தமிழ்மணத்தின் உறுப்பினர்களே தங்களின் செயல்பாடுகள் இன்னும் சிறப்பாக அமையவும், இன்னும் சிறந்த பதிவுகளை எழுதவும் ஒரு நல்ல பயனாளர் கையேடு இது இதை பிடிஎஃப் இல் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்
உங்கள் வலைப்பக்கத்தை தமிழ்மணம் திரட்டியில் இணைத்தவுடன் வலைப்பூ சங்கம் எதாவது ஒன்றில் காக்காய் பிடித்தோ, ஜல்லியடித்தோ, ரோடுபோட்டோ, சேர்ந்துவிடுங்கள்
இன்றைய தேதியில் தமிழ் வலைப் பதிவுகளில் சங்கங்களின் ஆதிக்கம் அதிகமாக இருக்கிறது. சில அறிவிக்கப் பட்டவை சில அறிவிக்கப் படாதவை. இந்த வலைப்பூ சங்கங்களால் என்ன நன்மைசினிமாவில் சொல்லப்படும் ஒரு வார்த்தை இதற்கு கச்சிதமாய் பொருந்துகிறது "மினிமம் கியாரண்டீ"மினிமம் கியாரண்டீ என்பது பின்னூட்டங்களுக்கு.
எதைப்பற்றி எழுதினாலும் உங்களின் பதிவுக்கு மினிமம் 100 பின்னூட்டம் நிச்சயம். அவற்றை எத்தனை போட்டு சாதனைபுறிவது என்பது உங்கள் விருப்பம் அடுத்த பதிவு போட நாளாகும் என்றால் ஒரு வாரத்தில் 500 கியாரண்டீ. சத்யராஜ் படம் போல.
நகைச்சுவை சங்கம்: இந்த சங்கங்களின் உள்ளே சென்றுவிட்டால் அவர்களின் கூத்து உண்மையில் வாய்விட்டு சிரிக்க வைக்கும். பிடிக்கவே இல்லை என்றாலும் படிக்கத் தூண்டும் பதிவுகள். ஓடாத படத்துக்கு வடிவேல் மாதிரி. சில பதிவுகள் ஆச்சர்யமூட்டும். இப்படியெல்லாம் பதிவெழுத முடியுமா என்று. இன்னும் கொஞ்ச நாளில் அவர்கள் சிரிப்பான் மட்டும் போட்டு பதிவை வெளியிட்டாலும் ஆச்சர்ய படுவதற்கில்லை அதற்கும் ஒரு சிரிப்பு சிரித்துவிட்டு வரலாம். பொதுவாக வெளிப் பார்வையாளர்களை விட உறுப்பினர்களே ரசிகர்கள் என்பதால் மாற்றி மாற்றி கலாய்க்கலாம்.
இரண்டாவது வகை கொஞ்சம் சீரியசானவை. இதில் அனல் பறக்கும் வாதங்களும் ஆறுபக்க பின்னூட்ட துண்டுகளும் ஆரியமும் திராவிடமும் அடித்துக்கொள்ளும். நிறைய வலைகளின் லிங்க் கிடைக்கும். பொதுவாக ஆங்கிலத்தில் இருக்கும். அல்லது ஏதேனும் ஆராய்ச்சிகளின் முடிவுகளின் இணைப்பு இருக்கும். சீரியஸ் விரும்பாத பதிவர்கள் கொஞ்சம் எட்ட நிற்பது நல்லது. பொதுவாக அரசியல் களம் சமூக களம் விவாதிக்கப் பட்டு அதன் முடிவே தெரியாமல் அடுத்த பதிவு வந்துவிடும். அதில் நிறைய அனானிமஸ் பின்னூட்டங்கள் கிடைக்கும்.
