
ஜூனியர் விகடனில் கருத்து தெரிவித்திருக்கும் துக்ளக் அதி புத்திசாலிகளின் தலைவர் திரு சோவுக்கு இந்த பாமரனின் சந்தேகங்கள் (எனது கேள்விகள் அடைப்புக்குள்)
‘‘ஒரு சமுதாயம் வளர வேண்டும், எல்லோருக்கும் சமூக நீதி கிடைக்க வேண்டும் என்றால் இட ஒதுக்கீடு விகிதத்தையும், இட ஒதுக்கீடு செய்யப்படும் துறைகளையும் படிப்படியாகக் குறைத்துக் கொண்டேதான் வர வேண்டும். (வளர வேண்டுமென்றால் கூட்ட வேண்டுமா குறைக்க வேண்டுமா?)
அதைவிட்டுவிட்டு மேலும் மேலும் இட ஒதுக்கீடு இல்லாத இடங்களில், குறிப்பாக தனியார் நிறுவனங்களிலும்கூட அதைப் புகுத்துவதும், இருக்கிற இடங்களில் புதிது புதிதாக சில சாதியினரை சேர்த்து இட ஒதுக்கீடு அளிக்க வகைசெய்வதும் கொஞ்சமும் சரியல்ல. (பின்னே அரசு வேலை கிடைப்பதற்க்குள் தான் எங்கள் ஆயுளே முடிந்துபோகிறதே இப்படி தர முடியாது என்று எந்த தனியார் நிருவனமும் சொல்கிறதா இதுவரை?)
இந்தக் கருத்து எல்லோருக்கும் ஏற்புடையதுதான். (யாருக்கு ? எதிர்ப்பாளர்களுக்கா?)
இருந்தாலும், இந்த இடஒதுக்கீட்டு முறையை எதிர்த்தால் ஓட்டு பறிபோய்விடுமோ என்ற பயத்திலேயே எல்லோரும் எதிர்க்கத் தயங்குகிறார்கள். (அதிமுக பிஜேபி கூடவா?)
இட ஒதுக்கீட்டின் மூலம் கிடைக்கிற பெருவாரியான இடங்களை& வசதியும், கல்வி அறிவும் படைத்த குடும்பங்களைச் சார்ந்தவர்களே பெற்றுவிடுவதால், உண்மை யாக யாருக்கு இட ஒதுக்கீடு தேவையோ அவர்களுக்கு அது கிடைக்காமல் போய்விடுகிறது. (இப்போதே இப்படியென்றால் இடஒதுக்கீடு இல்லாவிட்டால் என்னவாகும்?)
ஆக, கல்வி அறிவு பெறாத குடும்பங்களில் இருந்து வருகிற சிறுவர்களுக்கும், சிறுமிகளுக்கும் ஆரம்பத்தில் இருந்தே சிறப்பான கல்வியைக் கொடுப்பதுதான் இதற்கெல்லாம் சரியான வழி. இதற்காக மத்திய&மாநில அரசுகள் ரெஸிடென்ஷியல் பள்ளிகளைத் தொடங்க வேண்டும். அங்கெல்லாம் தகுதிபெற்ற ஆசிரியர்களை நியமித்து, இந்த சிறுவர்&சிறுமிகளுக்கெல்லாம் பயிற்சி அளிக்க வேண்டும். அப்போதுதான் அவர்கள் மற்றவர்களோடு போட்டிப் போடும் அளவுக்குத் தங்கள் தகுதியை வளர்த்துக் கொள்வார்கள். ஆரம்பத்திலிருந்தே மட்டரகமான கல்வியைக் கொடுத்து, அவர்களைத் தகுதியற்றவர்களாக்கிவிட்டு, அதன்பிறகு இடஒதுக்கீடு தருகிறேன் என்று சொல்வது, ஒரு மோசடி வேலை! இதுதான் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது.(நீங்கள் சொல்வதை பார்த்தால் இப்போது ஒதுக்கினால் கூட இன்னும் இருபது ஆண்டுகள் ஆகுமே அதுவரை?)
எப்படியாவது முலாயம் சிங் போன்றவர்களுக்குப் போய்க்கொண்டிருக்கும் பிற்படுத்தப்பட்டவர்களின் ஓட்டுகளைத் தங்கள் பக்கம் திருப்பிவிட வேண்டும் என்ற ஆசையில் காங்கிரஸ் கட்சியினர் உயர்கல்வியிலும் இட ஒதுக்கீடு என்று கோஷமெழுப்ப ஆரம்பித்திருக்கிறார்கள். இது ஓட்டுகளை மட்டும் மையமாக வைத்து நடத்தப்படும் நாடகமே தவிர, உண்மையான சமூக நீதிக்காக அல்ல. இதனை மக்கள் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும். (எங்களுக்கு புரிவதால்தான் கேட்கிறோம் வீனாக முலாயம் எதற்கு இங்கே?. வெறும் மூன்று சதவிகிதம் பேருக்கு ஐம்பது சதவிகிதம் இடஒதுக்கீடு போதாதா மீதமிருக்கும் இடத்தில் பிற்பட்டவர்களுக்கு ஒதுக்கினால் என்ன தவறு என்று பா.ம.க கேட்கிறதே? )
ஆனால், இடஒதுக்கீட்டுக்கு எதிர்ப்பாளர்கள் என்று சொல்லிக் கொள்பவர்கள், ஆர்ப்பாட்டங்கள் நடத்து வதையும், பொதுமக்களை சங்கடத்துக்கு உள்ளாக்குவதையும் என்னால் ஏற்க முடியவில்லை. அந்த அணுகுமுறை தேவை இல்லாதது. குறிப்பாக, டாக்டர்கள் வேலை நிறுத்தம் செய்வதென்பது கண்டிக்கத்தக்க விஷயம் மட்டுமல்ல... பொறுப்பில்லாத்தனமுமாகும்’’ (இதை ஏன் முதலிலேயே சொல்லவில்லை)