Sunday, April 29, 2007

தீராநதி

1857_ம் ஆண்டில் நடந்த இந்தியச் சிப்பாய்களின் எழுச்சியின் 150_ம் ஆண்டு, இவ்வருடம் கொண்டாடப்படுகிறது. இந்தச் சிப்பாய் எழுச்சியை வலதுசாரிகள் முதல் இடதுசாரிகள் வரை ''முதல் சுதந்திரப் போர்'' என்று வருணிக்கின்றனர். ''1857_ம் ஆண்டு நடந்தது சிப்பாய் கலகம் அல்ல. அது ஒரு தேசிய எழுச்சி'' என்று வருணிக்கிறார். கார்ல்மார்க்ஸ். இன்றுவரை அதைச் சிப்பாய்கள் கலகம் என்று வருணிக்கும் அயல்நாட்டு அறிஞர்களும் உண்டு. இந்த எழுச்சியை எந்தப் பார்வையில் இருந்து பார்த்தாலும் இந்தியத் துணைக் கண்ட வரலாற்றில் இது மிக முக்கிய நிகழ்வு என்பதில் சமீபத்தில் வந்த ''கடைசி முகலாயர்'' என்ற புத்தகத்தைப் படித்து முடித்தவுடன் நம் சிந்தனையை ஆட்கொள்வது, இந்த எழுச்சியில் ஜாதி மற்றம் மதத்தின் பங்கு என்னவென்ற கேள்விதான். இன்று உருவாகியுள்ள, இந்திய தேசிய குணாம்சத்தைப் புரிந்து கொள்ள, 1857_ல் நடந்ததை ஜாதிய மதவாத கோணத்தில் இருந்து பார்ப்பது மிக அவசியம் என்று தோன்றுகிறது. குறிப்பாக ஆவாத், பீகார், பனாரஸ் மற்றும் வங்காளம் ஆகிய பகுதிகளில் கிழக்கிந்திய கம்பெனியின் சிப்பாய்களாக இருந்தது, சடங்குகளை இமை பிசகாமல் பின்பற்றக்கூடிய மேல்ஜாதி இந்துக்கள்தான். மேல் ஜாதி இந்துக்களையே சிப்பாய்களாகத் தேர்ந்தெடுப்பது என்பது கிழக்கிந்திய கம்பெனியின் கொள்கையாகவே இருந்தது. (பக்கம் 136) சில படைப்பிரிவுகளில் 80 சதவீதத்திற்கு மேல் மேல்ஜாதி இந்துக்கள்தான் சிப்பாய்களாக இருந்தார்கள். கிழக்கிந்திய கம்பெனி இந்த மேல் ஜாதி இந்துக்களின் சடங்குகளுக்கு மரியாதை கொடுத்து அவர்களை 'மேன்மையானவர்கள்' என்ற அங்கீகாரத்தை ஏற்படுத்தியது. அதாவது, அவர்களுக்கான உணவு சமைக்கப்படும் முறை, அதை அவர்கள் உட்கொள்ளும் முறை என்று சகல சடங்குகளுக்கும் கவனமும், அங்கீகாரமும் கொடுக்கப்பட்டது. மேல் ஜாதி சிந்தனைக்கு ஆங்கிலேயர்களால் கொடுக்கப்பட்ட அங்கீகாரம், ஜாதிய சிந்தனையை வேறு ஒரு கருத்தாக்க நிலைக்குக் கொண்டு சென்றது. இந்த மாற்றத்தைத்தான் பல அறிஞர்கள் சமஸ்கிருத மயமாக்குதல் என்று வருணிக்கிறார்கள். (பக்கம் 135) ஆனால், 1855 வாக்கில் கிழக்கிந்திய கம்பெனி, கீழ் ஜாதியிலிருந்தும் சிப்பாய்களைத் தேர்ந்தெடுக்கத் தொடங்கியதால், 1857 வாக்கில் மேல் ஜாதி சிப்பாய்கள் சதவிதம் சற்றே சரிவைக் கண்டது. மேல்ஜாதி இந்துக்கள் மத்தியில் சிப்பாய் என்ற தொழில் அதன் அந்தஸ்தையும் சற்றே இழக்கத் தொடங்கியது. இந்த இறுக்கத்தோடு பொது சேவை சட்டம் நடைமுறைக்கு வந்து எல்லா சிப்பாய்களும் வெளிநாடுகளில் சேவை செய்யவேண்டும் என்பது கட்டாயமாக்கியது. மேல்ஜாதி மரபுப்படி கடலை கடப்பது தடைசெய்யப்பட்டது என்பதால், இந்தச் சட்டம் அவர்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது. அடுத்து, போர்க்கால சலுகை ஊதியம் ரத்து, இலவச தபால் ரத்து ஆகிய சட்டங்களும் இவர்களிடையே பெரும் அதிருப்தியை உண்டாக்கியது. இவற்றோடு இரண்டாம் ஆங்கிலேயே /பர்மா யுத்தத்தில் கடல்வழியாக ரங்கூனை அடையவேண்டும் என்று டல்ஹெளசி பிரபுவால் ஆணை பிறப்பிக்கப்பட்டது. மேல் ஜாதி சிப்பாய்கள் ஜாதிய சிந்தனை அடிப்படையில் இந்த ஆணைக்கு கீழ்ப்படிய மறுத்தார்கள். இதன் விளைவாக, இந்தச் சிப்பாய்கள் தரைமார்க்கமாகவே ரங்கூனை அல்லாமல் டாக்காவை அடையவேண்டுமென்று டல்ஹெளஸி பிரபு உத்தரவிட்டான். ஐந்து மாதத்திற்குள் ஏறக்குறைய அந்தப் படைப்பிரிவைச் சேர்ந்த பல சிப்பாய்கள் வழியிலேயே மரணமடைந்தார்கள். இந்த நிகழ்வும் கிழக்கிந்திய கம்பெனி சிப்பாய்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இவை எல்லாவற்றி மேலாக, என்ஃபீல்ட் ரெட்ஃபீல்டு தோட்டாக்களில் பன்றி மற்றும் மாட்டுக்கொழுப்பு தடவவேண்டிய நிலை சிப்பாய்களுக்கு ஏற்பட்டது. இது ஒரு மாபெரும் எழுச்சியைத் தூண்டுவதற்கான சிறு பொறியாய் அமைந்தது

கிழக்கிந்திய கம்பெனி எவ்வாறு துணைக்கண்ட நிலப்பரப்பைத் தன்வயப்படுத்தியது என்பதைப் பற்றி நமக்குப் போதுமான தகவல்கள் உண்டு. இந்த அத்து மீறல்களோடு கிறித்துவப் ஸ்தவ பாதிரிமார்கள் இருண்ட குகைக்குள் கிடக்கும் துணைக் கண்ட மக்களின் ஆன்மாக்களை, உண்மையை நோக்கியும் கடவுளை நோக்கியும் மீட்டெடுப்பது அவர்களது தார்மீகக் கடமையாகவும் மதக் கடமையாகவும் கருதினார்கள். இந்த மதக்கடமைக்கு கிழக்கிந்திய கம்பெனி துணை நின்றது. சிப்பாய்களை ஒன்று கூட்டி இந்து மதம் மற்றும் இஸ்லாமிய மதம் பற்றி தரக்குறைவாகப் பேசப்பட்டது. பாதிரிமார்களின் இந்த ஆணவச் செயல்களோடு, 1928_ல் நடைமுறைக்கு வந்த நியாயமான சாதி எதிர்ப்புச் சட்டமும், விதவை மறுமணச் சட்டமும் மேல்ஜாதி இந்துக்களிடையே பெரும் பாதுகாப்பற்ற தன்மையை ஏற்படுத்தின. இவற்றோடு அனாதைக் குழந்தைகளைத் தத்தெடுத்து மதமாற்றம் செய்தாலும் பூர்வீகச் சொத்தில் பங்கு உண்டு என்று 1832_ல் கொண்டுவரப்பட்ட சட்டம் இஸ்லாமிய 'சரியாட்' சட்டத்திற்கு முற்றிலும் விநோதமாக இருந்ததால், இஸ்லாமியர்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது. பாதிரிமார்களின் அதீத நடவடிக்கைகளும் இந்தச் சட்டங்களும் சேர்ந்து மேல் ஜாதி இந்து மற்றும் உயர் குடி இஸ்லாமியர்களிடையே தங்களுடைய மதம் கிறிஸ்துவர்களால் திட்டமிட்டு அழிக்கப்பட்டுப் போகிறது என்ற அச்சத்தையும், கலக்கத்தையும் தோற்றுவித்தது. ஆக, 1857 எழுச்சியானது ஒரு விவசாயப் பிரச்னையாகவும், ஜாதிய கட்டமைப்பு மற்றும் மதநம்பிக்கைகள் மீதான தாக்குதலாகவும் கருத்தியல் அடிப்படையில் உருவானது என்று சொல்லலாம். மேலே கூறியவற்றிலிருந்து நாம் இரண்டு சிந்தனைகளை முன்வைக்கலாம்.

1. கிழக்கிந்தியச் சிப்பாய்கள் மேல்ஜாதியினரின் ஆதிக்கத்துக்குப் பதிலாக கீழ்ஜாதியினரின் ஆதிக்கத்தில் இருந்திருந்தால், 1857_ல் நடந்த எழுச்சியின் குணாம்சம் என்னவாக இருந்திருக்கும். நம்மால் இதற்குப் பதில் சொல்ல முடியாது. ஆனால், அப்படி நடந்திருக்குமாயின் இந்தியத் துணைக் கண்டத்தின் வரலாறும் இந்தியத் தேசியத்தின் குணாம்சமும் இன்றைய தன்மையிலிருந்து முற்றிலும் வேறாகஇருப்பதற்கான சாத்தியங்களைக் கொண்டிருந்திருக்கும் என்று மட்டும் சொல்லலாம்.

2. சிப்பாய் எழுச்சியில் பங்கெடுத்துக்கொண்ட பெரும்பாலான சிப்பாய்கள், உயர்ஜாதி இந்துக்களாக இருந்தும் ஏன் முகலாயப் பேரரசரான பகதூர் ஷா ஜாபரிடம் போய் நிற்க வேண்டி வந்தது. (எது இத்தகைய செயலைச் சாத்தியப்படுத்தியது என்று புரிந்து கொள்ள, இந்தப் புத்தகத்தை திரு. அத்வானியும், திரு. வாஜ்பாயும் கண்டிப்பாகப் படிக்க வேண்டும்).