மூன்றாம் வகை அறிவிக்கப் படாத ஆறி(ரி)ய ஸங்கம். இதில் யார் வேணுமானாலும் பின்னூட்டம் போடலாம் அதர் மற்றும் அனானி ஆப்ஸனை உபயோகிக்காமல் இருக்கவேண்டும். அவர்களுக்கு அனுமதியில்லை. நிறய்ய வடமொழி எழுத்துக்களும் இருக்கும் நல்ல தமிழ் விரும்பும் அன்பர்கள் தூர விலகியிருப்பது நல்லது. அதைகிட்ட நின்று பார்த்தால் ஆபாஸமாக இருக்கும். முக்கியமாக எலிக்குட்டி ஸோதனை ஸெய்யத் தெரிந்திருக்க வேண்டும். அப்படி யிருந்தால் உங்களுக்கு விருந்துபஷாரம் உண்டு. அத்தோடு வலைப்பூவில் போலிகளை ஒழிப்பது எப்படி என்ற விளக்கக் கையேடு பிடிஎஃப் பில் அனுப்பி வைப்பார்கள். நீங்கள் ஒரு ஸ்மைலி போட்டாலும் நன்றிக்கடன் நிவர்த்தியாகும். திராவிடப் பெத்தடினுக்கும் ஈ.வே.ராமஸாமி நாயக்கருக்கும் புது விளக்கம் கிடைக்கும். ஆனால் அங்கே ஏதும் ஆதரிக்கும் வேலையிருந்தால் பின் உங்களுக்கு வரும் பின்னூட்டத்துக்கு ஸங்கம் பொருப்பல்ல. எதிர்ப்பவர்களுக்கும் அதே கதி. ஸமீப காலம் என்பது 1945 களில் என்று அர்த்தம் கொள்ள தெரிந்திருத்தல் அவஸியம்.
ஊர்க்கார பதிவர்கள்: ஒரே ஊரைச் சேர்ந்த பல்வேறு பதிவர்கள் ஒன்றாக இருப்பது, யாருக்கேனும் எங்காவது பின்னூட்ட பிரச்சினை என்றால் உடனே ஓடிவந்து நிவர்த்திசெய்வது. தங்களை யாரும் சீண்டுவதில்லை என்றாலும் அவர்களின் சங்கத்தில் சேர அழைப்பு விடுப்பது. பொதுவாக அவர்களின் பக்கத்தை படிக்க ஸ்க்ரோர்ரோரோரோரோலிங்க் செய்துகொண்டே வந்தால் கடைசியாக ஒரு போஸ்ட்கார்டில் இருக்கும் ஸ்டாம்ப் அளவு பதிவு இருக்கும் பாட்டாளிகளை வெறுப்பவர்கள், மரங்கள் மேல் பெருத்த நேசம் கொண்டவர்கள். மனிதர்களை கண்டு கொள்ளாதவர்கள் , திமுக டிவி குடுக்காவிட்டாலும் குடுத்தாலும் குற்றம் காண்பவர்கள். இடஒதுக்கீட்டை விரும்பாத வெளிநாடு வாழ் தேசிய வாதிகள்
ரசிகர் சங்க சங்கங்கள்: வலைப்பூ உலகில் அறிவிக்கப் படாத சங்கம் அதிலும் ரஜினிக்கு மட்டுமே உண்டு. சொல்லுவதற்க்கு எதுவும் இல்லை. அவர்களும் அவர் பற்றிய செய்தி எதுவும் எழுத மாட்டார்கள் நீங்களும் எதுவும் கேட்க விடமாட்டார்கள் கொஞ்சம் கோபக்காரர்கள் அதனால் எதுவும் நீங்களும் எழுதாமல் இருப்பது நல்லது. என்ன சொல்கிறீர்கள் என்பதையே கேட்காமல் தர்ம பின்னூட்டம் கிடைக்கும். கடைசியில் நீங்கள் சொல்லவந்தது திருவிழாவில் தொலைந்த குழந்தை.
தனிப் பதிவர்கள் சங்கம்: இது சங்கமில்லை என்றாலும் இவர்கள் தனிப்பட்ட முறையில் எழுதுபவர்கள். முகம் காட்ட மறுப்பவர்கள் சொல்லடிகளும் பின்னூட்ட அடிகளும் கிடைப்பதுபற்றி கவலையின்றி தங்களின் கொள்கைகளில் திடமாய் நிற்பவர்கள். இவர்களின் அடயாளம் இவர்கள் தங்களுக்கும் தங்களின் பதிவுகளுக்கும் வைத்துக்கொள்ளும் பெயர்களில் இருந்து விளங்கும். மிக நாகரீகமான முறையில் தனிமனித தாக்குதலும் சிலநேரம் நடக்கும். தேர்தல் நேரங்களில் இவர்கள் நல்ல பணியாறுவதும் உண்டு. இவர்களில் சிலருக்கு நாய்களை பிடிக்கும்/பிடிக்காது.
