Wednesday, May 30, 2007

ராமன் கடவுளா? தினமலர் கிண்டல்


இப்படியெல்லாம் நக்கலும் நையாண்டியும் செய்து செய்தி வெளியிடும் தினமலரை இனியும் பார்ப்பன சங்கத்து பத்திரிகை என்பதாலேயே படிக்கத்தான் வேண்டுமா என்பதை "இந்துக்கள்" தான் முடிவு செய்ய வேண்டும்,
(இங்கே இந்துக்கள் என்பது திருடர்களை குறிக்காது)

யாரும் பார்க்காத சிவாஜி டிரெய்லர்


சற்று முன் வலைப் பதிவில் இருந்து சக்தி விகடன் வரை எல்லா மக்களும் தேடி பிடித்து படிக்கும் ஒரே செய்தி சிவாஜி தி பாஸ் பற்றியது. இப்போது டிரைலரும் வந்து கலக்குவதால் ஜோதியில் நானும் அய்க்கியமாக வேண்டி இந்த டிரைலரை சமர்பிக்கிறேன் நல்லா இருக்கான்னு சொல்லுங்க

இங்கே சுட்டினால் கிடைக்கும்

Tuesday, May 29, 2007

இட்லிவடை, கொத்தாளத்தேவர், மற்றும் விருமாண்டியாகிய நான்

நேற்று மதியம் இட்லிவடையின் அழகிரி கேள்வி முதல்வர் டென்ஷன் எனும் பதிவை நல்ல வேளை(?)யாக ஜெயா டிவி(நம்புங்கப்பா) செய்திகளை பார்த்த பின்பு பார்க்க நேரிட்டது. இட்லி வடையின் பதிவில் இந்த விவகாரம் குறித்து பின்னூட்டமும் போட்டேன். அது இந்த பதிவை எழுதும் இந்த நிமிடம் வரை வெளிவர வில்லை. அந்த நான் குறிப்பிடும் பின்னூட்டம். அந்த பின்னூட்டத்தில் நான் சொல்லியிருந்தது இதுதான்...

//அப்போது ஜெயா டிவி நிருபர் மதுரையில் தினகரன் அலுவலகம் மீதான தாக்குதலுக்கு மு.க.அழகிரிதான் காரணம் என்று கூறுப்படுகிறதே என்று கேட்டார்.//

இட்லிவடை நானும் நீங்கள் குறிப்பிடும் ஜெயா டிவி செய்திகளை பார்த்தேன் அதில் ஜெயா டிவி நிருபர் முதல்வரை நோக்கி "மதுரை பத்திரிகை அலுவக கொலைகளுக்கு காரணம் அழகிரிதான் என்பது அப்பட்டமான உண்மை" ஆனால் என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்?" எனக் கேட்டார் அதற்க்குத்தான் முதல்வர் " எதுடா உண்மை உனக்குத் தெரியுமா எனக்கேட்டார். ஆனால் உங்கள் பதிவில் நிருபர் என்னவோ மிக நல்ல முறையில் கேள்வி கேட்டதாகவும் அதற்கு முதல்வர் கடுமையான வார்தைகளை வீசியதுபோலவும் எழுதியிருக்கிறீர்கள்.

இதுதான் இட்லி வடையின் பதிவில் இட்ட பின்னூட்டம் ஆனால் என்ன காரணத்தாலோ எனது பின்னூட்டத்தை அவர் வெளியிட வில்லை. அதற்காக அவரிடம் கெஞ்சிக்கொண்டிருக்கும் அளவுக்கு எனக்கும் பொறுமையில்லை.

உடனே கலைஞர் செய்தது சரி எனச் சொல்கிறீர்களா? அழகிரி இந்த கொலைகளுக்கு காரணமில்லையா என சரளைக்கற்க்களை வீசப்போகும் குஞ்சுகளுக்கு ஒன்றே ஒன்றுதான் சொல்ல முடியும். மாணவிகள் எரித்துக் கொல்லப்பட்ட வழக்கில் ஜெயலலிதா எப்படி குற்றவாளியோ அதே போல்தான் அழகிரியும் குற்றவாளி இதை மறுப்பதற்கில்லை. ஆனால் முதல்வர் அழகிரியின் தந்தையாக மட்டும் பதில் சொன்னது எதிர்பாராத ஒன்று. கலைஞரின் முகத்தில் தெரிந்தது கடும் கோபமில்லை அது எதிர்பாராமல் வந்து விழுந்த எகத்தாளமான கேள்விக்கு திருப்பித் தந்த பதில் அவ்வளவே.

ஜல்லிகள் வரவேற்க்கப் படுகின்றன :)

Sunday, May 27, 2007

கனிமொழி மேல் கல்லெறியும் கழிசடைகள்




கனிமொழி
கவிஞர், கட்டுரையாளர், பத்திரிகையாளர், முற்போக்கு சிந்தனை கொண்ட பெண்ணியவாதி என பல முகங்கள் கொண்ட தமிழ் பெண் ஆளுமைகளுள் குறிப்பிடத் தகுந்தவர். சங்கமம் நடத்தி தான் ஒரு சிறந்த வெளிப்படையான நிர்வாகத் திறமை கொண்டவர் என்பதையும் நிரூபித்தவர். திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் மாநிலங்களவைக்கு போட்டியிடுவார் என திமுக அறிவித்ததுமே திமுக குடும்ப அரசியல் நடத்துகிறது தமிழ்நாடு திமுக தலைவர் கைகளுக்குள் போனது என் ஜல்லியெறியும் வேலைகளை தொடங்கிவிட்டனர்.

திமுக மட்டும்தான் குடும்ப அரசியல் செய்கிறதா ஒரு பைலட் இந்திய பிரதமராக வரும்போது, ஒரு நடிகை முதல்வராக வரும் போது?, ஒரு முன்னாள் நடிகையின் முன்னாள் முதல்வரின் முன்னாள் வளர்ப்பு மகனின் அண்ணன் அரசியலுக்கு வரும்போது? முன்னாள் முதல்வரின் உடன்பிறவா சகோதரி கட்சியின் பொதுக்குழு உறுப்பினராகும் போது?, இந்த கழிசடைகள் எங்கே போயின?

அதிலும் ஒரு பன்னாடை உளருகிறது இப்படி பார்க்க பின்னூட்டங்கள் "இந்த முகத்தை வைத்துக்கொண்டு இவர் டிவி பேட்டியெல்லாம் கொடுக்க கூடாது என்று"

ஏன் ஜெயலலிதா இன்னும் அழகாய்த்தானே இருக்கிறார் கதாநாயகியாக நடித்தவர்தானே அவர் நாட்டுக்கு செய்த நலன்களை நாடு அறியுமே? அப்ப இவனுங்களுக்கு அசினும் திரிசாவும், பாவனாவும் வந்தாத்தான் புடிக்குமா?

அழகா இருக்கவங்க மட்டும்தான் அரசியலுக்கு வரவேண்டுமென்றால் உபியில் மாயவதி ஏது? நேருவின் மகள் அரசியலுக்கு வந்தால் கேக்க மாட்டோம் , இந்திராகாந்தியின் மகன் அரசியலுக்கு வந்தால் கேக்க மாட்டோம், ராஜீவ் காந்தியின் மகன் அரசியலுக்கு வந்தால் கேக்கமாட்டோம் , பிரியங்கா காந்தியின் கணவர் அரசியலுக்கு வந்தால் கேக்க மாட்டோம் எம்ஜியாரின் "துணை"வியார் அரசியலுக்கு வந்தால் கேக்க மாட்டோம் அம்மாவின் தோழி வந்தால் கேக்க மாட்டோம், தோழியின் அண்ணன் மகன் வந்தால் கேக்க மாட்டோம், மூப்பனாரின் மகன் வந்தால் கேக்க மாட்டோம், சிதம்பரத்தின் மகன் வந்தால் கேக்க மாட்டோம் ஆனால் அன்புமணி ராமதாஸ் வந்தா கேப்போம், கருணாநிதியின் மகள் வந்தால் கேப்போம் என்னடா உங்க லாஜிக்கு?

துணையாக சேர்த்துக்கொண்டவரின் மகள் என்றும் புலம்பியிருக்கிறது சில பன்னாடைகள். துணையாக்கிக் கொண்டவர் இவர்தான் எனச் சொல்லும் துணிவு அவருக்கு இருக்கிறது சட்ட மன்ற விவாதத்தின் போதே ராஜாத்தியம்மாள் என் மகள் கனிமொழிக்கு தாய் எனச் சொல்லும் துணிவு இருக்கிறது கலைஞருக்கு ஆனால் நான் ஒரு பாப்பாத்தி என்பதை சொல்லும் துணிச்சலோடு தனக்கும் எம்ஜியாருக்கும் என்ன உறவு என்பதை சொல்வாரா அம்மையார்?

இந்திராகாந்தி இறந்தபோது காங்கிரசில் வேறு தலைவர்களே இல்லையா?, எம்ஜிஆர் இறந்த போது ஜானகி அம்மையார் தவிர வேறு ஆட்களே இல்லையா? , அதிமுகவில் வேறு ஆட்களே இல்லையா ஜெவைத் தவிர? இவங்க தகுதியெல்லாத்தியும் விட கனிமொழிக்கு ஆயிரக் கணக்கில் தகுதியிருக்கு.

என். டி. ராமராவுக்கு பிறகு சிவபார்வதி ஏன் வந்தார்?. இவ்வளவு ஏன் அமெரிக்கா செய்றது எல்லாம் சரி இஸ்ரேல் எல்லாம் சரி, நேருவோட லெகஸி எல்லாம் சரின்னு சொல்றவங்க ஏன் ஜார்ஜ் புஷ்சுக்கு பிறகு ஜார்ஜ் வில்லியம் புஷ் வந்தாரு? கிளிண்டனுக்கு பிறகு ஹில்லாரி வந்தாங்கன்னு சொல்ல முடியுமா? அழகா இருந்த கிளிண்டன் பன்ன "வேலை" தான் உங்களுக்கு தெரியுமே லேடி மவுண்ட்பேட்டன் அழகாத்தான் இருந்தாங்க.

ஆக மொத்தம் உங்களுக்கு திமுக மேல கல்லெறிய இப்ப கனிமொழின்னு ஒரு பழம் கிடைச்சிருக்கு ஆனா உங்க காரணம் சப்பையால்ல இருக்கு.

இன்னும் அவங்க மந்திரியா ஆனா என்ன நடக்குமோ யப்பா இப்பவே கண்ணை கட்டுதே.

