குசும்பனிடம் சாட்டிங் செய்துகொண்டிருந்த ஒரு மாலை வேளை குசும்பனும் எனக்கு அருகில்தான் இருப்பதாக தெரிந்துகொண்டு சந்திக்க வேண்டுமே என்று தெரியாத்தனமாக கேட்டுவிட்டேன். என்ன கோபமோ இல்லை முன்ஜென்மப் பகையோ தெரியவில்லை. உடனே அதுக்கென்னா சந்திக்கலாமே இந்த வாரம் வியாழக்கிழமை போய் அபி அப்பாவை பாக்கலாம்ன்னு கொஞ்சம் ப்ளானை பெரிசாக்கினார். ஓகே என்றுவிட்டு சரி அப்படியே முத்துக்குமரனையும் வரச் சொல்லலாம் என்று கேட்டதில எனக்கு இரண்டு நாட்களும் வேலை இருப்பதாகவும் தன்னால் முடியாது என்றும் ஏனோ நாசூக்காக நழுவினார் முத்துக் குமரன்.
அபி அப்பா என்ற தொல்ஸ் தன் அபாரமாண ஆர்கனைசிங் திறமையை காட்ட கிடைத்த நல்ல சந்தர்பத்தினை இழப்பதற்கு மனமில்லாதவராயும், அப்படியே அதை வலைப்பூ சந்திப்பாய் மாற்றிவிடவும் ஒரு பக்கா கொலைவெறித் திட்டம் போட்டு அலைய்ன் சென்று மின்னல்லை சந்திப்பதாகவும் நம்மோடு "அடர்கானகப் புலி அய்யனார், கோபி, லியோ சுரேஷ் மற்றும் சென்ஷி சில அனானி தளபதிகள் ஆகியோர் துபாயில் இருந்து நம்மோடு கிளம்புகிறார்கள் நீயும் குசும்பனும் முதல் நாளே வந்துவிடுங்கள் என்றும் பாவனாவை பிரிந்த சோகத்தில் மேலும் இரண்டுகிலோ எடை ஏறிய தம்பி அபுதாபியில் இருந்து வந்து சேர்ந்துகொ"ல்"வார் என்றும் திட்டத்தை பக்காவாகப் போட்டு தான் எப்படி ஒரு சிறந்த வலைப்பதிவு ஆர்கனைசர் என்றும் பாலபாரதியெல்லாம் என் ஆர்கனைசிங் முன்னால் க்யூவில் நின்று கற்றுக்கொள்ள வேண்டும் என்றும் சொல்லிக்கொண்டிருந்தார்.
வியாழன் மாலை 6.15க்கு குசும்பனை சந்திப்பதாகபோட்ட பிளான் திட்டமிட்டபடியும் வழக்கம்போலும் எனது பஞ்சுவாலிட்டி படியும் மாலை 8 மணி வரை நிகழாமலே இருந்தது. குசும்பன் போனில் அவ்வப்போது விளித்து "சித்தப்பு வச்சுட்டியே ஆப்பு" என்று தனது கவலையை சொல்லிக்கொண்டே இருந்தார் உச்சகட்டமாக ஒன்பது மணிக்கு கிளம்பி 9.45க்கு குசும்பனை கண்டே பிடித்தேன். அபி அப்பா இருக்கும் இடத்துக்கு போக 10.15. ஆனது.
எங்களுக்காகவே ரூமில் காத்திருந்த அப்பா நாங்கள் போன் செய்து கூப்பிட்டதும் "உற்ச்சாக மிகுதியில்" துள்ளிக்" குதித்து ஓடி வந்து உள்ளே இழுத்துச் சென்றார்.
