Tuesday, June 27, 2006

அதிமுக மற்றும் திமுக தொண்டர்களுக்கு

கடைசியாக வலைப்பதிவெழுதி சுமார் பத்து நாட்களுக்கு மேல் ஆகிறது. அதன் பின் இன்றுதான் எழுதுகிறேன். கடந்த பத்து நாட்களாய் என்பதிவுகளை காணாமல் ஏங்கிக்கொண்டிருந்த கோடானுகோடி தமிழ் அன்பர்களுக்கும் ஒரு அதிர்ச்சி செய்தி. (என்னாத்த அதிர்ச்சி எல்லாரும் நல்லா சந்தோஷமா இருந்திருப்பீங்க) மீண்டும் போட்டுத்தாக்க வருகிறேன். ( இரண்டு நாள் எழுதாமல் இருந்ததும் வேர்களைத் தேடின்னு ஒருத்தர் பின்னூட்டத்துல ப்ளீஸ் ஸ்டாப் ரைட்டிங்னு கடுதாசி போட்டுட்டாரு சரி யார்டா அதுன்னு பாத்தா ஆளே காணும் எழுதாத ஒருத்தர் எழுதுர என்னையும் ஏன் சொன்னார்னு இன்னம் புரீல) ஒன்னுமில்லீங்க கொஞ்சம் ஒடம்பு சரில்ல அதாலதான் என்னால எதும் எழுதமுடீல. நான் ஏதோ இனிமே எழுதவே மாட்டேன்னு நினைச்சி வெடிவெடிச்ச எல்லா அதிமுக தொண்டர்களுக்கும்(அன்பாய் திட்டும் முகமூடி கழகம்) அதாங்க அனானிமசுக்களுக்கும் அடடா இனிமேல் குவாட்டர் கோவிந்தனும் கோவிந்தாவா என சந்தோஷப்பட்ட பாண்டேஜ் பாண்டியனுக்கும். திமுக கொடியை அரைக்கம்பத்தில் (திட்டாமல் முயற்சியளிக்கும் கண்மணிகள்) ஒரு நல்ல சேதி ஒரு கெட்ட சேதி (என்னா இனிமே ரின் சோப்பு கிடைக்காதான்னு கேக்காதீங்க) இனிமே வாரம் ஒரு பதிவு மட்டும் மொத்தம் உள்ள நான்கு வலைக்கும் நாலு பதிவு. அத மட்டுமே ஆதரிச்சு வளக்கபோறதா இந்த அறிவிப்பு மூலமா சொல்லிக்கிறனுங்க. ஒரேடியா அதிமுகவ மட்டும் விமர்சிச்சி எழுதறதால அவங்க ரொம்ப பேமசாயிடராங்க. நான் என்னமோ அவங்க செய்யாததியா சொல்றன்.? எதாவது நல்லது செய்ங்க நானும் ஆதரிக்க காத்திருக்கன்( என்னத்த அது இந்த ஜென்மத்துல நடக்காது)இன்னிக்கு கூட வைகோ வோட தங்கச்சி திமுக நடத்துறது மட்டமான அரசியல்னு சொல்றாங்க. அட ஒங்க மானம் காத்துல ஒயர பறந்தா எல்லாமே மட்டமாத்தான தெரியும்னு நம்ம கோவிந்தன் கேக்கிறார். அவரும் ஜெயா டிவிய இரண்டு நாள் பாத்துட்டு ஊருக்கு போனவர்தான் ஆளக்கானமேன்னு தேடிப்பாத்தா பாண்டிமடத்தில சேது சீயான் கணக்கா பித்துபுடிச்சு கெடக்காரு. இப்பதான் மொள்ள எந்திரிச்சு பிதாமகன் விக்ரம் மாதிரி கொஞ்சம் பேசுறாரு. அவரு எப்ப முழுசா ஜெமினி மாதிரி வருவாருன்னு நானும் காத்திருக்க்னுங்க. ஒன்னும் ஒக்காந்து டைப்படிக்க முடீலைங்க நாளைக்கு எழ்துறனுங்க. பத்துநாளா உள்ள கிடந்த எல்லாத்தையும் பாத்து எடுத்து நாளைக்கு எழுதுறனுங்க. இனிமே தான் ஆசுபத்திரிக்கு போனும்ங்க. எதாவது சொல்னும்னா பின்னூட்டம் போடுங்க( இம்ம்ம்ம்ம்ம்ம்.......இப்டி கேட்டு கேட்டுதாங்க பின்னூட்டம் வருதுங்க இதாலதான் கோவிந்தன் பேசவே மாட்டங்கிறார். )அப்றம் அவரு ஒரு ஐடியா சொன்னாருங்க நீ ஒன்னு போலியப்பத்தி எழுது இல்ல சாதியப்பத்தி எழுது அதுவும் இல்லன்னா இப்ப பேமசு கற்புதான் அதப்பத்தி எழுது சும்மா இந்தமாதிரி எதாவது எனக்கு உடம்புசரில்ல கால்ல வலின்னு லீவ் லெட்டர் எழுதுனா யாருய்யா படிப்பா ஒங் கவுண்ட்டர பாரு ஏழாயிரத்த தாண்ட எட்டு நாளாவுது என்னா மோ போ............


Monday, June 19, 2006

அன்புமணிக்கு அருகதை உண்டு

அன்புமணிக்கு மருத்துவர்களை கண்டிப்பதில் உரிமை உண்டா என்பதற்கு மறுப்பு உண்டா எனக் கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கு காரணமாக எண்பதுகளின் கடைசியில் நடைபெற்ற தமிழக சாலைமறியல் போராட்டத்தை காரணம் காட்டியிருந்தார்.
ஆளும் போது ஒரு முகமும் இல்லாத போது ஒரு முகமும் இருப்பது அரசியல்வாதிகளுக்கு. இயல்பே இதற்கு கருணாநிதியோ செயலலிதாவோ ராமதாசோ விதிவிலக்கல்ல. ஆனால் ஒரு பொதுமக்கள் பிரச்சணையில் அத் துறைசாற்ந்த ஒருவர் கண்டிக்காமல் வேறு யார் அதை செய்வது என்பது விளங்கவில்லை திரு பொட்டீக்கடை அவர்கள் சொன்னதுபோல் அணைவரும் அவர்களின் முதுகை திரும்பி பார்த்தால் வெறும் அசிங்கமே மிஞ்சும்.
இன்று ஊடகங்கள் குறிவைத்து அன்புமணியை தாக்குகின்றன என்றால் அதை மறுக்க முடியுமா?. இன்றுகாலை செய்திகளில் பார்த்திருக்கலாம் அன்புமணி பிரதமரை சந்திக்கிறார். துறை மாற்றப்படுமா ஒட்டுகேட்ட விவகாரம் வெடிக்கிறது. இதுதான் தலைப்பே.
தொலைபேசிகளின் பதிவுகளை திரட்டுவது அரசுக்கு ஒன்றும் புதிதல்லவே. முன்பொருமுறை ஆதரவுதந்த ராஜிவின் தொலைபேசி பதிவு விவகாரத்தில ஆட்சியை இழந்தவர்தான் சந்திரசேகர். அன்புமணி விவகாரத்தில் அவர் துறை சார்ந்த விஷயத்தை அவர்கண்டிக்க உரிமையில்லாதுபோனால் அவ்வேலையை யார்செய்வது?. மரத்தை வெட்டினார்கள் இன்னும் எத்தனைகாலங்களுக்கு இதையே சொல்லிக்கொண்டிருக்கப் போகிறீர்கள்.
போரட்டம் என்பதற்கும் சண்டித்தனம் என்பதற்கும் தங்களுக்கு வித்தியாசம் தெரியும் என்றே எண்ணுகிறேன். தனியார் துறைகளிலும் அரசுத்துறைகளிலும் இடஒதுக்கீடு வேண்டும் என்று போராடுபவர்களுக்கும் அதை எதிர்த்து போரிடுபவர்களுக்கும் வேறுபாடு உண்டு. பசித்தவனுக்கு உணவின் தேவை தெரியும் பசியாறியவன் சேர்த்துவைக்க போராடுகிறான். நீங்கள் யாருக்கு உணவு வேண்டும் எனச் சொல்வீர்கள்.
அன்புமணி ஒரு வன்னியராக மட்டுமே பார்க்கப் படுவதால் மட்டுமே உங்களுக்கு அவர் அருகதையில்லாதவராக தெரிகிறார். அவரை அமைச்சராக பாருங்கள் அவரின் அருகதை தெரியும். கடந்தகாலங்களின் தவறுகள் திருத்திக்கொள்ளப்படுகையில் அவற்றை பாரட்டுவது மட்டுமே அவர்கள் மீண்டும் அதே தவறை செய்யாமல் தடுக்கும். மேலும் மேலும் கடந்தகால செயல்களுடன் ஒப்பிட்டு அவர்களுக்கு அருகதை யில்லை என்பது சரியான வாதமல்ல.
திரு வேணுகோபாலின் செயல் கண்டிக்க தக்கது என்பதை எந்த விதத்தில் மறுக்கிறீர்கள் என்பதை அறியமுடியவில்லை. அவர் தன் சக ஊழியர்கள் தவறுசெய்யும் போது சுட்டிக்காட்டியிருந்தால் அதை அன்புமணி ஏதும் சொல்லப்போவதில்லை. மாறாக தவறுகளுக்கு துணைபோவதை கண்டிக்கும் உரிமை அமைச்சருக்கு உண்டு.
தங்களின் உரிமைக்காக போராடும் மருத்துவர்கள் கடமையை மறப்பது எவ்வகையில் நியாயம் என்பதை அறியேன். அதுவும் அதை கண்டிக்கும் ஒருவர் பிற்பட்ட துறையில் இருந்து வந்தவராக இருப்பின் ஆதிக்க மனோபாவம் தலையெடுப்பது தவிற்க்க முடியாத ஒன்று.
இதே விவகாரம் தமிழகத்தில் நடைபெற்றபோது எஸ்மாவும் டெஸ்மாவும் செயல்வடிவம் பெற்றபோது அவற்றை பாரட்டியவர்கள் அதை ஒரு பிற்படுத்தப் பட்ட அமைச்சர் செய்கையில் தவறு என்பதும் அருகதை யில்லை என்பதும் வேடிக்கை. அதே துறைசார்ந்தவர் மருத்துவராகவே இருந்தாலும் அவர் வன்னியர் மற்றும் தமிழர் என்பதால் மட்டும் அன்புமணியைகுறிவைக்கிறார்கள்.
வேணுகோபாலின் விவகாரத்தில அமைச்சர் அன்புமணிக்கு முழு அதிகாரமும் அருகதையும் உண்டு.

Sunday, June 18, 2006

கிழுமத்தூரில் ஓலைச் சுவடிகள்

கிழுமத்தூரில் ஓலைச் சுவடிகள்
பிப்ரவரி எட்டாம் தேதி எங்கள் ஊரான கிழுமத்தூரில் கண்டுபிடிக்கப் பட்ட ஓலைச்சுவடிகளின் விபரம் தி ஹிந்துவில் வெளியாகியுள்ளது.( நான் தற்போதுதான் பார்த்தேன்) அவ்வோலைச்சுவடிகள் எந்த காலத்தை சேர்ந்தவை என்பது மிகச்சரியாக குறிப்பிடப் படவில்லை. மேலும் அதில் இருக்கும் செய்திகளும் விபரமாக இல்லை. அதுபற்றிய தகவல்களுக்காக பெரம்பலூர் மாவட்ட ஆட்சியருக்கு ஒரு விரிவான கடிதம் மின்னஞ்சலில் அனுப்பியுள்ளேன் மேலும் அதிக தகவல் தெரிந்தவுடன் பதிவில் எழுதுகிறேன்( என் அப்பாவின் தாத்தாவுடைய நூற்றைம்பது ஆண்டுகள் பழமையான ஜாதகம் ஓலைச்சுவடியில் இன்னும் இருக்கிறது அது பழங்கால ஓலைச்சுவடியில் சேருமா.....என்பதை அறியேன்)

