Friday, April 13, 2007

ரஜினி- தி பாஸா ?

செந்தழல் ரவியிடம் சுடர் இருக்கும் போதே தெரியும் அது உங்களிடம்(லக்கி லுக்) வரும் என்று ஆனால் இப்படி ஆறு மாதம் சென்ற பின் எட்டிப் பார்த்து குழம்பி குட்டை குழப்பிக்கொண்டிருக்கும் அடியேனைத் தேடி அது வரும் என நான் நினைக்க வில்லை.

எப்படியோ வந்து விட்டது இது குறித்த அன்புக் கண்டணத்தை வலைப்பூ சுனாமி லக்கியின் மேல் இருத்தி அ.மு.க தோழர்களின் ஆசிகளுடன் இந்த சுடரை தொடர்கிறேன்.
(இதெல்லாம் லைட்டான கேள்வியா லக்கி நீங்க வர வர ஒரு மார்க்கமாத்தான் போறீங்க )
1) அமுக தோற்றுவிக்கப்பட்டதின் அவசியம் என்ன?
இந்த கேள்வி லைட்டாக இருப்பினும் பதிலை கொஞ்சம் ஹெவியாக சொல்லியாக வேண்டும். கடந்த வருடம் ஏப்ரல் மாதம் முதன் முதலில் குமுதம் ரிப்போர்ட்டரில் வந்த இணையத்தில் அன்னியன் எனும் ஒரு கட்டுரையில் போலியார் பற்றியும் டோண்டு பற்றியும் முதன் முதலாக படிக்கும் வரை எனக்கு தமிழ்மணம் பற்றியோ அல்லது வலைப்பூக்கள் பற்றியோ அறிந்திருக்கவில்லை.

அதன்பின் தமிழ் வலைப்பூக்கள் பற்றி கூகிளில் தேடியபோது தெரிந்துகொண்டதுதான் அந்திமழை அப்போது தமிழ்மணம் பற்றி தெரியாது அதில் ஒரு சில பக்கங்களை பதிவேற்றியபோது அவை எடிட் செய்யப்பட்டே வளியிடப் பட்டன எனது கருத்துக்களை என்னைக் கேட்காமல் எடிட் செய்த அந்த மழை எனக்குள் அயற்ச்சியை உண்டாக்கியது. அதில் இருந்த சில சுட்டிகளின் உதவியுடன் நான் வந்து சேர்ந்த இடம் தமிழ் மணம் .
தமிழ் மணம் வந்த முதல் நாளே கொஞ்சம் சுவாரஸ்யத்தை காட்டியது. அதன் பின் அதை எப்படி நாமும் எழ்ஹ¤துவது எனத் தெரிந்துகொள்ள அதிலிருந்த சில வலைப்பக்கங்களை படித்தபோது குழலி மற்றும், தமிழ்சசியின் கட்டுரைகள் காணக் கிடைத்தன அவற்றின் அரசியல் பார்வையும் சில அதிரடிக் கருத்துக்களும் என்னை ஈர்க்கவே நாமும் இப்படி எழுதினால் என்ன என ஆரம்பித்ததுதான் கிழுமத்தூர் எக்ஸ்பிரஸ். அதில் வந்த சில கட்டுரைகள்
அதில் இருந்த முகம் காட்ட மறுத்த பதிவர்கள் போலிகள் போலிகள் எனக் கூவி குத்தாட்டம்
போட்ட பார்ப்பணீய வலைப்பதிவர்கள் இவர்களை எதிர்த்து போலிக்கு ஆதரவாக எழுதிய யார் போலி எனும் கட்டுரை இணையத்தில் நிறைந்து கிடக்கும் சில போலிகளை இணம்காட்டியது .(உண்மையான போலியாரிடம் இருந்து பாராட்டு மின்மடல் வந்தது தனிக்கதை) ஆனால் அதே நேரம் சில பெரும் பதிவுகள் பதிவர்கள் எனக்கு கோப(அதேதான்) மடல் அனுப்பினார்கள் டோண்டுவும் தனது எல்லா பின்னூட்டங்களின் பின்னாலும் "ஆபத்தான அதர் மற்றூம் அனானி ஆப்ஷன் உங்கள் பதிவில் இருப்பதால் இதை உண்மையான டோண்டுதான் இட்டான் என்பதற்க்காக எனது ......... இட்டுக் கொள்கிறேன்" என்று புலம்பிக் கொண்டிருந்தார்

