1947 ஆகஸ்டு 15 இந்தியா, பாகிஸ்தான் பிரிவிற்குப் பிறகான ஒரு தனி நாடாக கட்டமைக்கப் பட்ட பல்வேறு மொழிகள், கலாச்சாரங்கள், தேசிய இனங்கள், ஏழைகள், திருடர்கள், எளிய மக்கள் , ஏமாற்றும் கடவுள்கள், அவர்களை பயன் படுத்தும் மூடர்கள், அவர்களின் வயிற்றில் அமிலத்தை வார்த்த இடதுசாரிகள், திராவிட சித்தாந்த பேரலைகளை உண்டாக்கிய பெரியார்கள், இந்துக்களின் முகத்திரையை முடிந்த அளவுக்கு கிழிக்க முற்பட்ட பேராசான் அம்பேத்கர்.... இதற்கெல்லாம் மேல் இவரால் தான் இதனால்தான் என்று இன்று மோடியை கட்டமைத்த மீடியா பிம்பங்களின் ஒரே உருவமான திருவாளர் மோகன் தாஸ் கரம்சந்த் காந்தி.
இத்தனை சிக்கல்களுக்கும் மத்தியில்தான் இந்தியா இங்கிலாந்து என்ற ஒரு பேரரசில் இருந்து விடுபட்ட ஒரு சுதந்திர நாடாக பிரகடனம் செய்யப்பட்டது, குண்டூசி முதல் குண்டி கழுவும் காகிதம் வரை பாகப் பிரிவிணைகள். சேர்களும் நாற்காலிகளையும் விட மனிதர்கள் அத்தனை மதிப்பு பெற்று பாகம் பிரிக்கப் படவேண்டிய பொருளாய் இல்லாத காலம்.
ஜவஹர்லால் நேருவும், இரும்பு மனிதர் படேலும் இந்தியாவை ஒரு குடையின் கீழ் கொண்டு வர முயன்று தங்களை பிரபல்யம் செய்துகொண்டிருந்தபோது ஒரு கோவணாண்டி மனிதர் கல்கத்தாவில் வழக்கம் போல முதல் தர உண்ணாவிரத நாடகத்தை அரங்கேற்றிக் கொண்டிருந்தார். அவரி நாடகத்தை வழக்கம் போல பேராசான் பெரியார் கிழித்து தொங்கவிட்டுக் கொண்டிருந்தார். பேரறிஞர் அண்ணா சில கோப தாபங்களால், கருத்து வேறுபாடுகளால் கருப்புக் கொடி தேவையில்லை எனக்கென்று கலகம் செய்து கொண்டிருந்தார், தமிழகம் ஒரு திரிசங்கு நரகத்தில் ராஜாஜியின் இந்தியாவின் முதல் கவர்னர் ஆட்சியின் கீழ் தொங்கிக் கொண்டிருந்தது.
போனவை போனதாகட்டும் நிகழ்காலத்திற்கு வருவோம், இப்படித்தான் சில ஆண்டுகளுக்கு முன் அப்துல் கலாம் என்ற ஒரு புனித பிம்பம், இன்றைக்கு ஆளும் இதே பாஜகவால், உண்டாக்கப் பட்டு கட்டமைக்கப் பட்டும் அதன் பின் கீதையும் ராமாயணமும், குரானிலும் பைபிளும் சொல்லாத புதிய அத்தியாயமான 2020 என்ற முழு ஹிந்திய தேசத்திற்கு வித்திட முயற்சித்த அண்ணார் அப்துல் கலாம் . ஒரு இந்துவாக இருக்க நீ பிறப்பால் இந்துவாக இருந்தால் போதும் , இந்தியனாக இருக்க பிறப்பால் முசல்மானாகவும், வாழகையால் இரண்டு பங்கு இந்துவாகவும் இருக்க வேண்டும் என்று காஞ்சி காமகோடி பீடத்தில் மண்டியிட்டு , நிரூபித்த மகான்.
இந்த கருமங்கள் எல்லாம் போய் சேர்ந்துவிட்டது என்று நானும் நீங்களும் கனவுகொண்டிருந்த வேளையில் , அன்னா ஹசாரே என்றொரு புனித பிம்பம் தன்னைத்தானே சுயம்புவாக உருக்கொண்டு, ஒரு புதிய அலையை உருவாக்கி, தன்னை ஒரு நவீன உலக பெருமகன், தன் சீடர்கள் எல்லாம் எந்த கட்டுப் பாடுகளுக்குள்ளும் அடங்காத பிறவிகள் என்ற புதிய சட்டம் படைக்க முயன்று முற்றும் தோல்வி அடந்த அரவிந்த் கேஜ்ரிவால்களும், டெல்லியில் மண்ணைக் கவ்வியபோது பாபா ராம் தேவ்கள் ராக்க்கி சாவந்துகளுக்கு கங்கனம் கட்டவா இல்லை ராக்கி கட்டவா என்று சிந்தனை செய்துகொண்டிருந்தார்கள்.
