Sunday, September 30, 2007

இந்துத்துவ வியாதிகளே-அழிவை சந்திக்கப் போவது நீங்களே !!

சேதுசமுத்திர திட்டம் எனப்படும் 150 ஆண்டுகால கனவு திட்டம் செயல்வடிவத்திற்கு வந்ததைத் தொடர்ந்து, நாசாவின் புகைப்படைத்தை இராமர் பாலம் என்று சொல்லி கதை கட்டி பார்பனிய பாசிச வாதிகளான இந்துத்துவ வாதிகள், அதனை எப்படியும் தடுக்க முயன்று முடியாமல் போகவே கலைஞரின் பேச்சை தொடர்ந்து கொலை மிரட்டல் விடும் அளவிக்கு சென்று இருக்கின்றன. இந்தியாவின் புதிய பார்பனிய பின்லேடன் இராம் விலாஸ் வேதவாந்தி, இந்து இளைஞர் அமைப்பை தூண்டுவிட்டு 'பகவத் கீதை' என்னும் புனித(?) நூலில் சொல்லப்பட்டுள்ள தண்டனையை, ஷங்கரின் அன்னியன் ஸ்டைலில் நிறைவேற்றச் சொல்லி இருப்பதாக தகவல் வருகிறது. கலைஞரின் ஒரு மயிரையும் புடுங்க முடியாது என்பது வேறு விசயம்.

இந்த திட்டம் நிறைவேறினால் திட்டமிட்டபடி தமிழகம் பயன் பெறும். தூத்துக்குடி தொழில் வளர்ச்சி பெருகும். பலருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். இன்னும் பல நன்மைகள் கிடைக்கும். நிறைவேறாமல் போனால்,

தமிழகம் மட்டுமே பெரியார் வழியில் பார்பன விஷப்பற்களை பிடுங்கி எறிந்து அரவங்களின் ஆரவார சீற்றத்தை அடக்கியிருக்கிறது. இந்த திட்டம் நிறைவேறாமல் போனால் பார்பனிய பயங்கரவாதிகளின் சூழ்ச்சிகளை இந்தியா முழுவதும் உள்ள பிற்படுத்தப்பட்ட மக்களும், பழங்குடியினரும் உணர்ந்து கொள்வார்கள். முன்பு தமிழகத்தில் நடந்தது போலவே இந்திய அளவில் பூனூல் அறுப்பு போராட்டங்கள் நடந்து பார்பனர்கள் செல்வாக்கு இழக்கும் நிலைக்கு ஆளாவார்கள். பார்பனியத்தின் பழமைவாதத்தை உலகமே கண்டு வியப்படைந்து கைகொட்டி சிரிக்கும். பார்பனியம் அழியப்போகும் பொன்னாள் எது என்றால் அது சேதுசமத்திர திட்டத்தை முடக்கிப் போடும் நாள்தான்.

சேது கால்வாய் திட்டம் கிடைத்தால் நமக்கு நன்மை. இல்லையென்றால் பார்பனியம் தம் தலையில் தானே மண்வாரிப் போட்டுக் கொண்டு கொட்டம் அடக்கப்பட்டுவிடும்.

இந்துத்துவ வியாதிகளே, பார்பனிய ஆதரவாளர்களே செயல்படுங்கள், நீங்கள் எப்படி செயல்பட்டாலும் முடிவில் அழிவை சந்திக்கப் போவது நீங்களே.

Thursday, September 27, 2007

தம்பி, அய்யனார், குசும்பன், அபிஅப்பா, மகேந்திரனாகிய நான் மற்றும் குசும்பன் - ஒரு பின் நவீனத்துவ பிதற்றல்


