Tuesday, September 12, 2006

இந்தியா ஒளிர்கிறது

நேற்று கம்யூனிஸ்டுகள் ஏன் அழுகிரார்கள் எனக் கேட்டு போட்ட பதிவுக்கு மிக நல்ல விளக்கம் தந்த திரு அசுரன் அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் அதே வேளை... இந்தியா ஒளிர்கிறது என்பதையும் நாம் மறுக்க முடியாது. இங்கே பாருங்கள் இவர்கள் எல்லோரும் வருமைக் கோட்டுக்கு மேல் இருக்கும் ஆண்டுக்கு 2350$ க்கு மேல் சம்பாதிக்கும் மேட்டுக்குடி மக்கள்

ஜெய் ஹிந்த் !!!

Photobucket - Video and Image Hosting

Photobucket - Video and Image Hosting

Photobucket - Video and Image Hosting

Photobucket - Video and Image Hosting

Photobucket - Video and Image Hosting

23 comments:

Anonymous said...

அதென்ன தம்பி அந்த 2350$ கணக்கு?

எதுக்குக் கேக்கிரேன்னா நானு எந்தக் குடியில கணக்காகிறேன்னு தெரிஞ்சுக்கோணுமில்லையா கண்ணூ!"

பெரிசு
அதிகம் படிக்காத பெரிசு

கோவி.கண்ணன் [GK] said...

படங்கள் நச் !

Unknown said...

ஜிகே நன்றிங்க ஆமா பின்ன இந்தியா பிரகாசமா இருக்கும் போது போட்டோ நச்சின்னு தானே இருக்கும்

Unknown said...

//எதுக்குக் கேக்கிரேன்னா நானு எந்தக் குடியில கணக்காகிறேன்னு தெரிஞ்சுக்கோணுமில்லையா கண்ணூ//


http://holyox.blogspot.com/2006/09/161.html

பெருசு (தானே) இங்க இருக்க அட்ரஸ்ல போய் பாருங்க தெரியும் பாத்துட்டு இங்க வந்து நீங்க எந்த குடின்னு சொல்லிட்டு போங்க :0

Muse (# 01429798200730556938) said...

மகேந்திரன்,

இந்தியாவில் வறுமையும், கம்யூனிஸமும் முற்றிலுமாக ஒழிந்துவிட்டது என்றுசெல்வன் சொல்லியிருந்தால் தாங்கள் போட்டிருக்கும் படங்கள் பொருத்தமான எதிர்வினையாக இருந்திருக்கும். ஆனால் அவர் சொல்லியிருப்பதோ, இந்தியா வளர்ச்சிப் பாதையில் நடைபோட ஆரம்பித்துள்ளது என்பதும், இந்த வளர்ச்சி படிப்படியாக வறுமையை குறைக்கும் என்பதும்தான்.

இந்த வளர்ச்சி நிலைக்கு காரணம் இதற்கு வழிவகுத்த நரஸிம்மராவ் அவர்கள். இந்தியாவில் லால் பஹதூர் ஸாஸ்த்ரிக்குப் பின்னால் கிடைத்த ஒரு சிறந்த பிரதமர்.

நீங்கள் வெளியிட்டிருக்கும் படங்களை அப்படியே வைத்திருங்கள்; ஒருவேளை ஸ்யூடோ-ஸெக்யூலரிஸ வாதிகளோ, கம்யூனிஸ்ட்டுக்களோ, அல்லது சிறுபான்மையினராக தங்களை சொல்லிக்கொள்கின்ற கிருத்துவ, இஸ்லாமிய மத வெறியர்களோ இந்த நாட்டின்மீது செலுத்திவரும் சர்வதிகார பலத்தை குறைத்துக்கொண்டால், தாங்கள் வெளியிட்டிருக்கும் படங்கள் நாளை நமது குழந்தைகள் பொருட்காட்ஷியில் மட்டும் பார்க்கும்படி இருக்கும். தற்கால ஹாங்காங்க் மக்கள் போல நமது குழந்தைகள் வளர வாய்ப்பு இருக்கும்.