ஏற்கனவே ஏற்பாடுகள் செய்திருந்த அபி அப்பாவோடு நானும் "கலந்தேன்" குசும்பன் அப்படியே சாப்பிடுவேன் என்று இன்னும் தான் ஒரு சின்னப்புள்ள தான் என்று பச்சத் தண்ணியை ராவாக அடிக்க ஆரம்பித்தார். சாப்பாடு முடிந்ததும் குசும்பனையும் என்னையும் அழைத்துக்கொண்டு ஒரு டைனிங் ஹாலுக்கு கிளப்பினார் அபி அப்பா. அங்கே ஆரம்பித்த வலையுலகம் பற்றிய பேச்சு திமுக அதிமுக பா.ம.க என அரசியல் வாசம் வீசத் துவங்கியதும் இந்த சூடான சந்திப்பு தனக்கு உடலுக்கு ஆகாது என்றும் தனக்கு தூக்கம் வருவதாகவும் கூறி கழட்டிக்கொண்டார் குசும்பன் பாதியில் போனவர்களை அடுத்த ஆட்டத்தில் சேர்த்துக் கொள்வதில்லை என்று நானும் அபி அப்பாவும் அவசரத் தீர்மானம் நிறைவேற்றினோம். கொஞ்சநேரம் மிக கோபாவேசமாக மதிமுக பற்றிய கோபாவேச கருத்துக்களை சொல்லிக் கொண்டிருந்த அவர் அப்படியே சோபாவில் படுத்து வழக்கம் போல் உறங்கிப்போனார். தனியாக இருப்பது எனக்கும் போரடிக்கவே அவரை எழுப்பும் முயற்ச்சியில் படுதோவியைத் தழுவி தனியாகவே வந்து தொட்டில் வடிவத்தில் இருந்த அபி அப்பாவின் கட்டிலில் படுத்ததும் உறங்கிப்போனேன்.
மறுநாள் எழுந்ததும் கிளம்புங்கப்பா என சொல்லிவிட்டு தான் வாடகை வண்டியெடுக்க போவதாக தன் சக அறை நண்பருடன் சென்றவர் 12 மணி வரை வராததால் ஆட்டம் காண ஆரம்பித்த ப்ரொகிராம்கள் வண்டி வந்ததும் சரியானது. சென்ஷி எங்களைக் கடந்து ரூமுக்குள்ளே சென்று நாங்கள் இருக்கும் தளத்துக்கு அடித்துப் பிடித்து ஓடிவந்தார். அய்யனார் முதல் நாள் இரவு சாமியாடிவிட்டு வந்ததில் மீசையைத் தொலைத்திருந்தார். இருவரிடமும் நான் தான் குசும்பன் என்று அறிமுகப் படுத்திக் கொண்டேன். குசும்பன் தான் மகேந்திரன் என்று அறிமுகப் படுத்திக் கொண்டிருந்தார். கோபி நாங்கள் அவரை பார்க்கும் வரை சிட்டி மாலின் உள்ளே இருந்து வாகனம் வருமோ என்று நாங்கள் இருந்த வண்டியின் திசை தவிர்த்து மாலின் உள்ளே நோட்டம் விட்டார் அவரிடம் நான் குசும்பன் என்றவுடன் அதிர்வானவர் கொஞ்சம் சுதாரித்து கண்டுபிடித்தார். பின் வண்டி அலைய்ன் நோக்கி புறப்பட்டது.
மின்னல் வேலை பார்க்கும் அலைன் ஃபன் சிட்டி யில் சந்திப்பு நிகழ்வதாக இருந்ததால் அங்கே ஏற்கனவே வந்து சிலர் கடலை போடுவதை கண்டு நெஞ்சம் பொறுக்காமல் வெளியே வந்துகொண்டிருந்தார் தம்பி. பாவனா பற்றி ஏதும் செய்திகளை கேட்கலாம் என்று எண்ணியவன் அந்த தற்கொலை முடிவை கைவிட்டதற்கு அவரின் ஆறடி உயரம் மட்டுமே காரணம். அறிமுகப் படலம் முடிந்ததும் மின்னல் வந்தார் தனது கொலைவெறித் திட்டங்களை மனசிலும் முகத்தில் புன்னகையும் தவழ. அவரிடமும் ஒரு அறிமுகப் படலம். உள்ளே போனோம்.
அங்கே இருக்கும் ஒரு ரெஸ்டாரண்டில் வலைப்பதிவுகள் பற்றி பேச ஆரம்பித்த உடன் " இது ஒன்னும் சரியில்லாத கும்பலா இருக்க்ம் போல என்றெண்ணினார்களோ என்னவோ அனானி அன்பர்கள் குழு அவசரமாக வெளிநடப்பு செய்து அங்கே இருக்கும் மரங்கள் பற்றிய ஆராய்ச்சிகளில் இறங்கினார்கள்.
மின்னல் இவனுங்களை இப்படியே விட்டா ரெஸ்டாரண்டை பேசியே உடைப்பான்கள் என்ற எண்ணமோ என்னமோ ஆளுக்கு ஒரு ப்ளேட் பிரியாணியை கொண்டுவந்து பாசத்தோடு பரிமாறினார். இதற்கிடையில் மாலன் வலைப்பூவில் செறிவுள்ள கருத்துக்களை எழுதவேண்டும் எனச்சொன்னதை கொண்டு விவாதத்தை துவக்கிய அய்யனார்முதல் முறை தோல்வியை தழுவினார். பிரியாணி முடிந்த உடன் தனது கொலைவெறித் திட்டங்களை ஒவ்வொன்றாக நிறைவேற்றத் துவங்கினார் மின்னல்.