முடிவற்ற சூனிய பிரதேசத்தில் நிலைகொள்ளாமல் தவித்திடும் என் வாழ்வின் எல்லா பிராந்தியங்களும் தன் இருத்தலை சுய விளம்பரிப்பதற்க்காக ஏதாவது ஒரு சிறு தனலை பற்றமுடியுமா என எண்ணிய படியே காலையில் கண்விழிக்கும் எனக்கு ஏதாவது ஒரு கடை வாசல் திறந்தே கிடக்கிறதுதான். தன் எல்லா வாழ்வின் சூனியங்களையும் எதாவது ஒரு கால வெளியற்ற இருட்டுப் புள்ளியில் ஒளித்து வைத்துவிட முடியாதா என ஏங்கும் முப்பத்து சொச்சம் விளிம்பு நிலை மாந்தரின் எல்லா விளக்கங்களும் தனது வழியின் இரண்டு கண்களை மட்டுமாவது சிறக்க சிலாகித்த படியே காற்றும் அசையாத கடை மடு வழியே கால்கள் தள்ளாட நடக்கிறார் அய்யனார். எதிரே மார்புக் கச்சை பிதுங்க மது போதை கொண்டுவரும் விடுதி நடனப் பெண்ணின் கால் கொலுசில் சிக்கி சின்னாபின்னமானது தெரியாமலேயே எதாவது ஒரு பற்றுக்கிளை கிடைக்காதா என பின்பக்கம் பார்த்தே யோசித்த படியும் அடுத்த பெக்கை ஊற்றிய படியே மாலன் அரசியல் என்ன பெரிய மயிரா என்றபடியே அவரின் இலங்கா விருது பற்றி விசாரணைகளை அள்ளித் தெளித்த படியே இருக்கும் அய்யனாரின் கரம் பற்ற தம்பியின் தகிடுதத்தங்கள். விளிம்பின் முடிவில் வாழும் மாந்தர் எல்லாம் என் பக்கம் பாருங்கள் என்றபடியே பின் நவீனத்துவ வாதியாய் ஆக என்ன கொடுமையெல்லாம் செய்ய வேண்டும் என இல்லாத மாணவன் ஒருவனுக்கு பாடம் எடுத்த கோபம் கண்களில் பல்விளக்கி கொப்புளிக்க அடுத்த பாட்டில் பீரையாவது அரை நிம்மதியோடாவதாவது குடிக்க விடுவானா குசும்பன் என்ற பழைய ஞாபங்களை கிளறியபடியே ஈரான் பயனம் பாவனா காதல் என ஏதாவது ஒன்றை எழுதியபடியே என்ன கருமம்டா இந்த வலைப்பதிவு என எங்கும் கிடக்கும் சாக்கடை பன்றிகளை ஒதுக்க முடியாமல் குச்சி கொண்டு விரட்டிடும் கொலைவெறீப்பதிவர்களுக்கு கொஞ்சமாவது ஆசுவாசம் கிடைக்க வழிசெய்வோம் என இந்த வார அபி அப்பா நட்சத்திரம் இந்த கொடுமைகள் எல்லாம் இங்கேதான் நடக்க வேண்டுமா என் எண்ணிய படியே நைட் ஷிப்ட்டில் வேலை பார்க்கும் கோபி என பின் நவீனம் பீரா" யப்பட்ட ஒரு முன்னிரவு வேளையின் மகேந்திரன் சிறுநீர்க்குழாயில் கல்லாமே யாருக்கவது தெரியுமா என எல்லாரின் வயிற்றிலும் இருக்கும் எதாவது ஒன்றைப் பற்றி கேள்விகள் கேட்டபடியே வந்த அபி அப்பா அடர் கானகப் புலி அய்யனாரங்கே இருப்பதை பார்த்து ஜெர்க் விட்ட படியே மாது கொண்டு வந்த மதுவில் மூழ்க எத்தணிக்கும் அகோர காலை வேலையின் முற்பகுதிக்குப் பின்வந்த ஏதாவது ஒரு சிறிய இடைவேளையின் மைய்ய வெளிச்சம் மாலையாய் மங்கும் ரசங்கள் நிரப்பப்பட்ட ராத்திரிகளின் மிச்சம் இருக்கும் காலிப் புட்டிகளையும் காய்ந்த பரோட்டாக்களையும் கொஞ்சமாய் மிச்சம் இருந்த ஊருகாய் பாட்டிலையும் கைவைத்து துடைத்து நக்கியபடியே மதுவிடுதிப் மங்கையின் கொங்கைகளில் கொஞ்சம் கிக்காகி கிறங்கிக் கிடந்த அய்யனாரையும் எழுப்பி வருவதற்குள் ஏறியிருந்த ஒரு பாட்டில் பீரும் அதன் ஒத்துவராத சுவையும் பினாவானா ஆக விடாமல் மற்றவர்கள் செய்த மது களியாட்ட கோப வெறியில் கொஞ்சம் கொலை வெறி கொண்ட தம்பியின் கடைசி வரியாக வந்த வாந்திக் கவிதையில் ஹைக்கூவும் பின்நவீனமும் மரபுக் கவிதையும் சிலாக்கியங்களும் ஜெய மோகனும், மிலோஸ் போர்மெனும், தி மேன் இன் தி மூன் படமும் வின் டாக்கர்சும் அகிரோ க்ரோசாவும் சாரு நிவேதிதாவின் நான் லீனியரும் இன்னும் மிச்ச சொச்சம் இருக்கும் இலக்கிய முகமூடிகளும் தூக்கு போட்டு தொங்கும் முன்னரே விடுதிக் காவலாளியின் இருப்பை சமாளிக்க முடியாமல் என்ன கருமத்தியாவது செய்ங்கடா என உளறிய படியே இருட்டில் கரைந்து போனது " பின் நவீனத்தினை இன்றைக்காவது விளக்குவார்களா என ஆவலோடு வந்திருந்த என் கேள்வி"