இரண்டாவது கேள்விக்குப் பதில் சொல்வதற்கு முன் நாம் முகலாயப்பேரரசின் கடைசி அரசரான பகதூர்ஷாவின் மதச்சார்பின்மை பற்றித் தெரிந்துகொள்ளவேண்டியுள்ளது

Saturday, April 28, 2007

அமீரகத்தில் அதிரடிச் சந்திப்பு


வலையுலக தாதா அழைக்கிறார், சின்னவா பெரியவா அழைக்கிறார் என்ற தளபதிகளின் ஆர்ப்பாட்டங்களும் இந்த தேதியில் சந்திப்பு வந்து விடுங்கள் என கொடி பிடித்த கார்டூன் பெரிய மனிதர்களும் ஓசை செல்லா செவ்வாய் கிரக வலைப்பதிவு சந்திப்பு பற்றி தம்பட்டம் அடிப்பார் என்ற ஏற்பாடுகளும், மக்கள் தொலைக்காட்சியில் உங்கள் பேட்டி வெளியாகும் என்ற கவுதமின் அதிரடி அறிவிப்பும் இன்றி நேற்று துபையில் ஒரு சரித்திர முக்கியத்துவமான சந்திப்பு நடந்தது.காலை ஒன்பது மணிக்கு தொலை பேசி அழைப்பு என்ன மகேந்திரன் வருகிறீர்களா என்று " கிளம்பிக்கொண்டிருக்கிறேன் இன்னும் அரை மணி நேரத்தில் அங்கிருப்பேன் எனச் சொல்லிவிட்டு கிளம்பி நடந்தே செல்வது என முடிவெடுத்தாயிற்று சரியாக இருபது நிமிட நடைக்குப் பின் அவர் காத்திருக்கச் சொன்ன மசூதியின் அருகில் இருந்து தொலைபேசிவிட்டு அருகில் இருக்கும் வேப்ப மரத்து நிழலில் பல்லியாய் ஒண்டி இருந்தேன். ஒரு பத்து நிமிட காத்திருப்பில் அவர் வந்தார் .இருவரும் கடந்த ஒரு ஆண்டு ஒரு ஆண்டு காலமாய் தொலைபேசிக்கொண்டாலும் சந்திப்பு நிகழவில்லை என்னை கண்டதும் அடையாளம் கண்டுகொண்டார், நானும் கண்டுகொண்டேன். அறைக்கு பேசிக்கொண்டே நடந்து சென்றோம். இரண்டாவது மாடியில் இருக்கும் அவரது அறையில் இன்னொரு நண்பரும் இருந்தார். தமிழ் மணத்தில் இடுகைகளை படித்துக் கொண்டிருந்தார் பார்த்ததுமே தெரிந்து போனது நண்பர் யாரென்று. தொலைக்காட்சியில் கார்த்தியும் சரவணனும் கஞ்சா கருப்புவை தேனீர் விடுதியில் இருந்து வேலையை பிடுங்கி துரத்துவதில் ஆர்வமாய் இருந்தார்கள் , தொலைக்காட்சி பார்த்துக்கொண்டே இருந்ததில் எதுவும் அதிகம் பேசவில்லை. பருத்திவீரன் எங்களின் பாதி நேரத்தினை நெய்திருந்தான், பிறகு வழக்கமான விசாரிப்புகளுக்கு பின்னர் வேலைபற்றி யும் தங்கியிருக்கும் இடம் பற்றியும் விசாரித்து அறிந்து கொண்டனர். இருவருக்கும் சில தொழில் நுட்பங்களை விளக்கிக் கொண்டே நானும் கொஞ்சம் தமிழ்மணத்தை நுகர்ந்தேன்.மதிய சாப்பாட்டு வேளை , திருச்சூர் யானை ஒன்று கும்பலை விரட்ட கும்பல் யானையை விரட்டவென்று ஏதோ ஒரு மலையாள அலைவரிசை நேரடியான பரபரப்பை செய்துகொண்டிருந்தது. நண்பர் ஊருக்கு கிளம்பும் உத்தேசம் இருப்பதால் கொஞ்சம் பரபரப்பாக காணப்பட்டார், பதிவுகள் பற்றி மூவரும் ஒரு வார்த்தையும் பேசிக்கொள்ளாதது நல்ல சூழலை தந்தது, அது வலைஞர்களின் சந்திப்பாக இல்லாமல் நல்ல நண்பர்களின் சந்திப்பாக இருந்தது, கொஞ்சம் பொருள் வாங்க பர் துபை வரை செல்ல முடிவு செய்து வாடகைக்கு காரெடுத்து இது எங்கள் காரென்று எதுவும் பொய்சொல்லும் உத்தேசம் இல்லாததால் நண்பரின் காரிலேயே சென்றோம்.கதவோரம் கொஞ்சம் நசுங்கியிருந்த அந்த நிசானை அடுத்த தெருவில் இருக்கும் முனிசிபாலிடி பார்கிங்கில் கண்டு பிடித்து பர்துபை போன போது மணி ஆறு முப்பது இருக்கும் துபை கேரிபோரில் நண்பரின் அண்ண(னாக இருக்கும் நான் கேட்கவே இல்லை)ணை இறக்கி விட்டு நாங்கள் போக வேண்டிய ஜியார்டானோ துணிக்கடைக்கு சென்றோம் அப்போது தான் கொஞ்சமாய் வலையுலக அரசியல் அவரின் நிலைப்பாடு, நண்பர் ஊருக்கு சென்றால் கிளப்பவிருக்கும் புயல் எல்லாம் கொஞ்சம் பேசினோம்.துணிக்கடையில் இருந்து இன்னும் புதிதாய் சேர்ந்த அவரின் நண்பர்களுடன் மீண்டும் காரில் கராமா , தான் எழுத திட்டமிட்டுள்ள ஒரு நாவல் பற்றியும் எடுக்க ஆசைப்படும் ஒரு குறும்படம் பற்றியும் ஆர்வமாய் சொல்லிக்கொண்டு வந்தார், ஒரு ஆண்டுக்கு முன்னர் ஆர்வமாய் ஆரம்பித்து ஆறு அத்தியாயங்களையும் நூறு பக்கங்களையும் கொண்ட என் அரைகுறை நாவல் பற்றியும் சொல்லி என் மனதை தேற்றிக் கொண்டேன். நான் இறங்க வேண்டிய இடம் வந்ததும் என்னை இறக்கிவிட்டு மின்னலென மறைந்தது அவரின் கார்.


இது என்னவோ கதையாய் இருக்கும் என இன்னொரு மொக்கை பதிவா என பின்னூட்டம் ஆரம்பிக்கும் முன்னர் ஒரு செய்தி. நேற்று முத்துக்குமரனையும் நண்பன் ஷாஜகான் அவர்களையும் அவர்களது அரையில் சந்தித்தேன்


முத்துக்குமரன், அதிகம் படித்திருக்கிறார், சினிமாவை ஆர்வமாய் நேசிக்கிறார், திராவிடர்கள் மேல் நல்ல பற்றுகொண்டவராய் இருக்கிறார், தமிழ் மணத்தின் போலிச் சண்டைகள் பற்றி தெளிவான நிலைப்பாடு கொண்டுள்ளார், மொத்தத்தில் பேரன்பும் பெருங்கோபமும் கொண்டவர்.எங்களுக்குள் கிட்டத்தட்ட ஒத்த கருத்துக்கள் இருப்பது பற்றி நான் வியந்து கொண்டிருக்கும் போதே அவர் தந்தையின் குணங்கள் சொல்லி என் தந்தையும் அதே கருத்து கொண்டவர்தானே என மேலும் சிந்திக்க வைக்கிறார்.


நண்பன் ஷாஜகான் அவர்கள் அதிகம் படிக்கிறார், ஆர்வமாய் எழுதுகிறார், என்னைப் போலவே (!) உலக சினிமாக்கள் பார்க்கிறார், அன்போடு பழகுகிறார், எளிமையாய் இருக்கிறார், புகைப்படத்தில் இருப்பதை விட கொஞ்சம் வயதானவர்போல் தோன்றுகிறார். இருவரும் முடிந்த வரை தூய தமிழில் பேசுகிறார்கள் தயங்காமல் பேசுவதற்க்கான சூழலை வைத்திருக்கிறார்கள்


எந்த சண்டை சச்சரவும் இன்றி, மிக நல்ல நண்பர்கள் பழகியது போல் இருந்தது அந்த பதினோரு மணி நேர சந்திப்பு.சந்தித்த இடங்களின் குத்துமதிப்பான கூகிள் எர்த் புகைப்படங்கள்மேலிருந்து கீழாக


1. நான் பல்லியாய் ஒட்டியிருந்த அந்த மசூதி


2.முத்துக் குமரன் அறை இருக்கும் இடம்


3. பர்துபை கேரிபோர்


4. எனது அறை

Monday, April 23, 2007

தமிழ்மணத்தின் மேல் பாசிசச்சேறு


கடந்த சில நாட்களாக ஒருவர்பின் ஒருவராக தமிழ்மணம் மீது பாசிசம் பரப்பும் இணைய தளம் இது எனவே நாங்கள் இனி இங்கே எழுதப் போவதில்லை நாங்கள் போகிறோம் எங்களை
342 பேர் படிக்கிறார்கள் அதில்
12 பேருக்கு தமிழ்மணம் என்றால் என்ன வென்றே தெரியாது என பாவலா காட்டி பயணத்தை தொடங்குகிறார்கள்.


போகிறவர்கள் போகலாம் ஆனால் அவர்களில் ஆதாரமில்லாத குற்றச்சாட்டுகளுக்கு பதில் கூறுவதும் அல்லது துடைத்து எறிவதும் தமிழ்மண நிர்வாகிகளை பொறுத்த விவகாரம். எனது பதிவுகளை சராசரியாக


ஒரு நாளைக்கு


600 பேர் படிக்கிறார்கள் அதில்

500 பேர் தமிழ்மணம் வாயிலாகவே வருகை தருவதாக கூகிள் அனலிடிக்ஸ் கூறுகிறது மற்றவர்கள் தேன்கூடு மற்றும் தமிழ்ப் பதிவுகள் இன்ன பிற தேடுதளங்களின் உதவியுடன் எதையாவது தேடி எதிர்பாராமல் வந்து விழும் வாசகர்கள்.


தமிழ் மணத்தின் தொட்டாச்சினுங்கி தன்மை சில பதிவர்களை அது பாசிச போகில் செயல்படுவதாக பழிபோட காரணமாய் இருப்பினும் எதிகருத்துக்கள் எல்லாவற்றுக்கும் அது இடம் கொடுத்தே வந்திருக்கிறது. முதலில் எதிர்கருத்து என்றால் என்ன என்று பார்க்கலாம்"எனது கருத்துக்களோடு ஒத்துப்போகாத உங்களின் கருத்து" இதை நீங்கள் அனானியாகவோ அல்லது பதிவர் கணக்கிலோ வந்து தெரிவிக்கலாம் அனானியாக இடப்படும் பின்னூட்டம் எங்கிருந்து வந்தது என (நீங்கள் ப்ராக்ஸி பயன்படுத்தினாலும்) மிக எளிதாக கண்டுகொள்ளும் வகையிலான வெப் ஸ்டாட்டுகள் எனப்படும் வலை கண்கானிப்பு கனிப்பான்கள் சொல்லிவிடும் எனக்கு இந்த பின்னூட்டம் அனுப்பியது யாராய் இருக்கும் என சந்தேகம் எழும் பட்சத்தில்.


போனவர்கள் எல்லோறும் போகிற போக்கில் சேற்றை வாரி தமிழ் மணத்தின் மீது மட்டுமல்ல அதை முற்றும் நம்பி இன்னும் ஆர்வமாக பதிவிட்டுக்கொண்டிருக்கும் மீதமிருக்கும் ஆயிரத்து எண்ணூறு பதிவர்கள் மேலும் இறைத்துவிட்டே செல்கிறார்கள் கடந்த ஆறு மாதங்களாய் தமிழ்மணம் டிஎம் ஐ கைக்கு போனதில் இருந்தும் பூங்கா வலையிதழ் தொடங்கப் பட்டதில் இருந்தும் தெரியாத பாசிசம் இப்போடு மட்டும் இவர்கள் கண்ணுக்கு தெரிந்தது எப்படி?