அப்படி எதுவும் நடைபெறாவிட்டாலும் இந்த படங்களை வைத்திருங்கள். நாளை நமது குழந்தைகள் அவர்களது முன்னோர்களிடம் கிழிந்த சாக்குப்பைகளெல்லாம் இருந்தது என்று நினைத்து பெருமைப்பட முடியும். அந்த பழங்கால பெருமையாவது அவர்களுக்கு கொஞ்சம் தன்னம்பிக்கை தரலாம்.

கார்த்திக் பிரபு said...

hi sir do u remmeber me..

நம்ம பக்கத்து வந்து தேன்கூடு போட்டிக்கு நான் எழுதியுள்ள கதையை படித்து
ஒட்டு போடுங்க..உங்கள கருத்துக்களையும் சொல்லுங்க

மாசிலா said...

"மின்னும் இந்தியா" என்று உலகத்தை ஏமாத்தை ஏமாற்றிவரும் இந்தியாவின் முகமூடியை கிழிக்கும் படங்கள் என் மனதை நெகிழவைத்தது. உலகி வங்கிகளிடம் கடன் வாங்குவதற்கும், வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை கவருவதற்கும், நாட்டை அந்நிய பன்னாட்டு முதலாலிகளுக்கு நல்ல விலையில் விற்பதற்கு செய்யும் பொய் விளம்பரம்தான் இந்த "மின்னும் இந்தியா".

கண்ணை மூடிக்கொண்டு உலகமே இருண்டு விட்டது என நினைத்துக் கொள்வதுபோல், ஒரு சிலர், தங்களை சுற்றி பொய்யான சொகுசு உலகத்தை நினைத்தும், படித்தும், அமைத்தும், பேசியும் கனவு கண்டும் இந்த உலகமே வசதியாக மாறிவிட்டது என்ற ஒரு வித போதையில் ஊறிக்கிடக்கின்றனர். உண்மை அறிய மறுக்கின்றனர். போதை இறங்கி புத்தி தெளிந்தால்தான் அவர்கள் இதுவரை வாழ்ந்துகொண்டு வந்தது வெரும் அர்த்தமற்ற பொய் உலகம் என்பதை புரிந்துகொள்வர்!

Anonymous said...

பணக்காரர்கள் எல்லாம் பீன்ஸ் பொரியல் திங்க முடியாதுங்க. கொத்தவரங்கா தான் திங்க முடியும்.

கோலபாரதி கண்டிப்பா இந்தியா ஒளிர்கிறது பற்றி சொல்லுவாரு. நேத்து நானும் அவரும் ராமசாமி குடிசையில...

- பீன்ஸ்

Anonymous said...

தல என்ன உங்க தல்முடி நரைச்சிருக்கு?..

ஆமா அது என்ன கைல ஒரு மூட்டை...

Anonymous said...

//நீங்கள் வெளியிட்டிருக்கும் படங்களை அப்படியே வைத்திருங்கள்; ஒருவேளை ஸ்யூடோ-ஸெக்யூலரிஸ வாதிகளோ, கம்யூனிஸ்ட்டுக்களோ, அல்லது சிறுபான்மையினராக தங்களை சொல்லிக்கொள்கின்ற கிருத்துவ, இஸ்லாமிய மத வெறியர்களோ இந்த நாட்டின்மீது செலுத்திவரும் சர்வதிகார பலத்தை குறைத்துக்கொண்டால்,//

இதனை எந்த வெறியில் சேர்த்துக் கொள்வது சகோ. ஆனந்த கணேஷ்(மியூஸ்) அவர்களே.

நல்ல கருத்தைத் தான் கூறியிருக்கிறீர்கள். ஆனால் அதே சமயம் "இந்தியாவை காட்டிக் கொடுத்த, மகாத்மா காந்தியை கொலை செய்த ஹிந்துத்துத்துவ வெறியர்களை" இந்த லிஸ்டில் நீங்கள் படுத்தாததிலிருந்து நீங்கள் யார் என்பதை உங்களை அறியாமலே வெளிப்படுத்துகிறீர்களே?