இப் பதிவுக்கு காரணமான தம்பியின் கொலைவெறிப் பதிவு இங்கே யாராவது என்னை கோபித்தால் அங்கே போய் கும்மவும்

Tuesday, September 25, 2007

தலித் மக்கள் மீது ஞாநிக்குத்தான் எத்தனை பரிவு, எத்தனை பாசம்.

தந்தை பெரியார், பார்ப்பனர்களை, வைதீகப் பார்ப்பனர் என்றும், லௌகீகப் பார்ப்பனர் என்றும் இரண்டு வகையாகப் பிரிப்பார். ஞாநி ஒரு லௌகீகப் பார்ப்பனர். அவர் அரசியலை அலசுவார், சமூகநீதி பேசுவார், அறிந்தும் அறியாமலும் இருக்கும் பாலியல் உணர்வுகளைப் பாடமாய் நடத்துவார், எங்கு சென்றாலும், தன் முற்போக்கு முகத்தை மறக்காமல் எடுத்துச் செல்வார்.

ஆனால், அவருக்குள் புதைந்து கிடந்த திராவிட இயக்க எதிர்ப்பு, கலைஞர் எதிர்ப்பு போன்றவை பூனைக்குட்டி வெளியே வருவது போல் இப்போது வெளிவரத் தொடங்கி விட்டன.

முரசொலி மாறனுக்கு அஞ்சல்தலை வெளியிட்டது பற்றி எழுதுகையில், தேசிய விலங்குகளுக்கு எல்லாம் கூட அஞ்சல்தலை வெளியிடப்படும்போது மாறனுக்கும் வெளியிட்டால் என்ன என்பது போல் குறிப்பிட்டிருந்தார். நெஞ்சு நிறைய அப்பிக்கிடக்கும் பகையும், வன்மமும் அந்த வரிகளில் அப்படியே வெளிப்பட்டன.

கண்ணகி சிலையைக் கரடி பொம்மையோடு ஒப்பிட்டுத் தன் மேதாவித் தனத்தை ஒருமுறை வெளிப்படுத்தினார். இப்போது ஆனந்த விகடனில், ஸ்டாலினுக்கு இருக்கும் எல்லாத் திறமையும் பரிதி இளம்வழுதிக்கும் உண்டுதானே என்று எழுதி, தி.மு.க.விற்குள் சிண்டுமுடியும் சின்னத்தனத்தில் ஈடுபட்டிருக்கிறார்.

என் குடும்பத்தில் தலித் மருமகள் இருக்கிறார் என்பது போன்ற வெற்று அறிக்கைகள் விடுவதைக் கைவிட்டுவிட்டு, எங்கள் கட்சியின் சார்பில் ஒரு தலித் முதலமைச்சராக்கப்படுகிறார் என்று கலைஞர் அறிக்கைவிட வேண்டுமாம், ஒரு தலித் முதலமைச்சர் ஆக வேண்டும் என்று ஞாநி கனவு காண்கிறாராம். அடடா, தலித் மக்கள் மீது ஞாநிக்குத்தான் எத்தனை பரிவு, எத்தனை பாசம்.

