9/11 அல்கொய்தா தீவிரவாத இயக்கம் உலகுக்கு தனது இருப்பை பகிரங்கப் படுத்தியது.
9/11 சர்வதேச பயங்கரவாதம் எனும் புதிய வார்த்தை கண்டுபிடிக்கப் பட்டது
9/11 சனநாயக முகமூடிக்குள் ஒளிந்து கிடந்த அமெரிக்க தீவிர வாதத்தின் கோரப் பற்கள் வெளிச்சம் பெற்றன
9/11 பாகிஸ்தானுக்கு சில எலும்புத்துண்டுகள் கிடைத்தால் பங்காளிகளையும் அழிக்க உதவும் என உலகம் தெரிந்து கொண்டது
9/11 இரண்டாம் உலகப் போருக்கும், ஈராக்கின் முதல் போருக்கும் பின் ஆயுத சோதனை செய்ய இடமின்றி இருந்த அமெரிக்கா ஆப்கனை பயன் படுத்திக் கொண்டது.
9/11 இஸ்லாம் என்பதே தீவிரவாதம் எனும் ஒரு போலிப் பிரச்சாரத்தை மேற்க்குலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்தது.
9/11 வியட்னாம் போருக்குப் பின் அதிக அமெரிக்கர்களை ஆப்கனிலும், ஈராக்கிலும் பலிகொடுத்தது.
9/11 உடன் வராத நாடுகளை தீவிரவாதத்துக்கு துணைபோகும் கையாட்கள் என முத்திரை குத்தியது.
9/11 ஐ. நா என்பது வறுமை நாடுகளுக்கு எங்களின் வேலி அது எங்களுக்கு அல்ல என உலகத்துக்கு சொன்னது.
9/11 தங்கள் கவனம் முழுக்க தீவிரவாத எதிர்ப்பு ஆனால் அது முழுக்க எண்ணை வயல் நிரம்பிய மத்திய கிழக்கு நாடுகளில் மட்டும்தான் என சொல்லாமல் சொன்னது.
9/11 இஸ்ரேலுக்கு ஆயுதம் விற்பதற்க்காகவே /வாங்குவதற்க்காகவே அவர்களிம் முதுகில் தட்டிக்கொடுத்து கொம்புசீவி விட்டது.
9/11 தீவிர வாத ஒழிப்புதான் முக்கியம் உகாண்டா வில் அது நடந்தால் உள் நாட்டு சண்டை, பாக்கிஸ்தான் தீவிரவாதம் என்றால் அங்கே எங்களுக்கு வேலை இல்லை..காரணம்?.. எண்ணை இல்லை.
9/11 குவாதனாமோ சிறைச்சாலையில் என்னவேண்டுமாலும் செய் ஆனால் இஸ்லாம் என்பதே தீவிரவாதம் எனும் தனது பழைய போலிப் பிரச்சாரம்.
9/11 சவூதிக்கு ஆயுத சப்ளை செய்துகொண்டே ஈரானின் அணுக் கொள்கைக்கு கடும் எதிர்ப்பு.
9/11 ஈராக்கில் இருந்த கண்ணுக்கு தெரியாத பேரழிவு ஆயுதங்களை தேடி பாக்தாத் தெருக்களில் குண்டுகளுக்கு பொதுமக்களை இரையாக்குவது.
9/11 ஈராக்கில் நினைக்க முடியாத பர்கர் கிங்கும், கே.எஃப்.சி யும், ஹார்லி டேவிட்சனுக்கும், கிளைகள் திறப்பது.
9/11 தனது ஹாவ்க் ரக ஹெலிக்களும், மிக் விமானங்களும் சோதனை ஓட்டம் நடத்துவது
9/11 அமெரிக்காவையும் பிற ஆதரவு மேற்க்குலக மக்களையும் இன்னும் ஒரு 9/11 க்கு பயத்துடனே காத்திருக்க வைத்து தனது தாக்குதலுக்கு ஒரு
மறைமுக அனுதாபம் தேடுவது.
9/11 உலகின் வல்லரசு என்பதை நிரூபிக்க ஒரு சந்தர்பம்.
சரி இதற்கெல்லாம் பின்னர் தீவிரவாதம் ஒழிந்ததா?.. இல்லை.
9/11 க்கு காரணமாக சொல்லப்படும் அல்கொய்தா இன்னும் அச்சுருத்தலாகவே இருக்கிரது.
அல்ஜசீரா தொலைக்காட்சியில் தோன்றி ஒசாமா பின்லேடன் தனது கலாஷ்னிகோவை வருடிய படியே மேற்க்குலகுக்கு எச்சரிக்கை விடுகிரார்.
முல்லா உமர் இன்னும் இந்திய எஞ்சினியர்களை விடுவிக்க பேரம் பேசுவார்.
சதாம் உசேன் மறைத்து வைத்திருந்த ஆயுதங்கள் (?) இன்னும் கண்டுபிடிக்கப் படவில்லை..
பாக்தாத் தெருக்களில் இன்னும் குண்டுகளின் சத்தம் ஓயவில்லை.
அமெரிக்கா இங்கிலாந்து எங்கும் சுதந்திர விமானப் பயனம் சாத்தியமில்லை,,, நிர்வாணமாக போதல் நலம்.