புலம்பெயர்ந்த தமிழீழப் பதிவர்கள் தங்களின் வேதனைகள் அத்தனைக்கும் வடிகால் கிடைக்கும் விடுதலை கிடைக்கும் என்ற உறுதியான நம்பிக்கையுடன் உலகை எதிர்கொள்பவர்கள். கவிதைகளும் உடனடி செய்திகளும் கிடைக்கும். தங்களின் பதிவுகளை எவரும் தமிழக தமிழர்கள் யாரும் ஆதரிக்கவில்லை என்றாலும் தொடர்ந்து பதிவுகள் எழுதுபவர்கள்.
பக்திப் பதிவர்கள்.வலைப்பூ உலகில் என்ன நடக்கிறதென்றே தெரியாமல் இல்லாத கடவுளுக்கு எழுதப்பட்ட பாடல்களை எங்காவது அலமாரிகளில் உறங்கும் பஜனைப் பாடல்களை எழுதி அவற்றுக்கு விளக்கம் கொடுப்பவர்கள்.
திரைஇசை பதிவர்கள் மறந்து போன திரைப்பாடல்களை ஒவ்வொறு வரியாய் எழுதி காப்பிரைட் இல்லாமல் பக்கம் நிரப்பும் பாடலாசிரியர்கள்
பின்னூட்டப் பதிவர்கள் : தனிப்பட்ட முறையில் தங்களுக்கு ப்ளாக் இல்லாவிட்டாலும் பின்னூட்டம் மட்டும் போட்டு சில நல்ல பதிவுகளின் குட்டை குழப்பும் வலைப்பூ சுப்பிரமணிய சுவாமிகள்.
இளிச்சவாய் பதிவர்கள்: இந்த வகைப்பாடுகள் எதிலும் வராமல் கருத்து சொல்கிறேன் என்று கந்தசாமிகளாய் அலையும் பதிவர்கள் பொதுவாக உணர்ச்சிவசப்படுபவர்கள். சொன்னது சரியெனப் பட்டபோது அடிகளை வாங்க தயங்காதவர்கள். மிகச்சரியான வார்த்தை அலங்காரம் செய்யத் தெரியாத அறிமுகம் ஆகாத பதிவர்கள். யாருக்கும் அதிகம் பின்னூட்டம் போட்டு காக்காய் பிடிக்காதவர்கள். அல்லது வேண்டாத இடத்தில் வேண்டாத பின்னூட்டம் எழுதி தெருவில் நிற்பவர்கள்.
இன்னும் கவிதைப் பதிவர்கள் சினிமாப் பதிவர்கள், கணிதப் பதிவர்கள், தொழில்நுட்ப பதிவர்கள், லிங்க் பதிவர்கள் வண்ணப் பதிவர்கள்,அனானிகள்,உண்மைப் போலிகள் ,போலிப் போலிகள்,
அதர்ஸ், விதண்டா வாதிகள், பிடிவாதப் பதிவர்கள், எழுதாதப் பதிவர்கள், புகைப்படப் பதிவர்கள், கோள்மூட்டும் பதிவர்கள் என்று நிறைய வகைகள் உண்டு அவர்களை பற்றி அடுத்த பதிவில்
38 comments:
மகேந்திரன்,
வந்தேன். படித்தேன் என்பதற்காக இரண்டு சிரிப்பான்கள் :-))) :-)))
//உங்கள் வலைப்பக்கத்தை தமிழ்மணம் திரட்டியில் இணைத்தவுடன் வலைப்பூ சங்கம் எதாவது ஒன்றில் காக்காய் பிடித்தோ, ஜல்லியடித்தோ, ரோடுபோட்டோ, சேர்ந்துவிடுங்கள் //
இப்படி முதல் அடியில் சொல்லி விட்டு, நீங்க கொடுத்திருக்கும் விளக்கத்தைப் பார்த்தால், புதுப் பதிவர்கள் சங்கங்களைத் தாண்டி பி.பி.ப.ஓ ஆகி விட மாட்டார்களோ??
ஆனால், நன்றாக ஆராய்ச்சி செய்திருக்கிறீர்கள்.. சாம்பு கெட்டார் போங்கள்
என்ன ஆச்சி பதிவு எழுதுவதற்கு எதுவும் மேட்டர் கிடைக்க வில்லையா ?