அண்மையில் அவருக்கு ஆனந்தவிகடனில் ஒரு பெரிய பொறுப்பு கொடுத்துள்ளதாகக் கேள்விப்பட்டேன். அந்தப் பதவி எல்லாம் எனக்கு வேண்டாம், யாராவது ஒரு தலித் நண்பருக்குக் கொடுத்துவிடுங்கள் என்று அவர் சொன்னதாகத் தெரியவில்லை. கனவெல்லாம், கலைஞரைப் பற்றி மட்டும்தான் போலும். குறைந்த பட்சம் ஜெயலலிதாவிடம் இருந்தும் அப்படி ஓர் அறிக்கை வர வேண்டுமென்று அவர் கனவு கண்டிருக்கலாம்.

தங்கள் நெஞ்சில் பட்டதை அப்படியே சொல்லிவிடும் முரடர்கள்தான் நாமெல்லாம். உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசும் பக்குவமெல்லாம் நம்மில் பலருக்கு இன்னும் கைவரவில்லை. பாருங்கள். அது ஞாநிக்கு எவ்வளவு அழகாய்க் கைவருகிறது என்று!

தி.மு.க. விற்குள் உட்கட்சி சண்டையும், குழப்பமும் வரவேண்டும் என்னும் தன் ஆசையை நேரடியாகச் சொல்லும் முரட்டுத்தனம் அவரிடம் இல்லை. பரிதி முதலமைச்சராக வரவேண்டும் என்று கனவு காண்பதாகச் சொல்லிவிட்டால், பிறகு அதை எதிர்ப்பது கடினம். எதிர்ப்பவர்களைத் தலித் விரோதி என்று சொல்லிவிடலாம், ஞாநியின் கனவு பலிக்கும் வரையில், தி.மு.க.விற்கும் தலித் விரோதக் கட்சி என்று முத்திரை குத்திவிடலாம்.

இப்படிப் பல்வேறு சித்து விளையாட்டுகளை ஞாநி அந்தக் கட்டுரையில் செய்து பார்த்திருக்கிறார்.

ஆனாலும், வரலாறு நமக்கு ஓர் உண்மையைச் சொல்கிறது. திராவிட இயக்கத்தில் தலித் தோழர்களுக்கு எப்போதும் இடம் இருந்திருக்கிறது என்பதே அந்த உண்மை. மீனாம்பாள், சிவராஜ், தொண்டு வீராசாமி, சத்தியவாணி முத்து தொடங்கி இன்று வரை அதன் தொடர்ச்சியை நம்மால் காணமுடியும். அண்மையில் கூட தன் பேரனை அகற்றிவிட்டு, அந்த இடத்தில் அனைத்துத் தகுதிகளும் வாய்ந்த ஆ.இராசாவைத்தான் அமைச்சராக ஆக்கியுள்ளார் கலைஞர். தமிழக அரசிலும், ஆதிதிராவிட நலத்துறைக்கு மட்டுமின்றி, பால்வளத்துறைக்கும் ஒரு தலித் நண்பரே அமைச்சராக உள்ளார் என்பதை நாம் அறிவோம்.

இந்த உண்மைகளை எல்லாம் மறைத்து விட்டு, தலித் மக்களின் முன்னேற்றத்தில் தி.மு.க. அக்கறை காட்ட வேண்டும் என்பது போல் அறிவுரை சொல்வதும், கனவு காண்பதாய்க் கதைவிடுவதும், கிழிந்துதொங்கும் அவரது முற்போக்கு முகமூடியையே நமக்கு அடையாளம் காட்டுகிறது.

பரிதிஇளம்வழுதியின் மீது நமக்கெல்லாம் இல்லாத பாசம், திடீரென்று அவருக்கு எங்கிருந்து பொத்துக் கொண்டு வந்தது? இதுவரை பரிதியின் திறமையைப் பாராட்டி அவர் எத்தனை இடங்களில் எழுதியும் பேசியுமிருக்கிறார்? எந்தெந்த வகைகளில் ஸ்டாலின் மற்றும் பரிதியின் திறமைகளை ஒப்பிட்டு ஆராய்ந்திருக்கிறார்? பொத்தாம் பொதுவில். போகிற போக்கில், ஒரு குற்றச்சாட்டை வீசிவிட்டுப் போவதென்பது, எவ்வளவு உள்நோக்கமுடையது என்பதை நாம் உணரவேண்டும்.