Saturday, May 26, 2007

கலைஞரின் குடும்ப அரசியல்- ஆ.ராசா




‘‘நிச்சயமாக இல்லை. ஏற்கெனவே அவர் குடும்பமே இயக்கம்தான். மிசா காலத்தில் கலைஞர் முரசொலியைக் கையில் எடுத்துக் கொண்டு சாலையில் நடந்தபோது ஜனநாயக உரிமைகளுக்காகப் பாடுபட்ட போது அந்தக் குடும்பத்தில் இருந்தவர்கள் _ அது சிறைக்குப் போன தளபதி ஸ்டாலினாக இருந்தாலும் மு.க. அழகிரியாக இருந்தாலும் மு.க. தமிழரசுவாக இருந்தாலும் அவர்களும் தெருவுக்கு வந்து அவசரச் சட்டத்தை _ போலீஸ் அடக்கு முறையை எதிர்த்து ஜனநாயகத்தைக் காக்கப் போராடினார்கள்; ஆனால், இன்றைக்கு அரசியலுக்கு வரும்போது அல்லது துணையாகப் பணியாற்றும் போது, ‘இவர்கள் வரலாமா?’ என்று கேட்கிறார்கள். இன்னொன்று, நான் ஓர் அரசியல் கட்சியில் இருப்பதாலேயே என் பிள்ளையை நிராகரிக்க வேண்டுமென்று சொல்வது என்ன நியாயம்? என்ன கொள்கை? தி.மு.க.வில் உள்ள ஒருவரின் மகன் தி.மு.க.வில் இல்லாமல் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்திலா சேரமுடியும்? மோதிலால் நேரு நேருவையும், நேரு இந்திராவையும் கொண்டு வரக்கூடாது என்று காங்கிரஸிலோ, மக்களிடத்திலோ விவாதம் நடந்ததாகத் தெரியவில்லை. இவையெல்லாம் கொள்கையை அடிப்படையாகக் கொண்டது. அப்படியே ஒரு வாரிசு திணிக்கப்பட்டால், அல்லது வெளியிலிருந்து நடப்பட்டால் அதை நிராகரிப்பதா, ஏற்றுக் கொள்வதா என்பதை கட்சித் தொண்டர்கள்தான் முடிவு செய்ய முடியும். ஊடகங்களும் மற்ற விமர்சனமும் அல்ல. வாரிசாக வந்த எத்தனையோ பேர் வெற்றியடையவில்லையே!’’




கலைஞரது குடும்ப அரசியல்பற்றி புதிய தகவல் தொழில் நுட்ப அமைச்சர் ஆ.ராசா குமுதம் ரிப்போர்ட்டரில்

Thursday, May 24, 2007

ஜெயலலிதா கும்பகோணத்தில் ஏன் குளித்தார்?

கோவி கண்ணன் அவர்களின் பதிவில் கிருஷ்ணா என்பவர் இட்ட பின்னூட்டம் இதற்கு எனது பதிலை கோவி கண்ணன் அவர்களின் பதிவில் சொல்லியிருக்க முடியும் என்றாலும் அத் எத்தனை பேரின் பார்வைக்கு போகும்? அதனால் அதற்கான பதில் இங்கே பதிவாக.

//ஹிந்து கோவில்களில் பிற மதத்தினர் பிரவேசிப்பது தடை செய்யப்பட்டுள்ளது (ஹிந்துக்களுள் ஜாதி பார்த்தல் கோவில்களில் கிடையாது).ஆகவே தீண்டாமை எனும் வாதம் இங்கு பொருந்தாது.//

தீண்டாமைன்னா என்னங்கயா? அப்ப எங்க ஊர்ல ஆதி திராவிடர்கள் எங்கள் கோயிலுக்குள் நுழையக்கூடாதுன்னு சொல்லி இன்னமும் கேனத் தனமா தடுக்கற எங்க ஊர் முட்டாள் பெருசுங்க செய்யறது சரியா ஆதி திராவிடர்கள் இந்துக்கள் இல்லையா?

//எந்த இடத்திற்கு போனாலும், அந்தந்த இடங்களுக்குறிய விதிமுறைகளை நாம் பின்பற்றத்தான் வேண்டும். உ.ம். நூலகத்தில் அமைதி காத்தல், மருத்துவமனை வளாகத்தில் ஒலிப்பான் உபயோகிக்கத் தடை, தர்ஹாக்களில் நீரினால் சுத்திகரித்தல் இன்ன பிற. அதே போல் ஒரு கோவிலுக்கென உள்ள விதிகளை பின்பற்ற வேண்டியது ஒரு பொறுப்புள்ள குடிமகனின் கடமை. //

இந்துக்கள் கோயிலுக்குள் பிற மதக்காரர் போகக் கூடாதுன்னு நம்ம இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் சொல்வதா எங்கயும் படிக்கலீங்களே?

//அதுவும், பொது வாழ்வில் உள்ளதாக கூறிக் கொள்ளும் ஒருவரின் பொறுப்பு மிகவும் அதிகம். ஏற்கனவே ஒருமுறை அனுபவப் பட்ட பின்னும், இவர் மறுபடியும் அதே தவற்றைச் செய்ய முற்படுவது சற்று அதிகார ஆணவம் என்று படுகிறது. //

எதுங்க அதிகார ஆனவம்? பாப்பான் உள்ள போனா பாக்கிற சாமி வேற யாரும் போனா கண்ண மூடிக்குமா? அப்படீன்னா அது என்னங்க சாமி?

//இறைவன் முன் எல்லாரும் சமம் என்று இங்கு வாதிடும் நாத்திகவாதிகள், இறைவன் எங்கும் இருக்கிறான் என்ற தத்துவத்தையும் ஏற்றுக் கொள்ள வேண்டியது தானே? இவர் தன்னுடைய சடங்கை வீட்டினுள் வைத்துக் கொள்வது தானே? ஏன் வீம்பு பிடிக்க வேண்டும்?//

கும்பகோணம் போய் செயலலிதா குளிச்சாத்தான் அந்த மகாமகம் கிடைக்குமா? ஏன் சொந்த பாத்ரூம்ல அவுத்துபோட்டு குளிச்சா அந்த சாமி பாக்காதா? சாமிதான் எங்கயும் இருகே?

//கோவில் விதிப்படி ஒரு தவறு நிகழ்ந்திருந்தால், அதை சரி செய்ய அவர்கள் முறைப் படி அவர்கள் அதைச் செய்கிறார்கள். இதற்கு மேல் இதை பெரிது படுத்துவது அடுத்தவர் சுதந்திரத்தில் தலையிடுவது போன்றதாகும். அவ்வளவே.//

அடுத்தவர் சுதந்திரமா? எது அடுத்தவர் சுதந்திரம்? எங்க கோயிலுக்கு வராத.. உள்ள போனா தீட்டு, உக்காந்த இடத்தை கழுவனும், தொட்டா தீட்டு இதெல்லாம் உங்க சொதந்திரமா? இல்லை தந்திரமா? போங்கய்யா

Sunday, May 20, 2007

ஆப்பரேஷன் அனானிமஸ் பின்னூட்டங்கள்


கடந்த சில நாட்களாக எனது பதிவில் அனானிமஸாக (கவனிக்கவும் இவர் அமுகவை சேர்ந்தவர் இல்லை)ஒரு பெருந்தலை தொடர்ந்து எச்சமிட்டு வந்தார். எனக்கு அந்த நடையை பார்த்ததும் கொஞ்சம் சந்தேகம். அதற்கு ஏற்றார் போல சில மசால் வடைகளை ஆங்காங்கே தூவி தொடர்ந்து எனது பதிவுகளை வெளியிட்டு வந்தேன்.


தலை கொஞ்சம் உஷாராகி இருக்கும் போல. ஒரு இரண்டு பதிவுகளை படித்துவிட்டு பின்னூட்டம் போடாமலேயே போயிருந்தார். என்ன இது சோதனை எலி சிக்கவில்லையே என கவலைப்பட்ட நேரம் மீண்டும் அதே எலி இந்த முறை சொந்த பெயரில் லாகின் செய்து ஆனால் அதர் ஆப்ஷனில் பின்னூட்டம் போட்டது. இங்கே பின்னூட்டம் போட்ட வேகத்திலேயே எல்லா பதிவுகளுக்கும் போய் எனது பதிவில் இட்ட அதே பின்னூட்டத்தை கக்கிவிட்டு "எஸ்கே"ப்பும் ஆனது.


இதில் கூத்து என்னவென்றால் அந்த மாஸ்க் போட தெரிந்த பதிவரும் அசந்தால் அடிக்கும் தனது தலைவன் போலவே திமுகவுக்கு உண்மையிலேயே எதிர்பை தெரிவிப்பதாக எண்ணி மசால் வடை வாசனைக்கு மயங்கி பொறியில் சிக்கியது. எந்த எலி வேண்டுமானாலும் எனது வலைக்கு வரலாம் ஆனால் இது என் சொந்த வலை இங்கே குப்பை போட எனக்கு மட்டுமே உரிமை அதிலும் சுத்தம் செய்யும் கடமை என்னை சேருமென்பதால்.


இப்படியிருக்க இன்னும் பெரிய தலைகள் எல்லாம் நான் பின்னூட்டம் போட்ட ஒரு பதிவில் எனக்கு எதிரான வாதங்களை அனானிமஸாக கொட்டியிருந்ததுதான் . அங்கேயே சொந்த பெயரிலும் ஒரு பின்னூட்டம் மதுவின் சூதனமான அந்த பதிவர் தெரிந்தே இதை செய்திருக்க மாட்டார் ஆனால் தெரியும். தனது வலையில் தனக்குத் தானே நூறு பின்னூட்டங்கள் போடுவதே தொழிலாக கொண்ட இன்னுமொரு வாண்டுவும் அதே வேலை பார்த்திருக்கிறது.


ஆபத்தான அனானி அதர் ஆப்ஷன்களுக்கு எதிராக போர்க்களத்தில் தோற்று புறமுதுகிட்ட பிறகு தானே அதை தனது வலைப்பூவில் திறக்க காரணம் இனிமேலும் மற்ற பதிவர்களை அல்லது மற்ற பதிவர்கள் போல் பின்னூட்டங்களை தானே போட்டுக்கொள்வது சொந்த செலவில் வாடகை வீட்டுக்கு சுன்னாம்படிக்கும் வேலை என்பதாலேயே எனவும் அந்த பதிவருக்கே நெருக்கமான ஒரு பதிவர் கூகிள் சாட்டில் கூறி எஸ்கேப்பானதாக எனக்கு நம்பிக்கையான வட்டாரங்கள் தெரிவித்தன.


மேலும் தமிழ் வெளி தற்ச்சமயம் சூடு பிடிக்கும் காரணத்தால் அங்கே எந்த ஐபி இன்ன பிற மசால் வடைகள் பொறிகள் இல்லாத காரணத்தால் தமிழ் மணத்தில் இருந்து தானாகவே வி.ஆர்.எஸ் வாங்கும் திட்டமும் பதிவருக்கு இருக்கிறதாம் ஆனால் அது கொஞ்சம் ஆரிய திட்டம். தமிழ் மணம் தரும் சேவைகள் தமிழ்வெளியில் கிடைக்கும் என்றால் அதற்கு குடிபோகும் திட்டம் உண்டாம்.


விடாது கருப்பு, நான், போலியார், வால்டர் வெற்றிவேல், கொசுபுடுங்கி, ஆதிசேஷன், எல்லாமே ஒருவரே என திரும்ப திரும்ப சொல்லும் இவர் தனது கணினியில் பேவரிட்டுகளில் எங்கள் வலைப்பூ முகவரிகளை சேர்த்து வைத்து எங்காவது பொறியில் சிக்கும் பதிவுகள் எழுதினால் என்னையும்.வால்டர் வெற்றிவேலையும் தமிழ் மணத்தில் இருந்து வெளியேற்றும் திட்டம் இருக்கிறதாம்.