அதுவும் இனிமேலும் தமிழ்மணத்தில் எழுதுபவர்கள் இந்திய இறையான்மைக்கு எதிராக செயல்படுபவர்கள் போல ஒரு அபார அறிவோடு விலகுகிறார்கள். இன்றைக்கு வேண்டுமானால் இவர்கள் பதிவை

400 முதல்

500 வரையிலான நிரந்தர வாசகர்கள் படிக்கலாம் ஆனால் இவர்கள் தமிழ்மணம் விட்டுப் போனால் என்ன ஆவார்கள் என்பது எல்லோருக்கும் தெரியும். அதற்க்காக ஒரு பிடிக்காத இடத்தில் அவர்களை தொடர்ந்து எழுதச்சொல்லி கட்டாயப்படுத்தவில்லை. அது அவர்களின் உரிமை அதே நேரம் தன்னலம் கருதாமல்(இதற்கு ஒரு பதிவர் தன்னலம் இல்லையென்றால் இங்கே விளம்பரம் செய்ய தொடர்புகொள்ளுங்கள் என ஏன் ஒரு வரி ஓடுகிறது? என கேட்கிறார் : அய்யா ஓசியில் இடம்கொடுத்து அதில் கொஞ்சம் விளம்பரமும் கொடுத்து காசு பாருங்கள் என கூகிள் ஆட் சென்ஸ் கூவுகிறதே எதற்க்கு? உங்கள் இடுகைகள் ஒரே நாளில் ப்ளாகரை விட்டு தொலைந்து போகாமல் இருக்க உங்கள் விளம்பர வழி வருமாணம் கூகிளுக்கு தேவை) தனி ஒரு நிருவணம் தனது செயல்பாடுகளின் இடையே தங்கள் வருமானத்துக்காக சில விளம்பரங்கள் ஊடே வருமாணம் தேடுவது ஒன்றும் குற்றமில்லை.


பதிவர்கள் இல்லா விட்டால் தமிழ்மணம் இல்லை எனச் சொல்பவர்களுக்கு ஒன்றுதான் சொல்ல முடியும் தமிழ்மணம் நம் வீடு வீட்டை சுத்தமாக வைத்திருக்க வேண்டியது குடியிருப்பவன் கடமை அதே நேரம் வாடகைக்கு விட்டுவிட்டதாலேயே நீங்கள் அடிக்கும் பிடுங்கும் ஆணிகளுக்கு எதிராக கேள்வி கேட்காமல் இருக்க முடியாது தமிழ்மணம் அதைத்தான் செய்கிறது.


பாசிசப் போக்கில் தமிழ்மணம் போகிறது எனக்கூறி வெளியேரும் எல்லோரும் சொல்லாமல் செல்லும் ஒரு காரணம் உண்டு அது "நாங்கள் நாசிக்கள் அதனால்தான் எங்களுக்கு பாசிசம் பிடிக்கவில்லை" வெளியே போகும் முன் வீட்டை சுத்தம் செய்யுங்கள் இல்லாவிட்டால் அடுத்து வரும் சந்ததி அசிங்கப்பட வேண்டியிருக்கும்.


ஒரு பதிவர் இப்படி எழுதுகிறார் இணையத்தில் அடையாள திருட்டு அதிகம் இருப்பதால் எனது விபரங்கள் அனைத்தையும் உடனே அழித்துவிடவும் அட இத்தனை நாளாக இது தெரியாமல்தான் எழுதிக்கொண்டிருந்தாரா? போகிற போக்கில் என்ன அவசரம் பாருங்கள் இந்த விவகாரங்களின் மூலம் ஒரு உண்மை மட்டும் தெரிகிறது "குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கும் " இந்த போக்கை ஏன் இப்போது மட்டும் வெளிப்படுத்துகிறார்கள்? இத்தனை நாளாய் சகோதரர் விடாது கருப்பு விலக்கப்பட்ட போது ஏன் தெரிவிக்கவில்லை இந்த எதிர்ப்பை? இன்னும் பல பதிவர்கள் விலக்கப்பட்ட போது ஏன் தெரிவிக்கவில்லை?


தங்களுக்கு ஏதேனும் ஒன்று என்றால் வலிக்கும் அதே அடுத்தவனுக்கு என்றால் மகிழ்ச்சியாய் இருக்கிறதோ? முதலில் பதிவர்களின் இந்த மனநிலை மாற வேண்டும் அப்போதுதான் தமிழ் மணக்கும்.

Saturday, April 21, 2007

இந்திய நாய்களும் இலங்கை "அகதிகளும்"

பொதுவாகவே நான் தமிழீழ விடுதலைப் போருக்கு எனது தார்மீக ஆதரவை எப்போதும் தெரிவித்து வந்தாலும் ஈழத்தமிழர்கள் இவ் விடயத்துள் இந்திய நிலைப்பாடு பற்றி என்ன நினைக்கிறார்கள் என எப்போதும் உண்ணிப்பாகவே கவனித்து வருகிறேன். நேற்று எனது நெருங்கிய நண்பரும் தமிழீழ விடுதலைப் போராட்டங்களை உண்ணிப்பாக கவனித்து வருபவருமான ஒரு இலங்கை தமிழரிடம் இரவு பேசிக்கொண்டிருந்த போது அவரின் நண்பர் ஒருவர் மட்டக்களப்பில் இலங்கை ராணுவம் போரிட்டு சில பகுதிகளை கைப்பற்றியது பற்றியும் அதில் ஒட்டுக்குழுவாக செயல்பட்டு வரும் கருணா ஆட்களின் பங்கு அதிகமாக இருந்ததாகவும் தெரிவித்தார் அத்தோடு மட்டுமின்றி இலங்கை அரசாங்கத்திற்கு இந்திய அரசாங்கம் இலங்கை ராணுவத்துக்கு நீண்டதூர தாக்கும் திறன் கொண்ட ஏவுகணைத் தளவாடங்களை தந்திருப்பதாகவும் ஒரு தகவலை வெளியிட்டார். மேலும் அந்த பேச்சின் இடையிடையே இந்திய மக்களை நாய்கள் நச்சுமரம் என்றும் குறிப்பிட மறக்கவில்லை.
இங்கே அவரின் இந்த பழிச்சொல்லுக்கு பதில் தேடும் முகமாக இப் பதிவை நான் வெளியிட வில்லை அவரின் பேச்சு சமயத்தில் வெளிப்பட்ட சில கேள்விகளும் அதற்கு எனது பதில்களும் மீண்டும் எனது கேள்விகளும்


1. அமைதிப் பேச்சுவார்த்தையை முன்னெடுத்து செல்லவேண்டும் என்று இந்திய அரசு கூறிக்கொண்டே ஆயுத சப்ளை செய்வது எந்த வகையில் சரி?

பிராந்திய வல்லரசு இந்தியா தனது இலங்கையூடான ஒத்துழைப்பு உடண்பாடுகளை புலிகளையோ அல்லது தமிழர்களையோ காரணம் காட்டி நிருத்திக்கொள்ள முடியாது காரணம் புலிகள் இயக்கம் ஒன்றும் அமைதி வழியில் போராடி அகிம்சை பரப்பும் குழு அல்ல.

2. தமிழர்கள் எங்களின் தொப்புள்கொடி உறவு எனச் சொல்லிவிட்டு புலிகளை அழிக்க இந்தியா உதவுவது?

இந்திரா காந்தி காலத்தில் உங்களுக்கு ஆயுதங்களும் தொலைத் தொடர்பு சாதனங்களும் பிரபாகரணுடன் பேச்சு வார்த்தையும் செய்த்து உங்களுக்கு பெருமளவில் உதவ நினைத்த இந்திய அரசுக்கு உங்கள் உதவி ஒரு மாபெரும் தலைவரை தமிழ் மண்ணில் பலிகொடுத்தது, பேச்சுவார்த்தைக்கு இந்தியா வந்த பத்மநாபா போன்ற மற்ற குழுக்களைன் தலைவர்களை போட்டுத் தள்ளியது அமைதிக்காக வந்த இந்திய ராணுவத்தை இலங்கை அரசின் உதவி நாடி பேராபத்தில் தள்ளி அவப் பெயர் வாங்கித் தந்தது.

3. இந்திய அரசின் உதவிகள் புலிகலுக்கும் ஏனைய தமிழர்களுக்கும் தேவையில்லை எனௌம் போது எதற்கு இந்தியா இலங்கை அரசுக்கு உதவ வேண்டும்?

புலிகள் ஒன்றும் முன்புபோல் கடல் தரையில் மட்டும் இல்லை ஆகாயத்திலும் இருக்கும் போது இது இந்திய இறையான்மைக்கு ஒரு பெரும் சவாலாக அமையும் ஏனென்றால் வடகிழக்கில் பெரும் படை பலம் கொண்ட கருணாவை தனிக்குழு தேடுவதாய் சொல்லி தனிமைப் படுத்தும் போதே உஙக்ளுக்கு(புலிகள்) தமிழ்ழீழ விடுதலை தங்களால் மட்டுமே சாத்தியப் பட வேண்டும் எனும் என்னம் இருப்பது தெளிவானது அதற்க்காக நீங்கள் என்ன வேண்டுமானாலும் செய்வீர்கள் என்பதை கடந்த காலங்களில் பட்ட வலிகள் இந்தியாவுக்கு இன்னும் இருப்பதை ஏன் மறந்து போகிறீர்கள் வசதியாக?

இனி எனது கேள்விகள்:

1. இந்திய அரசு சொல்லும் எந்த ஒரு திட்டத்தையும் ஏற்க முன்வராத ஒரு தீவிரவாதக் குழு பக்கத்தில் இருக்கும் போது தனது இறையான்மைக்கு கேடு விளைவிக்கும் ஒரு தீவிர வாத குழுவுக்கு ஆதரவு அளிக்குமா?(உதாரணம் பாகிஸ்தானிய தீவிரவாதிகள்)

2.இந்த அளவுக்கு இந்தியாவை நம்பாத புலிகளை நம்பி இந்தியா எந்த வகையான அமைதி முயற்ச்சியை முன்னெடுத்து சென்று இலங்கை அரசை பனியவைக்க அல்லது தனது திட்டங்களுக்கு செயல் வடிவம் கொடுக்க முடியும்?

3. அப்படியே புலிகளுக்கு உதவிசெய்வதாக வைத்துக்கொண்டாலும் அவர்கள் கூட்டிய வாளை இந்தியா மீதே சோதிக்க மாட்ட்டார்கள் என்பது என்ன நிச்சயம்? (உதாரணங்கள் ஏராளம்)

4.பிரபாகரனை துதிபாடவும் அவரை தேசிய தலைவராக்கவும் எடுக்கப் படும் முயற்ச்சிகளின் பத்தில் ஒருபங்கை ஏன் அமைதி பேச்ச்சு வார்த்தைக்கு உதவுமாறு சர்வதேச சமூகத்தை வேண்டுவதில் செலவிடக் கூடாது?
Wednesday, April 18, 2007

அடத் தூ...ஒங்களுக்கு யாருதான்டா ஒரிஜினல் பதிவர் ?

