Saturday, August 04, 2007

தோழி தமிழச்சிக்கு.....

கடந்த வாரம் இதே வலைப்பூவில் எழுதப்பட்ட தாடிக்கார தந்தை பெரியாரின் பார்ப்பன துரோகம் எனும் பதிவில் பெரியாரைப்பற்றி அவதூறுகளை பரப்புவதாக சொல்கிறீர்கள் அதற்கான பதில்....

அந்த பதிவில்

//பெரியார், அம்பேத்காருக்கு பிறகு பிற இந்திய மாநிலங்களிலும் தலித் தலைவர்கள் வளர்ந்து பார்பனரின் தகிடு தத்தங்களை அம்பலப்படுத்தினர் என்று தோழர் ஓத்துக் கொள்கிறார். பிறகு பெரியாரைப் பற்றி அவதூறுகளை எழுதுகிறார். அவருக்கே என்ன எழுதுவது என்று தெரியவில்லை. ஆனாலும் எதையாவது எழுத வேண்டும் என தொடருகிறார்… "பெரியார்தான் காங்கிரசில் இருக்கும் பார்ப்பனர்கள் சொல்பேச்சு கேட்கவில்லை என்பதால் எதிர்த்தார் அம்பேத்கருக்கு என்ன வந்தது அவரும் ஏன் பார்ப்பனர்களை எதிர்க்க ஆரம்பித்தார்? என்று குறிப்பிடுகிறார். தோழர் சமூதாய நிகழ்வுகளை மேம்போக்காக பேசுகிறார்.//

என்ன சமுதாய நிகழ்வுகளை மேம்போக்காக பேசுவதை அதில் கண்டீர்கள் எனத் தெரியவில்லை. ஆண்டாண்டு காலமாய் அடக்கி ஒடுக்கி நம்மை வைத்திருந்தவன் பெரியாருக்குப்பின்னும் அம்பேத்கருக்குப் பின்னும் அடங்க ஆரம்பித்தான் . ஆனால் பெரியார் பார்ப்பனர்களை எதிர்க்க காங்கிரஸில் அவரின் செயல்பாடுகளுக்கு ஏற்பட்ட தடைகளே காரணம் என நான் அதே பதிவில் குறிப்பிட்டிருக்கும் ஒரு பதிவர் தனது வலையில் எழுதுகிறார் அதற்கானபதிலாக பார்பனர்கள் ஒன்னும் நல்லவர்கள் இல்லை பெரியார் பார்ப்பனீயத்தை எதிர்க்க காங்கிரஸ் மட்டும் காரணமில்லை எனச் சொல்வதற்காக எழுதப்பட்டதே அது.

//அம்பேத்கருக்கு என்ன வந்தது அவரும் ஏன் பார்ப்பனர்களை எதிர்க்க ஆரம்பித்தார் என முட்டாள்தனமான கேள்வியை எழுப்புகிறார்? வரலாறு தெரியாதவர்கள் தெரியாததைப்பற்றி ஏன் பேச வேண்டும்? எழுத வேண்டும்? //

என் பதிவை நீங்கள் படித்த விதம் தவறு என்பதற்க்கு இது ஒன்றே சான்று. முன்னறே சொன்னது போல அது அந்த பதிவருக்கு அளிக்கப் பட்ட பதில். மற்றபடி எனக்குத் தெரிந்த வரலாறு பற்றியெல்லாம் உங்களுக்கு கவலை வேண்டாம். நீங்கள் சொல்லும் அதே எழுத்துரிமையை முற்றாய் நம்புபவன் நான்.

//பூணூல் சட்டைக்குள் இருந்தால் எவருக்கு தெரியப்போகிறது. இணையத்திலும் 'குறுக்கிட்டு' காட்டவேண்டுமோ? என்று இடக்குமடக்கான கேள்விகளை கேட்கிறார். பூணூல் என்ன மார்பில் மட்டுமா ஒட்டிக் கொண்டிருக்கிறது? குணத்தையும் அல்லவா தரங்கெட்ட நிலையில் வைத்திருக்கிறது. மனிதனை மனிதன் தாழ்த்தி கேவலப்படுத்திக் கொண்டிருக்கும் சிறு கூட்டத்தின் ஆணவத்திற்கு வக்காலத்து வாங்குவதோடு அல்லாமல்,//

இதில் என்ன வக்காலத்தை கண்டீர்கள். ஒருவன் பார்ப்பானாக இருப்பதை அவன் பிறப்பின் காரணம் எனச் சொல்லலாம் ஆனால் அதை அவன் இணையத்தில் எழுதி தன்னை ஏன் இன்னும் வெளிப்படுத்திக்கொள்ள வேண்டும் என்கிறேன்?. பார்ப்பனத் தனத்தை இன்னும் ஏன் விட்டுவிடாமல் இருக்கிறார்கள் எனக் கேட்கிறேன். இதனால்தான் மற்றவர்களின் வசைபாடலுக்கு ஆளாகிறார்கள் எனச் சொல்கிறேன்.

