Thursday, May 03, 2012

தங்க முலாம் பூசப்பட்ட டம்ளர்களும் போலி ஈழப் போராட்ட பாசமும்

தமிழகத்தில் எழுதப் படாத ஒரு அரசியல் விதி இருக்கிறது. அது உணர்ச்சி வசப்பட்டு பேசி கூட்டத்தைக் கூட்டி பின்னர் ஒன்னுமில்லாமல் போவது. அதற்கு முதல் உதராணம் திரு.வைகோ அவர்கள், இரண்டாவது உதாரணம் திரைப்பட இயக்குனர் சீமான் அவர்கள்.

வைகோ மேடைகளில் பேசும்போது உலக அரசியலை சுமார் இராண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே ஆரம்பித்து பேச ஆரம்பித்ததும் கூட்டம் கொட்டாவி விட்டு இரண்டாம் காட்சி மொக்கை படத்துக்குப் போன இளவட்டமாய் ஆகிவிடுகிறது என்பதென்னவோ உண்மைதான். ஆனால் அந்த மயக்கும் பேச்சும் அவரது படிப்பறிவும் பாழாய் போய்க்கொண்டிருக்கிறதே என யாராவது அவரிடம் சொல்வார்களா?

ஜூனியர் விகடனில் ஆயிரத்தெட்டு கேள்விகளோடே கலைஞரைப் பார்த்து கேள்வி கேட்ட வைகோ அவர்கள் சுமத்தும் பெரும்பாலான குற்றச் சாட்டுக்கள் என்னை தேச துரோக குற்றத்தில் கைது செய்தார் என்பது. கருணாநிதிக்கும் கொஞ்சம் அல்ல வைகோவைப் போலவே நிறையவே ஈழ மக்கள் மேல் அக்கரை இருந்தது,, இல்லையேல் அம்மாவின் ஆட்டுக்கல்லாக வைகோ மாறும் முன்னர் பொடாவில் சிறையில் இருந்த வைகோவை வெளியே கொண்டுவர பாடுபட்டிருக்க மாட்டார் " விட்டது சனியன்" என இருந்திருப்பார் வெளியே உங்களை கொண்டுவந்த பின்னர் கேவல சீட்டுக்களுக்காக" அல்லது " மக்கள் அப்போது பேசிக் கொண்டது போல் நோட்டுக்காக தாவியது வைகோவின் நன்றிகலந்த செயல்களுள் ஒன்று.

தேர்தலைச் சந்திக்க விடாமலேயே மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுத்து அனுப்பி வைகோவை உலகறியச் செய்தவர் கலைஞர். அத்ற்க்காக நன்றிசொல்ல வேண்டாம் அவதூறுகளைப் பரப்பாமல் இருந்தால் போதும்.

அப்போ ஒன்னும் செய்யலை இப்போ செய்யவேண்டாம் என்பது எவன் வீட்டில் இழவு விழுந்தாலும் அங்கே நாந்தான் பினமாக இருப்பேன் என்பதைப் போலன்றி வேறென்னவாக இருக்க முடியும்? அப்படி கொல்லப்பட்ட போது கலைஞரின் ஒரே பலவீனம் ஆட்சியில் இருந்தது. இன்று தமிழகத்தை மத்திய அரசு மதிப்பதில்லை என எதற்கெடுத்தாலும் புலம்பித்தள்ளும் வைகோவின் நண்பர் பழ. நெடுமாறன் அவர்கள் விளக்குவாரா? அப்போது மட்டுமென்ன திமுக அரசாங்கத்தை தங்கத் தட்டிலா தாங்கினார்கள்.

ஈழம் ஈழம் என முழக்கமிடும் வைகோ ஒன்றறை லட்சம் பேர் படுகொலை செய்யப்பட்ட பின்னரும் அவர்களின் உரிமைக்காக பாடுபடவும் வைகோவுக்கு இருக்கும் அதே உரிமை ஏன் கருணாநிதிக்கு இருக்கக் கூடாது?

ஜெயலலிதா ஆதரித்தால் ஏற்றுக் கொள்ளுவீர்கள். அவர் உளமாற அதை செய்வாரா இல்லையா என்பதெல்லாம் தேவையில்லை. ஏன் அவர் மனம் மாறி விட்டதாகக் கூட சீமான் போன்றவர்களும் சொன்னார்கள் இலை மலர்ந்தால் ஈழம் மலரும் என்று . ஒரு கவைக்குதவாத சட்ட மன்ற தீர்மானம் இயற்றி ஈழத்தாய் பட்டம் கொடுத்தார்கள்.  இலையும் மலர்ந்தது. ஈழம் இருக்கும் பக்கம் கூட அம்மையார் திரும்பிப் பார்க்கவில்லை. ஏன் அவர்களால் முடியாது என்பது மட்டுமில்லை.விருப்பமும் இல்லை என்பதாலேயே.