நேற்று வழக்கம்போல கூகிள் டாக்கில் நம் வலையுலகை சேர்ந்த நண்பர்களுடன் அரட்டைஅடித்துக்கொண்டிருந்த போது ஒரு அனானி உடன்பிறப்பு அவசரமாக பேச் வேண்டும் என அழைத்தார் அந்த பேச்சு அப்படியே இங்கே:

அலோ தலை எப்படி இருக்கீங்க வணக்கம்

வணக்கம் நல்லா இருக்கேன் நீங்க எப்படி

நான் நல்ல சுகம் ஆமா எங்க இருக்கீங்க அமீரகத்துலயா?

அதே , அமீரகம் துபாய்

சரி அங்க இருக்கிற நம்ம பதிவுலக நன்பர் யாருக்காவது போன் பன்னி பேசுங்க

ஏன்?

காரணமாத்தான்யா

அட என்னன்னு சொல்லுங்க இங்க இருக்கிர நம்ம முத்துக்குமரன் கூட தினமும் சாட் பன்னுவேன்யா

ஆனாலும் ஒரு போன் பன்னுங்களேன்

ஏன் என்ன விசயம் சொல்லுங்கய்யா

என்னன்னா நீங்கதான் போலியார்ன்னு இங்க ஒரு பேச்சு அடிபடுது அதுதான்

யாரு சொன்னது?

அட திராவிட பதிவர்களை பாத்து பயப்படற ஆளுங்க யாரு அவனுங்கதான்

என்ன சொன்னாங்க அமீரகத்தில இருக்கிறதா சொல்ற மகேந்திரன் தான் போலியார் அவரு அமீரகத்தில இல்லை மலேசியாவில இருக்கிறாரு அவருதான் ஐபி யெல்லாம் மாத்தி துபைல இருக்கிற மாதிரி பதிவு போடுறாருன்னு சொல்றாங்க அதுனாலதான் சொல்றேன் நீங்க அங்க இருக்கிற எதாவது பதிவர்களுக்கு போன்பன்னுங்க அவங்களோட தொடர்பு வச்சுக்கோங்க

சரி செய்யறேன் ஆனா நான் போலியார் இல்லைய்யா அந்த அளவுக்கு நான் பெரிய ஆளும் இல்லை என்னோட அட்ரஸ் என்னோட போட்டோ எல்லாத்தையும் போட்ட பிறகும் அந்த பன்னாடைகள் சந்தேகப் பட்டா படட்டும் எனக்கென்னா ?

அதுக்கில்லே மகேந்திரன் ஏன்னா உங்களை போலியாரா நினைக்கிறவங்களுக்கு இல்லைன்னு சொல்ல வேண்டாமா?

சரி பேசறேன்

என்று சொல்லிவிட்டு எனது இன்னொரு வலையுலக நண்பருக்கு அதே ஜிமெயிலில் பேசினேன்

வணக்கம் அய்யா

சொல்லுங்க அய்யான்னு சொல்லாதீங்க நான் அவ்வளவு பெரிய ஆள் இல்லை

சரிங்க அய்யா

என்ன்னய்யா விசேசம்

உங்களுக்கு ஒரு சேதி சொல்லனும்

என்ன சொல்லுங்க இப்போதான் நம்ம *****கூட பேசினேன் தலைவர் ஒரு குண்ட தூக்கி என் கீழ வச்சுட்டார்

என்னது விவகாரம்ஒன்னுமில்லை நான் போலியாராம் நான் மலேசியாவில இருக்கேனாம் அதான்

அடப் பாவிகளா வர வர அந்த பன்னாடைகளுக்கு என்னத்த ஒளருவதுன்னே தெரியாம போச்சி ஒன்னுமில்லை எனக்கும் நெருக்கமான ஒருத்தர் சொன்னாரு போலியார் குரூப்பில் இருக்க ஒரு ஆளு அமீரகத்தில் இருப்பதாக ஆனா அது நீங்க இல்லைன்னு தெரியும்

அதேதான் நான் இல்லைங்க

அட தெரியுங்கானும்

ஆனா ஏன் இப்படி ஒரு வதந்திய கிளப்புறாங்க

அட விடு மகி அந்த அரண்டவனுங்க கண்ணுக்கு இருண்டதெல்லாம் போலியாத்தான் தெரியும்

இந்த அளவுக்கு பயப்படற பன்னாடப் பசங்க எழுதுறத விட்டுப்போட்டு போய் மந்திரம் சொல்ற பழைய வேலைய பாக்க வேண்டியது தான அத விட்டுப்போட்டு எதுக்கு வந்து இங்க விடாது கருப்பு போலி, மகேந்திரன் போலி இன்னும் இருக்கிற வலைஎழுதுறவன் எல்லாம் போலின்னு ஒப்பாறி வக்கனும் இவனுங்க பொலம்ம்பலுக்கு ஒரு அளவே இல்லாத போச்சுய்யா...

.இன்னும் நீண்ட இந்த சாட்டிங்கில் இவ்விவகாரம் பற்றி அதிகம் பேசாததால் இப்பேச்சு இத்தோடு முற்றும்.

சரி இப்போது இந்த விசயம் பற்றி எனது கருத்து கொஞ்சம் எட்டி நின்று படிக்கவும்

அடத் தூ ..............ஒங்களுக்கு யாருதான்டா ஒரிஜினல் பதிவர் ?Monday, April 16, 2007

திண்ணையும் அருணகிரியின் அயோக்கிய எழுத்தும்


திண்ணை பற்றி எனக்கு ஒரு நல்ல கருத்து இல்லை என்பதால் பார்ப்பதில்லை.


காந்தி-பெரியார் பற்றி அருணகிரி என்பவர் எழுதியிருந்ததைச் சொன்னார்கள்.அதற்கு உள்ள மரியாதை தரப்பட வேண்டுமல்லவா?மரியாதை கெட்டவர்களுக்கும் மரியாதை தருவது பெரியாரின் வழக்கம்.


28-8-1927 குடியரசு தலையங்கம்.


"முக்கியமாக மூன்று விஷயங்களைப் பற்றியேதான் ம்காத்மாவிடம் நானும்,நமது நண்பரான திரு எஸ்.ராமநாதனும் சம்பாஷித்தோம். அதாவது,என்னுடைய அபிப்பிராயமாக மகாத்மாவுக்கு எடுத்துச் சொன்னதெல்லாம் இந்தியாவின் விடுதலைக்கும் ,சுயமரியாதைக்கும் மூன்று முக்கியமான காரியங்கள் செய்து முடிக்கவேண்டுமென்றும்,அது முடிவு பெறாமல் நமது நாட்டுக்கு விடுதலை இல்லையென்றும் நாங்கள் முடிவு செய்திருக்கிறோம் என்பதாகச் சொன்னோம்.

அதாவது,ஒன்று காங்கிரஸ் என்பதை ஒழிக்க வேண்டியது.இரண்டாவது ஜாதி ஒழிக்கப்படவேண்டும்.இதற்கு இந்துமதம் என்பதை ஒழிக்க வேண்டியது.மூன்றாவது,பார்ப்பன ஆதிக்கத்தை ஒழிக்க வேண்டியது என்பதாகும்.இம்மூன்று விஷயங்களைப் பற்றியும் மகாத்மா சொன்ன சமாதானங்கள் எம்முடைய அபிப்பிராயத்தை மாற்ற்க்கூடியதாயில்லை யென்றும் சொல்லி மகாத்மாவிடம் உத்தரவு பெற்றுக் கொண்டு வந்துவிட்டோம்."


1-9-1939 ல் நவசக்தி ஆசிரியராக திரு.வி.க. என்று கையொப்பமிட்டு சாமி.சிதம்பரனார் எழுதிய 'தமிழர் தலைவர் பெரியார் ஈ.வெ.ரா வாழ்க்கை வரலாறு' நூலுக்கு முன்னுறை எழுதியுள்ளார்.


"இந் நூற்றலைவர் இராமசாமிப் பெரியார் அவர் ஈரோட்டில் பிறந்து வளர்ந்தவர்.அவர்தம் புகழோ தென்னாட்டிலும்,வடநாட்டிலும்,பிற நாடுகளிலும் மண்டிக்கிடக்கின்றன!காரணம் என்னை?தோழர் ஈ.வெ.ரா வின் உண்மையும்,வாய்மையும்,மெய்மையுஞ் செறிந்த அறத்தொண்டாகும்.அகவுணர்வு வளர்ச்சிக்கு ஊற்று எது?அஞ்சாமை. அஞ்சாமைக்குத் தோற்றுவாய் எது? உரிமை வேட்கை.உரிமை வேட்கை ஓங்க ஓங்க அஞ்சாமை எழுந்து பெருகும்.அஞ்சாமை பெருகப் பெருக அகவுணர்வு வளர்ந்துகொண்டே போகும்.அகவுணர்வு வளர்ச்சியினூடே பிறங்கி வருவது உண்மையும்,வாய்மையும்,மெய்மையும் செறிந்த அற்த்தொண்டு.


உரிமை வேட்கை,அஞ்சாமை முதலியன் சீர்துருத்தத் துறையில் ஈ.வெ.ரா செய்து வரும் பணி நாடறிந்த தொன்று.இன்னோரன்ன சிறப்புக்கள் பல மிடைந்துள்ள வாழ்வினராகிய பெரியாரின் வரலாற்ரைக்கொண்ட இத் தமிழ் நூலை நாடு பொன்னே போல போற்றி ஏற்கும் என்பதில் அய்யமில்லை." ஈ.வெ.ராமசாமி காங்கிரசிற்காக கடுமையாக உழைத்தவர்.செயலாளர்,தலைவர் பதவிகள் வகித்தவர்.ஒரு கால்த்தில் காங்கிரசே தென்னாட்டில் நாயுடு(கிருஷ்ணசாமி},நாயக்கர்{ஈ.வெ.ரா},முதலியார்{திரு.வி.க} கட்சியாகத்தான் கருதப் பட்டது.இந்து மதமும்,பார்ப்பனீயமும் ஒன்றும் பெரியாரைப் பொறுத்துக் கொண்டு அமைதி காக்கவில்லை.பேச்சில்,கூட்டங்களில் அடி தடி,செருப்பு மற்ற பாம்பு முதல் பலவும் வீசப்பட்டு,மாநாட்டில் தீவைத்து ,உயிருக்குக் குறி வைத்து என்று பலவிதமான எதிர்ப்புக்களை இந்து மதப் பழக்கப்படி செய்து பார்த்தனர்.ஒன்றும் பலனில்லாமல் அடங்கி விட்டனர் என்பது சரித்திரம். சரித்திரத்தை,


உண்மையை திரிப்பதும் அதற்கு திண்னை ஒரு ஆதரவு அளிப்பதும் பெரிய ரகசியம் ஒன்றுமில்லை.பெரியாரைப் பற்றி சிரியோரின் சின்ன புத்தி எழு்த்துக்கள் ஒன்றும் புதிதல்ல.பெரியார் அதுதான் எனக்கு விளம்பரம் என்றார்.


தொடரட்டும் திண்ணையில் விளம்பரம்.

