Tuesday, September 12, 2006

இந்தியா ஒளிர்கிறது

நேற்று கம்யூனிஸ்டுகள் ஏன் அழுகிரார்கள் எனக் கேட்டு போட்ட பதிவுக்கு மிக நல்ல விளக்கம் தந்த திரு அசுரன் அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் அதே வேளை... இந்தியா ஒளிர்கிறது என்பதையும் நாம் மறுக்க முடியாது. இங்கே பாருங்கள் இவர்கள் எல்லோரும் வருமைக் கோட்டுக்கு மேல் இருக்கும் ஆண்டுக்கு 2350$ க்கு மேல் சம்பாதிக்கும் மேட்டுக்குடி மக்கள்

ஜெய் ஹிந்த் !!!

Photobucket - Video and Image Hosting

Photobucket - Video and Image Hosting

Photobucket - Video and Image Hosting

Photobucket - Video and Image Hosting

Photobucket - Video and Image Hosting

Monday, September 11, 2006

9/11 = ?

வலைப்பூ முதல் தொலைக்காட்சிகள் வரை 11/9/2001 இல் நடத்தப்பட்ட நியூயார்க் நகர இரட்டைக் கோபுர தாக்குதலுக்கும் பென்டகனில் தோல்வியில் முடிந்த தாக்குதலுக்கும் அதில் இறந்து போன 2971 உயிர்களுக்கும் தங்கள் அஞ்சலிகளையும் ஐந்தாண்டு நினைவுகளையும் செலுத்திவிட்ட வேளையில் 9/11 நமக்கு சொன்ன பாடம் என்ன என்று எவரும் இதுபற்றி கண்டு கொண்டதாக தெரியவில்லை.

9/11 அல்கொய்தா தீவிரவாத இயக்கம் உலகுக்கு தனது இருப்பை பகிரங்கப் படுத்தியது.


9/11 சர்வதேச பயங்கரவாதம் எனும் புதிய வார்த்தை கண்டுபிடிக்கப் பட்டது

9/11 சனநாயக முகமூடிக்குள் ஒளிந்து கிடந்த அமெரிக்க தீவிர வாதத்தின் கோரப் பற்கள் வெளிச்சம் பெற்றன

9/11 பாகிஸ்தானுக்கு சில எலும்புத்துண்டுகள் கிடைத்தால் பங்காளிகளையும் அழிக்க உதவும் என உலகம் தெரிந்து கொண்டது


9/11 இரண்டாம் உலகப் போருக்கும், ஈராக்கின் முதல் போருக்கும் பின் ஆயுத சோதனை செய்ய இடமின்றி இருந்த அமெரிக்கா ஆப்கனை பயன் படுத்திக் கொண்டது.

9/11 இஸ்லாம் என்பதே தீவிரவாதம் எனும் ஒரு போலிப் பிரச்சாரத்தை மேற்க்குலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்தது.

9/11 வியட்னாம் போருக்குப் பின் அதிக அமெரிக்கர்களை ஆப்கனிலும், ஈராக்கிலும் பலிகொடுத்தது.

9/11 உடன் வராத நாடுகளை தீவிரவாதத்துக்கு துணைபோகும் கையாட்கள் என முத்திரை குத்தியது.

9/11 ஐ. நா என்பது வறுமை நாடுகளுக்கு எங்களின் வேலி அது எங்களுக்கு அல்ல என உலகத்துக்கு சொன்னது.

9/11 தங்கள் கவனம் முழுக்க தீவிரவாத எதிர்ப்பு ஆனால் அது முழுக்க எண்ணை வயல் நிரம்பிய மத்திய கிழக்கு நாடுகளில் மட்டும்தான் என சொல்லாமல் சொன்னது.

9/11 இஸ்ரேலுக்கு ஆயுதம் விற்பதற்க்காகவே /வாங்குவதற்க்காகவே அவர்களிம் முதுகில் தட்டிக்கொடுத்து கொம்புசீவி விட்டது.

9/11 தீவிர வாத ஒழிப்புதான் முக்கியம் உகாண்டா வில் அது நடந்தால் உள் நாட்டு சண்டை, பாக்கிஸ்தான் தீவிரவாதம் என்றால் அங்கே எங்களுக்கு வேலை இல்லை..காரணம்?.. எண்ணை இல்லை.