இது போல் சமயங்களில்,
இது போல் நானும் காமடிப் பதிவுகள் எழுதியிருக்கிறேன். யாரும் சீரியசாக எடுத்துக் 'கொல்ல'வில்லை :)))
http://govikannan.blogspot.com/2006/05/1.html
http://govikannan.blogspot.com/2006/07/blog-post_22.html
இந்த பதிவுகளுக்கு சுமாரான பின்னூட்ட விளைச்சல் தான் :))
//வந்தேன். படித்தேன் என்பதற்காக இரண்டு சிரிப்பான்கள் :-))) :-))) //
உங்கள் சிரிப்பானுக்கு நன்றி ஹரிஹரன் :)) :)) :)) :))
//பி.பி.ப.ஓ ஆகி விட மாட்டார்களோ??//
பின்னங்கால் பிடரியில் பட ஓடி விடுவார்கள் (அப்பாடி எம்பூட்டு பெரிய வாத்த இம்பூட்டு சின்னதாக்கிபுட்டீங்க)
என்ன செய்வது நம்ம புள்ளைங்க எல்லாம் உங்கள மாதிரி சங்கத்துல சேத்துவிடலாம்னு பாத்தா நீங்க கோவிச்சுகிறீங்க... சங்கத்தோட உறுப்பினர் எண்ணிக்க அதிகமானா நீங்களும் ஒரு தனி கழகம் கண்டுக்கலாமேன்னு ஒரு நல்ல எண்ணம். வேண்டாம்னா நான் என்னத்த சொல்ல
நன்றி பொன்ஸ்
ம் இதில் நீங்கள் எந்தச் சங்கம் சார். நான் எந்தச் சங்கத்திலும் இல்லை என்று சொல்பவர்கள் சேர்ந்தே ஒரு சங்கம் உருவாக்கி விடுவார்கள். உங்கள் பாணியில் சிலவேளை இது வேண்டாத இடத்தில் போடப்பட்ட வேண்டாத பின்னூட்டமாயிருக்கலாம். வாழ்த்துக்கள்.
மகேந்திரன்! பின்னி பெடலெடுத்திட்டீங்க.
விரைவில் 'துபாய் வலைப்பதிவர்கள் சங்கம்'னு புதிய சங்கம் தொடங்க திட்டமிருக்கு.நிறைய உறுப்பினர்களோடு,உங்களது பெயரும் பட்டியலில் உண்டு.பதவியும் உண்டு.இனிமே நாமளும் தனியே ஜல்லியடித்து,ரோடு போடலாம்..விரைவில் உதயமாகவிருக்கும் து.வ.ச.ற்கு ஜோரா ஒரு "ஓ' போடுங்க!!!.
//என்ன ஆச்சி பதிவு எழுதுவதற்கு எதுவும் மேட்டர் கிடைக்க வில்லையா ?
இது போல் சமயங்களில்,
இது போல் நானும் காமடிப் பதிவுகள் எழுதியிருக்கிறேன். யாரும் சீரியசாக எடுத்துக் 'கொல்ல'வில்லை//
அதெல்லாம் ஒன்னுமில்லீங்க தொடர்ந்து ஒரே சீரியஸ் பதிவா எழுதி எழுதி எனக்கு என்ன கண்டாலே கோவம் வருது அதான் ஒரு மாறுதலுக்கு கொஞ்சம் சிரிப்பான் பதிவு:)
நன்றி கோவி.கண்ணன்
(ஆமா சிவபாலன் சொன்னாருன்னு நாம ரெண்டுபேருதான் நூலகம் எழுதுனமாதிரி இருக்கு எல்லாரும் எஸ்கேப்பா?)
//ஆமா சிவபாலன் சொன்னாருன்னு நாம ரெண்டுபேருதான் நூலகம் எழுதுனமாதிரி இருக்கு எல்லாரும் எஸ்கேப்பா?//
குழு பாலிடிக்ஸ் பற்றி விளக்கமாக எழுதிவிட்டு இப்படி ஒரு கேள்வி ?
:)))))
சிவபாலன் எந்த குழுவிலும் இல்லை. நானும் எந்த குழுவிலும் இல்லை. ஆனால் எல்லா குழுவிலும் என் பின்னூட்டங்கள் இருக்கும் :))
நகைச்சுவையாக எழுதி கலக்கீட்டிங்க என்று முதலில் சொல்ல வேண்டும் என நினைத்தேன். ஆனால் உள்ளதை உள்ளது படி தான் எழுதியிருக்கிறீர்கள் என்ற உண்மை உறைத்ததால் அடக்கி விட்டேன். தமிழ்மணம் மிகவும் ப்ரிடெக்டபிளாக மாறி விட்டது.
