கடந்த புதன் காலை வேலையில் இருக்காத ஒரு பசியான மதியம். குளிரும் வெயிலும் கலந்து ஒரு மிதமான வெப்ப நிலையில் எனது அறைக்கு அருகிலேயே இருக்கும் ஒரு இணைய நிலையத்தின் ஒரு மூலையில் அமர்ந்து ஆனந்த விகடனை படித்துக்கொண்டே தமிழ்மணத்தை மேய்ந்துகொண்டிருந்த போது யாகூ செய்தி தூதுவனில் முத்துக்குமரன் அழைத்தார்... எப்படி இருக்கிறீர்கள் என்று. அட இரண்டுமாதமாக எழுதுவதற்கு முடியவில்லை என்றாலும் நம்மை நிணைவுவைத்து அழைக்குமளவுக்கு நிணைவில் நிற்கிறோமே என்றவாரே பேச ஆரம்பித்தோம். சனிக்கிழமை கராமாவில் நடைபெற இருக்கும் அமீரக வலையுலக நண்பர்களின் சந்திப்பு பற்றி சொன்னவர் என்னையும் ஆட அழைத்தார். 2ம் தேதி தேசிய விடுமுறைதானே வரலாம் என்றே எண்ணி வாக்குக் கொடுத்தேன். ஆனால் இந்த சனிக்கிழமை பகலில் தான் வேலை யில்லை, ஆனால் சனி இரவு இருப்பு சோதனைக்காக கண்டிப்பாக வரவேண்டும் என ஒரு சிறு அதிமுக்கிய வேலை காரணமாக நாலு மணிக்கு கராமாவில் நடைபெற்ற (?) மாநாட்டில் கலந்துகொள்ள முடியாமல் போனது. மேலும் எல்லோரும் நம்பும் வருணபகவான் தனது சதித் திட்டத்தை நிறைவேற்றும் சீறிய முயற்ச்சியில் இருந்ததாலும் வர முடியவில்லை. எனக்கு தனிமடலில் அழைப்பு அனுப்பிய சாத்தான் குளத்து வேதம் எதுவும் இது குறித்து எழுதியிருப்பார் என வந்தால் சிம்ரண் சைஸ் என்ன, லைலா வோடு போட்டி போடுகிறார் பார்க்கலாம் .....
5 comments:
பள்ளிக்கூடத் தேர்வுகளுக்கு
வரமுடியாமைக்குத்தான் சாக்கு சொல்வீர்!
இப்போது..............!!!!!!!
Okay
நடக்கடும்!
அய்யா வாத்தியாரய்யா அதெல்லாம் இல்லீங்க நிஜமாவே துபாய்ல நல்ல மழைதாங்க பொழியுது !!
//பார்க்கலாம் .....//
நல்லா இருக்கியல...
:((
//நாலு மணிக்கு கராமாவில் நடைபெற்ற (?)//
இதுல என்ன சந்தேகம்?
நடந்தது நன்றாகவே!!
என்னய்யா வந்தாச்சா?
Post a Comment