தந்தை பெரியார் ஓர் இடத்தில் சொல்லுவார், வைதீகப் பார்ப்பனர்களைவிட லௌகீகப் பார்ப்பனர்களே ஆபத்தானவர்கள் என்று!

-சுபவீ -

Monday, September 24, 2007

வந்தேறிய வரலாற்றை மணல் திட்டில் மறைக்கப் பார்க்கும் பார்பன சூழ்ச்சி !!

பார்பனர்கள் இந்தியாவிற்குள் கைபர் போலன் கனவாய் வழியாக வந்தேறிய ஆரியர்கள் என்பது வரலாற்று உண்மையாக ஆகிவிட்ட நிலையில், தாம் வந்தேறிகள் என்பதை மறைப்பது எப்படி என்பதில் உடனடி உபாயம் கிடைக்காததால் பலவித அர்சனைகளை ஆங்கிலேயே மெக்கல்லனுக்கு செய்துவந்தார்கள். வெள்ளையனை பார்பனர்கள் வெறுத்து விடுதலை போராட்டத்திற்கு குதித்தற்கும் வெள்ளையர்கள் இவர்களை வந்தேறிகள் என்று அறிவித்ததாலேயே தான். அதற்கு முன்பு வெள்ளையர்களுக்கு அடிவருடியவர்களில் பெரும்பாண்மையினர் பார்பனர்களே. வெள்ளையர்கள் பார்பனர்களை வந்தேறியவர்கள் என்று பகிரங்கப்படுத்திய பின், நூற்றாண்டுகாலம் குடுமியை அவிழ்த்தும் முடிந்தும் யோசித்ததில் வந்தேறிகள் என்ற வரலாற்றை மறைக்க வழியே தெரியவில்லை.

நிலமை இப்படி சென்று கொண்டிந்த போது கடந்த ஐந்தாண்டுக்கு முன் நாசா செயற்கைகோள் வழியாக எடுத்த இலங்கை - இந்திய கடல்பகுதியில் ஆதாம் பாலம் எனப்படும் மண்ல்திட்டின் புகைப்படம் வெளியானது. அதற்கு முன்பு அப்படி ஒன்று இருப்பதோ, அது இராமர் பாலம் என்று சொல்லப்பட்டு வந்தது இல்லை. அந்த புகைப்படத்தை வைத்து நாசாவில் வேலை பார்க்கும் சர்வசேத பார்புகள் அது இராமர் பாலம் என்று கதை கட்டினால் பார்பனர்களும் பார்பன இலக்கியமான இராமாயணமும் இந்தியாவில் 15,000,00 (பதினைந்து லட்சமாம்) ஆண்டுகளாக இருப்பவை என்று கதை கட்ட முடியும் என்று திட்டுமிட்டு, மணல் திட்டை இராமரின் கயிற்றுப் பாலமாக திரித்து சொல்கின்றன, இராமயண கதைப்படி குரங்குகள் அமைத்த பாலம் மிதந்ததாம்.

இந்து உணர்வை தூண்டிவிட்டால் அரசாங்கத்தின் சேது சமுத்திர திட்டத்தை நிறுத்திவிடலாம் என்பதோ, அந்த பாலத்தை உடையாமல் தடுத்துவிடலாம் என்பதோ தற்போதைய உண்மையான நோக்கம் அல்ல. பார்பனர்கள் இந்தியாவை சேர்ந்த முன்னாள் குடிமக்கள் என்று காட்டுவதற்காக செய்யப்படும் மலிவு அரசியல் இது. இவர்கள் என்னதான் இதை தடுத்து நிறுத்தினாலும் இவர்கள் வந்தேறிகள் என்று நிரூபணம் செய்யப்பட்டதை இனி மாற்ற முடியாது. ஆனால் பாஜாகவுக்கு இந்து ஓட்டுகள் விழும் என்ற மற்றொரு எதிர்பார்ப்பை வேண்டுமானால் இந்த மலிவான மணல் திட்டு அரசியலால் உணர்ச்சி வசப்பட்டு ஏமாந்த இந்துக்களால் கிடைக்கலாம்.

Wednesday, September 19, 2007

ராம பக்தர்கள் செய்ததில் தவறென்ன?