Saturday, June 17, 2006

கூட்டணி ஆட்சிக்கு தயங்குவதேன்

கூட்டணி ஆட்சிக்கு தயங்குவதேன் - வைகோ
மதுரை திருமண விழா ஒன்றில் கலந்துகொண்ட வைகோ திமுக தேர்தலுக்கு முன் கூட்டணி ஆட்சிக்கு தயார் என்று கூறிவிட்டு இப்போது ஏன் தயங்குகிறார்களென்று கேள்விஎழுப்பி உள்ளார்.
அதோடு இது மைனாரிட்டி அரசு என்றும் தெரிவித்தார்
இதைக் கேட்ட நமது கு.மு.க பொதுச்செயலாலரும் கருணாநிதியின் அறிவிக்கப்படாத கொ.ப.செ வுமான குவாட்டர் கோவிந்தன் அவர்கள் வெளியிட்ட அறிக்கை." செல்வி. ஜெயலலிதாவின் அண்ணன் வைகோ அவர்களே! கல்யாணத்துக்கு போனமா தம்பதிகள வாழ்த்துனமான்னு இல்லாம அங்கியும் போயி அரசியல் பேசனுமா ? பாவம் அந்த புள்ளங்க எம்புட்டு நேரம் மேடைல இருக்கும். அது சரி உங்களுக்கு மைக்க பாத்தாலே பேச்சு தன்னால வருது. நமக்கு குவாட்டர் போட்டாத்தான் வருது. அவங்க அவங்க பழக்கமில்ல அது .
கூட்டணி ஆட்சிக்கு தயார்னு எங்க தல ஒருநாளும் சொல்லல யோசிப்போம்னுதான் சொன்னாரு. யோசன பன்னிட்டாரு அதால இப்ப இல்லங்கிறார். இதப்போயி என்னமோ பெரீசா பேசுறிங்களே. அட அப்பிடியே சொல்லீர்ந்தாலும் அது எலக்சனுக்கு முன்ன. இப்ப எலக்சன் முடிஞ்சு போச்சே. அப்பிடிகா பாத்தா நீங்களுந்தான் ஒங்க தங்கச்சிய சதிகாரி சர்வாதிகாரி பெண் ஹிட்லர் கொலைகாரி அப்பிடிலாம் சொன்னீங்க இப்ப அண்ணனும் தங்கச்சியும் ஒரே மேடைல கொஞ்சிக்கிறீங்க.
அதுலயும் ஒரு போட்டோ பாத்தனுங்க, நீங்களும் ஒங்க தங்கச்சியும் ஒங்க தம்பியும் ஒன்னா கைகோத்து நின்னு சிரிச்சா மாறிக்கு அதுல ஒங்க மொகத்தில இருந்த சிரிப்ப பாத்ததும் உள்ள போன ஓல்டு மங்கு கபால்னு வெளிய வந்துருச்சு. நானும் எம்மானோ குடிச்சிருக்கனுங்க இப்பிடி ஆனதில்ல .
அதெதுக்கு நீங்க சொன்னதுக்கு வாரனுங்க. எங்க ஒனரு எம்பிரண்டு ஒரு கடுதாசி ஒன்னு போட்டத பாத்தீங்களா? அதுல சொன்ன மாறி இப்ப கட்சிமாறிட்டீங்களான்னு எனக்கு சந்தேகமா இருக்குங்க. அப்பிடி எதுவும் இருந்தா ஒரு அறிக்க குடுங்க . ஆமா லட்சக்கணக்குல திரண்டதா சொல்றீங்களே அந்த ஊருபேர சொல்லுங்க?. அது அதிமுக காரங்களா இருக்கும் ஒருவேள நீங்க அவங்கள உங்காஆளுங்கன்னு தப்பா நெனச்சிருப்பீங்க. ஒங்க தங்கச்சிக்கு தெரிஞ்சா நீங்க காலி.
அதென்னங்க மைனாரிட்டி அரசு மெஜாரிட்டி அரசு. நமக்கு தெரிஞ்சதுல்லாம் அரசு மட்டுந்தாங்க. நாங்க மைனாரிடி அரசா இருக்கறதால ஒங்களுக்கு தான் லாபம் இல்லன்னா ஒங்க ஆளுங்க சட்டசபைய கனவுலதான் பாக்கலாமுங்க. அதுலாஞ்சரி இப்ப கூட்டணி அரசப்பத்தி நீங்க ஏங்க பேசுரீங்க?. காங்கிரஸ்காரங்க காசு தந்தாங்களா? இல்ல கூட்டணி அரசு வர்ற மாதிரி இருந்தா திமுக கூட கூட்டணி வப்பீங்களா?
ஒங்கள பத்தி நம்ம சாருநிவேதிதா ஒரு வார்த்த சொன்னா லும் திரு வார்த்த சொன்னாருங்க முடிஞ்சா ஒங்க கட்சிய வளருங்க இல்லாட்டி ஏதாவது கட்சில சேருங்க."
மப்புடன்...
குவாட்டர் கோவிந்தன்,
பொதுச்செயலாளர்,
குடிகாரர் முன்னேற்ற கழகம்.
மற்றும் கருணாநிதி கொ.ப.செ.
மானிட்டர் மாடி .
1/4 (குவாட்டர்)
மதுப்பாக்கம்
கள்ளூர்.
( உங்களெ இனிமே மைக்கோன்னு கூப்பிட்லாமுன்னு இருக்கனுங்க)
அன்னியலோகமும் அடையாளச் சோதனையும்

எனது வலைப்பூக்களில் நான் ஒரு குத்து அறிவிப்போ மட்டுறுத்தல் நண்பனோ பயன்படுத்த வில்லை வெறும் பின்னூட்ட மட்டுறுத்தல் மட்டுமே (ப்ளாகரின் சேவையில் உள்ளது) எதோச்சையாக இப்போது நான் எனது பெயரை அன்னியலோகத்தின் அடையாளச் சோதனைக்கு உட்படுத்திய பொழுது எனது பெயர் பொய் என்று வந்தது. அதாவது அடையாள எண்ணும் என் பெயரும் வேறு வேறு. ஒரே ப்ளாகர் கணக்கின் மூலம் வெவ்வேறு தலைப்புகளில் எழுதும் என்போன்ற
(எனது வலைப் பக்கங்கள்
இவை மூன்றும் ஒரு கணக்கின் கீழ் வரும் வெவ்வேறுபக்கங்கள். மேலும் ஒன்று
இது வேறு ஒரு கணக்கில் இருந்து செயல் படுவது.)
ஆனால் எல்லா பக்கங்களிலும் எனது புகைப்படம் மற்றும் அடையாளம் அறிவிப்புகள் ஒன்றே)
என்போன்றவரின் கதி என்ன என்று புறியவில்லை இப்படி யிருக்க வெரும் பெயரை மட்டுமோ அல்லது உறுப்பினர் ப்ளாகர் எண்ணை வைத்தோ சோதிக்கும் போதும் இதே தவறுதான் எனது வலைப்பூவின் எண்களும் ப்ளாகரின் கணக்கு என்களும் பின்வருபவை
1.Profile No: 10398736
kilumathur 28593647
kadambam 28616241
kavithai 14129586
2.Profile No: 10398732
Tamilmanathil 28710247
இதை வைத்து யாராவது சோதித்து எனது தற்போதைய நிலை என்ன என்று சொல்லுங்கள் எனக்கு விளங்கவில்லை யாருக்கும் தெரிந்தால் விளக்கிவிட்டு போகவும்.( ஏனென்றால் நான் போலியா நிஜமான்னு எனக்கே இப்ப கொழப்புது )ஆ.....................................................:((

Friday, June 16, 2006

ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக

ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக தமிழகத்தில் நடைபெறுவதாக இருக்கும் ஆர்பாட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சி கலந்து கொள்ளாது என்று அக்கட்சி நிலைப்பாடு எடுத்துள்ளது. அதே நேரம் இலங்கையில் அமைதி ஏற்படுவதற்க்கான முயற்சிகளை செய்யுமாறு மத்திய அரசிடம் வலியுருத்தப்போவதாகவும் அறிவித்துள்ளது. பா.ம.க. இப்போது இருக்கும் நிலையில் அது எடுத்த முடிவு சரி என்றே கருதலாம் .
மத்திய அரசில் பங்குகொண்டிருக்கும் எந்த ஒரு கட்சியின் வெளிநாட்டு அரசியல் கொள்கைகள் பற்றிய முடிவும் அது அரசின் கொள்கைகளை பின்பற்றுவதே வாடிக்கை. அதனால் தான் தி.மு.க கூட இந்தியாவின் நிலைப்பாடே எங்களின் நிலைப்பாடும் என்று கூறுகிறது. அதுகூட கைகழுவும் நிலைதான். எனக்கெதுவும் தெரியாது மத்திய அரசிடம் கேள் என்பதன் மறுஒலிபரப்பு.
பா.ம.க. வோ வலியுருத்துவோம் என்கிறது அதன் முடிவை தெளிவாகவே சொல்கிறது. அடிப்படையிலேயே புலிகள் மீதும் ஈழத்தமிழர்கள் மீதும் மிகுந்த பற்று கொண்டவரான வைகோ இப்போது எதுவுமே பேசவில்லை. தயாநிதி மாறனை கொல்ல முயல்வதாக திமுக உறுப்பினர்கள் பிரதமரிடம் தந்த மனு ஒருவேளை அவரின் வாயை அடைத்திருக்கலாம். அல்லது சமீபகால தங்கையான செல்வி. ஜெயலலிதா வாய்ப்பூட்டு போட்டிருக்கலாம். அதிமுக எதுவும் கருத்து சொல்லாததில் வியப்பில்லை.
ஆனால் இது ஏதோ தமிழர்கள் பிரச்சணை என்பதால் மத்திய அரசு வாய்திறக்க மறுக்கிறது. தமிழக அரசு தனது நாற்காலியை காப்பாற்ற மவுனம் சாதிக்கிறது.ஆனால் அங்கிருந்து வரும் தமிழர்களின் வருகைக்கு வேண்டிய உதவிகளை செய்துதருமாறு கூறியிருப்பதாக தகவல்கள் சொல்கின்றன.
இந்நிலையில் பா.ம.க செய்வதற்கு ஏதுமில்லை. அதனாலேயே அது நடைபெறவேண்டியது இப்போது அங்கே அமைதியை நிலைநிருத்த அரசை நிர்பந்திப்பது மட்டுமே தேவையானது. இலங்கை அரசு இந்தியாவின் தலையீட்டை விரும்புமா என்பதும் கேள்விக்குறி. அது நார்வேயின் சமாதானத்தையே சரியான முறையில் பின்பற்ற மறுக்கிறது. அமெரிக்கா இலங்கை சமாதானத்தில் ஆர்வம் காட்டப்போவதில்லை காரணம் அங்கே எண்ணெய் கிடைக்காது. ஏலக்காய் வேண்டுமானால் கிடைக்கும்.
இப்படி உலகநாடுகள் சமாதானத்திற்கான முயற்சிகள் எடுப்பதில்லை அல்லது அப்படி எடுக்கப்படும் முயற்சிகளை இலங்கை அரசு புறந்தள்ளி பூட்டு போடுகிறது. இழக்க ஏதுமில்லை எனும் நிலைக்கு தமிழர்களை தள்ளுவது ஒன்றே அதன் தலையாய குறிக்கோள். இலங்கையும் புலிகள் அமைப்பும் தங்களுக்குள் பேசித்தீர்த்துக்கொண்டால் ஒழிய இது எரியும் விஷயமாகவே தொடரும்.
அப்படி நடக்கும் வேளையில் இந்தியா வழக்கம் போல் மவுனமாக இருப்பது சரியான முடிவு அல்ல. நேபாளத்தில் நடந்த கலவரத்திற்கு உடனடியாக தீர்வுகாணும்படி தலையிட்டு நிர்பந்திக்கும் இந்தியா இலங்கை பற்றி பேசுவதில்லை. ஒருவேளை தனித்தமிழ்நாடு கோரிக்கை மீண்டும் எழும் என்று கவலைப் படுகிறதோ என்னவோ?

இலங்கையில் நிலையான சமாதானம் ஏற்படும் வரையில் இந்தியப் பெருங்கடலின் படகுகளின் நடமாட்டம் குறையப்போவதில்லை