இவ்வாறு தருணம் கிடைக்கும் பொழுதெல்லாம் மற்ற சமூகத்தின் மீது காழ்ப்புணர்ச்சியோடு புழுதி வாரி தூற்றும் "ஹிந்துத்துத்துவ வெறியர்களின்" அராஜகம் இந்தியாவில் குறைந்தாலே போதும் நீங்கள் கூறியது போல் இப்படங்களை வருங்கால இந்திய இளைய சமுதாயம் மியூஸியங்களின் கண்ணாடி அறைக்குள் கண்டு களிக்கும்.

வேதனையுடன்
இறை நேசன்

Unknown said...

//தல என்ன உங்க தல்முடி நரைச்சிருக்கு?..

ஆமா அது என்ன கைல ஒரு மூட்டை...
//

அது ஒன்னுமில்லைங்க நம்மாளுங்க அது உள்ள என்னா இருக்குன்னு பாக்க சொன்னாங்க நான் மனசு மட்டும் இல்லை தலைக்கூட வெள்ளைதான்னு சொல்றேன்

மூட்டை பூரா டாலர் மட்டும் இருக்கு வேற ஒன்னும் இல்லை

Anonymous said...

ஆமை நுழைந்த இடமும் அமீனா நுழைந்த இடமும் உருப்படாது என்று சொல்லுவார்கள் கம்யூனிஸ்ட்டுகள் நுழைந்த இடமும் அப்படித்தான்

தொழிலுக்குச் சங்கை ஊதிவிடுவார்கள் - அல்லது அங்கே வேலை பார்க்கும் தொழிலாளி வீட்டில் சங்கை ஊத வைத்து விடுவார்கள்

Anonymous said...

பாரத மாதாவே...எங்களைக் காப்பாற்று!

தொழில் வளர்ந்த நாடுகளில் கம்யூனிசம் வளரவில்லை;
கம்யூனிசம் வளர்ந்த நாடுகளில் தொழில் வளரவில்லை என்பது சரித்திரம்.

ஆப்பம் சுடும் ஆயாவிற்கும், அதனை விற்றுத் தரும்
அவளது பேத்திக்கும் இடையே வர்க்க பேதத்தைத்
திணிப்பவர்கள் கம்யூனிஸ்ட்டுகள்.

நியாயமற்ற கோரிக்கைகலை வைப்பதும்; அநியாயமான போராட்டங்களைத் தூண்டுவதும் கம்யூனிஸ்ட்டுகளின் வாடிக்கை!

அதனால் எத்தனையோ இடங்களில் தொழில்
நசிந்திருக்கின்றன; தொழிலாளர் வாழ்க்கையும்
சீர் கெட்டிருக்கிறது.

ஒவ்வொரு முறையும் கம்யூனிஸ்ட்டுகள் போராடும் பொழுது சில தொழிலுக்குச் சங்கு ஊதப்படுகிறது. அல்லது சில தொழிலாளர்களுக்கு சங்கு ஊதப்படுகிறது

தஞ்சையில் நெல்லின் கொள் முதல் விலையை உயர்த்தப் போராட்டம்; சென்னையில் அரிசி விலையைக் குறைத்துக் கொடு என்று போராட்டம். மதுரையில் பருத்தி விலையை உயர்த்து என்று போராட்டம்; கோவையிலும், திருப்பூரிலும்
நூல் விலையைக் குறைத்துக் கொடு என்று ஆர்ப்பாட்டம்

இது எப்படி சாத்தியமாகும்?

படிப்பறிவும், பகுத்தறிவும் இல்லாத அப்பாவி இளைஞர்களும், தொழிலாளர்களுமே கம்யூனிஸ்ட்டுகளின்
மயக்கு வாதத்தில் மயங்கி வாழ்வை இழந்தனர்.