அமெரிக்க மக்களின் 76 % மக்கள் இன்னும் 9/11 தாக்குதல் பயத்தில் இருந்து மீளவில்லை.
பாகிஸ்தான் இந்தியாவுக்கு தனது தீவிரவாத ஏற்றுமதியை நிருத்தவில்லை.
பிறகு எதற்க்கு 9/11 நினைவுகளும்.. தாக்குதல்களும்.. இரண்டு நாடுகளின் மக்களை அகதிகள் ஆக்கியதும்?
14 comments:
நீங்க இப்படியெல்லாம் வேற எழுதுவீங்களா ? சூடோ சூடு ஒரே சூடு...
எத்தனை நாளைக்குதான் இவங்க தீவிரவாத்திற்கு எதிரா போராடப்போறாங்கன்னு தெரியலை. எல்லாமே பம்மாத்துதான்.
கேப்டன் லெவலுக்கு இருக்கு
புள்ளிவிவரம்!!!
உருப்படியான தகவல்கள். நன்றி!
//அமெரிக்கா இங்கிலாந்து எங்கும் சுதந்திர விமானப் பயனம் சாத்தியமில்லை,,, நிர்வாணமாக போதல் நலம்.//
அமெரிக்கா இங்கிலாந்து என்றில்லை விமானப் பயணமே பெரும் அயற்சி. சென்னையில் விமானம் ஏறுமுன் செக்கிங்கில் குழந்தைகள் ஜூஸ் பாட்டில் திறந்து குடிக்கச் சொன்னார்கள்1
என்ன 9/11 போங்க! ஈராக் WMD என்னாச்சு? இல்லாததை வத்து ஈராக் எண்ணை கிடைத்தது அமெரிக்காவுக்கு
//நீங்க இப்படியெல்லாம் வேற எழுதுவீங்களா ? சூடோ சூடு ஒரே சூடு... //
ஆகா ரவி.. அப்ப நீங்க முடிவே பன்னிட்டீங்களா? :)
//எல்லாமே பம்மாத்துதான். //
//கேப்டன் லெவலுக்கு இருக்கு //
இவங்க என்ன பன்னுனாலும் டாலர் வாங்கிட்டு துப்பாக்கி தூக்க சில யூனிபார்ம் பெட்டிஷ் இருக்கும் வரைக்கும் இந்த தீவிர வாத ஒழிப்பு இருக்கும் :)
//என்ன 9/11 போங்க! ஈராக் WMD என்னாச்சு? இல்லாததை வத்து ஈராக் எண்ணை கிடைத்தது அமெரிக்காவுக்கு //
ஆமா இதே உகாண்டாவில 1981 ல இருந்து உள் நாட்டு தீவிரவாதம் லிபியாவும் சேந்து அடிக்குது ஆனா அமெரிக்கா வாயே திறக்கலையே ஏன் எல்லாம் பெட்ரோல் பன்ற மாயம்
எங்களை ஆதரித்து பதிவு போட்ட எக்ஸ்பிரஸுக்கு இனி நிபந்தனையற்ற பின்னூட்ட ஆதரவு தருவோம்
ஒசாமா பின் லேடன்
கே/ஆப் முல்லா உமர்..
பாகிஸ்தான் பார்டர், ஆப்கானிஸ்தான்
முல்லா உமருக்கும், அவர் மருமகனுக்கும் நன்றிகள் உங்கள் ஆதரவை நோக்கி இருக்கும் எக்ஸ்பிரஸ்
சங்கத்து சிங்கங்கள் யானை படத்தை ஓடி ஓடி போடுவதன் ரெகஜியம் என்னான்னு கொஞ்சம் கேட்டு சொல்லுங்களேன் கிழுமத்தூராரே ?
போட்டியில் வெற்றி பெறப்போவது யார் ? யாருக்கு கிடைக்கும் அந்த பொரியல் காரணி ?
இனிமேல் இந்த 9/11-ஐ ஆண்டு தோறும் கொண்டாட ஒரு ஜோடி இன்று முதல் பலர் முன்னாடி முடிவு எடுத்து இருக்காமே?? அப்போ அவுங்களும் அமெரிக்கா எதிர்ப்பாளிகளா?
//சங்கத்து சிங்கங்கள் யானை படத்தை ஓடி ஓடி போடுவதன் ரெகஜியம் என்னான்னு கொஞ்சம் கேட்டு சொல்லுங்களேன் கிழுமத்தூராரே ?//
அடுத்தவர்களின் உள் விவகாரங்களில் நாமாக தலை நுழைக்கக் கூடாது அவர்கள் சொல்லும் வரை பொ"ரு"க்கலாம் :))
//அப்போ அவுங்களும் அமெரிக்கா எதிர்ப்பாளிகளா//
சொல்ல முடியாதுங்கோவ் அதுக்கும் சொன்னாலும் சொல்லுவானுங்க
//எங்களை ஆதரித்து பதிவு போட்ட எக்ஸ்பிரஸுக்கு இனி நிபந்தனையற்ற பின்னூட்ட ஆதரவு தருவோம்//
ரொம்ப நன்றிங்க ஒசாமா ஆனா இன்னும் ஆளே வர்லியே எங்காவது எதாவது ப்ளானிங்கா?
Post a Comment