நேற்று இரவு பெங்களூரு வில் கருணாநிதியின் மகள் செல்வி-முரசொலிசெல்வம் இல்லத்தில் பெட்ரோல் குண்டு வீச்சும் கல்லடித் தாக்குதல்களும் நடைபெற்றதாக செய்திகள் வெளியாகி உள்ளன. திராவிட அரசியல் வன்முறைக்கு சற்றும் சளைத்தவர்கள் இல்லை நாங்கள் என இந்துவியாதிகள் இன்னொரு முறை உரக்கச் சொல்லும் செய்தி இதுதான். பாபர் மசூதி, ராமன் கோயில் , இன்னும் என்ன கருமம் எல்லாம் ராமனின் பெயரால் நடக்கும் என்பது தெரியாவிட்டாலும் வாலியை மறைந்திருந்து சூழ்ச்சியால் கொன்றதாக அந்த மடையர்களே ஒத்துக்கொள்ளும் ராமனின் சீடர்கள் அல்லவா அவர்கள் போக்கு அப்படித்தான் இருக்கும்.

தமிழகத்தின் முதல்வர் சொன்ன கருத்துக்கு பதிலடி தரத் தெரியாத இந்து ராமனின் இன வெறியர்கள் கர்நாடகத்தில் கைவரிசை காட்டியுள்ளனர். ராமன் பாலம் கட்டினான் என்று என் மகனிடம் சொன்னால் கூட எந்த காலேஜில் படித்தான் அந்த ராமன் எனக் கேட்பான். அப்படியிருக்க அணுகுண்டுவெடித்து அகில உலகையும் எங்கள் பக்கம் திருப்பினோம் என பிதற்றல் பீற்றல் விடும் பிஜேபி ராமனின் பாலம் அவன் கால் கழுவிய இடம் என்று ஆஃப்பாயில் போடுவதை பார்த்தால் அந்த இல்லாத ராமன் அகில உலகம் அதிர சிரிப்பான்.


ராமன் ஆயிரக் கணக்கான ஆண்டுகளுக்கு முன்னால் கட்டிய பாலம் எந்த ராஜாவால் திறந்து வைக்கப் பட்டது என்று ஒரு மண்ணும் தெரியவில்லை. இப்படியிருக்க அந்த மடையர்கள் செல்வியின் இல்லத்தில் என்ன புண்ணாக்குக்காக தாக்குதல் நடத்தினர் என்பதை யாரேனும் "உண்மை பெங்களூர் பதிவரோ இல்லை பின்னூட்ட புகழ் பாலாவோ தெரிவிப்பது நலம்"

அத்தாக்குதலின் போது சில துண்டுப் பிரசுரங்களும் வீசப் பட்டனவாம் அதில் இனியும் கருணாநிதி ராமனை பற்றி இதுபோல பேசிக்கொண்டிருப்பின் இருக்க மாட்டீர்கள் ராவணனுக்கு நேர்ந்த கதிதான் உனக்கும் என அந்த பிரசுரங்களில் தெரிவிக்கப் பட்டிருந்ததாம் அட மடையர்களே நாங்கள் ராமனே இல்லை என்கிறோம் ராவணன் இருந்தான் என ஏனடா கொதிக்கிக்றீர்கள் என நான் கேட்கவில்லை எங்கள் வீட்டு நாய் கேட்கிறது. நல்ல வேலையாகக புழுத்த இந்துத்துவ அரசியல் அந்த நாய்க்குத் தெரியாது இல்லாவிட்டால் என்னை திராவிடக் குஞ்சே என விளித்து பின்னூட்டம் போட்ட்டாலும் போடும்.

அந்த ராமர் பாலம் சேது சமுத்திரத் திட்டம் வருவதற்கு முன்னரும் அங்கே தான் இருந்தது அதை போற்றிப் பாதுகாக்க இதற்கு முன்னர் ஆட்சி செய்த இந்து வெறி பிஜேபி அரசாவது முயன்றதாக தெரியவில்லை. அதில் சேது சமுத்திர திட்டம் அமுல்படுத்த ஆங்கிலேய காலம் தொட்டே திட்டம் இருப்பதும் அவர்களுக்கு தெரியும் அப்போதெல்லாம் ஒன்றும் செய்யாமல் அவ்வளவு ஏன் இந்த அதிமுக இரண்டு முறை ஆட்சியில் இருந்த போதாவது இந்த சமுத்திரத் திட்டத்தை எங்களுக்கு வேண்டாம் என மத்திய அரசுக்கு சொல்லியிருக்கலாம் அதையும் செய்ததாக தெரியவில்லை.