அவர்கள் அத்தணை ஆபத்தானவர்களா என்றால் இல்லை. அனானிகள் மூலமாகத்தான் நமது (லக்கி, செந்தழல் ரவி, கிழுமத்தூர் எக்ஸ்பிரஸ் ) வலைப்பூக்கள் பிரபலமாயின. அப்போது தான் நல்ல அனானிகளும் அகிலத்துக்கு தெரிய வந்தனர். ஆனால் சில உண்மைப் பதிவர்களே முகம் காட்ட மறுத்து அனானியாக வரும்போது ஏன் அனானி ஆப்சன் தவறு என்கிறார்கள் எனத்தேடியபோது அற்புதமான நகைச்சுவை உள்ளம் கொண்ட நல்ல அனானிகள் இந்த வலைப்பூவெங்கும் இருப்பதை கண்டுகொண்டோம் அதன் பின் ஒரு சில நாட்களில் அன்னிய லோகம் அடையாளச் சோதனை வந்தது. அதில் இருந்த கட்டுப்பாடுகளை பயன் படுத்த மறுத்த பதிவர்கள் அனானிகளால் ஆதரவளிக்கப் பட்டனர். அப்போது தோன்றிய எண்ணம் தான் இந்த
அனானிகள் முன்னேற்றக் கழகம்(அமுக)
இதை செயல்படுத்த வேண்டி செந்தழல் ரவி, நான் இன்னும் ஒரு அன்பர் ஆரம்பித்த வலைப்பூ அனானிகள் முன்னேற்றக் கழகம்.இதில் சில பெருந்தலைகள் எழுதியிருக்கிறார்கள் பெயர் இல்லாமல். தமிழ்மணத்தில் இணைக்கும் போது அவர்களும் ஒரு எச்சரிக்கை யோடே இணைத்தனர் இப்போதுவரை வெற்றி நடைதான் இன்று சிங்கையில் மாநாடும் சென்னையில் கூட்டமும் அகில உலக அங்கீகாரமும் பெற்று அமுக ஒரு நல்ல அமைப்பாக செயல்படுவது காணும்போது மகிழ்வாய் இருக்கிறது
2) தந்தைபெரியாரின் சிந்தனைகள் இன்னும் எவ்வளவு காலத்துக்கு தமிழ் சமூகத்துக்கு தேவை?
இன்னும் எவ்வளவு காலத்துக்கு தேவை என்ற ஒரு வரையரைக்குள் அடங்கும் அத்தியாவசிய பண்டமில்லை அவர் சிந்தனைகள் அவை ஒரு நூற்றாண்டுக் கலாச்சா¡ரம் மனித குலம் முழுமைக்கும் நிழல் கொடுக்கும் ஆலமரம் அவர். அவர் இருந்ததால் தான் நாம் சில தெளிவுகள் அடைய முடிந்தது வெளிச்சம் இருப்பதால் விளக்கை அணைத்துவிடலாம் என்றால் மீண்டும் இருட்டுக்குள் விழ வேண்டியதுதான். மனித குலம் இருக்கும் வரை அவர் சிந்தனைகள் தேவை ஆனால் அவரே சொன்னதுபோல் காலத்துக்கு தகுந்த மாதி, அல்லது நம்மால் சுயமாக சிந்த்க்கத் தெரியும் வரை.