Sunday, April 15, 2007

அட சண்டைய விட்டுப்போட்டு ம்யூஸ் சொல்றதை கேளுங்க

இந்த தமிழ் வலைப்பூ உலகத்தில கடந்த ஒரு வாரமா என்ன நடக்குது எதுக்கு நடக்குதுன்னு ஒன்னும் புறியலை. பாக்கிற வலையெல்லாம் ஒரே ஜோதியும், ராமனும், சல்மாவும்தான் பாலபாரதிக்கு ஒரு மெயிலு, டோண்டு ஒரு நேரடி ரிப்போர்ட், நேசகுமார் ஒரு பதிவு, அதுக்கு ஆதரவா இன்னும் பல அன்பர்கள், சைபர்கிரைம், ம்யூஸ், முகமூடி, திலகவதி ஐபிஎஸ் வரைக்கும் வந்துட்டாங்கப்பா இதில இருந்து ஆரம்பத்தில இருந்தே ஒன்னும் சொல்லாம இருந்த அமுக கூட ஒரு பட்டி மன்றம் போட்டாச்சின்னா பாருங்க. சரி
எனக்கு இப்ப இருக்க சந்தேகம் எல்லாம் ஏன் வந்ததுன்னா நம்ம அண்ணாச்சி ம்யூஸ் தான் காரணம்.
அவரு தன்னோட பின்னூட்டம் ஒன்னுல கேட்டது, சொன்னது எல்லாம் படிச்சா அட ஆண்டவா இந்த லோகத்தில எல்லாரும் தீவிரவாதியான்ன்னா போயிட்டா இந்த ப்ளாகர்ல எழுதுறதை படிச்ச இந்திய சனத்தொகை மொத்தமும் அட ஒரு நூற்று பத்து கோடி இருக்குமா? பொங்கி எழுந்து அமுக மேல கேஸ் போடுவாங்க போல இருக்குப்பா
நான் படிச்ச அந்த பின்னூட்டத்தை நீங்களும் படிங்க
அங்க அங்க தேவையில்லாத காமெடிகளை கட்பன்னிட்டேன் (அட நான் கொஞ்சம் காமெடி பன்ன வேண்டாமா?)
//தமிழ்மணத்திலிருந்தும் ப்ளாக் உலகத்திலிருந்தும் முற்றிலுமாக நான் விடுபட்டு பல மாதங்கள் ஆகிவிட்டன. இங்கு மீண்டும் வரப்போவதும் இல்லை.//
யப்பா எனக்கொரு வேலை மிச்சம் இல்லைன்னா அவரு வந்து அரஸாங்கம், ஸட்டம், பகவான், பரமாத்மான்னு பின்னூட்டம் போட இனிமெ நான் தனியா வ்டமொழிய கிண்டல் அடிக்க ஒரு தனிப்பதிவு ஆரம்பிக்க வேண்டியதில்லை
// இருப்பினும், லக்கிலுக்கின் (ப்ளாக் உலகைச் சேராத) நண்பர் ஒருவர் எனக்குத் தெரியப்படுத்திய தகவல்கள் அதிர்ச்சியூட்டியதாக இருந்தது. ஜெயராமன் அவர்களை பலியாடாக்க விடாதுகருப்புவோடு சேர்ந்து ஒரு மிகப் பெரிய கும்பல் ஈடுபடுகின்றதோ என்று சந்தேகம் வருகின்றது.//
என்னா ஒரு ரெண்டு லட்ச்சம் பேரு இருப்பமா ? வேணுமின்னா ஒரு சர்வே எடுக்கலாம் கம்ப்யூட்டர் தெரிஞ்ச் நெட் பயன்படுத்துற வேலையில்லா ஆளுங்க எத்தனை பேர்,,, அதில ப்ளாகர்ன்னு ஓன்னு இருக்கிரது தெரிஞ்சது எத்தனை பேர் அதிலும் தமிழ் மணம் தேன்கூடு இதையில்லாம் படிக்கிற ஆளுங்க எத்தனை பேர்? இப்பல்லாம் தினைக்கும் ஒன்னு பேமசா இருக்கு அதனால இதை தினம் படிச்சு நீங்க சொல்ற முஸ்லிம் தீவிரவாதிகளுக்கு தகவல் தந்து அவங்க பின்னனியில வந்து நம்ம லக்கிய விட்டு (கையாள் ?)
ஜயராமனை கூப்பிட்டு மிரட்டுவது அதுவும் அவருக்கு தெரியாமல் பதிவு வேறு அட அப்படி மிரட்டினா பதிவு பன்னுவமா நாங்க ? இப்ப ஒரு சின்ன லாஜிக் இடிக்கலை? சரி இப்படி சிந்தனை பன்னுங்க நீங்க ஒரு விவகாரத்தில மாட்டி உள்ள போறீங்க அங்க உங்களுக்கு மிரட்டலே இல்லாம உண்மைய ஒத்துகிட்டீங்க அப்ப நீங்க பயந்த சுபாவம் கொண்டவர். இல்லையா என் நகக் கண்ணுல ஊசி விட்டாத்தான் சொல்வேன்னாக்க நீங்க துனிஞ்சவர் ஜயராமன் பயந்தவர் ஒத்துகிட்டார் (இது லாஜிக்குக்காக சொல்றது ஒடனே ஒங்கிட்ட சொன்னாறான்னு கேள்வி கேக்கப் படாது ஓகே?)
//பாலபாரதி எவ்வளவு பெரிய ஆபத்தில் இருக்கிறார் என்பது தெரியாமல் காலை விட்டுவிட்டாரோ என்றும் தோன்றுகின்றது.//
அட சம்மந்தப்பட்ட பால பாரதியே ஒன்னும் பேசலை இவரு அடிக்கிற கூத்து தாங்கலியேப்பா பெரிய ஆபத்துன்னா என்னது? இனிமே பால பாரதி பதிவெழுத மாட்டாறா அட ஒரு பத்துப்பேரு தொடந்து படிப்பாங்களா அவரு பதிவ?
காவல்துறை விசாரிக்கும்போது தன்னுடைய FIRல் பாலபாரதியையே முதல் குற்றவாளியாய் சேர்க்கும். மற்றவர்கள் இரண்டாவது, மூன்றாவது குற்றவாளிகள் ஆவர்.
ஆமா எனக்கு ஒன்னும் புறியலை என்னை இந்த மாதிரி மிரட்டி வாங்கிட்டு போயிட்டாங்கன்னு ஜயராமன் புகார் பன்னினால் முதல் குற்றவாளியா பால பாரதிய சேக்கும் ஆனா இந்த ஆளு இன்ன மாதிரி ஆளு இப்படி செஞ்சாருன்னு பால பாரதி புகார் பன்னினா? அப்பவும் பால பாரதிதானா? இடிக்குதே?
//பாலபாரதியை தூண்டி விட்டவர்களின் பின்னால் இருப்பவர்கள் ஏதேனும் தீவிரவாதக் குழுவினராக இருந்து அவரை அச்சுறுத்தியிருக்கலாமோ என்றும் சந்தேகம் வருகின்றது.//
வாங்கய்யா அவன் அவன் ஒன்னும் பொழப்பு இல்லாம வெட்டியா போற நேரத்தில அடுத்தவன் கதைய ஆகாத இடஒதுக்கீட்ட பத்தி இல்ல நாலு கவுஜ எழுதி அட ஒரு படமாவது போட்டு கொல்லறத வீடுபுட்டு தீவிரவாதமா போங்கடேய் வேலையப் பாக்க

Friday, April 13, 2007

ரஜினி- தி பாஸா ?

செந்தழல் ரவியிடம் சுடர் இருக்கும் போதே தெரியும் அது உங்களிடம்(லக்கி லுக்) வரும் என்று ஆனால் இப்படி ஆறு மாதம் சென்ற பின் எட்டிப் பார்த்து குழம்பி குட்டை குழப்பிக்கொண்டிருக்கும் அடியேனைத் தேடி அது வரும் என நான் நினைக்க வில்லை.

எப்படியோ வந்து விட்டது இது குறித்த அன்புக் கண்டணத்தை வலைப்பூ சுனாமி லக்கியின் மேல் இருத்தி அ.மு.க தோழர்களின் ஆசிகளுடன் இந்த சுடரை தொடர்கிறேன்.
(இதெல்லாம் லைட்டான கேள்வியா லக்கி நீங்க வர வர ஒரு மார்க்கமாத்தான் போறீங்க )
1) அமுக தோற்றுவிக்கப்பட்டதின் அவசியம் என்ன?
இந்த கேள்வி லைட்டாக இருப்பினும் பதிலை கொஞ்சம் ஹெவியாக சொல்லியாக வேண்டும். கடந்த வருடம் ஏப்ரல் மாதம் முதன் முதலில் குமுதம் ரிப்போர்ட்டரில் வந்த இணையத்தில் அன்னியன் எனும் ஒரு கட்டுரையில் போலியார் பற்றியும் டோண்டு பற்றியும் முதன் முதலாக படிக்கும் வரை எனக்கு தமிழ்மணம் பற்றியோ அல்லது வலைப்பூக்கள் பற்றியோ அறிந்திருக்கவில்லை.

அதன்பின் தமிழ் வலைப்பூக்கள் பற்றி கூகிளில் தேடியபோது தெரிந்துகொண்டதுதான் அந்திமழை அப்போது தமிழ்மணம் பற்றி தெரியாது அதில் ஒரு சில பக்கங்களை பதிவேற்றியபோது அவை எடிட் செய்யப்பட்டே வளியிடப் பட்டன எனது கருத்துக்களை என்னைக் கேட்காமல் எடிட் செய்த அந்த மழை எனக்குள் அயற்ச்சியை உண்டாக்கியது. அதில் இருந்த சில சுட்டிகளின் உதவியுடன் நான் வந்து சேர்ந்த இடம் தமிழ் மணம் .
தமிழ் மணம் வந்த முதல் நாளே கொஞ்சம் சுவாரஸ்யத்தை காட்டியது. அதன் பின் அதை எப்படி நாமும் எழ்ஹ¤துவது எனத் தெரிந்துகொள்ள அதிலிருந்த சில வலைப்பக்கங்களை படித்தபோது குழலி மற்றும், தமிழ்சசியின் கட்டுரைகள் காணக் கிடைத்தன அவற்றின் அரசியல் பார்வையும் சில அதிரடிக் கருத்துக்களும் என்னை ஈர்க்கவே நாமும் இப்படி எழுதினால் என்ன என ஆரம்பித்ததுதான் கிழுமத்தூர் எக்ஸ்பிரஸ். அதில் வந்த சில கட்டுரைகள்
அதில் இருந்த முகம் காட்ட மறுத்த பதிவர்கள் போலிகள் போலிகள் எனக் கூவி குத்தாட்டம்
போட்ட பார்ப்பணீய வலைப்பதிவர்கள் இவர்களை எதிர்த்து போலிக்கு ஆதரவாக எழுதிய யார் போலி எனும் கட்டுரை இணையத்தில் நிறைந்து கிடக்கும் சில போலிகளை இணம்காட்டியது .(உண்மையான போலியாரிடம் இருந்து பாராட்டு மின்மடல் வந்தது தனிக்கதை) ஆனால் அதே நேரம் சில பெரும் பதிவுகள் பதிவர்கள் எனக்கு கோப(அதேதான்) மடல் அனுப்பினார்கள் டோண்டுவும் தனது எல்லா பின்னூட்டங்களின் பின்னாலும் "ஆபத்தான அதர் மற்றூம் அனானி ஆப்ஷன் உங்கள் பதிவில் இருப்பதால் இதை உண்மையான டோண்டுதான் இட்டான் என்பதற்க்காக எனது ......... இட்டுக் கொள்கிறேன்" என்று புலம்பிக் கொண்டிருந்தார்

