லாம் கருணையின் சின்னங்களா? கொலைகாரப் பசங்களுக்கு இருக்க வேண்டிய கருவிகள் எல்லாம் கடவுளுக்கு எதற்கு? கடவுளுக்கு ஒழுக்கத்தையாவது நல்ல முறையில் கற்பித்து இருக்கிறானா? எந்தக் கடவுள் இன்னொருத்தனுடைய மனைவியை கெடுக்காமல் இருந்திருக்கிறான்? விபச்சாரம் செய்யாத கடவுள் ஒன்றாவது உண்டா? இருந்தால் சொல்லட்டுமே, ஏற்றுக் கொள்கிறேன். கடவுள் பிறப்பைப் பற்றி தான் எழுதி வைத்து இருக்கிறானே கொஞ்சமாவது யோக்கியம் வேண்டாமா? விநாயகன் பிறப்பு எவ்வளவு ஆபாசமானது!
இன்றைக்கு நாம் சூத்திரர்களாக இருக்கிறோம் என்றால், அது பார்ப்பானால் மட்டுமல்ல - நாமே அதை ஒத்துக் கொண்டு இருக்கிறோம். பார்ப்பான் நம்மைச் சூத்திரன் என்று சொல்லப் பயந்து விட்டான். ஆனால், நாமே நாம் இந்து என்று ஒப்புக் கொண்டு, கோயில்களுக்குச் செல்வதன் மூலமாகவும், நெற்றியில் சாம்பலைப் பூசிக் கொள்வதன் மூலமாகவும் சூத்திரன் என்பதை ஏற்றுக் கொண்டு இருக்கிறோம். இன்றைக்கு இருக்கிற அரசாங்கம் நமது அரசாங்கம் என்று பேர். என்னத்துக்காக இந்தப் பண்டிகைகளுக்கு எல்லாம் லீவு விட வேண்டும்? நம்மை இழி மகன் என்று முத்திரைக் குத்திக் கொள்ளவா? துணிச்சலாக இந்த லீவுகளை எல்லாம் கேன்சல் செய்ய வேண்டும். இந்த அரசாங்கங்கூட, இந்த இடிந்து போன கோயில்களை எல்லாம் பழுது பார்த்துப் புதுப்பித்துக் கொண்டு இருக்கிறது. என்ன அர்த்தம்? நம்மை என்றென்றும் இழிமக்களாக்கச் செய்யும் முயற்சிதானே இது? வெட்கப்பட வேண்டாமா?
எங்களுடைய இயக்கம் இந்த நாட்டில் தோன்றிப் பாடுபடவில்லை என்றால், இந்தக் கடவுளைச் செருப்பாலடித்து, சாத்திரங்களைக் கொளுத்தி எரிக்கவில்லை என்றால், நமக்குப் படிப்பு ஏது? உத்தியோகம் ஏது? இன்றைக்கு நூற்றுக்கு நூறு தமிழனாக இந்த நாட்டை ஆட்சி செய்கிறார்களே! இது எப்படி வந்தது? நம்முடைய முயற்சியால் அல்லவா?

(29.8.73 அன்று சிதம்பரத்தில் விநாயக சதுர்த்தி கண்டனப் பொதுக் கூட்டத்தில் ஆற்றி உரை)
5 comments:
TEST COMMENT
மகி,
பகிர்வுக்கு நன்றி!!
உங்களின் சுய கருத்துன்னு நெனச்சு 'அசிங்கமாய் எழுதுவதை தவிருங்களேன்' என்று சொல்ல வந்தேன்.
பாத்தா பெரியார் பேசினதா சொல்றீங்க. அட ராமச்சந்திரா, அவரே இப்படின்னா, தொண்டர்கள குறை சொல்லி ஒண்ணும் பிரயோஜனம் இல்லை.
அவரவர் நம்பிக்கை அவரவர்க்கு.
கடவுள் இல்லை என்பதும் ஒரு நம்பிக்கை. அதையும் மதிக்க வேண்டும்.
கடவுள் இல்லைன்னு சொன்னவர் என்பதர்க்காக அவர் சிலையை போய் செருப்பால் அடித்தால் நல்லாவா இருக்கும்?
கோடி மக்கள் நம்பிக்கை வைத்திருக்கும் கடவுளர்களை விபச்சாரி என்பதெல்லாம் இங்கிதம் தெரியாத வரட்டு அரை கூவல்கள்.
உங்களுக்கு நம்பிக்கைகள் இல்லையா என்ன? உங்கள் குடும்பத்தினர் மீது இருக்கும் பாசம்; உங்கள் மனைவி மக்கள் மீது இருக்கும் நம்பிக்கை - இதெல்லாம் கண்ணில் தெரியாது தம்பி - மனதளவில் உணர்வது.
இந்த உணர்வை போன்றுதான் -கடவுள் இருக்கிறார்; ஆபத்தில் உதவுவார்; என்ற நம்பிக்கையும்.
கண்ணுக்கு தெரியாது என்பதால், சுற்றம்/நட்பு மீது பாசம்/நம்பிக்கை இல்லை என்றால் வாழ்வதே வீண்!