Thursday, June 15, 2006

நான் இல்லாத தேர்

.எங்களூரின் தேர் சுமார் நூற்றைம்பது ஆண்டுகள் பழமை வாய்ந்தது. சுமார் எழுபது முறைகளுக்கு மேல் ஊரை வலம்வந்திருக்கிறது சராசரியாக இரண்டாண்டுகளுக்கு ஒருமுறை. நான் சிறியவயது முதலே கடவுள் நம்பிக்கை யில்லாமல் இருந்த போதிலும் ஊரின் இதுபோன்ற நிகழ்வுகளில் அதிக ஆர்வத்துடன் பங்கெடுத்துக் கொள்வதுண்டு. நிறைய விருந்தினர்கள் வருகைதரும் பெரிய குடும்பவிழா அது.
அதுவும் எனது சொந்தங்களை பொருத்தவரை இதுபோல ஏதாவது சந்தோஷமான தருணம் மற்றும் துயர் சம்பவங்களில் பார்த்தால் தான் உண்டு. இல்லாவிட்டால் தேர்தான் அல்லது தைக்கூத்து எனப்படும் ஒருவிழா. இரவின் நேரம் குளிரில் ஊரைச்சுற்றி வருவதே ஒரு தனி அனுபவம். அது ஒரு அழகியகனாக்காலமானது இப்போது.
நான் இப்போது இருப்பது துபை இங்கே வந்து இரண்டு ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. இந்த இரண்டு ஆண்டுகளுமே தொடர்ந்து தேர் திருவிழா நடைபெறுகிறது. நாந்தான் இல்லை. ஆனாலும் அங்கிருந்து அனுப்பப்படும் ஒளிநாடாக்களை காண்பதுண்டு. என்னதான் விடியோவில் பார்த்தபோதும் நேரில் இருக்கும் சந்தோஷம் கிடைப்பதில்லை.
வண்ண பலூண்தாங்கிய வியாபாரிகள் தெருவெங்கும் இறைந்து கிடந்தாலும் மனசை அள்ளும் மாக்கோலம் அந்த மாக்கோலம் போட்டாலும் அதை விட அழகாய் இருக்கும் எங்களூர் அழகிகள் தோழிகள் இவர்களை பார்க்கவே அதிகாலை நேரம் தெருவை வலம்வருவதுண்டு தேருக்கு போட்டியாக. ஆனால் விடியோவில் இதெல்லாம் கிடைக்காது.
தேர் விழா என்பது எங்களூரை பொருத்தவரை ஒன்பது நாட்கள் நடக்கும் ஒருவிழா. முதல்நாள் காப்புகட்டுவது என்பார்கள் அதன் பின் ஊரில் இருக்கும் ஒவ்வொரு பிரிவினருக்கும் ஒருநாள் வீதம் மண்டகப்படி எனப்படும் சிறப்பு செய்து வழிபடும் நிகழ்ச்சிகள். அதாவது நீங்கள் கேள்விப்பட்டிருக்கக் கூடும் கிராமங்களில் வகையராக்கள் அதுபோல் எங்கள் வகையறா பூசாரி வகையரா( ஆனா நாங்க சாமி கும்பிடமாட்டோம்)எங்களதே ,முதல்நாள் நிகழ்ச்சி.
நாங்கள் சாமியை வணங்குவதில்லை என்றாலும் வகையராவில் மூத்தவர்கள் என்பதால் எனதுகுடும்பமே முதல் நாள் தொடங்கிவைக்கவேண்டிய நிலை. ஊரிலிருக்கும் ஒரு நல்ல மரியாதைக்காக அதை செய்கிறோம். (எங்கள் வீட்டை பெரியவர் வீடு என்றுதான் இன்றும் அழைப்பார்கள்) எங்களின் தாத்தா மறைந்த திரு.செல்லமுத்து படையாட்சி அவர்களால் இந்த பெயர். அவர் எனதூருக்கு இரண்டுமுறை தலைவராக இருந்தார் அவரின் பக்திகாரணமாகவே நானும் என் தந்தையும் கடவுள் நம்பிக்கை யற்றுப்போனோம் என நிணைக்கிறேன்.
சரி அது எதற்கு தேருக்கு வருவோம் சமீபகாலங்களில் ஒவ்வொரு முறையும் கண்டதேவி தேர்சம்பவங்கள் புயலை கிளப்புவதை அறிவோம் ஆனால் எங்களூரில் அப்படியில்லை. எங்கள் ஊரின் தாழ்த்தப்படவர்களுக்கு ஒருநாள் மண்டகப்படியும் தேரிழுக்கும் நாட்களில் அவர்களும் முன்னிருந்து வேலைகளை பார்ப்பதும் இயல்பானது. எனக்கு தெரிந்தவரை இதுவரை எந்த முட்டலும் மோதலுமில்லை.
தேர் நாட்கள் முடிந்து தேரிழுக்கும் நாள் ஊரில் நிறையும் கூட்டம் சொல்லவியலாது. ஏனென்றால் பெரம்பலூர் மாவட்டத்தை பொருத்தவரை கிழுமத்தூர் தேர்தான் அளவில் பெரியது. மேலும் பொதுவாக தேர்த்திருவிழா விடுமுறை நாட்களில் வ்ருவதால் நிறைய சொந்தங்களின் வருகையும் இருக்கும். இந்த தேர் விழாவால் ஊருக்கு ஒருசில நன்மைகளும் உண்டு, கிராமங்களை பொறுத்தவரை தெருவில் ஆக்கிரமிப்புகளை நீங்கள் பார்த்திருக்கலாம் ஆனால் இங்கே அப்படியில்லை.தேர் வருவதற்க்கு இடைஞ்சலாக இருக்கும் என்பதால் எவரும் எதையும் ஆக்கிரமிப்பதில்லை. ஒரே நேரான மூன்று தெருக்கள்மட்டுமே. ஆனால் நீளமும் அகலமும் கொண்டவை .
இதுபோல் ஒவொரு வருட தேரிலும் சில வேலைகளை நண்பர்களுடன் இழுத்துப்போட்டு செய்வதால் பத்து நாட்கள் போவது தெரியாமல் போகும். தேர் முடிந்த மூன்றாம் நாளில் மஞ்சள் தண்ணீர் விழா ஒன்றுண்டு( பதினாறு வயதினிலே படத்தில் வருமே ) இதற்க்காகவே நாங்கள் சிலபேர் அன்றுதான் வெள்ளை வேட்டி சட்டைகளில் வலம் வருவதுண்டு. (சும்மா யார்யாருண்னு தெரிஞ்சுக்கலாமில்ல:)) அந்த நாட்களை மறக்கவே முடியாது. இதுபோல இன்னும் எத்தனையோ சம்பவங்களை மகிழ்வுகளை அரபுதேசம் வந்தபிறகு இழந்தாயிற்று.
(பின் குறிப்பு): இப்பதிவை நான் எழுதுவது ஏனென்றால் நேற்று எங்கள் ஊரில் தேர் மனசு கொஞ்சம் கஷ்டமாகவே இருக்கிறது. நானில்லாத மூன்றாம் ஆண்டு இது.


Tuesday, June 13, 2006

கண்ணகியும் தேங்காய் சிரட்டையும்

நாகரீகம் எவ்வளவோ வளர்ந்துவிட்டது. மனிதன் தன் இருப்பிடத்தில் இருந்த படியே உலக விசயங்களை அறிந்து கொண்டும் அதன் மாற்றுக்கருத்துக்களுக்கு வாதிட்டுக்கொண்டும் தனது இருப்பை ஒரு உயிர்ப்போடு வைத்திருக்க நினைக்கும் காலமிது ஆனால் இன்னும் மாறாத சில பிற்போக்கு பழமைவாத கொடூரர்களும் இருக்கவே செய்கிறார்கள்.
வத்தலகுண்டு விஷயத்திற்கு முதலில் வருவோம்." வத்தலகுண்டு அருகே ஒரு கிராமத்தில் இருக்கும் பழக்கம் ஒரு பெண் கற்புள்ளவளா இல்லையா என்பதை தெரிந்துகொள்ள ஒரு புது?வழியை காலம் காலமாக பின்பற்றுகிறது. அதாவது கற்களால் அடுப்பு அமைத்து அதில் தீமூட்டி அதன் மேல் தேங்காய் ஓட்டை (சிரட்டை) வைத்து அதில் தண்ணீரும் அரிசியும் இட்டு சமைக்க வேண்டும் அந்த தேங்காய் மட்டை அரிசி சாதமாகும் வரை எரிந்து கருகாமல் இருந்தால் அப் பெண் கற்புள்ளவள் வெந்துபோனால் கற்பிழந்தவள்"
இதுபோன்ற மனிதப் பதர்களும் நாட்டில் உலாவ நமது மக்கள் இன்னும் இருக்கிறார்கள். இது ஊர் கட்டுப்பாடு வேறாம். காலம் காலமாக இப்படியே நடப்பதாக அந்த மாக்களின் சப்பைகட்டு வேறு. இதனால் எத்தனை கண்ணகிகள் கற்பிழந்தார்களோ அந்த ஊரின் நாட்டாமைகளுக்கே வெளிச்சம். இது பெண்களுக்கு மட்டுமானது என்பதுதான் கொடுமை ஆண்களுக்கு எனக்கு தெரிந்து எந்த ஊரிலும் கற்பில் களங்கம் வருவதில்லை ஏனென்றால் கற்பு பெண்ணுக்கு மட்டுமேயான பாக்கியம் என்ற ஆணாதிக்க சமூகத்தின் வெளிப்பாடு. "ஆம்பளடீ ஆயிரம் இடம் போவேன்" என்போறும் இன்னும் இருக்கவே செய்கிறார்கள்.
முதலில் கற்பு என்றால் என்ன என்பது தெரியவில்லை எனக்கு. அது உடல் சார்ந்ததா இல்லை மனசு சார்ந்ததா? இல்லை அப்படி எதுவுமே இல்லையா?. எனக்கென்னவோ கற்பு என்பதை உண்மையாக இருத்தல் என்பதாக மட்டுமே கருததோன்றுகிறது. கண்ணகி கோவலன் மாதவி, மணிமேகலை எல்லாம் புராணகால கதைகள் என்றாலும் அது என்னவோ கண்ணகி மட்டும் கற்புக்கரசியாக நம் இலக்கியவாதிகளும் அரசியல் வாதிகளும் ஒரு பெறும் கூற்றை உண்டாக்கி வைத்துவிட்டனர்.
எனக்கென்னவோ கண்ணகியை நினைத்தால் வேதனைதான் மிஞ்சும். "ஆணாதிக்க உலகின் முதல் பெண்ணடிமைச் சின்னம் கண்ணகி" இதுவே உண்மை. கணவன் மாதவியோடு இருக்கும் ஒரு காமுகனாக இருந்தாலும் சரி. கணவனே கண்கண்ட தெய்வம் எனும் நிலையில் ஒரு பெண்வாழவேண்டிய கட்டாயம் இருக்கிறது. அது எப்படி பெண்மையின் சின்னமாகமுடியும்.ஞானி சொன்னது போல கண்ணகி ஆள்பவர்களுக்கு ஒரு கரடி பொம்மைதான். ஆனால் கொஞ்சம் காஸ்ட்லி.
தேங்காய் சிரட்டில் கற்பை தேடும் வஞ்சக ஆண்களின் உலகில் நானும் ஒருவனாக இருப்பது வெட்கக்கேடு. ஹிந்தி நடிகை பூஜா பட் சொன்னது போல எ பிக் இஷ்யூ அபொட் த ஸ்மால் டிஸ்யூ இதுதான் மிகப்பொருத்தமானது. மற்றபடி கற்பெல்லாம் எதுவும் இல்லை ராமதாசும் திருமாவளவனும் வேண்டுமானால் ஒரு கலகத்தை கிளப்ப அதை கையில் எடுக்கலாமே ஒழிய. எந்த பெண்விடுதலை இயக்கமும் சமூக ஆர்வலர் களும் அதை கண்டுகொள்வதில்லை. அதற்காக யாரும் எதுவும் செய்யலாம் என்று சொல்லவில்லை. கற்பென்று ஒன்றிருந்தால் அது ஆணுக்கும் உண்டு என்பதே நிஜம். பெண்ணுக்கு மட்டும்தான் கற்பென்றால் அது பேடிகளின் கூப்பாடு என்பதை தவிற வேறெதுவும் இல்லை.
அந்த வத்தலகுண்டு சம்பவம் ஒரு உதாரணமே இதுபோல் நிறைய இடங்களில் வெவ்வேறு முறைகளில் கற்பு களவுபோகும் சம்பவங்கள் உண்டு. ஒரு பெண்ணை பாலியல் ரீதியாக துன்புறுத்துவது தவறென்று கூறும் சமூகம் அவளை மனநிலை அளவில் காயப்படுத்தினால் தாங்க்கிக்கொள்கிறது. பாலியல் பலாத்காரம் என்பது வெறும் உடல் சம்பந்தமானது அது மறையும் ஆனால் உளவியல் ரீதியாக மறையுமா?. தன் கனவு நாயகியுடன் உல்லாசம் காண நினைக்கும் கணவன் மனைவி மாத்திரம் சேனம் பூட்டிய குதிரையாக இருக்கவேண்டும் என்று நினைப்பது எந்த ஊர் நியாயமென்றறியேன்.
வத்தலகுண்டு மக்களுக்கும் இன்னும் இதே கற்பு பற்றிய பரிசோதனை சமாச்சாரங்களில் ஈடுபடும் கயவர்களுக்கு ஒரு கேள்வி: அதே சிரட்டையில் நீங்கள் சமைக்கத் தயாரா?
கற்பை பொதுவில் ஆணுக்கும் வைப்போம் எனும் பாரதியின் பாடல் கூட இப்போது இல்லை எல்லாம் அப்படி போடுதான். பாரதியின் செல்லம்மா கூட பாரதிக்கு அடங்கியிருந்ததாலேயே அவரிடம் அடியோ வசவோ இல்லாமல் இருக்க முடியும் இலாவிடின் "நான் எழுதுற பாட்டு வேற என் வாழ்க்கை வேற ஒழுங்கா அடங்கியிரு என்றிருப்பார்"
Monday, June 12, 2006

