Friday, May 26, 2006

சட்டமன்ற சண்டியர்கள்


சட்டமன்ற சண்டியர்கள்
இன்று சட்டமன்றத்தில் எதிர் கட்சியான அ.இ.அ.தி.மு.க வும் ஆளுங்கட்சியின் ஆதரவு மற்றும் தி.மு.க தோழமை கட்சியான காங்கிரசும் கைகலப்பில் இறங்கின. எதிர்கட்சி மற்றும் ஆளுங்கட்சி இரண்டும் சுமுகமான போக்கை கடைபிடிக்க போவதில்லை எனும் விவரம் முன்னரே அறிந்தது தான் என்றாலும் அது இத்தனை சீக்கிரம் நிகழும் என எவரும் எதிர்பார்க்க வில்லை. " எங்களை மக்கள் முற்றாக மக்கள் இன்னும் புறக்கனிக்க வில்லை" என நாள்தோரும் அறிக்கை விடும் சண்டியர்களின் தலைவியின் ஆதரவும் இந்த விவகாரத்தில் இல்லாமல் போக வாய்ப்பில்லை. ஏனென்றால் முன்னறே கலைஞரின் கையில் இருந்த நிதிநிலை அறிக்கையை பிடுங்கி கிழித்துப்போட்டவர்தான் அவர். சட்டமன்ற மரபுகள் காக்கப்படுவதில் தி,மு.க. எப்போதும் ஒருபடி முன்னுதாரணமாக இருக்கிறது என்பதில் வேறு கருத்துக்கள் இல்லை. ஆனாலும் அவர்கள் எதிர் கட்சியாக இருந்தபோதும் ஒருமுரைகூட சண்டித்தனங்களில் இறங்கியதில்லை. ஆனால் அ.தி.மு.க. எப்போதும் சட்டமன்றத்தில் ஒரு எதிரிக்கட்சி என்ற போக்கையே கடைபிடித்து வருகிறது. இதுவே இவர்கள் ஆளுங்கட்சியாக இருக்கும்போது தி.மு.க.மற்றும் அதன் தோழமை கட்சிகளை பேசவே விடுவதில்லை. எதிர்கட்சிகளின் குரள்வளையை கட்டிப்போட்டுவிட்டு தனி தர்பாரில் மேசைகளை தட்டி தலைவியின் புகழாரம் சூட்டி மகிழ்ந்தவர்கள். ஆளில்லாத சபையில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அப்போதெல்லாம் தி.மு.க. சண்டையில் இறங்கவில்லை. மாறாக அமைதியான முறையில் வெளிநடப்பு செய்திருக்கிறது. அல்லது வெளியேற்றப்பட்டிருக்கிறது. இதுவரை கடந்த ஐந்தாண்டு கால அ.தி.மு.க. அரசு ஒருமுறை கூட எதிர்கட்சிகள் இருக்கும் போது தீர்மானம் எதுவும் நிறைவேற்றியதில்லை. மாறாக ஒவ்வொரு முறையும் தனி ராஜாங்கத்தில் மேசைகளின் சொந்த சத்தங்களுக்கு நடுவே அறங்கேறி வந்த அல்லி ராஜ்யமே அது. தலைவியின் புகழாரம் மட்டுமே கேட்டுக்கேட்டு பழகிய காதுகளுக்கு மக்கள் பிரச்சனைகளை கேட்பது அநாகரீகமாக போயிருக்கும். அத்தோடு எனக்கு இன்னொரு சந்தேகமும் உண்டு. "சட்டமன்றத்திற்கு காட்டுமிராண்டிகள் தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கிறார்கள்-ஜெயலலிதா" இது அ.தி.மு.க உறுப்பினர்களை பற்றியே கூறப்பட்டது என்று. இதில் இன்னொரு வினோதம் காங்கிரசும் இதே களத்தில் குதித்தது. ஒருவேளை ஆட்சியில் பங்கு கிடைக்காத காரணமோ என்னவோ யாரறிவார். நாங்கள் மக்கள் நலனில் அக்கரை காட்டவில்லை எங்களுக்கு சொந்த விருப்பு வெறுப்புகள்தான் முக்கியம் என்றால் அ.இ.அ.தி.மு.க. தி.மு.க. காங்கிரஸ் கட்சிகளுக்கு ஒரு வேண்டுகோள். மன்றத்தை கலைத்துவிட்டு தெருச்சண்டை போடுங்கள் ஊடகங்களுக்கு தீனி கிடைக்கும். இப்பதிவில் அ.இ.அ.தி.மு.க பற்றி மட்டும் விமர்சணம் இருப்பது போல் தோன்றலாம் ஆனால் அதுதானே உன்மை. அதுபற்றி ஒரு பட்டியலே போடலாம்.
அ.தி.மு.க. வின் சட்டமன்ற மரபுகள் மீறல்:
1. வானளாவிய அதிகாரம் கொண்ட பி.எச்.பாண்டியன் விகடன் ஆசிரியருக்கு அளித்த சிறை தண்டனை
2.ஜெயலலிதா கிழித்துப்போட்ட நிதிநிலை அறிக்கை.அதன் பின் அறங்கேற்றப்பட்ட சேலை கிழிப்பு நாடகம்
3.பன்ருட்டி ராமச்சந்திரனை தாக்கிய தாமரைக்கனி(மோதிரக்குட்டு?)
4.துனை சபாநாயகர் இருக்கையில் அமரவைக்கப்பட்ட உடன்பிறவா தோழி சசிகலா
5.அவை உறுப்பினராக இல்லாதவர் பற்றி எழுப்பிய குற்றச்சாட்டுகள் அவை குறிப்பில் இடம் பெருதல்.
6.ஒரு அமைச்சருக்குரிய கேள்விகள் கேட்கப்படும் போது அதற்குறிய அமைச்சர் அவையில் இருந்த போதும் முதல்வர் குறுக்கிட்டு பதில் கூறுவது.
7.கேள்வி நேரத்தின் போது வாய்ப்பு அளிக்காமல் உறுப்பினர்கள் வெளியேற்றப்படுவது.
8.தேர்தல் பயனத்தில் தேர்தல் அறிக்கையில் இல்லாத புது அறிவிப்புகள் வெளியிடப்படுவது.
9.அதேபோல கவர்னர் உரையுடன் தொடங்கும் சட்டமன்ற முதல் நாள் புறக்கணிப்பு(தி.மு.க எப்போதும் கவர்னர் உரையை புறக்கணித்ததில்லை)
இப்படி அடுக்கிக்கொண்டே போகலாம். எதிர்கட்சியாக இருந்தபோதும் மக்கள் ஒரு சிறந்த எண்ணிக்கையில் உறுப்பினர்கள் தந்திருப்பது ஏதேனும் நன்மை கிட்டும் என்றுதானே ஒழிய இப்படி அடித்துக் கொள்ள அல்லஇப்படி அடித்துக்கொள்வதுதான் வேலை யென்றால் அது சட்ட மன்றமாய் இல்லாது வெறும் சத்த மன்றமாகவே இருக்கும். மேலும் சபாநாயகரும் இப்போது அ.தி.மு.க.வை
1 மாத காலம் இடைநீக்கம் செய்து உத்தரவு பிறப்பித்திருப்பது இந்த கூட்டத்தொடரை பொறுத்தவரை எதிர்கட்சி யில்லாத ஒரு நிலையை உண்டாக்கும். இதுவும் ஒருவித பொறுப்பற்ற சட்ட மன்றம் நடக்கும் என்றே மக்கள் நினைக்கத்தோன்றும்


