Thursday, July 19, 2007

செந்தழல் ரவிக்கு கண்டனம்!

நேற்று கொரியாவில் இருந்தவாரே என்னோடு சாட்டில் பேசிக் கொன்றிருந்த செந்தழல் கொரிய பாசையில் வணக்கம் சொன்னார் என்னடா திடீரென்று நம்மிடம் பேச்சே இல்லை ஆனால் கழகச் செம்மல் டைப்பிங் டைப்பிங் என்று காட்டுகிறெதென்று யோசித்தவாரே இருந்தால் தமிழ் மணத்தில் என்னையும் வைத்து காமெடி பண்ணியிருந்தார் சரி போனால் போகட்டும் என்று விட்டுவிட்டேன் இன்று காலையில் பார்த்தால் மீண்டும் ஒரு போட்டோ போட்டு பாஸ்டன் பாலாஜிக்கு கண்டனம் என்ன கொடுமை இதெல்லாம் கேட்க ஆளில்லை என்ற எண்ணமா?

சலங்கை ஒலி படத்தில கமல்ஹாசனை ஒரு குண்டுப் பையன் புடிப்பானே அத விட நல்ல காமிரா என்கிட்டயும் இருக்குன்னு ஒங்களுக்கும் தெரியனும்ல..


எங்களாலும் செந்தழலை விட நல்ல பிகர்களை வைத்து போட்டோ பிடிக முடியும் என்ற போதிலும் கொரிய, தாய்லாந்து, டுனீசிய பிகர்களோ ஏன் நம் பக்கத்து ஊர் கருவாச்ச்சி காவிய கதாநாயகிகளோ ஒத்துக் கொள்ளாத காரணத்தாலும், (கொடுத்து வைச்ச ரவிக்கு ஒரு கண்ணடிப்போடு எனக்கு கிடைச்ச சப்ஜெக்டுகளை வைத்து எனது புகைப்பட ஆல்பத்தை காட்சிக்கு வைக்கிறேன் . பாத்துடுவோம் நானா இல்லை ரவியொட தாய்லாந்து பிகரான்னு"எல்லா மொழியும் கத்துக்கிற வரைக்கும் தான் ரவி பஞ்சு போல இருக்கும், கத்துகிட்டா காத்துமாதிரி ஆகிடும்"
என்னோட இந்த கொலவெறிய எல்லாம் தீர்த்துக் கொள்ள புதுசா ஒரு போட்டொ ப்ளாக்கும் ஆரம்பிக்கிர எண்ணம் இருக்குங்கிறதை தாழ்மையா தெரிவிச்சுக்க கடமப் பட்டிருக்கேன்

12 comments:

குசும்பன் said...

என்னத்த தான் நீங்க பக்கத்துல இருந்தாலும் போட்டோ விசயத்துல என் ஓட்டு ரவிக்குதான் :))) ஹி ஹி

நீங்க இப்படி பயங்கரமாண ஆயுதங்களை காட்டி அனைவரையும் பயமுறுத்தினாலும்... எங்கள் ஓட்டு கொரியா ஜிகிடிக்கே!!!
எங்கள் ஓட்டு கொரியா ஜிகிடிக்கே!!!
எங்கள் ஓட்டு கொரியா ஜிகிடிக்கே!!!

அபி அப்பா said...

ஓக்கே! ISO 200000000001

♠ யெஸ்.பாலபாரதி ♠ said...

பாத்ரூம் கண்ணாடியோ அல்லது வாஸ்பேசின் கண்ணாடியோ..
கொஞ்சம் தொடச்சி அப்புறம் படம் எடுத்திருக்கலாம். :)))

மகேந்திரன்.பெ said...

//இப்படி பயங்கரமாண ஆயுதங்களை காட்டி அனைவரையும் பயமுறுத்தினாலும்//

இதைவிட பயங்கரமான போட்டோக்கள் அடுத்த பதிவில் என்று இங்கே குசும்பனுக்கு கூறிக்கொ"ல்ல" கடமைப் பட்டிருக்கிறேன்

மகேந்திரன்.பெ said...

//ஓக்கே! ISO 200000000001 //

இதற்க்கான விருதுப் பணத்தை நேரில் வந்து வாங்க முடியாத காரணத்தால் அமுக, குமுக அக்கவுண்டுக்கு அனுப்பவேண்டும் என அன்பாய் கேட்டுக்கொ"ல்"கிறேன்

மகேந்திரன்.பெ said...

//பாத்ரூம் கண்ணாடியோ அல்லது வாஸ்பேசின் கண்ணாடியோ..
கொஞ்சம் தொடச்சி அப்புறம் படம் எடுத்திருக்கலாம்.//

தொடச்சதுக்கு அப்றம்தான் எடுத்தேன் தெரிஞ்சுக்கோங்க

மின்னுது மின்னல் said...

எங்கள் ஓட்டு கொரியா ஜிகிடிக்கே!!!
//
riippiitteey

மகேந்திரன்.பெ said...

//எங்கள் ஓட்டு கொரியா ஜிகிடிக்கே!!!
//
riippiitteey //

இந்த கமெண்டில் இருக்கும் ரிப்பீட் என்பதற்கு அர்த்தம் ரிப்பீட்டா இல்லை ரிவீட்டா?

சொல்லுங்க மின்னல்

மின்னுது மின்னல் said...

ஒங்க போட்டொவுல ஃபேஸ் தெரியல நான் வேண்னா சாப்பிடும் போது எடுத்தது மரத்தடில எடுத்ததை என்னோட பிளாக்குல போடவா தல..?

மின்னுது மின்னல் said...

இந்த கமெண்டில் இருக்கும் ரிப்பீட் என்பதற்கு அர்த்தம் ரிப்பீட்டா இல்லை ரிவீட்டா?

சொல்லுங்க மின்னல
//

சொல்லியாச்சி இப்ப நீங்க சொல்லுங்க

மீதி படத்தை போட்டவா..?

மகேந்திரன்.பெ said...

மின்னல் இன்னுமா போடல போடுங்கய்யா

செந்தழல் ரவி said...

ஜிகிடி என்று அந்த பிகரை அந்த ஊர் பாசையிலேயே வாழ்த்திய அத்துனை அன்பு அஞ்சா நெஞ்சங்களுக்கு வாழ்த்து...

என்னதான் பதிவு போட்டாலும் வெற்றி எனக்கே என அந்த இரண்டு பின்னூட்டங்களும் உறுதிசெய்வதை கண்ணார கண்டுவிட்டேன் என் தோழா...

இரு கண்ணிருந்தால் நீயும் கண்டுவிட்டு போடா..

:))))))))))))