Tuesday, July 31, 2007

தராதரமில்லாத பதிவுகள்

கடந்த சில நாட்களாக தமிழ்மணத்தில் மொக்கை, கும்மிபதிவுகளுக்கு எதிராக "தரமான பதிவர்கள் என அறியப் பட்டவர்கள்" சொல்லும் கருத்துக்கள் விவாதத்துக்கு உரிய ஒரு விஷயமாக இருந்து வருகிறது. முதலில் தரமான பதிவு என்பதற்கு அளவுகோலாக எதைச் சொல்கிறார்கள் எனச் சொல்லுங்கள். பிறகு மற்ற பதிவர்களை தரமான பதிவு எழுதச் சொல்லலாம்.
ஒரு பதிவரை இதை இப்படித்தான் எழுதவேண்டும் என சொல்ல எந்த பதிவருக்கும் உரிமை இருப்பதாக நான் கருதவில்லை. என்னையும் இப்படித்தான் இதை இவை பற்றித்தான் எழுத வேண்டும் எனச் சொல்வதற்கு யாருக்கும் உரிமை இருப்பதாக நான் கருதவில்லை. அப்படிச் சொல்வது கூட நான் நம்பும் கருத்துரிமையை நீங்கள் மீறுவதாகத்தான் கருதுவேன்.
கும்மிப் பதிவுகள் மொக்கைப் பதிவுகள் எனத் தரம் பிரிக்க இங்கே யாருக்கு அதிகாரம் இருக்கிறது?. நடுநிலையாக எழுதுங்கள் எனச் சொல்பவர்களுக்கும் இது பொருந்தும். நடுநிலை என எதைச் சொல்கிறார்கள்?. "தினகரன் கருத்துக் கணிப்பும் 3 பேர் மரணமுற்ற விஷயத்தையும் நடுநிலையாக எப்படி எழுத முடியும்?" பத்திரிகை கணிப்பும் சரிதான் 3 பேர் அதனால் இறந்ததும் சரிதான் என்றா?.
இங்கே நடுநிலை, தரம் என்ற எதுவும் கண்ணுக்கு தெரியவில்லை. உங்கள் கண்ணுக்கு தரமான பதிவாக தெரியும் பல பதிவுகளை அதிகம் பேர் படிப்பதில்லை ஏன்பது உங்களுக்கு தெரியுமா? அற்புதமான எழுத்துக்கள் படைக்கும் பதிவர்களை ஊக்குவிக்கும் முகமாக நாம் என்ன செய்துவிடோம். மிஞ்சிப் போனால் ஒரு பின்னூட்டம்.?
ஆனால் கும்மிப் பதிவுகளை கூட்டமாகப் போய் கும்மி எடுக்கிறோம் ஏன். எல்லாம் ஒரு சந்தோஷத்துக்குத்தான். வலையில் எழுதிக் கிழிப்பதால் எல்லாம் இந்தச் சமூகம் திருந்திவிடும் என நீங்கள் எண்ணினால் அது உங்கள் கருத்துச் சுதந்திரம். நான் எழுதுவதால் எனது பதிவுகளை படித்து ஒரு தனி மனிதனிடத்திலாவது எனது எண்ணங்களின் பாதிப்பை , அது குறித்தான ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்த முடியும் என்றால் அதுவே எனது வெற்றி
என்பதாய் கருதுகிறேன் நான்.
உங்களை கும்மிப் பதிவுக்கு வாங்கள் எங்களோடு கும்மியடியுங்கள் எனச் சொல்ல எனக்கு எப்படி எந்த உரிமையும் இல்லையோ அதே போல இப்படி எழுது இதைப் பற்றி எழுது எனச் சொல்லவும் உங்களுக்கு எந்த உரிமையும் இல்லை.
ஒரு பதிவர் தொடர்ந்து மொக்கை போடுகிறார் (என்னையே எடுத்துக் கொள்ளுங்கள் அனல் பறக்கும் விவாதங்களுக்காக எனது பதிவுகள் எழுதப் பட்ட போது யாரும் விவாதத்துக்கு வந்ததாய் தெரியவில்லை விதிவிலக்கு ரஜினிகாந்த் பற்றிய பதிவுகள்" உடனே நாலு பதிவுக்களுக்கு லிங்க் கொடுத்து இங்கெல்லாம் விவாதம் நடக்கிறது பார் என சொல்லுபவரா நீங்கள் அந்த குறிப்பிட்ட பதிவுகளை தொடர்ந்து வாசித்துப் பாருங்கள்.
குறிப்பிட்ட நாலு பேர் மட்டும் தொடர்ந்து பின்னூட்டி விவாதம் நடந்துகொண்டிருக்கும் இப்படிச் செய்வதை விட யாகூ கான்பரன்ஸில் பேசிக்கொள்ளலாம்.
இன்னும் என்னைப் போல் பல பதிவுகளை படித்தும் விவாதம் எதிலும் பங்குபெறாமல் ஒர்துங்கி நின்று வேடிக்கை மட்டும் பார்க்கும் பதிவர்கள் எழுதும் பதிவுகளில் எக்காரணம் கொண்டும் பின்னூட்டக் கூடாது எனக் கொள்கை வைத்திருக்கும் அறிவுஜீவிப் பதிவர்களே. முதலில் தரமான பதிவு என்றால் என்ன என்று ஒரு விளக்கம் கொடுங்கள்.

Tuesday, July 24, 2007

மைடியர் பாடி காட்டாத முனீஸ்வரனே

இந்த முறை பாடி காட்டாத முனீஸ்வரன் மயிலிலும் இல்லாமல் மெயிலிலும் இல்லாமல் நேராகவே வந்தார் அவரோடு நடந்த கொலைவெறி சந்திப்பின் தொகுப்பு!

எக்ஸ்பிரஸ் :வணக்கம் பாடி காட்டாத முனீஸ்வரனே எப்படி இருக்கீங்க?

பாடிகாட்டா: வணக்கம் நான் நல்லா இருக்கேன் நீ எப்படி இருக்கே?

எக்ஸ்பிரஸ்: நானும் சர்ச்சையுமாய் போளியும் போண்டாவும் போல் இருக்கேன். ஒரே பின்னூட்ட அடி யாரோ பாலாவாம் வந்து காமெடி பன்னியே கொல பன்றான். எனக்கு சில சந்தேகம் இருக்கு உன்கிட்ட பதில் இருக்கா?

பாடிகாட்டா: எத்தனை எத்தனையா வேணுமானாலும் கேளு

எக்ஸ்பிரஸ்: பார்ர்பனீயம் என்றால் என்ன?

பாடிகாட்டா: அது ஒன்னும் நீ நினைக்கிறமாதிரி அலுமினியமோ இல்ல பித்தளையோ இல்ல அது ஒரு மாதிரியான சயனைட். தன்னை சுத்தி இருக்கவன் தன்னை மட்டுமே கவணிச்சுக்கனும் அதாவது தன்னைத்தவிற வேற யாருக்கும் சுயநலம் இருக்கக் கூடாதுன்ற எண்ணம்.

எக்ஸ்பிரஸ்: உதாரணம் சொல்லு புரியலை.

பாடிகாட்டா : இதை நான் தான் செய்தேன், மற்றவர்கள் என்ன செய்தார்கள் என்று அடிக்கடி சொல்லிக்கொள்வார்கள். தன் உடன்பிறவா சொந்தங்கள் உயர்ந்தது, அவர்களுக்குத் தான் பதவி; மற்றவர்கள் தாழ்ந்தவர்கள். எஸ்டேட் வாங்கி போடவும் ஜக்கூஸி வைத்து பங்களா
கட்டிக்கொள்ளவும் தங்களுக்கு தான் லாயக்கு என்ற நினைப்பு. தான் உயர்ந்த ஜாதியாய் இருந்தாலும் ஒடுக்கப் பட்ட மக்களின் தலைவி/தலைவன் என சுயவிளம்பரம் தேடிக்கொண்டே தேசியவாத முகமூடிகளுக்கு எல்லா சந்தர்பத்திலும் ஜல்லி அடிப்பார்கள். பாபர் மசூதியை இடித்து அங்கே ராமர் கோயிலை கட்டினால் நாடு 2012 இல் வல்லரசாய் மாறிவிடும் என திடமாய் நம்பும் ஜோக்கர் அணிக்கு சொந்தக் காரர்கள்.