//இதில் நீங்கள் எந்தச் சங்கம் சார். நான் எந்தச் சங்கத்திலும் இல்லை என்று சொல்பவர்கள் சேர்ந்தே ஒரு சங்கம் உருவாக்கி விடுவார்கள்.//
வாங்க அகிலன் (உலகன்?) இளிச்சவாயர்கள் சங்கம்னு ஒன்னு இருக்கே பாக்கலியா நீங்க? :))
//இது வேண்டாத இடத்தில் போடப்பட்ட வேண்டாத பின்னூட்டமாயிருக்கலாம்.//
. அட நீங்க இதப்போயி பெருசா சொல்றீங்க நானெல்லாம் தேவயில்லாம பதிவே போட்ட ஆளு :)
வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி
//'துபாய் வலைப்பதிவர்கள் சங்கம்'னு புதிய சங்கம் தொடங்க திட்டமிருக்கு.//
அய்யோ !
//ஜோரா ஒரு "ஓ' போடுங்க!!!. //
"ஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓ
ஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓ
ஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓ
ஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓ
ஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓ
ஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓ
ஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓ
ஓஓஓஓஓஓஒ"
நீங்க "ஓ" மட்டும்தானெ கேட்டீங்க ?போதுமா துபாய் ராஜா ஆமா கல்யாணத்துக்கு குவாட்டர் கோவிந்தன் ஒரு வாழ்துப்பின்னூட்டம் இட்டாரே பாத்தீங்களா? பொன்ஸக்கா பதிவா இல்ல வவா சங்கமா எதுன்னு ஞாபகமில்ல. நீங்க ஊருக்கு போன உடனே வந்த பதிவுல. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
//ஆனால் உள்ளதை உள்ளது படி தான் எழுதியிருக்கிறீர்கள் என்ற உண்மை உறைத்ததால்//
உண்மை சுடும் திரு.பாலச்சந்தர் கணேசன்(இளைய நிலா பிள்ளையார்? :)
நன்றி. ஆனாலும் உண்மைகள் கொஞ்சம் நகைச்சுவை கலந்து சொல்லப்பட்டாலேயே....... சரியாக நீங்க சொன்னமாதிரி தமிழ்மணத்தை கூலாக்க எம்மாலான சிறு முயற்சி :))
//சிவபாலன் எந்த குழுவிலும் இல்லை. நானும் எந்த குழுவிலும் இல்லை.//
கவலையே படாதீங்க திரு .கோவி.கண்ணன்
எந்த சங்கத்திலும் இல்லாதவர்கள் சங்கம்னு ஒன்னு ஆரம்பிச்சுடுவோம் வெறும் புத்தக விமர்சனம் புத்தக அறிமுகம்னு போட்டு தாக்கிடலாம்
எ.ச.இ.ச. எப்பிடி இருக்கு?
//எந்த சங்கத்திலும் இல்லாதவர்கள் சங்கம்னு ஒன்னு ஆரம்பிச்சுடுவோம் வெறும் புத்தக விமர்சனம் புத்தக அறிமுகம்னு போட்டு தாக்கிடலாம்
எ.ச.இ.ச. எப்பிடி இருக்கு? //
ரொம்ப எ.ச.கு.பி.ச.கு ஆக இருக்கு :)
மகேந்திரன்! து.வ.ச.ற்கு நீங்க போட்ட "ஓ"ஸ் (பன்மை) அகில,உலக,அண்ட,சராசர பிரபஞ்சம் முழுதும் எதிரொலிச்சுட்டு போங்க !!!.
க.பி.க,வ.வா.ச பதிவுகளில் வந்த வாழ்த்துக்களுக்கெல்லாம் ஏற்கனவே நன்றி சொல்லி பின்னூட்டமிட்டு விட்டேன்.உங்களுக்கும் சேர்த்துதான் குவாட்டர் கோவிந்தரே !!!.