பின்னூட்டங்களை முன்வைத்து

பின்னூட்டங்களை முன்வைத்து இந்த பதிவை நான் எழுத வேண்டாம் என்றே சில நாட்கள் நிணைத்திருந்தேன் ஆனால் எழுதித்தான் ஆகவேண்டிய கட்டாயம் உண்டாகியிருக்கிறது. கடந்த சில நாட்களாக பிளாகர் உடன் போராடி எனது வலைகளின் வடிவமைப்பை மாற்றவேண்டிய கட்டாயத்தில் நான் இருந்ததால் என்னால் சரியாக எதையும் எழுதக்கூட இயலவில்லை. குறிப்பாக மினுமினுக்கும் செய்திகள் டெக்னொராட்டி இனைப்பு தேன்கூடில் பதிய என்று பொழுது அதற்கே சரியானது. அதோடு நான் பயன்படுத்தும் கனிபொறி வேறு நீயா நானா என்று குவாட்டர் கோவிந்தனாய் சண்டித்தனம் செய்தது. எல்லாவற்றையும் சரிசெய்து விட்டு பின்னூட்ட மொடெரேசனை திறந்துபார்த்தால் என்ன ஆச்சர்யம் என்னால் நம்பமுடியவில்லை .
நீங்கள் நிணைப்பது சரிதான் ஒரு பின்னூட்டம் கூட இல்லை மொத்தமுள்ள நான்கு வலைப்பூக்களிலும் இதே நிலை. ஒருவேளை எனது டெம்பிளேட்டை மாற்றியதால் இப்படி எதுவும் பின்னூட்டம் இடுவதில் சிறமம் இருக்குமோ என்று என்னுடைய வேறு ஒரு பக்கத்தில் இருந்தும் அனுப்பினேன் சோதனை பின்னூட்டம் அது சரியாகவே வந்திருந்தது. ஆகா நம்மாளுங்க ஓசி பேப்பர்ல நியூஸ் பாத்துட்டே ஆயிரம் விமர்சனம் பன்னுவாங்களே திடீர்னு திருந்திட்டாங்களா ஒரே சந்தேகம். அதாலதான் இந்த பதிவே இத படிக்கிற யாரா இருந்தாலும் திட்டி போட்டா கூட பரவாயில்ல எனக்கு பின்னூட்டம் வருதா இல்லையாங்கிற சந்தேகத்தை போக்க ஒருவரி எழுதிட்டு போங்க,
நானும் புதுசா எழுத யோசனை பன்னி பாத்தன் ஒன்னும் சிக்கல. சரி பின்னூட்டத்த வச்சி ஒரு பதிவு போட்ற வேண்டிதுதான்னு இப்ப இத எழுதுறன். இதுக்கு நீங்க பின்னூட்டம் போட்டு என்னோட சந்தேகங்கள தீர்த்து வச்சா நல்லாருக்கும் மகராச ராசிகளா ........... மறக்காம எழுதுங்க :-((

குவாட்டர் கோவிந்தன்

சென்னை வடபழனி சேலம் ஆர் ஆர் என் வி அருகே நம் கோவிந்தன் தனது நீண்டநாள் நண்பனுடன் (வேறயாரு கூட சேந்து தண்ணியடிக்கிற நாந்தான்)

கு.கோ: யப்பா என்னா வெயிலு இனிமே ஹாட் சாப்ட கூடாது கூல்தான் ஒன்லி பியர் மட்டும் தான்.
நான்: அடப்பாவி என்காசுல குவாட்டர் குடிக்கரதுக்கே என்னால செலவுபன்ன முடீல இதுல நீ பியர் சாப்டா என் சம்பளம் பூரா இங்கியே காலிடா.
கு.கோ: கவலையே படாத தலைவர் வந்துட்டார்ல ஒரு ரெண்டு ஏக்கர் நிலம் கிடைக்கும் அத வித்து செலவு பன்னலாம்டா.
நான்: டேய் அது நிலமில்லாத குடிமகனுக்கு நம்ம மாறி நிலத்துல விழுற குடிமகனுக்கு இல்ல.
கு.கோ: ஆமா விஜயகாந்து திருப்பி எலக்சன்ல நிக்கிறாறாம்? விருத்தாசலத்துலதான் ஜெயிச்சாரே?
நான்: இது நடிகர்சங்க தேர்தல்டா
கு.கோ: அப்றம் சட்டசபைக்கு எப்டி போவாரு? இத ராஜினாமா பன்னுவாரா?
நான்: அதெல்லாம் வேண்டாம்டா இது சும்மா பேருக்கு .
கு.கோ: அப்டியே ஜெயிச்சாலும் அவர் பதவில இருக்க முடியாது.
நான்: ஏன் ?
கு.கோ: ஒருத்தருக்கு ரெண்டு பதவி தப்பில்ல?
நான்: அது ஆதாயம் தற்ற ரெட்டை பதவிடா.
கு.கோ: ஆதாயமில்லாம எதுக்கு எலக்சன்? அதுசரி வைகோ மதிமுகவில இருந்து விலகிட்டாரே ஏன்டா?
நான்: ! எப்படா?
கு.கோ: பேப்பர்ல பாத்தனே அவர புது எலக்சன் கமிஷனரா போட்ருக்காங்க. கட்சில இருந்தா தருவாங்களா?
நான்: டேய் அது வேற கோபால்சாமிடா. ஐ.ஏ.எஸ்
கு.கோ: அப்றம் இன்னிக்கு தினமலர்ல பாத்தண்டா நெப்போலியனும் எஸ்.வி.சேகரும் கைகுடுத்துகிட்டாங்க ஒருவேள எஸ்.வி.சேகர் தி.மு.க வுக்கு வரப்போராறா?
நான்: அம்மாவுக்கு தெரிஞ்சுது மவனுக்கு சங்குதான்.
கு.கோ: அதெல்லாம் தெரியாதுடா.
நான்: ஏன் தெரியாது தினமலர் அவங்க பேப்பர்டா அத படிப்பாங்க.
கு.கோ: எப்பிடிறா எங்கம்மாதான் செத்துபோனாங்களே அப்டியே இருந்தாலும் யாரு எங்கருந்தா என்னன்னு எனக்கு குவாட்டர் வாங்க காசுகுடுப்பாங்க.
நான்: டேய் அடிக்கிற வெயிலு கொஞ்சம் அதிகமாத்தான் இருக்கு. நான் சொன்னது ஜெயலலிதா அம்மாவ டா.
கு.கோ: அவங்க அம்மாவுந்தான் இல்லையேடா. நீ என்ன குழப்புற?
நான் : நானா? சொல்லுவடா.
கு.கோ: வர வர சென்ட்ரலு எதுக்கு எதுக்கு காசு தற்றதுன்னு வெவஸ்தையே இல்லாம போச்சுடா.
நான்: எதுக்கு?
கு.கோ: பின்ன பாரு டெல்லி போன தலைவர் திட்ட செலவுக்குன்னு பல ஆயிரம் கோடி வாங்கிவந்தார்னு தமிழ்முரசுல போட்ருக்கு. இப்ப என்னா திட்றதுக்கு எலக்சனா வருது. அதான் கட்சி பணத்த செலவுபன்னுவாங்களே?
நான்: டேய் அது திட்டம் டா அரசு திட்டங்களுக்கு செய்யவேண்டிய செலவு.
கு.கோ: ராமதாஸ் சினிமாவுக்கு பரிசு தந்தார்ன்னு போட்ருக்கு?
நான்: அது இலக்கணம்ன்னு ஒரு நல்ல தமிழ்ப்படமாம்டா அதுக்கு தந்தார்.
கு.கோ: பிரஞ்சு ஓபன்னா என்னடா ஏதாவது பாட்டில் சமாச்சாரமா?
நான்: அது டென்னிஸ் விளையாட்டு ஏன் இப்டி ஒரு சந்தேகம் திடீர்னு?
கு.கோ. இல்ல பிரஞ்சு பியர் இருக்கே அதுமாதிரின்னு நெனச்சேன்டா. அத சாப்டிருக்கிடா? நல்லாருக்கும்னு சொன்னாங்க கமல் கூட அது நல்லாருக்கும்னு சொன்னார்டா ஒரு நாளைக்கு அத வாங்குனும்டா.
நான்: டேய்......... நீ கொஞ்சம் ஓவரா போறடா. பிரஞ்சு பியர்னா அது தாடிடா அத எப்பிட்றா குடிப்ப?
கு.கோ: டீசல் பெட்ரோல் வெலையிலாம் ஏறிபோச்சே இனிமே சாராய விலையும் ஏறுமாடா ?
நான்: இரு கலைஞர்ட்ட கேட்டு சொல்றன்.
கு.கோ: மிடாஸ் கலைஞருதாடா? அவர கேட்டா எப்பிட்றா தெரியும்? சசிய கேட்டா தெரியும்.
நான்: கோவிந்தா...... இப்ப இவருதான முதல்வர் அதால இவருதான் விலைய தீர்மாணிப்பாரு.
கு.கோ: அப்ப ஜெயலலிதா செஞ்சா தப்பா? எனக்கு ஒன்னும் புரிலடா.
நான்: புறியாதுடா ஒனக்கு இறங்கிபோச்சு வா இன்னும் ஒன்னு போட்டுகிட்டு வர்லாம்.

Saturday, June 10, 2006

சினிமாவில் முகம்தேடும் தமிழன்

இன்று மாலை செய்தியில் நடிகர் விஜய் மீது பிடிவாரண்ட் பிறப்பித்திருக்கிறது நீதிமன்றம் சிவகாசி படம் தொடர்பாக. அதாவது வக்கீல்கள் பற்றிய தவறான வசனம் இருந்ததாக கூறி. தமிழ்சினிமாவை வெறும் சினிமாவாக மட்டுமே பார்க்கும் மனோபாவம் பொதுமக்களிடத்தில் மாறி வருகிறது என்பதையே இது காட்டுகிறது. ஒரு படத்தின் கதை மற்றும் கருத்துக்காக வழக்குகள் போடப்பட்டுவந்த நிலை மாறி அப் படத்தின் வசனங்களுக்காகவும் அதில் வரும் கதாபாத்திரங்களுக்காகவும் ஆட்சேபனை தெரிவிக்கும் நிலை ஓங்கி வருகிறது
அதாவது இந்தியர்கள் பொழுதுபோக்கு சினிமாவின் கதையில் அதன் காட்சிகளில் தனது பிம்பத்தை தேடும் மிகக் கீழான ஒரு நிலைக்கு போய்க்கொண்டிருப்பதையே இது காட்டுகிறது. அதனால் தான் அதில் வரும் விமர்சனங்களை ஏற்க்கமுடியாமல் போகிறது. சேரனின் தவமாய் தவமிருந்து படத்தில் ஆசிரியர்கள் பற்றி வந்த வசனம் ஒரு வழக்கை உண்டாக்கியது. அதுபோலவே சினிமாபடத்தின் தலைப்புகளை வைத்து. பாடல் வசனம் காட்சியமைப்பு என எல்லாவற்றிலும் நம்மவர்கள் தேவையில்லாமல் மூக்கை நுழைப்பது சினிமா எனும் ஊடகத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க முடியாது மாறாக கண்ணுக்கு தெரியாத ஒரு சினிமா எமர்ஜென்சி செயலில் இருப்பது போலவே தோற்றமளிக்க தொடங்கிவிடும்.
ஆசிரியர்கள் பற்றியும் அரசு அலுவலர்கள் பற்றியும் வழக்கறிஞர்கள் பற்றியும் மருத்துவர்கள் பற்றியும் காவலர்கள் பற்றியும் எவரும் அவர் அவர்களுக்கு ஒவ்வாத கருத்துக்களை கூறுவது தவறென்று கூறும் இவர்கள் அந்த ஒவ்வாதகருத்துக்களை கூறும்படியான சம்பவங்கள் எதுவும் நிகழவில்லை என்று நிரூபிக்க முடியுமா? ஆசிரியர்கள் ஒழுங்காக பாடம் நடத்துவதில்லை- நிஜம்தானே? வக்கீல்கள் வழக்குகளை பணத்துக்காக இழுத்தடிக்கிறார்கள் இல்லையென்று அவர்களால் வாதிட முடியுமா? டாக்டர்கள் மருத்துவம் பார்ப்பது பணத்துக்காக தேவையற்ற செலவீனங்களை அவர்களால் தவிற்க்க முடியாதா? அவர்கள் படிப்பதே அதற்குத்தானே?போலீஸ்காரர்கள் லஞ்சம் வாங்குவதாக காட்டுகிறார்கள். -கையூட்டு பெறாத காவலன் கடமைதவறிய கயவன் என்பது தானே இப்போதைய மாமூல் நிலை இது இப்படி இருக்க அந்த உண்மைகளை சினிமாவில் காட்டுவது இவர்களுக்கு வலிக்கிறது.
பாய்ஸ் படம் வந்தபோதும் இதே நிலை எத்தனை போராட்டம்?.குஷ்பு தங்கர்பச்சான் விருமாண்டி என எல்லாவற்றிலும் இதே நிலை நிஜம் எப்போதும் ஏற்றுக்கொள்ள கொஞ்சம் கசப்பாய்த்தான் இருக்கும்.ஆனால் உண்மைஇல்லை என்று மறுக்க எவராலும் முடியாது
இன்று விஜய் சிவகாசியில் தவறான வசனம் பேசியதாக கொதிக்கும் வக்கீல்கள் ஒரு நல்ல வக்கீல் எப்படி இருப்பான் என்று நடித்த தமிழன் படம் வந்தபோது ஆகா எங்களுக்கு பெருமைதேடித்தந்தீர் வாழ்க என வாழ்த்து தெரிவித்தார்களா? இல்லையே ?. இலக்கணம் படத்துக்கு விருதுகொடுத்து பேசிய ராமதாஸின் கருத்து கூட இப்போது மாறிவிட்டது. நல்ல படம் எடுங்கள் விருது தருகிறோம் என்கிறார். ஆனால் சனநாயக தூண்களின் காவலர்கள் திருந்தியபாடில்லை உயிர்காக்கும் மருத்துவர்களின் ஓலம் குறையவில்லை. ஆசிரியர்களின் அலரல் மாறவில்லை. காவலர்களின் கையூட்டு அகலவில்லை இப்படி எத்தனையோ இல்லைகள். சினிமா ஒன்றும் மிக யோக்கியமானதல்ல அவர்களின் கருத்தில் உலகம் தலைகீழாய் திரும்பிப்போகும் என்பதற்கு. அவர்களின் முதுகின் அழுக்கை சுரண்டிப்பார்ததால் அது கூவத்தை விட மோசமாய் இருக்கும்.
அதில் தமிழன் தன் முகத்தை பார்க்க நிணைப்பது கேவலம். அது ஒரு பொழுதுபோக்கு சாதனம் அதில் வரும் நல்ல கருத்துக்களை எடுத்துக்கொள்ளுங்கள் தேவையில்லாதது தானே மறையும். இதுபோன்ற செயல்கள் ஒரு சில சினிமாவின் நல்ல ஆத்மாக்களை ஊக்குவிப்பதற்குபதிலாக அவர்கள் இன்னும் கூட்டுக்குள் முடங்கி பிற்போக்கு சமுதாய கருத்துக்களை சொல்ல தொடங்கினால் அதன் விளைவு இன்னும் படுமோசமாய் இருக்கும்.