//பார்பனர் பழம்பெருமையையும், சாதிய அடையாளத்தையும் விட்டு தொலைக்காமல் இருக்க வேண்டும் என்கிறார். இவர் சொல்வதைப்பார்த்தால் பார்ப்பான் மீண்டும் பழையநிலைக்கு திரும்ப வேண்டும் என்று அழைப்பு விடுப்பதை போல் உள்ளது//

இந்த அர்த்தம் தொனிக்கும் வரிகள் அப் பதிவில் எங்கேனும் இருப்பின் நான் வலைப்பூ எழுதுவதை நிறுத்தி விடுகிறேன்.

பின் குறிப்பு: மகேந்திரன்,பெ அவர்களுக்கு என கடிதத்தை ஆரம்பித்து அதை பொதுவிவாதமாக எழுதி அதாவது ஏன் இப்படி அவர் எழுதுகிறார், இப்படி எழுதுகிறார் என எழுதும் உங்கள் எழுத்து வியப்பாய் இருக்கிறது.

8 comments:

ALIF AHAMED said...

பின் குறிப்பு: மகேந்திரன்,பெ அவர்களுக்கு என கடிதத்தை ஆரம்பித்து அதை பொதுவிவாதமாக எழுதி அதாவது ஏன் இப்படி அவர் எழுதுகிறார், இப்படி எழுதுகிறார் என எழுதும் உங்கள் எழுத்து வியப்பாய் இருக்கிறது.
//

அப்பாடா நல்லது நடக்க போகுது..:)

Unknown said...

ஏன் மின்னல் இப்படி ஒரு பெருமூச்சு
என்ன எனக்கு ஒன்னும் புரியல

Unknown said...

அனானி ஒன் பின்னூட்டத்த கைதவறா ரிஜக்ட் பன்னிட்டேன் கோச்சுக்காம இன்னொரு தபா போடுப்பா

TBCD said...

தங்களின் எள்ளல் நடை தவறாக புரிந்து கொள்ள பட்டுவிட்டது..என்று நான் நினைக்கிறேன்...
ஆனால் தங்களின் பதிவு..அந்த பதிவிற்கு தக்க பதிலடியா என்றால்..இல்லை என்றே நான் நினைக்கிறேன்...
ஞாயிற்றை நாய் குரைத்தற்று..என்று நாம் இதை விடலாகாது....
பதிவுலகின் வீச்சு...நாம் அளந்தறியாதது... சில கருத்துக்கள் தெளிவு படுத்தாவிட்டால்..
அவை..தவறாகவே படிப்பவர்களின் மனதில் பதியும்...
பதிவுலகை..நல்லதொரு ஊடகமாக பயன் படுத்தலாமே...
ஆட்டம் , பாட்டம், கொன்டாட்டம்...இருக்க வேன்டும்..ஆனால்..தமிழன் தன் கடமை...மறக்க கூடாது...

bala said...

//ஞாயிற்றை நாய் குரைத்தற்று..என்று நாம் இதை விடலாகாது....
பதிவுலகின் வீச்சு...நாம் அளந்தறியாதது... சில கருத்துக்கள் தெளிவு படுத்தாவிட்டால்..
அவை..தவறாகவே படிப்பவர்களின் மனதில் பதியும்...//

டிபிஸிடி அய்யா,

ஞாயிற்று என்று யாரை சொல்கிறீர்கள்?நம்ம கிழமத்தூர் காரரையா?அப்போ சூரியன் தி பாஸ் யாரு?நாயா?அய்யோ என்ன கொடுமை இது டிபிஸிடி?

பாலா

TBCD said...

பாலா...விளம்பர சேவைக்கு நன்றி... உங்கள் தேவை நாட்டுக்கு தேவை...

அப்பறம், உங்களுக்கு புரியுற மாதிரி நான் எழுத.. ரொம்ப நாளாகும்...அதுனால்..
உங்களுக்கு புரியல்லையின்னா... ஜி.டாக்குங்கள்...

//*டிபிஸிடி அய்யா,

ஞாயிற்று என்று யாரை சொல்கிறீர்கள்?நம்ம கிழமத்தூர் காரரையா?அப்போ சூரியன் தி பாஸ் யாரு?நாயா?அய்யோ என்ன கொடுமை இது டிபிஸிடி?

பாலா *//

Anonymous said...

ஏண்டா அம்பி பாலா இப்படி நாக்கைத் தொங்கப் போட்டுட்ண்டு அலையறே!
அவாள்ளாம் சமத்தாயிட்டா.ஓம் பருப்பு வேகாதுடா.
சும்மா நடுவிலே பூந்து வம்பு இழுத்துவிடலாம்னு அலஞ்சே நன்னா அந்த பொம்மனாட்டி இன்னோன்னு கொடுத்துடுவா.
நமக்கெல்லாம் உரைக்காதுதான்.ஆனால் அவா நம்மைப் புரிஞ்சுண்டுருவா.

Anonymous said...

//அவாள்ளாம் சமத்தாயிட்டா//

அக்னிஹோத்ரம் அய்யா,

என்ன, கிழமத்தூரும்,சூரியன் தி பாஸ் அய்யாவும் சமத்தா?அடப்பாவி,காக்கைக்கு தன் குஞ்சு பொன் குஞ்சு மாறி தோணும்.அதுக்காக, இப்படி இந்த பிரியாணி குஞ்சுகளை, சமத்துன்னு சொல்வது ஓவர் மட்டுமல்ல,ரொம்பவே கேவலம்.

பாலா