அஞ்சல் துறையில் பெரிய தொழில் சங்கத்தை நடத்தி வருவது இந்தக் கம்யூனிஸ்டுகள்தான். அஞ்சல் துறையில் அகில இந்திய அளவில் 'ஈடி' என்று அழைக்கப்படும் புற நிலை ஊழியர்கள் மூன்று லட்சம் பேர் உள்ளனர். எனது கணவரும் 'ஈடி' ஊழியரே. இந்த 'ஈடி' ஊழியரை இலாக்கா ஊழியராக்கு என்று சுதந்திரம் கிடைத்த நாளிலிருந்து
கம்யூனிச தொழிற்சங்கம் கோரிக்கை விடுத்து வருகிறது.
இது வரை இந்தக் கோரிக்கை ஏற்றுக் கொள்ளப்படவில்லை.மாறாக, இவர்கள் 'ஈடி' ஊழியர்களிடம் 'சந்தா' என்றும், வழக்குச் செலவு என்றும் காசு பிரித்துக் கொண்டிருப் பதுதான் மிச்சம். இது நிறைவேறாத கோரிக்கை என்றே போராடுவதும் தொடர்கிறது.

இவர்கள் எங்கெங்கே செங்கொடியை நாட்டினரோ அங்கெல்லாம் தொழிற்சாலைகள் விழுந்து விட்டன. அந்தக்கொடிக்கு அப்படியொரு மகத்துவம் உண்டு.

பாட்டாளிகளின் கூட்டாளிகளாகவும், உழைப்பாளிகளின் உடன் பிறப்புகளாகவும் கம்யூனிஸ்ட்டுகள் பொய் வேஷம் போடுகின்றனர். உண்மையில் அவர்களைப்போல தொழிலாளர் விரோதிகளை வேறு எங்கும் பார்க்க முடியாது.

மேற்கு வங்காளத்தில் சணல், பஞ்சாலை தொழிற்சாலைகளில் வேலை செய்த நான்கு லட்சம் தொழிலாளர்களின் வேலையைப் பறித்து அவர்களை வீதியில் விட்டவர்கள் கம்யூனிஸ்ட்டுகள்தான்

எல்லாவற்றையும் அரசுடைமையாக்கச் சொல்வது
கம்யூனிஸ்ட்டுகளின் வழக்கம். இதே கம்யூனிஸ்ட்டுகள்தான் மேற்கு வங்காளத்தில் 'பாரத்' சணல் ஆலையைத் தனியாருக்குத் தாரை வார்த்துக் கொடுத்திருக்கின்றனர்.
இதுபோன்று பற்பல நிறுவனங்கள் தனியார் வசமாகிவிட்டன.

கடந்த 29 ஆண்டுகளாக இவர்களது அட்சி நடைபெறும் மேற்கு வங்காளத்தில், தொழில் துறை தற்கொலை விளிம்பிற்குப் போயிருக்கிறது. 94 ஆயிரம் சிறிய, பெரிய தொழிற்சாலைகள் மூடப்பட்டு விட்டன.

இதையெல்லாம் விடக் கொடுமை என தெரியுமா?
எந்தவித நஷ்ட ஈடும் தராமல் தொழிற்கூடங்கள் மூடப்பட்டதாலிரண்டாயிரம் தொழிலாளர்கள் தற்கொலை செய்து கொண்டு மடிந்து போயினர் என்பதுதான்.
அதி 1,600 தொழிலாளர்களின் சாவை, கம்யூனிஸ்ட்டுகளே மறுக்காமல் ஏற்றுக்கொண்டிருக்கின்றனர் ... துளிக்கூட வெட்கமில்லாமல்.

இந்த விடியா மூஞ்சிகள்தான் இங்கே 'பாட்டாளிகளின் நண்பர்கள் நாங்கள்' என்று பகட்டுகின்றனர்.

தேர்தல் முடிந்துள்ள நிலையில் இப்படிப்பட்ட கம்யூனிஸ்ட்டுகள் மத்திய ஆட்சியில் இடம் பெற்று விடாமல் இருக்க அன்னை பாரத மாதா தான் உதவ வேண்டும்!

எழுதியவர்
டி.சரஸ்வதி,
ஆனார்,
கன்னியாகுமரி மாவட்டம்

(11.5.2004 தேதியிட்ட தினமலர் நாளிதழில், வாசகர் கடிதம் பகுதியில் இக்கடிதம் வெளிவந்தது - தேவைப்படுபவர் சொல்லுங்கள். ஸ்கேன்டு காப்பி அனுப்பி வைக்கப்படும்)

அசுரன் said...