அதோடு சார்பில்லாத சிங்கை பதிவர் சாட்டை சொடுக்குவதால் சந்தேகம் வந்து இனி போகும் பதிவுகளில் எங்கள் பெயரோடு அந்த ஜெனரல் நாலேட்ஜ்ஜையும் சிக்க வைக்க யோசிக்கிறாராம். இத்தனை தகவல்களையும் எனக்கு அளித்த அந்த திராவிடத்தின் மேல் கோபம் கொண்ட சிங்கரன் எங்களிடம் அந்த தகவலை சொன்னதில் காரணம் உண்டு. எல்லாம் சொந்த விஷயம் தான்.


தான் எத்தனை ஆதரவாக இருந்தும் தன்னை இன்னும் திரா"விட" எதிரியாக்க அந்த ஆப்பரேசன் சல்மா அயூப்பில் சவுக்கடி வாங்கிய பதிவரின் திட்டம் போலவே தனது பெயரில் போலி வலைப்பூ ஆரம்பிக்கும் திட்டம் இருப்பதை கண்டுகொண்டாராம். ஆனால் நீங்கள் இதற்கெல்லாம் பயப்பட வேண்டாம் என சொன்ன பிறகு கொஞ்சம் தைரியம் பெற்றார்.


எத்தனை முறை அடிவாங்கியும் அசராமல் கப்பு எனக்குத்தான் எனும் வடிவேலுவை போல் எத்தனை முறை புறமுது காட்டியும் இது போர்த்தந்திரம் போடா ஜாட்டான் எனச் சொல்லும் அந்த பதிவரை பார்த்து ஒரே ஒரு வார்த்தை


" டோண்ட் டூ திஸ் "

Saturday, May 19, 2007

அடித்து ஆடும் கோவி.கண்ணன் அலறித்துடிக்கும் ஆரியக்குஞ்சுகள்


ஜி.கே.என எல்லோறாலும் அன்போடு அழைக்கப்படும் கோவி.கண்ணன் அவர்களை தெரியாதவர்கள் வலைப்பூவில் இருக்க வாய்ப்பே இல்லை.


கண்டிப்பாக அவர் எல்லா பதிவர்களுக்கும் ஏதாவது ஒரு முறை ஒரு அற்புதமான பின்னூட்டத்தை வீசியிருப்பார், சென்ற ஆண்டு இவரின் பதிவுகளை படித்தவர்களுக்கு அவரின் இப்போதைய பதிவுகளை படிக்கும்போது கொஞ்சம் அதிர்ச்சியாய்தான் இருக்கும். ஏனென்றால் சார்பு நிலை அரசியல், வலைப்பதிவில் குழுக்கள் என எந்தப் பக்கமும் சாயாத ஒரு நியாயத்தராசாகத்தான் இருந்தன அவரின் பதிவுகள் இல்லையென்றால் எவறையும் தாக்காத பதிவுகள்.


தனிப்பட்ட முறையில் அவரோடு நான் கூகிள் சாட் செய்யும் போது கூட சில விமர்சனங்களை வைக்க தயங்குவார். அதை பதிவில் எழுதுங்கள் எனச் சொன்னால் அவ்வளவுதான் என்னால முடியாதுப்பா என ஒதுங்கி ஓட்டமே பிடித்துவிடுவார். ஆனால் இப்போது எல்லாமே தலைகீழ். ஆரியத்துக்கும் அடக்குமுறைகளுக்கும், அரசியல் புழுக்களுக்கும் எதிராக சாட்டையை மிக வேகமாய்ச் சொடுக்க ஆரம்பித்திருக்கும் அவருக்கு முதலில் என் வாழ்த்துக்கள்.


ஆயிரக்கணக்கான பின்னூட்டங்கள் அத்தனையும் நல்லூட்டங்கள் என எவர் மனசும் கோனாது அழகு தமிழில் கவிதைகளும் எழுதி தனது சார்பற்ற பதிவுகளை ஒரு மாற்றத்துக்குள் கொண்டுவர எப்படி முடிந்தது அவரை மாற்றியது எது?


எது எப்படியோ மாற்றம் மட்டுமே மாறாதது

(ஜி.கே இதை பப்ளிக்கா போட்டு ஒடைச்சதுக்கு மாப்பு கேட்டுக்கறேன் ஆனா ஏன்னு உண்மையை எங்கிட்ட மட்டும் சொல்லுங்க சரியா? )

Thursday, May 17, 2007

மக்கள் துணையோடு மரணத்தை வென்றேன்



தமிழ் தேசிய இயக்கங்களின் குரு


புலவர் கலியபெருமாள் மரணம் தலைவர்கள் கண்ணீர் அஞ்சலி


திட்டக்குடி, மே 17-
கரும்பு விவசாயிகளுக்காக போராடியவரும் தமிழ் தேசிய அமைப்புகளின் குருவாக கருதப்படுபவருமான புலவர் கலியபெருமாள் பெண்ணாடத்தில் நேற்று மரணம் அடைந்தார். அவருக்கு வயது 86.
தீவிர கம்யூனிஸ்ட் இயக்கத் தலைவர்களில் ஒருவரான புலவர் கலியபெருமாள், கடந்த ஒன்றரை ஆண்டுகளாக இதயம் மற்றும் நுரையீரல் நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். பெண்ணாடத்தில் உள்ள மூத்த மகள் தமிழரசி வீட்டில் தங்கியிருந்த அவர், நேற்று மாலை மூச்சுத்திணறல் ஏற்பட்டு மரணம் அடைந்தார். அவரது உடலுக்கு பல்வேறு கட்சித் தலைவர்கள், விவசாய அமைப்புகளின் நிர்வாகிகள், பொதுமக்கள் இறுதி அஞ்சலி செலுத்தினர். அவரது உடல் சொந்த ஊரான சவுந்திரசோழபுரத்தில் நாளை அடக்கம் செய்யப்படுகிறது.
கலியபெருமாளுக்கு திருவள்ளுவன், சோழன் நம்பியார் என்ற இரு மகன்கள் உள்ளனர். சோழன் நம்பியார் கடந்த பாராளுமன்ற தேர்தலின்போது விடுதலைச் சிறுத்தை சார்பில் புதுச்சேரி தொகுதியில் போட்டியிட்டார். தீவிர கம்யூனிஸ்ட் இயக்கத்தை சேர்ந்த கலியபெருமாளுக்கு வெடிகுண்டு வழக்கு ஒன்றில் சென்னை ஐகோர்ட் தூக்கு தண்டனை விதித்தது. இதை எதிர்த்து முறையிட்ட மனு, சுப்ரீம் கோர்ட்டில் நிராகரிக்கப்பட்டது. பின்னர், அரசின் முயற்சியால் தூக்கு தண்டனை, ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது.
தமிழர் விடுதலைப்படைக்கு குருவாக கருதப்படும் இவர், நீண்ட காலம் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்தவர். தமிழ்நாடு விவசாயிகள் - வேளாண்மை உற்பத்தியாளர்கள் பாதுகாப்பு சங்கத்தை துவக்கி நடத்திய கலியபெருமாள், சமீபத்தில் Ôமக்கள் துணையோடு மரணத்தை வென்றேன்Õ என்ற சுயசரிதை நூலை வெளியிட்டார்.
கலியபெருமாளின் இறுதிச் சடங்குகளில் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ், தலைவர் ஜி.கே.மணி, தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன், விடுதலைச்சிறுத்தை பொதுச்செயலாளர் திருமாவளவன், எம்.எல்.ஏக்கள் ரவிக்குமார், செல்வம் உள்பட முக்கிய அரசியல் தலைவர்கள் பங்கேற்கின்றனர்.

கலாச்சாரக் காவல் நிலையம்


மாணவிகளை ராகிங் செய்தால் ஈவ் டீசிங் வழக்கு கடுமையான தண்டனைகள் உச்ச நீதிமன்றம் வலியுருத்தல்

சில்பா செட்டிக்கு பொது இடத்தில் கட்டிப் பிடித்து முத்தம் கொடுத்த ரிச்சர்ட் கீருக்கு பிடி வாரண்ட்

பாத்ரூமில் புத்தர் சிலையுடன் குளித்த நடிகைமேல் வழக்கு

தினகரன் பின்பக்கத்தில் கவர்ச்சி போஸ் கொடுத்த ரீமா சென்னுக்கு பிடி வாரண்ட்

மோட்டார் சைக்கிளில் ஆட்சேபிக்கும் விதமாக அமர்ந்து சென்ற பெண்கள் ஆறு பேர் மும்பையில் கைது

இரவில் பெண்கள் வேலைக்குப் போக பக்கத்து மாநிலத்தில் தடை.

இப்படியே போனால்.....

பொது இடத்தில் மனைவியோடு கைகோர்த்து நடந்த கணவன் கைது.

பெண்கள் சீட்டில் தவறாக உட்கார்ந்த வாலிபர் தப்பியோட்டம் போலீஸ் வலைவீச்சு

காதல் கடிதம் எழுதிய காதலனுக்கு காவல்துறை வலை

துப்பட்டா போடாத பெண்ணுக்கு தூக்கு

அரைக்கால் சட்டை போட்ட ஆடவன் மேல் அரைநிர்வாண வழக்கு

பெண்களிடம் தனியாக இருக்கும் போது தபால் கொடுத்த அஞ்சல் ஊழியருக்கு ஆறு ஆண்டு சிறை

இதையெல்லாம் உட்டுபுட்டு உறுப்படியா நாட்டுக்கு செய்ய வேண்டிய எத்தனையோ நல்ல வழக்குகளில் கவனங்கொள்ளூங்களேன் அய்யா.......