நடுக்கடலில் யாரும் இல்லாத ஒரு தீவில் மாட்டிக் கொண்டு (god forbid) வெளியே வர வழி தெரியாமல் இரண்டு நாள் தவித்தால், கடவுள் நம்பிக்கை தானாய் வரும். :)
கோயில்கள் இருப்பதால் தான் இன்னும் 'இழி' பிறப்பாக இருக்கிறீர்கள் என்பதெல்லாம் சுத்த மடமை. கையாலாகாத்தனம். சோம்பேறிப் பேச்சு.
அம்பேத்கார் எல்லாம் முன்னுக்கு வரலியா? கடவுள் சிலைகளை செருப்பால் அடிப்பதர்க்கு முன்னரே வளர்ந்து உயர்ந்தவர்தானே அவர். அவரை எந்த 'பார்ப்பானும்' தடுக்கவில்லையே. அவர் எழுதிய சட்ட திட்டங்களை தானே இன்னும் பின்பற்றுகிறோம்.
முயன்றால் முடியும்.
வாய் சொல்லில் வீரர்களாக மட்டும் இருக்காதீர்கள்.
விபூதி பூசிக் கொள்வதால், கீழ் நிலை மக்கள் இன்னும் கீழ் நிலையிலேயே இருக்கிறார்கள், விபூதி அவர்களை கட்டிப்போடுகிறது என்பதெல்லாம் பிதற்றல்கள்.
உழைப்பு உயர்வுக்கு வழி. இதை உலகிற்க்கு காட்டியவர்கள் பலர் இருக்கிறார்கள், அம்பேத்கார் உள்பட.
அவர்கள் எல்லாம் மூலையில் அமர்ந்து கொண்டு என்னை ஒதுக்குகிறான், என்னை இழிவு படுத்துகிறான் என்று கூறிக் கொண்டு நேர விரையம் செய்யவில்லை. வாழ்ந்து காட்டினார்கள்.
வெட்டிப் பேச்சை குறைத்து, ஆக்கபூர்வமாக ஏதாவது செய்யுங்கள்.
இறைவன் இல்லை என்ற நம்பிக்கை இருக்கிறதா - ஒ.கே. உண்டியலில் காசை போடாதீர்கள். இலவசக் கல்விச் சாலை அமைக்க பண உதவி கொடுங்கள்.
கீழ் நிலையில் உள்ள குடும்பங்களை தத்தெடுங்கள். அவர் குழந்தைகளின் கல்விக்கு உதவுங்கள். ஆளுக்கு ஒரு குடும்பத்தை கரை ஏற்றுங்கள்.
பொருளாதாரம் உயர்ந்தால் ஏற்ற தாழ்வுகள் தானாய் குறையும்.
நம்மில் பலருக்கு, தாய் தந்தையரை விட விநாயகக் கடவுள் மீது அதிகம் பற்றும், பாசமும், பக்தியும் கொண்டவர்கள். உங்களுக்கு நம்பிக்கை இருக்கிறதோ இல்லையோ, இவ்வளவு கேவலமாக அந்தக் கடவுளை பற்றி பேசுவதும் எழுதுவதும் மிகத் தவறு.
நாகரீகமான செயல் அல்ல இது.
முகமது பற்றி கிண்டலாக வந்த கார்டூன் ஏற்படுத்திய தாக்கம் நினைவிருக்கிறது இல்லையா?
Get on with your life. சிவன் ஏன் மண்டை ஓடு வைத்திருக்கிறான்; ஏன் பாம்பை அணிந்திருக்கிறான்; கிருஷ்ணன் ஏன் கோபிகைகளுடன் குலாவினான் -- எல்லாத்துக்கும் ஒரு காரணமும் அர்த்தமும் இருக்கு - தெரியாமல் ஹா ஹா ஹா என்று நையாண்டி செய்வது சிறு பிள்ளைத் தனம்.
பெரியார் ஏன் மணியம்மையை திருமணம் செய்து கொண்டு வீட்டம்மையாக்கினார்? திருமணம் செய்து கொண்டு ஆணும் பெண்ணும் சேர்ந்து வாழ வேண்டும். விலங்கு போல் ஊருக்கு ஒன்று என்று வாழக் கூடாது என்ற கோட்பாடெல்லாம் எங்கிருந்து வந்தது. அதில் ஏன் நம்பிக்கை வைத்து அதை பின்பற்றினார் அவர்? இதெல்லாம் கூட நம் கலாசாரத்தில் இருந்து வந்ததுதானே. கடவுளை மட்டும்தான் இந்துக்கள் படைத்தனரா.
வாழ்வியலை வேறு ஒருவன் படைத்தானா?
நல்ல கூத்து சாமி!
எக்ஸ்பிரஸ் தொடர்ந்து வருமா?. பல நாட்களாக காணவில்லையே?
அவன் கையில் ஏன் சூலாயுதம்? வேலாயுதம்? அரிவாள், மண்வெட்டி, கோடாரிகள் எல்லாம்? இவை எல்லாம் கருணையின் சின்னங்களா? கொலைகாரப் பசங்களுக்கு இருக்க வேண்டிய கருவிகள் எல்லாம் கடவுளுக்கு எதற்கு?////
ஓ அதுங்களா ?? நாங்க அமைதி வேண்டி எங்க ஆயுதங்களை கடவுள் கிட்ட குடுத்தோம்... இப்படியே பெரியாருங்களும் யவனவந்தேறிகளும் பேசினா மறுபடி கடவுள் கிட்ட இருந்து நாங்க திரும்ப வாங்க வேண்டியது தான்
Post a Comment