இந்த திமுக திம்மி அரசாங்கம் வந்த போதுதான் எல்லா சாமிகளும் அம்மாக்களுக்கும் முழித்துக் கொண்டனர். சேது சமுத்திர திட்டம் செயல் படுத்த படவேண்டும் என தீராத ஆவலை தெரிவித்து பாராளுமன்றத்தில் முழக்கமிட்ட புரட்சிப் புயல் வைகோ அம்மாவின் ஆதரவில் இருப்பதாலோ என்னவோ சேது எனும் பேரைக் கேட்டாலே செலக்டிவ் அம்னீஷியா வந்து "ரோம் நகரிலே இப்படித்தான் என பொதுக்கூட்டம் பேசப் போகிறார்.

இப்படி ஆளாளுக்கு அம்போவென விட்ட ராமரை "ச்சே" ராமர் பாலத்தை மீண்டும் சீர்திருத்தி இலங்கைக்கு என்ன வல்வோ பஸ் சர்வீஸா தொடங்கப் போகிறார்கள் ?

இந்த பதிவின் தலைப்புக்கும் பதிவுக்கும் என்ன சம்பந்தம் என்பவர்களுக்கு: நீங்க தமிழ்மணத்துக்கு புதுசா?

Thursday, September 13, 2007

இந்திய தேசியத்துக்கே உலை வைத்த பழ.நெடுமாறன் !

நேற்று இந்திய கடல் எல்லையை தாண்டி ஈழ விடுதலைப் புலிகளுக்கு பெருமளவில் ஆயுதங்களையும் போராளிகளையும் சட்டவிரோதமாக அரசுக்கு தெரியாமல் கடத்தி போராளிகளின் போராட்டத்தில் பங்கெடுக்க புறப்பட்ட தேசிய விரோதி பழ.நெடுமாறனை கைது செய்ததன் மூலம் இந்தியா உலக அரங்கில் தன் பெருமையை நிலை நாட்டி உள்ளது.

செப்டம்பர் ஐந்தாம் தேதி இலங்கை பாராளுமன்ற எதிர்கட்சி எம்.பி ரணவக்க பேசியபோது. பழ.நெடுமாறன் தமிழகத்தில் இருந்து புறப்பட்டு கடல் மார்க்கமாக விடுதலைப் புலிகளுக்கு உதவி செய்ய வருவதாகவும் இதனை கருணாநிதி அரசும் இந்திய மைய்ய அரசாங்கமும் வேடிக்கை பார்ப்பதாகவும் குற்றம் சாட்டினார். அப்படி கருணாநிதியும் மைய்ய அரசும் வேடிக்கை பார்க்க காரணம் நெடுமாறன் தனது ஆதரவை விலக்கிக் கொண்டால் இந்திய பாராளுமன்றம் கலைக்கப் படும் அபாயம் இருப்பதாலேயே என்றும் ஒரு குண்டை போட்டு உறுப்பினர்களை திகைப்பில், வியப்பில் பின் சிரிப்பில் தள்ளினார் ரணவக்க.

தனது தேசியம் தான் முக்கியம் என என்னும் இந்திய அரசு காஷ்மீர் தீவிர வாதிகளோடும் பாகிஸ்தானோடும் தனது பேச்சு வார்த்தைகளை மூட்டை கட்டி வைத்துவிட்டு அடுத்த காரியமாக காஷ்மீரை பாகிஸ்தானுக்கு பத்திரம் செய்த்து கொடுக்கலாம் அங்கே வாழும் இந்துக்களை வெளியேற்றி விட்டு ஒரு அணுகுண்டு சோதனை நடத்தினால் எல்லாம் புஸ்ஸ்ஸ்ஸ்.... பிறகு பாகிஸ்தான் காஷ்மீர் வேண்டும் என்றே கேட்காது. நமக்கும் தொல்லை இல்லை.