எக்ஸ்பிரஸ்: இன்னும் தெளிவாக சொல்லமுடியுமா ?

பாடிகாட்டா: இந்த இரண்டு அறிக்கைகளையும் படிக்கவும்.
"கோட நாடு எஸ்டேட்டுக்கும் எனக்கும் எந்த சம்மந்தமும் இல்லை , நான்போய் தங்கியதாலேயே அந்த எஸ்டேட் ஓனருக்கு இந்த கருணாநிதியின் புறா ரிட்டி அரசு ஏகப்பட்ட தொல்லைகள் தருகிறது நான் வாடகைக்குத்தான் தங்கினேன். (கொடநாடு எஸ்டேட்டில் இருந்து வந்த உடன் விட்ட குட்டி அறிக்கை.)

கொடநாடு எஸ்டேட் நஷ்டத்தில் இயங்கியதால் அதை மேலும் வளமாக்கவும் அங்கே இருக்கும் தொழிலாளர்கள் தங்கி ஓய்யெடுக்கவும் அந்த பிரம்மாண்ட பங்களா கட்டப்பட்டது (கருணாநிதியின் புறா ரிட்டி அரசு கொஞ்சமாய் ஆதாரத்தை காட்டியவுடன் பல்டியடித்த குட்டி அறிக்கை)

இப்போ புரியுதா?

எக்ஸ்பிரஸ்: புரிஞ்ச மாதிரியும் இருக்கு புரியாத மாதிரியும் இருக்கு சரி எதையும் தீர்மானம் செய்யும் அறிவு இவர்களுக்கு இருப்பதாக நம்புகிறவர்களா?

பாடிகாட்டா: ஆமாம். தான் என்ன முடிவெடுத்தாலும் , தன்னை சுற்றி யிருப்பவர்கள் அந்தமுடிவுக்கு கட்டுப்பட வேண்டும் என எண்ணுபவர்கள், அது மூன்றாம் அணி அமைத்து கலாமை ஜனாதிபதி ஆக்குவதாய் இருந்தாலும் சரி இல்லை தீவிர புலி ஆதரவு வைகோவை தன் கூட்டணியில் சேர்த்து அவர் பல்லை பிடுங்குவதாய் இருந்தாலும் சரி. அவங்க நினைப்பதுதான் சரி அதுதான் முடிவுன்னு "திரவமா நம்புவாங்க"

எக்ஸ்பிரஸ்: இதுக்கு ஏதாவது உதாரணம் இருக்கா ?

பாடிகாட்ட்டா: ம் நிறைய இருக்கு. சேது சமுத்திர திட்டம் , தன்னோட ஆட்சியில வந்தா அது தமிழகத்துக்கு கிடைத்த தன்னால் கொண்டு வரப்பட்ட கொறப் பிரசாதம் என்பது அதுவே அடுத்து வரும் அரசால் நிறைவேற்றப் படுமானால் அங்கே ராமர் குரங்குகளோடு சேர்ந்து பேன் பார்த்தார் என பாஜக அடிக்கும் விஷ விளம்பரங்களுக்கு தீவனம் ஒரு அட்சய பாத்திரமாக எப்போதும் இருப்பது.

எக்ஸ்பிரஸ்: இதைவிட வேறு குணங்கள்

பாடிகாட்டா: முயலுக்கு மூணே கால் நினைப்பு இவர்களிடம் இருக்கும்

எக்ஸ்பிரஸ்: புரியலையே

பாடிகாட்டா: தன்னையும் சசியையும் விட்டால் தமிழ்நாட்டை தலைமை தாங்க வேறு யார் இருக்கிறார்கள் என்ற எண்ணம். மற்றவர்கள் அரசியலில் நுழைந்தாலும் அவர்களை குடிகாரர்களாக நினைப்பது.

எக்ஸ்பிரஸ்: இவர்கள் கல்வி கேள்வி, வாழ்க்கை முறை பற்றி...?

பாடிகாட்டா: அரசியலுக்கு வருவதற்கு முன்னர் சினிமாவில் கவர்ச்சி நடனம் ஆடுவார்கள் மூப்பனார் போன்ற பெரும் செல்வந்தர்களின் குடும்பநிகழ்வுகளில் நடனம் ஆடுவார்கள். சிலர், எம்ஜியாரின் "பள்ளியறையில் படித்தபின், துகிலுறிந்துவிட்டார்கள் அய்யகோ என்ற வேடம் போட ஏதுவாக கருணாநிதியின் முகத்தில் நிதிநிலை அறிக்கையால் அடிப்பார்கள் உடன்பிறவா சகோதரியோடு மட்டும் டன் கணக்கில் ஆபரணங்கள் அணிவார்கள்.

எக்ஸ்பிரஸ்: இவர்கள் பேச்சு எப்படி இருக்கும்?

பாடிகாட்டா: நான் எனது எல்லாம் எனக்குத் தெரியும் என்று அடிக்கடி பேசுவார்கள், அரசாங்கமே அவர்கள் அப்பன் வீட்டு சொத்து என்பது போல் எனது அரசாங்கம் எனது கழகம் என வார்த்தைக்கு வார்த்தை பீத்திக் கொள்வார்கள். அது மதியூக மந்திரியோ இல்லை மன்னார்குடி முந்திரியோ தன்னை கண்டால் இடுப்பில் துண்டு கட்டி காலில் விழ வேண்டும் என எண்ணுவார்கள் இல்லாவிட்டால் கட்டம் கட்ட எண்ணுவார்கள்.

எக்ஸ்பிரஸ்:சரி கடைசியாக திராவிட திம்மி களின் சூழ்ச்சி என்றால் என்ன?

பாடிகாட்டா: பார்ப்பனத் தனம் பேசும் சில அரசியல் வாதிகளின் முகமூடிகளையும் இந்த நாட்டில் பார்ர்ப்பனர்களால் கட்டமைக்கப்பட்ட சூத்திரன் அடிமை எனும் மனோபாவத்தில் ஆசிட்டை அள்ளி ஊற்றியாவது சூத்திரன் விழித்துக்கொள்ள உதவிட வேண்டும் என எண்ணும் நயவஞ்சகர்கள் திட்டம்

எக்ஸ்பிரஸ்: பார்ப்பனீய வேதத்தில் மூலக் கருத்து?

பாடிகாட்டா: வேற என்ன அதேதான். நாகரீகத்தில் நாங்க ஒசந்தவங்கன்னு இந்த இண்டர்நெட் யுகத்திலயும் சொல்லிகிட்டே அடிப்படை வசதிக்காக போராட்டம் பன்றவன் எல்லாறையும் கிண்டல் அடிப்பது. அந்த மனோபாவத்தை விட்டு ஆயிரம் செருப்படிகளை பட்டாலும் பூனூலில் தொங்குகிறது பாரதம் என்ற மொக்கை மனோபாவத்தோடு இருப்பது.

எக்ஸ்பிரஸ் : ஒன்னும் புரியலை

பாடிகாட்டா: பதவி என்பது சொத்து சேர்க்க , கொள்கை என்பது இந்துத்துவ வியாதிகளோடு கூட்டணி வைப்பது , அரசியலுக்கு வருவது கல்யாண மண்டபத்தை காப்பாத்த. பதவி அழிந்தாலும், கொளுகை அழியாது. வேறு பதவியில் புகுந்துகொள்ளும். பிரியுதா ?

எக்ஸ்பிரஸ் : எனக்கு அவசரமா பதிவு போடனும். பை.