8 comments:

லக்கிலுக் said...

நல்ல விமர்சனம்!

Anonymous said...

நல்ல பிலிம்பா! படுகாயம் அடைந்த ஞானசேகரன் என்று சண்டி(டி)வியில் திரும்பத்திரும்ப காட்டுகிறார்கள். ஆனால் அந்த ஆள் சிரித்துக் கொண்டே வந்து காயத்தைத் தேடுகிறார்.

நியோ / neo said...

அதிமுக-வின் சட்டமன்ற விரோத, மரபு விரோத நடவடிக்கைகள் ஓராயிரம்.

1991-96-இல் திமுக-வின் பரிதி இளம் வழுதியை நாள்தோறும் கேவலப்படுத்தினார்கள். உச்சமாக அவரை அவைக்குள்ளேயே சிறை வைத்து அசிங்கப்படுத்தினார்கள். இன்னும் எத்தனையோ.

இன்று கலைஞர் மீதான தாக்குதலில் பல உள்நோக்கங்கள் கொண்ட சதி இருக்க வாய்ப்புள்ளது என நான் ஐயுறுகிறேன்.

காங்கிரஸ் உறுப்பினர்களை அதிமுக-வினர் அடிக்கப் பாய்ந்தது - ஜெ. எதிர்பார்த்தது போல் (திட்டமிட்டு பொய்பிரச்சாரம் செய்தது போல்) காங்கிரஸ்-திமுக இடையே எதுவும் விரிசம் வராததால் ஏற்பட்ட ஆத்திரத்தால் என கருதுகிறேன்.

Machi said...

அதிமுக மிக மிக கேவலமான நிலைக்கு போய்க்கிட்டிருக்கு. என்ன பண்றது அவங்க பண்பாடு அப்படி. நாளைக்கு மந்திரி பதவி வேண்டுமென்றால் திமுகவை குறிப்பா கலைஞரை தாக்கனும். சீ தூ . வேறென்ன சொல்ல.

ஜெ சட்டசபையில் இருந்திருந்தால் புடவைய இழுத்தான், கிழிச்சான் அப்படின்னு நாடகம் போட்டிறுப்பாங்க இப்ப அதுக்கு வழியில்லாம போயிடுச்சு. ஆனா நாளைக்கு வந்து மானபங்க நாடகத்தை நடத்தினாலும் வியப்பதற்கு ஒன்றுமில்லை.

Unknown said...

சட்ட மன்ற மரபுகள் காக்கப்பட வேண்டும் என்பதில் இரு வேறு கருத்து இருக்க முடியாது. ஆனால்
//சன் டிவியில் மண்டை உடைந்தால் தான் காட்ட வேண்டுமா என்ன //
அ.தி.மு.க.மட்டுமில்லை அனைத்து கட்சி உறுப்பினர்களும் அப்படி இருக்கிறார்கள்
//னியோ// அது குறித்து தனியே ஒரு பதிவெழுத உத்தேசம்
/அதெப்படி குரும்பன்/ கரெக்டா சொல்றீங்க

Unknown said...

மறுமொழியளித்த அனைவருக்கும் நன்றி எனது நட்சத்திரத்தையும் கொஞ்சம் சொடுக்கிவிட்டுப் போனால் நலம்

Unknown said...

வெற்றிகரமான இரண்டாம் பாகம் சட்ட மன்ற சண்டியர்கள் பார்த்துவிட்டீர்களா?ADVT

Unknown said...

சட்ட மன்றத்தில் பேசவிடாமல் சனநாயக படுகொலை- ஜெயலலிதா தினமலரில்
பேசவிட்டால் என்னை கொன்றுவிடுவார்கள்- கலைஞர் புலம்புவதாக கேள்வி