ம்யுஸ் மட்டுமல்ல யாருமே ஒருப்படியாக பதில் சொல்லவில்லை(சந்திப்பு ஒரு அருமையான பதிவு போட்டிருக்கிறார் santhipu.blogspot.com/2005/11/blog-post_27.html). மாறாக தங்களது அவதூறு ஜல்லியை திரும்ப திரும்ப அடித்துக் கொண்டே இருக்கிறார்கள். விசயம் என்னன்னா அவிங்க கிட்ட ஒன்னுமில்லங்கிறதுதான்.

செல்வன் ஒரு ஆள்தான் கொஞ்சம் முயற்சி செய்து மேலும் அதிக விவரங்களை திரட்டி வாதிடுகிறார். ஆனால் அவரும் கூட புள்ளிவிவரங்களைத்தான் பெரிதும் நம்புகிறார். அந்த புள்ளி விவரங்களில் உள்ள முரன்பட்ட தகவலகளை வெளிப்படுத்தினால் அதற்க்கு பதில் இல்லை. சில புள்ளி விவரங்களுக்கு முரன்பட்ட நடைமுறைகளைக் சுட்டிக் காட்டினால் அதற்க்கும் பதில் இல்லை, பொருளாதார கொள்கைகளில் உள்ள குதர்க்கங்களை சுட்டிக் காட்டினால் அதற்க்கும் பதில் இல்லை.

செல்வனின் அந்த 2350$ பற்றிய புதிய புள்ளிவிவரங்களுடனான பதிலுக்கும் ஒரு பதில் எழுதினேன். அதை இங்கு மீண்டும் பிரசுரிக்கிறேன்.

*************

பஞ்ச சாவுகள், நாடோ டிகளாக லட்சக்கணக்கில் இடம் பெயர்ந்து அத்துக் கூலிக்கு நகரங்களில் வேலை செய்யும் கிராமப்புற விவசாயிகள், உலகின் வறுமையில் வாடும் குழந்தைகளில் 50% பேர் இந்தியாவில் இருப்பது பற்றிய ஐ.நா. அறிக்கை(ஆகஸ்டு 2006 அறிக்கை) - இப்படி நானும் பதிலுக்கு வளைத்து வளைத்து புள்ளி விவரங்களை அடுக்க முடியும்

(மேலும் புள்ளி விவரங்களுக்கு சந்திப்பின் ஒரு கட்டுரை http://santhipu.blogspot.com/2005/11/blog-post_27.html).
(மேலும் அதி அதிகப்படியான ஆளும் வர்க்க புள்ளிவிவரங்கள் அடிப்படையிலேயே மோசடிகளை அம்பலப்படுத்தும் கட்டுரைகளுக்கு http://www.rupe-india.org/,
on Health care ==> http://www.indiatogether.org/2006/jan/psa-health.htm

On rural earnigs ==>
http://www.indiatogether.org/2005/nov/psa-income.htm)


ஏன நீங்கள் கொடுத்துள்ள புள்ளி விவரங்களில் கிராமப்புற ஆண்டு சாராசரியை எடுத்துக் கொள்ளுங்கள். அது வளர்ந்திருக்கிறதா என்றால் ஆமாம் உண்மைதான் ஆனால் இணையாக விலைவாசி உயர்வு இதைவிட பல் மடங்கு வளர்ந்துள்ளதே?... விவசாய இடுபொருள்கள் விலையோ இதைவிட சில நூறு மடங்கு வளர்ந்துள்ளதே?....

இப்படி ஒப்பிட்டுப் பார்த்தால் வாழ்க்கைத் தரம் தாழ்ந்து அதுவும் மிகவும் தரம் தாழ்ந்து போயுள்ளது தெரிகிறது (நீங்கள் குறிப்பிட்டுள்ள அந்த புள்ளிவிவரத்தின் அடிப்படையில்தான் சாய்ராம் ஒரு ஐந்து மாதத்திற்க்கு முன்பு கட்டுரை எழுதியிருந்தார்- அதை எனது முந்தைய பதிலிலும்
குறீப்பிட்டிருப்பேன்).


