Tuesday, May 23, 2006

அரசியல்


அரசியல்
தமிழக அரசியல் மேடையில் ஒரு அரசியல் கட்சியின் தேர்தல் அறிக்கை இத்தனை விவாதத்திற்குள்ளாயிருப்பது இதுவே முதல் முறையாக இருக்கும். தி.மு.க வின் 2006 சட்டமன்ற தேர்தல் அறிவிப்பால் ஆளும் அ.இ.அ.தி.மு.க அரசாங்கம் ஆடிப்போனது என்னவோ உண்மை. இல்லாவிடில் அவர்கள் எதற்கு 10 கிலோ இலவச அறிவிப்பை வெளியிட வேண்டும்?.தி மு க வின் கிலோ ரூபாய் 2.00 எப்படி சாத்தியம் என்று 10 நாள் தேர்தல் பயணத்தின் போது கேள்வி எழுப்பிய ஜெயலலிதா இன்று 10 கிலோ இலவச அரிசி எப்படி வழங்கப் போகிறார்?

ஒரு சிறிய கணக்கு இங்கே...
தற்போதைய அரிசி விலை 3.50/கிலோ 3.50 * 20=70 ரூபாய்
தி.மு.க 1 கிலோ- 2 ரூபாய் 20 * 2 40 ரூபாய்

இழப்பு ரூபாய் 30.00
அ.இ.அ.தி.மு.க= 10 கிலோ 3.50

விலையில்மீதமுள்ள 10 கிலோ இலவசம்.
அதன்படி பார்த்தால்.10 *3.50= 35.00 இழப்பு 40.00
அல்லது இப்படியும் கொள்ளலாம் அதாவது கிலோ ரூபாய் 1.75

2.00 ரூபாய்க்கு தி மு க அரசால் தர முடியாத 1 கிலோ அரிசியை 1.75 விலையில் எப்படி தரப்போகிறார். இதற்காண விளக்கத்தை செல்வி ஜெயலலிதா தரவில்லை என்றாலும் அவரது புதிய அரசியல் சினேகிதர் பொடா புகழ் வைகோ தருவார் என்றே நம்புகிறோம். இனி 2 ஏக்கர் நிலம்..தி மு க நிலமற்ற ஏழை விவசாயிகளுக்கு 2 ஏக்கர் நிலம் வழங்கப்படும் என்றபோது தமிழக முதல்வர் சாத்தியமே இல்லை ஏனெனில் தமிழகத்தில் அத்தனை அளவு தரிசு நிலம் இல்லை என்றார். ஆனால் உண்மை அதுவல்ல 2003 2004 தரிசு நில மேம்பாடு என்ற பெயரில் சுமார் 500000/ஹெக்டேர் நிலத்தை அரசு மேம்படுத்தி சிறு மற்றும் பெரிய தொழில் முதலீட்டாளர்களுக்கு வழங்க அறிவிக்கப்பட்ட அரசின் ஆணை இன்னும் செயல்படுத்த படவே இல்லை For More Hit Here எனவே அரசின் இந்த அறிவிப்பு பொய்யா என்ற உண்மையை விவசாயி ஜெயலலிதா தெரிவிக்கவேண்டும்.அல்லது புதிய சகோதர் சூடுபோட்டுக்கொண்ட பூனை வைகோ தெரிவிப்பார் என்றே நம்புவோம்.
இனி
விஜயகாந்த்..
தான் ஜெயித்து முதலமைச்சர் ஆகிவிட்டதாகவே கனவு கண்டுகொண்டு டெப்பாசிட்டை கோட்டைவிடப்போகிறார்.அவரின் இலவச கணக்குமாதம் 15 கிலோ இலவச அரிசி. 3.50* 15= 52.50 இழப்பு. இந்த கணக்கில் இலவச அரிசி சாத்தியமா என்பதை முன்னாள் எம்ஜிஆரின் அரசியல் ஆலோசகர் பன்ருட்டியார் விளக்கினால் போதும்.தமிழக அரசியல் வரலாற்றை பொருத்தவரை ஒவ்வொரு முக்கியமான அரசியல் மாற்றத்தின் போதும் ஒரு அலை வீச்சே அரசியல் கட்சிகளின் நிலையை நிர்ணயித்திருக்கிறது ஹிந்தி எதிர்ப்பு எம்ஜிஆர் ராஜீவ் காந்தி கொலை ஜெயலலிதா ஊழல் என்று. ஆனால் மற்ற தேர்தல்களில் கூட்டணி பலமே வெற்றியை நிர்ணயித்து வந்திருக்கிறது. இம்முறை அது கூட்டணி + அரிசி + கலர் டி வி என்று சுனாமியாகவே இருக்கும் போல் தெரிகிறது.
நடிகர்கள்:கமலஹாசனை அதிமுக விலைபேசியது அவமானகரமான செயல் அவரின் விலை 100 கோடிதானா என்ன? போகட்டும் விடுங்கள். இந்தியாவின் ஒரு ஒப்பற்ற கலைஞனையாவது அரசியல் சாக்கடை அழுக்காக்காமல் விடட்டும். ஆனால் இதிலும் விஜயகாந்த் லாபம் தேட நினைத்தது தான் கொடுமை."அதிமுக 100 கோடி ரூபாய்க்கு பேரம் பேசுவதாக கலைஞர் சொன்ன நடிகர் நான்தான்" தமிழ் முரசு (100 கோடி ரூபாய்க்கு அவரின் கட்சியையே வாங்கிவிடலாம் என்று ஜெ.வுக்கு நன்றாகவே தெரியும்.)
எது எப்படியோ மே 8ம் தேதி தமிழன் விரலை கறைபடுத்திக்கொண்டு நாட்டை சுத்தப்படுத்தினால் போதும்.


இந்த பதிவானது அந்திமழையில் தேர்தலுக்கு முன்பு வெளியானது: சேகரிக்க மீண்டும் பதியப்பட்டது அந்திமழையில் காணவும்

No comments: