Saturday, April 21, 2007

இந்திய நாய்களும் இலங்கை "அகதிகளும்"

பொதுவாகவே நான் தமிழீழ விடுதலைப் போருக்கு எனது தார்மீக ஆதரவை எப்போதும் தெரிவித்து வந்தாலும் ஈழத்தமிழர்கள் இவ் விடயத்துள் இந்திய நிலைப்பாடு பற்றி என்ன நினைக்கிறார்கள் என எப்போதும் உண்ணிப்பாகவே கவனித்து வருகிறேன். நேற்று எனது நெருங்கிய நண்பரும் தமிழீழ விடுதலைப் போராட்டங்களை உண்ணிப்பாக கவனித்து வருபவருமான ஒரு இலங்கை தமிழரிடம் இரவு பேசிக்கொண்டிருந்த போது அவரின் நண்பர் ஒருவர் மட்டக்களப்பில் இலங்கை ராணுவம் போரிட்டு சில பகுதிகளை கைப்பற்றியது பற்றியும் அதில் ஒட்டுக்குழுவாக செயல்பட்டு வரும் கருணா ஆட்களின் பங்கு அதிகமாக இருந்ததாகவும் தெரிவித்தார் அத்தோடு மட்டுமின்றி இலங்கை அரசாங்கத்திற்கு இந்திய அரசாங்கம் இலங்கை ராணுவத்துக்கு நீண்டதூர தாக்கும் திறன் கொண்ட ஏவுகணைத் தளவாடங்களை தந்திருப்பதாகவும் ஒரு தகவலை வெளியிட்டார். மேலும் அந்த பேச்சின் இடையிடையே இந்திய மக்களை நாய்கள் நச்சுமரம் என்றும் குறிப்பிட மறக்கவில்லை.
இங்கே அவரின் இந்த பழிச்சொல்லுக்கு பதில் தேடும் முகமாக இப் பதிவை நான் வெளியிட வில்லை அவரின் பேச்சு சமயத்தில் வெளிப்பட்ட சில கேள்விகளும் அதற்கு எனது பதில்களும் மீண்டும் எனது கேள்விகளும்


1. அமைதிப் பேச்சுவார்த்தையை முன்னெடுத்து செல்லவேண்டும் என்று இந்திய அரசு கூறிக்கொண்டே ஆயுத சப்ளை செய்வது எந்த வகையில் சரி?

பிராந்திய வல்லரசு இந்தியா தனது இலங்கையூடான ஒத்துழைப்பு உடண்பாடுகளை புலிகளையோ அல்லது தமிழர்களையோ காரணம் காட்டி நிருத்திக்கொள்ள முடியாது காரணம் புலிகள் இயக்கம் ஒன்றும் அமைதி வழியில் போராடி அகிம்சை பரப்பும் குழு அல்ல.

2. தமிழர்கள் எங்களின் தொப்புள்கொடி உறவு எனச் சொல்லிவிட்டு புலிகளை அழிக்க இந்தியா உதவுவது?

இந்திரா காந்தி காலத்தில் உங்களுக்கு ஆயுதங்களும் தொலைத் தொடர்பு சாதனங்களும் பிரபாகரணுடன் பேச்சு வார்த்தையும் செய்த்து உங்களுக்கு பெருமளவில் உதவ நினைத்த இந்திய அரசுக்கு உங்கள் உதவி ஒரு மாபெரும் தலைவரை தமிழ் மண்ணில் பலிகொடுத்தது, பேச்சுவார்த்தைக்கு இந்தியா வந்த பத்மநாபா போன்ற மற்ற குழுக்களைன் தலைவர்களை போட்டுத் தள்ளியது அமைதிக்காக வந்த இந்திய ராணுவத்தை இலங்கை அரசின் உதவி நாடி பேராபத்தில் தள்ளி அவப் பெயர் வாங்கித் தந்தது.

3. இந்திய அரசின் உதவிகள் புலிகலுக்கும் ஏனைய தமிழர்களுக்கும் தேவையில்லை எனௌம் போது எதற்கு இந்தியா இலங்கை அரசுக்கு உதவ வேண்டும்?

புலிகள் ஒன்றும் முன்புபோல் கடல் தரையில் மட்டும் இல்லை ஆகாயத்திலும் இருக்கும் போது இது இந்திய இறையான்மைக்கு ஒரு பெரும் சவாலாக அமையும் ஏனென்றால் வடகிழக்கில் பெரும் படை பலம் கொண்ட கருணாவை தனிக்குழு தேடுவதாய் சொல்லி தனிமைப் படுத்தும் போதே உஙக்ளுக்கு(புலிகள்) தமிழ்ழீழ விடுதலை தங்களால் மட்டுமே சாத்தியப் பட வேண்டும் எனும் என்னம் இருப்பது தெளிவானது அதற்க்காக நீங்கள் என்ன வேண்டுமானாலும் செய்வீர்கள் என்பதை கடந்த காலங்களில் பட்ட வலிகள் இந்தியாவுக்கு இன்னும் இருப்பதை ஏன் மறந்து போகிறீர்கள் வசதியாக?

இனி எனது கேள்விகள்:

1. இந்திய அரசு சொல்லும் எந்த ஒரு திட்டத்தையும் ஏற்க முன்வராத ஒரு தீவிரவாதக் குழு பக்கத்தில் இருக்கும் போது தனது இறையான்மைக்கு கேடு விளைவிக்கும் ஒரு தீவிர வாத குழுவுக்கு ஆதரவு அளிக்குமா?(உதாரணம் பாகிஸ்தானிய தீவிரவாதிகள்)

2.இந்த அளவுக்கு இந்தியாவை நம்பாத புலிகளை நம்பி இந்தியா எந்த வகையான அமைதி முயற்ச்சியை முன்னெடுத்து சென்று இலங்கை அரசை பனியவைக்க அல்லது தனது திட்டங்களுக்கு செயல் வடிவம் கொடுக்க முடியும்?

3. அப்படியே புலிகளுக்கு உதவிசெய்வதாக வைத்துக்கொண்டாலும் அவர்கள் கூட்டிய வாளை இந்தியா மீதே சோதிக்க மாட்ட்டார்கள் என்பது என்ன நிச்சயம்? (உதாரணங்கள் ஏராளம்)

4.பிரபாகரனை துதிபாடவும் அவரை தேசிய தலைவராக்கவும் எடுக்கப் படும் முயற்ச்சிகளின் பத்தில் ஒருபங்கை ஏன் அமைதி பேச்ச்சு வார்த்தைக்கு உதவுமாறு சர்வதேச சமூகத்தை வேண்டுவதில் செலவிடக் கூடாது?








27 comments:

Anonymous said...

நீ உருப்படியாக எழுதி இருக்கும் ஒரே பதிவு இது

கொழுவி said...

தாராளமாக மிகத் தாராளமாக இந்தியா இலங்கைக்கு ஆயுதங்களை வழங்கட்டும். (ஆனால் அந்த ஆயுதங்களை வைத்தே தமிழக மீனவர்களை சுட்டுக் கொல்லாமலிருக்க ஆண்டவனைப் பிரார்த்திக்கிறேன்.)
மற்றும் படி இந்தியா கொடுக்கும் ஆயுதங்கள் இறுதியில் எங்கு போய்ச் சேரும் என்பது எங்களுக்கு தெரிந்த விடயம் தானே.. ஒரு சின்ன வேண்டுகோள். இதுவரை காலமும் புலிகளிடம் இல்லாத ஆயுதங்களாகப் பார்த்து இலங்கைக்கு கொடுக்கவும். அப்போ தான் புலிகளுக்கு புதிய ஆயுதங்கள் கிடைத்தது போல இருக்கும்.
அது சரி. சென்ற முறை பழுதாகிப் போன ராடர்களைக் கொடுத்து ஏமாற்றி விட்டதாக இலங்கை ஜனநாயக அரசியல் வாதிகள் கூச்சலிட்டார்களே.. காதில் கேட்கவேயில்லையா..

சொந்த நாட்டு மீனவர்களைக் காப்பாற்றவே நடவடிக்கை எடுக்காத அரசுகளிடம் பக்கத்து நாட்டு மக்களிடம் பரிதாபம் காட்டும் படி கேட்கும் எந்த ஒரு இலங்கைத் தமிழனையும் பார்த்து நான் ஏளனமாய் சிரிக்கிறேன்.

இந்தியர்களுக்கு..
எங்களிடம் விமானங்கள் இருப்பது குறித்துப் பயப்பட வேண்டாம். சரியா..

கொழுவி said...

//வடகிழக்கில் பெரும் படை பலம் கொண்ட கருணாவை தனிக்குழு தேடுவதாய் சொல்லி தனிமைப் படுத்தும் போதே //

அண்ணை.. (பெருமூச்சு) உங்களுக்கும் அடியும் விளங்கலை.. நுனியும் விளங்கலை.. கருணாடை படைபலத்தை ஒருக்கா சொல்லுங்க பாப்பம்..
அது சரி.. கருணாவை ஏன் விலத்தினது எண்டாவது தெரியுமோ..? ஏன் அண்ணை இந்திய இராணுவத்தில ஆரும் சட்ட விதிகளை மீறினால் சட்டதிட்டங்களுக்கு கட்டுப்பட மறுத்தால்.. சரி இருந்திட்டுப் போகட்டும் எண்டு வைச்சிருப்பியளே..
அதை தவிர..
கருணா அண்ணை தான் தான் விலகிறதா முதலில அறிவிச்சவர். அதுவும் வெளிநாட்டு செய்தி நிறுவனமொன்றிற்கு. விலகிறவரை விலத்தத் தான் வேண்டும். இதென்ன அரசியல் கூட்டணியே.. சூட்கேசுகள் கைமாற..

நீங்கள் விசயங்கள் விளங்காமல் கதைக்கிறியள். நீங்கள் மட்டுமல்ல.. தமிழ்நாட்டுக் காரர் பலரும் உப்பிடித்தான் ஒரு அறுப்பும் தெரியாமல் கதைக்கிறியள்.

அது சரி.. சிவாஜி படம் ஏனாம் வருடப் பிறப்புக்கு வரவில்லையாம். அதை பற்றி ஏதாவது எழுதுங்கோவன். படிக்க சுவாரசியமாக இருக்கும்..

Unknown said...

நன்றி அனானி ....... அடப் பாவி :))

நான் சொன்ன பதில்களில் பிழை இருப்பின் அது முற்றிலும் அந்த விசயங்களை எனக்கு சொன்ன உங்கள் இலங்கை அன்பர்களை சேரட்டும் எனது கேள்விகளுக்கு பதில் எங்கே கொழுவி அவர்களே?

இந்தியா பயப்படாமல்:)))) சிரிக்கத்தான் முடிகிறது புலிகளை அடக்க நினைப்பது இந்திய அரசு பயப்படுவாதால் என்றால் இந்தியாவே பயப்படும் புலிகள் எதற்க்காக இலங்கை அரசிடம் போராடிக் கொண்டிருக்க வேண்டும்?

Anonymous said...

//இந்தியர்களுக்கு..
எங்களிடம் விமானங்கள் இருப்பது குறித்துப் பயப்பட வேண்டாம். சரியா//

ஐயையோ... நாங்கெல்லாம் இங்க பயந்து ஜன்னில அப்பிடியே துடிச்ச்ச்ச்சுகிட்டு இருக்கோம்..

இவரு வந்துட்டாரு தைரியம் சொல்ல..

போங்கப்பூ போய் உருப்படியா எதுனா வேலையப் பாருங்க..

அப்படியே உங்க ஹீரோ பிரபாகரன் வச்சிருக்கிற மிக்-35, F16 போன்ற லட்சக்கனக்கான விமானங்கள் கொண்ட படையை பத்திரமா பாத்துக்கச் சொல்லுங்கப்பூ..

கொழுவி said...

புலிகளிடம் விமானங்கள் இருப்பது தமிழக அணுஉலைகளுக்குப் அச்சுறுத்தல் என யாரோ தமிழக பதிவர்தான் முன்பொரு தடவை எழுதினவர். அவ்வாறான அச்சங்கள் தேவையில்லையெனத்தான் எழுதினேன். சரி.. இந்தியா இலங்கைக்கு ஆயுதங்கள் கொடுப்பதை அரசியல் காரணங்களால் விளக்குங்கள் பார்க்கலாம்.

சரி புலிகளை விடுங்கள்.. புலிகள் அழிக்கப் பட வேண்டியவர்கள் என்றே வைத்துக் கொள்ளுங்கள். இலங்கை அரசு தமிழரை அழித்தொழிப்பதற்கு தனது ஆயுத வளங்களைப் பயன்படுத்துகிறது என்பதையாவது அறிவீர்களா..? ஆக இந்தியா அது தெரிந்தும் தனது பிராந்திய வல்லரசு நலன்களுக்காக தமிழரை அழித்தொழிப்பதற்கு உடன்படுகிறதா..?

புலிகளை அழிக்க இந்தியா ஆயுத வளங்களை கொடுக்கிறது என எடுத்துக் கொள்ளலாமா..?

அவ்வாறாயின் ஏன் நேரடியாகப் போய் புலிகளைக் கூடாது..? ஒரு வல்லரசு என்ற வகையில் அது இன்னும் இலகுவானதே..

இந்தியா ஆயுதங்கள் கொடுப்பது பற்றி கவலையெதுவும் இல்லை. நான் ஏற்கனவே சொன்னது போல சண்டைக் களங்களில் அது போய்ச் சேரப்போகும் இடம் வடிவா எமக்குத் தெரியும். தவிர உலக ஆயுதச் சந்தையில் வேறும் பல இடங்களில் ஆயுதம் வாங்கலாம். இந்த இணைப்பில் பதிவை பார்க்கவும்.. நகைச்சுவைப் பதிவுதான். ஆனால் சில சேதிகளைச் சொல்லும்

http://koluvithaluvi.blogspot.com/2006/09/blog-post_21.html

கொழுவி said...

1. இந்திய அரசு சொல்லும் எந்த ஒரு திட்டத்தையும் ஏற்க முன்வராத ஒரு தீவிரவாதக் குழு பக்கத்தில் இருக்கும் போது தனது இறையான்மைக்கு கேடு விளைவிக்கும் ஒரு தீவிர வாத குழுவுக்கு ஆதரவு அளிக்குமா?(உதாரணம் பாகிஸ்தானிய தீவிரவாதிகள்)

புலிகளுக்கு ஆதரவளிக்க வேண்டாம். எனினும் இந்தியா ஆரம்பத்தில் தந்த பொருளாதார உதவிகளுக்கு நன்றி. பின்பொரு காலத்தில் திருப்பித் தரப்படும்:)ஆனால் அப்பாவித் தமிழ் மக்கள் கொல்லப்படுவதில் இலங்கை அரசு மீது ஏன் அழுத்தம் தர முடியாது என ஒரு கேள்வி இருந்தது. ஆனால் தன் சொந்த நாட்டு மீனவர்கள் கொத்துக் கொத்தாய் சுட்டுக்கொல்வதையே கண்டும் காணாமலும் இருக்கும் ஒரு கண்டனம் கூட தெரிவிக்க முடியாமல் தன் பிராந்திய நலன்களைப் பேணும் அரசிடம் இலங்கைத் தமிழர் கொல்லப்படுவது குறித்து கரிசனை காட்டும் படி கேட்பது எம்மை நாமே முட்டாளாக்கும் செயல்.

2.இந்த அளவுக்கு இந்தியாவை நம்பாத புலிகளை நம்பி இந்தியா எந்த வகையான அமைதி முயற்ச்சியை முன்னெடுத்து சென்று இலங்கை அரசை பனியவைக்க அல்லது தனது திட்டங்களுக்கு செயல் வடிவம் கொடுக்க முடியும்?
புலிகளுக்கு எதிரான போரை இலங்கை தாராளமாச் செய்யட்டும். அதற்கு இந்தியா தாராளமாக உதவட்டும். அதில் இலங்கை அரசால் காரணமேதுமில்லாமல் கொல்லப்படும் அப்பாவி மக்கள் மீது அக்கறை கொண்டு இலங்கை அரசு மீது அழுத்தம் கொடுக்க என்ன தடை..? மக்களுக்கு பாதிப்பில்லாத வகையில் புலிகளை அழிக்க இலங்கை அரசுக்குப் பயிற்சியாவது கொடுக்கலாமே..?


3. அப்படியே புலிகளுக்கு உதவிசெய்வதாக வைத்துக்கொண்டாலும் அவர்கள் கூட்டிய வாளை இந்தியா மீதே சோதிக்க மாட்ட்டார்கள் என்பது என்ன நிச்சயம்? (உதாரணங்கள் ஏராளம்)

கண்டிப்பாக.. சோறு போட்டு வளர்த்தார்கள் என்பதற்காக விடும் சொறிச் சேட்டையளைப் பொறுத்தக்கொண்டிருக்க வேண்டும் என்பதில்லை. ஒரு பேச்சுக்கு ஏதோ ஒரு காரணத்திற்காக வங்காளதேசத்துடன் போர் தொடுக்கிறீர்கள் என வைத்துக் கொள்ளுங்கள். அதற்கு வங்களா தேசம்.. அடடா இவுங்க தான் நமக்கு நாடு வாங்கி தந்தவங்க.. அதனாலை நாம வாலைச் சுருட்டிட்டு இருக்கணும் என்று நினைப்பாங்களா..?

4.பிரபாகரனை துதிபாடவும் அவரை தேசிய தலைவராக்கவும் எடுக்கப் படும் முயற்ச்சிகளின் பத்தில் ஒருபங்கை ஏன் அமைதி பேச்ச்சு வார்த்தைக்கு உதவுமாறு சர்வதேச சமூகத்தை வேண்டுவதில் செலவிடக் கூடாது?

கடந்த ஐந்து வருடம் முழுதும் என்ன நடந்தது..? என்னைப் பொறுத்தவரை தமிழ்மக்கள் இலங்கை அரசாங்கத்தால் அநியாயமாக் கொல்லப் படுகிறார்கள் என்பதனை முடிந்த வரை சர்வதேச சமூகத்திற்கு சொல்லியாயிற்று. அவர்களும் உணர்ந்து கொள்கிறார்கள். ஆனால் இந்தியா உட்பட எந்த நாடும் தனக்கு இலாபம் வராத வரையில் எந்த நடவடிக்கையிலும் ஈடுபடப் போவதில்லை.

அழுதாலும் பிள்ளையை அவளே பெற வேண்டும். இந்தியாவிடமோ பிற நாடுகளிடமோ உதவி கேட்கும் நிலையில் ஈழத்தமிழன் இல்லை என்பதை பெருமையுடன் சொல்வேன். ஆனால் ஈழத்தில் என்ன நடக்கிறது என்பது அனைத்து நாடுகளுக்கும் எடுத்துச் சொல்லப்பட வேண்டியவை.

மிதக்கும்வெளி said...

உங்களிடமிருந்து இப்படியொரு கேனத்தனமான பதிவு வருமென்று நான் எதிர்பார்க்கவில்லை. இந்திய ராணுவநாய்கள் அன்னியதேசத்திற்கு மட்டுமில்லை, உள்நாட்டு மக்களின் மீதும் கடுமையான அடக்குமுறையைக் கட்டவிழ்த்துவிடத் தயங்காதவர்கள். அவர்களுக்கு இவ்வளவுதூரம் நீங்கள் வக்காலத்து வாங்கியிருக்கத் தேவையில்லை.

Anonymous said...

தயவுசெய்து இந்திய நாய் என்ற சொல்லை உடனே நீக்கவும். இந்திய மக்கள் நாய்கள் என்றால் நாங்களும் நாய்கள் தான். ஏனெனில் நாங்கள் உங்கள் சகோதரர்கள். இந்தச் சொல்லைப் பயன்படுத்திய அன்பர் இந்தியா எங்களூக்கு செய்த உதவிகளை மறந்தவர். இந்தியர்களில் தான் அன்னை இந்திரா, எம்.ஜீ.ஆர், வை.கோ. ஐயா நெடுமாறன், சுப. வீ இன்னும் கோடிக்கணக்கான நல்ல உள்ளங்கள் எங்களை ஆதரித்தன.

நான் ஒரு ஈழத்தமிழன். மிகுந்த வெட்கமும் வேதனையும் அடைகின்றேன்.
யாரோ ஒரு அறிவிலி சொன்னால் நீங்கள் ஒரு இழி சொல்லை பதிவில் போடலாமா?. தயவுசெய்து அந்த அறிவிலியின் நட்பைத் துண்டிக்கவும்.

அனைத்து இந்திய மக்களிடமும் மன்னிப்பும் கேட்கின்றேன்.


ஒரு ஈழத் தமிழன்.

Anonymous said...

தயவுசெய்து இந்திய நாய் என்ற சொல்லை உடனே நீக்கவும். இந்திய மக்கள் நாய்கள் என்றால் நாங்களும் நாய்கள் தான். ஏனெனில் நாங்கள் உங்கள் சகோதரர்கள். இந்தச் சொல்லைப் பயன்படுத்திய அன்பர் இந்தியா எங்களூக்கு செய்த உதவிகளை மறந்தவர். இந்தியர்களில் தான் அன்னை இந்திரா, எம்.ஜீ.ஆர், வை.கோ. ஐயா நெடுமாறன், சுப. வீ இன்னும் கோடிக்கணக்கான நல்ல உள்ளங்கள் எங்களை ஆதரித்தன.

நான் ஒரு ஈழத்தமிழன். மிகுந்த வெட்கமும் வேதனையும் அடைகின்றேன்.
யாரோ ஒரு அறிவிலி சொன்னால் நீங்கள் ஒரு இழி சொல்லை பதிவில் போடலாமா?. தயவுசெய்து அந்த அறிவிலியின் நட்பைத் துண்டிக்கவும்.

அனைத்து இந்திய மக்களிடமும் மன்னிப்பும் கேட்கின்றேன்.


ஒரு ஈழத் தமிழன்.

Anonymous said...

யாரோ ஒருவர் கூறியதை ஒட்டுமொத்த ஈழத்தமிழரின் கருத்தாக நீங்கள் நோக்குவது வேதனையை தருகிறது, தனது நலன் இல்லாது இந்தியா ஒருபோதும் ஈழத்தமிழருக்கு உதாவாது, ஏன் தமிழநாட்டு தமிழருக்கே உதாவது,இந்திய இலங்கையையின் கூட்டால் இந்தியாவுக்கு வர இருக்கும் நலனை விட இந்திய மீனவரின் உயிர்கள் ஒன்றும் பெரிதில்லை, இதை தெளிவாக் ஆந்தோனியே கூறிவிட்டார், ஈழத்தமிழருக்கு தமது கைகள்தான் எப்போது உதவி, இவ்வளவு வலைபோக்கலையும் இணையத்தளங்களையும் படிக்கும் உங்களாளேயே கருணாவின் படை பலம், நோக்கம் பற்றி அறியமுடியாமல் இருப்பது வேடிக்கையாக இருக்கிறது, அப்படி என்றால் சாதாரண மக்களை பற்றி சொல்லத்தேவையில்லை. யாருக்கு உதவி செய்கிறீர்களோ இல்லையோ யதார்தத்தை புரிந்து கொள்ளபபாருங்கள்.

வன்னியன் said...

ஐயா மகேந்திரா,
இந்தியா என்ன தீர்வு கொடுத்தது, அதிலிருந்த ஈழத்தமிழரின் நலன்கள் என்ன என்பதை சிறுகுறிப்பாகவேனும் தரமுடியுமா? அத்தீர்வை ஏன் ஏற்கமுடியாதென்பதை வெளிப்படையாகவே சொல்லியாயிற்று. விருப்பமின்றி கட்டாயப்படுத்தி இணங்கவைக்கப்பட்ட தீர்வுவிடயத்தில் இந்தியா சொன்னதை நடைமுறைப்படுத்தும்படி கோரிக்கை வைத்துத்தான் திலீபன் என்ற போராளி நீர்கூட குடிக்காது உண்ணாநோன்பிருந்து வீரச்சாவடைந்தான். புதிதாக எந்தக் கோரிக்கையும் திலீபனால் வைக்கப்படவில்லை. இந்தியா அரசு தான் செய்வதாக வாக்குறுதியளித்தவற்றை நடைமுறைப்படுத்தும்படி மட்டுமே அக்கோரிக்கை இருந்தது. அந்தச்சம்பவமாவது தெரியுமா?

நான் தருவதை நீ ஏற்கத்தான் வேணும் என்ற இந்திய ஆணவமும் திமிரும்தான் "இந்திய - ஈழத்தமிழர்" பிரச்சினையின் அடிப்படையே.

நீங்கள் நாலாவதாக கேட்கும் கேள்வியில் தலைமைத் துதி கேள்விக்குட்படுத்தப்பட வேண்டியதே. அது அளவுக்கு மிஞ்சி இருக்கிறதென்பதும் உண்மையே. ஆனால் சமாதானப் பேச்சுவார்த்தைக்கு உதவும்படி சர்வதேசத்தை சரியாகக் கேட்கவில்லையென்று சொல்வதில் உங்கள் அரசியல் வறுமை நன்றாகத் தெரிகிறது. இலங்கையில் என்ன நடக்கிறதென்று உங்களுக்குத் தெரியாது; ஆனால் சர்வதேசத்துக்கு நன்றாகத் தெரியும். அரசு அறுபது பள்ளிமாணவிகளை குண்டுவீசிக் கொன்றால், 'இரு தரப்பும் பேச்சுக்கு வாருங்கள்' என்று அறிவிப்பைத்தான் சர்வதேசம் விடுக்கிறது. இலட்சக்கணக்கான மக்களுக்கு உணவு, மருந்துப் பொருட்களைத் தடைசெய்து நாளாந்தம் எறிகணைவீச்சு, விமானக்குண்டுவீச்சு மூலம் கொத்துக்கொத்தாக சிறிலங்கா அரசாங்கம் கொன்றுகொண்டிருந்தபோது (வாகரையில்) சர்வதேசம் சொன்ன தீர்வு என்னவென்றால், அனைவரையும் சிறிலங்கா அரசாங்கத்தின் கட்டுப்பாட்டுப் பகுதிக்கு இடம்பெயருங்கள் என்பதே.
புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்னும் நடைமுறையிலிருக்கிறது என்று சொல்லிக்கொண்டு அதற்கு முரணாக கணிசமான நிலப்பகுதிகளை ஆக்கிரமித்துள்ளது சிறிலங்கா இராணுவம். இதையெதிர்த்து எந்தவொரு நாடாவது அறிக்கை விட்டதைக் காட்டமுடியுமா உங்களால்?
அப்படி இராணுவம் ஆக்கிரமித்தது சர்வதேச நாடுகள் ஒன்றுக்குக்கூடத் தெரியாது என்று நீங்கள் நம்பிக்கொண்டிருப்பதும் இங்குவந்து வலைப்பதிவில் எழுதுவதும் வடிகட்டின முட்டாள்தனமாக இல்லையா?

மூதூர் நகர் மீது புலிகள் தாக்குதல் நடத்திய சிலமணி நேரத்துள் எத்தனை கண்டனங்கள் வந்தன? நடுவர் என்று சொல்லப்படும் நோர்வேகூட, 'உடனடியாக புலிகள் பழைய நிலைகளுக்குத் திரும்பிப் போகவேண்டும்' என்று அறிக்கைவிட்டது. மூன்று நாட்களுள் புலிகள் தமது பழைய நிலைகளுக்குத் திரும்பினர். ஆனால் அதேபோல் சிறிலங்கா இராணுவம் நிலப்பரப்பை ஆக்கிரமிக்கத் தொடங்கி இப்போது எட்டுமாதங்களாகிவிட்டன. அன்று கத்திய எவராவது சிறிலங்கா அரசபடையை பழைய நிலைகளுக்குத் திரும்பும்படி ஒருசொல்தானும் சொன்னதைக் காட்ட முடியுமா? நடுவர்கள் என்று சொல்லப்படும் நோர்வேயாவது இதுதொடர்பில் ஓர் அறிக்கையாவது வெளியிட்டதுண்டா?
நோர்வேக்கு இன்றுவரை சிறிலங்கா இராணுவம் நிலஆக்கிரமிப்பை மேற்கொண்ட விசயம் தெரியாது என நீங்கள் நம்பிக்கொண்டிருப்பதும் இங்குவந்து வலைப்பதிவில் எழுதுவதும் வடிகட்டின முட்டாள்தனமாக இல்லையா?

சமாதானப் பேச்சுக்கு உதவும்படி சர்வதேசத்தை யார் கேட்கவில்லை? அப்ப இவ்வளவுநாளும் நடந்தவை என்ன? நாங்கள் கேட்டால் அவர்கள் உடனே தந்துவிடுவார்களா? நடப்பவை எவையுமே சர்வதேசத்துக்குத் தெரியாதா? கொடுங்குளிரில் எங்கள் மக்கள் செய்த போராட்டங்கள்தான் எத்தனை? புலம்பெயர் நாடொன்றில் நாற்பதாயிரம், ஐம்பதாயிரம் என்று மக்களை ஒருங்கிணைத்துப் பேரணி நடத்து என்ன அவ்வளவு சுலபமா? ஈழத்தமிழர் இவையெதையும் செய்யவில்லை? சர்வதேசம் எதையுமே எங்களுக்குச் சார்பாபகச் செய்யாது என்பதை நூறுவீதமும் விளங்கிக்கொண்டும்கூட இன்றும் வேலைவெட்டியை விட்டுவிட்டு முழுவீச்சாகப் போராட்டங்கள் நடக்கின்றன. சர்வதேசமும் சேர்ந்து தயாரித்து எல்லோரினதும் ஒப்புதலுடன் கைச்சாத்தாகிய 'சுனாமி புனரமைப்புக் கூட்டமைப்பு' என்ற அமைப்புக்கு என்ன நடந்தது என்பதை எங்காவது தேடிப் படித்தறிந்துகொள்ளுங்கள். இதில் சர்வதேசம் நேரடியாக முன்னின்ற அந்த அமைப்பைத் தோற்றுவித்தது. மனிதப்பேரவலம் ஒன்றில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவசரமாகச் செய்யப்படவேண்டிய புனர்வாழ்வு நடவடிக்கைகளைச் செய்வதைக்கூட சிறிலங்கா அரசு ஏற்கவில்லை. தமிழர்பகுதிகளுக்கு எந்த உதவியும் அளிக்கப்படாமல், நீங்கள் சொல்லும் 'சர்வதேசத்தின்' மேற்பார்வையில் அமைக்கப்பட்ட கூட்டமைப்பை குப்பையில் போட்டது. இந்த விடயத்தில் நீங்கள் சொன்ன சர்வதேசம் என்ன செய்தது? சிறிலங்கா அரசாங்கம் சுனாமிப் பொதுக்கூட்டமைப்பை சட்டரீதியில் தடைசெய்து அதைச் செயலற்றதாக்கிய கொடுஞ்செயல் சர்வதேச நாடுகள் எவற்றுக்கும் தெரியாதென்றும் அதை ஈழத்தமிழர்கள் ஒருவருக்கும் சொல்லாமல் இரசகசியமாக ஒளித்து வைத்துள்ளார்கள் என்றும் நீங்கள் நினைத்துக்கொண்டு இப்படி அலட்டுவது சரியில்லை நண்பரே.

இறுதியாக,
ஈழத்தமிழரின் போராட்டத்துக்கு ஆதரவாளன் என்றபோர்வையில் இவ்வளவுநாளும் காலங்கடத்திவிட்ட உங்களிடமிருக்கும் அசட்டுத்தனமான விளக்கத்தையும் வாதத்தையும் வெளிக்கொணர்ந்த வகையில் இவ்விடுகைக்கு நன்றி.

தமிழர்கள் கொல்லப்பட்டாலும் பிரச்சினையில்லை, இந்தியா சிறிலங்காவுக்கு தொடர்ந்து ஆயுதங்கள் கொடுக்கவேண்டும் என்று எழுதிய வேறுசில பதிவர்களின் கூட்டணியில் (ஆனால் இவர்களுக்கும் உங்களுக்கு ஜென்மத்துப் பகையென்பது வேறு விசயம்) நீங்களும் இருப்பது நகைமுரண். 'கூலிவேலை செய்யப்போயிட்டு தனிநாடு கேட்பது தப்பில்லையா?' என்று முன்பொருமுறை எழுதிய பதிவருக்கிருக்கும் விளக்கமும் உங்களுக்கிருக்கும் விளக்கமும் ஒன்றுதான் போலும்.

அப்படியில்லாவிட்டால், இந்தியர்களை 'நாய்கள்' என்று ஈழத்தமிழர் ஒருவர் சொன்னதாலேயே இப்படியோர் இடுகை வந்திருக்கக்கூடும்.

Anonymous said...

1. பாலஸ்த்தீன‌த்தை இந்தியா ஆதரிக்கிறது. அது என்ன காந்திய வழியிலா போராடுகிறது?. அவாமி லீக், முக்திபாகினிக்கு இந்தியா ஆயுதங்கள் வழங்கியது. என்ன சொல்றீங்க சாமி

2. அமைதிப்படை என்ற பெயரில் வந்த இந்திய இராணுவம் 10 ஆயிரம் மக்களின் மரனத்திற்கு காரணமாகியது. இதன் பின்னர்தான் ராஜீவின் கொலை நிகழ்ந்தது. முன்பு அல்ல.


ஈழத் தமிழன் பாவம் சிங்களரிடம் அடிவங்கிச் சாகிறான். அதில் நம்ம அரசியல்வாதிகள்அரசியல் நடத்திக்கொண்டு இருக்கின்றார்கள். அவங்களை நீ ஏன் வம்புக்கு இழுக்கிறாய் சாமி?

அற்புதன் said...

//இனி எனது கேள்விகள்:

1. இந்திய அரசு சொல்லும் எந்த ஒரு திட்டத்தையும் ஏற்க முன்வராத ஒரு தீவிரவாதக் குழு பக்கத்தில் இருக்கும் போது தனது இறையான்மைக்கு கேடு விளைவிக்கும் ஒரு தீவிர வாத குழுவுக்கு ஆதரவு அளிக்குமா?(உதாரணம் பாகிஸ்தானிய தீவிரவாதிகள்)//

எமது விடுதலையை நாம் தான் பெற முடியும்.எமக்கு எது தீர்வு என நாம் தான் முடிவெடுக்க முடியும்.இந்தியாவுக்கு உவப்பான தீர்வு எமக்கும் சரியென எவ்வாறு சொல்வீர்கள்.பாக்கிஸ்தான் சொல்லும் தீர்வை நீங்கள் காஸ்மீரத்தில் நடைமுறைப் படுத்துவீர்களா? எம்மைப் பொறுத்தவரை தமிழீழமே எமக்கான தீர்வு.வேறு எந்தத் தீர்வையும் எமக்கு சிறிலங்கா அரசு விட்டு வைக்கவில்லை.இந்தியா கூட இப்போது அதனை உணர்ந்துள்ளது.


//2.இந்த அளவுக்கு இந்தியாவை நம்பாத புலிகளை நம்பி இந்தியா எந்த வகையான அமைதி முயற்ச்சியை முன்னெடுத்து சென்று இலங்கை அரசை பனியவைக்க அல்லது தனது திட்டங்களுக்கு செயல் வடிவம் கொடுக்க முடியும்?//

இந்தியா எந்த முயற்ச்சியையும் எடுக்க வேண்டிய அவசியம் இல்லை.ஒரு பக்கத்தில் சிறிலங்காவிற்கு எந்த இராணுவ உதவியும் வழங்கவில்லை என்று சொல்லிக் கொண்டே வெடி குண்டுகளையும் ராடர்களையும் கப்பல்களையும் வழங்கி வரும் வஞ்சனையான போக்கை மாற்றட்டும்.தனது மக்களையே ஏமாற்றிக் கொண்டு இந்தியர்களைச் சுட்டுத் தள்ளும் சிறிலங்கா கடற்படைக்கே ஆயுதங்களை வழங்கும் நாடாக இந்தியா இருப்பது தான் வேதனையான விடயம்.

//3. அப்படியே புலிகளுக்கு உதவிசெய்வதாக வைத்துக்கொண்டாலும் அவர்கள் கூட்டிய வாளை இந்தியா மீதே சோதிக்க மாட்ட்டார்கள் என்பது என்ன நிச்சயம்? (உதாரணங்கள் ஏராளம்)//

இந்திய தேசிய நலங்களுக்கு எதிராக என்றுமே புலிகள் செயற்ப்பட்டதில்லை,இந்தியா தமிழீழத்தின் தேசிய நலனுக்கு முரணாகச் செயற்படாத வரை இது நிச்சயம்.இந்தியா மீது போர் தொடுக்க எமக்கு எந்தக் காரணமும் இல்லை,இந்தியா எம் மீது போர் தொடுக்காது இருக்கும் வரை.

//4.பிரபாகரனை துதிபாடவும் அவரை தேசிய தலைவராக்கவும் எடுக்கப் படும் முயற்ச்சிகளின் பத்தில் ஒருபங்கை ஏன் அமைதி பேச்ச்சு வார்த்தைக்கு உதவுமாறு சர்வதேச சமூகத்தை வேண்டுவதில் செலவிடக் கூடாது?//

யார் தேசியத் தலைவர் என்பதை தமிழீழத்தவரே தீர்மனிக்கிறார்கள்,இந்தியாவோ, நீங்களோ அல்ல.ஐந்து வருடமாக பேசிப் பயன் இல்லை என்பது தெரிந்தும், இனிப் பேசி என்னத்தைக் காணப்போகிறோம்.இந்தியா நினைத்தால் சிறிலங்கா அரசின் மீது பொருளாதரத் தடைகள் ஏற்படுத்தி சிறிலங்கா அரசை ஒரு அரசியற் தீர்வின் பக்கம் வரும் படி நிர்ப்பந்தித்து இருக்கலாம்.ஆனால் இந்திய அரசு அதனைச் செய்யவில்லை மாற்றாக சிறிலங்கா அரசு இராணுவ ரீதியாத் தீர்வைக் காணட்டும் என்று அதற்கு ஆயுதங்களை சப்ளை செய்தது.இங்கே சமாதான வழியில் தீர்வைக் காணமால் சிறிலங்கா அரசிற்க்கு துணை நின்றல்லாவா இந்தியா செயல் ஆற்றி உள்ளது தோழரே?

உங்கள் தலைப்பு இந்தியச் சகோதரர்களை அவமானப்படுத்தும் வன்ணம் உள்ளது.இதனை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்.அதனை ஒருவர் உங்களுக்குச் சொன்னார் என்றால், அவரை உங்கள் நண்பர் என்று கூறுவதற்கு வெட்கப் படுங்கள்.

இந்தியா விடும் தவறுகளுக்காக நாங்கள் எமது தமிழ் நாட்டுத் தமிழ்ச் சகோதரர்களை நாய்கள் என்று சொல்லப் போவதில்லை ,சகோதரரே.

Anonymous said...

நிழலாடும் நினைவுகள் 2


1996ஆம் ஆண்டு ஆனி மாதம் மத்திய சென்னையில் ஒரு காலை நேரம் அவசர அவசர மாக வெளிக்கிட்டு சில பைகளில் நான் தயார் படுத்தி வைத்திருந்த பொருட்களையும் எடுத்துக் கொண்டு தயாராய் வீட்டு வாசலில் காத்து நின்ற ஒட்டோவில்ப் போய் ஏறிய படி ஓட்டோக்காரனிடம் வரசளவாக்கம் போங்க என்றுவிட்டு அமர்கிறேன். எனக்குள் ஒரு இனம் புரியாத சந்தோசம் ராணியக்காவை பாக்க போறன்.

இன்றைக்கு சுமார் 8 ஆண்டுகளிற்குப் பிறகு ராணியக்காவை பார்க்க போகின்ற மகிழ்ச்சி எனக்குள். இப்ப எப்பிடி இருப்பார்? என்று எனக்குள் சில கற்பனைகள்!! எனது மனதில் 8 ஆண்டுகளிற்கு முன்பு பார்த்த ராணியக்காவின் உருவத்திற்கு ஏற்றதாய் சில உடுப்புகள் அவரிற்காக வாங்கியிருந்தேன். ராணியக்கா எனது சொந்த அக்கா இல்லை ஏன் சொந்தம் கூட இல்லை .


ராணியக்காவின் தாய் தந்தை ஈழத்தில் வேறு ஒரு ஊரை சேர்ந்தவர்கள் அவர்கள் சாதி மாறி காதலித்து கலியாணம் செய்ததால் அவர்கள் உறவினர்களால் பிரச்சனை என்று எங்கள் ஊரிலிருந்த ஒருவரின் உதவியுடன் எங்கள் ஊரில் இருந்த வெறும் காணி ஒன்றில் வந்து குடிசை போட்டு வாழத் தொடங்கினார்கள். தந்தை இலங்கை போக்குவரத்துச் சபையில் சாரதியாக இருந்தவர். அவர்களின் மூத்தமகள்தான் ராணியக்கா பின்னர் இரண்டு மகன்கள்.

நாட்டுப் பிரச்சனைகள் காரணமாக யாழ் குடாவில் இலங்கை போக்குவரத்துச் சபையின் சேவைகள் இல்லாது போனதால் ராணியக்காவின் தந்தையின் வேலையும் பறி போக அவர்களது குடும்பம் மிகவும் பொருளாதார பிரச்னையில் விழுந்தது. அப்போது பத்தாம் வகுப்பு படித்து கொண்டிருந்த ராணியக்காவும் தனது படிப்பை இடை நிறுத்தி விட்டு குடும்ப பாரத்தை சுமக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. தந்தை பின்னர் தூர இடங்களிற்குப் போய் சாமான்கள் வாங்கி வந்து ஊர்ச் சந்தையில் விப்பார் .ராணியக்காவின் தாயர் துணிகள் தைத்து குடுப்பவர்.


ராணியக்காவும் தாயாரிடம் தையல் பழகிக் கொண்டு ஒரு மிசினும் வாங்கி ஊரில் உள்ளவர்களிற்கு உடுப்புகள் தைத்து குடுத்தும் மற்றும் வீட்டை சுற்றியள்ள காணியில் தோட்டம் ஆடு மாடு கோழி வளர்த்தல் என்று என்னென்ன வகையில் பொருளாதாரத்தை பெறலாம் என்று யோசித்து யோசித்து செய்தார். அத்துடன் தம்பியர் இருவரையும் கவனமாகப் படிப்பித்து அவர்களை ஒரு நல்ல நிலைக்கு கொண்டு வருவதும் அவரது எதிர் கால கனவில் ஒன்றாய் இருந்தது.
அவரது மூத்த தம்பி ரமணன் எனது பாடசாலை நண்பன். அவனுடன் அவர்களது வீட்டிற்குப் போய் வரத் தொடங்கிய எனது நட்பு காலப்போக்கில் என்னை அவர்களது குடும்பத்தின் ஒருவன் போல ஆக்கிவிட்டது.

நான் எப்போதும் கத்திக் கல கலப்பாய் கதைப்பதால் ராணியக்கா எனக்கு செல்லமாய் வைத்த பட்ட பெயர் காகம். நானும் அவரை அவர் குள்ளமாய் இருந்ததால் உரல் குத்தி என்று கூப்பிடுவேன். மாலை வேளைகளில் நானும் ரமணனும் வெளியில் போகும் போது தோட்டத்தில் வேலை செய்து கொண்டு நின்றபடி ராணியக்கா கூப்பிடுவார். பெடியள் எங்கை போறியள் அந்த ஆலமரத்திலை ஏறி ஆடு மாட்டுக்கு கொஞ்சம் குளை வெட்டித் தந்திட்டு போங்கோடா....... என்பார் .

சரி பிறத்தாலை கூப்பிட்டிட்டாள் இனிப் போற காரியம் உருப்பட்ட மாதிரித்தான் என்று நான் சலித்துக் கொள்ள . ஓமடா உங்கடை முக்கிய அலுவல் என்ன எண்டு எனக்குத் தெரியும் தானே உதிலை சந்தியிலை போய் நிண்டு போற வாற பெட்டையளை பார்த்து வீணி வடிக்கப் போறியள் அதை விட பிரயோசனமா குளையாவது வெட்டலாம் தானே என்பார். போடி உரல் குத்தி நீ பனையிலையே பாஞ்சு பாஞ்சு ஏறுவியே நீயே ஏறி வெட்டடி என்று விட்டு நாங்கள் சைக்கிழை மிதிக்கவும்.


நில்லடா காகம் என்ற படி தோட்டத்தில் உள்ள மண்ணாங்கட்டிகளை பொறுக்கி எங்களை நொக்கி எறிந்த படி இரண்டு பேரும் இனி வீட்டுப் பக்கம் வந்து பாருங்கோ இருக்கு இரண்டு பேருக்கும் என்றபடி தனது வேலையைத் தொடர போய் விடுவார் . இப்படியே ஒவ்வொரு நாளும் எங்களுக்குள் சின்னச்சின்ன சீண்டல்கள் சண்டைகள் என்று தொடர்ந்து கொண்டேயிருக்கும். ஆனாலும் ஒரு நாள் கூட உண்மையாய் சண்டை பிடித்தது கிடையாது.


ராணியக்கா குள்ளமாக இருப்பார். ஆனால் கடின உழைப்பினால் உருண்ட உறுதியான தேகம் நீண்ட தலைமுடி. அவர் தனது தலை முடியை பாராமரிக்கவே ஒவ்வொரு நாளும் அரை மணித்தியாலமாவாவது செலவிடுவார். ஒவ்வொரு நாளும் சம்போ வைத்து கழுவி பின்னர் தலை முடியை ஒரு கதிரையில் பரப்பிவிட்டு அதற்கு சாம்பிராணி புகை போடுவார். அப்பொதும் சரி வேறு வேலைகள் செய்யும் போதும் சரி ராணியக்கா புதிய வார்ப்பு பட பாடலான “இதயம் போகுதே .....” என்கிற பாடலைப் பாடிக்கொண்டே வேலைகளை செய்வார்.

அவரிற்குள் ஒரு காதல் இருந்ததா? யாரையாவது காதலித்தாரா?? என்று ஏதும் எனக்குத் தெரியாது அந்த பாடல் ஏன் அவருக்குப் பிடிக்கும் என்று நான் இது வரை கேட்டதில்லை.
சரி இன்றுதான் அவரைப் பார்க்க போகிறோமே கேட்டால்ப் போச்சு என்றபடி ராணியக்காவின் நினைவகளில் மூழ்கிப் போயிருந்த என்னை சார் மணி குடுங்க ஆட்டோக்கு பெற்றோல் போடணும் எண்டு நினைவுகளைக் கலைத்தான். அவனிற்கு ஒரு அம்பது ருபாய் தாளை எடுத்து நீட்டி விட்டு ராணியக்காவை பற்றிய நினவகளில் மீண்டும் மூழ்கிப் போனேன்.


இப்படியே சிரிப்பும் சந்தோசமுமாய் இருந்த குடும்பத்தில் ஈழத்தின் பல குடும்பத்தில் விழுந்த இடியை போலவே இவர்களது குடும்பத்திலும் இந்தியப் படை காலத்தின் ஒரு நாள் 1988ஆம் ஆண்டு தை மாதம் ஒரு இரவு ஒரு இடி விழுந்தது. அன்று இரவு வழமை போல ஊரடங்குச் சட்டம் வீதி ரோந்து வந்த இந்திய இராணுவம் என்ன நினைத்ததோ ராணியக்காவின் வீட்டிற்கள்ப் புகுந்து படுத்திருந்த அவர்களை எழுப்பி எல் ரி ரி தெரியுமா??

என்று மிரட்டினார்கள் சுமார் பத்து பேரளவில் வீட்டிற்குள் புகுந்து சாமான்கள் எல்லாவற்றையும் கிழறிக்கொண்டிருக்க ஒரு சீக்கியன் ரமணனனை யு ஆர் எல்ரி ரி என்று கேட்க அவனும் நோ சேர் நோ என்றவும் அவன் ரமணனை துப்பாக்கி பிடியால் தாக்கவே அதைப் பாத்துக் கொண்டிருந்த ராணியக்கா பொறுக்க முடியாமல் இருவருக்கும் இடையில் புகுந்து அந்த சீக்கியனிடம் தனக்கு தெரிந்த ஆங்கிலத்தில் அவன் எல் ரி ரி இல்லை படிக்கிற மாணவன் என்றவும்.

அந்த சீக்கியன் ராணியக்காவின் தலை மயிரை பிடித்து இழுத்து மறு பக்கம் தள்ளி விட்டு ரமணனனை தொடர்ந்து தாக்க ராணியக்கா வெறி கொண்டவராய் மீண்டும் பாய்ந்து அந்த சிக்கியனின் துப்பாக்கியை பிடித்து அடிக்க வேண்டாம் என்ற தடுக்க . இன்னொரு ஆமிக்காரன் வந்து அந்த சீக்கியனின் காதில் கிந்தியில் ஏதோ சொல்ல . அவன் உடனே நீதான் எல் ரி ரி வா உன்னை விசாரிக்க வேண்டும் என்று ஆங்கிலத்தில் கூறிய படி ராணியக்காவை வெளியே இழுத்து கொண்டு போக ராணியக்காவும் தம்பி ரமணணனை எப்படியாவது காப்பாற்றி விட வெண்டும் என்கிற துடிப்பில் அவர்களுடன் நாளை காலை கட்டாயம் உங்கள் முகாமிற்கு நானும் தம்பியும் வருகிறோம் தயவு செய்து இப்போ தொந்தரவு தராதீர்கள்

என்று கெஞ்சிப் பார்க்கிறார் ஆனால் அவர்களோ வீட்டில் உள்ளவர்கள் எல்லாரையும் ஒரு அறையில் இருத்தி விட்டு வெளியில் வந்தால் சுட்டுவிடவோம் என மிரட்டிவிட்டு ராணியக்காவை பலாத்காரமாக இழுத்துப் போகிறார்கள்.
சத்தம் கேட்டு அக்கம் பக்கத்திலுள்ளவர்களும் யாரும் வெளியே வரப் பயம் காரணம் ஊரடங்கு உத்தரவு இருந்தது வெளியே வந்தால் ராணுவம் சுட்டுவிடும். விடியும் வரையும் அழுதபடியே விழித்திருந்த ராணியக்காவின் தாயாரும் தந்தையும் விடிந்ததும் அருகிலுள்ள இந்திய இராணுவ முகாமில் போய்த் தங்கள் மகளைப் பாக்க வேணும் என்று அழுதபடியே விசாரித்தார்கள் ஆனால் அங்கு காவல் கடைமையில் நின்ற இராணுவத்தினனோ அங்கு யாரையும் அப்படிக் கைது செய்து கொண்டு வரவில்லையென்று கூறிவிட்டான்.

அவர்களது சத்தம் கேட்டு அந்த மகாம் பொறுப்பதிகாரியோ தங்கள் முகாமிலிருந்து யாரும் யாரையும் கைது வசய்யவில்லை வேண்டுமானால் வேறு அருகிலிருக்கும் முகாம்களில் போய் விசாரிக்கச் சொல்லி அனுப்பி விடுகிறான். அவர்களும் அருகிலிருந்த மற்றைய முகாம்கள் எல்லாம் போய் விசாரித்து கொண்டிருக்க ஊரில் ஒருவர் ஊரின் ஒதக்கு புறமாக வயற்பக்கம் ஒரு பாழடைந்த வீட்டில் ராணியக்காவின் உடல் கிடப்பதாக வந்து சொல்ல ஊர் இளைஞர்கள் சிலருடன் நானும் சேர்ந்து அந்த வீட்டை நொக்கி ஓடினோம்.


அங்கு நான் கண்ட காட்சி ராணியக்காவின் உடலில் ஒரு துணிகூட இல்லாமல் அவரது சட்டையைக் கிழித்து வாயில் அடைத்தபடி கைகள் பின்புறமாக கட்டப்பட்டிருந்தது. இரத்த வெள்ளத்தில் ராணியக்கா கிடந்தார். எனக்கு உடனேயே புரிந்து விட்டது என்ன நடந்து விட்டதென்று. ராணியக்கா அந்த மிருகங்களுடன் முடிந்தவரை போராடியிருக்க வேண்டும் அதனால் அவர் தலையை கூட அசைக்க முடியாமல் ஒரு பெரிய கல்லை தலை பக்கமாக வைத்து அவரது நீண்ட தலை முடியை அதில் இறுக்கிக் கட்டிவிட்டு அமைதி காக்க காந்திய தேசத்திலிருந்து வந்த அகிம்சாவாதிகள் தங்கள் கருணை அன்பு சமாதானம் எல்லாவற்றையுமே காமக் கழிவுகளாய் அந்த அப்பாவிப் பெண்ணின் மீது வெளியேற்றி விட்டுச் சென்று விட்டார்கள்.

நல்ல வேளை அவரது அந்தக் கோலத்தை அவரது தாய் தந்தையர் கண்டிருந்தால் அந்த இடத்திலேயெ மாரடைப்பு வந்து இறந்து போயிருப்பார்கள்.
அவரருகில் போய் உடலை மெதுவாய் தொட்டுப் பார்த்தேன் உடல் சூடாகவே இருந்தது நாடித்துடிப்பும் இருந்தது. உடனடியாகவே அருகில் இருந்த வீட்டுக்காரர் ஒருவரிடம் ஒரு செலையை வாங்கி ராணியக்காவை சுற்றி கொண்டு ஊரில் வீட்டில் வைத்தியம் செய்யும் வைத்தியரிடம் கொண்டு ஓடினோம்.

வைத்தியரும் தன்னால் முடிந்த முதலுதவிகளை செய்து விட்டு குளுக்கோஸ் ஏற்றி விட்டு என்னிடம் சொன்னார் தம்பி என்னட்டை உள்ள வசதியை வைச்சு இவ்வளவுதான் செய்யலாம். உடனை வசதியுள்ள ஏதாவது ஆஸ்பத்திரிக்கு உடனை கொண்டு போனீங்களெண்டாத்தான் ஆளை காப்பாற்றலாம் இல்லாட்டி கஸ்ரம் எண்டார்.
யாழ்ப்பாணம் வைத்திய சாலைக்கு கொண்டு போக ஏலாது காரணம் அந்த வைத்தியசாலையும் இந்திய இராணுவத்தின் வெறியாட்டத்திற்குள்ளாகி சரியாக இயங்க தொடங்கியிருக்கவில்லை.

அடுத்ததாக மானிப்பாய் வைத்திய சாலைக்குத் தான் கொண்டு போகவேண்டும் ஆனால் அங்கும் சுற்றிவர இராணுவக் காவல் என்ன செய்யலாமெண்டு யொசித்த போதுதான் மானிப்பாய் வைத்திய சாலையிில் வேலை செய்கிற ஒரு தாதி எனக்கு நல்ல பழக்கம் உடனே அவரிடம் ஓடிப்போய் விடயத்தை சொல்ல அவரும் தாமதிக்காமல் உடைனேயே தனது தாதி உடைகளை அவசரமாக அணிந்து கொண்டு என்னுடன் வந்து ஒரு வானில் ராணியக்காவை ஏற்றிக்கொண்டு யாரும் வர வேண்டாம் தானே எப்படியாவது வைத்திய சாலைக்குள் கொண்டு போய் விடுவேன்

ஆனால் தான் செய்தி அனுப்பும் வரை யாரும் வைத்திய சாலை பக்கம் வர வேண்டாம் பிறகு பிரச்னையாயிடும் என்று கண்டிப்பாய்ச் சொல்லி விட்டு ஒரு வெள்ளை துணியை ஒரு தடியில் கட்டி அதனை வானின் முன்புறத்தில் கட்டிக் கொண்டு எப்படியோ வைத்திய சாலைக்குள் கொண்டு போய் அங்கு வைத்தியர்களின் ஒரு வார கால போராட்த்தின் பின்னர் கோமா நிலையிலிருந்த ராணியக்காவின் உயிரை மட்டும் அவர்களால் இழுத்து பிடித்து நிறுத்த முடிந்தது ஆனால் அவர்களால் ராணியக்காவின் உணர்வுகளையோ நினைவுகளைகயோ திருப்ப கொண்டுவர முடியாமல் போய் விட்டது.
ராணியக்கா தனது ஞாபகங்களை இழந்து மன நோயாளியாகி விட்டார்.

அது மட்டுமல்ல அவரது அடி வயிற்றிலும் பலமாக துப்பாக்கிப் பிடியால் தாக்கியிருக்கிறார்கள் அதனால் இடுப்பிற்கு கீழே உணர்வுகளும் அற்றுப் போய் விட்டது என்று அந்த தாதி என்னிடம் கூறினார். அதன் பின்னர் எனக்கும் அவர்களுடனான தொடர்பு இல்லாமல் போய் விட்டாலும் அவ்வப்போது தெரிந்தவர்களிடம் விசாரிப்பேன் சில காலத்தின் பின்னர் அவர்கள் குடும்பமாக வள்ளத்தில் இந்தியா போய் விட்டதாக அறிந்தேன்.

நானும் பின்னர் பிரான்சிற்கு வந்த பின்னர் ரமணன் கனடாவில் இருப்தாக ஒரு செய்தி கிடைத்தது எப்படியும் அவனை தொடர்பு கொள்ளலாம் என நினைத்து தெரிந்தவர்கள் மற்றும் ஐரோப்பிய கனடிய தமிழ் வானொலிகள் ஊடாகவும் பலதடைவைகள் தொடர்ச்சியான எனது தேடலில் ஒரு நாள் ரமணனின் தொலைபேசி அழைப்பு எனக்கு வந்தது. அவனுடன் கதைத்த போது நான் முதல் கேட்ட கேள்வி ராணியக்கா எப்பிடி இருக்கிறார் என்பதுதான்.


கன கால போராட்டத்தின் பின்னர் இந்தியாவில் பெரிய பெரிய வைத்தியர்களிடம் எல்லாம் காட்டி இப்ப கொஞ்சம் பரவாயில்லை என்றான் . நானும் அந்த வருடம் இந்தியா போக வேண்டி இருந்ததால் ரமணனிடம் விலாசம் விபரம் எல்லாம் பெற்றுக் கொண்டு இதோ இப்போது ராணியக்கா வீட்டிற்கு வந்து விட்டேன். எனக்காக மதிய சமையல் செய்து விட்டு ராணியக்காவின் தந்தையும் தாயும் காத்திருந்தனர் என்னை கண்டதும் தாயார் வந்து கட்டியணைத்து அழுதே விட்டார். அவர்களிடம் அக்கா எங்கை என்று கேட்க ஒரு அறையைக் காட்டினார்கள் உள்ளே போனேன்.

எனக்கோ பெரிய அதிர்ச்சி நான் தேடி வந்த ராணியக்கா இவர் இல்லை என் கற்பனையில் இருந்த ராணியக்கா இவர் இல்லை பார்ப்பதற்கு ஒரு 60 வயதிற்கும் மேற்பட்ட ஒரு கிழவியின் தோற்றம் பல மாதங்கள் பட்டினி கிடந்தது போல கண்கள் எல்லாம் உள்ளே போய் அவரது பற்கள் எல்லாம் வெளியே தெரிய தொடரச்சியான மருந்து பாவனைகளால் அவரது தலை முடியும் உதிர்ந்து போனதால் மொட்டை அடித்திருந்தனர்.


மெதுவாக அவரது அருகில் போய் அவரின் கைகளை பிடித்து பார்த்தேன் தோட்ட வேலையெல்லாம் செய்து எவ்வளவு உறுதியாய் இருந்த அவரது கைகள் ஒரு பிறந்த குழந்தையின் கையை போல சூம்பி போய் மிருதுவாய் இருந்தது. ராணியக்கா நான் தான் காகம் வந்திருக்கிறன் என்னை ஞாபகம் இருக்கா என்றேன். அவரோ எந்த வித சலனமும் இல்லாமல் சுவரையே வெறித்துப் பாத்தபடி இருந்தார்.

நானும் சில பழைய கதைகளை சொல்லிச் நானே சிரித்தும் பார்த்தேன் அவர் எந்த வித உணர்ச்சிகளையும் காட்டிக் கொள்ளவில்லை. அதற்கு மேலும் அங்கு என்னால் நிற்க முடியாமல் அறையை விட்டு வெளியே வந்த போது தாயார் சொன்னார் தம்பி இப்ப வருத்தமெல்லாம் மாறிட்டுது தானே தன்ரை வேலையள் எல்லாம் தனிய செய்ய தொடங்கிட்டா ஆனால் இப்பிடித்தான் வெறிச்சுப் பாத்தபடி ஒருதரோடையும் ஒரு கதையும் இல்லை ஆனால் டொக்ரர் மார் சொல்லினம் இப்ப ஒரு பிரச்சனையும் இல்லை ஆனால் மனரீதியான தாக்கத்திலை இருந்து இனி அவாவே தான் கொஞ்சம் கொஞ்சமா வெளிலை வரவேணுமெண்டு .

அதக்காக தான் இப்ப நாங்களும் கொஞ்சம் வெளியிலை கூட்டிக் கொண்டு திரிய வெளிக்கிட்டிருக்கிறம் அப்பிடியாவது கொஞ்சம் பழைய மாதிரி இல்லையெண்டாலும் கொஞ்சமாவது கதைச்சால் நிம்மதி என்றார்.
நானும் அவர்களுடன் மதியம் உணவருந்தி விட்டுப் புறப்பட தாயாராகியபடி மீண்டும் ராணியக்காவிடம் போய் ஏதோ எனக்கு அவரை முத்தமிடவேண்டும் போல் இருந்தது. குனிந்து அவரது கன்னத்தில் முத்தமிட்டு விட்டு ராணியக்கா நான் போகப் போறன் திரும்ப ஒரு சந்தர்ப்பம் கிடைச்சால் கட்டாயம் வாறன் என்றபடி அவரை உற்று பார்க்க அவரது கைகள் மெதுவாய் உயர்ந்தி எனது கைகளை சில நிமிடங்கள் பிடித்தவர் பின்னர் விட்டு விட்டார் முகத்தில் எந்த வித உணர்ச்சியும் இல்லாமல் அவரது கண்களில் இருந்து கண்ணிர் வடிந்துகொண்டிருந்தது.

என்னை அவருக்கு அடையாளம் தெரிகிறது நான் கதைப்பது எல்லாமே அவருக்கு புரிகிறது என்பது மட்டும் எனக்குப் புரிந்தது. ஆனாலும் தனக்குத் தானே ஒரு கூட்டை கட்டி அதற்கு ஒரு பூட்டும் போட்டு வாழ்ந்து கொண்டிருந்தார் ராணியக்கா. அவர் அப்படி இருந்ததும் எனக்கு சரியாகத்தான் பட்டது காரணம் அவர் அந்த கூட்டை விட்டு வெளியே வந்து கதைக்கத் தொடங்கினால் பலரின் பல நுறு கேள்விகளிற்கு பதில் சொல்லியே மீண்டும் மன நோயாளியாகி விடுவார்.


பின்னர் ஓராண்டுகள் கழித்து ரமணணின் தொலை பேசி அழைப்பு வந்தது.ராணியக்கா நேற்று தற்கொலை செய்திட்டா நான் இந்தியாவுக்கு வெளிக்கிடுறன் என்றான் . எப்பிடி?? என்றேன் வீட்டுக்காரர் கவனிக்காத நேரம் அவாக்கு இரவிலை வழமையா குடுக்கிற நித்திரைக் குளிசை எல்லாத்தையும் எடுத்து போட்டுட்டாவாம் வீட்டுக்காரரும் அவா நித்தரை கொள்ளுறா எண்டு கன நேரமா கவனிக்க வில்லையாம் என்றான். எனக்கு தற்கொலை செய்பவர்கள் மீது வாழ்க்கையில் போராட முடியாத கோழைகள் என்று கொபம் வரும் ்

அனால் போராட்டமே வாழ்க்கையாய் அமைந்து விட்ட ராணியக்காவின் முடிவு எனக்கு கோபத்தை தரவில்லை. ஆனால் என்னிடம் இன்னமும் விடை தெரியாத ஒரு கேள்வி இந்த இளம் வயதில் இத்தனை கொடுமைகளை அனுபவிக்க ராணியக்கா செய்த பாவம் தான் என்ன ???? இந்தக் கெள்வி ஈழத்தில் பல ராணியக்காக்களினது கேள்வியும் இதுவே............................




இதோ ராணியக்கா அடிக்கடி பாடும் அந்த பாடல் அவரது நினைவுகள் வரும்போதெல்லாம் போட்டுக் கேட்பேன் நீங்களும் கேட்டுப் பாருங்கள்.


http://www.megaupload.com/fr/?d=RPKE7049

Anonymous said...

நிழலாடும் நினைவுகள்..!

போனவாரம் எனது பாடசாலை நண்பனொருவன் இங்கிலாந்திலிருந்து என்னிடம் வந்திருந்தான். அப்போது வழமை போல எங்கள் பாடசாலைக் காலங்கள் பழைய விடயங்கள் என்று கதைத்துக் கொண்டிருந்த போது அவன் என்னிடம் கேட்டான்." டேய் உனக்கு யாழ்தேவி றைவர் கந்தையாவை ஞாபகம் இருக்கா ??" என்றான் எனக்கு உடனேயே ஞாபகம் வந்தது காரணம் எங்கள் பாடசாலை நாட்களின் சில சம்பவங்களை எப்படி வாழ் நாள் மழுதும் மறக்க முடியாதோ அப்படியே எனக்கு அந்த யாழ்தேவி றைவர் கந்தையாவும்.

மானிப்பாய் இந்துவில் எண்பதுகளில் படித்தவர்களிற்கும் மற்றும் அந்த பகுதிகளில் வாழ்ந்தவர்களிற்கும் யாழ்தேவி கந்தையா என்றால் தெரியாமல் இருக்க முடியாது. ஆனால் நீங்கள் நினைப்பது போல அவர் யாழ்தேவி என்கிற புகைவண்டி ஓட்டுனராக இருக்கவில்லை. அவர் சாதாரண மாட்டு வண்டி ஓட்டுனர்தான். மானிப்பாய் இந்துவின் முன்னால் நிக்கும் பெரிய மலை வேப்ப மரத்தடி தான் அவரது மாட்டு வண்டித் தரிப்பிடம். நாங்கள் பாடசாலை போகின்ற நேரமே 8 மணிக்கெல்லாம் அங்கு வந்து விடுவார். வந்து மாடுகளை அவிட்டு விட்டு வண்டிலின் கீழே கட்டபட்டிருக்கும் சாக்கிலிருந்து வைக்கோலை எடுத்து மாடுகளிற்கு போட்டுவிட்டு யாராவது சாமான்கள் பொருட்கள் ஏத்த சவாரிக்கு வருவார்களா என காத்திருப்பதுதான் அவரது வேலை.

அவரிற்கு அவரது வண்டிலை, வண்டில் என்று யாரும் சொல்லக் கூடாது யாழ்தேவி என்றுதான் சொல்லவேண்டும். அப்போ யாராவது தெரியாதவர்கள் அவரிடம் அய்யா வாடைகைக்கு வண்டில் வருமா?? என்று கேட்டு விட்டால் சரி கந்தையாக்கு கோபம் பொத்துக் கொண்டு வரும் வண்டில் என்று கேட்க கூடாது யாழ்தேவி வருமா?? என்று தான் கேட்க வேண்டும் . யாழ்தேவி வருமா? என்று கேட்டால் அவர் சிரித்த படியே சந்தோசமாக ஓம் ஓம் வாறன் எண்டபடி போவார். காரணம் கந்தையாவுக்கு யாழ்தேவி புகையிரதத்தை விட தனது வண்டில் மாடுகள் வேகமாக ஓடும் என்றொரு அசைக்க முடியாத நம்பிக்கை.

அதற்காகத் தனது வண்டிலும் யாழ்தேவி புகையிரதமும் அனுராதபுரத்திலிருந்து யாழ்ப்பாணம் வரை போட்டிக்கு ஓடி தனது வண்டில்தான் முதலாவதாக யாழ்ப்பாணம் வந்து சேர்ந்தது என்று அடிக்கடி மற்றவர்களிற்கு வண்டிலும் விடுவார். அதைவிட காசு கிடைக்கிறது என்பதற்காகத் தனது மாடுகளை போட்டு வதைக்கவும் மாட்டார். ஒரு நாளைக்கு ஓரிரு சவாரி கிடைத்தால் போதும். அதற்கு பிறகு யார் வந்து கேட்டாலும் போக மாட்டார்.

மிகுதி நேரத்தில்அதில் வருபவர்கள் தெரிந்தவர்களிடம் அன்றைய காலகட்டத்தில் அதிகமாக பேசப் பட்ட பாலஸ்தீன போராட்டத்திலிருந்து வியட்னாம் கியூபா என்றும் அமெரிக்கா பொருளாதரத்திலிருந்து ரஸ்யா பொதுவுடைமை இந்தியா ஈழ தமிழரை காப்பாற்ற வருமா? என்ற உலக அரசியல் அனைத்தையும் அலசி ஆராய்வார். ஆனால் கந்தையாவிற்கு இந்திய பிரதமர் இந்திரா காந்தி ஈழத்திற்கு இந்திய இராணுவத்தை அனுப்பி ஈழத்தை பிரித்து தரும் என்று அசையாத நம்பிக்கை கொண்டிருந்தார்.

அவரது அரசியல் ஆய்வில் நாங்கள் சிலரும் பொழுபோக்காக பாடசாலை இடைவேளைகளின் பொது பங்கு பற்றுவதண்டு. அப்போ அங்கு ஈழ விடுதலை போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்களும் வருவார்கள் அவர்களைக் கந்தையாவிற்கு தெரியும் . அவர்களிடம் கந்தையா சொல்வார் தம்பியவை நீங்களடா சின்ன பெடியள் உங்களாலை இலங்கை அரசோடை ஒண்டும் செய்ய ஏலாது பாருங்கோ அம்மா இந்திரா ஆமியை அனுப்பி எங்களை காப்பாத்துவா என்று அடித்து சொல்வதோடு. பேசாமல் நீங்கள் படிக்கிற வேலையைப் பாருங்கோ என்று விட்டு எங்களிற்கும் பெடியள் நீங்களும் இவங்களோடை சேந்து திரியாமல் படிக்கிற அலுவலைப் பாருங்கோ எண்டு புத்தி மதியும் சொல்வார்.