பாடிகாட்டா : பை பை

Sunday, July 22, 2007

பின்னூட்ட பாலா நீ மாமாவா ? புரோக்கரா ?

இந்த பதிவை படிக்கும் யாரும் ப்ளட் தலைக்கு ஏறி மண்டைல மணியடிக்க என்ன மகி இப்படின்னு சண்டைக்கு வரவேண்டாம். பின்னூட்டத்தில வந்து ஏன்யா எந்த நாதாரியோ எழுதிட்டு போறான் அதுக்கெல்லாம் மரியாத கொடுத்துபதில் சொல்லனுமான்னு கோவிச்சுக்க வேணாம். அந்த பன்னாட தரம் தாழ்ந்து எழுதுனா நீயும் ஏன் இப்படி பதிவெல்லாம் எழுதனுமான்னு கேக்கவேண்டாம், அவனுக்குத்தான் வேலை இல்லை, இல்லைன்னா வேலையே இதான் அவன் மாமா வேலை பாக்குட்டும் இல்ல ம++ புடுங்கியாத்தான் இருக்கட்டும் அவன் எழுத்துக்கெல்லாம் பதில் சொல்லி இன்னும் பெரிய ஆளா அக்காதீங்கன்னு சொல்லவேண்டாம். அவன் பாப்பானா இருக்கலாம்கிறதுக்காக இப்படியெல்லாம் பதில் சொல்லி பதிவு போடனுமா? அவனுக்கு திராவிடன கண்டா எப்படி புடிக்கலியோ அதே மாதிரி நமக்கும் பாப்பான கண்டா கண்ணெல்லாம் சிவந்து ஒரு பக்கம் கெட்ட வார்த்தை பதிவா வருதுன்னு கூட தெரிஞ்சுக்காத மானம் கெட்ட பயலா இருக்கான், அவனபத்தி நீங்களும் எழுதி ஏன் தரம் தாழ்ந்து போறீங்கன்னு எனக்கு அறவுரை கூற வேண்டாம் இந்த வேண்டாம்லாம் நீங்க சொல்ல மாட்டீங்க ஏன்னா உங்களுக்கும் இந்த மாதிரி எதும் பின்னூட்டம் போட்டிருப்பான் அந்த பாலா (யாருடா நீ? உனக்கு மானம் எதாச்சும் இருக்கா? லக்கி செருப்பால அடிச்சும் புத்தி வரலைன்னா நீ என்னா இழிபிறவியா?) இதெல்லாம் உங்க ஆளுங்க அடிக்கடி சொல்றதுதான் என்னோட பதிவுல வந்தா தப்பு இல்ல சரிதான். இத்தனை வேண்டாமுக்கும் உங்களால வேண்டாம்னு இருப்பீங்கன்னா அந்த பாலாவ ஒரே ஒரு கேள்வி கேட்டுக்குறேன்.

"பின்னூட்ட பாலா நீ மாமாவா இல்ல புரோக்கரா போன் நம்பர் கிடைக்குமா?

Thursday, July 19, 2007

செந்தழல் ரவிக்கு கண்டனம்!

நேற்று கொரியாவில் இருந்தவாரே என்னோடு சாட்டில் பேசிக் கொன்றிருந்த செந்தழல் கொரிய பாசையில் வணக்கம் சொன்னார் என்னடா திடீரென்று நம்மிடம் பேச்சே இல்லை ஆனால் கழகச் செம்மல் டைப்பிங் டைப்பிங் என்று காட்டுகிறெதென்று யோசித்தவாரே இருந்தால் தமிழ் மணத்தில் என்னையும் வைத்து காமெடி பண்ணியிருந்தார் சரி போனால் போகட்டும் என்று விட்டுவிட்டேன் இன்று காலையில் பார்த்தால் மீண்டும் ஒரு போட்டோ போட்டு பாஸ்டன் பாலாஜிக்கு கண்டனம் என்ன கொடுமை இதெல்லாம் கேட்க ஆளில்லை என்ற எண்ணமா?





சலங்கை ஒலி படத்தில கமல்ஹாசனை ஒரு குண்டுப் பையன் புடிப்பானே அத விட நல்ல காமிரா என்கிட்டயும் இருக்குன்னு ஒங்களுக்கும் தெரியனும்ல..


எங்களாலும் செந்தழலை விட நல்ல பிகர்களை வைத்து போட்டோ பிடிக முடியும் என்ற போதிலும் கொரிய, தாய்லாந்து, டுனீசிய பிகர்களோ ஏன் நம் பக்கத்து ஊர் கருவாச்ச்சி காவிய கதாநாயகிகளோ ஒத்துக் கொள்ளாத காரணத்தாலும், (கொடுத்து வைச்ச ரவிக்கு ஒரு கண்ணடிப்போடு எனக்கு கிடைச்ச சப்ஜெக்டுகளை வைத்து எனது புகைப்பட ஆல்பத்தை காட்சிக்கு வைக்கிறேன் . பாத்துடுவோம் நானா இல்லை ரவியொட தாய்லாந்து பிகரான்னு



"எல்லா மொழியும் கத்துக்கிற வரைக்கும் தான் ரவி பஞ்சு போல இருக்கும், கத்துகிட்டா காத்துமாதிரி ஆகிடும்"




என்னோட இந்த கொலவெறிய எல்லாம் தீர்த்துக் கொள்ள புதுசா ஒரு போட்டொ ப்ளாக்கும் ஆரம்பிக்கிர எண்ணம் இருக்குங்கிறதை தாழ்மையா தெரிவிச்சுக்க கடமப் பட்டிருக்கேன்

Saturday, July 14, 2007

போலியில்லாத துபாய் வலைப்பதிவர் கும்மி

குசும்பனிடம் சாட்டிங் செய்துகொண்டிருந்த ஒரு மாலை வேளை குசும்பனும் எனக்கு அருகில்தான் இருப்பதாக தெரிந்துகொண்டு சந்திக்க வேண்டுமே என்று தெரியாத்தனமாக கேட்டுவிட்டேன். என்ன கோபமோ இல்லை முன்ஜென்மப் பகையோ தெரியவில்லை. உடனே அதுக்கென்னா சந்திக்கலாமே இந்த வாரம் வியாழக்கிழமை போய் அபி அப்பாவை பாக்கலாம்ன்னு கொஞ்சம் ப்ளானை பெரிசாக்கினார். ஓகே என்றுவிட்டு சரி அப்படியே முத்துக்குமரனையும் வரச் சொல்லலாம் என்று கேட்டதில எனக்கு இரண்டு நாட்களும் வேலை இருப்பதாகவும் தன்னால் முடியாது என்றும் ஏனோ நாசூக்காக நழுவினார் முத்துக் குமரன்.