சரி GDP வளர்ந்து விட்டது வளர்ந்து விட்டது என்று சொல்கிறேர்களே விவசாய துறையில் GDPயின்(3.5 அல்ல்து 2 என்று நினைக்கிறேன்) பங்கு அதலாபாதளத்தில் தவழ்ந்து கொண்டிருக்கும் பொழுது அதை நம்பியுள்ள் 60% க்கும் மேற்ப்பட்ட மக்களின் வாழ்க்கை முன்னேறிவிட்டது என்று ஒரே நாள் இரவு இணையத்தை பிரட்டி நீங்கள் அளிக்கு முடிவு நகைப்பிற்க்கிடமாக உள்ளது.

மகராட்டிரா, தமிழ்னாடு போன்ற மானிலங்களின் வளர்ச்சிக்கு பிரதான காரணம் இங்கு நிகழ்ந்த பரவலான முதலாளித்துவ வளர்ச்சி-அதாவது சிறு தொழில் வளர்ச்சி நன்கு இருந்ததுதான் காரணம். ஆனால் உலகமயத்திற்க்கு பிற்பாடு சிறு தொழில் அழிந்து நசிந்து வருவதாக அரசு புள்ளி விவரம் சொல்கிறது.

நேரு காலத்திலிருந்தே இந்தியா மறைமுக காலனிதான். நேரு இந்தியாவை, ஊர் பெருசுகளுக்கு ஆய் கழுவிவிடும் வேலைக்கு ஏற்ப்பாடு செய்தார். இன்றைய தலைவர்கள் ஊர் முழுவதற்க்குமான ஆய் கழுவிவிடும் வேலைக்கு மாற்றுவிட்டார்கள் அவ்வளவுதான் வித்தியாசம். அதனால் இரண்டு காலகட்டத்தையும் ஒப்பிட்டு பேசுவது இரண்டு பன்றியில் எந்த பன்றி நல்ல வாசமுள்ளது என்று நிரூபிக்கும் முயற்சியே.

செப் 2005-ல் மும்பையில் நடந்த CII - இந்திய தரகு முதலாளிகள் சங்கக் கூட்டத்தில் அன்றைய செயலாளரான(தற்பொழுது அசோக் லேலாண்ட் தலைவர், செய்லாளராக உள்ளார்) டாடா குழுமத்தின் தலைவர், இந்தியாவின் மிகப் பெரிய உள் நாட்டு ஆபத்தாகா 2016(வருடம் மிகச் சரியாக ஞாபகம் இல்லை) -ல் 44 கோடி இளைஞர்கள் வேலையின்றி இருப்பர் என்றார்.

இதே கூற்றை உறுதிப்படுத்தும் வகையில் 2018(சரியாக் ஞாபகமில்லை)-ல் 28 கோடி இளைஞர்கள் வேலையின்றி இருப்பர் என்றது அரசு அறிக்கை(Sep 2006). இவர்கள் அனைவருக்கும் வேலை கொடுக்கும் வாய்ப்புள்ள ஒரே துறை விவசாயத் துறை(விவசாய கூட்டுறவு பண்ணைகளில் லட்சக்கணக்கான ஏக்கரில் முதலாளித்துவ முறையில் பயிர் செய்தல், இதற்க்கு பின்புலமாக நாடு தழுவிய தகவல் தொழில் நுட்ப வலைப் பின்னல், சந்தைகள், சாலைகள், பிற உள்கட்டுமானங்கள் )(ஏனெனில் ஏற்கனவே நாட்டின் ஆகப் பெரும்பான்மையான மக்கள் இந்த துறையிலேயே இருப்பதால் -சில அடிப்படை உற்பத்தி முறை மாற்றாங்கள் அபரிமிதமான வளர்ச்சியை ஏற்படுத்தும் - ஆனால் இந்த மாற்றங்களை செய்வது விடுங்கள், அதைப் பற்றீ யோசிப்பதையெ தடுப்பது யார்?-இதற்க்கான விடைதான் சமீபத்திய WTO ஜெனிவா பேச்சு தோல்வியில் தெரியவந்தது).