இப்போது அம்மையாரின் மனம் புண்பட்டுவிடுமோ பொடாவிலோ தடாவிலோ உள்ளே போக நேரிடுமோ என வாயையும் இன்னொன்றையும் அம்மையாருக்கு எதிராக மூடிக்கொண்டு கடந்த கால வரலாற்றை பற்றிப் பேசி கருணாநிதிக்கு எதிராக மட்டுமே மக்களைத் திரட்டுவதால் என்ன பயன் சீமானுக்கும் வைகோவுக்கும் பழ.நெடுமாறனுக்கும் கிடைக்கப் போகிறது என்ப்து அந்த ராஜபக்‌ஷேவுக்கே வெளிச்சம்.

உண்மையிலேயே சீமான், வைகோ, நெடுமாறன் போன்றவர்களுக்கு ஈழத்தின் மேல் அக்கரை இருப்பின் இப்போதாவது கருணாநிதி நமக்கு ஆதரவாக வருகிறாரே என மகிழ்ச்சியல்லவா அடைந்திருக்க வேண்டும்? இல்லை உனக்கு அந்த தகுதியில்லை என்று கூறி கொச்சைப் படுத்துவதில் இருந்தே தெரிகிறது அவர்களின் நோக்கம் தனி ஈழமல்ல, தனி ஈழத்தைக் கொண்டு தாங்கள் நடத்திவரும் நாடகத்தில் கருணாநிதிக்கு முக்கியப் பாத்திரம் கிடைத்துவிட்டால் என்ன செய்வது என்ற பயம் மட்டுமே.

டெசோவை கருணாநிதி ஆரம்பித்தால் நாளை மதியமே அங்கே தனி ஈழம் மலரும் எனச் சொல்லும் அளவுக்கெல்லாம் நான் புத்திசாலி இல்லை. ஆனால் ஒருங்கினைக்கப்படாத் ஒரு இயக்கம் எப்படி ஒழுங்கமைவதாக இருக்காதோ அதே போல யார் சொன்னால் எவர் சொன்னால் ஒரு கவணத்துக்கு அந்த விஷயம் வருமோ அவர்களின் பின்னால் நீங்கள் போகவெல்லாம் வேண்டாம் சும்மா பொத்திக்கொண்டாவது இருக்கலாமே என் அன்பு மக்களே!

வைகோவும் சீமானும் நெடுமாறனும் தமிழக மக்களை\உணர்ச்சி வயப்பட வைத்து பதினான்கு பேருடைய மரணத்துக்கு காரணமாய் இருந்ததைத் தவிற வேறு ஒன்னையும் செய்துவிடவில்லை. தங்களை யாராவது மைக் செட் போட்டு வாடகைக்கு மண்டபம் பார்த்து. மக்களைத் திரட்டி ஈழம் பற்றி எச்சில் தெரிக்க பேசக் கூப்பிடுவதைத் தவிற.

உங்களின் ஈழப் போராட்டத்தில் எங்களுக்கு இதுவரை எந்த சந்தேகமும் இருந்ததில்லை. ஆனால் நீ போராடாதே என கருணாநிதியை சொல்லும் போதுதான் உங்கள் வேஷம் கலைந்து சுயம் வெளிப்பட்டுவிட்டது.

10 comments:

கோவி.கண்ணன் said...

ஜிங்குச்சா ஜிங்குச்சா செவப்பு கலரு ஜிங்குச்சா

மகேந்திரன். பெ said...

ஜால்ரா சத்தம் இல்லாம நல்ல காரியமே நடப்பதில்லை மாம்ஸ்

ராவணன் said...

கருணாநிதி என்ற நபர் ஏதாவது கூறினால். அதனால் தயாளு, கனிமொழி, ராசாத்தி போன்றவர்களுக்கு ஏதாவது ஆதாயம் கிடைக்குமா என்றே பார்ப்பார்.

ஈயம் பித்தளைக்குப் பேரீச்சம் பழம் என்று வந்தாலும் கருணாநிதி என்ற நபரால் அதுவும் கிடைக்காது.

ராவணன் said...

நீ என்னவேணா எழுது....கருணாநிதிக்கு சொம்பு தூக்கிக்கொண்டு வந்தால் முன்னால் நிற்பது நானே!