அபி அப்பா என்ற தொல்ஸ் தன் அபாரமாண ஆர்கனைசிங் திறமையை காட்ட கிடைத்த நல்ல சந்தர்பத்தினை இழப்பதற்கு மனமில்லாதவராயும், அப்படியே அதை வலைப்பூ சந்திப்பாய் மாற்றிவிடவும் ஒரு பக்கா கொலைவெறித் திட்டம் போட்டு அலைய்ன் சென்று மின்னல்லை சந்திப்பதாகவும் நம்மோடு "அடர்கானகப் புலி அய்யனார், கோபி, லியோ சுரேஷ் மற்றும் சென்ஷி சில அனானி தளபதிகள் ஆகியோர் துபாயில் இருந்து நம்மோடு கிளம்புகிறார்கள் நீயும் குசும்பனும் முதல் நாளே வந்துவிடுங்கள் என்றும் பாவனாவை பிரிந்த சோகத்தில் மேலும் இரண்டுகிலோ எடை ஏறிய தம்பி அபுதாபியில் இருந்து வந்து சேர்ந்துகொ"ல்"வார் என்றும் திட்டத்தை பக்காவாகப் போட்டு தான் எப்படி ஒரு சிறந்த வலைப்பதிவு ஆர்கனைசர் என்றும் பாலபாரதியெல்லாம் என் ஆர்கனைசிங் முன்னால் க்யூவில் நின்று கற்றுக்கொள்ள வேண்டும் என்றும் சொல்லிக்கொண்டிருந்தார்.
வியாழன் மாலை 6.15க்கு குசும்பனை சந்திப்பதாகபோட்ட பிளான் திட்டமிட்டபடியும் வழக்கம்போலும் எனது பஞ்சுவாலிட்டி படியும் மாலை 8 மணி வரை நிகழாமலே இருந்தது. குசும்பன் போனில் அவ்வப்போது விளித்து "சித்தப்பு வச்சுட்டியே ஆப்பு" என்று தனது கவலையை சொல்லிக்கொண்டே இருந்தார் உச்சகட்டமாக ஒன்பது மணிக்கு கிளம்பி 9.45க்கு குசும்பனை கண்டே பிடித்தேன். அபி அப்பா இருக்கும் இடத்துக்கு போக 10.15. ஆனது.
எங்களுக்காகவே ரூமில் காத்திருந்த அப்பா நாங்கள் போன் செய்து கூப்பிட்டதும் "உற்ச்சாக மிகுதியில்" துள்ளிக்" குதித்து ஓடி வந்து உள்ளே இழுத்துச் சென்றார்.

ஏற்கனவே ஏற்பாடுகள் செய்திருந்த அபி அப்பாவோடு நானும் "கலந்தேன்" குசும்பன் அப்படியே சாப்பிடுவேன் என்று இன்னும் தான் ஒரு சின்னப்புள்ள தான் என்று பச்சத் தண்ணியை ராவாக அடிக்க ஆரம்பித்தார். சாப்பாடு முடிந்ததும் குசும்பனையும் என்னையும் அழைத்துக்கொண்டு ஒரு டைனிங் ஹாலுக்கு கிளப்பினார் அபி அப்பா. அங்கே ஆரம்பித்த வலையுலகம் பற்றிய பேச்சு திமுக அதிமுக பா.ம.க என அரசியல் வாசம் வீசத் துவங்கியதும் இந்த சூடான சந்திப்பு தனக்கு உடலுக்கு ஆகாது என்றும் தனக்கு தூக்கம் வருவதாகவும் கூறி கழட்டிக்கொண்டார் குசும்பன் பாதியில் போனவர்களை அடுத்த ஆட்டத்தில் சேர்த்துக் கொள்வதில்லை என்று நானும் அபி அப்பாவும் அவசரத் தீர்மானம் நிறைவேற்றினோம். கொஞ்சநேரம் மிக கோபாவேசமாக மதிமுக பற்றிய கோபாவேச கருத்துக்களை சொல்லிக் கொண்டிருந்த அவர் அப்படியே சோபாவில் படுத்து வழக்கம் போல் உறங்கிப்போனார். தனியாக இருப்பது எனக்கும் போரடிக்கவே அவரை எழுப்பும் முயற்ச்சியில் படுதோவியைத் தழுவி தனியாகவே வந்து தொட்டில் வடிவத்தில் இருந்த அபி அப்பாவின் கட்டிலில் படுத்ததும் உறங்கிப்போனேன்.
மறுநாள் எழுந்ததும் கிளம்புங்கப்பா என சொல்லிவிட்டு தான் வாடகை வண்டியெடுக்க போவதாக தன் சக அறை நண்பருடன் சென்றவர் 12 மணி வரை வராததால் ஆட்டம் காண ஆரம்பித்த ப்ரொகிராம்கள் வண்டி வந்ததும் சரியானது. சென்ஷி எங்களைக் கடந்து ரூமுக்குள்ளே சென்று நாங்கள் இருக்கும் தளத்துக்கு அடித்துப் பிடித்து ஓடிவந்தார். அய்யனார் முதல் நாள் இரவு சாமியாடிவிட்டு வந்ததில் மீசையைத் தொலைத்திருந்தார். இருவரிடமும் நான் தான் குசும்பன் என்று அறிமுகப் படுத்திக் கொண்டேன். குசும்பன் தான் மகேந்திரன் என்று அறிமுகப் படுத்திக் கொண்டிருந்தார். கோபி நாங்கள் அவரை பார்க்கும் வரை சிட்டி மாலின் உள்ளே இருந்து வாகனம் வருமோ என்று நாங்கள் இருந்த வண்டியின் திசை தவிர்த்து மாலின் உள்ளே நோட்டம் விட்டார் அவரிடம் நான் குசும்பன் என்றவுடன் அதிர்வானவர் கொஞ்சம் சுதாரித்து கண்டுபிடித்தார். பின் வண்டி அலைய்ன் நோக்கி புறப்பட்டது.

மின்னல் வேலை பார்க்கும் அலைன் ஃபன் சிட்டி யில் சந்திப்பு நிகழ்வதாக இருந்ததால் அங்கே ஏற்கனவே வந்து சிலர் கடலை போடுவதை கண்டு நெஞ்சம் பொறுக்காமல் வெளியே வந்துகொண்டிருந்தார் தம்பி. பாவனா பற்றி ஏதும் செய்திகளை கேட்கலாம் என்று எண்ணியவன் அந்த தற்கொலை முடிவை கைவிட்டதற்கு அவரின் ஆறடி உயரம் மட்டுமே காரணம். அறிமுகப் படலம் முடிந்ததும் மின்னல் வந்தார் தனது கொலைவெறித் திட்டங்களை மனசிலும் முகத்தில் புன்னகையும் தவழ. அவரிடமும் ஒரு அறிமுகப் படலம். உள்ளே போனோம்.


அங்கே இருக்கும் ஒரு ரெஸ்டாரண்டில் வலைப்பதிவுகள் பற்றி பேச ஆரம்பித்த உடன் " இது ஒன்னும் சரியில்லாத கும்பலா இருக்க்ம் போல என்றெண்ணினார்களோ என்னவோ அனானி அன்பர்கள் குழு அவசரமாக வெளிநடப்பு செய்து அங்கே இருக்கும் மரங்கள் பற்றிய ஆராய்ச்சிகளில் இறங்கினார்கள்.

மின்னல் இவனுங்களை இப்படியே விட்டா ரெஸ்டாரண்டை பேசியே உடைப்பான்கள் என்ற எண்ணமோ என்னமோ ஆளுக்கு ஒரு ப்ளேட் பிரியாணியை கொண்டுவந்து பாசத்தோடு பரிமாறினார். இதற்கிடையில் மாலன் வலைப்பூவில் செறிவுள்ள கருத்துக்களை எழுதவேண்டும் எனச்சொன்னதை கொண்டு விவாதத்தை துவக்கிய அய்யனார்முதல் முறை தோல்வியை தழுவினார். பிரியாணி முடிந்த உடன் தனது கொலைவெறித் திட்டங்களை ஒவ்வொன்றாக நிறைவேற்றத் துவங்கினார் மின்னல்.

முதலில் கொண்டுபோனது ஐஸ் ஸ்கேட்டிங்க் . குசும்பன், அய்யனார், அபிஅப்பா அனானி நண்பர்கள் , சென்ஷி, தம்பி, கோபி, ஆகியோர் மின்னலின் திட்டம் தெரியாத அப்பாவி அன்பர்களாய் வலையில் விழ நானும் லியோ சுரேசும் மட்டும் தப்பித்தோம் உள்ளே போனவர்களில் குறைந்த முறை விழுந்தவர் குசும்பனும் அபி அப்பாவும் (எழுந்திருத்தால் அல்லவா மறுமுறை விழுவதற்கு) அய்யனார் கொஞ்சம் இந்த கும்பலில் இருந்து விலகி தனியாக ப்ராக்டிஸ் செய்தார். அங்கே இரண்டுமூன்று பெண்கள் பயிற்சி செய்துகொண்டிருந்தது எதோச்சயான ஒன்றே.