9/11 குவாதனாமோ சிறைச்சாலையில் என்னவேண்டுமாலும் செய் ஆனால் இஸ்லாம் என்பதே தீவிரவாதம் எனும் தனது பழைய போலிப் பிரச்சாரம்.

9/11 சவூதிக்கு ஆயுத சப்ளை செய்துகொண்டே ஈரானின் அணுக் கொள்கைக்கு கடும் எதிர்ப்பு.

9/11 ஈராக்கில் இருந்த கண்ணுக்கு தெரியாத பேரழிவு ஆயுதங்களை தேடி பாக்தாத் தெருக்களில் குண்டுகளுக்கு பொதுமக்களை இரையாக்குவது.

9/11 ஈராக்கில் நினைக்க முடியாத பர்கர் கிங்கும், கே.எஃப்.சி யும், ஹார்லி டேவிட்சனுக்கும், கிளைகள் திறப்பது.

9/11 தனது ஹாவ்க் ரக ஹெலிக்களும், மிக் விமானங்களும் சோதனை ஓட்டம் நடத்துவது

9/11 அமெரிக்காவையும் பிற ஆதரவு மேற்க்குலக மக்களையும் இன்னும் ஒரு 9/11 க்கு பயத்துடனே காத்திருக்க வைத்து தனது தாக்குதலுக்கு ஒரு
மறைமுக அனுதாபம் தேடுவது.

9/11 உலகின் வல்லரசு என்பதை நிரூபிக்க ஒரு சந்தர்பம்.

சரி இதற்கெல்லாம் பின்னர் தீவிரவாதம் ஒழிந்ததா?.. இல்லை.

9/11 க்கு காரணமாக சொல்லப்படும் அல்கொய்தா இன்னும் அச்சுருத்தலாகவே இருக்கிரது.

அல்ஜசீரா தொலைக்காட்சியில் தோன்றி ஒசாமா பின்லேடன் தனது கலாஷ்னிகோவை வருடிய படியே மேற்க்குலகுக்கு எச்சரிக்கை விடுகிரார்.

முல்லா உமர் இன்னும் இந்திய எஞ்சினியர்களை விடுவிக்க பேரம் பேசுவார்.
சதாம் உசேன் மறைத்து வைத்திருந்த ஆயுதங்கள் (?) இன்னும் கண்டுபிடிக்கப் படவில்லை..


பாக்தாத் தெருக்களில் இன்னும் குண்டுகளின் சத்தம் ஓயவில்லை.

அமெரிக்கா இங்கிலாந்து எங்கும் சுதந்திர விமானப் பயனம் சாத்தியமில்லை,,, நிர்வாணமாக போதல் நலம்.

அமெரிக்க மக்களின் 76 % மக்கள் இன்னும் 9/11 தாக்குதல் பயத்தில் இருந்து மீளவில்லை.

பாகிஸ்தான் இந்தியாவுக்கு தனது தீவிரவாத ஏற்றுமதியை நிருத்தவில்லை.

பிறகு எதற்க்கு 9/11 நினைவுகளும்.. தாக்குதல்களும்.. இரண்டு நாடுகளின் மக்களை அகதிகள் ஆக்கியதும்?

கம்யூனிஸ்டுகள் ஏன் அழுகிறார்கள் ?


Photobucket - Video and Image Hosting
Photobucket - Video and Image Hosting


Photobucket - Video and Image Hosting


Photobucket - Video and Image Hosting


Saturday, September 09, 2006

பார்ப்பனப் பன்றி

காலையில் கண்விழித்த அய்யர் தேள்கொட்டியதுபோல் திடுக்கிட்டார். தனது கண்களை திறந்து பார்க்கும் வேளை, வாசலுக்கு முன் ஒரு பன்றி படுத்துக்கிடந்தால் எந்த அய்யர்தான் திடுக்கிடமாட்டார்.

தனது கைக்கு கிட்டத்தில் கிடந்த விளக்குமாற்றை எடுத்து அதை விரட்டப் போனவரை

"நில்"

என்ற குரல் நிறுத்தியது... அவர் கிட்டத்தட்ட மூர்ச்சையடையும் நிலைக்கு சென்றார். காரணம். படுத்துக்கிடந்த பன்றி பேசியதுதான்.

"மூடனே.. யாரை அடித்து விரட்டப் பார்க்கிராய்?" என்றது..