ஒரு இனத்தின் அடையாளம் மட்டுமல்ல சுயமரியாதை அது உரிமை எல்லா மனிதனுக்கும் பொதுவானது என தனது எதிரிகளுக்கும் உணர்த்தியவர். ஒவ்வொரு மனிதனின் சுயமரியாதைக்கும் சொந்தக்காரர் பெரியார். கடவுளைக் காட்டி கண்கட்டி கிடந்தவனின் கரம்பற்றி வழிகாட்டியர் பெரியார் அதனால்தான்அவரின் சிந்தனைகள் இன்றும் நமக்கு தேவை, போலி அரசியல் வாதிகள் திராவிடம் பேசி மக்களை ஏமாற்றும் வரை பெரியாரின் சிந்தனைகள் மக்களுக்கு தேவைதான்

பெரியார் சிந்தனைகள் இல்லாத தமிழ் சமூகம் இருட்டுப் பாதையில் குருட்டுப் பூணையாகும்.
3) கிழுமத்தூர் எங்கே இருக்கிறது? அந்த ஊரைப் பற்றிய உங்கள் நினைவுகளைச் சொல்லுங்களேன்.
ஏன் சொன்னால் ஆள் வைத்து அடிப்பீர்களோ: :)

எனது முதல் பதிவில் அது இருக்கும் இடம் மிகத் தெளிவாக சொல்லப் பட்டுள்ளது இங்கே சில நினைவுகள் மட்டும் ,