முதலில் கொண்டுபோனது ஐஸ் ஸ்கேட்டிங்க் . குசும்பன், அய்யனார், அபிஅப்பா அனானி நண்பர்கள் , சென்ஷி, தம்பி, கோபி, ஆகியோர் மின்னலின் திட்டம் தெரியாத அப்பாவி அன்பர்களாய் வலையில் விழ நானும் லியோ சுரேசும் மட்டும் தப்பித்தோம் உள்ளே போனவர்களில் குறைந்த முறை விழுந்தவர் குசும்பனும் அபி அப்பாவும் (எழுந்திருத்தால் அல்லவா மறுமுறை விழுவதற்கு) அய்யனார் கொஞ்சம் இந்த கும்பலில் இருந்து விலகி தனியாக ப்ராக்டிஸ் செய்தார். அங்கே இரண்டுமூன்று பெண்கள் பயிற்சி செய்துகொண்டிருந்தது எதோச்சயான ஒன்றே.
தம்பி விழவே இல்லை ஏனென்றால் ஸ்கேட்டிங் பூட்ஸுடன் உள்ளே போனவர் சுவற்றை பற்றியபடி நின்றுகொண்டே இருந்தார் அப்படியே சுவற்றை தண்டி வெளியேரியவர் அங்கே இருக்கும் காலரியில் இருந்தபடி ஏதேனும் கவிதை சிக்குமா என கண்ணோக்கிக் கொண்டிருந்தார். எனது கேமராவை கொண்டுபோன சென்ஷி யாரையெல்லாமோ போட்டோ பிடித்தவர் வலைப்பதிவர்களை விட்டுவிட்டது அவரது அபாரமான ஞாபக சக்தியை வெளிப்படுத்தியது. இரண்டு மணி நேரம் அயராது ஐஸ்கேட்டிங்க் செய்த அன்பர்கள் வெளியே வ்ரும்போது குசும்பன் மட்டும் இரண்டு சேச்சிகளின் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கினார். பின்னர் அடுத்த கட்டமாக என்ன செய்யலாம் என்ற மின்னல் அடுத்த கட்டடத்துக்கே அழைத்துச் சென்றார் அங்கே சின்ன சைஸ் ரோலர் கோஸ்டர், குடை ராட்டினம் என அடுத்த முறை ஒரு பயலும் அலைன் பக்கம் வரப்படாது என திட்டங்களை ஒவ்வொன்றாக செயல்படுத்த தொடங்கியபோது முதல்நாள் இரவு உற்ச்சாகமே கலையாத காரணத்தால் அதன் பின் மின்னலின் எல்லா திட்டங்களில் இருந்தும் தப்பித்தேன் .
மூன்று பந்தை கொண்டு டம்ளர்களை தட்டின்னால் மொபைல் போன் கிடைக்கும் என்று தம்பி முயன்ற முதல் பந்தே பவுன்ஸானது. ஒன்றும் கிட்டாத வெறியில் அடுத்த ஆட்டம் போகலாம் இதெல்லாம் சீட்டிங் என்றார். ஹாரர் ஹவுஸ் என்ற வித்தியாசமான் தியேட்டரில் எங்களுக்கான அடுத்த ஆப்பை தயாராக வைத்திருந்தார் மின்னல் "Dynamite Train" என்ற படுமோசமாகஎடிட் செய்யப்பட்ட படத்துக்கு சீட்டுகள் முன்னும் பின்னும் குதித்தும் ஒரு விர்ச்சுவல் சினிமாவை காட்டியது. கொஞ்சம் வித்தியாசமான அனுபவம் தான். இன்னும் படகில் சவாரி மோட்டார் ஓட்டுதல் என இருக்கும் எல்லா திட்டங்களையும் மற்ற வலைப்பதிவர்கள் மேல் பரிசோதித்த மின்னல் கடைசியாக போனால் போகட்டும் என்றவாறே அவரின் அறைக்கு கொண்டு சென்றார். அங்கே போனதும் ஆளுக்கு ஒரு வெப்சைட்டை ஓப்பன் செய்து தமிழ்மணத்தில் மேய்ந்தனர்.