இந்த கால கட்டங்களில் தான் ஈழப் போரும் அதற்கு ஆதரவாளர்களாக ஊடக பிம்பங்களால் கட்டமைக்கப் பட்ட லொட்டு லொசுக்கு இவர்களுக்கு ஆதரவாக உயிகளை இழந்த முத்துக் குமார்கள். இவர்களின் ஒரே எதிரியான தென் இந்திய திராவிட சித்தாந்தங்களின் ஒரே கடை ஆளான கருணாநிதியை நோக்கி திரும்பின. வெற்றி பெற்ற பக்கம் இருப்பதாக தங்களை கருதிக் கொண்டன.
அதுவும் போகட்டும் என்றுதான், தமிழகத்தில் திராவிடத்தை வீழ்த்தவென்றே ஊடக ரவுடிகளால் உண்டாக்கப் பட்ட சீமான்களும் சீமாட்டிகளும் பெரும் வெளிச்ச வெள்ளத்தில் மிதந்து கொண்டிருந்தார்கள், அப்போது அலைகளில் ஒதுங்கிய வைகோக்கள், பழ மாறன்கள் , சீமான்கள் , மணியன்கள், எல்லாவற்றுக்கும் மேல் கோட நாடு சீமாட்டி.
சீமாட்டிகளுக்கு சேவகம் செய்ய வந்த பிரவீன் குமார்கள், தேர்தல் ஆணையர்கள் வேடத்தில் வந்த தே...............................ர்தல் ஆணையர்கள்... ஆனாலும் என் பேராசான் பெரியார் சொன்னது போல, ஒரு அடிமையிடம் இருந்து ஒன்னொரு அடிமையிடம் தானே நாம் சுதந்திரத்தை அடகு வைத்திருக்கிறோம்?
ஆனால் இத்தனை இழிவுகளுக்கும் பின்னால் எனக்கு இந்தியா என்ற ஒரு உடோப்பியா தேசத்தை கொண்டாட ஆயிரம் காரணங்கள் உண்டு, நான் வைக்கும் விமர்சனங்கள் என்பவை என் சக மனிதம் கொண்டாடும், மிக முட்டாள்தனமான கடவுள் மேல், அந்த கடவுளின் மூன்றாம் தர தரகர் மேல் இந்த தரகர்கள் மேல் அளவு மீறிய பற்று வைக்கும் முட்டாள் மாக்களும் வைக்கும் அன்புமேல் எனக்கும் ஒரு கோபம் இருக்கும். இதை எதைக் கொண்டு தீர்க்க?. மோடிகளும் காவிகளும் அரசாளும் நாடாக இருந்தாலும், எங்காவது ஒரு மூலையில் ஜனநாயகம் என்ற பேரால் சக மனிதர்கள் மேல் கொஞ்சமாவது துளிர்த்து நிற்கும் அன்பு.
இன்றும் நாளையும் , இதைப் போலவே எழுதும் ஆயிரத்து சொச்சம் எழுத்தர்களும் இதுபற்றி எழுத ஆயிரம் காரணங்கள் உண்டு முற்றுப்பெறாத இந்த வியாக்கியானங்களை, விமர்சனங்களை என்னால் புறக்கணிக்க முடியாமல் இந்த அகண்ட தேசம் எனக்கும் ஒரு இடம் கொடுத்தது வெறும் இயல்பல்ல. நாளையே நான் முன் எப்போதோதோ இப்போதைய தமிழக முதல்வருக்கு எதிராக எழுதிய நிலைத் தகவல்களுக்காக கைது செய்யப் படலாம், இதே தமிழக முதல்வர் என் விடுதலைக்காக போராடவும் செய்யலாம், பிரபாகரனை கைது செய்து தூக்கில் இடுவோம், போரென்றால் பொதுமக்கள் சாகத்தான் செய்வார்கள், என்ற பித்தலாட்டம் போல, இதுவும் கடந்து போகும். இதே முதல்வர், தனித் தமிழ் ஈழம் ஒன்றே தமிழர்களின் நிரந்தர விடிவுகாலம் இதை அடைவதே எமது குறிக்கோள் என்று போர் முழக்கம் செய்வதையும், அதை, நம் 56" மார்பகம் கொண்ட மோடிகளின், மார்புகளில் பார்ப்பதுவும், விதியா இல்லை இந்த பாமர மக்களின் மதியில் கொண்டு வந்து சுதந்திரம் என்ற பெயரால் விவாதிக்கும் சதியா என்று தேடி தேடி பேசித் தீர்ப்போம் வா,
அந்த நாள் வரை... ஹேப்பி இன்டிபெண்டன்ஸ் டேய்ய்ய்ய்ய்ய்ய் !!

No comments:
Post a Comment