ஊரில் இருக்கும் ஆறு... எங்கள் கிராமம் முழுவதும் விவசாய நிலம் என்பதால் ஆறு இன்றியமையாத ஒன்று அதில் தண்ணீர் வரும் வேளைகளில் குளிப்பதும் குளத்தில் நீந்துவதும் (எங்கள் ஏரியாவில் இருக்கும் மிகப் பெரிய குளம் எங்கள் ஊரில்தான் உண்டு) கிராமத் திருவிழாக்களும் நண்பர்களுடன் சேர்ந்து எல்லா இரவுகளும் பேசிக்கிடந்த அந்த ஏரிக் கரை அம்மன் கோவிலும் நான் திருமணத்துக்கு முன்னும் பின்னும் என் துணையின் கரம்பற்றி நடந்த கைப்பெரம்பலூர் சாலையும்(ரைஸ்மில் ரோடு) என் குடும்ப உறுப்பினர்களாய் இன்றும் இருக்கும் கணக்கில் அடங்கா நாய்களும் பூனைகளும் மறக்க முடியாதவை
4) சாருநிவேதிதா மீது உங்களுக்கு என்ன கோபம்? அவரைப்பற்றிய உங்கள் விமர்சனம் என்ன?
அவர்மேல் எனக்கு தனிப்பட்ட முறையில் எந்தக் கோபமும் இல்லை இன்னும் உண்மையைச் சொன்னால் இன்றுவரை என்னோடு யாகூவில் அரட்டை அடிக்கும் நல்ல நண்பர் அவர். முன்பே ஒருமுறை அவர் பேசியது பற்றி பதிவிட்டுள்ளேன்.
அவரின் படைப்புகள் மீது மட்டுமான விமர்சணங்கள் சில நேரங்களில் கோபத்தின் உச்சிக்கு சென்று அவரையும் சில நேரம் தாக்கியிருக்கலாம். அவரைப்பற்றி சொல்லவேண்டுமானால் நல்ல எழுத்தாளர். தனிப்பட்ட அவரை விமர்சணம் செய்யும் தகுதி எனக்கு இல்லை ஆனால்
ஒரு வாசகன் எனும் முறையில் அவரின் எழுத்துக்களுக்கு விமர்சனம் எழுதும் உரிமை எனக்கு உண்டு அதன்படி பின் வருவது அவர் படைப்புகள் மீதான விமர்சனமே அன்றி அவர் மீதான தாக்குதல் இல்லை சாரு நிவேதிதா தனக்குத்தானே புலம்ப வேண்டியவற்றின் பிரதிகளை காசாக்க வேண்டி ஜீரோ டிகிரி நாவலை எழுத் அதுவும் யாருக்கும் புரியாமலே நல்ல விற்பனையானது அவர் மேலான நல்ல புரிதல்கள் இல்லாமல் அவரின் படைப்புலகம் கேள்விக்குள்ளான போது லத்தீன் பிரான்ஸ் இத்தாலி என கண்ணுக்குத் தெரியாத தேசங்களின் நல்ல எழுத்தாளர்கள் துணைக்கு வருவார்கள்
இவர் எழுதுவதே புரியாத போது இவர் ரசிக்கும் புத்தகங்கள் நிணைக்கவே மண்டை காய்கிறது. யோனி பற்றியும் முலைகள் பற்றியும் இன்னும் உடலுறுப்புக்கள் பற்றியும் எழுதுவதே நல்ல இலக்கியம் என நம்பும் ஒரு சாதாரண கலகக் காரர்.
கோனல் பக்கம் அவரின் இன்னொரு பக்கம் நாம் வெளியிடத்தயங்கும் அந்தரங்க டைரிக் குறிப்புக்களை நல்லி குப்புசாமி உதவியோடு இணையத்தில் ஏற்றி தினமலருக்கு கொடிபிடிக்கும் ஒரு சாதாரன சிறுகதை எழுத்துக்கு சொந்தக்காரர். இன்னும் இந்த உலகில் எதுவெல்லாம் நல்லவையாக பார்க்கப் படுகிறதோ அவையெல்லால் நல்லவை யில்லை என்று தனியே புலம்பிக்கொண்டு கிடக்கும் ஒரு பரிதாப எழுத்தாளர். உதாரணம் சுந்தர ராமசாமி முதல் இப்போதைய சாய்பாபா வரையிலான அவரின் கட்டுரைகள்,
கமல்ஹாசன் எழுதினால் அது காமம் ஆபாசம். ஆனால் அதையே இவர் ஒரு மது பாரில் பார்த்த பெண்ணோடு அப்படியே பின்னால் இருந்து புணரலாம் என எழுதினால் அது இலக்கியம் என இரட்டை வேடம் போடும் எழுத்துக்களுக்கு சொந்தக்காரர்
5) நடிகர் ரஜினிகாந்தைப் பற்றிய உங்கள் மதிப்பீடு என்ன?
அவரின் ஆரம்பகால கருப்புவெள்ளை படங்களை அவரின் ஆரவாரமில்லாத நடிப்பை இன்றும் ரசிப்பவன் தான் நான் ரஜினியின் சேட்டைகள் அதிகமாகி தனக்கு இருக்கும் ரசிகர் பட்டாளத்தினை குஷிப்படுத்த கோமாளி வேடம் போட்டபின்னால் வெளிவந்த படங்களை குறிப்பாக ரஜினியை கெடுத்ததில் எஸ்.பி முத்துராமனுக்கு ஏவிஎம்முக்கு பஞ்சு அருணாச்சலத்துக்கு வைரமுத்துவுக்கு பெரும் பங்குண்டு. இந்த கேள்வியை என்னிடம் நீங்கள் கேட்டதன் அர்த்தம் எனக்கு புரிகிரது அவர்மேலும் எனக்கு எந்த கோபமும் இல்லை எல்லாம் அவ்ர் ரசிகர்கள் எனக் கூறிக்கொள்ளும் விசிலடிச்சான் குஞ்சுகள் மேல் உள்ள கோபம், பல காரணங்களுக்காக.

மதிப்பீடு எனக்கேட்டால் தமிழ் திரையுலகின் சில ஏற்றுக்கொள்ள முடியாத வெற்றிகளுக்கு சொந்தக்காரர்.