பாவனா சண்டையை கூகிள் டாக்கில் ஸ்டேட்டஸ் மெசேஜாக போட்டதற்கு பழிவாங்கும் விதமாக சர்க்கரை இல்லாத தேனீர் தந்த தம்பியிடம் குடித்து முடித்த வுடந்தான் கேட்டேன். அப்றமென்ன இப்படியாக ஒவ்வொரு திட்டங்களில் இருந்தும் தப்பித்து போகிறார்களே என்று மின்னல் கண்ணில் மின்னிய கொலை வெறியில் இருந்தும், அந்த பன்சிட்டியில் இருந்தும் எங்களை முழுசாகவும் உயிரோடும் திருப்பி அனுப்புவதற்கு மின்னலுக்கு நன்றி சொன்னபடியே எடுத்தோம் ஓட்டம்.
சில சுவாரஸ்யங்கள்:
1. போலி, போண்டா, அரசியல் அனானி மற்றும் ஆபாச பின்னூட்டங்கள் பற்றிய வலைப்பதிவர்களின் கருத்து குறித்து எதுவும் பேசாமல் கலைந்தது
2. நான் சட்னிவடையா இல்லையா என்பதை எல்லாரும் தெரிந்துகொள்வதில் ஆர்வம் காட்டியது, நான் இல்லை என்பதை தேய்ந்துபோன ரெக்கார்டாக சொல்லிச்சொல்லி களைத்துப்போனது.
3. சந்திப்பு முடியும் தருவாயில் போலியாரிடம் போனைக்கொடுங்கள் என்ற முத்துக்குமரன் அழைப்புக்கு யார் போலியார் என்ற குசும்பன் மகியிடம் என்றவுடன் வணக்கம் போலியாரே என்ற முத்துக்குமரன் குரலுக்கு வணக்கம் தலைவா என்று வாய்வரை வந்த வார்த்தையை மல்லுக்கட்டி முழுங்கியது.
4. திராவிடம் பற்றி பேச ஆரம்பித்தாலும் அனானிகள் பற்றி பேச ஆரம்பித்தாலும் கிழுமத்தூர் எக்ஸ்பிரஸை கேளுங்கப்பா என சென்ஷி என்னையே மாட்டிவிட்டது. மாலன் பற்றி அய்யனார் பேசும் போதெல்லாம் கும்மி அடிப்பது எங்கள் பிறப்புரிமை எனக் கோபாவேசம் காட்டிய அன்பர்களின் வாதங்கள் நகைச்சுவை என்பது எவ்வளவு கடிணம் எனச் சொன்னபோது சிரித்துக் கொண்டது.
5. அட்டகாசமான சந்திப்பை அரசியல் பேசி கெடுத்துக்கொள்ளவும், வேறு விவாதங்கள் செய்து சொந்த செலவில் சூனியம் எதுவும் வைத்துக்கொள்ளவும் எந்த பதிவரும் முன்வராமல் எந்த போலியும் இல்லாமல் நட்பான மிகச் சந்தோசமான சந்திப்பாக அமைந்த சந்திப்பு
7 comments:
என்னய்யா ஏன் ஏன் இப்படி...எல்லாம் என்னையே சொல்றீங்க நேற்று அலைன் சிரிச்சது பத்தாது...?
உன்னய வச்சித்தான்யா காமெடி பன்ன முடியும், அய்யனார வச்சி பன்னுனா இன்னும் ரெண்டு கவுஜ எழுதுவேன்னு மிரட்டுறாரு
கிழுமத்தூர் எக்ஸ்பிரஸ் மேல ஏறின எக்ஸ்ப்பிரஸ் பத்தி எழுதலையே மகி! சேதாரம் ரொம்பத்தான் அதிகமோ!
போளி, போண்டா இதெல்லாம் யாரேனும் சாப்பிட்டேளா?
அப்படி இல்லன்னா எதுக்கு ஓய் வலைப்பதிவர் சந்திப்பு?
நீங்கள் எடுத்த போட்டோவை எனது மெயிலுக்கு அனுப்பவும்
நான் எடுத்த போட்டோ அனுப்பி வைக்கிறேன்
alif007@gmail.com
சாப்பிட கோழி பிரியாணிக்கு வச்ச ஆப்பையே எடுக்க முடியல, இதுல
போண்டா வேற சாப்பிட்டா என்ன விளாவுகளை சந்திக்க நேரிடும் என்று
நினைத்து பார்த்து விட்டு விட்டோம்.
//வணக்கம் போலியாரே என்ற முத்துக்குமரன் குரலுக்கு வணக்கம் தலைவா என்று வாய்வரை வந்த வார்த்தையை மல்லுக்கட்டி முழுங்கியது.//
கும்மாங்குத்து ?
உனக்கெல்லாம் யாராவது சொல்லியாதரனும் ?
:)))
Post a Comment