தம்பி விழவே இல்லை ஏனென்றால் ஸ்கேட்டிங் பூட்ஸுடன் உள்ளே போனவர் சுவற்றை பற்றியபடி நின்றுகொண்டே இருந்தார் அப்படியே சுவற்றை தண்டி வெளியேரியவர் அங்கே இருக்கும் காலரியில் இருந்தபடி ஏதேனும் கவிதை சிக்குமா என கண்ணோக்கிக் கொண்டிருந்தார். எனது கேமராவை கொண்டுபோன சென்ஷி யாரையெல்லாமோ போட்டோ பிடித்தவர் வலைப்பதிவர்களை விட்டுவிட்டது அவரது அபாரமான ஞாபக சக்தியை வெளிப்படுத்தியது. இரண்டு மணி நேரம் அயராது ஐஸ்கேட்டிங்க் செய்த அன்பர்கள் வெளியே வ்ரும்போது குசும்பன் மட்டும் இரண்டு சேச்சிகளின் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கினார். பின்னர் அடுத்த கட்டமாக என்ன செய்யலாம் என்ற மின்னல் அடுத்த கட்டடத்துக்கே அழைத்துச் சென்றார் அங்கே சின்ன சைஸ் ரோலர் கோஸ்டர், குடை ராட்டினம் என அடுத்த முறை ஒரு பயலும் அலைன் பக்கம் வரப்படாது என திட்டங்களை ஒவ்வொன்றாக செயல்படுத்த தொடங்கியபோது முதல்நாள் இரவு உற்ச்சாகமே கலையாத காரணத்தால் அதன் பின் மின்னலின் எல்லா திட்டங்களில் இருந்தும் தப்பித்தேன் .

மூன்று பந்தை கொண்டு டம்ளர்களை தட்டின்னால் மொபைல் போன் கிடைக்கும் என்று தம்பி முயன்ற முதல் பந்தே பவுன்ஸானது. ஒன்றும் கிட்டாத வெறியில் அடுத்த ஆட்டம் போகலாம் இதெல்லாம் சீட்டிங் என்றார். ஹாரர் ஹவுஸ் என்ற வித்தியாசமான் தியேட்டரில் எங்களுக்கான அடுத்த ஆப்பை தயாராக வைத்திருந்தார் மின்னல் "Dynamite Train" என்ற படுமோசமாகஎடிட் செய்யப்பட்ட படத்துக்கு சீட்டுகள் முன்னும் பின்னும் குதித்தும் ஒரு விர்ச்சுவல் சினிமாவை காட்டியது. கொஞ்சம் வித்தியாசமான அனுபவம் தான். இன்னும் படகில் சவாரி மோட்டார் ஓட்டுதல் என இருக்கும் எல்லா திட்டங்களையும் மற்ற வலைப்பதிவர்கள் மேல் பரிசோதித்த மின்னல் கடைசியாக போனால் போகட்டும் என்றவாறே அவரின் அறைக்கு கொண்டு சென்றார். அங்கே போனதும் ஆளுக்கு ஒரு வெப்சைட்டை ஓப்பன் செய்து தமிழ்மணத்தில் மேய்ந்தனர்.

பாவனா சண்டையை கூகிள் டாக்கில் ஸ்டேட்டஸ் மெசேஜாக போட்டதற்கு பழிவாங்கும் விதமாக சர்க்கரை இல்லாத தேனீர் தந்த தம்பியிடம் குடித்து முடித்த வுடந்தான் கேட்டேன். அப்றமென்ன இப்படியாக ஒவ்வொரு திட்டங்களில் இருந்தும் தப்பித்து போகிறார்களே என்று மின்னல் கண்ணில் மின்னிய கொலை வெறியில் இருந்தும், அந்த பன்சிட்டியில் இருந்தும் எங்களை முழுசாகவும் உயிரோடும் திருப்பி அனுப்புவதற்கு மின்னலுக்கு நன்றி சொன்னபடியே எடுத்தோம் ஓட்டம்.

சில சுவாரஸ்யங்கள்:
1. போலி, போண்டா, அரசியல் அனானி மற்றும் ஆபாச பின்னூட்டங்கள் பற்றிய வலைப்பதிவர்களின் கருத்து குறித்து எதுவும் பேசாமல் கலைந்தது
2. நான் சட்னிவடையா இல்லையா என்பதை எல்லாரும் தெரிந்துகொள்வதில் ஆர்வம் காட்டியது, நான் இல்லை என்பதை தேய்ந்துபோன ரெக்கார்டாக சொல்லிச்சொல்லி களைத்துப்போனது.

3. சந்திப்பு முடியும் தருவாயில் போலியாரிடம் போனைக்கொடுங்கள் என்ற முத்துக்குமரன் அழைப்புக்கு யார் போலியார் என்ற குசும்பன் மகியிடம் என்றவுடன் வணக்கம் போலியாரே என்ற முத்துக்குமரன் குரலுக்கு வணக்கம் தலைவா என்று வாய்வரை வந்த வார்த்தையை மல்லுக்கட்டி முழுங்கியது.

4. திராவிடம் பற்றி பேச ஆரம்பித்தாலும் அனானிகள் பற்றி பேச ஆரம்பித்தாலும் கிழுமத்தூர் எக்ஸ்பிரஸை கேளுங்கப்பா என சென்ஷி என்னையே மாட்டிவிட்டது. மாலன் பற்றி அய்யனார் பேசும் போதெல்லாம் கும்மி அடிப்பது எங்கள் பிறப்புரிமை எனக் கோபாவேசம் காட்டிய அன்பர்களின் வாதங்கள் நகைச்சுவை என்பது எவ்வளவு கடிணம் எனச் சொன்னபோது சிரித்துக் கொண்டது.

5. அட்டகாசமான சந்திப்பை அரசியல் பேசி கெடுத்துக்கொள்ளவும், வேறு விவாதங்கள் செய்து சொந்த செலவில் சூனியம் எதுவும் வைத்துக்கொள்ளவும் எந்த பதிவரும் முன்வராமல் எந்த போலியும் இல்லாமல் நட்பான மிகச் சந்தோசமான சந்திப்பாக அமைந்த சந்திப்பு

Thursday, July 12, 2007

சட்னி வடை என்னுடையதுதான்.

நேற்று காலையில் இருந்து அமீரக நண்பர்கள் முதல் இந்திய நண்பகள வரை சட்னிவடை என்னுடயதுதானா என்பதில் பலத்த சந்தேகம் கொண்டு கூகிள் டாக்கிலும் தொல்லை பேசியிலும் கூப்பிட்டு கேட்டுக் கேட்டு அலுத்துவிட்டது. துபாய் அபி அப்பா, குசும்பன் அபுதாபி தம்பி எல்லாரும் ஆளுக்கு ஒரு மேட்டர்ல சந்தோசமா இருக்கிறதால அவங்க போதைக்கு நான் ஊறுகாயா போயிட்டேன் நேத்து. அபி அப்பா அவரு பையன் குரல கேட்டது சந்தோசம் , தம்பிக்கு பாவனா பிரிஞ்சு போனது சந்தோசம், (!?)குசும்பனுக்கு காரணமே இல்லாததால சந்தோசம், இதெல்லாம் போதாதுன்னு சென்னைல இருந்து பாலபாரதி வேல பாக்குற புத்தக கடைல இருந்து கூப்பிட்டு ஊருக்கு வந்தா ஒங்களுக்குன்னே அர்த்தமுள்ள இந்து மதம் வாங்கி வெச்சிருக்கேன் எப்ப வரீங்க சட்னிவடைன்னு கலாய்க்குறார் லக்கி லூக். அதோட இல்ல , பால பாரதி நீதான இட்லிவடையும்னு அடிமடில அணுகுண்ட வைக்குறாரு. ஆளுக்கு ஒரு பக்கமா இழுத்தா நான் என்னத்த பன்ன உண்மைத்தமிழனை எங்கயோ சிக்னல்ல பாத்த லக்கிலூக் கிட்ட மேட்டர வாங்கி மீட்டர் போட்ட போலி உண்மைத் தமிழன் நீதாண்டா ங்கொய்யாலன்னு பேசும்போதே பினாயில் குடிக்க வைக்குறார் பாலா. என்னத்த சொல்ல இந்த ஆட்டம் பாட்டத்துக்கு எல்லாம் ஒரு "ஃபுல்" ஸ்டாப் வைக்குற மாதிரி இப்ப நான் அப்ரூவராகி உண்மைய ஒத்துக்கிற நேரம் வந்துடிச்சி

சட்னிவடை என்னோடது தான்.