நல்ல மனிதர் என மற்றவர்கள் சொல்லக் கேட்டதுண்டு நல்ல நடிகர் இல்லை. இதுமட்டும் எனக்குத் தெரியும்
சாதணைகள்:
1. ஒரு பஸ் நடத்துனர் இன்று இந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகரானது
2. ரசிகர்களை போல் இல்லாமல் தன் சக போட்டி நடிகர்களோடும் நட்போடு இருப்பது
3. ஜெயலலிதா வந்தால் தமிழ் நாட்டை ஆண்டவனே காப்பாற்ற முடியாது என தூர்தர்சனில்
பேட்டி கொடுத்தது
4. அதே ஜெயலலிதாவுக்கு ஓட்டைப் போட்டுவிட்டு தைரிய லட்சுமி என்பது
5. அரசியலுக்கு வற்றேன் வற்றேன் எனக் கூறி இன்றுவரை பட்டினிகிடக்கும் தன் குஞ்சுகளின்
ஏக்கப் பார்வையை சமாளிப்பது
6. பாபா தோற்றபோது பணத்தை திருப்பித் தந்தது
7. காவேரி போராட்டத்துக்காக சென்னையில் உண்ணாவிரதம் இருந்தது
அவரின் சமீப சாதனை:
8. அகில உலகில் முதன் முதலில் ரிலீசுக்கு முன்னறே திருட்டு ஆடியோ சிடி
லக்கியின் எல்லா கேள்விகளுக்கும் பதில் அளித்துவிட்ட திருப்தி இருந்தாலும் இந்த சுடரின் தொடர்ச்சியாக இதே கேள்விகளுக்கு இன்னும் விரிவான பதில்கள் வந்தாலும் வரலாம் . இன்னும் ஓரிரு நாட்களே சுடரின் கடைசி நாளாக இருப்பதால் இச் சுடர் தொடரை இத்துடன் முடித்துக் கொள்கிற்றேன் அல்லது இன்னும் எழுத யாரையும் அழைக்கலாமென்றால் பின்னூட்டி விளக்கம் அளிக்கவும்
வெட்டிப்பயல் பின்னூட்டத்தில் கேட்டுக்கொண்டபடியும் அப்படியே நான் சுடரைக் கொடுப்பதால் நான் கடைசி ஆளாக இருப்பேன் என்பதாலும் இச் சுடரை வெட்டிக்கான கேள்விகளுடன் அவரிடமே அளிக்கிறேன்
கேள்விகள்:
1. திராவிடன் என்பவன் யார் என்ற உங்கள் நெடுநாள் சந்தேகம் தீர்ந்ததா?
2., அனானி கழக தோழர்களால் வலைப்பூ உலகம் ஏற்றம் அடைகிறதா இல்லையா
3.உங்களுக்கு நெருக்கமானவர் ஒரு போலி என்று அறிய வந்தால் உங்கள் நிலைப்பாடு என்ன ?
4.உயர்கல்வியில் இடஒதுக்கீடும் க்ரீமி லேயரும் எல்லோருக்கும் புரியும் விதமாக விளக்கவும்
5. நீங்கள் எழுதுவதெல்லாம் கற்பனை கதையா இல்லை சொந்த கதைகளா? அப்படி உண்மையாய் இருக்கும்பட்சத்தில் அவர்களுக்கு இது தெரியுமா?
யப்பா வெட்டி உங்களுக்கு கேள்வி கேக்கறதுக்குள்ள எனக்கு பெண்டு கழளுதுப்பா :)

19 comments:

லக்கிலுக் said...

//பெரியார் சிந்தனைகள் இல்லாத தமிழ் சமூகம் இருட்டுப் பாதையில் குருட்டுப் பூணையாகும். //

அருமை!

நீங்கள் யாரையாவது எகனை மொகனையாக சுடர் விளையாட்டுக்கு அழைக்கலாம்.

உதாரணத்துக்கு டோண்டு சாரையோ அல்லது போலி டோண்டு சாரையே அழைக்கலாம். விளையாட்டும் சுவாரஸ்யமாக முடியும் :-)

Anonymous said...

சிவாஜியால் ரஜினிக்கும், சங்கருக்கும் வேண்டுமானால் லாபம் இருக்குமே தவிர, தமிழனுக்கும் ஏன் ஏவிம்-க்கு கூட லாபம் இருக்காது.
சங்கர் படங்களில் பிரமாண்டங்கள் புகுத்தபடுகிறது என்பது அப்பட்டமான உண்மை. உதாரணமாக அந்நியனில் வரும் சைனீஸ் ஸ்டையில் சண்டைக்காட்சி போல கதைக்களத்திற்கு அந்நியமான நிறைய விசயங்கள் அவர் படத்தில் பார்க்கலாம். மேலும் அவர் படங்களில் வெற்றிபெற்ற படங்கள் என்று பார்த்தால் அது கொலைப்படம்(இந்தியன்,அந்நியன்,முதல்வன்) அல்லது கொள்ளைப்படமாகத்தான்(ஜென்டில்மேன்) இருக்கும். மற்ற படங்களெல்லாம் ஊத்திகிட்டதுதான். சிவாஜி எப்படி இருக்கும்? கொலைப்படமா அல்லது கொள்ளைப்படமா என்பது இன்னும் சில நாட்களில் தெரிந்து விடும்.

Anonymous said...

//உதாரணத்துக்கு டோண்டு சாரையோ அல்லது போலி டோண்டு சாரையே அழைக்கலாம். விளையாட்டும் சுவாரஸ்யமாக முடியும் :-) //

ஜமாய்ங்க

Anonymous said...

மகேந்திரன், இன்னொருத்தரை அழைக்கலாம்னு நினைக்கிறேன்.. தேன்கூடு படி, நாளை தான் முடியுது இந்த சுடர் விளையாட்டு..

Anonymous said...

என்று தனியும் இந்த சுகந்திர தாகம் என்றது போல இருக்கிறது உங்கள் பதிவு...

வலையுலகில் கும்மி அடிக்க ஆரம்பித்தபோது உங்கள் நன்பன் சரவணன், கோவி கண்ணன் ஆகியவர்களுடன் சேர்ந்து பின்னூட்டங்களில் ஜாலியாக கலாய்த்துக்கிடந்தது நினைவுக்கு வருகிறது...

அதே சரவணனும் நானும் கோவி.கண்ணனிடம் எங்கே கிழுமத்தூர் எக்ஸ்ப்ரஸ் என்று பல முறை கேட்டிருக்கிறோம் நீங்க காணாமே போனபோது...

பல பிரச்சினைகளை சந்தித்தாலும் எதையும் வெளியே காட்டிக்கொள்ளாமல் எங்கள் உதவியையும் கேட்காமல் தன்னம்பிக்கையோடு போராடி மீண்டும் உங்கள் இடத்தை பிடித்துக்கொண்ட இந்த போராட்ட குணம் எங்கிருந்தாலும் உங்களை சீரும் சிறப்புடனும் வாழவைக்கும்...

லக்கி சொல்வதை கணக்கில் கொண்டு இன்று யாரையாவது அழைக்கவும்...சாகரன் ஏற்றி வைத்த சுடர் ரெஸ்ட் எடுக்கப்போகுது...

அதனால் நல்ல தரமானவர்களை தேர்ந்தெடுத்து கொடுக்கவேண்டிய பெரிய பொறுப்பு உங்களை சேர்ந்துள்ளது...இது வரை சுடர் கைவராத தரமான பதிவர்கள் இருக்கிறார்கள்...யோசியுங்கள்...

Unknown said...

அன்பு வலையுலக அன்பர்களுக்கு இச் சுடர் எந்த பதிவரிடம் சென்றடைந்தால் நன்றாக இருக்குமென்று ஆலோசனைகள் வரவேற்க்கப் படுகின்றன.
பின்னூட்டமிட்ட அமுக புலிகளுக்கும் லக்கிக்கும் ரவிக்கும் நன்றிகள்

Unknown said...

அன்புள்ள நண்பர்களுக்கு இந்த வலையுலகில் ஒரு ஆண்டுகாலமாய் நான் எழுதி வந்திருந்தாலும் உங்களுடைய பேராதரவு மட்டுமே என்னை மீண்டும் மீண்டும் எழுதத் தூண்டுகிறது அவ்வகையில் என்னையும் இந்த வலைப்பூ உலகுக்குள் இழுத்துவிட்ட சில பதிவர்களை அழைக்க என்னம் பெயர்கள் இங்கே யாரென்று முடிவு செய்யுங்கள்
1. டோண்டு ராகவன்
2. குழலி
3.கோவி.கண்ணன்
4. கப்பிபய(ஏன் இப்ப எழுதுவதில்லை?)
5. உங்கள் நண்பன் சரவணன்
6. நம்ம வாத்தியார் சுப்பையா அவர்கள்

இவர்களில் யாரை அழைக்கலாம்

வெட்டிப்பயல் said...

மகி,
கடைசியா இந்த சுடர் நம்ம கைக்கு வரணுமாம்...

பார்த்து கேள்வி கேளுங்க...

இல்லை நீங்க வேறு ஒருவரை கேட்டு அவர் இன்னைக்கே எனக்கு அனுப்பினாலும் சரி...

வெட்டிப்பயல் said...

மகி,
என்னை கதை எழுத வெச்சதும் நீங்களும் கப்பியும் தான்...

ரெண்டு பேரும் சேர்ந்து கேட்டீங்கனாலும் சந்தோஷமாத்தான் இருக்கும்...

Unknown said...

வெட்டி இந்த கேள்விகளோட சுடரை உங்களுக்கே தருகிறேன் கேள்விகள் பதிவிலேயே அப்டேட் பன்னியிருக்கேன் ஓகேயா

வெட்டிப்பயல் said...

ஓ.கே மகி...

கேள்வி எல்லாம் சூப்பரு.
பதில் தான் எப்படி இருக்கும்னு தெரியல. முதல் கேள்வியே படு பேஜாரான கேள்வி :-)

Anonymous said...

ரஜினி தி பாஸானு எல்லாம் தெரியது,
கஜினி தி லூசுனு மட்டும் தெரியும்

Anonymous said...

ரஜினி தி பாஸானு எல்லாம் தெரியது,
கஜினி தி லூசுனு மட்டும் தெரியும்

இராம்/Raam said...

//அவரின் ஆரம்பகால கருப்புவெள்ளை படங்களை அவரின் ஆரவாரமில்லாத நடிப்பை இன்றும் ரசிப்பவன் தான் //

மகி,

நானும் தான் :)


//5. நீங்கள் எழுதுவதெல்லாம் கற்பனை கதையா இல்லை சொந்த கதைகளா? அப்படி உண்மையாய் இருக்கும்பட்சத்தில் அவர்களுக்கு இது தெரியுமா? ///

ஹி ஹி.... இப்பிடியெல்லாம் பப்ளிக்கா'லாம் கேட்கப்பிடாது பாஸ் :)

இராம்/Raam said...

//கப்பிபய(ஏன் இப்ப எழுதுவதில்லை?)//

மகி,

பயலுக்கு வீட்டிலே கல்யாணம் ஏற்பாடு பண்ணிட்டு இருக்காங்க.... :)

அய்யா அதுக்காக இப்போ சென்னைக்கு வந்திருக்காரு :)

Anonymous said...

நடத்துங்க நல்லாத்தான் இருக்கு

கப்பி | Kappi said...

//பெரியார் சிந்தனைகள் இல்லாத தமிழ் சமூகம் இருட்டுப் பாதையில் குருட்டுப் பூணையாகும்//

நச்!

அனைத்தும் சூப்பர் பதில்கள் மகி!!

Santhosh said...

பதில்கள் அனைத்தும் சூப்பர் அதிலும் ரஜினி பற்றிய கமெண்டு நல்லா இருக்கு. நீங்க எந்த பக்கம் அப்படின்னே தெரிலை :))

Anonymous said...

though one side u all
cry ,and bark at the sun
superstar the movie has
made records and records
..keeping shouting like
frogs in wel.....thanks for
speaking more about our
boss than us....
rajini veriyan