இதெல்லாம் போகட்டும் ஏதாவது மிருகத்தை வைத்து படமெடுக்கலாமென்றால் அதுவும் முடியாது. ப்ளூகிராஸ் உங்களை பயமுறுத்த காத்திருகிறது.

நல்ல பேரு ஒன்னு வைங்க

தமிழ்மணம் திரட்டீல புதுசா ஒரு பக்கம் சேக்கப்போறேன் அதால அதுக்கு நீங்க யாராவது ஒரு நாலுபேரு நல்ல தமிழ்பேரா வச்சாக்க நல்லாருக்கும் (எல்லாம் நம்ம அண்ணன் எஸ்.ஜே.சூர்யா வோட ஐடியாதான். ) அந்த பக்கத்தில நம்ம தொல்லகாட்சி இல்லாத கொரய தீர்க்குறமாறி ஒளியும் ஒலியும் மட்டும்தான் சினிமா, செய்திகள் , பாடல்கள்,விளம்பரம்.காமெடி.நேயர் நேரம் வாசகர் கடிதம் ஆலிவுட்,பாலிவுட்டு எல்லா சேதியும் வரும்ங்க. நீங்க சொல்ற நல்ல பேரு ஏதாவது தொலக்காட்சி பேரா தமிழ்பேரா இருக்குனும்ங்க (பின்ன சன்டிவின்னு வச்சா நல்லாவா இருக்கும்?) இது எந்த வகேலியும் ஒரு தமிழ்மசாலா டீவீக்கு குறஞ்சதா இருக்காதுங்க . அதே மாறி எனக்கு இப்ப தற்ற இதே ஆதரவ (என்னத்த ஒருநாளைக்கு என்னையும் சேத்து 150 பேர் தான் படிக்கிறாங்க?) அந்த வரப்போற புது வலைக்கு தந்து என்ன பின்விக்குமாறு(ஊக்குதான்) வாக்காள பெருமக்களாகிய உங்களை வேண்டி விரும்பி கேட்டுக்குறன் (அட நாமளும் வார உள்ளாட்சி எலக்ஸன்ல துபாய் சார்பில நிக்கலாம்போல) ஒங்க பேர கேக்க ஆவலுடன் காத்துருக்கும் பேர்சொல்லும் பிள்ளை இப்போதைக்கு பேரில்லா பிள்ளை. பின்னூட்டத்தில நல்ல பேர சொன்னா ஆயிரம் தடவ வாழ்க சொல்லுவேன் உங்களுக்கு ஒரு நாள் சிறப்பு அனுமதி என்னோட வலைல உங்க விருப்பமான படங்களோட லிங்க அனுப்புனா அத போடுவனுங்க.(நேயர் நாள் சிறப்பு ஒளிபரப்புதான்)
பேரச் சொல்ல மறந்துபோவாதீங்க.

Wednesday, June 07, 2006

குவாட்டர் கோவிந்தன்

வழக்கம் போல ஒரு குவாட்டரை ஏற்றிக்கொண்டு தினசரிகளை மேயும் கோவிந்தன் பார் வாசலில் மாட்டிய பழைய குடி நண்பனுடன் பேசிக்கொண்டிருந்ததை பக்கத்தில் இருந்த நான் ஒட்டுக் கேட்டதில் இருந்து.

நாடு ரொம்ப கெட்டுபோச்சுடா
ஏன்டா?
இங்க பாரு செரீன விடுதல பன்னீட்டாங்களாம்?
செரீனாடா அது.
ஆமா அவங்க படந்தான நடிப்பாங்க கஞ்சா எதுக்கு வித்தாங்க?
டேய் அது செரீன் இல்லடா செரீனா. மதுரகார பொண்ணு
நான் சிதம்பரம்னுல்ல நெனச்சன் நடராசன் அங்கதான இருக்காரு?
ஏன்டா இப்படி காலேலயே?
ஆமா ராகுல் காந்திய கைதுபன்னிட்டாங்களாம்? பாவம்டா சோனியாம்மா ...ஒரே புள்ள
டேய் அது மகாஜன்டா...
அவருதான் செத்துபோனாரே? அவர எப்பிடி அரஸ்ட் பன்னுவாங்க
அவரு பையனடா... கோகைன் சாப்டாருன்னு.
இதுக்குலாமா அரஸ்டு பன்னுவாங்க... அப்பரம் ஏன் கடைல விக்குறாங்க?
கடைல எங்கடா விக்கிறாங்க?
அதான் பத்துரூபா பாட்டில்ல கிடைக்குதே
அது கோக்க கோலாடா
கோலா கரடில்ல ? அது இங்க எங்க விக்குது சீனாவுலயே இல்லயாம்..
அப்பறம் பாரு கலைஞரு வேலைய உட்டுபுட்டு சோனியாவ பாக்கபோறாராம்?
அதான்டா அவரு வேலயே.
அப்றம் செல்வராகவன் கோவிச்சுக மாட்டாரு?
டேய் அது சோனியா அகர்வால்டா
சிவாஜி இன்னம் சாகலடா ஒயின்குடிச்சத பேப்பர்ல பாத்தன்டா?
என்னடா குழப்புற?
ஆமா இங்க பாரு ஒயினில் சிவாஜின்னு போட்டுருக்கு?
டேய் அது ஸ்பெயின் டா ரஜினி நடிக்கிற படம்
அது சிவாஜின்னு சொன்னாங்க? அப்ப ரஜினி எதுக்கு நடிக்கிறாரு?
அய்யோ இருடா நானும் போயி ஒரு கட்டிங்க தள்ளிட்டு வாரேன்...
அதுக்கு இங்க ஏன்டா வந்த சலூனுக்குல்ல போகுனும்?
கட்டிங் சரக்குடா பாவி
இனிமே அடுத்தமாசம் பூரா சரக்கு கெடைக்காதுடா
ஏன் என்னாச்சு
சரக்கு ஏற்றிவந்த கப்பல் கடலில் மூழ்கியதுன்னு போட்ருக்கே
அது வேற சரக்குடா
அப்ப ஏன் மூழ்குச்சு நெரயா குடிச்சுதா?
ஏய் ஏய் நிருத்துடா நான் போய் குடிச்சுட்டு வர்ரன்டா.
இந்த பேப்பர்ல எல்லா பொய்டா இங்க பாரு அண்ணா எம்ஜியார் சிலைக்கு மாலை அணிவித்தார்னு போட்ருக்கு
டேய் என்ன கொலகாரனாக்காத. முழுசா படிடா .... அதுல என்னடா போட்ருக்கு ஜெயலலிதா அண்ணா எம்ஜியார் சிலைக்கு மாலை அணிவித்தார்னு தான்டா போட்ருக்கு
ஜெயலலிதாவுக்கு எங்கடா சிலையிருக்கு?
இல்லடா..
பின்ன கலைஞர் தொறந்துவச்சதா போட்ருக்கு?
அது கண்ணகி செல டா அத ஜெயலலிதா எடுத்துபுட்டாங்க திரும்ப கலைஞர் தொறந்துவச்சார்
கண்ணகி மதிமுக தாண்டா?
டேய் அது வைகோ ஊட்டு பொண்ணுடா

இதற்கு மேல் அவர்களின் பேச்சை கேட்டு எழுத எனக்கும் படிக்க உங்களுக்கும் பொறுமையில்லாததால் எஸ்கேப்பூ.............

Monday, June 05, 2006

சாருநிவேதிதாவுடன் உரையாடல்

இங்கே எழுதுவதை எத்தனைபேர் நம்புவீர்கள் என்பது அறியேன் ஆனால் இது உண்மை. சற்று நேரத்துக்கு முன்னால் சாருநிவேதிதாவுடன் உரையாடும் சந்தர்ப்பம் கிட்டியது. எம்.எஸ்.என்னில் எப்போதும் போல் வலை நட்புகளுடன் அளாவிக்கொண்டிருக்கையில் மூலையில் வந்து காட்டியது "சாரு இஸ் நவ் ஆன்லைன்." (எதற்க்கும் ஆகும் என்று எண்ணி அவரின் முகவரியை என் நட்பு முகவரியாக இணைத்திருந்தேன் ) அதிகம் பேசலாம் நிறைய கேட்கலாம் என்றே எண்ணினேன் ஆனால் இயலாது போனது பாவம் அவர் என்ன சங்கடத்தில் இருப்பாரோ. அவரின் எழுத்து பற்றி கூறினேன் அதாவது அவரின் எழுத்து பற்றி நான் எழுதியதை. சரி அனுப்பு என்றவர் அது படித்தால் தாங்கள் சங்கடம் அடையலாம் என்றதும் அப்ப அனுப்பாதே என்றார்.:)) எனக்கு வேலை யிருப்பதால் போகிறேன் என்று தொடர்பை துண்டித்தார். அவருடன் உரையாடிவை இங்கே:

periyasamy says: hello sir? can i inturupt u ? plz
charu says:tell me
periyasamy says:im from dubai and i reading ur konal pakkangal online
periyasamy says:the last one is about child workers but i thought it will say somthing/?
charu says:what is the title of the story?
periyasamy says:kuzhanthaigal
periyasamy says:after u wrote about haider kaliffa
charu says:that page is not opening for me
charu says:pl wait for a day
charu says:i will ask my coordinator
periyasamy says:but this is not a story like a letter it says about somone
charu says:that is a preface i gave to a malayalam book
periyasamy says:oh
periyasamy says:and now if u r busy i will leave now
charu says:pl mail me
periyasamy says:sorry for the inturupt and thnx for nice chat
charu says:thanks
periyasamy says:i will tell all of my friend about chat with u
charu says:this is not a chat at all
charu says:sorry
charu says:u can call me charu
periyasamy says:ok
periyasamy says:r u now in india or ? any other country?
charu says:in madras
periyasamy says:do u read about my article in thamizmanam? i write a bit about ur zeero degree in my blog
charu says:pl send the link in a mail
periyasamy says:but it was not good to u maybe if u read this it will hurt u
charu says:now i am leaving
charu says:sorry
charu says:bye
periyasamy says:bye and thnx
charu says:then dont send it
periyasamy says:ok
charu says:ia m already suffering from lot of problems
periyasamy says:ok im sorry
periyasamy says:ok charu bye
periyasamy says:take care
periyasamy says:and write more thnx

(நானும் பெரிய எழுத்தாளர் ஆயிட்டன்ல? சாருகூட சாட்டினேன்னு எழுத எனக்கும் முடியுமே?)) அந்தாள மானாவாரியா எழுதிபுட்டு அவர்ட்ட பேசுனத பெருமையா சொல்ல வெக்கமில்லன்னு நீங்க கேக்கறது புறிது என்ன பன்ன நானும் சராசரி வலைப்பூ எழுத்தாளன் தான. அவரு சீரோ டிகிரி எழுதுனாலும் விக்கும் நான் 360 டிகிரி எழுதுனா வாங்கிப் படிக்க எங்கிட்டயே காசிருக்காது.....:))