யார் போனாலும் அங்கு சைக்கிள் திருத்தும் கடை வைத்திருந்தவர் பாவம் சைக்கிள் டியூப்பை தண்ணி வாழிக்குள் அமத்தி எங்காவது ஓட்டை இருக்கிறதா எனத் தேடியபடி கந்தையாவின் கதையை கேட்டே தான் ஆக வேண்டும். மதியமானதும் மாடுகளிற்கு சாப்பாடு போட்டுத் தண்ணி வைத்து விட்டு அந்த சைக்கிள் கடைகாரரிடம் யாருடையதாவது சைக்கிள் நின்றால் அல்லது எங்கள் யாரிடமாவது ஒரு சைக்கிளை வாங்கி கொண்டு மானிப்பாய் எழுமுள்ளியிலுள்ள கள்ளு தவறணையில் போய் ஒரு போத்தல் அடித்து விட்டு அவரது வீட்டிற்கு போய் சாப்பிட்டு விட்டு வந்து வண்டிலில் படுத்து ஒரு குட்டி தூக்கம். பின்னேரமளவில் ஏதாவது சவாரி கிடைத்தால் சரி இல்லாவிடில் மாலை 6 மணியளவில் மாடுகளை வண்டிலில் பூட்டிவிட்டு "ஏய்...." என்பார் மாடுகளிற்கு தெரியும் எங்கு போவது என்று அவை எழுமுள்ளி தவறணையை நோக்கி போய் கொண்டிருக்கும் இதுதான் யாழ்தேவி கந்தையாவின் அன்றாட நிகழ்ச்சிகள்.

இப்படி இருந்நத காலகட்டத்தில் இந்திராகாந்தி கொல்லப்பட்ட செய்தி கேள்விப்பட்டதும் அவரில் நம்பிக்கை வைத்திருந்த மற்றைய ,ஈழத் தமிழர்களை போலத்தான் கந்தையாவும் இடிந்து போனார் இந்திரா காந்திக்கு அஞ்சலி செலுத்து முகமாக நாங்கள் மானிப்பாய் இந்து கல்லூரி சந்தியில் நினைவாலயம் அமைத்து அவரது ஒரு பெரிய படமும் வைத்து வாழை தோரணம் கட்டிகொண்டிருந்தோம். அப்போ கந்தையாவும் எங்களிற்கு உதவியாய் தெரிந்த வீடுகளில் போய் வாழைமரம் தென்னோலை என்று வாங்கித் தனது வண்டிலில் கொண்டு வந்து கட்டி விட்டு தனது வண்டிலிலும் நாலு பக்கமம் நாலு குட்டிவழையும் கட்டி தோரணமும் கட்டி விட்டு என்னிடம் வந்து தம்பி எனக்கு இந்திரா அம்மான்ரை இரண்டு படம் தாடா என்ரை யாழ்தேவிலை இரண்டு பக்கமும் ஒட்ட வேண்டும் என்றார்.

நானும் படத்தை கொடுக்க அதனை வண்டிலில் ஒட்டியவர் அதனை கொஞ்ச நெரம் பாத்து விட்டு. தம்பியவை நான் நினைக்கிறன் உவங்கள் சிங்களவரும் சேந்துதான் ஏதோ சதி பண்ணி அம்மாவை கொண்டிட்டாங்கள்.இனி ஆர் வந்து எங்களை காப்பாத்த போறாங்களோ?? எண்டவர் ஏனடா தம்பியவை வேறை ஏதும் நாடுகள் எங்களுக்கு உதவி செய்யாதோ ?? என்று உலக அரசியலையே அலசும் கந்தையா அப்பாவியாக எங்களிடம் கேட்டார். மதியமானதும் என்னிடம் தம்பி உன்ரை சைக்கிளை ஒருக்கா தாடா எண்டார். எனக்கு தெரியும் எங்கு போகப் போகிறார் என்று எனவே அந்தா நிக்குது எடுத்து கொண்டு போங்கொ எண்டன் .

சைக்கிளை ஓடிக்கொண்டு போன கந்தையா ஒரு மணித்தியாலத்தாலை அதை உருட்டிக்கொண்டு சற்று தள்ளாடிய நடையில் வந்து கொண்டிருந்தார். பார்த்தபோதே விளங்கியது அன்று கொஞ்சம் கூடுதலா அடிச்சிட்டார் எண்டு. வந்தவர் சைக்கிளை விட்டு விடடு அங்கிருந்த இந்திராவின் படத்தின் முன்னால் போய் நிண்டு எங்களையெல்லாம் தவிக்க விட்டிட்டு போயிட்டியே அம்மா என்று ஒரு குழந்தையை போல விக்கி விக்கி அழ தொடங்கி விட்டார்.

அவரை அன்று சமாதானம் செய்து அனுப்பி வைக்கவே எங்களிற்குப் பெரும் பாடாய் போய்விட்டது. அந்த கால கட்டங்களில் நானும் பாடசாலையை விட்டு வெளியேறி விட்டதால் எங்காவது எப்பவாது வீதிகளில் சில சமயம் கந்தையாவை கண்டால் கந்தையாண்ணை எப்பிடி இருக்கிறியள் என்பேன் அவரும் ஓமடா தம்பி ஓம் என்ன யுனிவசிற்றி முடிச்சிட்டியோ என்பார். காரணம் கந்தையாவிற்கு மானிப்பாய் இந்துவில் இருந்து யார் வெளியேறினாலும் அவர் நேராக அடுத்தது யாழ் பல்கலை கழகம்தான் போகிறார்கள் என்கிற நினைப்பு.

காலங்களும் நகர இந்திய இலங்கை ஒப்பந்த கால கட்டம் வந்தது இந்திய அரசின் அதிகாரிகளும் இராணுவமும் யாழ் வந்தபோது அவர்களை மக்கள் வீதி வீதியாக மாலை போட்டு வரவேற்றனர். அப்போது மானிப்பாய் சந்தியில் நடந்த வரவேற்பில் கந்தையாவும் சனங்களிற்கு மத்தியில் மண்டியடித்து கொண்டு போய் அவர்களிற்கு ஒரு மாலையை போட்டு விட்டு" இந்தியா வாழ்க இந்திரா மகன் வாழ்க" என்று கையை உயர்த்தி கத்தி விட்டு தூரத்தில் அந்தோனியார் கோயிலடியில் நின்று இவற்றை புதினம் பார்த்துகொண்டு நின்ற எங்களிடம் வந்து . பாத்தியளா இந்த கந்தையா சொன்னது தான் நடந்தது இந்தியனாமி வந்திட்டிது இனி சிங்களவன் வேணுமெண்டால் புடுங்கி பாக்கட்டும் அசைக்க ஏலாது எங்களை எண்டு சொல்லி விட்டு எங்களையும் ஏளனமாகப் பார்த்து விட்டு போனார்.

காட்சிகளும் மாறியது இந்தியஇராணுவத்திற்கும் புலிகளிற்கும் மோதல் வெடித்து யாழ்குடாவில் எல்லாப் பக்கமும் ஒரே குண்டு சத்தங்களாய் கேட்டபடி இருந்தது அப்போ ஒரு நாள் மதியமளவில் இதே நண்பன் என்னிடம் வந்து இதே கேள்வியை கேட்டான். டேய் உனக்கு யாழ்தேவி றைவர் கந்தையாவை தெரியும்தானே ?? ஓம் அவரக்கு என்ன என்றேன் . அந்தாள் நேற்றிரவு கள்ளடிச்சிட்டு போயிருக்குது போலை நவாலி றொட்டிலை படுத்திருந்த இந்தியனாமி சுட்டு ஆள் முடிஞ்சுது பாவம் எண்டான். ஒரு கணம் கந்தையா இந்திராவின் படத்திற்கு முன்பு எங்களையெல்லாம் விட்டிட்டு போயிட்டியே அம்மா என்று புலம்பியதும் இந்திய அதிகாரிகளிற்கு மாலை போட்டு விட்டு இந்தியா வாழ்க என்று கத்தியதும் நிழலாய் வந்து போனது. சில கணம் மூடிய என் கண்களில் இருந்து என்னையும் அறியாமல் சில கண்ணீர்த் துளிகள் கந்தையாவிற்காக அந்த மண்ணில் விழுந்தது.

Anonymous said...

நிழலாடும் நினைவுகள்..!

போனவாரம் எனது பாடசாலை நண்பனொருவன் இங்கிலாந்திலிருந்து என்னிடம் வந்திருந்தான். அப்போது வழமை போல எங்கள் பாடசாலைக் காலங்கள் பழைய விடயங்கள் என்று கதைத்துக் கொண்டிருந்த போது அவன் என்னிடம் கேட்டான்." டேய் உனக்கு யாழ்தேவி றைவர் கந்தையாவை ஞாபகம் இருக்கா ??" என்றான் எனக்கு உடனேயே ஞாபகம் வந்தது காரணம் எங்கள் பாடசாலை நாட்களின் சில சம்பவங்களை எப்படி வாழ் நாள் மழுதும் மறக்க முடியாதோ அப்படியே எனக்கு அந்த யாழ்தேவி றைவர் கந்தையாவும்.

மானிப்பாய் இந்துவில் எண்பதுகளில் படித்தவர்களிற்கும் மற்றும் அந்த பகுதிகளில் வாழ்ந்தவர்களிற்கும் யாழ்தேவி கந்தையா என்றால் தெரியாமல் இருக்க முடியாது. ஆனால் நீங்கள் நினைப்பது போல அவர் யாழ்தேவி என்கிற புகைவண்டி ஓட்டுனராக இருக்கவில்லை. அவர் சாதாரண மாட்டு வண்டி ஓட்டுனர்தான். மானிப்பாய் இந்துவின் முன்னால் நிக்கும் பெரிய மலை வேப்ப மரத்தடி தான் அவரது மாட்டு வண்டித் தரிப்பிடம். நாங்கள் பாடசாலை போகின்ற நேரமே 8 மணிக்கெல்லாம் அங்கு வந்து விடுவார். வந்து மாடுகளை அவிட்டு விட்டு வண்டிலின் கீழே கட்டபட்டிருக்கும் சாக்கிலிருந்து வைக்கோலை எடுத்து மாடுகளிற்கு போட்டுவிட்டு யாராவது சாமான்கள் பொருட்கள் ஏத்த சவாரிக்கு வருவார்களா என காத்திருப்பதுதான் அவரது வேலை.

அவரிற்கு அவரது வண்டிலை, வண்டில் என்று யாரும் சொல்லக் கூடாது யாழ்தேவி என்றுதான் சொல்லவேண்டும். அப்போ யாராவது தெரியாதவர்கள் அவரிடம் அய்யா வாடைகைக்கு வண்டில் வருமா?? என்று கேட்டு விட்டால் சரி கந்தையாக்கு கோபம் பொத்துக் கொண்டு வரும் வண்டில் என்று கேட்க கூடாது யாழ்தேவி வருமா?? என்று தான் கேட்க வேண்டும் . யாழ்தேவி வருமா? என்று கேட்டால் அவர் சிரித்த படியே சந்தோசமாக ஓம் ஓம் வாறன் எண்டபடி போவார். காரணம் கந்தையாவுக்கு யாழ்தேவி புகையிரதத்தை விட தனது வண்டில் மாடுகள் வேகமாக ஓடும் என்றொரு அசைக்க முடியாத நம்பிக்கை.

அதற்காகத் தனது வண்டிலும் யாழ்தேவி புகையிரதமும் அனுராதபுரத்திலிருந்து யாழ்ப்பாணம் வரை போட்டிக்கு ஓடி தனது வண்டில்தான் முதலாவதாக யாழ்ப்பாணம் வந்து சேர்ந்தது என்று அடிக்கடி மற்றவர்களிற்கு வண்டிலும் விடுவார். அதைவிட காசு கிடைக்கிறது என்பதற்காகத் தனது மாடுகளை போட்டு வதைக்கவும் மாட்டார். ஒரு நாளைக்கு ஓரிரு சவாரி கிடைத்தால் போதும். அதற்கு பிறகு யார் வந்து கேட்டாலும் போக மாட்டார்.

மிகுதி நேரத்தில்அதில் வருபவர்கள் தெரிந்தவர்களிடம் அன்றைய காலகட்டத்தில் அதிகமாக பேசப் பட்ட பாலஸ்தீன போராட்டத்திலிருந்து வியட்னாம் கியூபா என்றும் அமெரிக்கா பொருளாதரத்திலிருந்து ரஸ்யா பொதுவுடைமை இந்தியா ஈழ தமிழரை காப்பாற்ற வருமா? என்ற உலக அரசியல் அனைத்தையும் அலசி ஆராய்வார். ஆனால் கந்தையாவிற்கு இந்திய பிரதமர் இந்திரா காந்தி ஈழத்திற்கு இந்திய இராணுவத்தை அனுப்பி ஈழத்தை பிரித்து தரும் என்று அசையாத நம்பிக்கை கொண்டிருந்தார்.

அவரது அரசியல் ஆய்வில் நாங்கள் சிலரும் பொழுபோக்காக பாடசாலை இடைவேளைகளின் பொது பங்கு பற்றுவதண்டு. அப்போ அங்கு ஈழ விடுதலை போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்களும் வருவார்கள் அவர்களைக் கந்தையாவிற்கு தெரியும் . அவர்களிடம் கந்தையா சொல்வார் தம்பியவை நீங்களடா சின்ன பெடியள் உங்களாலை இலங்கை அரசோடை ஒண்டும் செய்ய ஏலாது பாருங்கோ அம்மா இந்திரா ஆமியை அனுப்பி எங்களை காப்பாத்துவா என்று அடித்து சொல்வதோடு. பேசாமல் நீங்கள் படிக்கிற வேலையைப் பாருங்கோ என்று விட்டு எங்களிற்கும் பெடியள் நீங்களும் இவங்களோடை சேந்து திரியாமல் படிக்கிற அலுவலைப் பாருங்கோ எண்டு புத்தி மதியும் சொல்வார்.