Saturday, May 12, 2007

திருக்குவளை மு.கருணாநிதி

தி.மு.க. என்கிற கட்சியின் பெயரையே தனக்குள் அடக்கிக் கொண்டவர். கரகரப்பான இவரது குரல், கடந்த 60 ஆண்டுகளாகத் தமிழகத்தில் கம்பீரமாக முழங்கி வருகிறது. அரசியல் ,சினிமா , இலக்கியம் என்கிற மூன்று வெவ்வேறு துறைகளில் இவரைப்போல முத்திரை பதித்த தலைவர் வேறு யாரும் இல்லை.இந்த மூன்று துறைகளில் இவரது வருகை புயலைப்போன்று அமைந்தது.
இன்று தமிழக முதலமைச்சராக உள்ள கருணாநிதி , தேர்தல் களம் இறங்கிய 1957 -ம் ஆண்டிலிருந்து தொடர்ந்து ஐம்பதுஆண்டுகளாக வெற்றி ப்பெற்று , சட்டமன்ற வரலாற்றிலும் சாதனைப் படைத்திருக்கிறார். அதற்காக 'பொன்விழா' எடுக்கிறது தமிழக சட்டமன்றம்.
சற்றுப்பின்னோக்கிப்பார்த்தால் , தி.மு.கழகம் ஆரம்பித்தபோது , அதன் ஐம்பெரும் தலைவர்களில் கலைஞர் கருணாநிதி ஒருவர் அல்ல என்பார்கள்.இருக்கலாம் . நாவலர் நெடுஞ்செழியன் , அன்பழகன் போன்ற கட்சித்தலைவர்களை தன் ஊருக்குப் பேச அழைக்க இவர் நடையாக அலைந்தார். இருக்கலாம்.ஆனால் , அறிஞர் அண்ணாவிற்குப் பின் , தமிழக முதலமைச்சராக இவர்தான் பதவியேற்றார். ஐம்பெரும் தலைவர் பட்டியலிலிருந்தவர்கள்...அன்பழகனும் , மதியழகனும் , நாவலரும் இவருடைய தலைமையின் கீழ் பணிபுரிய நேர்ந்தது!
வேகம் , வெற்றி மீது குறி ... இதுதான் கருணாநிதி.
தனது திராவிட நாடு இதழுக்கு ,'இளமைப்பலி' என்கிற கட்டுரையை எழுதி அனுப்பியவரை , திருவாரூருக்கு வந்தபோது , அறிஞர் அண்ணா சந்திக்க விரும்பினார். கருணாநிதியை அழைத்து வந்து அவர் முன் நிறுத்தினார்கள். கருணாநிதிக்கு அப்போது வயது 15. திகைத்தார் அண்ணா. 'படிப்பில் கவனம் செலுத்து 'என்றார் அண்ணா.
ஆனால் கருணாநிதி பள்ளி , கல்லூரி படிக்கட்டுகளில் அதிகம் ஏறவில்லை.எதிலும் அவர் காட்டிய வேகத்துக்கு , அன்றைய கல்வி அமைப்பு ஈடுகொடுக்காது 'ஆமைத்தன' மெத்தனம் காட்டியது காரணமாக இருக்கலாம் .உண்மையில் எது படித்தாலும் அவருக்கு மனப்பாடம் ஆகியது. தமிழில் அவருக்குள்ள ஆற்றலைக் கண்டு வியக்காதவர் யார்? உலக இலக்கியங்களை எல்லாம் இளமையில் தேடித்தேடி படித்தவர் இவர்.
இவரது சிந்தனையில் கூர்மைக்கும் தெளிவுக்கும் எடுத்துக்காட்டாக அமைந்தது 'பராசக்தி' 'மனோகரா' ஆகிய திரைப்படங்களுக்கு இவர் எழுதிய வசனம். தமிழ்த் திரையுலகுக்கே புதுப்பாடலை வகுத்துக் கொடுத்தது இவரது பேனா. இப்படங்களின் வசனங்கள் இன்னமும் தமிழ்ச் சினிமா ரசிகர்களிடையே மட்டுமல்ல இலக்கிய ரசிகர்களிடையேயும் கோலோச்சி வருகிறது.
தமிழக சட்டமன்றத்தில் தி.மு.க. உறுப்பினராக இவர் நுழைந்தபோது பலம் வாய்ந்த காங்கிரஸ் கட்சி எதிரே!கருணாநிதி சட்டமன்ற விவாதங்களில் கலந்துகொண்டு , 'மின்சார ஓட்டம்போல' விறுவிறுப்பாக சூடாகப் பேசுவார். காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் எரிச்சலடைவார்கள். ஓர் எதிர்கட்சித்தலைவர் சட்டமன்றத்தில் எப்படிப் பணிபுரியவேண்டும் என்பதற்கு உதாரணகர்த்தா அவர்!
போலீஸ்மானியத்தின் போது , ஒரு முறை தடை செய்யப்பட்ட இவரது நாடகத்தில் இருந்து ஒரு தாலாட்டுப்பாடலை சட்டமன்றத்தில் தைரியமாகக் கூறினார். ஒரு போலீஸ்காரரின் மனைவி, தன் குழந்தையை 'இங்கே வந்து ஏன் பிறந்தாய் ' என்று தன் வறுமையை நொந்து பாடும் பாடல் அது. போலீஸ் இவருக்கு எதிர்ப்புகளைக் கிளப்பியது. சொல்லப்போனால் அறிஞர் அண்ணாவைத்தவிர , எல்லா முன்னணித் தலைவர்களும், இவரது தீவிரம் கண்டு பயந்தனர். ஈ.வெ.கி .சம்பத், அண்ணாவுக்கு அடுத்த இடத்தில் இருந்தவர். கருத்துவேறுபாடு ஏற்பட்டு ஈ.வெ.கி.சம்பத் வெளியேறியபோது , கட்சி என்ன ஆகுமோ என்று அண்ணாவே சற்று பயந்தார். 'சொல்லின் செல்வர்' என்று பாராட்டப்பட்ட நல்ல பேச்சாளர் சம்பத் . இவர் பேச்சைக் கேட்க மக்கள் திரண்டனர்.
ஆனால் கருணாநிதி, இவர் மீது கடும் அம்புகள் தொடுத்தார். 'குட்டி காங்கிரஸ் 'என்று சம்பத் கட்சியை 'முரசொலி'யில் கேலி செய்தார். கருணாநிதியின் பிரச்சாரத்தின் முன்பு சம்பத் செல்வாக்கு சரிந்தது.
தி.மு.கழகம் சென்னை ஜார்ஜ் கோட்டையைப் பிடிப்பதற்கு முன்பு,சென்னை மாநகராட்சியைத்தான் முதலில் கைப்பற்றியது. அதற்கு முக்கியக் காரணம் கருணாநிதியின் பிரசாரம். வெற்றி விழாவில் , கருணாநிதிக்கு 'தங்க மோதிரம்' அணிவித்தார் அண்ணா!
1967 தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற்றது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நடந்த இந்தி எதிர்ப்புக் கிளர்ச்சி , அரிசிப் பஞ்சம் ஆகியவை காங்கிரஸ் தோல்விக்கு வழிவகுத்தன. என்றாலும் தி.மு.க. தேர்தல் பிரசாரத்தை முடுக்கிவிட்டவர் கருணாநிதி . காங்கிரஸ் ஆட்சியை கேலி செய்யும் இவரது 'காகிதப் பூ' என்கிற நாடகம் பற்றி அப்போது 'டைம்' பத்திரிக்கையே குறிப்பிட்டது.
இந்தத் தேர்தலில் எம்.ஜி.ஆர். சுடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. எம்.ஜி.ஆர். கழுத்தில் கட்டுடன் கை குவித்தவாறு , தி.மு.கவுக்கு ஓட்டு கேட்கும் போஸ்டர் ஏழை மக்களை ஈர்த்தது. இப்படி ஒரு போஸ்டர் , தயார் செய்யும் 'ஐடியா' கொடுத்தவர் கருணாநிதி. அண்ணா மிகவும் தயங்கியதாகக் கூறுவார்கள்.
அண்ணா மறைவுக்குப்பிறகு , கருணாநிதி முதலமைச்சர் ஆகவேண்டும் என்பதே மாவட்டச்செயலாளர்கள் தொண்டர்களின் ஏகோபித்த கருத்து . அந்த அளவுக்கு அவர்களுடன் நெருக்கமான தொடர்பை ஏற்படுத்திக் கொண்டிருந்தார் அவர். நாவலர் நெடுஞ்செழியன் சில மாதங்கள் அரசியல் துறவறம் பூண்டார். பிறகு இவரின் கீழ் அமைச்சரானார்.
முதலமைச்சராக கருணாநிதியின் அரசியல் சாமர்த்தியங்களை எழுத தனி பக்கங்கள் வேண்டும். அவை துப்பறியும் நாவலைவிட சுவாரசியமானவை! காங்கிரஸை தமிழகத்தில் செல்வாக்கு இழக்கச் செய்தார். 1971 -ல் இந்திரா காந்தியுடன் இவர் தேர்தல் கூட்டணி கண்ட போது , சட்டமன்றத்துக்குப் போட்டியிட்ட காங்கிரஸ¥க்கு ஒரு 'சீட் ' கூட கிடையாது! அது முதல் தமிழகத்தில் காங்கிரஸ் பலம் இழந்தது. டெல்லி காங்கிரஸ் மேலிடம் , தமிழக காங்கிரஸ் தலைவர்களை மதிக்காத நிலை அன்று முதல் ஆரம்பித்தது.
கருணாநிதி இரு பெரும் எதிர்ப்பு அலைகளைச் சந்திக்க நேர்ந்தது . கட்சியிலிருந்து வெளியேறிய எம்.ஜி.ஆர் .,அண்ணா தி.மு.க. என்கிற புதுக்கட்சி தொடங்கினார். கருணாநிதியின் அரசியல் கணக்குகள் இவர் விஷயத்தில் தவறாகியது. எம்.ஜி.ஆர். , மக்கள் ஆதரவை பெருமளவில் பெற்றார். அடுத்து அவரை பல வகைகளில் தொல்லைக்கு உட்படுத்தியது எமர்ஜென்சி!
மாநிலங்களில் பலம் வாய்ந்த தலைவர்கள் இருக்கக்கூடாது என்பது இந்திராவின் கருத்து. காமராஜரை ஒதுக்கிய இந்திரா காந்தி , கலைஞரையும் வீழ்த்த முயன்றார்.
கருணாநிதியின் மகன் மு.க.ஸ்டாலின் , முரசொலிமாறன் ஆகியோர் சிறையில் அடைக்கப்பட்டனர். ஆயிரக்கணக்கான தி.மு.க. தொண்டர்களும் சிறையில்!
சென்னை சிறையில் தி.மு.க. தொண்டர்கள் ஒரு காரணமுமின்றி அடித்து நொறுக்கப்பட்டனர். ஸ்டாலின் , மாறன் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். முன்னாள் மேயர் சிட்டிபாபு இந்தத் தாக்குதலில் இறந்தார்.
கருணாநிதிக்கு மத்திய அரசு பல கெடுபிடிகளை விதித்தது. அவர் மேடை ஏறமுடியாத நிலை . ஏன்? கட்சியை கலைக்குமாறு வற்புறுத்தப்பட்டார். சிலர் தி.மு.க.என்கிற கட்சிப்பெயரை மாற்றுமாறு அவருக்கு ஆலோசனை கூறினர்.
ஆனால் கருணாநிதி பாறைபோல உறுதியாக இருந்தார். எதற்கும் அசைந்து கொடுக்கவில்லை. எமர்ஜென்சி ஒழிந்தது. எமர்ஜென்சியின்போது , அவரை நட்டாற்றில் விட்டுவிட்டு ஓடிப்போன கட்சியின் மூத்த தலைவர்கள் , இன்று காணாமல் போய்விட்டார்கள்.
முன்பு கருணாநிதியை எதிரியாக நினைத்த இந்திராகாந்தி , 1980 -ல் மீண்டும் அவருடன் தேர்தல் கூட்டணி வைத்துக்கொண்டார்."கருணாநிதி நம்பிக்கைக்கு உரியவர்" என்று மனம் திறந்து பாராட்டினார். "நேருவின் மகளே வருக ! நிலையான ஆட்சி தருக!" என்கிற கருணாநிதியின் முழக்கம் , தமிழகத்தில் அன்று ஒலித்தது.
கருணாநிதியின் அரசியல் சாதுர்யத்திற்கு இந்த உறவு ஓர் எடுத்துக்காட்டு . எமர்ஜென்சியின் கொடுமைகளில் இருந்தும் , ராஜீவ்காந்தி கொலைப்பழி சுமத்தப்பட்டபோதும் கட்சியை மீட்டு மக்களிடையே மீண்டும் செல்வாக்கை நிலை நாட்டியது இவரது அரசியல் சாதுர்ய வெற்றி.
இன்று சோனியா காந்தியுடன் அவரது கட்சி வைத்திருக்கும் நட்பு , 'காகிதச் சங்கிலி'யால் பிணைக்கப்படவில்லை. பலமான இரும்புச் சங்கிலியால் பிணைக்கப்பட்டிருக்கிறது. சோனியா இவர் மீது பெரும் மரியாதை வைத்திருக்கிறார். மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் , இவர்கள் இருவருக்கும் இடையே தூதுவராக இருப்பதும் உறவு உறுதியாக இருப்பதற்குக் காரணம். இந்த நட்பு , கருணாநிதியின் சாணக்கியத்துக்கு ஒரு பெரும் சாட்சி.
கருணாநிதியின் அரசியலில் ஓர் அரிய விஷயம் என்னவென்றால் ஒரு கட்டத்தில் தமிழகத்தின் எல்லாத்தலைவர்களும் அவரை ஆதரித்திருக்கிறார்கள் என்பதுதான். பெரியார் ஈ.வே.ரா, அவரை ஆதரித்ததில் ஒன்றும் அதிசயமில்லை. பெரியாரிடம் தான் தன் அரசியல் வாழ்வை அவர் தொடங்கினார். மதுவிலக்கை அவை கைவிடும்வரையில் ராஜாஜியின் ஆதரவு அவருக்கு இருந்தது. கலைஞர் ஒருமுறை உடல் நலம் குன்றியபோது , ராஜாஜி அவருக்காகப் பிரார்த்தனை செய்துகொண்டு சீக்கியமதப்படி கையில் அணியும் ஓர் அணிகலனை அனுப்பிவைத்தார். எமர்ஜென்சியை எதிர்த்த சமயம் காமராஜரின் முழு ஆதரவு இவருக்குக் கிடைத்தது. பெரியார், ராஜாஜி , காமராஜர் போன்ற தலைவர்கள் இயற்கை எய்தியபோது, முதலமைச்சர் என்கிற முறையில் முழு அரசு மரியாதை கிடைக்கச் செய்தவர் இவர்.
கருணாநிதிக்கு என்று சில தனிக்குணங்கள் உண்டு . காமராஜருக்குப்பிறகு தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் அறிந்த ஒரே தலைவர் இவர்தான். எந்த ஊருக்குச் சென்றாலும் கட்சித்தொண்டர்களின் பெயர் சொல்லி நலம் விசாரிப்பார். அதுமட்டுமல்ல , மாற்றுக்கட்சியைச் சேர்ந்த பிரமுகர்களையும் அறிந்து வைத்திருந்து நலம் விசாரிப்பார். இலக்கியவாதிகள் எந்தக்கட்சியினராக இருந்தாலும் , அவர்கள் எழுத்துக்களை ரசிப்பவர்.அத்துடன் நேரில் அவர்களைப் பாராட்டவும் செய்கிறார்.
80 வயதைக் கடந்தாலும் கருணாநிதி , சுறு சுறுப்பாகப் பணிபுரிகிறார். அவரது ராஜதந்திரங்கள் எதிர்கட்சியினரை ஏமாறவைக்கின்றன.
இத்தனை விசேஷகுணங்கள்தான் தமிழக எல்லையைத் தாண்டி அவரை டெல்லி அரசியலிலும் கோலோச்சச் செய்கிறது. இதைச் சொல்லும்போதுதான் , இன்னொரு விஷயம் ஞாபகத்துக்கு வருகிறது. உ.பி.யில் பிறந்திருந்தால் கருணாநிதி இந்நேரம் பிரதமராகி இருப்பார் என்பதே அது!