தனியாக இருக்கும் வைகோ

மதிமுக வில் இருந்து கட்சியின் இரண்டாம் மட்ட தலைவர்கள் ஏறக்குறைய கூடாரத்தை காலிசெய்துகொண்டு தே.மு.தி.க விலும் திமுகவிலும் தங்களின் முகவரிதேடி போய்க்கொண்டிருக்கும் நிலையில் வைக்கோ மாத்திரம் தனியாக அங்கே இருந்து என்ன செய்யப் போகிறார்?.
அவரும் மதிமுகவை விட்டு வெளியேறிவிட்டால் எல்.ஜி. நாஞ்சில் சம்பத் போன்றவர்களும் அவர் அவர் வேலையை( வேறென்ன எதாவது ஒரு கட்சில சேர்றதுதான்) பார்க்க போய்விடுவார்கள். ஒருவேளை இருக்கும் எம் எல் ஏ க்களை என்ன செய்வது என்று யோசிக்கிறாறோ என்னவோ?. நான் அதற்க்கொரு ஐடியா சொல்வேன்
தலைக்கு இவ்வளவு என்று விலைபேசி திமுகவிடமோ அல்லது அதிமுக விடமோ விற்றுவிட்டால் போச்சு? ;))அவர்களுக்கும் ஆள்பற்றாக்குரைதானே. இல்லாவிட்டால் இருக்கவே இருக்கு பா.ஜ.க. அவர்கள்தான் பாவம் எம்புருசனும் கச்சேரிக்கு போனான் கதையாக தேர்தல்தோரும் மண்ணை கவ்வுகிறார்கள். அவர்களுக்கு ஒரு ஆறுதல். ஆகா நம்ம கட்சியில சேரவும் ஆளிருக்கு நாம இனிமே வேகமா உள்ளாட்சி தேர்தல சந்திக்கலாம்னு. ஆசை வரும்.
அறிவிக்கபடாத பகுதிநேர வேலையா அதிமுகவுக்கு கொ.ப.செ வா இருக்கறத விட அதிலேயே சேந்துட்டா? முழுநேர வேலையும் கிடைக்கும் அடிக்கடி தயாநிதி மாறன திட்ட மேடையும் கிடைக்கும். அப்படியே புதுசா அதிமுகவுல சேந்தவங்க எல்லாரையும் கூட்டிகிட்டு சென்னைல இருந்து காஷ்மீர் வரைக்கும் ஒரு நடைபயனம் போனா ( அட சர்வாதிகார கருணாநிதி ஆட்சிய ஒழிக்கன்னு சொல்லவேண்டிதுதான) ஜெயாடிவில போட்டு ஒங்கள தமிழகத்தின் விடிவெள்ளி நடைபயன காட்சி பாகம் பதினாறு அப்டீன்னு எப்பிசோட் போட்டு காட்டுவாங்க. நீங்களும் காஷ்மீர் நடந்து போயிட்டு வாரதுக்குள்ள அடுத்த எலக்ஸன் வந்திரும்.
ஒருவேள செயா டிவில காட்டுலன்னா நடந்தது வேஸ்ட் அப்டின்னு நீங்க நெனச்சா அதுக்கும் அய்டியா இருக்கு அடுத்து திமுகவுல சேந்து என்னய செயா டிவீல காட்டுல அதால வந்துட்டன் அதோட இது தாய்க்கழகம்னு ஒரு உடு வுட்டா தலைவரும் ஒங்கள சேத்துக்க மாட்டாறா?. அட அவரு இல்லன்னாலும் மாறன்கிட்ட சொல்லி கொஞ்சம் ரெகமண்ட் பன்னா அதெல்லாம் சேத்துக்குவாரு.
அடுத்து மேடைல ஏறி அது அடிமைகளின் கூடாரம் மன்னார்குடியின் மணல்மேடு அப்டீன்னு அறிக்க வுட வேண்டீதுதான். நமக்கென்ன பேசவா தெரியாது. நீங்க பாட்டுக்கு அமெரிக்க வெள்ளை ஏகாதிபத்தியம் ஒழிக அதிமுக ஒழிக கோஷம் போட்டா கூட்டம் பின்னி பெடலெடுக்காது?.அப்டியே ஜெயா பிர்லாவை மிரட்டினார்னு ஒருகுண்ட போட்டா அதிமுகவே நூறா செதரிபோகாது? சசிகலாவுக்கும் மிடாசுக்கும் சொத்துதகராறு அதால நான் வந்துட்டன்னு சொல்லுங்க நின்னுபாக்க எடம்பத்தாது, ஆனா ஒன்னுங்க போறதா இருந்தா சொல்லிட்டு போங்க இல்லன்னா அவ அவன் ஊடால எந்திரிச்சு அந்த நாப்பது கோடி என்னாச்சுன்னு கேப்பான்.
நாஞ்சில் சம்பத்து வேர கிட்டதட்ட அதிமுகவுல சேரப்போறாரு. அந்தம்மா விஜயா தாயன்பன் தலைவா சரணம்னு திமுகவுக்கு வந்துடுச்சு அப்றம் இன்னொருத்தர் விஜயகாந்துகூட நின்னா ஒரு ஒன்றிய கவுன்சிலராவது கெடைக்காதான்னு அங்க போய்ட்டாரு. நீங்க தனியா இருந்தா எல்.ஜி. மாதிரி ஆளுங்க கிட்ட பேசிப்பேசி மற கழண்டு போகும். இல்லண்ணா ஏதாவது புத்தகம் போட்டு விக்க வேண்டீதுதான்.
அதும் நீங்க எழுதுன புத்தகம்லாம் வாங்க ஆளில்லாத தாயகத்துல கெடக்கறதா கேள்வி அப்ப அதும் சரிவராது. நீங்க பாட்டுக்கு சிறை அனுபவம் எழுதிட்டு அவங்க கூடவே சேந்தா எப்டி சேலாவும்? ஏதோ உங்க மகன் சிகரட்டு ஏசண்டாமே அவருகிட்ட சொல்லி நல்ல வேல கிடைக்குமான்னு பாருங்க இல்லாட்டா வேர எதாவது பண்னுங்க இப்டியே அதிமுக திமுகன்னு மாறிமாறி கொடிபுடிச்சா ஒங்க கொடி மறந்துபோறதா ஆளுங்க ஒரே பொலம்பல்.
சும்மா இருக்காம இனிமேலாவது ஏதாவது உருப்படியா கட்சி நடத்த பாருங்க . இல்லன்னா நீங்க நடக்க பாருங்க. ஒரு சேனலும் ஆரம்பிச்சா உங்க நடபயணத்த போட்டு போட்டு பாக்கலாம். நல்ல மெகாசீரியல் போட்டு நாலு காசுபாக்கலாம். நீங்கதான் நல்லா அழுவீங்களே ஏதாவது ஏழ அப்பா வேஷங்கட்டி அழுதுக்க வேண்டீதுதான். காசுக்கு காசுமாச்சு பப்ளிசிட்டிக்கு பப்ளிசிட்டியுமாச்சு.
நான் சொல்ற யோசனைய கொஞ்சம் கேட்டா உங்க எதிர்காலத்துக்கு நல்லது. இல்லன்னா உங்க எதிரிங்களுக்கு நல்லது. இல்லன்னா உங்க கூட ஆரம்பிச்ச பா.ம.க இருவது சீட்டு செயிக்குது நீங்க இப்பதான் சட்டசபக்கே ஆளனுப்புறீங்க. அதுலயும் அம்மாவுக்கு ஆதரவா எல்லாரும் வெளிநடப்புவேர. இதைவிட அத செயிக்காமலே போயிருக்கலாம். அடுத்து எந்த எடத்துல இருந்தாலும் நான் மறக்காம இருப்பன்.
பாருங்க உங்கள பத்தி கட்டுர எழுத ஆரம்பிச்சா கடேசீல அது உங்களுக்கு எழுதுற லட்டரா போச்சி. எழுதுற எனக்கே இப்டீன்னா கூட இருக்கவங்க போறது தப்பே இல்ல. நா வரனுங்க.
Sunday, June 04, 2006

கலைஞருக்கு சமர்ப்பணம்

தமிழுக்கு எத்தனை
வயதானதறியேன் ஆனால்
இத் தமிழனுக்கு வயது எண்பத்து
மூன்று
அக் கண்ணாடிக்குள்
இருக்கும்
கண்களை அறியேன்
ஆனாலும் அதில்
தமிழும் தமிழனும் என்பதை
அறிவேன்
ஈரோடு பெரியாரின்
இடப்புறத்தில் இருந்தாய் பின்
அண்ணாவின் கரம் பற்றி
அரசியலில் நுழைந்தாய்
உனைபிடிக்கவில்லை என்போனும் உன்
தமிழ்படிக்க மறப்பதில்லை
தல்ஸ்தோய்க்கு ஒருதாய்
அதை யும் நீ
தமிழிலே தந்தாய்
எம் மூத்த தமிழ்த்தாய்
உன் பேனா எழுதிய தூரம் கூட
இருக்காது கதிர்
அந்த முனைக்கு வேறேது எதிர்?
ஐந்து விரல் காட்டி அழைத்தாய்
எங்களை
ஒற்றை விரல் நீட்டி உயர்த்தினோம்
உங்களை
ஐந்தாவது முறையாய்
முறையாய் ஏறினாய்
அரசுக் கட்டில்
அதனால் சிலபேர் இப்போது
இக்கட்டில்
எக்கட்டிலும் எனக்கு இக்கட்டில்லை
என்பாய் அதைவிட சிறப்பு
நீ எழுதும் தமிழ்பாட்டில் காண்பாய்
தமிழுக்கும் தமிழனுக்கும்
முகவரி கேட்டால் என்பதில்
ஒருவரியில்
அதுகதிரவனின் சுடராய் இருக்கும்
கருணாநிதியில்
குடும்ப அரசியல் என கூப்பாடு
போடுவோரிடம் கூறு இது
தமிழ் பரம்பரை அரசியல் என்று
எப்போதும் எழுதும் உடன்பிறப்புக் கடிதம்
அது இப்போதும் எப்போதும்
மறக்காத படிகம்
தமிழர்களால் நீ அரியணையில்
அதனால் இன்று
தமிழ் அரியணையில்
அனைவரும் செய்யலாம் அர்ச்சணை
அது பெரியாருக்கு நீ தந்த தட்சணை
குறளுக்கும் எழுதினாய் உரை
அதை குறைத்து மதிக்க யாருண்டு பறை!
மறக்க நினைத்தாலும் நினை
நினைத்தால் அவ்
வை யகக் கோமாளிகளின்
துரோகங்கள் வருவதுண்டு நெஞ்சில்
அவர் பேச்சில் கலந்திருக்கும் நஞ்சில்
சிவன்கூட நஞ்சுண்டானென்று
சாத்திரமுண்டு
நீ உண்ட நஞ்சால் உனக்கு
சரித்திரமுண்டு
வாழ்த்த வயதின்றி
வணங்குகிறோம்