சொன்னா யாரும் நம்ப மாட்டீங்கன்னுதான் நயன் தாராவையே சிபிகிட்ட பர்மிஷன் கேட்டு கூட்டிவந்து எனக்கு புடிச்ச சட்னி வடை, இட்லி வடை எல்லாத்தையும் கொடுத்து சாப்பிடச் சொல்லி போட்டோ செசன் நடத்திட்டேன் .

ஆமா சாப்பிடும் போது நயன் தாரா கையில எதுக்கு பூன்னு பாக்குறீங்களா?


அது உங்க காதுல வைக்கறதுக்கு





Saturday, July 07, 2007

மனித வெடிகுண்டு எச்சரிக்கை


அபாய சிக்னலை நெற்றியில் நிரந்தமாக வைத்துக் கொண்டிருப்பது மட்டுமின்றி, 24x7 நேரமும் அபாய அறிவிப்பு கொண்டிருக்கும் மனித வெடிகுண்டு இராம கோபாலன் என்ற இந்து "மத" வெறியரின் அபாய அறிவிப்பின் அபஸ்வரம் கேட்கிறது.

சேது சமுத்திர திட்டத்தால் நாட்டுக்கு ஆபத்தாம். புண்ணாக்கு பலராமன்கள் இவ்வளவு நாள் ராமன் இரண்டுக்கு போன இடம் அதனால் சுத்தம் பண்ணக் கூடாது என்று இராமர் பாலம் என்ற ஒன்றை கற்பனை கதைகள் மூலம் புளுகி வந்து இந்து "மத" வெறி மூலம் தடுக்க நினைத்து பொய்பிரசாரம் செய்து வந்தனர்.

பொதுமக்கள் எவரும் கால் கழுவிய தண்ணீருக்கு கொடுக்கும் மரியாதையைக் கூட இந்து "மத" வெறியர்களுக்கு கொடுக்காததால், அடுத்து தேசிய கீதம் வாதிக்கின்றனர். இந்திய குடிமக்களில் மிகவும் பொறுப்புடன் தேசிய கீதம் வாசிப்பதில் முதலிடம் வகிப்பவை சங்கர் பரிவார் மற்றும் அந்த கோஷ்டி குழுமங்களே. வேத மலம் (ஆவன மலம் இல்லை ) மூலம் தேசத்துக்கே தோஷம் கழிப்பவர்கள் இராமன் கதை உதவவில்லை போலும்.


தேசத்தின் மீது கேசத்தை விரித்து (கொண்டயை ) தேசம் நலன் காப்பதில் இவர்களின் செயலைப் பார்த்து உலகமே மூக்கு முடியை பிடிங்கி போட்டு ஆச்சரிய பட்டுப்போகிறது. இந்த தேசத்தில் தாழ்த்தப்பட்டவருக்கு இடஒதிக்கீடு என்றால் அதற்கு எதிராக செருப்பு தைப்பவனையே செருப்புடன் போட்டு காலில் மிதித்துக் கொண்டிருக்கும் கும்பலின் தலைமையில் இயங்கும் கொண்டிருக்கும் இந்துவெறியர்கள் தேசநலன் குறித்து பேசுவதில் இருப்பது அக்கரையா ? த்தூதூதூதூதூதூதூ.......

இத்தனை வக்கனை பேசும் இந்த துரோகிகள் பாபர் மசூதி இடிப்பை நியாயப்படுத்துவது மட்டும் ஏன் என்றே தெரியவில்லை. அதையும் இடித்தால் தேசத்தில வன்முறைக்கு வித்திடுவோம் என்பது தெரிந்தேதானே செய்தார்கள்?. இப்போதுமட்டும் ஏன் இந்த ஒப்பாரி?, பாபருக்கு ஒரு நியாயம் ராமனுக்கு ஒரு நியாயம்? இதில் மீறி இடித்தால் நந்திக் கிராமம் போல் ஆகுமாம் அங்கே என்ன நடந்தது என்பதே தெரியாமல் பிதற்றுகிறது இந்த முழுமூடம். மக்களை கொன்றது காவல்துறை. அதுபோல இங்கேயும் தன் பின்னால் இந்துமத வெறியர்கள் வந்து செத்துப்போகட்டும் என்பது. இந்த வெறியர்களின் குடுமி விதியென்றால் யார் என்ன செய்ய

Thursday, July 05, 2007

நடிப்புக் கடவுளால் நாசமாகும் தமிழ்சினிமா -அவதாரம் எடுக்கிறார் நாசர்


தமிழ் திரையுலகில் நடிகராக மிகவும் சிரமப்பட்டு நல்ல நிலைக்கு உயர்ந்தவர்களில் தமிழுக்காக எதாவது செய்யவேண்டும், நல்ல படங்களை தரவேண்டும் என்று முனைப்புடன் இருப்பவர்களில் கமல், பிரகாஷ் ராஜ் மற்றும் மூக்கழகர் நாசர் மூவர் பாராட்டத்தக்கவர்கள். மற்றவர்கள் வியர்வைக்கு தங்ககாசை வாங்கி அதை பெங்களூர் நிறுவனத்தில் முதலீடு செய்துவிட்டு சென்னை தண்ணீர் பஞ்சத்தைப் போக்க கோகோ கோல ஏஜென்சி எடுத்து நடத்துபவர்கள். நாடகக் கலைகள் அழிந்துவருவதை அவதாரம் என்ற படத்தின் மூலம் எல்லோரின் கவனத்துக்கும் கொண்டுவந்தார். மசாலா கதைகளையும், குத்து பாட்டுகளையும் தான் பெரிய நடிகர்களே நம்பி இருக்கிறார்கள் என்று தெரிந்தும் தான் எடுத்த அவதாராம், தேவதை மற்றும் பாப்கார்ன் படங்களில் அது போன்று காம்ப்ரமைஸ் பண்ணிக் கொள்ள விரும்பியதே இல்லை. ஒரு நடிகனாக 25 ஆண்டுகளுக்கும் மேல் சினிமாவில் இருப்பவருக்கு சினிமா பார்முலா

தெரியாமல் இருக்குமா ? இவர் அதையெல்லாம் உணராதவர் அல்ல. கலைகள் கொலை செய்யப்படுவதற்கு அல்ல என்று உணர்ந்தே அதுபோன்ற கேடுகெட்ட செயல்களில் இறங்கவில்லை. வில்லனாக நடித்தாலும் சரி, குணச்சித்தர வேடம் போட்டாலும் சரி,

நகைச்சுவை

வேடமேற்றாலும் சரி தன்னுடைய வேலையை கன கச்சிதமாக முடித்து இருக்கிறார். அதனால் தான் மணிரத்னம், கமல் போன்றவர்கள் தொடர்ந்து நாசர் நடிப்புக்கு

தீனீ போட்டு வருகின்றனர் பம்பாய் படத்தில் திருநெல்வேலி பிள்ளையாக சிறப்பாக நடித்திருப்பார்,