யார் போனாலும் அங்கு சைக்கிள் திருத்தும் கடை வைத்திருந்தவர் பாவம் சைக்கிள் டியூப்பை தண்ணி வாழிக்குள் அமத்தி எங்காவது ஓட்டை இருக்கிறதா எனத் தேடியபடி கந்தையாவின் கதையை கேட்டே தான் ஆக வேண்டும். மதியமானதும் மாடுகளிற்கு சாப்பாடு போட்டுத் தண்ணி வைத்து விட்டு அந்த சைக்கிள் கடைகாரரிடம் யாருடையதாவது சைக்கிள் நின்றால் அல்லது எங்கள் யாரிடமாவது ஒரு சைக்கிளை வாங்கி கொண்டு மானிப்பாய் எழுமுள்ளியிலுள்ள கள்ளு தவறணையில் போய் ஒரு போத்தல் அடித்து விட்டு அவரது வீட்டிற்கு போய் சாப்பிட்டு விட்டு வந்து வண்டிலில் படுத்து ஒரு குட்டி தூக்கம். பின்னேரமளவில் ஏதாவது சவாரி கிடைத்தால் சரி இல்லாவிடில் மாலை 6 மணியளவில் மாடுகளை வண்டிலில் பூட்டிவிட்டு "ஏய்...." என்பார் மாடுகளிற்கு தெரியும் எங்கு போவது என்று அவை எழுமுள்ளி தவறணையை நோக்கி போய் கொண்டிருக்கும் இதுதான் யாழ்தேவி கந்தையாவின் அன்றாட நிகழ்ச்சிகள்.

இப்படி இருந்நத காலகட்டத்தில் இந்திராகாந்தி கொல்லப்பட்ட செய்தி கேள்விப்பட்டதும் அவரில் நம்பிக்கை வைத்திருந்த மற்றைய ,ஈழத் தமிழர்களை போலத்தான் கந்தையாவும் இடிந்து போனார் இந்திரா காந்திக்கு அஞ்சலி செலுத்து முகமாக நாங்கள் மானிப்பாய் இந்து கல்லூரி சந்தியில் நினைவாலயம் அமைத்து அவரது ஒரு பெரிய படமும் வைத்து வாழை தோரணம் கட்டிகொண்டிருந்தோம். அப்போ கந்தையாவும் எங்களிற்கு உதவியாய் தெரிந்த வீடுகளில் போய் வாழைமரம் தென்னோலை என்று வாங்கித் தனது வண்டிலில் கொண்டு வந்து கட்டி விட்டு தனது வண்டிலிலும் நாலு பக்கமம் நாலு குட்டிவழையும் கட்டி தோரணமும் கட்டி விட்டு என்னிடம் வந்து தம்பி எனக்கு இந்திரா அம்மான்ரை இரண்டு படம் தாடா என்ரை யாழ்தேவிலை இரண்டு பக்கமும் ஒட்ட வேண்டும் என்றார்.

நானும் படத்தை கொடுக்க அதனை வண்டிலில் ஒட்டியவர் அதனை கொஞ்ச நெரம் பாத்து விட்டு. தம்பியவை நான் நினைக்கிறன் உவங்கள் சிங்களவரும் சேந்துதான் ஏதோ சதி பண்ணி அம்மாவை கொண்டிட்டாங்கள்.இனி ஆர் வந்து எங்களை காப்பாத்த போறாங்களோ?? எண்டவர் ஏனடா தம்பியவை வேறை ஏதும் நாடுகள் எங்களுக்கு உதவி செய்யாதோ ?? என்று உலக அரசியலையே அலசும் கந்தையா அப்பாவியாக எங்களிடம் கேட்டார். மதியமானதும் என்னிடம் தம்பி உன்ரை சைக்கிளை ஒருக்கா தாடா எண்டார். எனக்கு தெரியும் எங்கு போகப் போகிறார் என்று எனவே அந்தா நிக்குது எடுத்து கொண்டு போங்கொ எண்டன் .

சைக்கிளை ஓடிக்கொண்டு போன கந்தையா ஒரு மணித்தியாலத்தாலை அதை உருட்டிக்கொண்டு சற்று தள்ளாடிய நடையில் வந்து கொண்டிருந்தார். பார்த்தபோதே விளங்கியது அன்று கொஞ்சம் கூடுதலா அடிச்சிட்டார் எண்டு. வந்தவர் சைக்கிளை விட்டு விடடு அங்கிருந்த இந்திராவின் படத்தின் முன்னால் போய் நிண்டு எங்களையெல்லாம் தவிக்க விட்டிட்டு போயிட்டியே அம்மா என்று ஒரு குழந்தையை போல விக்கி விக்கி அழ தொடங்கி விட்டார்.

அவரை அன்று சமாதானம் செய்து அனுப்பி வைக்கவே எங்களிற்குப் பெரும் பாடாய் போய்விட்டது. அந்த கால கட்டங்களில் நானும் பாடசாலையை விட்டு வெளியேறி விட்டதால் எங்காவது எப்பவாது வீதிகளில் சில சமயம் கந்தையாவை கண்டால் கந்தையாண்ணை எப்பிடி இருக்கிறியள் என்பேன் அவரும் ஓமடா தம்பி ஓம் என்ன யுனிவசிற்றி முடிச்சிட்டியோ என்பார். காரணம் கந்தையாவிற்கு மானிப்பாய் இந்துவில் இருந்து யார் வெளியேறினாலும் அவர் நேராக அடுத்தது யாழ் பல்கலை கழகம்தான் போகிறார்கள் என்கிற நினைப்பு.

காலங்களும் நகர இந்திய இலங்கை ஒப்பந்த கால கட்டம் வந்தது இந்திய அரசின் அதிகாரிகளும் இராணுவமும் யாழ் வந்தபோது அவர்களை மக்கள் வீதி வீதியாக மாலை போட்டு வரவேற்றனர். அப்போது மானிப்பாய் சந்தியில் நடந்த வரவேற்பில் கந்தையாவும் சனங்களிற்கு மத்தியில் மண்டியடித்து கொண்டு போய் அவர்களிற்கு ஒரு மாலையை போட்டு விட்டு" இந்தியா வாழ்க இந்திரா மகன் வாழ்க" என்று கையை உயர்த்தி கத்தி விட்டு தூரத்தில் அந்தோனியார் கோயிலடியில் நின்று இவற்றை புதினம் பார்த்துகொண்டு நின்ற எங்களிடம் வந்து . பாத்தியளா இந்த கந்தையா சொன்னது தான் நடந்தது இந்தியனாமி வந்திட்டிது இனி சிங்களவன் வேணுமெண்டால் புடுங்கி பாக்கட்டும் அசைக்க ஏலாது எங்களை எண்டு சொல்லி விட்டு எங்களையும் ஏளனமாகப் பார்த்து விட்டு போனார்.

காட்சிகளும் மாறியது இந்தியஇராணுவத்திற்கும் புலிகளிற்கும் மோதல் வெடித்து யாழ்குடாவில் எல்லாப் பக்கமும் ஒரே குண்டு சத்தங்களாய் கேட்டபடி இருந்தது அப்போ ஒரு நாள் மதியமளவில் இதே நண்பன் என்னிடம் வந்து இதே கேள்வியை கேட்டான். டேய் உனக்கு யாழ்தேவி றைவர் கந்தையாவை தெரியும்தானே ?? ஓம் அவரக்கு என்ன என்றேன் . அந்தாள் நேற்றிரவு கள்ளடிச்சிட்டு போயிருக்குது போலை நவாலி றொட்டிலை படுத்திருந்த இந்தியனாமி சுட்டு ஆள் முடிஞ்சுது பாவம் எண்டான். ஒரு கணம் கந்தையா இந்திராவின் படத்திற்கு முன்பு எங்களையெல்லாம் விட்டிட்டு போயிட்டியே அம்மா என்று புலம்பியதும் இந்திய அதிகாரிகளிற்கு மாலை போட்டு விட்டு இந்தியா வாழ்க என்று கத்தியதும் நிழலாய் வந்து போனது. சில கணம் மூடிய என் கண்களில் இருந்து என்னையும் அறியாமல் சில கண்ணீர்த் துளிகள் கந்தையாவிற்காக அந்த மண்ணில் விழுந்தது.

Anonymous said...

ஏதோ LTTE வாயில் விரலை வைத்தால் கடிக்க தெரியாத அப்பாவி போவலவும் இந்திய ரானுவம் தான் அட்டூழியம் செய்தது போல பலர் சொல்வார்கள். அறிவு கெட்ட ஜென்மங்களா உங்களுக்கு அமைதி தரதாண் ரானுவம் உங்க ஊருக்கு வந்தது. எங்கோ ஒரு மூலையில் இருக்கும் ஒரு சீக்கியனுக்கும் இருக்கும் முயர்ச்சி கூட இல்லாமல் வெள்ளாள வெறியால் பல குடும்பங்கள் சிதைந்து நகரங்கள் நாசமாகி போய் இன்று அகதியாய் அலையை விட்டதை தவிர்த்து புலிகள் என்ன செய்தார்கள். புலிகள் அழிந்தால் தான் இலங்கையில் அமைதி பிறக்கும். அது என்றும் நடக்க போவதில்லை என்பது தனி கதை.

Unknown said...

முதலில் உங்கள் பின்னூட்டங்களை உடனுக்குடன் வெளியிட முடியாமல் போனதற்கு தார்மீக மன்னிப்புக் கோருகிறேன் அதே நேரம் புலிகள் மீதோ அல்லது எம் குல தமிழன் மீதோ காழ்ப்புணர்வு அல்லது புறிந்துணர்வு இன்றியோ இப் பதிவு எழுதப் பட வில்லை ஈழத்தின் விடுதலை போர் புலிகளால் மட்டுமே முன்னெடுத்துச்செல்லப் பட வேண்டும் என்பதையோ அங்கே அமைதி தவழ ஆயுதப் போர் ஒன்றினையே தற்சமயம் புலிகளௌம் இன ஒழித்தலுக்கு இலங்கை அரசும் தயாராக இருப்பதை அறியாத அளவுக்கு எமது அரசியல் ஞானம் இன்னும் மக்கிப் போகவில்லை, நேற்று இந்தியர்களையும் தமிழக அரசியல் வாதிகளையும் நாய்கள் நச்சுமரம், இன்னும் அச்சில் புழக்க விட முடியாத சில கோப வார்த்தைகளையும் கேட்ட பிறகும் புலிகளுக்கு தார்மீக ஆதரவையேனும் வழங்கும் எம் அரசியல் இயக்கங்கள் தங்கள் நிலைப்பாடு பற்றி யோசிக்க வேண்டிய காலம் வந்து விட்டதா எனும் ஒரு சிறு கோப வெளிப்பாடே இப் பதிவு இதை ஒரு டிஸ்கி போட்டு எழுதியிருக்க முடியும் எமது வலியும் உங்கள் வலியும் வேறு வேறானவை உங்கள் பதிகளை நோக்கி எரியப்பட்ட கேள்விகளே அன்றி அரசியல் அரியாமல் வீசப்பட்ட வெட்டி அரட்டைகள் இல்லை இவை. இப் பதிவில் எவரின் மனதும் புண்பட்டிருக்குமேயாயின் நான் அதற்கு மனப்பூர்வ மன்னிப்புக் கோருகிறேன் அதே நேரம் தலைப்பை மாற்றச்சொல்லி அனானிபின்னூட்டம் கேட்டபடி மாற்ற இயலாது ஏனென்றால் அது எனது வலியை சொல்ல பயன்பட்ட ஒரு வாக்கியம் அது அப்படியே இருக்கும். பின்னூட்டம் தந்து மிக தெளிவான நான் புரிந்துகொள்லும் அளாவுக்கு விளக்கம் அளித்த உங்கள் அனைவருக்கும் மிக்க நன்றி
//அப்படியில்லாவிட்டால், இந்தியர்களை 'நாய்கள்' என்று ஈழத்தமிழர் ஒருவர் சொன்னதாலேயே இப்படியோர் இடுகை வந்திருக்கக்கூடும். //

மிகச்சரியான ஒரு வாக்கியம்

Anonymous said...

"ஏதோ LTTE வாயில் விரலை வைத்தால் கடிக்க தெரியாத அப்பாவி போவலவும் இந்திய ரானுவம் தான் அட்டூழியம் செய்தது போல பலர் சொல்வார்கள். அறிவு கெட்ட ஜென்மங்களா உங்களுக்கு அமைதி தரதாண் ரானுவம் உங்க ஊருக்கு வந்தது. எங்கோ ஒரு மூலையில் இருக்கும் ஒரு சீக்கியனுக்கும் இருக்கும் முயர்ச்சி கூட இல்லாமல் வெள்ளாள வெறியால் பல குடும்பங்கள் சிதைந்து நகரங்கள் நாசமாகி போய் இன்று அகதியாய் அலையை விட்டதை தவிர்த்து புலிகள் என்ன செய்தார்கள். புலிகள் அழிந்தால் தான் இலங்கையில் அமைதி பிறக்கும். அது என்றும் நடக்க போவதில்லை என்பது தனி கதை"


IPKF= INNOCENT PEOPLE KILLING FORCE
THIS WHAT YOU DID

Anonymous said...

' அப்படியே புலிகளுக்கு உதவிசெய்வதாக வைத்துக்கொண்டாலும் அவர்கள் கூட்டிய வாளை இந்தியா மீதே சோதிக்க மாட்ட்டார்கள் என்பது என்ன நிச்சயம்?'