அவர்கள் அத்தணை ஆபத்தானவர்களா என்றால் இல்லை. அனானிகள் மூலமாகத்தான் நமது (லக்கி, செந்தழல் ரவி, கிழுமத்தூர் எக்ஸ்பிரஸ் ) வலைப்பூக்கள் பிரபலமாயின. அப்போது தான் நல்ல அனானிகளும் அகிலத்துக்கு தெரிய வந்தனர். ஆனால் சில உண்மைப் பதிவர்களே முகம் காட்ட மறுத்து அனானியாக வரும்போது ஏன் அனானி ஆப்சன் தவறு என்கிறார்கள் எனத்தேடியபோது அற்புதமான நகைச்சுவை உள்ளம் கொண்ட நல்ல அனானிகள் இந்த வலைப்பூவெங்கும் இருப்பதை கண்டுகொண்டோம் அதன் பின் ஒரு சில நாட்களில் அன்னிய லோகம் அடையாளச் சோதனை வந்தது. அதில் இருந்த கட்டுப்பாடுகளை பயன் படுத்த மறுத்த பதிவர்கள் அனானிகளால் ஆதரவளிக்கப் பட்டனர். அப்போது தோன்றிய எண்ணம் தான் இந்த
அனானிகள் முன்னேற்றக் கழகம்(அமுக)
இதை செயல்படுத்த வேண்டி செந்தழல் ரவி, நான் இன்னும் ஒரு அன்பர் ஆரம்பித்த வலைப்பூ அனானிகள் முன்னேற்றக் கழகம்.இதில் சில பெருந்தலைகள் எழுதியிருக்கிறார்கள் பெயர் இல்லாமல். தமிழ்மணத்தில் இணைக்கும் போது அவர்களும் ஒரு எச்சரிக்கை யோடே இணைத்தனர் இப்போதுவரை வெற்றி நடைதான் இன்று சிங்கையில் மாநாடும் சென்னையில் கூட்டமும் அகில உலக அங்கீகாரமும் பெற்று அமுக ஒரு நல்ல அமைப்பாக செயல்படுவது காணும்போது மகிழ்வாய் இருக்கிறது
2) தந்தைபெரியாரின் சிந்தனைகள் இன்னும் எவ்வளவு காலத்துக்கு தமிழ் சமூகத்துக்கு தேவை?
இன்னும் எவ்வளவு காலத்துக்கு தேவை என்ற ஒரு வரையரைக்குள் அடங்கும் அத்தியாவசிய பண்டமில்லை அவர் சிந்தனைகள் அவை ஒரு நூற்றாண்டுக் கலாச்சா¡ரம் மனித குலம் முழுமைக்கும் நிழல் கொடுக்கும் ஆலமரம் அவர். அவர் இருந்ததால் தான் நாம் சில தெளிவுகள் அடைய முடிந்தது வெளிச்சம் இருப்பதால் விளக்கை அணைத்துவிடலாம் என்றால் மீண்டும் இருட்டுக்குள் விழ வேண்டியதுதான். மனித குலம் இருக்கும் வரை அவர் சிந்தனைகள் தேவை ஆனால் அவரே சொன்னதுபோல் காலத்துக்கு தகுந்த மாதி, அல்லது நம்மால் சுயமாக சிந்த்க்கத் தெரியும் வரை.

ஒரு இனத்தின் அடையாளம் மட்டுமல்ல சுயமரியாதை அது உரிமை எல்லா மனிதனுக்கும் பொதுவானது என தனது எதிரிகளுக்கும் உணர்த்தியவர். ஒவ்வொரு மனிதனின் சுயமரியாதைக்கும் சொந்தக்காரர் பெரியார். கடவுளைக் காட்டி கண்கட்டி கிடந்தவனின் கரம்பற்றி வழிகாட்டியர் பெரியார் அதனால்தான்அவரின் சிந்தனைகள் இன்றும் நமக்கு தேவை, போலி அரசியல் வாதிகள் திராவிடம் பேசி மக்களை ஏமாற்றும் வரை பெரியாரின் சிந்தனைகள் மக்களுக்கு தேவைதான்

பெரியார் சிந்தனைகள் இல்லாத தமிழ் சமூகம் இருட்டுப் பாதையில் குருட்டுப் பூணையாகும்.
3) கிழுமத்தூர் எங்கே இருக்கிறது? அந்த ஊரைப் பற்றிய உங்கள் நினைவுகளைச் சொல்லுங்களேன்.
ஏன் சொன்னால் ஆள் வைத்து அடிப்பீர்களோ: :)

எனது முதல் பதிவில் அது இருக்கும் இடம் மிகத் தெளிவாக சொல்லப் பட்டுள்ளது இங்கே சில நினைவுகள் மட்டும் ,

ஊரில் இருக்கும் ஆறு... எங்கள் கிராமம் முழுவதும் விவசாய நிலம் என்பதால் ஆறு இன்றியமையாத ஒன்று அதில் தண்ணீர் வரும் வேளைகளில் குளிப்பதும் குளத்தில் நீந்துவதும் (எங்கள் ஏரியாவில் இருக்கும் மிகப் பெரிய குளம் எங்கள் ஊரில்தான் உண்டு) கிராமத் திருவிழாக்களும் நண்பர்களுடன் சேர்ந்து எல்லா இரவுகளும் பேசிக்கிடந்த அந்த ஏரிக் கரை அம்மன் கோவிலும் நான் திருமணத்துக்கு முன்னும் பின்னும் என் துணையின் கரம்பற்றி நடந்த கைப்பெரம்பலூர் சாலையும்(ரைஸ்மில் ரோடு) என் குடும்ப உறுப்பினர்களாய் இன்றும் இருக்கும் கணக்கில் அடங்கா நாய்களும் பூனைகளும் மறக்க முடியாதவை
4) சாருநிவேதிதா மீது உங்களுக்கு என்ன கோபம்? அவரைப்பற்றிய உங்கள் விமர்சனம் என்ன?
அவர்மேல் எனக்கு தனிப்பட்ட முறையில் எந்தக் கோபமும் இல்லை இன்னும் உண்மையைச் சொன்னால் இன்றுவரை என்னோடு யாகூவில் அரட்டை அடிக்கும் நல்ல நண்பர் அவர். முன்பே ஒருமுறை அவர் பேசியது பற்றி பதிவிட்டுள்ளேன்.
அவரின் படைப்புகள் மீது மட்டுமான விமர்சணங்கள் சில நேரங்களில் கோபத்தின் உச்சிக்கு சென்று அவரையும் சில நேரம் தாக்கியிருக்கலாம். அவரைப்பற்றி சொல்லவேண்டுமானால் நல்ல எழுத்தாளர். தனிப்பட்ட அவரை விமர்சணம் செய்யும் தகுதி எனக்கு இல்லை ஆனால்
ஒரு வாசகன் எனும் முறையில் அவரின் எழுத்துக்களுக்கு விமர்சனம் எழுதும் உரிமை எனக்கு உண்டு அதன்படி பின் வருவது அவர் படைப்புகள் மீதான விமர்சனமே அன்றி அவர் மீதான தாக்குதல் இல்லை சாரு நிவேதிதா தனக்குத்தானே புலம்ப வேண்டியவற்றின் பிரதிகளை காசாக்க வேண்டி ஜீரோ டிகிரி நாவலை எழுத் அதுவும் யாருக்கும் புரியாமலே நல்ல விற்பனையானது அவர் மேலான நல்ல புரிதல்கள் இல்லாமல் அவரின் படைப்புலகம் கேள்விக்குள்ளான போது லத்தீன் பிரான்ஸ் இத்தாலி என கண்ணுக்குத் தெரியாத தேசங்களின் நல்ல எழுத்தாளர்கள் துணைக்கு வருவார்கள்
இவர் எழுதுவதே புரியாத போது இவர் ரசிக்கும் புத்தகங்கள் நிணைக்கவே மண்டை காய்கிறது. யோனி பற்றியும் முலைகள் பற்றியும் இன்னும் உடலுறுப்புக்கள் பற்றியும் எழுதுவதே நல்ல இலக்கியம் என நம்பும் ஒரு சாதாரண கலகக் காரர்.
கோனல் பக்கம் அவரின் இன்னொரு பக்கம் நாம் வெளியிடத்தயங்கும் அந்தரங்க டைரிக் குறிப்புக்களை நல்லி குப்புசாமி உதவியோடு இணையத்தில் ஏற்றி தினமலருக்கு கொடிபிடிக்கும் ஒரு சாதாரன சிறுகதை எழுத்துக்கு சொந்தக்காரர். இன்னும் இந்த உலகில் எதுவெல்லாம் நல்லவையாக பார்க்கப் படுகிறதோ அவையெல்லால் நல்லவை யில்லை என்று தனியே புலம்பிக்கொண்டு கிடக்கும் ஒரு பரிதாப எழுத்தாளர். உதாரணம் சுந்தர ராமசாமி முதல் இப்போதைய சாய்பாபா வரையிலான அவரின் கட்டுரைகள்,
கமல்ஹாசன் எழுதினால் அது காமம் ஆபாசம். ஆனால் அதையே இவர் ஒரு மது பாரில் பார்த்த பெண்ணோடு அப்படியே பின்னால் இருந்து புணரலாம் என எழுதினால் அது இலக்கியம் என இரட்டை வேடம் போடும் எழுத்துக்களுக்கு சொந்தக்காரர்
5) நடிகர் ரஜினிகாந்தைப் பற்றிய உங்கள் மதிப்பீடு என்ன?
அவரின் ஆரம்பகால கருப்புவெள்ளை படங்களை அவரின் ஆரவாரமில்லாத நடிப்பை இன்றும் ரசிப்பவன் தான் நான் ரஜினியின் சேட்டைகள் அதிகமாகி தனக்கு இருக்கும் ரசிகர் பட்டாளத்தினை குஷிப்படுத்த கோமாளி வேடம் போட்டபின்னால் வெளிவந்த படங்களை குறிப்பாக ரஜினியை கெடுத்ததில் எஸ்.பி முத்துராமனுக்கு ஏவிஎம்முக்கு பஞ்சு அருணாச்சலத்துக்கு வைரமுத்துவுக்கு பெரும் பங்குண்டு. இந்த கேள்வியை என்னிடம் நீங்கள் கேட்டதன் அர்த்தம் எனக்கு புரிகிரது அவர்மேலும் எனக்கு எந்த கோபமும் இல்லை எல்லாம் அவ்ர் ரசிகர்கள் எனக் கூறிக்கொள்ளும் விசிலடிச்சான் குஞ்சுகள் மேல் உள்ள கோபம், பல காரணங்களுக்காக.

மதிப்பீடு எனக்கேட்டால் தமிழ் திரையுலகின் சில ஏற்றுக்கொள்ள முடியாத வெற்றிகளுக்கு சொந்தக்காரர்.