இந்த பாதையில்(விவசாயத்தில் விவசாயியை விரட்டாமல் முதலாளித்துவ வளர்ச்சி) இந்தியாவின் வளர்ச்சி இருப்பதாக இருந்தால் அது உண்மையான வளர்ச்சியாக இருக்கும். ஆனால் ஏற்கனவே சொல்லியதுபோல விவசாய GDP, டங்குவார் அந்து தொங்குகிறது. அப்புறம் எப்படி இந்தியா முன்னேறூகிறது என்பது ஆச்சரியமான் பகல் கனவு.

புள்ளி விவரங்கள் நீங்களும் தரலாம் நானும் தரலாம் ஆனால் விசயம், இரண்டுமே ஆளும் வர்க்கத்தின் புள்ளி விவரங்கள்தான். அதில்தான் இதன் நமபகத்தன்மை குறித்த சூட்சமமும் அடங்கியுள்ளது.

அய்யா food security என்ற கௌரத்திற்க்காக மத்திய உணவுகிடங்குகளில் உணவை அடைத்து வைத்து பொது விநியோகத்தில் கைவைத்த அரசுதான் இது(பஞ்சாப் விவசாயிகள் டில்லியில் போராடினார்கள் வாஜ்பேயி அரசில், இதே நேரத்தில்தான் ஒரிஸ்ஸா, மகாராட்டிர பஞ்சத்தில் நூற்றூக்கணாக்கானோர் செத்தனர்). அதனால் தனது கௌரவத்திற்க்காக அது செய்யும் சல்ஜாப்புகளை புள்ளிவிவரங்கள் என்று நீங்கள் வைத்தால். அதே அரசு வேறு வடிவங்களில் உண்மையை வெளிப்படுத்தியுள்ளதை புள்ளி விவரங்களாக நாங்கள் வைக்கிறோம். இரண்டும் ஆளும் வர்க்கம் வெளிப்படுத்திய உண்மை எனும் பொழுது இதில் எதை எடுப்பது என்பதை யாதார்த்தில் மக்கள் படும் கஸ்டங்களைப் பார்ப்பவர்கள், அரசு புள்ளிவிவரங்களிலேயே வெளிப்படும் முரன்பாடுகளினுடே தெரியும் உண்மைகள் இவற்றின் அடிப்படையில் முடிவு செய்யட்டும்.

கான்சர் திட்டுக்களையும் வளர்ச்சி என்று கூறலாம். சிலர் அதை புணூகு தடவி அழகு பார்ப்பார்கள் நாங்கள் அவற்றை வெட்டி யெறிந்துதான் பழக்கம்

நான் எழுப்பிய கேள்விகளுக்கு, குறீப்பாக நாடாளுமன்றத்தில் இயற்றப்பட்ட பல்வேறு மக்கள் விரோத சட்டங்களுக்கு பதில் தெரிகிறதா என்று முயற்சி செய்யவும். அவை எந்த வகையில் இந்தியாவை முன்னேற்றும் என்பதற்க்கும் பதில் சொல்லவும்.


அசுரன்.

அசுரன் said...

//இவர்கள் எல்லோரும் வருமைக் கோட்டுக்கு மேல் இருக்கும் ஆண்டுக்கு 2350$ க்கு மேல் சம்பாதிக்கும் மேட்டுக்குடி மக்கள்//

ஒரிரு வரிகளில் அந்த உலக வங்கி புள்ளிவிவரத்தின் மோசடியை அம்பலபடுத்தியுள்ளீர்கள்.

வாழ்த்துக்கள்,
அசுரன்.

அசுரன் said...