தேவர்மகனில் ஒரிஜினல் தேவர்களுக்கு ஒரு இம்மியும் குறையாமல் அந்த படத்தில் கமலையே நடப்பில் டாமினேட் செய்தார். அவ்வை சண்முகியில் அவர் ஊமைவேசத்தில் சன்முகி மாமியுடன் அடிக்கும் கூத்து எப்பொழுது நினைத்தாலும் சிரிப்பு வரும். குருதிப் புனல் படத்தில் அவர் நடிப்பை பற்றி சொல்லவே தேவையில்லை. மேலும் சில

ஆங்கிலப் படங்கள், நிறய டாக்குமெண்ட்ரிகள், கிரிஸ்டியன் காலேஜில் நடிப்புக்

கலை ஆசிரியர், நாடக் பட்டரைகள் நடத்தி இன்னும் பல நல்ல கலைஞர்களை

உறுவாக்கும் சிற்பிஎன இருப்பவருக்கு பாக்ஸ் ஆபீஸை பணத்தால்

நிரப்ப வேண்டும் என்ற கேனத்தனமான ஆவல் இல்லாத காரணத்தினால் நாசர் போன்றவர்களின் நல்ல படைப்புக்கள்

அவதாரங்கள் ஆகாமல் போகின்றன. இதுபோன்ற கலைஞர்கள் வாய்திறந்து

எது

வும் பேசிவிட முடியாது என்பதாக இந்த தமிழ் சினிமாவை வைத்திருப்பதுதான் பாக்ஸ் ஆபீஸ் கடவுள்களின்

வேலை கலைகள் பொதுமக்களுக்குத்தான் ஆனால் கலைஞனுக்கு கலை என்பது சோறு போடுவது.


எனவே அந்த கலையை எவன் போற்றி வளர்கிறானோ அவனே உண்மையான கலைஞன். சூப்பர் ஸ்டார் என்று சொல்லிக் கொண்டு இளைஞர்களை திசைத்திருப்பியதற்கு சினிமாவை பயன்படுத்திக் கொண்டு குதிரை வியாபாரம் செய்யும் நடிகர்களினால் சினிமா உலகம் அழிவை நோக்கிப் போய்கொண்டிருப்பதை நாம் பார்த்து விமர்சனம் செய்வதை

விட நாசர் போன்றவர்கள் அது குறித்து சொன்னால் அது 100 விழுக்காடு உண்மையாகத்தான் இருக்கும். தங்கர்பச்சானின் பள்ளிக்கூடமும் சிவாஜி ஓவர் பில்டப்பால் ஜூலை ஆகியும் இன்னும் மணி அடித்து திறக்கப்படாமல் இருக்கிறது என்பதையும் நினைத்துப் பார்க்கையில் நாசர் சொல்வது ஏற்றுக்கொள்ளும் வகையில்

தான் உள்ளது . இதை ஏன் நாசர் இங்கே சொல்லாமல் அமெரிக்கா போய் சொல்ல வேண்டும் என்பவர்களுக்கு :


ஏன் பிரபலங்கள் ஒரே மேடையில் கருத்துப் ப்ரச்சினைகளை வெளிப்படுத்திக் கொள்ள முடிவதில்லை?
அங்கும் இங்குமாக தன்னுடைய மன ஆதங்கங்களை சிறிது சிறிதாக வெளிப்படுத்துவதின் மூலமாக என்ன சொல்ல வருகிறார்கள்? ஆளை விடுப்பா உன் வெளிச்சத் திரையில இருந்துன்னுதானே பொருள்...
பெரிய சிங்கங்களாக கர்ஜித்துக் கொண்டிருக்கும் நட்சத்திரங்களுக்கிடையில் இது போன்று ஒரு ஒரத்தில் நின்று மாஸ் சந்தைக்கு ஒவ்வாத விசயத்தை சொல்லி, ஒரு கழகமாக இயங்கிக் கொண்டிருக்கும் அது போன்ற சினிமா சிங்கங்களின் அதிருப்தியை சம்பாதித்துக் கொண்டால் தனக்கு பூவாவிற்கே லாட்டரி அடிக்கும் நிலைக்கு தள்ளப்படாலாமில்லையா?
அதனால் தானோ, சபையறிந்து தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தக் கூடிய நிர்பந்தத்தில் இருக்கிறார்கள்.
மேலும்...

சாருநிவேதிதாவும் சரோஜாதேவியும்.(எச்சரிக்கை இது எனது முதல் மீள் பதிவு)


பின் நவீனம், முன் நவீனம் கட்டுடைத்தல், நான் லீனியர், ரியலிஸம், சர்ரியலிசம், புதுக்கவிதை, புண்ணாக்கு, புல், பூண்டு,மலை,மழை,இலை,தழை,காடு,கருப்பு,காதல்,கன்றாவி.கஞ்சன் கருமி,கவிதை.புறநானூறு,புத்தம்புதுசு..........


என்ன ஒன்னும் புரியலையா? இப்படித்தான் இருந்தது அவரின் ஜீரோ டிகிரி....ஒரு வேற்றுகிரகவாசி நாவல்?!.. முதலில் ஏதோ எழுத்துப் பிழை அல்லது பக்கம் தவறு என்று நினைத்தேன். பிறகுதான் தெரிந்தது நாவல் அப்படித்தான் இருக்குமாம். அதுகூட என்னமோ நான் லினியரோ நீலினியரோ போட்டிருந்தாங்க இப்டி எழுதறது இப்ப ஸ்டைலாம்.


அப்பறம் அடுத்த பக்கம் பொறட்டுனா.... அங்கதான் வச்சிருந்தார் குண்டு.. நிசமாச் சொல்லுரன் நானும் சின்ன வயசில (ஒரு பதினஞ்சு வயசு?) ஊட்டுக்கு தெரியாத மைசூர் பதிப்பகத்தோட சரோசாதேவி கதையெல்லாம் படிச்சிருக்க்னுங்க.. அதுல கூட இம்மா விசயம் மில்லிங்க. தலிவரு சும்மா பச்ச மஞ்ச செவப்பு நீலம்னு உட்டு பேனாவுல இன்க்குக்கு பதிலா வேற எதையோ ஊத்தி எழுதிருந்தாருங்க..


அப்பத்தான் வந்துது கோவம் அவருமேல யில்லிங்க அந்த புக்க வாங்க சொல்லி தினந்தினம் அரிச்ச எம்பிரண்டு விசயன் மேல நேரா வூட்டுக்கு போயி கேட்டங்க ஒரு கேள்வி ....." நூறு ரூவா போட்டு இத வாங்குனத ஒரு பொட்டிக்கடையில பத்துருவாய்க்கி வாங்கிற்கிலாமேன்னு" அதுக்கு அவன் "போடா டுபுக்கு நீஏண்டா இங்கிலீஸ் படத்த பாத்தவனாட்டம் டைட்டில்ல இருந்து பாத்த ஒரு பத்து பக்கம் கழிச்சு பாருடான்னான்" நானும் பாத்தங்க ஆங் இப்பகொஞ்சம் பரவால்ல ஏதோ ஒன்னு ரண்டு பத்தி புரிஞ்சதுங்க ஆனா மொத்தமா யோசிச்சா ஒரு எழவும் புரியிலங்க. என்னடா இது " அந்தோன் சேகவ், லேவ் தல்ஸ்தோய். அலக்ஸாந்தர் குப்ரின், அலக்ஸேய் தல்ஸ்த்தோய் வல்லி கண்ணன், சுசாதா.....பாலகொமாரு எல்லாரும் புரிஞ்சாங்க இவரு மட்டும் புரியிலயான்னு எனக்கு ஒரே கொழப்பமுங்க சரி நம்புளுக்குத்தான் புரிலன்னு எங்க மாமா ஒருத்தரு இஞ்ஜினீரு அவரு இந்த இலக்கியம்லாம் படிப்பாரு அவருகிட்ட தந்தனுங்க. அவரும் சரி படிக்கிரேன்னு வாங்குனாருங்க மறுநா பாத்து கேட்டதுக்கு சொன்னாரு"


ஒங்க அக்காகாரி அந்த புத்தகத்த பாத்துட்டு இந்த வயசில இந்தமாரி புத்தகம் படிக்கிரியான்னு சொல்லி வாங்கி கிழிச்சு போட்டுட்டா மாப்ள நீ வேற வாங்கிக்கோன்னாறு. ஆஹா இவரு முதலுக்கே வேட்டு வக்கிறாறேன்னு போயி விசயங் கிட்ட சொன்னன்னுங்க அதுக்கு அவன் மலிவு வெலையில அதே புக்க ஜீ.ஏ. (அதாங்க க்ரைம் நாவல் அசோகன்) போடுராரு அத வாங்குவோம்னான்.