நல்ல மனிதர் என மற்றவர்கள் சொல்லக் கேட்டதுண்டு நல்ல நடிகர் இல்லை. இதுமட்டும் எனக்குத் தெரியும்
சாதணைகள்:
1. ஒரு பஸ் நடத்துனர் இன்று இந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகரானது
2. ரசிகர்களை போல் இல்லாமல் தன் சக போட்டி நடிகர்களோடும் நட்போடு இருப்பது
3. ஜெயலலிதா வந்தால் தமிழ் நாட்டை ஆண்டவனே காப்பாற்ற முடியாது என தூர்தர்சனில்
பேட்டி கொடுத்தது
4. அதே ஜெயலலிதாவுக்கு ஓட்டைப் போட்டுவிட்டு தைரிய லட்சுமி என்பது
5. அரசியலுக்கு வற்றேன் வற்றேன் எனக் கூறி இன்றுவரை பட்டினிகிடக்கும் தன் குஞ்சுகளின்
ஏக்கப் பார்வையை சமாளிப்பது
6. பாபா தோற்றபோது பணத்தை திருப்பித் தந்தது
7. காவேரி போராட்டத்துக்காக சென்னையில் உண்ணாவிரதம் இருந்தது
அவரின் சமீப சாதனை:
8. அகில உலகில் முதன் முதலில் ரிலீசுக்கு முன்னறே திருட்டு ஆடியோ சிடி
லக்கியின் எல்லா கேள்விகளுக்கும் பதில் அளித்துவிட்ட திருப்தி இருந்தாலும் இந்த சுடரின் தொடர்ச்சியாக இதே கேள்விகளுக்கு இன்னும் விரிவான பதில்கள் வந்தாலும் வரலாம் . இன்னும் ஓரிரு நாட்களே சுடரின் கடைசி நாளாக இருப்பதால் இச் சுடர் தொடரை இத்துடன் முடித்துக் கொள்கிற்றேன் அல்லது இன்னும் எழுத யாரையும் அழைக்கலாமென்றால் பின்னூட்டி விளக்கம் அளிக்கவும்
வெட்டிப்பயல் பின்னூட்டத்தில் கேட்டுக்கொண்டபடியும் அப்படியே நான் சுடரைக் கொடுப்பதால் நான் கடைசி ஆளாக இருப்பேன் என்பதாலும் இச் சுடரை வெட்டிக்கான கேள்விகளுடன் அவரிடமே அளிக்கிறேன்
கேள்விகள்:
1. திராவிடன் என்பவன் யார் என்ற உங்கள் நெடுநாள் சந்தேகம் தீர்ந்ததா?
2., அனானி கழக தோழர்களால் வலைப்பூ உலகம் ஏற்றம் அடைகிறதா இல்லையா
3.உங்களுக்கு நெருக்கமானவர் ஒரு போலி என்று அறிய வந்தால் உங்கள் நிலைப்பாடு என்ன ?
4.உயர்கல்வியில் இடஒதுக்கீடும் க்ரீமி லேயரும் எல்லோருக்கும் புரியும் விதமாக விளக்கவும்
5. நீங்கள் எழுதுவதெல்லாம் கற்பனை கதையா இல்லை சொந்த கதைகளா? அப்படி உண்மையாய் இருக்கும்பட்சத்தில் அவர்களுக்கு இது தெரியுமா?
யப்பா வெட்டி உங்களுக்கு கேள்வி கேக்கறதுக்குள்ள எனக்கு பெண்டு கழளுதுப்பா :)

Thursday, April 12, 2007

அம்பலமாகும் ஆபாச ஜெயராமன்

அனுமன் பற்றி கதைகளில் படித்து இருக்கிறோம், அனுமன் எந்நேரமும் இராமனை நினைத்துக் கொண்டு இருப்பாராம். அப்படி இராமனையே நினைக்கும் அளவுக்கு இராமன் யோக்கியவானாக இல்லை.

இங்கே நடந்த ஒரு ஆப்பரேஷன் அனுமன் திட்டத்தில் கண்டரியப்பட்ட ராமனின் கதை.

1. இராமன் மறைந்திருந்து அம்பு எய்தினான் - அவன் மாவீரன் அல்ல

2. இராமன் மாயமானைக் கண்டு மதிமயங்கிய சீதையின் சொல்கேட்டு அதைப்பிடிக்க பின்னே சென்றான் - நல்ல அறிஞனும் அல்ல

3. இராமன் தன் மனைவியுடன் காட்டுக்கு வந்தாலும் தம்பி இலக்குவனை அவ்வாறு மனைவியுடன் வருவதற்கு அறிவுரைக் கூரவில்லை - நல்ல எண்ணம் கொண்ட சகோதரனும் அல்ல

4.இந்திரனிடம் மோசம் போன அகலிகையை கற்புக்கரசி என்றவன் உத்தமியை தூற்றியவன்

5. இவற்றிற்கெல்லாவற்றிற்கும் மேல் பொன் போன்ற குணவதியை அவதூறு கிளப்பி தீக்குளிக்க வைத்தான்- கடைந்தெடுத்த அயோக்கியன்

இவன் மறைந்து இருந்து வாலிமீது அம்பு செலுத்திய போது முகமிலியாகத்தான் இருந்திருக்கிறான். ஆனால் இராவணனிடம் வீரவசனம் பேசும் போது தாம் ஒரு வீரன் நிராயுதபாணியாக இருக்கும் உன்னை கொல்லவில்லை இன்று போய் நாளைவா என்று சொல்லி இருக்கிறான்.

ஜெயராமன் - ஒரு இரட்டை வேடதாரி ஒருபக்கம் வைதீகம் பேசினாலும் மறுபக்கம் ஆபாசமாகவே சிந்தித்து இருக்கிறான்

இல்லாவிடில் இலங்கையில் இருந்து மீட்டுவந்த சீதையை தீயில் இறக்கி சோதிப்பானா. சிறையில் வைத்திருந்தாலும் அவளைத் தொடாத ராவணன் ஆண்மகனா இல்லை இந்த ஆபாச ராமன் ஆண்மகனா அனுமனே சிந்தித்துப் பார்

அனுமனே இன்னும் நீ ஏன் ஜெய் ராம் என்று சொல்கிறாய் ? அவன் ஜெய்ராமன் இல்லை பொய்ராமன்

தனது வீரத்தை மறைந்திருந்து தாக்குவதில் மட்டும் காட்டும் ஒரு கயவன் விட்டொழி இனி அவன் வாய்ச்சவடால் வைதீகத்தை

Tuesday, April 10, 2007

மிருகாதிபத்தியம்

மிருகாதிபத்தியம்: எம்.பி.நாராயணபிள்ளை (மலையாளம்)

தமிழில்: மு.குருமூர்த்தி

குற்றச்சாட்டை மறுக்கிறேன்.

ரேஞ்சர் மரிய பூதம் விசாரணைக் கமிஷன் முன்பாக உறுதியாகச் சொன்னார்.

டி.எ•ப்.ஓ.தாமோதரன் நாயரைப் புலி தின்றது உண்மைதான். ஆனால் அதற்கு நான் காரணம் இல்லை.

சம்பவம் நடந்த இடத்தில் நீங்கள் இருந்தீர்கள் இல்லையா? ஒரு நபர் விசாரணைக் கமிஷன் கேட்டது.

ஆமாம்.

உங்களுடைய கையில் துப்பாக்கி இருந்தது இல்லையா?

இருந்தது.

துப்பாக்கியில் குண்டுகள் இருந்தன..... இல்லையா?

நிறைய இருந்தது.

அப்புறம் ஏன் சுடவில்லை?

டி.எ•ப்.ஓ. ஒரு மனிதர். அவரைச் சுட்டால் என்மீது கொலைக்குற்றம் சாட்டப்பட்டு தண்டனை கிடைக்கும். இன்னும் சொல்லப்போனால் அவர் என்னுடைய மேலதிகாரி.

கமிஷன் ஒரு நிமிடம் மெளனமானது. மெளனத்தைக் கலைக்கும் வகையில் கமிஷன் பேசியது.

எனக்குத் தெரியவேண்டியது அது அல்ல. டி.எப்.ஓ.தாமோதரன் நாயரை புலி தாக்கியபோது நீங்கள் ஏன் புலியைச் சுட்டுக் கொல்லவில்லை? உங்களுடைய மேலதிகாரியின் உயிரை நீங்கள் ஏன் காப்பாற்றவில்லை? என்பதுதான் கேள்வி.

சார்... சம்பவத்தை நான் நேரில் பார்த்தவன். நீங்கள் சொல்வதுபோல் புலி டி.எப்.ஓ.வை தாக்கவில்லை. காட்டில் தன்வழியே போய்க்கொண்டிருந்த புலியைத் தாக்கியது டி.எப்.ஓ.தான். தன்னுடைய உயிரைக் காப்பாற்றிக்கொள்ள எந்த ஒரு உயிரும் செய்யக்கூடியதைத் தான் புலி செய்தது. நியாயம் புலியின் பக்கத்தில் இருந்தது. அதனால்தான் புலியை சுடுவதற்கு என்னுடைய மனசாட்சி அனுமதிக்கவில்லை.

உங்களுக்கும் டி.எப்.ஓ.விற்கும் ஏதாவது கருத்து வேற்றுமை இருந்ததா?

இல்லை.

மரிய பூதம் மறுத்தார்.

ஒரு மேலதிகாரி என்ற முறையில் அவர் கெட்டிக்காரராக இருந்தார். தனக்குக் கீழே வேலை செய்பவர்களுக்கு என்னென்ன வேண்டுமோ அதையெல்லாம் செய்து கொடுத்தார். அவரைப் பற்றி எல்லா ரேஞ்சர்களுக்கும் நல்ல மரியாதை உண்டு. மனிதர்கள் மீது இரக்கம் காட்டக் கூடியவர்.

ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் அவர் உங்களிடம் மோசமாக நடந்துகொண்டதாக நினைவு உண்டா?

நிச்சயமாக இல்லை.

அப்படியிருக்கும்போது அவரை புலியிடமிருந்து காப்பாற்ற வேண்டியது உங்களுடைய கடமையில்லையா?

அவருடைய பக்கமிருந்து யோசித்துப்பார்த்தால் நீங்கள் சொல்வது சரிதான்.... புலியின் பக்கமிருந்தும் யோசித்துப் பாருங்கள்..... புலிக்கு நாடு என்பது காடுதான். மனிதர்களுக்கு எந்த தீங்கும் செய்யாமல் அங்கே வாழ்ந்து கொண்டிருந்த புலியை எந்த ஒரு காரணமும் இல்லாமல் டி.எ•ப்.ஓ.தாமோதரன் நாயர் சுட்டார். அதிர்ஷ்டவசமாக துப்பாக்கிக் குண்டு புலியின் காலில் தான் பட்டது. தன்னுடைய உயிரைக் காப்பாற்றிக் கொள்வதற்காக புலி டி.எ•ப்.ஓ.தாமோதரன் நாயர்மீது பாய்ந்தது. ஒண்டிக்கு ஒண்டி நடந்த சண்டையில் டி.எ•ப்.ஓ.தோற்றார். சண்டையில் தோற்கும் உயிரைத் தின்பது என்பது புலிக்கு வாடிக்கை. அதன்படியே புலி டி.எ•ப்.ஓ.வை தின்றது. அதுமட்டுமல்ல. ரேஞ்சர் என்ற நிலையில் என்னுடைய கடமை காட்டில் உள்ள மிருகங்களையும் மரங்களையும் பாதுகாப்பதாகும். தன்னுடைய உயிரைக் காப்பாற்றிக்கொள்வதற்காக ஒரு புலி ஒண்டிக்கு ஒண்டி சண்டைபோட்டுக் கொண்டிருக்கும்போது நான் எப்படி அதைக் கொல்ல முடியும்?