அய்யர் தன் காதுகளை நம்பமுடியாதவராய் மீண்டும் அதை உற்று நோக்கலானார்...ஆம் அப் பன்றிதான் பேசியது.

" நீ யார் ஏன் என் வாசலில் படுத்தாய்? இது ஆச்சாரமான அய்யர் வீடு இங்கே நீ வரலாமா?" என்றார்

"எல்லா அய்யர்களையும் போல் நீயும் முட்டாள்தானா?" என்றது பன்றி

தலைக்கு மேல் வந்த கோபத்தை அடக்கியவாரே

" நீ யார் ?" என்றார் மீண்டும்.

"மூடா நான் வராகமூர்த்தியடா" என்ற பன்றியை வெறித்து நோக்கிய அய்யருக்கு பன்றி தான் ஏன் இங்கே வந்தேன் என்பதை சொல்லத் தொடங்கியது.

"மிக நீண்ட காலத்துக்கு முன்னால் நீ ஒரு பன்றி வேட்டைக்காரனாக இருந்து பல காட்டுப் பன்றிகளை கொன்றொழித்தாய். அப்போது நீ கொன்றது ஒரு பன்றி வேடம் பூண்ட பார்ப்பனரை, அவர் தவம் கலைந்து போனதாலும், அவர் இறக்கும் தருவாயில் இருந்ததாலும் உனக்கு ஒரு சாபம் இட்டார் மறுபிறவியில் வராகமூர்த்தியே உன் வாசலுக்கு வருவார் என்று.

"இது வரம் தானே சாபமில்லையே வராகமூர்த்தி என் வாசலுக்கு வந்தது வரமா சாபமா?" என்றார்.

நீ இங்கே ஒன்றை கவணிக்க வேண்டும் அவர் கொடுத்த சாபம் இப்படியானது

" அதாவது உனக்கு மட்டுமே நான் வராகமூர்த்தி எனும் உண்மை தெரிந்திருக்க வேண்டும் இதை வெளியில் யாரிடமாவது சொன்னால் நான் நிஜப் பன்றியாகிவிடுவேன் இது மீண்டும் உனக்கு கடவுள் சாபத்துக்கு ஆளாக்கும், அதே போல் நீ பூசைக்கு செல்லும் வேளைகளில் நீ என்னையும் உன்னோடு அழைத்துப் போகவேண்டும்.. யாரும் கேட்டால் நீ பன்றிவளர்ப்பதாக சொல்லவேண்டுமேயன்றி என்னை வராகமூர்த்தி என அறிமுகப் படுத்தக் கூடாது அதே போல உன்னைத் தவிற நான் வேறு யாரிடமும், யார் முன்னிலையிலும் உன்னோடும் பேசவே மாட்டேன்" இதுதான் சாபம்" என்றது.

அய்யர் நிலைகுலைந்து போனார் மனசளவில். என்ன சோதனை இது மக்கள் என்னை என்ன நினைப்பார்கள் பார்பனன் பன்றி வளர்ப்பதாக பேச்சு வருமே இது தன் குலத்துக்கு இழுக்கு ஆகுமே என எண்ணினார்...

சரி நடப்பது நடக்கட்டும் கடவுள் சாபத்துக்கு நான் மட்டும் விலக்கா என்று எண்ணியவாரே வராகமூர்த்தியை வீட்டுக்குள் அழைத்துவந்து உபசரித்தார். உள்ளே வந்த வராகம் என்னை குளிப்பாட்டிவிட்டு பூனூல் மாட்டிவிடு என்றது.

வெறும் பன்றி வளர்ப்பதாக சொன்னாலே மக்கள் கோபத்துக்கு ஆளாகவேண்டும் இதில் பூனூல் வேறா நடப்பது நடக்கட்டும் என்றவாரே அதைக் குளிப்பாட்டி பூனூலும் போட்டுவிட்டார். பன்றி பார்ப்பனர் ஆனது.

மனதுக்குள் அய்யர் நல்லவேளை பிள்ளையார் வரவில்லை என்று சந்தோஷப் பட்டர் பின்னே யானை கட்டி தீனிபோட அய்யர் என்ன பரம்பரை பணக்காரரா? இல்லையே.

தானும் குளித்து பன்றியின் துணையுடன் குளக்கரை நோக்கி போனார். பிள்ளையாரைக் குளிக்கவைத்து காலை நேர பூசை செய்ய வேண்டுமே..
பன்றியின் துணையோடு அரசமரத்தடி வந்தவர் அங்கே பிள்ளையாருக்கு ஒருகுடம் தண்ணீரில் குளியல் நடத்தி சந்தணம் பூசிவிட்டார்.