- பத்திரிகையாளர் ராவ் , நாற்பது ஆண்டுகால தமிழ்ப் பத்திரிக்கையுலக அனுபவம் பெற்றவர்.

நன்றி : த சன்டே இந்தியன்

Thursday, May 10, 2007

தமிழ்த்தாயின் தவப்புதல்வனும் தறுதலைப் புதல்வனும்


சட்ட சபை பொன்விழா நெருங்கும் இதுபோன்ற ஒரு நேரத்தில் இந்த விவகாரம் வெடிக்கும் என எந்த திமுக தொண்டனும் நினைத்திருக்க மாட்டான் ஆனால் இதை நடத்தியது திமுக தொண்டர்கள் என நினிக்கும் போது இந்த புல்லுறுவிகளை என்ன செய்தால் சரியாகும் என வன்மம் கொழிக்க நினைப்பு வருவதை தடுக்க முடியவில்லை.


தனது மிக நீண்ட நெடிய அரசியல் சரித்திரத்தில் இப்படி ஒரு தறுதலை பிள்ளையாக பிறந்ததற்கு கலைஞர் ஒரு இரவாவது மனம் வெதும்பி அழுதிருப்பார், தினகரன் ஒரு பத்திரிகை அது கருத்துக்களை வெளியிட தார்மீக உரிமை கொண்டது மக்களின் கருத்துக்களை வெளியிட்ட தினகரனுக்கு பரிசு மூன்று உயிர்கள்.

அப்படி என்ன இல்லாததை எழுதிவிட்டது தினகரன்? கலைஞரின் மகன் என்பதால் மக்கள் மனதில் இருப்பதை இல்லை என்றா எழுத முடியும்? ஆனால் இதை பொறுக்காக அந்த தறுதலை தன்மேல் மண்ணள்ளி[ப் போட்டுக்கொள்ள எடுத்த மாபெரும் முயற்ச்சி இப் படுகொலைகள்.

பத்திரிகையை பத்திரிகையாளர்களை நேசிக்கும் ஒரு தகப்பனுக்கு பிறந்த அழகிரிக்கு புத்தி பேதலித்துப் போனது ஏன்? இதை காரணமாக கொண்டு எதை சாதிக்க நினைக்கிறார்? மக்கள் தன்மேல் மதிப்பு வைக்காமல் போனால் அதை பெருக்க முயற்ச்சிக்காமல் அதைவிடுத்து சொன்னவன் மேல் பாய்வது ஏன்? பத்திரிகைகள் ஊடகங்கள் கட்டி வைத்திருக்கும் தன்மேல் ஆன ஒரு பிம்பத்தை அது பிம்பம் இல்லை உண்மைதான் என நிரூபிக்க எடுத்த முயற்ச்சியா?
இப்படி பல ஏன்கள் ஆனால் அதற்கெல்லாம் ஒரே பதில்தான் இருக்க முடியும்

.....நீதி......

முதல்வர் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டுள்ள நிலையில் தார்மீக பொறுப்பேற்று பதவி விலக வேண்டும் என முழக்கமிட்டுள்ள கொள்கை குன்றுகளுக்கு ஒரு கேள்வி
நடுத்தெருவில் வைத்து பத்திரிகையாளர்கள் தக்குதலுக்கு உள்ளான போது ஒட்டுமொத்த பத்திரிகையாளர்களும் கண்டணம் தெரிவித்த போது உங்கள் அரசுதானே இருந்தது? அப்போது ஒரு நல்ல முன்னுதாரணத்தை ஏற்படுத்தி இருக்கலாமே? ...

இச் சம்பவங்களுக்கு பொறுப்பானவர்கள் தண்டிக்கப் பட வேண்டும் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இருக்க முடியாது. அதற்க்காக மரணதண்டனை,தரவேண்டும் என இப்போதே வாதம் தொடுக்கும் சக வலை நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள் "கொலைக்கு தண்டனை கொலையாகாது"

கலைஞரின் நீண்ட அரசியல் வாழ்வின் உச்சத்தில் இருக்கும் இன்நேரத்தில் இதுதான் உண்மையில் அவருக்கு விடுக்கப்பட்ட, சவால், பாசம் பத்திரிகையாளர்களான ஜனநாயகத்தூண்கள் மேலா, அல்லது அந்த தறுதலை மேலா என முடிவெடுக்க வேண்டும்.
இல்லாவிட்டால் நாளை வரப்போகும் அரசியல் மாற்றம் எதுவாக இருப்பினும் அது நல்ல ஒரு முன்னுதாரணம் இல்லாத குறுட்டு பாதையாகிவிடும், வாரிசு அரசியல் நடத்துகிறார் கலைஞர் என்ற வாதமும் உடைத்தெரியப்பட வேண்டும் இதற்க்கு எதை விலை கொடுக்க வேண்டும் என கலைஞருக்கு தெரியாததல்ல.
திராவிடம், தமிழ், ஜனநாயகத்தின் மேல் நம்பிக்கை இவைதான் கலைஞரை இத்தனை கால்ம் தாக்குப்பிடிக்க உதவியவை. ஏறி வந்த ஏணி, அதை ஒரு அடங்காத பிள்ளைக்காக எட்டி உதைக்கவேண்டுமா அல்லது சரித்திரமாக வேண்டுமா முடிவெடுக்க வேண்டியது கலைஞர்.

அரசின் நடவடிக்கைகள் நீதியோடு இருக்கவேண்டும் என நம்புவோமாக














தாக்குதல் நடத்தியவர்கள் மேல் நடவடிக்கை - முதல்வர்

தினகரன் அலுவலகத்தில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுப்பேன் என்று முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.
முதல்வர் கருணாநிதி நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
கலைஞரின் அரசியல் வாரிசாக யார் வரவேண்டும் என்ற கேள்விக்குத் தரப்பட்ட பதில்களின் விளைவாக இன்றைய தினம் விலைமதிக்க முடியாத 3 வாலிபர்களின் உயிர்கள் நம்மை விட்டும் பிரிந்து சென்று விட்டன. நாம் என்னதான் பேசினாலும், எழுதினாலும் போய் விட்ட அந்த உயிர்களை மீட்டுக் கொண்டு வர முடியாது. அவர்களை இழந்து தவிக்கும் குடும்பத்தினருக்கு ஆறுதலை எவ்வளவுதான் தெரிவித்தாலும், சமாதானம் செய்ய முடியாது. பணிக்குச் சென்று மாலையில் பத்திரமாகத் திரும்புவார்கள் என்ற எண்ணத்தோடு சென்ற செல்வங்கள் மறைந்து விட்டச் செய்தியினை யாரால்தான் தாங்கிக் கொள்ள முடியும். எனவே, நடைபெற்ற அந்த வன்முறைச் சம்பவத்தை வன்மையாகக் கண்டிப்பதுடன், இவற்றுக்குக் காரணமாக யார் இருந்தாலும் அவர்கள் மீது கண்டிப்பாக சட்டப்படியான நடவடிக்கை இந்த அரசினால் எடுக்கப்படும் என்ற உறுதியை நான் தெரிவித்துக் கொள்கிறேன்.
பத்திரிகை அலுவலகத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்காக அந்தத் துறையைச் சார்ந்த நண்பர்கள் எல்லாம் அதனைக் கண்டித்து அறிக்கை கொடுத்துள்ளார்கள். அவர்களின் உணர்வோடு நானும் ஒன்றுபடுகிறேன். எந¢தப் பத்திரிகையாக இருந்தாலும் அதன் மீது தாக்குதல் நடத்துவதை ஜனநாயகத்தின் மீதும், பத்திரிகைச் சுதந்திரத்தின் மீதும் மிகுந்த நம்பிக்கை கொண்டுள்ள நான் எந்தக் காலத்திலும் ஏற்றுக் கொண்டவன் இல்லை. எனவே, நடைபெற்ற செயலுக்காக எனது வருத்தத்தைக் தெரிவித்துக் கொள்கிறேன். தாக்குதல் சம்பவத்தை வன்மையாகக் கண்டிக்கிறேன். இந்தச் சம்பவத்திலே உயிர் இழந்த மூவரின் குடும்பங்களுக்கும் ரூ.2 லட்சம் நிதி அளிக்க வேண்டும் என்று பத்திரிகையாளர்களின் சார்பில் தெரிவித்துள்ள கோரிக்கையினை ஏற்று, முதல் அமைச்சர் நிவாரண நிதியில் இருந்து, 3 குடும்பங்களுக்கும் தலா ரூ.2 லட்சம் வீதம் அளிக்கப்படும் என்று தெரிவித்து கொள்கிறேன். இவ்வாறு முதல்வர் கூறியுள்ளார்

ஜனநாயகப் படுகொலை


தினகரன் அலுவலகத்துக்குள் கலவரம் மூட்டி மூவர் படுகொலை செய்யப்பட காரணமாய் இருந்த ரவுடிகளுக்கு எதிராக இந்த கருப்பு தினம்.