நிச்சயமாக..கொழுவி சொன்னதுபோல் உதவி செய்தோம் என்பதற்காக அவர்கள் அடிமையாக இருக்க வேண்டியது இல்லை.புலிகளும் இந்தியாவும் ஒத்து போவதற்கு வாய்ப்பு குறைவு.இந்தியா எந்த ஒரு காலத்திலும், தன் பாதுகாப்பு காரணங்களால் தமிழீழத்தை ஆதரிக்கப் போவதில்லை..ஆதரிக்கவும் முடியாது.அப்படியே புலிகள் வேறு எந்த சக்திகளோடும் சேர்ந்து அதற்கு முயற்சித்தால் இந்தியா தடுப்பதற்கான எல்லாவித நடவடிக்கைகளை எடுக்கும்.எடுத்திருக்கும்..இல்லாவிட்டால் ராஜபக்ஷெவுக்கு ஒருவருடம் அவகாசம் கொடுத்து வருடங்கள் கரைந்து கொண்டிருக்குமா?

அதுவுமில்லாமல் புலிகளுக்கு நகங்களோடு இறக்கைகளும் முளைத்துவிட்டது.compact nuclear devices ஆயுத சந்தையில் கிடைப்பதாக செய்திகள் கூறுகின்றன. ஆயுதகுழுக்கள் ஒருவித desperate மனநிலையில் இந்த மாதிரி வசதிகளை பயன்படுத்தமாட்டார்கள் என்பதற்கெல்லாம் முழு உத்திரவாதம் கிடையாது.அதுவும் புலிகளுக்கு சாகசங்களில் எப்போதும் அதிக ஈடுபாடு உண்டு.எனவே இந்தியா தன் இலங்கை கொள்கையை வெளிப்படையாகவே நடைமுறைப் படுத்தலாம்.வை.கோ. நெடுமாறன், சுப. வீ போன்றோரின் கருத்தெல்லாம் சதவீத அளவில் ஒரு அளவேயில்லை.

இலங்கைக்கு ஆயுதங்கள் கொடுப்பதெல்லாம் ஒரு விசயமே இல்லை.கொழுவி சொன்னது சரிதான்.நாம் தராவிட்டால் என்ன..எதோ ஒரு நாடு.. இல்லாவிட்டால் எத்தனையோ ஆயுத வியாபாரிகள்.சற்று காசு அதிகம் கொடுத்தால் புலிகளுக்கும் கொடுப்பார்கள்.புதிய மாடல் stinger வகை launchers புலிகளுக்கு எப்பிடி கிடைத்தது? காசுதான். இலங்கை பிரச்சனையில் இந்த ஆயுதபலம் முக்கிய பிரச்சனையாய் உள்ளது.

இனியும் தாமதமில்லாமல் இந்தியா இலங்கை பிரச்சனையில் தலையிட வேண்டும்.இது நம் பாதுகாப்பு சம்பந்தமான விசயம்.இதற்கு யாரிடமும் நாம் அனுமதி கேட்க வேண்டியதில்லை.மேலும் பக்கத்து நாட்டில் மக்கள் செத்துக் கொண்டிருக்கும் போது நாம் கையை கட்டிகொண்டிருக்கக் கூடாது.இரண்டு தரப்புக்கும் மிகப் பெரிய அழுத்தத்தை கொடுக்கவேண்டும்.
ஒரு முடிவுக்கு வரவேண்டிய சூழ்நிலையை உருவாக்க வேண்டும்.மேலும் இந்த பகுதியை war zone-ஆக மாற்ற எந்த ஒரு சக்தியையும் இந்தியா அனுமதிக்க கூடாது.

மற்றபடி இந்தியர்களை தாக்கி இணயத்தில் எழுதும் ஈழ நண்பர்களை பற்றி பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டாம் என்பது என் கருத்து. அவர்களின் நண்பர்கள் வன்னியில், துவக்குக்கு மார்பை திறந்து காட்டி போராடிக் கொண்டிருக்க..இவர்கள் ஜெர்மனியிலும்,சுவிஸிலும் கணிணி முன் அமர்ந்து ஒருவித guilt உடன் உரத்த குரலில் ஈழப்பிரச்சனை பற்றியும்,இந்திய வெறுப்பையும் எழுதுவார்கள்.உதாரணத்திற்கு இவர் எழுதுவதை பாருங்கள்...

'இந்தியா ஆரம்பத்தில் தந்த பொருளாதார உதவிகளுக்கு நன்றி. பின்பொரு காலத்தில் திருப்பித் தரப்படும்'..

'இந்தியர்களுக்கு..
எங்களிடம் விமானங்கள் இருப்பது குறித்துப் பயப்பட வேண்டாம். சரியா..'

யார் இவருக்கு இந்த மாதிரி அறிக்கை விடும் அதிகாரத்தை கொடுத்தது? எல்லாம் ஒரு ஆர்வ கோளாறுதான்.

விட்டுவிடுங்கள் அவர்களை.

ஆனால் ஒரு அறுப்பும் தெரியாமல் இந்த மாதிரி ஈழநண்பர்களை கவரவேண்டும் என்று எழுதும் சிலரை நினைத்தால்தான் பரிதாபமாக உள்ளது.
நன்றாக எழுதிவரும் ஒரு நண்பர்கூட ஒரு திரைப்படம் குறித்து 'குப்பி கடிக்க இருந்தேன்' என எழுதியதில் ஒரு கவரும் முயற்சி தெரிந்தது. இத்தனைக்கும் அந்த படம் திரைப்படம் என்ற அளவில் அவ்வளவு மோசமில்லை.

வெற்றி said...

மகேந்திரன் ஐயா,
பெரியார் இலகு தமிழில் சொன்ன விடயங்களையே புரிந்து கொள்ளும் அறிவோ ஆற்றலோ அற்றவர் என்பதை உங்கள் பதிவுகள் மூலம் பறைசாற்றி இருந்தீர்கள். பெரியார் சொன்ன கருத்துக்களை விளங்காமல் பெரியார் மேலேயே மற்றவர்கள் வெறுப்புக் கொள்ளும் அளவுக்கு அநாகரீகமாக எழுதும் உங்களுக்கு குழப்பகரமான இலங்கை அரசியலை விளங்கிக் கொள்ளும் திறன் இருக்கும் என்று நான் நம்பவில்லை.

பொல்லைக் கொடுத்து அடிவாங்குவது போல், உங்கள் பதிவுகள் மூலமே நீங்கள் எழுதும் விடயங்களில் உங்களுக்கு எவ்வளவு அறிவாற்றல் இருக்கிறது என்பதை நாம் இலகுவில் புரிந்து கொள்ளக் கூடியதாக உள்ளது.

எனவே ஒரு விடயத்தைப் பற்றி எழுத முன் அவ்விடயத்தைப் பற்றி கொஞ்சமாவது அறிந்து விட்டு எழுதுவது புத்திசாலித்தனம்.

Unknown said...

//......எனவே ஒரு விடயத்தைப் பற்றி எழுத முன் அவ்விடயத்தைப் பற்றி கொஞ்சமாவது அறிந்து விட்டு எழுதுவது புத்திசாலித்தனம். //

:))))))))))))))))))))))))))))

Anonymous said...

//இரண்டு தரப்புக்கும் மிகப் பெரிய அழுத்தத்தை கொடுக்கவேண்டும்.//

இரண்டு தரப்புக்குமா.. ஒரு தரப்புக்கா.. ? அரசு மீது அழுத்தம் தர இந்தியாவின் பிராந்திய நலன்கள் விடுமா..? சொந்த நாட்டு மீனவர்களின் கொலைக்கு ஒரு பகிரங்கக் கண்டனம் தெரிவிக்க முடியாதாம்.. அடுத்த நாட்டு மக்கள் சாவுக்கு அழுத்தம் கொடுக்கப் போகிறார்களாம்.

Anonymous said...

pongada ponkaa poee kamalukkuum rajaninkumm cut out vayuinkkaaa unngalukkuu enga theereeyumm eela tamilan vaalee

Anonymous said...

வ‌ண‌க்க‌ம் சார்!

உங்க‌ளூட‌ன் தொலைபேசியில் பேசிய‌ ந‌ண்ப‌ர் இல‌ங்கை ம‌க்க‌ளின் ஏக‌ த‌லைவ‌ர் இல்லை. த‌னிப்ப‌ட்ட‌முறையில் உங்க‌ளூட‌ன் பேசிய‌தை ஊதிப் பெருப்பிப்ப‌தில் உங்க‌ளுக்கு என்ன‌ ஆலாதி விருப்ப‌ம்?
ஆர்வக்கோளாறும் அரசியல் தெளிவுமற்ற எங்கள் ஈழத்தவர்கள் கூறும் கருத்துக்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டியதில்லை. அவ்வாறே தமிழகத்தில் இருந்து வெளியிடப்படும் பொறுப்பற்ற பின்னூட்டங்களையும் நீக்கவும்.

Chennai Tamilan

Anonymous said...

'நான் தருவதை நீ ஏற்கத்தான் வேணும் என்ற இந்திய ஆணவமும் திமிரும்தான் "இந்திய - ஈழத்தமிழர்" பிரச்சினையின் அடிப்படையே.'

நான் சொல்லுவதை எல்லோருமே கேட்டாக வேண்டும்..இந்தியா உட்பட..என்ற புலிகளின் ஆணவமும் திமிரும்தான் "ஈழத்தமிழர்-இலங்கை-இந்தியா" பிரச்சனையின் அடிப்படையே என நான் நினைக்கிறேன்.


'சொந்த நாட்டு மீனவர்களின் கொலைக்கு ஒரு பகிரங்கக் கண்டனம் தெரிவிக்க முடியாதாம்.. அடுத்த நாட்டு மக்கள் சாவுக்கு அழுத்தம் கொடுக்கப் போகிறார்களாம்.'


ஆமாம்..எங்கள் மீனவர்கள் சுட்டுக் கொல்லப்படும்போது எங்கள் அரசாங்கமும், நாங்களும் 32 பல்லையும் காட்டி சிரித்துக்கொண்டிருக்கிறோம்.. அனானி அய்யா...கொஞ்சமாவது logic-ஐ பயன்படுத்துங்கள்.

ஒரு மீனவர் கொலைக்குப் பின் காவற்துறையில் வழக்கு பதிவு செய்யப்பட்டு,DRO அளவில் விசாரணை மேற்கொள்ளபட்டு,மாவட்ட ஆட்சி தலைவர் அவர்களால் அரசாங்கத்துக்கு அறிக்கை அளிக்கப்பட்டுவருகிறது.

அதுமட்டுமல்லாமல் மத்திய உளவு நிறுவனம், தமிழ்நாட்டு உளவு பிரிவு Q Branch ம் இதை கவனத்தில் கொள்கிறது. கருணாநிதி,ஜெயலலிதா போன்ற கட்சி தலைவர்களால் கண்டிக்கப்பட்டிருக்கிறது. மத்திய அரசும் இந்த தகவல்களை கொண்டு இலங்கை அரசிடம் ஒவ்வொருமுறையும் கண்டனத்தையும்,சுட்டதற்கான விளக்கத்தையும் கேட்டிருக்கிறது. இலங்கை அரசும் ஒவ்வொரு முறையும் விளக்கம் அளித்துக்கொண்டுதான் இருக்கிறது.இரு நாட்டு கடற்படையும் இது பற்றிய தகவல்களை பரிமாறிக்கொண்டிறிருக்கிறது.ஒரு முறை மன்மோகன்சிங் வை.கோ.விடமும், கருணாநிதியிடமும் இந்த விளக்கங்களை காட்டியதாக செய்திதாள்கள் கூறியது.அரசாங்கம் இது பற்றிய விவரங்களை வெளிப்படையாக வெளியிடமுடியாதெனவே நான் நினைக்கிறேன்.இரு நாட்டு கடல் எல்லையில் நடக்கும் துப்பாக்கி சூடு..ஒரு sensitive ஆன விசயம்.ஒரு அரசாங்கம் இந்த முறையில்தான் இந்த மாதிரி பிரச்சனைகளை அணுகமுடியும்.

அதுவுமில்லாமல் எதற்கு இந்த 'சொந்த நாட்டு' சென்டிமெண்ட் டயலாக்... உங்கள் சொந்த நாட்டு மக்கள்தான் அமிர்தலிங்கமும்,பத்மநாபாவும்.. பயன்படுத்தவேண்டியதுதானே இந்த சென்டிமெண்ட் சமாச்சாரத்தை... கருணாவும்,பொட்டு அம்மானும் சொந்தநாட்டு மக்கள்தான்.. அவர்கள் கையில் வைத்திருப்பது துப்பாக்கி அல்ல.. பூங்கொத்துக்கள்!! அதில் கொஞ்சம் வாங்கி காதில் வைத்துக் கொள்ளுங்கள்.

ஒரு நாக்குதான் எத்தனை விதமாக பேசுகிறது பாருங்கள்!

'pongada ponkaa poee kamalukkuum rajaninkumm cut out vayuinkkaaa unngalukkuu enga theereeyumm eela tamilan vaalee

நாங்கள் கமலுக்கும்,ரஜினிக்கும் cutout வைப்போம்..ஏன் நமீதாவுக்கு கோவில்கூட கட்டுவோம்... கட்டிக்கொண்டே எங்கள் நாட்டு பாதுகாப்பு பற்றியும் பேசுவோம். இதில் உங்களுக்கு என்ன பிரச்சனை? ..ம் புரிகிறது உங்கள் நோக்கம்...சும்மா இங்க வந்து தமிழ்நாட்டுகாரனை திட்டவேண்டும் உங்களுக்கு..நல்ல நோக்கம்.ஆனால் நக்கலும்,நய்யாண்டியும் கலந்திருந்தாலும், விசயத்தையும் எழுதும் கொழுவி மாதிரி எழுத கற்றுக் கொள்ளவும்.சும்மா எனோதானோ என்று எழுதுவதால் என்ன பயன்?

'நான் ஒரு ஈழத்தமிழன். மிகுந்த வெட்கமும் வேதனையும் அடைகின்றேன்.
யாரோ ஒரு அறிவிலி சொன்னால் நீங்கள் ஒரு இழி சொல்லை பதிவில் போடலாமா?. தயவுசெய்து அந்த அறிவிலியின் நட்பைத் துண்டிக்கவும்.'

சரியாக சொல்லியிருக்கிறீர் நண்பரே..உங்களை மாதிரி ஆட்களால்தான் இரு நாட்டு மக்களிடையே நட்பும்,புரிந்துணர்வும் வளரமுடியும்.