ராவணன் said...

எனக்கு ஜால்ரா போட யாரையும் வைத்துக்கொள்வதில்லை.

ராவணன் said...

கருணாநிதிக்கு பால் ஊற்ற பால் கூட வாங்கி வைத்துள்ளேன்.

ராவணன் said...

இங்கே என் பின்னூட்டங்கள் வந்தாலும் வராவிட்டாலும் என் பதிவில் பதிவுகளாக வரும்.

ராவணன் said...

////உண்மையிலேயே சீமான், வைகோ, நெடுமாறன் போன்றவர்களுக்கு ஈழத்தின் மேல் அக்கரை இருப்பின் இப்போதாவது கருணாநிதி நமக்கு ஆதரவாக வருகிறாரே என மகிழ்ச்சியல்லவா அடைந்திருக்க வேண்டும்? இல்லை உனக்கு அந்த தகுதியில்லை என்று கூறி கொச்சைப் படுத்துவதில் இருந்தே தெரிகிறது அவர்களின் நோக்கம் தனி ஈழமல்ல, தனி ஈழத்தைக் கொண்டு தாங்கள் நடத்திவரும் நாடகத்தில் கருணாநிதிக்கு முக்கியப் பாத்திரம் கிடைத்துவிட்டால் என்ன செய்வது என்ற பயம் மட்டுமே.///


தயாளு என்ற பொண்டாட்டியின் மைந்தர்கள் அடித்துக்கொள்ளும் போது மக்களை திசை திருப்ப அந்த மேளக்காரன் கருணாநிதி ஆடும் நாடகம் இது.

இதை உண்மை என்று நம்பி ஜால்ரா போட நாங்கள் ஒன்றும் கேவ்வி இல்லை.

மகேந்திரன். பெ said...

ராவணன் உங்கள் பின்னூடம் வெளியிடப்படாததன் காரணம் நான் அதை திறக்கவில்லை என்பதாலேயே. ஆபாசப் பின்னுட்டம் தனிமனித தாக்குதல் தவிற எல்லாம் எனது வலைப்பூவில் வெளியிடப்படும்." எனது கருத்துக்களை மறுக்க உனக்கிருக்கும் உரிமைக்காக"

ruban said...

///உங்களின் ஈழப் போராட்டத்தில் எங்களுக்கு இதுவரை எந்த சந்தேகமும் இருந்ததில்லை. ஆனால் நீ போராடாதே என கருணாநிதியை சொல்லும் போதுதான் உங்கள் வேஷம் கலைந்து சுயம் வெளிப்பட்டுவிட்டது.///
2009 இற்கு பிறகும் கருணாவுக்கு ஆதரவு கொடுக்கும் மக்கள் இருக்கிறார்கள் என்றால் ஒரு பெரிய அச்சரியம் தான்...
உங்கள் இடம் சில கேள்விகள்??


1. நீங்கள் தி.மு.க வுக்கு குரல் கொடுக்க காரணம் என்ன?
2. நம் இனத்தை கொன்று குவித்தது காங்கிரஸ் அரசு என்பதை நீங்கள் ஒத்து கொள்ளுவிகல என்ன?
3. அப்படி என்றால் நீங்கள் இன படுகலைக்கு பிறகும் காங்கிரஸ் வுடன் கூட்டணி வைக்க காரணம் என்ன?
4. இனத்தின் அழிவு நடந்தால் கூட பரவ இல்லை ஆனால் பதவிதான் உங்களுக்கு முக்கியம் அப்படிதானே?
5. 2009 இல் போராட வந்த மாணவர்களை, மக்களை, உங்கள் கூட்டணி தி.மு.க அரசு இரும்பு கரம் கொண்டு அடக்கியதை உங்களுக்கு தெரியாத என்ன?
6. டாக்டர் அம்பேத்கர் அவர்கள் ஒடுக பட்ட மக்கள் இனத்துக்கு ஆதரவாக போராடும் போது, மகத்தமா காந்தி காங்கிரஸ் எவளவு முட்டுகட்டையாக இருந்தது என்று உங்களுக்கு தெரியாத என்ன?
7. 2009 இல் தமிழ் நாட்டில் இருந்து ஈழத்துக்கு போக இருந்த உணவு பொருள், மருந்து பொருள், குருவி போல சேர்த்து வாய்த்த பணம் இவைகள் எல்லாம், உங்கள் கருணா போகவிடாமல் தடுத்து உங்களுக்கு தெரியாத என்ன?