Wednesday, May 09, 2007

101


Tuesday, May 08, 2007

தீராநதி III

Part 1
Part 2
டெல்லியை அடைந்த இந்தியச் சிப்பாய்களும் டெல்லியில் இருந்த இஸ்லாமியச் சிப்பாய்களும் (தீவிரவாத இஸ்லாமைப் போதித்தவர்கள் உட்பட) இந்த எழுச்சிக்கு ஜாபர் தலைமை ஏற்க வேண்டும் என்று வற்புறுத்தினார்கள். வாழ்நாள் முழுக்கக் கவிதைகளிலும், ஆடம்பர வாழ்க்கையில் மட்டுமே காலங்களை கழித்ததோடு, வாழ்நாள் முழுவதும் ஒரே ஒரு யுத்த களத்தைக்கூட கண்டிராத அந்த 80 வயது கிழவனை தலைமை தாங்க, பலவந்தமாகச் சம்மதிக்க வைத்தார்கள். இதற்குப் பிறகு நடந்ததை நாம் 1947_ல் அரங்கேற்றப்பட்ட மதக் கலவரத்தோடும் 2002_ல் குஜராத்தில் அரங்கேற்றப்பட்ட படுகொலைகளோடும் நினைவுகூர வேண்டும். இந்துச் சிப்பாய்களும், இஸ்லாமியச் சிப்பாய்களும், ஆங்கிலேய ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என்று ஈவு இரக்கம் இன்றிக் கொன்று குவித்தார்கள். கிழக்கிந்திய கம்பெனியின் அரசியல் அதிகாரத்திற்கு எதிரான எழுச்சியா? அல்லது ஜாதி மற்றும் மதத்தைக் காப்பாற்றுவதற்கான எழுச்சியா? என்று யோசிக்க வைக்கும் அளவுக்கு நிராயுதபாணியான ஆங்கிலேயர்களும் கொன்று குவிக்கப்பட்டார்கள். பேராசிரியர் இர்பான் ஹபிர் மதம் சார்ந்த அடையாளத்தில் இயங்கும் ஒரு சமூகம், அதன் வடிவத்தில்தானே காலனிய ஆதிக்கத்திற்கு எதிராகத் தன்னை வெளிப்படுத்த முடியும் என்று கேட்கிறார். மதம் அடையாளத்துள் ஒன்றாகத் திகழ்வது தவறில்லைதான். ஆனால், எதற்காக என்ற கேள்வியும் நாம் கேட்க வேண்டியுள்ளது. ஒற்றைப்பரிமாண அதிகாரத்திற்குள் இறுகிக் கொண்டிருக்கும் ஜாதியமைப்பின் தூய்மையைக் காப்பாற்றவும், பிற்போக்கான மத அடிப்படைவாதத்தை உயர்த்திப்பிடிக்க மட்டும் அல்லாமல், பல்வேறு சமூகப் பொருளாதாரக் காரணங்களால் துன்பப்பட்டிருந்தாலும் இவ்விரண்டின் பங்கை நாம் மறுதலிக்க முடியாது. இந்த எழுச்சியின் போதும் இஸ்லாமிய மதத்திற்கு மாறிய ஆங்கிலேயர்கள் தாக்கப்படவில்லை. கிறிஸ்துவ மதத்திற்கு மாறிய முசல்மான்களும் இந்துக்களும் கொல்லப்பட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும், சிப்பாய்களின் இந்த எழுச்சிக்கு சரியான தலைமையும் யுத்த தந்திரமும் இருந்திருந்தால், கிழக்கிந்திய கம்பெனி மிகப்பெரிய தோல்வியைக் கண்டிருக்கும். வகாபிகளின் அடிப்படை மதவாதம் எதுவாக இருந்தாலும், இந்த எழுச்சியில் அவர்கள் ஆற்றிய பங்கு மரியாதைக்குரியது. எழுச்சியில் பங்கெடுத்த சிப்பாய்களின் வருணிக்க இயலாத தியாகங்களுக்கு இடையே, கிழக்கிந்திய கம்பெனியின் சீக்கிய கூலிப்படைகளால் இந்த எழுச்சியும் முறியடிக்கப்பட்டது. இதில் மிக மிக முக்கியமான விஷயம், பல ஆங்கிலேயப் பெண்மணிகள் கொல்லப்பட்டாலும் ஒரே ஒரு ஆங்கிலேயப் பெண்மணி கூட பாலியல் பலாத்காரத்துக்குப் பழியாகவில்லை. ஆனால், உலகநாடுகளுக்கு இடையே ஆங்கிலேய அரசு திரும்பத் திரும்ப அவர்களுடைய பெண்கள் காட்டுமிராண்டித்தனமாய்ச் சூறையாடப்பட்டார்கள் என்ற செய்தியைப் பரப்பியது. கைப்பற்றப்பட்ட டெல்லியில் ஆங்கிலேயர்களின் பழிக்குப் பழி தாக்குதல் என்பது எல்லா வரம்புகளையும் மீறி அரங்கேற்றப்பட்டது. டெல்லி மாநகர் என்ற நகரமே உலக வரைபடத்தில் இருக்கக் கூடாது என்று திட்டமிட்டு அழிக்கப்பட்டது. இன்று நாம் காணும் செங்கோட்டை என்பது 1857_ல் இருந்ததில் ஒரு கால் பகுதிதான் என்பது பெரும் துயரத்தை ஏற்படுத்துகிறது. மற்ற பகுதிகள் எல்லாம் அழிக்கப்பட்டுவிட்டது. டெல்லி நகரத்து மக்கள் மதவேறுபாடு இல்லாமல், ஆண் பெண் குழந்தைகள் என்ற பாகுபாடு இல்லாமல் படுகொலை செய்யப்பட்டார்கள். ஆங்கிலேயரோடு உறவை ஏற்படுத்திக் கொண்ட சில இந்து கந்து வட்டிக்காரர்களைத் தவிர, மற்ற அனைவரும் ஈவு இரக்கம் இன்றித் தாக்கப்பட்டார்கள்.அவர்களுடைய சொத்து பறிமுதல் செய்யப்பட்டது. குழந்தைகளும் பெண்களும் வயோதிகர்களும் இருக்க இடமின்றி வெட்ட வெளிக்கு விரட்டப்பட்டார்கள். (மூன்று வருடம் கழித்து டெல்லிக்குள் நுழைய அனுமதி கேட்டு ஆங்கிலேயப் பேரரசிடம் இஸ்லாமியர்கள் மனு கொடுத்தார்கள் என்றால், நிலைமையின் துயரத்தை நம்மால் உணர முடியும்) இன்று நமக்கு எஞ்சியுள்ள டெல்லி என்பது அந்த நகரத்தின் அழகில் மனதைப் பறிகொடுத்து, அதை எவ்வளவு காப்பாற்ற முடியுமோ அவ்வளவையும் முயற்சித்த சில ஆங்கிலேயர்கள்தான் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

உயிரோடு இருந்தவர்கள் விசாரணைக்கு அழைக்கப்பட்டார்கள். அப்படி அழைக்கப்பட்டவர்கள் தூக்கிலிடப்பட்டார்கள். விசாரணைக்கு அழைக்கப்பட்ட காலிப் விசாரணையின்போது, ''நீ முசல்மானா?'' என்று கேட்கப்பட்டதற்கு, ''பாதி'' என்று பதில் தந்தான். ''இதற்கு என்ன அர்த்தம்?'' என்று விசாரணை அதிகாரி வினாவிய போது, ''நான் மது அருந்துவேன். ஆனால், பன்றிக்கறி திங்கமாட்டேன்'' என்று தந்தான். ''டெல்லிக் கோட்டையை ஆங்கிலேயர்கள் பிடித்த பிறகு நீ ஏன், அறிவித்த பொது இடத்தில் ஆஜராகவில்லை'' என்று கேட்கப்பட்டதற்கு, ''என்னுடைய அந்தஸ்திற்கு என்னை அழைத்து வர நான்கு பல்லக்குத் தூக்கிகள் தேவைப்படுகிறார்கள். ஆனால், அந்த நால்வருமே என்னைத் தனியே விட்டுவிட்டு ஓடிவிட்டார்கள். அதனால்தான் வரமுடியவில்லை'' என்று பதில் தந்தான். (காலிப் உயிர் பிழைத்ததற்குக் காரணம், ஒருமுறை இங்கிலாந்துஅரசியை அவன் புகழ்ந்து எழுதிய கவிதையினால்தான்) காலிப் தன் நண்பனுக்கு எழுதிய கடிதத்தில், ''நான் அனுபவிக்காத வேதனை ஏதேனும் உண்டா? மரணத்தின் வேதனை, பிரிவின் வேதனை, வருமானத்தில் இழப்பு, கண்ணியத்தின் இழப்பு இவற்றோடு செங்கோட்டையில் நடந்த துயரமான சம்பவங்கள். என்னுடைய பல டெல்லி நண்பர்கள் கொல்லப்பட்டார்கள்... நான் எவ்வாறு அவர்களை மறப்பேன். எவ்வாறு நான் அவர்களைத் திரும்பக் கொண்டுவர இயலும்... உறவினர்கள், நண்பர்கள், மாணவர்கள், காதலர்கள் _ இப்போது எல்லோரும் போய்விட்டார்கள். ஒரு நண்பனுக்காகவோ, ஒரு உறவினருக்காகவோ துயரப்படுவது என்பதே மிக மிகக் கடினமானது. என் நிலையை நினைத்துப் பார். நான் பலருக்காகத் துயரப்படவேண்டும். ஐயோ கடவுளே! என்னுடைய பல நண்பர்களை உறவினர்களை இழந்துவிட்டேன். நான் இப்போது இறந்தால் எனக்காகத் துயரப்பட ஒரு ஆன்மாகூட இல்லையே'' என்று தன் துயரத்தை வெளிப்படுத்தியுள்ளான்.