சரின்னு அப்ப எங்க ஊருக்கு பக்கத்தில பெரம்பலூர்ல புத்தக கண்காட்சி போட்டுருந்துது அங்க போயி தேடிப்புடிச்சி சீரோ டிகிரியும் அப்பறம் கோனல் பக்கமும் வாங்கியாந்தமுங்க சரி மின்னயே சீரோ டிகிரி புரில இப்ப கோனல் பக்கத்த படிப்பமுன்னு எடுத்தா பூராம் அவுரோட காதல் வெளையாட்டு அனுபவங்க. என்னடா இதுன்னு அப்ப அப்ப கொஞ்சம் நல்ல கட்டுரையும் எழுதிர்ந்தாரு ஆனா எனக்கு ஒன்னும் புரிலிங்க.அதுல தான் இந்த கும்போனத்துல புள்ளைங்க நெருப்புல செத்து போச்சே அதபத்தி எழுதிர்ந்தாருங்க அதுல ஒருஎடத்தில ஒரு சினிமா ஹன்னிபால் பத்தி எழுதிருந்தாருங்க ஆனா நடிச்சவ்ரு பேர தப்பா போட்டுட்டாரு. அவ்ரு பேரு அந்தோனி ஹாப்கின்ஸுங்க இவருதான் மாத்தி போட்டாரு. அத ஏம்பிரண்டுகிட்ட காட்டுனதுக்கு அட போடா ஏதோ ஒரு தப்பு நடந்துபோச்சி அத சொல்ல வந்துட்ட மத்தது நல்லாருக்கான்னான் நாஞ்சொன்னன்


"அடே கோவத்த கிண்டாதடா எனக்கு அவுரு எழுதுனதுல இதான்டா புரிஞ்சுதுன்னு" சொன்னனுங்க.. அவன் ஒரு வார்த்த பேசலியே..இப்பயும் என்னமோ சாருஆன்லைனுன்னு ஒன்னுல எழுதுராரு இப்பவும் அதே ரஸ லீலா பாகம் இருவதுன்னு தொடர்ச்சியா அதே சொந்தக்கதைங்க ...இப்பலாம் அந்த வலைக்கே போரதில்லீங்க எதுக்கு வம்பு நம்பளே துபாய்ல இருக்கம் எதாவது ஒன்னுகெடக்க ஒன்னு ஆயிடிச்சின்னா என்ன பன்றது அப்பறம் எம் பிரண்டு இப்பவும் அவர படிக்கிரானுங்க.....


அவரு நம்ப கமலகாசன பத்திஎழுதிருக்காரு பார்ரான்னு சொன்னான் எனக்கு கமல்னா புடிக்குமுங்க நம்ப ரசினி ராம்கிக்கு ரசினி மாறி எனக்கு கமலுங்க சரின்னு பாத்தா விருமாண்டியை முன்வைத்துன்னு ஒரு கட்டுரங்க அதுல நெரயா லத்தீனு, பெரான்ஸு, ஈரானு இப்படி பலநாட்டு படத்தியும் போட்டு விமர்சனமுங்க. என்ன பன்றது அவரு நிலம அப்பிடி எனக்கு எப்பிடி சாருவ புரிலியோ அதே மாறி சாருவுக்கு கமல் படம் புரிலங்க, சரி கொரியாகாரன் எதோ தப்பான படத்துக்கு விருது கொடுத்துட்டான்னு விட்டுட்டனுங்க இப்பிடிதாங்க அவுருக்கும் நமக்கும் ஒத்தே வர்ல. இதுல இவரு இந்தியவுல இருக்க எல்லா எழுத்தாளர். நடிகர்,கவிஞர்.பத்தியும் விமர்சணம் பன்னி எழுதுவாருங்க ஆனா அவரப்பத்தி எழுத ஆருமில்லீங்க. நானே எனக்கு அவரு


எழுதறது புரிலன்னுதாங்க எழுதுரன் அவர ஒன்னும் சொல்லலீங்க. இதுவேற அனானிமசூ ,ஈ,கொசுன்னு பின்னூட்டம் போட்டா என்னாபன்றது.சரி இம்பூட்டு நாளா சும்மா இருந்துட்டு இப்ப ஏன்டா எழுதுரண்னு கேக்கரீங்களா.... நான் இப்பதாங்க சும்மா இருக்கன் படிச்சுட்டு எழுதுங்க......

Monday, July 02, 2007

பின்னூட்டம் வேனுமா பின்னூட்டம் ?


நல்லவங்களே இந்த வலைப்பூ ஒலகத்தில பின்னூடம் வாங்குற மாதிரி பதிவு எழுத ஒவ்வொருத்தனும் மண்டைய பிச்சிகிட்டு அடுத்தவன் பதிவு அடுத்தவங்க தளம் ஆனந்த விகடன்ல இருந்து அரிஸ்டாட்டில வரைக்கும் பரீட்ச எழுதப் போறவன் மாதிரி விழுந்து விழுந்து படிக்கிறான்
பள்ளிக்கூடத்தில ஒக்காந்து இவ்ளோ ஆராச்சியும் பன்னியிருந்தா இன்னேரம் ப்ளாக் எழுதும் பதிவர் எல்லாம் பில்கேட்ஸ மிஞ்சியிருக்கலாம்.


ஆனா ஆரியம் திராவிடம் அனானி ஆட்டம்னு அடிச்சிகிட்டு சாகுற தமிழ் வலைப்பூ ஒலகத்தில பின்னூட்ட பேதமை இருக்கு. நாலு பேர் வந்து படிக்கலின்னாலும் நல்லாருக்கு , கும்மி, மொக்கை, இல்லை தூன்னு மூஞ்சீல துப்பினாலும் புக்கர் பரிச வாங்குன அருந்ததி ராய் மாதிரி நம்மாளுக்கு முகமெல்லாம் மலந்து போகும் .


இந்த மாதிரி இருக்க ஒலகத்தில எவன் யாருக்கு பின்னூட்டம் போட்டா என்ன போடலைன்னா என்னன்னு போக முடியுமா எதோ என்னால முடிஞ்சது இன்னும் நாலுபேர் பதிவுக்கு போய் கும்மிதான் அடிக்க முடியும் அதையும் செய்யமாட்டேன் போன்னு சொல்றதுக்கு நான் ஒன்னும் பின்னூட்ட மே வேண்டாமுன்னு சொல்ற ஆள் இல்லே எனக்கு அந்தமாதிரி ஒறைக்கிற மாத்ரி நச்சுன்னுல்லாம் சொல்ல முடியாது.


எதுக்கு இவ்ளோ நீளமா இவன் பதிவு போட்றான்னு பாக்கிரவங்க கொஞ்சம் தமிழ்மணத்தையும் பாருங்க " நான் இனி எங்கும் பின்னூட்டம் போட மாட்டேன்" என்னை தூக்கில் போடுங்கள் , ஒரே தற்கொலை வாசணை என்னத்த சொல்ல அத்னால யாருக்காவது பின்னூட்டம் வேனுமான்னு சொல்லுங்க இன்னும் நாலுபேர வேண்டுமானாலும் கொண்டுவந்து விட்டு அடிச்சி ஆடி ஆசைய நிறைவேத்தி வைப்போம். ஓகேவா



இப்பவே கண்ணக் கட்டுதா?