அப்போது கணேசர் சிரிப்பதுபோல் தோன்றவே உற்றுப் பார்த்து இல்லை எனக் கண்டார், கல்லாவது சிரிப்பதாவது என்றவாரே நகர ஆரம்பித்தவர் மீண்டும் தன்னோடு பன்றி வருகிரதா எனத் திரும்பிப் பார்த்தார் .

வந்தது.

வரும்போது அதிகாலை நேரமாதலால் தெருவில் நடமாட்டம் இல்லை. யாரும் பார்க்கவில்லை. ஆனால் இப்போது கொஞ்சம் நடமாட்டம் இருந்தது. சிலர் அய்யரையும் பன்றியையும் சேர்த்துப்பார்த்து குசுகுசுக்க ஆரம்பித்தனர், அதுவும் பூனூல் வேறு போட்ட பன்றியை காட்டி அய்யரை நோக்கி கைகாட்டி எதுவோ பேச ஆரம்பித்தார்கள்.

வீட்டுக்கு வந்த அய்யர் மனசுக்குள் இன்னும் என்னவெல்லாம் நமக்கு வருமோ என்றவாரே சமையலுக்கு தயாரானார். வராகமூர்த்தி எனக்கு சமைத்த உணவு வேண்டாம் பச்சை காய்கரிகள் மட்டும் போதும் உனக்கு வேண்டுமானால் சமைத்துக்கொள் என்றது.

சரி என்றவாரே சமையல் செய்யும் வேளையில் வெளியில் ஒரு கும்பல் வந்து அய்யர் பஞ்சாயத்து வரைக்கும் வந்து பன்றி பற்றிய கதை சொல்லவேண்டும் என நிர்பந்திக்கப் பட்டார். அதற்குள் மக்கள் புகார்சொல்லி இதை பஞ்சாயத்துவரைக்கும் கொண்டுபோனார்களே என்று அய்யர் கவலையுடன் சமைத்துவிட்டு வருவதாக வாக்களித்தார்.

சமையல் முடிந்ததும் பஞ்சாயத்துக்கு போனார் அங்கே முன்னரே கூட்டம் இருந்தது... பன்றியும் உடன்வருவதை கவனித்த கூட்டம் இரண்டுபேருக்கும் வழிவிட்டது.

"அய்யரே நீர் சாமிக்கு பூசை செய்பவர் நீர் எப்படி பன்றி வளர்க்கலாம்"

என்று எடுத்தவுடனே கேள்விக்கு வந்தது பஞ்சாயத்து
அய்யரால் பதில் சொல்ல முடியவில்லை. உண்மை சொன்னால் கடவுள் சாபத்துக்கு ஆளாகவேண்டுமே என எண்ணியவாரே

"தான் பன்றி வளர்ப்பது உண்மைதான் ஆனால் அதனால் தனது ஆச்சாரம்ம் எந்தவகையிலும் கேடு அடையாது என்றார்"..

கூட்டம் நம்புவதாக இல்லை.. மேலும் பன்றிக்கு பூனூல் போட்டுவிட்டதால் அது பார்ப்பனர் ஆகிவிடுமா என்றது கூட்டம்.

இப்போது அய்யரால் எச்சில் மட்டும்தான் விழுங்க முடிந்தது.

உண்மை சொல்லாமல் இப்படி இருக்கும் அய்யர் மேல் தீர்ப்பு வாசிக்கப் பட்டது

" இப்படி பூசை செய்யும் அய்யர் பன்றி வளர்ப்பது குற்றம் ஆதலால் அவரை பூசைகளில் இருந்து நீக்குவது என்றும் இனி அவர் ஒரு நிமிடம்கூட கிராமத்துக்குள் குடியிருக்கக் கூடாதென்றும், அதே நேரம் தனது இருப்பிடத்தை ஏரிக்கரையில் அமைத்துக் கொள்ள அனுமதி தருவதாகவும்
சொன்னது தீர்ப்பு",

பன்றியுடன் ஏரிக்கரைக்கு குடியேறிய அய்யர் தனது பார்ப்பனத் தனத்தையும் விடமுடியாமல் பன்றியையும் விரட்டமுடியாமல் ஒன்றாக வசிக்கலானார். சில நாட்களில் பன்றி இருப்பு அய்யருக்கு பழகிப் போனது வராகமூர்த்தியும் வஞ்சனையில்லாமல் வளரலானார்.