Saturday, June 03, 2006

அரபு நாடுகளில் இருக்கும் தமிழ்சங்கங்களும் தமிழும்

. சில நாட்களுக்கு முன்னால் நமது பொதிகை தொலைக்காட்சியில் கல்ப் ஏசியா விஷன் தயாரிப்பில் ஒளிபரப்பப் பட்ட சில பட்டி மன்றங்களின் பேச்சை "பார்க்க நேர்ந்தது". ஆம் அவை பட்டி மன்றங்கள் என்ற பெயரில் பழைய கடி துணுக்குகளையும் சில சொந்த அனுபவங்களையும் கொண்டவை. அதிலும் இந்த பெண்கள் பேசுவது மிகவும் கேலிக்குள்ளாகும் வகையில் தலைப்புக்கும் அவர்கள் பேசுவதற்கும் துளிகூட தொடர்பின்றி.
அட அவர்களாவது பரவாயில்லை. ஒருவர் பேசினார்.அவர் ஏதோ அனுராதா ரமணனின் பக்கத்துவீட்டுக்காரர் போல் இருந்தது. பேச்சில் இல்லை கண்ணத்திலேயே கைவைத்திருந்தார். சரி இவர் ஏதோ பேசுவார் என்று பார்த்தால் அவரும் சொந்த கதைதான். தலைப்பு என்ன தெரியுமா?. அதே தான். வெளிநாட்டு வாழ்க்கையில் பெற்றது என்ன இழந்தது என்ன? சரி இதுக்கு சொந்த கதைய சொல்லாமன்னு நீங்க கேட்பது தெரிகிறது, விஷயத்திற்க்கு வருவோம்.
இவர்கள் பேசியது சொந்த கதையென்றால் சரி கற்றதும் பெற்றதும் என்று சொல்லலாம் சொந்தக்காரர்களின் கதையல்லவா பேசுகிறார் கள். இதில் இடையிடையே நடுவர் அவர்களே.... எனது வாதம் என்னவென்றால்....பார்த்துக்கொண்டிருக்கும் நமக்கு இது பட்டிமன்றம் என தெரியவேணுமாம். எனக்கு எதிரனியில் இருக்கும் சோ அன்ட் சோ அவர்களே. அண்ணா மாமா ... இந்த தரத்தில் இருக்கும் பட்டிமன்றத்திற்கு பத்து நிமிடத்துக்கு ஒருமுறை " செனார்ட் வாட்சுகள்..... மொலினாவுக்கு வாங்க " விளம்பரங்கள் வேறு.
ஆனாலும் சில நேரங்களில் நல்ல விதமான கருத்தும் முன்வைக்க படுகின்றன என்பதில் சந்தேகமில்லை. ஆனாலும் அவர்களின் தமிழ்க்கொலை தாங்கமுடியாமல் போகிறது. தமில்னாட்டுள..... உளகம்பூறா என்னய்யா தமிழ் இது?இதை விட இவர்கள் படுத்தும் ரவுசு இருக்கிறது. அதாவது ஒருத்தர் சொல்றார்: என்னய்யா இது நாடு இங்க மனுசன் இருப்பானா? இல்ல மனுசன் இருப்பானான்னு கேக்குறன்... ஒரே மணல் ஒரே கட்டடம் இது காண்கிரீட் காடுய்யா" இதில் என்ன தவறு என்கிறீர்களா? அத சொன்ன திருவாளர் இந்த மணல்ல்லதான் இருவது வருஷமா குப்ப கொட்றாராம்... இதையும் அவரே சொல்றாரு. அட வந்து ரெண்டு வருஷமாவுது இனி ஊருக்கு போனா வரமாட்டாருன்னு பாத்தா திருப்பி திருப்பி வந்திருக்கார். இதுல இந்த நாட்டுமேல கிண்டல் வேற.
அதுக்காக அவர் சொன்னது தவறுன்னு சொல்லல. அதான் மணலாச்சே ஊருபாத்து போகவேண்டியது தான?. இது போன்ற பட்டிமன்றம் எந்தவிதத்தில் தமிழை வளர்க்க உதவும் என தெரியவில்லை. நம்ம நாட்டு பட்டி மன்ற லியோனி மாறி ஏதாவது பாட்டு கீட்டு பாடி "தமிழ்ச் சேவ ?" செஞ்சாலும் பரவால்ல. நீங்க பேசி கொல்றீங்களே ?. அதை தமிழ்ச்சங்கம் என சொல்வதைத்தான் என்னால் ஒத்துக்கொள்ள இயலவில்லை.
இங்கே இருக்கும் சில இலங்கை தமிழர்கள் சக்தி என்றபெயரில் வானொலி நடத்துகிறார்கள். அதிலும் நம்மாள் போனப்போட்டு " எனக்கு கில்லில இருந்து அப்பிடி போடு போடுங்கரான். " அதிலும் துபாயில் சில நேரங்களில் மனிதன் செத்து சுண்ணாம்பாகிவிடுவான். வெயில்தான். அந்தமாதிரி நாள்களில் அஜ்மான் போன்ற பிரீ சோன் இடங்களில் சிறிது தள்ளாட்டத்துடன் செல்லிடப் பேசியில் பேசும் அன்பர்களின் பேச்சு அத்தனை தெளிவாக இருக்கிறது. ஒருமுறை சக்தியில் ஒரு நேயர் நேயர் நேரத்தில்( அதாவது தினசரி ஒரு தலைப்பு கவிதை, கேள்வி இப்படி. அன்று:
நேயர் : அலோ
ரேடியோ : அலோ சொல்லுங்க இது உங்கள் சக்தி எப்.எம்
நேயர் : சத்தியா?
ரேடியோ : ஆம் நேயரே உங்கள் கவிதை என்ன சொல்லுங்கள்?
நேயர் : நேயர்ரா? அதுயாரு?
ரேடியோ : மன்னிக்கவும் நீங்கள் எங்கிருந்து அழைக்கிறீர்கள்?
நேயர் : அஜ்மானுலருந்து....... நான்....
ரேடியோ : டொக்.....கிர் கிர் சரி அடுத்த நேயர் காத்திருக்கிறார் அவரிடம் பேசுவோம்....
இந்தமாதிரி சேவைகளும் சிலர் செய்வதுண்டு. அட இது பரவாயில்லை அவரின் தொலைபேசி பணம் அவருடையது. ஆனால் இதை கேட்கும் மற்ற மாநிலத்தார் என்ன நினைப்பர் ... இதை சொல்ல காரணம் இருக்கிறது தமிழை இந்த சங்கம் வளர்க்கிறதோ இல்லையோ கட்டிட மற்றும் கடின உழைப்பு செய்யும் தமிழர்கள் செய்கிறார்கள். எனக்கு தெரிந்து பலர் பாகிஸ்தானி, போன்ற தமிழுக்கு சம்மந்தமற்றவர்கள் பேசக் கேட்டிருக்கிறேன். இதற்கு காரணம் கடின உழைப்புக்காரர்களே. அவர்கள் இங்கே வந்து ஹிந்தி அரபி உருது மலையாளம் கற்பதற்க்குள் பக்கத்தில் வேலை செய்பவருக்கு தமிழை கற்று தருகின்றனர்.
கடின உழைப்புக்காரர்களின் மூலம் தமிழ் வளர்கிறது ஆனால் அலுவலம் இன்னும் சில மேல் பதவிகளில் இருப்பவர்கள் தமிழர்களிடம் கூட தமிழில் பேசாத கொடுமையும் நடக்கும்.. நான் சொல்வது அலுவலகத்தில் அல்ல வெளியில். கழுத்தில் டைகட்டியதும் தமிழை கழட்டிப் போடும் ஆட்கள் நிறையபேர் உலகம் முழுக்க உண்டு. ஆனால் அங்கெல்லாம் இத்தனை நெருக்கமாக தமிழர்கள் இல்லை. தமிழர்கள் நெருக்கமாகவும் இணைந்தும் செயல் படக்கூடிய நிலையும் இங்கே குறைவாக இருப்பது ஒரு காரணமாக இருக்கலாம்.
ஆனால் சில பேர் அதையும் ஒரு ஒழுங்குபடுத்தி செய்வது பாராட்டுக்கு உரியது, இங்கே இருக்கும் தமிழர்கள் வெறும் பணத்துக்காக மட்டுமே வருவது கண்கூடு. அது இல்லாவிடில் இவ்வுலகில்லை என்பவர்கள் அதிகம்தான். சில நேரம் இங்கே தமிழர்கள் மட்டும்தான் மதுஅருந்துகிறார்கள் எனும் தோற்றம் ஏற்படுவதுண்டு. ஆனால் அது உண்மை அல்ல . சரி நான் சொல்ல வந்தது அதை இல்லை. தமிழ்,
ஆம் இந்த தமிழ் சங்கம் தனது உறுப்பினர்களின் தேர்வை எப்படி நடத்துகிறது? குறைந்த பட்ச தகுதி டை கட்டியிருக்கவேண்டும் அதிக பட்ச தகுதி கார் இருக்க வேண்டும். இதனால்தமிழுக்கு என்ன நன்மை. வேண்டுமானால் அவர்கள் வெளிச்ச வட்டத்தில் பிரகாசிக்க முடியும். துபாய். பஹ்ரைன், குவைத்,சவூதி போன்ற இடங்களிலும் இதே நிலை.
எனக்கு தெரிந்த எத்தனையோ சிந்தனைவாதிகள் சாதாரண வேலைகளில் இருக்கிறார்கள். அவர்களின் திறமையை வெளிக்கொனற இவர்கள் ஏதும் திட்டம் வைத்திருப்பதாய் தெரியவில்லை. தமிழர்களுக்கு ஒரு தனியான முகவரி கிடையாது இங்கே. அவர்களே நுழைவுச்சீட்டு அடித்து அவர்களே வாங்கிச்செல்லும் அவலம் உண்டிங்கே.
இதே கேரளத்தினர் தனியாக செய்தித்தாள் தொலைக்காட்சி, வானொலி, எல்லாம் உண்டு தேனீர் விடுதி உட்பட.
நம்மவர்கள் ஒரு சிறப்பு விருந்தினரை வரவழைத்து பட்டிமன்றம் போடும் பணத்தில் நல்ல பத்திரிகை ஆரம்பிக்கலாம்.
மாற்றவே முடியாத சில விதிகள்

நீங்கள் இங்கே காணப்படும் எதையும் அது இல்லாவிட்டால் கற்பனைகூட செய்ய முடியாது சில அடையாளங்கள் இங்கே
மாற்றவே முடியாத சில விதிகள்
1. கடிதம் எழுதியதும் கடைசியில் இப்படிக்கு
2. திரைப்படம் முடிகையில் வணக்கம் அல்லது எ பிலிம் பை
3. விஜய் பாடுகையில் இந்த பாடலை பாடியவர் விஜய்
4. சன்டிவியில் இந்திய தொலைக்காட்சியில் முதல் முறையாக
5. உடன்பிறப்புக்கு கலைஞர் கடிதம்... உடன்பிறப்பே
6. கமல்ஹாசனும் முத்தமும்
7. சிவாஜியின் அப்பா........
8. வடிவேலுவின் ( அது எப்படிங்க கைப்புள்ள நீங்க வந்துதான் இடத்த புல்பன்னுங்களேன்)
9. விவேக்கின் ரஜினி எம்.ஆர்.ராதா பாணி
10.ரபி பெர்னார்டின் கேள்வி கேட்டுவிட்டு அவரே பதிலும் கூறிக்கொள்வது
11.சன் டிவி வீரபாண்டியனின் அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களுக்கு..
12.காமெடி டைமின் வணக்கம்..வணக்கம்...வணக்கம்
13.சாகுல் ஹமீதின் சென்ற வார உலகம் ... அன்பு நேயர்களே சாதணைகள்......சோதணைகள்...
14.அஜீத்தின் அது
15.ஜெயலலிதாவின் ...எனது அரசு...
16.வெற்றிகொண்டானும் அச்சிலேறா வசணமும்
17.வைகோவும் புலியும்
18.ராமதாஸும் மரமும்
19.ரஜினியும் இமய மலையும்
20.மன்மோகன்சிங்கும் தலைப்பாகையும்
21. கலைஞரும்.கண்ணாடியும்
22.சாரு நிவேதிதாவும் சர்ச்சைகளும்
23. விஜய டி.ஆரும் அடுக்கு மொழியும்
24.அவர் மகனும் கிசுகிசுவும் (நயன் தாரான்னு கேள்விப்பட்டேன்?)
25.சூர்யாவும் ஜோ வும் (?)
26.குமுதமும் அரசுவும்
27.ராணியும் அல்லியும்
28.சுஜாதாவும் கணேஷ்-வசந்தும்
29.ராஜேஷ்குமாரும் விவேக்-ரூபலாவும்
30. சுவும் பாவும் (சுபா)
31. தினத்தந்தியும் கள்ளக் காதல் கொலைகளும்
32. தினமலரும் அந்துமணியும்
33. இந்தியா டுடேவும் சில நேரம் முதலில் படித்தால் புரியாத செய்திகளும்
34. விகடனும் தாத்தாவும்
35. ப.சிதம்பரமும் பட்ஜெட்டும் (கண்ணியத்தையும் சேர்க்கலாம்)
36. ஜெயலலிதாவும் சசிகலாவும்
37. ராமராஜனும் பசுவும்
38. முரளியும் காலேஜும்
39. மோகனும் மைக்கும்
40. ஜெயலட்சுமியும் போலீஸும்
41. தினத்தந்தியும் வரிவிளம்பரமும்
42. தமிழ் முரசும் நச்சுன்னு இருக்கும்
43. கவுண்ட மணியும் செந்திலும்
44. திராவிடமும் தமிழக கட்சிகளும்
45. பேரரசும் மசாலாவும்
46. பாலாவும் மனநிலை பாதிப்பும்
47. பாலச்சந்தரும் முக்கோண காதலும்
48. ஏவிஎம்மும் உலக உருண்டையும்
49. ஜெமினியும் இரட்டையர்களும்
50. விஜயகாந்தும் அவர் காலும் சுவரும்
51. பா.ஜ.க வும் ராமரும்
52. இந்தமாதிரி எழுதுனாக்கூட படிப்பீங்கன்னு நெனச்சு எழுதுர நானும் என் குசும்பும்

இன்னும் ஏதாவது விடுபட்டிருந்தால் நீங்களும் எழுதுங்கள்

முக்கியமான ஒன்னு மறந்துபோச்சுங்க

இதையும் படிச்சிட்டு பின்னூட்டம் போடப்போற நீங்களும் உங்க பொறுமையும்

Friday, June 02, 2006

அன்புள்ள போலிகளுக்கு ஒரு அவசரக் கடிதம்.

அன்புள்ள போலிகளுக்கு ஒரு அவசரக் கடிதம்.