//இவர்கள் எல்லோரும் வருமைக் கோட்டுக்கு மேல் இருக்கும் ஆண்டுக்கு 2350$ க்கு மேல் சம்பாதிக்கும் மேட்டுக்குடி மக்கள்//

ஒரிரு வரிகளில் அந்த உலக வங்கி புள்ளிவிவரத்தின் மோசடியை அம்பலபடுத்தியுள்ளீர்கள்.

வாழ்த்துக்கள்,
அசுரன்.

Anonymous said...

இந்தியா மேல் இவ்வளவு அக்கறையுள்ளவர்கள் இந்தியர் வரிப்பணத்தில் ஓசியில் படித்துவிட்டு துபாயில் கக்கூஸ் ஒளிர வைப்பதை விட்டுவிட்டு கிராமத்துக்கு வந்து சேவை செய்வதுதானே! அங்கே ஷேக்குக்கு கூழகும்பிடு போட்டு பிழைப்பதைவிட அந்த பிச்சைக்காரன் பிழைப்பு எவ்வளவோ மேல்!

Anonymous said...

பெங்களூர் விஜயம்

நான் என்னுடைய சதாப்தி எக்ஸ்பிரசில் வரும் சனிக்கிழமை பெங்களூர் விஜயம் செய்ய உள்ளேன். உங்கள் மொபைலை என்னிடம் தரவும்.அங்கு நாம் போண்டா சாப்பிட்டு கொண்டு ஏதாவது வெட்டியாக பேசலாம். சமீபத்தில் 1945ல் தலைவராக இருந்த ராஜாஜி பற்றிப் பேசுவோம்.

அன்புடன்
போண்டா ராகவன்.

Anonymous said...

பெங்களூர் விஜயம்

நான் என்னுடைய சதாப்தி எக்ஸ்பிரசில் வரும் சனிக்கிழமை பெங்களூர் விஜயம் செய்ய உள்ளேன். உங்கள் மொபைலை என்னிடம் தரவும்.அங்கு நாம் போண்டா சாப்பிட்டு கொண்டு ஏதாவது வெட்டியாக பேசலாம். சமீபத்தில் 1945ல் தலைவராக இருந்த ராஜாஜி பற்றிப் பேசுவோம்.

அன்புடன்
போண்டா ராகவன்.

Anonymous said...

பெங்களூர் விஜயம்

நான் என்னுடைய சதாப்தி எக்ஸ்பிரசில் வரும் சனிக்கிழமை பெங்களூர் விஜயம் செய்ய உள்ளேன். உங்கள் மொபைலை என்னிடம் தரவும்.அங்கு நாம் போண்டா சாப்பிட்டு கொண்டு ஏதாவது வெட்டியாக பேசலாம். சமீபத்தில் 1945ல் தலைவராக இருந்த ராஜாஜி பற்றிப் பேசுவோம்.

அன்புடன்
போண்டா ராகவன்.

Anonymous said...

பெங்களூர் விஜயம்

நான் என்னுடைய சதாப்தி எக்ஸ்பிரசில் வரும் சனிக்கிழமை பெங்களூர் விஜயம் செய்ய உள்ளேன். உங்கள் மொபைலை என்னிடம் தரவும்.அங்கு நாம் போண்டா சாப்பிட்டு கொண்டு ஏதாவது வெட்டியாக பேசலாம். சமீபத்தில் 1945ல் தலைவராக இருந்த ராஜாஜி பற்றிப் பேசுவோம்.

அன்புடன்
போண்டா ராகவன்.

ஆவி அம்மணி said...

//"இந்தியா ஒளிர்கிறது"//

அவ்ளோ பெரிய காடா விளக்கை ஏத்தி வெச்ச புண்ணியவான் யாருங்கோ?

ஓகை said...

மகேந்திரன்,

நன்றாகப் படம் காட்டியிருக்கிறீர்கள். மயில் அழகான பறவை என்று சொல்பவர்களின் வாதத்தை முறியடியுங்கள். மயிலின் கால்களை மட்டும் பெரிதாக வண்ணத்தில் படமெடுத்து போடுங்கள். நிச்சயம் எடுபடும்.

மயிலைவிட மட்டமான பறவை எதுவும் இல்லை என்பதை எளிதில் நிறுவி விடலாம்.