//க.பி.க,வ.வா.ச பதிவுகளில் வந்த வாழ்த்துக்களுக்கெல்லாம் ஏற்கனவே நன்றி சொல்லி பின்னூட்டமிட்டு விட்டேன்.உங்களுக்கும் சேர்த்துதான் குவாட்டர் கோவிந்தரே //
அட நான் அதுக்காக சொல்லலீங்க எங்க கோவிந்தன் மப்புல தப்பா மறந்துபோனாறோன்னு நீங்க த(ம)ப்பா நினைச்சுகிடுவீங்களோன்னு சொன்னனுங்க
//அகில,உலக,அண்ட,சராசர பிரபஞ்சம் முழுதும் //
எனக்கெதுவும் கேக்கலிங்களே ஓகோ கதுல ஹெட்போன் இருக்கில்ல? மறுபடியும் வாழ்த்துக்கள் துபாய் ராசா
//ரொம்ப எ.ச.கு.பி.ச.கு ஆக இருக்கு //
அப்ப என்னதான் பன்றது சொல்லுங்க :!
இல்லன்னா இது எப்பிடி இருக்கு எ.ச.இ.ச.(எல்லா சங்கத்திலும் இருக்கும் சங்கம்)
நம்மாளுங்க ஒருவேளை யாரும் புத்தகம் படிக்கறதில்லையோ? அப்பப்ப நெட்டுல சுட்டு இது என்னோட 1967 புத்தகத்துல இருக்குன்னு பீட்டர் உட்றாங்களா?
இந்த பாலசந்தர் கணேசனுக்கு லேட்டஸ்டா 'ப்ரெடிக்டபிளா' அப்படீன்ற வார்த்தையை கத்து கொடுத்தது யாருன்னு தெரியல. எங்க போனாலும் அதையே சொல்லிடுறாருப்பா.
மறந்து போச்சு அப்புறம் நான் கோலங்கள் பாத்துகிட்டு இருக்கறதா சொல்லப் போறார்:))
இங்க அதத்தான் எனக்கு சொன்னாரு
http://dondu.blogspot.com/2006/06/blog-post_27.html#115142823107594760
நன்றி கோவி.கண்ணன்
//இல்லன்னா இது எப்பிடி இருக்கு எ.ச.இ.ச.(எல்லா சங்கத்திலும் இருக்கும் சங்கம்) //
சங்கம் என்று ஆரம்பித்தால் செயலாளர் பதவிக்கு போட்டி இருக்கும். எனக்கும் செயல்படாத செயலாளாரை இருக்க பிடிக்காது. பொருளாலாளர் பதிவியில் கணக்கு இடிக்கும்.
ஆளவிடுங்க சாமி ...... உங்க ஊரு தேர இழுக்க வேண்டுமானாலும் வருகிறேன். சங்கமெல்லாம் வேணாமப்பு .... :)
வாங்க அனானி அவரு வந்ததும் கேட்டு சொல்றன் .... பாலச்சந்தர் கணேசன் அவர்களே யாரோ இங்க ஒரு கேள்வி உங்ககிட்ட கேட்கிறாங்க என்னான்னு கொஞ்சம் வந்து பாருங்க...
// உங்க ஊரு தேர இழுக்க வேண்டுமானாலும் வருகிறேன்//
கண்டிப்பா வாங்க திரு.கோவி.கண்ணன் நானும் ஊருக்கு வந்ததும் பின்னூட்ட நாயகர் பிரவேசம் தேரிழுக்கன்னு போட்டு பெரிய போர்டு வச்சிட்றன் ஆனா அங்க முன்னால நின்னு தான் இழுக்கனும் சரியா?
//செயல்படாத செயலாளாரை இருக்க பிடிக்காது. பொருளாலாளர் பதிவியில் கணக்கு இடிக்கும்.//
என்னாங்க இப்படி கணக்கு, செயளாலர்னு, கடேசீல கட்சிய உடச்சதுக்கு அப்புறமா பேசனும் அதெல்லாம்
//அங்க முன்னால நின்னு தான் இழுக்கனும் சரியா? //
தேரு முன்னால தானே இழுப்பாங்க, நீங்க பின்னாடி இருந்து தள்ளுவிங்களா ? :))
பிகு: தேரைப் பற்றிய உங்கள் ஆதங்க பதிவு இன்னும் ஞாபகம் இருப்பதால் தான் முன்பின்னோட்டத்தில் தேரைப் பற்றி குறிப்பிட்டேன்.