ஆங்கிலேயர் வெற்றிக்குப் பிறகு, இன்று சதாம் ஹ§சேன் தூக்கிலிடப்பட்டது போலவே ஜாபர் நாடு கடத்தப்பட்டார். இது ஒன்றும் பெரிய துயரம் இல்லைதான். (அவரே துயரப்படவில்லை. ஒரு சூஃபி ஞானியைப் போல் அவர் தன் முன் உள்ள வாழ்க்கையைப் பெருந்தன்மையோடு ஏற்றுக்கொண்டார். சிறு குழந்தையைப் போல டெல்லிமாநகரத்தை விட்டு முதல் முறையாக வெளியே வந்து கப்பல், ரயில் போன்றவற்றைப் பார்த்து சந்தோஷப்பட்டார். உயிரோடு இருக்கும் அவருடைய ஒரே மகன் ஆங்கிலக் கல்வி படிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டார்.) ஆனால், எத்தகைய மரபு இந்த மண்ணிலிருந்து நாடு கடத்தப்பட்டது என்பதுதான் துயரமான விஷயம். சிப்பாய்களின் எழுச்சியின் போது தன்னுடைய மாளிகையில் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என்று 52 ஆங்கிலேயர்களைத் தன்னுடைய பாதுகாப்பில் வைத்திருந்தார். சிப்பாய்கள் இவர்களைக் கண்டுபிடித்து எல்லோரையும் வெளியே இழுத்து வந்தார்கள். சிப்பாய்களின் இந்த செய்கையால் ஜாபர் திகைத்துப் போய் நின்றார். சிப்பாய்கள் என்ன செய்ய உத்தேசித்துள்ளார்கள் என்பதை உணர்ந்த உடன், சிப்பாய்களை இந்து மற்றும் முசல்மான் என்று தனித்தனியே நிற்க உத்தரவிட்டார். பிறகு இரு சாரார்களிடமும், நிராயுதபாணியான ஆண்கள், பெண்கள், குழந்தைகளைக் கொல்வதற்கு உங்கள் மதம் அனுமதி தருகிறதா என்று அவரவர் மதகுருமார்களிடம் கேட்டுத் தெரிந்துகொள்ளுமாறு வேண்டினார். ''இவர்கள் கொல்லப்படுவதை என்னால் அனுமதிக்க முடியாது'' என்றார். சிப்பாய்களின் மனம் இரங்கா நிலையைக் கண்டு ஜாபர் அழத்தொடங்கினார். அப்பாவிகளான இவர்களுடைய உயிரைப் பறிக்க வேண்டாம் என்று வேண்டிக்கொண்டார். ''எச்சரிக்கையாய் இருங்கள். இந்தக் கொடூரமானச் செயலைச் செய்து முடித்தால் கடவுளின் சாபம் நம் எல்லோர் மீதும் விழும். இந்த நிராயுதபாணிகளை எதற்காகக் கொல்லவேண்டும்'' என்று கெஞ்சினார். ஆனால், அவர்கள் கொல்லப்பட்டார்கள். இத்தகைய மரபுதான் ஆங்கிலேயர் களால் நாடு கடத்தப்பட்டது. காலிப்பின் கண்ணீர் மட்டுமே இங்கு மிஞ்சியிருந்தது..

Saturday, May 05, 2007

சாரு நிவேதிதாவும் சரோஜா தேவியும்


சாரு நிவேதிதாவும் சரோஜா தேவியும்
பின் நவீனம், முன் நவீனம் கட்டுடைத்தல், நான் லீனியர், ரியலிஸம், சர்ரியலிசம், புதுக்கவிதை, புண்ணாக்கு, புல், பூண்டு,மலை,மழை,இலை,தழை,காடு,கருப்பு,காதல்,கன்றாவி.கஞ்சன் கருமி,கவிதை.புறநானூறு,புத்தம்புதுசு..........

என்ன ஒன்னும் புரியலையா? இப்படித்தான் இருந்தது அவரின் ஜீரோ டிகிரி....ஒரு வேற்றுகிரகவாசி நாவல்?!..
முதலில் ஏதோ எழுத்துப் பிழை அல்லது பக்கம் தவறு என்று நினைத்தேன். பிறகுதான் தெரிந்தது நாவல் அப்படித்தான் இருக்குமாம். அதுகூட என்னமோ நான் லினியரோ நீலினியரோ போட்டிருந்தாங்க இப்டி எழுதறது இப்ப ஸ்டைலாம். அப்பறம் அடுத்த பக்கம் பொறட்டுனா.... அங்கதான் வச்சிருந்தார் குண்டு..

நிசமாச் சொல்லுரன் நானும் சின்ன வயசில (ஒரு பதினஞ்சு வயசு?) ஊட்டுக்கு தெரியாத மைசூர் பதிப்பகத்தோட சரோசாதேவி கதையெல்லாம் படிச்சிருக்க்னுங்க.. அதுல கூட இம்மா விசயம் மில்லிங்க. தலிவரு சும்மா பச்ச மஞ்ச செவப்பு நீலம்னு உட்டு பேனாவுல இன்க்குக்கு பதிலா வேற எதையோ ஊத்தி எழுதிருந்தாருங்க..
அப்பத்தான் வந்துது கோவம் அவருமேல யில்லிங்க அந்த புக்க வாங்க சொல்லி தினந்தினம் அரிச்ச எம்பிரண்டு விசயன் மேல நேரா வூட்டுக்கு போயி கேட்டங்க ஒரு கேள்வி ....." நூறு ரூவா போட்டு இத வாங்குனத ஒரு பொட்டிக்கடையில பத்துருவாய்க்கி வாங்கிற்கிலாமேன்னு" அதுக்கு அவன் "போடா டுபுக்கு நீஏண்டா இங்கிலீஸ் படத்த பாத்தவனாட்டம் டைட்டில்ல இருந்து பாத்த ஒரு பத்து பக்கம் கழிச்சு பாருடான்னான்" நானும் பாத்தங்க ஆங் இப்பகொஞ்சம் பரவால்ல ஏதோ ஒன்னு ரண்டு பத்தி புரிஞ்சதுங்க ஆனா மொத்தமா யோசிச்சா ஒரு எழவும் புரியிலங்க. என்னடா இது " அந்தோன் சேகவ், லேவ் தல்ஸ்தோய். அலக்ஸாந்தர் குப்ரின், அலக்ஸேய் தல்ஸ்த்தோய் வல்லி கண்ணன், சுசாதா.....பாலகொமாரு எல்லாரும் புரிஞ்சாங்க இவரு மட்டும் புரியிலயான்னு எனக்கு ஒரே கொழப்பமுங்க சரி நம்புளுக்குத்தான் புரிலன்னு எங்க மாமா ஒருத்தரு இஞ்ஜினீரு அவரு இந்த இலக்கியம்லாம் படிப்பாரு அவருகிட்ட தந்தனுங்க. அவரும் சரி படிக்கிரேன்னு வாங்குனாருங்க மறுநா பாத்து கேட்டதுக்கு சொன்னாரு" ஒங்க அக்காகாரி அந்த புத்தகத்த பாத்துட்டு இந்த வயசில இந்தமாரி புத்தகம் படிக்கிரியான்னு சொல்லி வாங்கி கிழிச்சு போட்டுட்டா மாப்ள நீ வேற வாங்கிக்கோன்னாறு. ஆஹா இவரு முதலுக்கே வேட்டு வக்கிறாறேன்னு போயி விசயங் கிட்ட சொன்னன்னுங்க அதுக்கு அவன் மலிவு வெலையில அதே புக்க ஜீ.ஏ. (அதாங்க க்ரைம் நாவல் அசோகன்) போடுராரு அத வாங்குவோம்னான். சரின்னு அப்ப எங்க ஊருக்கு பக்கத்தில பெரம்பலூர்ல புத்தக கண்காட்சி போட்டுருந்துது அங்க போயி தேடிப்புடிச்சி சீரோ டிகிரியும் அப்பறம் கோனல் பக்கமும் வாங்கியாந்தமுங்க சரி மின்னயே சீரோ டிகிரி புரில இப்ப கோனல் பக்கத்த படிப்பமுன்னு எடுத்தா பூராம் அவுரோட காதல் வெளையாட்டு அனுபவங்க. என்னடா இதுன்னு அப்ப அப்ப கொஞ்சம் நல்ல கட்டுரையும் எழுதிர்ந்தாரு ஆனா எனக்கு ஒன்னும் புரிலிங்க.அதுல தான் இந்த கும்போனத்துல புள்ளைங்க நெருப்புல செத்து போச்சே அதபத்தி எழுதிர்ந்தாருங்க அதுல ஒருஎடத்தில ஒரு சினிமா ஹன்னிபால் பத்தி எழுதிருந்தாருங்க ஆனா நடிச்சவ்ரு பேர தப்பா போட்டுட்டாரு. அவ்ரு பேரு அந்தோனி ஹாப்கின்ஸுங்க இவருதான் மாத்தி போட்டாரு. அத ஏம்பிரண்டுகிட்ட காட்டுனதுக்கு அட போடா ஏதோ ஒரு தப்பு நடந்துபோச்சி அத சொல்ல வந்துட்ட மத்தது நல்லாருக்கான்னான் நாஞ்சொன்னன் "அடே கோவத்த கிண்டாதடா எனக்கு அவுரு எழுதுனதுல இதான்டா புரிஞ்சுதுன்னு" சொன்னனுங்க.. அவன் ஒரு வார்த்த பேசலியே..இப்பயும் என்னமோ சாருஆன்லைனுன்னு ஒன்னுல எழுதுராரு இப்பவும் அதே ரஸ லீலா பாகம் இருவதுன்னு தொடர்ச்சியா அதே சொந்தக்கதைங்க ...இப்பலாம் அந்த வலைக்கே போரதில்லீங்க எதுக்கு வம்பு நம்பளே துபாய்ல இருக்கம் எதாவது ஒன்னுகெடக்க ஒன்னு ஆயிடிச்சின்னா என்ன பன்றது

அப்பறம் எம் பிரண்டு இப்பவும் அவர படிக்கிரானுங்க.....
அவரு நம்ப கமலகாசன பத்திஎழுதிருக்காரு பார்ரான்னு சொன்னான் எனக்கு கமல்னா புடிக்குமுங்க நம்ப ரசினி ராம்கிக்கு ரசினி மாறி எனக்கு கமலுங்க

சரின்னு பாத்தா விருமாண்டியை முன்வைத்துன்னு ஒரு கட்டுரங்க அதுல நெரயா லத்தீனு, பெரான்ஸு, ஈரானு இப்படி பலநாட்டு படத்தியும் போட்டு விமர்சனமுங்க. என்ன பன்றது அவரு நிலம அப்பிடி எனக்கு எப்பிடி சாருவ புரிலியோ அதே மாறி சாருவுக்கு கமல் படம் புரிலங்க,
சரி கொரியாகாரன் எதோ தப்பான படத்துக்கு விருது கொடுத்துட்டான்னு விட்டுட்டனுங்க
இப்பிடிதாங்க அவுருக்கும் நமக்கும் ஒத்தே வர்ல. இதுல இவரு இந்தியவுல இருக்க எல்லா எழுத்தாளர். நடிகர்,கவிஞர்.பத்தியும் விமர்சணம் பன்னி எழுதுவாருங்க ஆனா அவரப்பத்தி எழுத ஆருமில்லீங்க. நானே எனக்கு அவரு எழுதறது புரிலன்னுதாங்க எழுதுரன் அவர ஒன்னும் சொல்லலீங்க.
இதுவேற அனானிமசூ ,ஈ,கொசுன்னு பின்னூட்டம் போட்டா என்னாபன்றது.சரி இம்பூட்டு நாளா சும்மா இருந்துட்டு இப்ப ஏன்டா எழுதுரண்னு கேக்கரீங்களா.... நான் இப்பதாங்க சும்மா இருக்கன் படிச்சுட்டு எழுதுங்க......