மனிதாபிமான அடிப்படையிலான உணவுப் பொருள்களை கூட வழங்க மறுக்கும் இந்தியா எந்த அடிப்படையில் இலங்கைக்கு ஆயுத சப்ளை செய்கிறது என்று ஒரு கன்றாவியும் தெரியவில்லை. எல்லாம் பிராந்திய வல்லரசாக இலங்கையின் உதவி தேவை என எண்ணும் குட்டி மனப்பான்மையா இல்லை சீனா அங்கே காலடி வைத்தால் அல்லது பாகிஸ்தான் வைத்தால் பக்கத்து இந்தியாவை பதம்பார்த்து விடுவார்கள் என்ற பயமா என்று அந்த மன்(ண்)மோகன் சிங்குக்கே வெளிச்சம்.

பழ நெடுமாறன் அப்படி என்ன கள்ளத்தனமாக செல்ல முயன்றாரா என்ன? இல்லை 7 மாதங்களுக்கும் மேலாக இந்திய நடுவன் அரசு, தமிழக அரசு, செஞ்சிலுவை சங்கம் என எல்லா முயற்ச்சிகளையும் மேற்கொண்டு பலனளிக்காத காரணத்தினாலேயே இந்த முயற்ச்சி எடுக்கப் பட்டது. அவர்கள் எடுத்துச் செல்வது ஆயுதங்கள் அல்ல தமிழ் மக்களின் உணர்வுகள். அவர்கள் செய்வது உதவிகள் அல்ல கடமைகள் கடமை. கண்ணியம்
கட்டுப்பாடு என்ற தார்மீக மந்திரத்தை தனது கோஷ்மாக கொண்ட திராவிட முன்னேற்ற கழக ஆட்சி தனது கடமையில் இருந்து விலகுகிறதா?

ஆயுதப் போராட்டம் செய்யும் தமிழன் உணவும் மருந்தும் இல்லாமல் இறந்துபோக வேண்டும் என்பதே இந்திய தேசியம் பேசும் அரசாங்கத்தின் உணர்வாக இருக்கிறது. தனது எல்லா நடவடிக்கைகளும் இலங்கை இனவாத அரசாங்கத்தின் அடிப்பொடியாகவும் தமிழீழ விடுதலைப் புலிகளை அழித்தொழிப்பதையும் மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு செயல்பட்டு ராஜிவ் காந்தி கொலை என்னும் ஒரு விரும்பத் தகாத சம்பவத்துக்கு பழிவாங்கத் துடிக்கிறது.

எல்லா எல்லைகளும் அடைக்கப் பட்டாலும் எங்களுக்கான எல்லைகள் திறந்தே கிடக்கின்றன என்று வன்னியை தலைமையாகக் கொண்ட புலிகளின் தமிழீழம் மலரும். இந்தியா அப்போது தனது மிக நெருங்கிய நண்பனாக வடகிழக்கின் ஆதிக்கம் கொண்ட தமிழீழ அரசாங்கத்தையே நாடவேண்டி இருக்கும் தனது கடல் எல்லைகளை தமிழர்களின் எல்லைகளோடே பங்குபோடவேண்டி இருக்கும். பாரா முகம் காட்டும் இந்த மனோபாவம் தொடர்ந்து தொடர்ந்தால் அப்போது எந்த முகத்தோடு புலிகளின் அரசாங்கத்தை எதிகொள்ளும் இந்தியா?.

கடைசியாய் ஒன்று

ஈழத் தமிழர்களே எங்களையும் எங்கள் அரசாங்கத்தையும் மன்னித்துவிடுங்கள்.

Wednesday, September 05, 2007

தோழி தமிழச்சிக்கு


பாரிஸ் மாநகரிலும் பகுத்தறிவை படையல் போட்டு விநாயகனுக்கு வினா எழுப்பிய தோழி தமிழச்சிக்கு

வாழ்த்துக்கள்!


டிஸ்க்கி:
தமிழச்சியை வாழ்த்தாதவர்கள் பகுத்தறிவுப் பாசறையில் இல்லாத வெங்காயங்கள் என்று முகமூடி கழட்டி அம்பலப் படுத்தப் படுவார்கள் என எனக்கு ஜி டாக்கில் கொலைமிரட்டலோடு கட்டளையிட்ட லக்கி லுக், வரவணையான் மற்றும் அனானி நன்பர்களுக்கு நன்றி