//தேரு முன்னால தானே இழுப்பாங்க, நீங்க பின்னாடி இருந்து தள்ளுவிங்களா //
நாங்களும் முன்னால இருந்துதான் இழுப்போம் ஒருவேளை நீங்க பின்னூட்டம் போட்ற நினைப்பில பின்னால இருந்துட்டா என்னா பன்னன்னுதான் முன்னாலயே சொல்லிட்டனுங்க .
//தேரைப் பற்றிய உங்கள் ஆதங்க பதிவு இன்னும் ஞாபகம் இருப்பதால் //
அந்த தேர் மறக்கக்கூடிய தேரா? கண்டிப்பாக அடுத்த தேருக்கு முன்னாலயே ஊருக்கு போகவேண்டும் நீங்க வேற இப்போ பின்னூட்டத்துல ஞாபகப் படுத்திட்டீங்களா வீட்ல இருக்க எல்லாரும் வரிசையா முன்னால வந்துட்டு போறாங்க :(
இவ்வளவு வேலை நடக்கிறதா இங்கே நான் முன்னறே கவனிக்கவில்லை
அன்புடன்
வனிதா-மும்பை
//இவ்வளவு வேலை நடக்கிறதா இங்கே நான் முன்னறே கவனிக்கவில்லை
அன்புடன்
வனிதா-மும்பை //
ஆமா...ஆமா
ஹலோ,,,,ஹலோ நில்லுங்க நீங்க யாரு எந்த வனிதா எனக்கு ஒரு பிரண்டு இருக்காங்க அவங்களா நீங்கன்னு நான் போனதடவையே கேட்டேன் ஆனா நீங்க பதிலே சொல்லலை ஹலோ... அட அதுக்குள்ள கட்டாயிருச்சே
இன்றைய வலைப்பதிவுகளின் நிலையை நன்றhக ஆராய்ந்து எழுதியுள்ளீர்கள்.
//ஆராய்ந்து எழுதியுள்ளீர்கள். //
அட இதுக்கெதுக்குங்க ஆராயணும் சும்மா பாத்தாவே இது உ.கை.நெ தானே? :)
நன்றி விழிப்பு
இப்படில்லாம நடக்குது?
அதுசரி, கருத்து.காம் பக்கமே வரக்காணம்?
அட அங்க என்னங்க சாட்டிங் பன்ற கணக்கா புள்ளைங்க அதுபாட்டுக்கு டைப்படிச்சு உடுது? நமக்கு இத்தன அவசரம் ஆகாது சாமி
நன்றி லக்கி லுக் :))
இதுவரை இன்று யாரும் பின்னூட்டம் போட்டு முன்பக்கத்தில் வர வழியேற்ப்படாததால் குவாட்டர் கோவிந்தன் சார்பாக இப் பின்னூட்டம் .... அட எனக்காகவா போடுக்கிறேன் எல்லாரும் படிச்சு பயம்(ன்)பெற வேண்டாமா அதுக்குத்தான் யாரும் தப்பா நெனைச்சாலும் சரியா நினைச்சாலும் ஒரு வரி எழுதுங்க நமக்கு இனிமே இந்த சமாதான வழியெல்லாம் ஆகாது யாருக்காவது கிட்னி இருக்கான்னு கேட்டுறவேண்ட்டீதுதான் :)
இந்த ஆல் இன் ஆல் அழகு ராஜாவை நிம்மதியா சைக்கிள் கடைய வெச்சி பொழப்பு நடத்த விடுங்கப்பா!
:)) thnx
//இன்னும் கொஞ்ச நாளில் அவர்கள் சிரிப்பான் மட்டும் போட்டு பதிவை வெளியிட்டாலும் ஆச்சர்ய படுவதற்கில்லை அதற்கும் ஒரு சிரிப்பு சிரித்துவிட்டு வரலாம்//
:)) சங்கம் ரொம்ப அடிவாங்குது போல
/சங்கம் ரொம்ப அடிவாங்குது போல /
அட அது ஒரு வஞ்சப்புகழ்ச்சி அணிங்க
அங்கயும் போயி சொல்லிடாதீங்க நன்றி சந்தோஷ்
இப்பெல்லாம் யார் யார் எந்தெந்த குழு(மம்)ன்னு வெளிப்படையாகவே பதிவு போடுறாங்களே..