Thursday, May 03, 2007

தீராநதி II

Part 1
பாடப்புத்தகத்தில் முகலாயப் பேரரசின் கடைசி மன்னன் பகதூர் ஷா என்று படித்ததைத் தவிர, வேறு எதுவும் நினைவில் இல்லை. ஆனால், பகதூர் ஷா ஒரு கவித்துவ உள்ளம் கொண்ட கவிஞனாகவும் மதச்சார்பற்றவனாகவும் சூஃபி ஞானியாகவும் ஆட்சி புரிவதற்குத் தகுதியற்றவனாகவும் தன் நம்பிக்கைகளைப் பேரரசன் என்ற அதிகாரத்தின் மூலம் செயல்படுத்த முடியாதவனாகவும், ஒரு பெரிய சாம்ராஜ்ஜியத்தின் வீழ்ச்சியைக் கண்ணெதிரெ பார்த்துக் கொண்டிருந்தவனாகவும்... இப்படி படிக்கும்போது கிரேக்க துயர நாடகத்தின் கதாபாத்திரமாகவே நம்முன் விரிகிறான். இந்துக்களைக் காப்பாற்றுபவனாகவும், தீவிரவாத இஸ்லாமியர்களின் கோரிக்கை

ஓரு சமயம் ஓர் இந்து, ஜாபரின் பிரதம மந்திரியான ஹப்பிம் ஹஸன்உல்லாகான் மூலமாக முசல்மானாக மாறவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தபோது, அந்த இந்துவை அரண்மனையில் இருந்து வெளியேற்றுமாறு உத்தரவிட்டான். (பக்கம் 81) மற்றொரு சமயத்தில், 200_க்கு மேற்பட்ட முசல்மான்கள் அரண்மனைக்கு முன்கூடி ஈது பண்டிகை அன்று பசுவதை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தபோது, முசல்மான்களின் மதம் பசுவதையை வேண்டி நிற்கவில்லை என்று பதில் தந்தான். (பக்கம் 81) சன்னி பிரிவைச் சேர்ந்த ஜாபர், ஷியா பிரிவினரின் பண்டிகையான முகரத்தை அரண்மனையில் கொண்டாடியபோது (சன்னி ஷா வாலியுல்லாக்கான் பார்வையில் இது மாபெரும் குற்றம்) ஜாபர், ஷியா பிரிவுக்கு மாற்றம் கொள்கிறார் என்ற வதந்தி பரப்பப்பட்டது. இந்த வதந்தியின் அடிப்படையில் டெல்லியைச் சேர்ந்த பல உலமாக்கள் பேரரசரைச் சந்தித்து இந்த வதந்தி உண்மை என்றால் அவரை ஒதுக்கிவைக்கவும் அவரது ஆட்சி அதிகாரமற்றது என்று வெள்ளிக்கிழமை பிரார்த்தனையின் போது பிரகடனம் செய்யவும் தயாராக இருந்ததாக மிரட்டினார்கள். இதில் துரதிருஷ்டம் என்னவென்றால், 1850 வாக்கில், ஜாபர் பின்பற்றிய சூஃபி மரபு என்பது காலாவதியானதாகவும் உபயோகமற்றதாகவும் மாறிப்போனது. உலமாக்களின் அதிகாரம் வலுப்பெற்று திகழ்ந்தது. கிறிஸ்துவ மதத்தைப் பரப்பும் வெறியில் உள்ள பாதிரிமார்களின் பார்வையில், இஸ்லாமுக்கு மாறிய ஆங்கிலேயர்கள் எவ்வளவு கீழ்த்தரமாகப் பார்க்கப்பட்டார்களோ, அதே பார்வையில்தான் உலமாக்களால் ஜாபர் பார்க்கப்பட்டார். (டெல்லி உலமாக்களின் அடிப்படை வாதத்தை உயர்த்திப் பிடித்ததில் பஞ்சாப்பைச் சேர்ந்த இஸ்லாமிய வர்த்தகர்களுக்குப் பெரும் பங்கு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இதே பஞ்சாப்பைச் சேர்ந்த சீக்கியக் கூலிப்படைகளால்தான் எழுச்சியுடன் சிப்பாய்கள் நசுக்கப்பட்டார்கள் என்பது சுவாரஸ்யமான தகவல்) ஜாபரின் அரண்மனை மருத்துவரான சாமன்லால் கிறிஸ்துவ மதத்திற்கு மாறியபோது, உலேமாக்கள் அவரை அரண்மனையில் இருந்து நீக்குமாறு கோரிக்கை வைத்தார்கள். ஆனால், ஜாபர் மருத்துவரின் மத நம்பிக்கை என்பது அவரது தனிப்பட்ட விஷயம் என்றும் அதில் அவர் அவமானப்பட ஏதும் இல்லை என்றும் பதில் தந்து அவரை அரண்மனையில் இருந்து நீக்க மறுத்தார். (திரு. அத்வானியிடம் இதைப் பற்றி கேட்டால், பாபர் மசூதியை இடிக்கும் நோக்கோடு அவர் மேற்கொண்ட டொயோட்டா வண்டியை (ரத யாத்திரை) ஓட்டியவர் ஒரு முசல்மான்தான் என்று பெருமைகொள்ள வாய்ப்புண்டு)
மேலே சொல்லப்பட்ட எல்லா காரணங்களையும் மீறி,/ என் வழிபாட்டின் நோக்கம் / புலன் உணர்வுகளுக்கு அப்பால் உள்ளது. / திசைக்காட்டியில் காபாவைக் காணக் கூடியவன் பற்றி சொல்வதற்கு ஏதும் இல்லை.என்று எழுதிய காலிப் என்ற மிகப் பெரிய கவிஞன் ஜாபர் அரண்மனையில் இருந்தான். (பக்கம் 79)சொர்க்கத்தில் அந்திசாயும் பொழுதில் குரானில் சொல்லப்பட்டிருக்கும் தூய்மையான மதுவை உண்பது உண்மைதான். ஆனால், குடிகார கும்பலின் அசாதாரணமான சத்தங்களுக்கு இடையே மது மயக்கத்தில் நண்பர்களோடு நீண்ட நடை சொர்க்கத்தில் எப்படிப் போக முடியும்? போதை ஏறிய மழைக்கால மேகங்களை அங்கு எங்கு காணமுடியும்? இலையுதிர்காலம் இல்லாதபோது, கார்காலம் எப்படித் தோன்ற முடியும்? அங்கு எப்போதும் அழகிய தேவதைகளைக் காணமுடியுமா? பிரிவின் துயரமும் சேர்க்கையின் குதூகலமும் அங்கு சாத்தியமா? முத்தம் கொடுக்கும் தருணத்தில் ஓடிப்போகும் பெண்களை அங்கு காண முடியுமா? (பக்கம் 79/80) என்று எழுதிய காலிப்பும், இந்தக் கவிஞனைத் தன் அரண்மனையில் வைத்திருந்த ஜாபரும் எத்தகைய கவித்துவ உள்ளம் கொண்டவர்கள் என்று நாம் புரிந்து கொள்ளலாம். (இந்த மரபில் இருந்து வந்தவன்தான் சாதத் ஹசன் மண்ட்டோவா? அதனால்தான், காலிப்பிற்குப் பிறகு கவிதை இல்லை, மண்ட்டோவிற்குப் பிறகு சிறுகதை இல்லை என்று மண்ட்டோ எழுதினானா?). மதம் பற்றியும் கடவுள் பற்றியும் ஜாபர் அவையில் எத்தகைய சிந்தனை போக்கு நிலவியது என்பதற்கு காலிப் மட்டுமே சாட்சியாக போதும். (நம் சங்கக் கவிதைகளில் காணக்கூடிய நேரடித்தன்மையை காலிப்பின் கவிதைகளில் காண முடிகிறது). இதன் தொடர்ச்சியாக இஸ்லாமியப் பள்ளியான மதரஸா அன்று எத்தகைய நிலையில் இருந்தது என்று அறிந்து கொள்ளும் போது, ஒரு இந்துவின் பொது புத்தியில் இஸ்லாமியர்கள் பற்றிய பார்வை எப்படிச் சாத்தியமானது என்று யோசிக்க வேண்டியுள்ளது. இந்து மதத்தின் சீர்திருத்தச் சிந்தனையாளரான இராஜாராம்மோகன்ராய், இஸ்லாமிய பள்ளியான மதரஸாவில் படித்த மாணவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது. (பக்கம் 81) ஓர் ஆங்கிலேய அதிகாரி, ''உலகில் உள்ள எந்தச் சமூகத்தினரை எடுத்துக் கொண்டாலும், இந்தியாவில் உள்ள முகமதியர்களின் வாழ்க்கையில் கல்வி இணைந்து உள்ளது போல் எங்கும் காணமுடியாது என்கிறார். (பக்கம் 95) அவரே மேலும், ''20 ரூபாய் சம்பாதிக்கும் ஒரு அலுவலர், அவருடைய மகன்களுக்கு, ஒரு பிரதம மந்திரி தன்னுடைய மகன்களுக்குக் கொடுக்கும் கல்விக்கு ஈடான கல்வியைக் கொடுக்கிறார். நம்முடைய கல்லூரிகளில் கிரேக்கம் மற்றும் லத்தீன் மூலம் நாம் கற்பதை எல்லாம் இவர்கள் அரபி மற்றும் பாரசீகம் மூலம் கற்கிறார்கள். அதாவது இலக்கணம், தத்துவம், தர்க்கம்... (இவர்கள்) சாக்ரடீஸ், அரிஸ்டாட்டில், ப்ளாட்டோ... பற்றி சகஜமாகப் பேசுகிறார்கள். இந்தியாவில் விநோதம் என்னவென்றால், வாழ்க்கையில் எந்த மொழி மிக அதிகமாக உபயோகிக்கப்படுகிறதோ, அதில்தான் இவர்கள் பாடம் கற்கிறார்கள்'' என்றும் சொல்கிறார். டெல்லி மதரஸா கல்வி என்பது மிகத்தொலை தூரத்தில் இருந்துகூட மாணவர்களைக் கவர்ந்தது. ஜாபர் ஒரு கவிதைப் புத்தகத்தைத் தொகுத்து வெளியிடுகிறார். அதில் அவருடைய கவிதை முதல் ஒரு கூலித் தொழிலாளியின் கவிதை வரை சேர்க்கப்பட்டுள்ளது. இத்தகைய ஒரு பின்னணியில்தான் கிழக்கிந்திய கம்பெனியின் பெரும்பாலான மேல்ஜாதி இந்துச் சிப்பாய்கள், முகலாயப் பேரரசரான பகதூர் ஷாவின் தலைமையை வேண்டி டெல்லி நோக்கிக் கிளம்பினார்கள். (நிலப்பிரபுத்துவ சுயமோகத்தில் உள்ள இந்துத்துவ சக்திகளால் இந்த உண்மையை ஏற்றுக்கொள்ள முடியாது.)