அதற்காக நீங்கள் என்ன செய்தீர்கள்?

சும்மா பார்த்துக்கொண்டு நின்றேன். புலி டி.எப்.ஓ.வின் உடலை இழுத்துக்கொண்டு போனதற்கப்புறம் அவருடைய துப்பாக்கியை எடுத்துக்கொண்டு காட்டுபங்களாவிற்கு திரும்பி வந்தேன்.

டி.எ•ப்.ஓ.புலியைத் தாக்காமல் புலி டி.எ•ப்.ஓ.வைத் தாக்கியதாக வைத்துக்கொள்வோம். அப்போது நீங்கள் என்ன செய்து இருப்பீர்கள்?

புலியை சுட்டு இருப்பேன்.

நீங்கள் இதற்கு முன்பு என்றைக்காவது ஏதாவது விலங்கை சுட்டிருக்கிறீர்களா?

ஒரே ஒரு தடவை மட்டும்.... மதம் பிடித்து அலைந்த யானையை கலெக்டருடைய உத்தரவுப்படி சுட்டிருக்கிறேன்.

யானை மக்களைத் தொந்தரவு செய்கிறதா என்று யோசித்துத்தான் யானையைச் சுட்டீர்களா?

இல்லை. அப்படியெல்லாம் யோசிக்கவேண்டிய அவசியமே இல்லை. கலெக்டர் உத்தரவு போட்டால் எந்த மிருகத்தையும் கொல்லலாம். ஹைகோர்ட் உத்தரவு போட்டால் எந்த மனிதனையும் கொல்லலாம். அதுவும் தூக்கில் போட்டுத்தான் கொல்ல முடியும். கலெக்டருடைய எழுத்துபூர்வமான உத்தரவு கிடைத்தபொழுதுதான் யானையை சுட்டுக்கொன்றேன்.

உயிருக்காக போராடிக்கொண்டிருந்த டி.எ•ப்.ஓ. புலியை சுட்டுக்கொல்லுமாறு உங்களிடம் சொன்னாரா?

ஆமாம், சொன்னார்....சட்டப்படி கலெக்டருடைய உத்தரவு இல்லாமல் புலியை சுட்டுக்கொல்ல முடியாது நான் சொல்லிவிட்டேன்.

நீங்கள் சட்டவிதிகளை எழுத்துக்கு எழுத்து பின்பற்றியதாக கமிஷன் பதிவுசெய்துகொள்கிறது. டி.எ•ப்.ஓ. தாமோதரன் நாயருடைய உயிருக்கும் ஒரு புலியினுடைய உயிருக்கும் ஒரே விலைதான் என்று நீங்கள் நினைக்கிறீர்களா?

காட்டில் புலியின் உயிருக்கும் நாட்டில் மனிதனின் உயிருக்கும் மதிப்புண்டு.
டி.எ•ப்.ஓ. காட்டை ஆளுகின்ற ஒரு மனிதன் என்பதை நினைத்துப்பாருங்கள். நீங்கள் கூட காட்டை ஆளுகின்ற ஒரு மனிதர்தான்.

இல்லை சார்..... நாங்களெல்லாம் நாட்டை ஆளுகிறவர்களுடைய பிரதிநிதிகளாக காட்டிலே வேலை செய்கிறவர்கள் என்பதுதான் சரி...... பழைய காலத்தில் நாட்டை ஆளுகிறவன் ராஜாவாகவும் காட்டை ஆளுகிறவன் சிங்கமாகவும் இருந்தார்கள். காட்டில் வசிக்கும் காட்டுவாசிகள்கூட நாட்டை ஆளும் ராஜாவை ஏற்றுக்கொள்ளாதபோது ஒரு புலி அதை ஏற்றுக்கொண்டு சாவதற்கு தயாராகவேண்டும் என்று சொல்வது சரியில்லை.ஒரு புலி ஊருக்குள் வரும்போது அதைக் கொல்வதற்கு நமக்கு உரிமை இருக்கிறது. எந்தக் காரணமும் இல்லாமல் டி.எ•ப்.ஓ. தாமோதரன் நாயர் புலியைச் சுட்டது காட்டிற்குள்ளேதான்.

அதாவது புலி தன்னைக் காப்பாற்றிக் கொள்வதற்காக டி.எ•ப்.ஓ.தாமோதரன் நாயரைத் தின்றது என்றும் அதனால் புலி ஒரு தவறும் செய்யவில்லை என்றும் நீங்கள் சொல்கிறீர்கள். அப்படித்தானே?

அது மட்டுமில்லை சார்...... டி.எ•ப்.ஓ.தாமோதரன் நாயரைக் காப்பாற்றுவதற்காக நான் புலியை சுட்டிருந்தால் அது மிருகங்களுக்கு நான் செய்யக்கூடிய ஒரு அநீதியாக இருந்திருக்கும். ஓர் உயிர் என்ற உயர்வான சிந்தனையில் இருந்து ஒரு மனிதன் என்ற கீழான இடத்திற்கு என்னுடைய புத்தி போயிருக்கும். இதுபோல கீழான சிந்தனைகளுக்கு நான் அடிமைப்பட்டால் என்னோடு சேர்ந்து வாழும் உயிர்களுக்கு ஆதரவாக, வேறு உயிர்களுக்கு எதிராக துப்பாக்கியைத் தூக்குவேன். இந்தியாக்காரனாக இருக்கும்போது வேறுநாட்டுக்காரனுக்கு எதிராக துப்பாக்கியைத் தூக்குவேன். கேரளக்காரனாக இருக்கும்போது வேறு மாநிலக்காரனுக்கெதிராக துப்பாக்கியைத் தூக்குவேன். அதற்கப்புறம் திருவாங்கூர்காரனாக இருக்கும்போது கொச்சிக்காரனையும் மலபார்காரனையும் கொல்ல துப்பாக்கியைத் தூக்குவேன்.
ஊர்க்காரனாக இருக்கும்போது அடுத்த ஊர்க்காரனுக்கு அநியாயம் செய்யத் தயங்கமாட்டேன். இப்படி கிராமம், குடும்பம், சொந்தக்காரன் அப்புறன் நான் என்று ஒவ்வொரு நிலையிலும் நீதியை மறந்து ஆட்டம் போட ஆரம்பித்துவிடுவேன். மிருகங்களை பிரித்துப் பார்க்காமல் இருந்தால்தான் வேறுயாரையும் பிரித்துப் பார்க்க மனம் வராது.டி.எ•ப்.ஓ.வும் புலியும் ஒண்டிக்கு ஒண்டி சண்டைபோட்டபோது இதையெல்லாம் செய்து பார்க்க எனக்கு ஒரு சந்தர்ப்பம் கிடைத்தது.

இவ்வளவும் சிந்திக்கின்ற நீங்கள் டி.எ•ப்.ஓ.வை புலியிடம் போகவேண்டாம் என்று ஏன் தடுக்கவில்லை?

நான் சொன்னேன் சார்........ டி.எ•ப்.ஓ.தான் கேட்கவில்லை.

அவர் என்ன சொன்னார்?

புலி மற்ற மிருகங்களை கொன்று தின்பதாகவும், புலியைக் கொல்வது மற்ற மிருகங்களைப் பாதுகாப்பதற்காகவே என்றும், அத்துடன் காட்டுக்கு ராஜா சிங்கமில்லையென்றும், வனத்துறை அமைச்சர்தான் காட்டுக்கு ராஜா என்றும் சொன்னார்.

அவர் சொன்னதும் ஒருவகையில் சரிதானே? கமிஷன் திருப்பிக்கேட்டது.

இல்லை..... காடு மிருகங்களுக்கானது. காட்டில் வாழும் மனிதர்கள் ரொம்பவும் கொஞ்சம். அதாவது வேடர்கள். காட்டிற்கு உள்ளேபோய் யார் மிருகங்களைக் கொன்றாலும் அவர்களைக் கொல்லக்கூடிய அதிகாரம் மிருகங்களுக்கு உள்ளது. அதேபோல நாட்டிற்குள் வந்து மனிதர்களைக் கொன்று தின்னும் விலங்குகளைக் கொல்ல மனிதர்களுக்கு உரிமை உண்டு. இதற்கு சரியான உவமை சொல்ல வேண்டுமென்றால் இங்கிலாந்தில் கோலோனியன் செகரட்டரி எப்படியோ அப்படித்தான் நம்முடைய வனத்துறை அமைச்சர். அவருடைய அதிகாரம் மனிதரால் கொடுக்கப்பட்டதுதான்.

மிருகங்களுக்கு சுய ஆட்சி வேண்டுமென்றா நீங்கள் சொல்லுகிறீர்கள்?

சார்....... எனக்கு நேரம் கிடைக்கும்போதெல்லாம் நான் வரலாறும் அரசியலும் படிக்கிறவன், எனக்குத் தெரிந்தவரையில் சுய ஆட்சி என்பது தனக்கு விருப்பமான இயல்பான ஆட்சிமுறையாகும். அதாவது சிங்கத்தை ராஜாவாக ஏற்றுக்கொண்ட வழக்கமான ஆட்சிமுறை. ஜனநாயகமில்லை. உதாரணமாக ஆப்பிரிக்காவில் சுய ஆட்சி கிடைத்தபோது மக்கள் அவர்களுக்கு மிகவும் இயல்பான இடி அமீனை ஆதரித்தார்கள். மிருகங்கள் அவர்களுக்கு என்ன வேண்டுமோ அதை அவர்களே தேர்ந்தெடுத்துக் கொள்வார்கள். ஆனால் மனிதர்கள் தேர்ந்தெடுக்கும் வனத்துறை அமைச்சரை அவை ஏற்றுக்கொள்வதில்லை. மனிதர்களுடைய சட்டதிட்டங்களும் கூட இப்படியேதான்.

வனத்துறையின் சட்டதிட்டங்கள் உங்களுடைய மனசாட்சிக்கு ஒத்துப்போகவில்லை என்ற முடிவிற்கு கமிஷன் வரலாமா?

அதில் ஒன்றும் தவறில்லை. ஆனால் அப்படி நீங்கள் எடுக்கிற முடிவு என்னை வேலையைவிட்டு நீக்குவதற்கு காரணமாகும்.இல்லையா?

ஆகலாம்..... ஆகாமலும் இருக்கலாம்...... அதுபோகட்டும்....... இந்த விசாரணை முடிவதற்கு முன்பாக உங்களுக்கு ஆதரவாக சாட்சிசொல்லுவதற்கு யாராவது இருக்கிறார்களா?..... அவர்களை விசாரிக்கவேண்டுமா?....

ஒரே ஒரு சாட்சி இருக்கிறது.

இப்போதே வரச்சொன்னால் விசாரணையை இன்றைக்கே முடித்துவிடலாம்.
பக்கத்தில்தானே இருக்கிறார்?

வெளியில் மரத்தடியில் இருக்கிறார். கூப்பிட்டால் வந்துவிடுவார்.

சரி...... யார் அவர்?

இதுவரை நடந்த சம்பவத்தில் அவர்தான் சார் பிரதான குற்றவாளி. அவர்தான் டி.எப்.ஒ. தாமோதரன் நாயரைத் தின்ற புலி. கூப்பிடலாம்.

Sunday, April 01, 2007