இந்த மாதிரி பதிவுகள தொகுத்து, குழுவாக்கி - :) - வலைப்பதிவுகள் ஃபார் டம்மீஸ் ஒன்னு போடலாம்.
மகேந்திரா,
//கவனிக்கப் படவேண்டும் என்பதற்க்காகவே இங்கே பெரும்பாலும் எழுதுகிறோம் என்பதில் எனக்கு பெருத்த நம்பிக்கை உண்டு. அதே வேளை கவனிப்படைந்தவர்களின் விமர்சனங்கள் ஏற்றுக்கொள்ளக் கூடியதாக இல்லை என்பதுதான் உண்மை.
இதற்கு இரண்டு வழிகளில் தீர்வுகாணலாம்.
1.உணர்சிவயப்படாமல் எழுதுவது.
2.அப்படி எழுதப்படும் பதிவுகள் ஏற்படுத்தும் விளைவுகளை சந்திக்க தயாராக இருப்பது.// அப்படீன்னு ரொம்ப ஃபீல்ங்கா போன பதிவு போட்டு பாருங்க அஞ்சு பி.ஊ. தான். அதே ஒண்ணுமே இல்லாம "எலி அம்மணமா ஓடுது" அப்டீன்னு பதிவு போட்டா பி.ஊ பிச்சிக்கிட்டு ஓடுது. வலை பதிவென்பது கிட்டத்தட்ட டைரி எழுதுவது என்பதின் முன்னேற்றமாக வந்தது. எத்தனை பேர் டைரி எழுதும் பழக்கம் கொண்டவர்கள்? மிகச் சிலரே. ஆனால் வலை யாரை வேண்டுமானாலும் எழுதத் தூண்டும் வசீகரம் கொண்டது. அதுவும் ரெண்டு பி.ஊ வேர வந்தாச்சுன்னா அப்புறம் போதைதான். தலைக்கேரி, பாயை பிராண்டி எதையாவது எழுதத் தூண்டும். நீங்க இத லிஸ்ட் போட்டுக்கிட்டு இருக்கீங்க, நல்லது செய்யுங்க.
சிரில் அலெக்ஸ் தங்களின் ஆலோசனைக்கு நன்றி .... புத்தகம் போட நான் தயார் நீங்க மார்க்கட்டிங் பாத்துக்கோங்க :))
---------------------------------
கிவியன் உங்களின் கருத்தை நான் முற்றாக ஏற்றுக்கொள்கிறேன்... நன்றி
இங்கே நல்லது செய்ங்க எனும் வார்த்தைதான் இடிக்கிறது . நான் நன்றாக எழுதியதாக கருதும் பதிவுகளை விட இதெல்லாம் ஒரு வேலையா என நினைத்துக் கொண்டு எழுதும் பதிவுகள் ஏகோபித்தவர்களின் பாராட்டுக்கு உள்ளாகின்றது அப்போது இந்த நல்லது செய்ங்க எனும் வாதம் அடிபட்டு வெரும் பின்னூட்ட விளையாட்டில் மாட்டிக் கொள்கிறோம் எனது நிறைய பதிவுகளுக்கு நிகழ்ந்த சோகம் அது
since tamilfont not downloaded konjam kastapattu padiyunga. naan miga rasithathu "illadha kadavulukku paadiya padalgal" and "adarku arthangal". good coinage of words keep it up. dev from erode
மகேந்திரன்,
இந்த முறை ஏமாற்றமில்லை. நன்றாக கேலி செய்துள்ளீர்கள். ஒரே ஒரு திருத்தம்:
>>>>> ..... நிறய்ய வடமொழி எழுத்துக்களும் இருக்கும் .....<<<<
அப்படி எழுதுபவர் ஓரே ஒருவர்தான். வேறு யாருக்கும் தைரியமில்லை :-) !!
//வேறு யாருக்கும் தைரியமில்லை//
நான் வேனும்னா கூட அந்த மாதிரி எழுதலாம் ஆனா உங்களுக்கும் எனக்கும் வித்தியாசம் இல்லாம போயிடும்ல :))
மகேந்திரன்,
>>>நான் வேனும்னா கூட அந்த மாதிரி எழுதலாம் ஆனா உங்களுக்கும் எனக்கும் வித்தியாசம் இல்லாம போயிடும்ல :))<<<
ஆமாம், ஆமாம். நல்லவேளையாக வித்யாஸம் இருக்கிறது :-D !
Post a Comment