தினசரி ஒரு மந்திரம் என புத்துப் புது மந்திரம் கற்றுத்தந்து அய்யரை இன்னும் வல்லவர் ஆக்குவதாக சொன்ன பன்றி தனது பூனூலை திருகியவாரே அய்யருக்கு பாடம் நடத்தியது.

சில நாட்களில் பன்றியின் பயன் முழுதும் கிட்டிய அய்யர் தனது பார்ப்பனத் தன்மை என்பது என்ன என விளங்கிக் கொண்டார் பன்றியும் கொஞ்சம் கொஞ்சமாக விட்டு விலகுவதை உணர்ந்தார். அது இவரிடம் உணவு உண்ணாமல் வேறெங்கெல்லாமோ செல்ல ஆரம்பித்தது.

அய்யருக்கு ஆத்திரம் வந்தாலும் ஆண்டவனை பகைப்பதா என சும்மா இருந்தார்.

ஒரு நாள் எல்லாம் அதிகமானது, பன்றி காடுகளை அழிப்பதாகவும், குழந்தைகளை விரட்டுவதாகவும், அதை அடித்துக் கொல்லப் போவதாகவும் மக்கள் புகார் சொல்ல ஆரம்பித்தனர்...

அய்யர் செய்வதறியாமல் திகைத்தவாரே... என்ன செய்யலாம் என நினைத்தார்.

வராக மூர்த்தியின் வம்படிகள் அதிகமானபோது அய்யர் அதனோடு பேசினார்

" இப்படி செய்வது சரியா? என்று.

பன்றி சொன்னது..

"எனக்கு பூனூல் போட்டதால் என் குனம் மாறிவிடுமா? நான் கடவுளே ஆனாலும் பன்றிதானே அய்யரே"? என்றது...

அய்யர் என்ன செய்வார்... சொல்லுங்கள்

Thursday, September 07, 2006

பத்திரிகை (அ)தர்மம்

இது காலம் காலமாக நடப்பது தான் என்றாலும் இப்போது கொஞ்சம் அதிகமாகவே இருக்கிரது. ஒரு பத்திரிகையின் மூன்றில் ஒரு பங்கு அல்லது பாதிக்கு பாதி பக்கங்களை விளம்பரத்துக்கு ஒதுக்கும் பத்திரிகைகள் அவற்றின் விலையையும் கூட்டிக்கொண்டே போனால் என்ன அர்த்தம்.. இரண்டு வழிகளில் வருவாய் தேட நினைக்கும் ஒரு வியாபர நோக்கு மட்டும் அதிலும் இந்த உலகப் புகழ் பெற்ற பத்திரிகைகள் பன்னும் கூத்து கொஞ்ச நஞ்சமல்ல இங்கே சில உதாரணங்கள்:


Total Pages : 60, Advt Pages :20 , Price AED :20.00

Total Pages : 160, Advt Pages :80 , Price AED :59.00

Total Pages : 72, Advt Pages :26 , Price AED :20.00

Total Pages : 173, Advt Pages :30 , Price AED :30.00
Total Pages : 192, Advt Pages :92 , Price AED :60.00

Total Pages : 134, Advt Pages :54 , Price AED :29.00

Total Pages : 90, Advt Pages :25 , Price AED :5.00

Total Pages : 214, Advt Pages :90 , Price AED :55.00
Total Pages :235, Advt Pages :75 , Price AED :20.00

Total Pages :119, Advt Pages :30 , Price AED :40.00

Total Pages : 72, Advt Pages :22 , Price AED :5.00

Total Pages : 126, Advt Pages :40 , Price AED :30.00
இவற்றில் இந்திய பத்திரிகைகள் மட்டும் மிகக் குறைந்த விலை மற்ற எல்லாம் மலை.

இங்கிலாந்தில் லைட் எனும் ஒரு மாலைப் பத்திரிகை வந்து அங்கே மார்கட்டில் இருக்கும் ஜாம்பவான்கள் வயிற்றில் புளி கரைக்கிறதாம் காரணம்.. காசெல்லாம் இல்லை இலவசமாகவே தருகிறார்கள்...