உங்களைப் பற்றி ஒரு பதிவு போட்டேன் அதற்கு பல இடங்களில் இருந்தும் அன்பர் சதயம் அவர்கள் சொன்னதுபோல ஒரே இடிமழை மற்றும் சில பாராட்டு மழைகள். இந்த வலைப் பூக்களின் வாயிலாக நான் தெரிந்துகொண்டது இதுதான். இங்கே யாருமே என் கருத்தை கவணிக்க வில்லை பிடியடா சாபம் என்று என் கருத்துக்கு மாற்றுக்கருத்து சொன்னவர்களுக்கு பின்னூட்டமிடுகிறார்கள்.
என்ன செய்ய உங்கள் அனைவரின் பெயரும் அப்படி கெட்டுப்போய் கிடக்கிறது. நீங்களும் அவர்கள் சொல்வதுபோல சாதாரணமான ஆட்கள் இல்லை இல்லையென்றால் எனக்கு ஆதரவு தெரிவிப்பதாக என்பெயரிலேயே எழுதுவீர்களா?. உங்களின் துனிச்சலுக்கு நன்றி. + பாராட்டுக்கள்
அய்யா டோண்டு அவர்கள் சொன்னபடி எலிகுட்டி சோதனை போதும் ஆனால் அதுகூட தனிமனித தாக்குதலாய் இருந்தால்தான் செய்வேன். மற்றபடி உங்களுக்கு பயம் வேண்டாம். உங்கள் கருத்துக்களை அனானிமஸாக தெரிவித்தால் போதும். உங்களின் பெயர் எதுவும் வேண்டாம். இதனால் நான் உங்களை ஆதரிப்பதாக மட்டும் தப்புக் கணக்கு போட்டுவிடவேண்டாம். அது நீங்கள் தெரிவிக்கும் நியாயமானவைகளுக்கு மட்டும். இல்லையென்றால் விருத்தாசலத்தில் பா.ம.க.போட்ட கணக்குதான் உங்களுக்கும். புரிகிறதா?.
தனி ஒரு மனிதனை அவன் சொன்ன கருத்துக்காக தாக்கி எனக்கு வரும் எந்த பின்னூட்டமும் பிரசுரிக்கப் படாது இனி. அது போலியா நிஜமா என்ற வேறுபாடு ஏதுமில்லை. என் கருத்துக்களில் உங்களுக்கு மாற்றுக்கருத்திருந்தால் உடனடியாக எழுதவும் உங்கள் பெயரே இல்லாமல்.
இங்கே உங்களுக்கு எந்தமுகவரியும் இல்லை என்பதால் தான் அடுத்தவரின் முகவரியை தேடி அலைகிறீர்கள் என்ன செய்ய . உங்களுக்கு கருத்தென்றால் கிலோ என்ன விலை ? எப்படியோ உங்கள் பெயருக்கு இருக்கும் மரியாதை தனிதான்.
உங்கள் பெயரில் தலைப்பு என்றதும் ரூபாய்க்கு பத்து என்கிற ரீதியில் ஒரே ஆலோசனை மழை. எல்லாம் அந்த அடியாள் திராவிட முன்னேற்றக் கழத்திற்கு சமர்ப்பணம். நீங்கள் என்ன நிஜமாலுமே சூப்பர் பவரா? உங்களை கண்டு எல்லாரும் மிரள்கிறார்கள்? அந்த அளவுக்கு நீங்கள் அத்தனைபேரையும் போட்டு இம்சித்திருக்கிறீர்?.
எனக்குத்தெரிந்து நீங்கள் இங்கிருக்க வேண்டிய ஆளே இல்லை அ.தி.மு.க விலோ அல்லது தி.மு.க.விலோ இருக்க வேண்டும் அங்கே தான் போலிகளுக்கு ராஜமரியாதை. நான் சொல்வது உங்களுக்கு புரியும் என்றே எண்ணுகிறேன். உங்களுக்கு இந்த கருத்தில் உடண்பாடில்லாமல் போகலாம் அதுகுறித்த கருத்துக்களை எனக்கு தெரிவியுங்கள். வீனாக என் கருத்துக்கு ஆதரவு தந்தவர்களிடமோ அல்லது மாற்றுக் கருத்து சொன்னவரிடமோ நேராக மோதவோ அல்லது பின்னூட்டம் ஏதும் இடவோ வேண்டாம்.
என்னடா இவன் நம்மளிடம் ஏதோ கருத்து கருத்துன்னு சொல்றான்னு பாக்கறீங்களா?இதுகூட தெரியாத உங்களுக்கு கருத்து சொல்ல வந்த என்ன எதால அடிக்கலாம்னு செந்தழல் ரவி கிட்ட கேட்டு சொல்றன்.
உண்மை +தைரியத்துடன் மகேந்திரன்.பெ
பின் குறிப்பு (தைரியம் இருந்தால்)முதலில் உங்களின் பாஸ்போர்ட் அளவு புகைப்படமாவது வெளியிடவும். இல்லையென்றால் நீங்கள் அத்தனை பேரும் இந்த உலகத்தில் இல்லாதவர்கள் என்று சொல்லிவிடுவோம்

Thursday, June 01, 2006

போலிகள் யார்?

இன்று காலை முதல் ஒரு விவ"காரம்" வலைப் பதிவர்கள் இடையே தொடர்ந்து பரபரப்பாகியுள்ளது.என் பெயரில் எழுதுபவர் நானல்ல அவர் போலி என்றும் இல்லை அவர்தான் போலி என்றும்.
முதலில் சில கருத்துக்கள்:
1. போலி யாரென்று யாரும் யாரையும் குறைசொல்ல முடியாது.
2. நான் எனது சொந்த பெயரில் வெளியிடும் என் கருத்துக்கள் எனது பெயரிலேயே எழுதும் மற்றவரின் கருத்துடன் மாறுபட்டிருந்தால் நான் போலியா? அல்லது அவர் போலியா?
3. சொல்பவரின் கருத்துக்கு முதலிடம் தர வேண்டுமா சொன்னவருக்கு முதலிடம் தர வேண்டுமா?
4. தனது பெயரில் வந்திருக்கும் பின்னூட்டம் தன்னுடையது அல்ல என்பவர் எதற்க்கு முதலிடம் கொடுக்கிறார்?
5. அதிமுக. திமுக இரண்டு கட்சிகளை சார்ந்தவரும் வெளியிடும் கருத்துக்கள் சரியென கருதும் போது அவற்றை வெளியிடுவது தவறரா?
6. அப்படி கருத்து சொன்னவர் திமுகவை சேர்ந்தவராக இருப்பின் அவர்கள் அடிவருடிகள் என்பதும் அதிமுகவை சேர்ந்தவராக இருப்பின் அடியாள் என்பதும் சரியா?
7. தனது பெயரில் வெளியாவதால் மட்டுமே இன்னொருவர் வெளியிடும் கருத்தில் தனக்கு உடன்பாடில்லை என்பதால் அவரை போலியென்பதும் அவரின் பின்னூட்டங்களை வெளியிடுவது கூடாது என்பதும் சரியா?
8. கருத்து மோதல்கள் நிகழும்போது தனது கருத்துக்களை சொல்பவர் எதிராளியின் கருத்தோடு உடன்படாத சமயத்தில் தனது கருத்தை வாபஸ்செய்துகொள்கிறேன் என்பது சரியான முடிவா? இதைவிட இடுகைகளுக்கு எதுவும் எழுதாமலேயே இருக்கலாமே?

1. ஜெ.வை ஆதரித்து இங்கு எழுதும் xxxxx xxxxxx , xxxxxxxxx ஆகியோரும் அடியாள்கள்தானா?இவர்களுக்கும் ஜெ. தர்மசங்கடத்தை கொடுக்கிறார் இல்லையா?
சொன்னது:Anonymous
2.இந்த அனானி நீங்க தானே...:)கோச்சுக்கப்படாது...ஏன் தி.மு.க வை ஆதரிக்கும் லக்கிலூக்கை சொல்வீர்களா..எங்க ஊருல அ.தி.மு.க / தி.மு.க எல்லாம் ஒன்னுக்குள்ள ஒன்னா இருக்கோம்...:) நானும் xxxxxx மாதிரி...
சொன்னது:xxxxxxx
3.ஒரு பாப்பாத்திக்காக ஒதை வாங்க இந்த நாய்ங்களுக்கு என்ன புத்தி கித்தி பேதலிச்சுப் போச்சா?
சொன்னது: Anonymous
4.இதே கலைஞரிடம் சொல்லியிருந்தால், "ஆம் நான் அடியாள் தான், மக்களுக்கு அடியாள், என் தொண்டனுக்கு அடியாள்" என்று சொல்லி இருப்பார். இதையே ஜெயேந்திரரிடம் சொல்லியிருந்தால் "ஆம் நான் அடியாள் தான், இறைவனுக்கு அடியால் என்று சொல்லியிருப்பார்".பாவம் அதிமுக. அங்கு வாய்ச்சொல் வீரர்கள் இல்லை.
சொன்னது xxxxx
5 .டர்..டர்..டர்ருருரு...ஆட்டோ ஸ்டார்ட் பண்ணியாச்சு தல..:)
சொன்னது xxxx
6.அதான் ஜெயாவோட அடிமை xxxxxxx இருக்கானே?
7.இப்படி தனிமனித தாக்குதலுடன், எந்த ஒரு நோக்கமும் இல்லாமல் வரும் பிண்ணூட்டங்களையும் வெளியிடும் அண்ணன் மகேந்திரன் வாழ்க!.எண்ணம் போல வாழ்வு வண்ணமயமாகட்டும்!.
8.//பாவம் அதிமுக. அங்கு வாய்ச்சொல் வீரர்கள் இல்லை.//சேகர்பாபு, மதுசூதனன், சமீபத்திய தாதா பாண்டுரங்கன் இவர்கள் எல்லாம் அடியாட்கள் இல்லையா xxxxxxx?
9.//தனிமனித தாக்குதல்களையும்....//நீங்கள் முன்னர் அதே அனானிக்கு எழுதியுள்ள பின்னூட்டத்தை மறுமுறை படிக்கவும்... அதில் நீங்கள் எதுவும் ஆட்சேபனை தெரிவிக்காத காரணத்தால் அனானியின் பின்னூட்டம் வெளியிடப்பட்டது மேலும் நான் முதலில் அதிமுக xxxxxxxxx என்று வேறு தவறாக எண்ணிவிட்டேன். அதனால்தான் அது தனிமனித தாக்குதலாக தெரியாமல் போனது. மன்னிக்கவும். //வாழ்வு வண்ணமயமாகட்டும்// நன்றிகள் கோடி அன்பரே!:))
சொன்னது:
மகேந்திரன்.பெ
10.அய்யா xxxxxxx நீங்க என் பக்கத்துல வந்து படிச்சா படிச்சதுக்கு கருத்து சொல்லுங்க அத விட்டுட்டு கருத்து சொன்னவருக்கு கருத்து சொல்ரதெல்லாம் நல்லால்ல ஆமா:))))
சொன்னது:
மகேந்திரன்.பெ (இதற்கு xxxxxxx இருந்து வந்த பதில் நேரடியாக கருத்து சொன்ன நபரின்மேல் கோபம் காட்டியதால் வெளியிடப்படவில்லை.)
11. என்ன தான் ஜெ.தி.மு.க சட்டங்களை எல்லாம் மீறினாலும் ஜெயா பாப்பாத்தி ஆயிற்றே. அதனால் நாங்கள் ஜெயாவை தான் ஆதரிப்போம்.
சொன்னது:xxxxxxxx
12.கடைசியாக வெளியிடப்பட்டுள்ள,பிண்ணூட்டங்கள் என்னுடையதல்ல.
சொன்னது:xxxxxxxx

13.//என்னடான்னு பாத்தேன் அதான நீங்கதான் கொண்ட கொள்கைல வைகோவ விட உறுதியானவராச்சே?//போலி என்று தெரிந்தும் வெளியிடும் உங்கள் பெருந்தன்மை வாழ்க!என்னுடைய பெயரில் பிண்ணூட்டம் இட்டவரின் profile இதுவாக (xxxxxxxxx) பட்சத்தில் அதை நீக்குங்கள்இதற்கு மேல், போலிகளை அனுமதித்தால் என்னுடைய பிண்ணூட்டங்கள் அனைத்தையும் நான் வாபஸ் வாங்கிவிடுகிறேன்.
சொன்னது:xxxxxxxxxx

14. இரண்டு ஜெயக்குமார்கள் எழுதுவதால் உங்களுக்குள் இருக்கும் பகை? என் கருத்து சுதந்திரத்தை கேலி செய்கிறது. இரண்டு பேரில் என்னைக் கேட்டால் நீங்கள் இருவருமே போலிகள் என்பேன்.
1.உங்கள் பெயரில் வெளியிடுவதால் மட்டுமே அடுத்தவர் போலி என்று கூறும் நீங்கள் அவர்களின் கருத்துக்களுக்கு வாதிடலாம்.
2. நான் எனது பின்னூட்டங்களை வாபஸ் செய்து கொள்கிறேன் என்பது உங்கள் விருப்பம்.
3. எனது பதிவில் கருத்துக்குத்தான் மதிப்பே ஒழிய நபர்களுக்கல்ல.
4.ஒருவர் தி.முக. அதிமுக என்பது அவர் அவர் விருப்பம்
5.நீங்கள் இரண்டு பேரும் உங்கள் சண்டையை நடத்த எனது தளம் உகந்ததல்ல
6. இங்கே யாரும் போலியுமல்ல உண்மையும் அல்ல
7. எனக்கு வரும் பின்னூட்டங்களில் எதை வெளியிட வேண்டும் என்பதை முன்னறே ஒரு பதிவில் அதாவது என் முதல் பதிவில் கிழுமத்தூர் எக்ஸ்பிரஸில் தெரிவித்துள்ளேன்
8.எனவே கருத்து மட்டும் சொல்லுங்கள். உங்கள் பெயரில் வெளியிடப்படும் பின்னூட்டங்கள் நேரடியாக உங்களை தாக்குவதாக கருதினால் தயவு செய்து பின்னூட்டமிடுவதை தவிர்த்து விடுங்கள்
இன்னும் இது போல நிறைய சொல்லிக்கொண்டே போகலாம் .ஆனால் இதிலிருந்து ஒன்றுமட்டும் தெரிகிறது. அதாவது தனது பெயரில் வெளியாகும் கருத்து தனது கருத்தோடு ஒத்துப்போகாத போது எதிராளி எழுதுவது போலியாக சித்தரிக்கப் படுகிறது. உடனே அவர் போலி என்று இவரும் இவர் போலி என்று அவரும் முரசொலிக்க ஆரம்பித்துவிடுகின்றனர். இது வலைப்பூ தரும் சுதந்திரத்துக்கு ஆரோக்கியமல்ல.
(பின்குறிப்பு:) எனது பதிவுகளுக்கு வரும் அனைவரின் கருத்தும் கருத்து சொன்ன எந்த தனிப்பட்ட நபரையும் தாக்காத சமயத்தில் எனது கருத்துக்கான அல்லது எதிர்கருத்து சொன்னவரின் கருத்துக்கான பதிலாய் அல்லது கேள்வியாய் இருக்கும் பட்சத்தில் அப்படியே வெளியிடப்படும் அனானிமஸ் உட்பட. இதுபோல் எனக்கு வந்த சில பின்னூட்டங்களை சேகரித்து தனியே ஒரு பதிவும் போட எண்ணியுள்ளேன்.