Thursday, November 27, 2014

நெகிழ வைத்த திரைப்படங்கள்-3 Dancer in the Dark

இந்த படம் என்னை மட்டுமல்ல பார்க்கும் யாரையும் இளகவைக்கும் என்பதில் எனக்கு துளியும் சந்தேகம் இல்லை 2002ல் இந்த படத்தை பார்க்கும் போது எனக்கு இவ்வளவு ஆச்சரியம் இல்லை ஆனால் இப்போது இருக்கிறது, காரணம் 2002க்கு  பிறகுதான் வெறிபிடித்தது போல  உலக சினிமாக்களை தேடித் தேடி பார்த்துக் கொண்டிருக்கிறேன். கிட்டத்தட்ட 2 TB கொள்ளளவு கொண்ட ஹார்ட் டிஸ்க்கில் முழுக்க முழுக்க உலக சினிமாக்கள் ஆங்கில சினிமாக்கள் என்று வகை வாரியாக 3000 படங்களுக்கும் மேல் சேமித்து வைத்திருக்கிறேன். இன்னும் டவுன்லோடிக் கொண்டிருக்கிறேன். எல்லாம் டோரண்ட்ஸ் தந்த வரம்.

Dancer in the Dark.


பொதுவாகவே வசனங்கள் நிறைந்த சினிமாக்களை ரசிப்பவன் நான். அதிலும் Lars van Trier படங்களை சொல்லவே வேண்டியதில்லை, நிம்போமேனியாக் ஆகட்டும் ஆன்ட்டி கிரிஸ்ட் ஆகட்டும் மனுஷன் பின்னி இருப்பார். இந்த படத்தை பொருத்தவரையில் இசையும் பாடல்களும் வசனங்களும் என்று எந்த ஒரு இரும்பு இதயத்தையும் கொள்ளை கொள்ளுகிறது. அதிலும் முக்கியமாக வழக்கம் போல ட்ரையர் இந்த படத்தையும் கதாநாயகியை முன்னிலைப் படுத்தியே எடுத்திருக்கிறார். ஒட்டு மொத்தமாக காதாநாயகி பட்டுமே படத்தை தூக்கி சுமந்திருக்கிறார் அதுவும் ஜோர்க்குக்கு சொல்லவா வேண்டும் படத்தை சுண்டு விரலில் சுமந்திருக்கிறார். 

கதை இதுதான் கதையின் நாயகி சல்மா தன் மகனுடன் செக்கோஸ்லோவாக்கியாவில்  இருந்து அமெரிக்காவுக்கு இடம்பெயர்ந்தவர், சல்மாவுக்கு கொஞ்சம் கொஞ்சமாய் பார்வை பறிபோய்க்கொண்டிருக்கிறது. அதுமட்டுமல்லாமல் தன் மகனுக்கும் அதே குறைபாடு என்பதால் மகனுக்கு மருத்துவம் பார்ப்பதற்காக வந்தவர். வந்த இடத்தில் , ஒரு ஸ்டீல் பேக்டரி, ஒரு வீட்டில் இருந்தே செய்யும் சிறு வேலைகள், மற்றும் டான்ஸ் பாடல் என்று உண்மையில் ஒரு குருவி சேர்ப்பது போலவே கொஞ்சம் கொஞ்சமாய் பணம் சேர்த்துக் கொண்டிருக்கிறார். அவருக்கு உதவியாக காவல் துறையிலிருக்கும் நண்பனும், அவர் மனைவியும் தங்கள் இடத்தை சல்மாவுக்கு வாடகைக்கு விட்டும் சல்மாவின் மகனை கவனித்துக் கொள்ளும் பொறுப்பும் ஏற்றிருக்கின்றனர், சல்மாவை தன் காதலியாக்கிக் கொள்ள வேண்டும் என்றும் ஒருவர், சல்மாவுக்கு பேக்டரியில் ஒரு தோழி. கொஞ்சம் கொஞ்சமாய் பணம் சேர்த்து வைத்திருக்கும் சல்மா தன் மகனுக்கு மருத்துவம் பார்ப்பதற்கு முன்பே கண் பார்வை முற்றிலும் போய்விடுகிறது அதன் பின் அவருக்கு எல்லா சத்தங்களும் இசைதான் அவருக்கு. பேக்டரியில் சத்தம் இசை, ரயில் சத்தம் இசை, என்று.

முற்றிலும் பார்வை பறிபோன பின்னர் ஒரு நாள் தான் வங்கிக்கு செலுத்த வேண்டிய கடனுக்காக அந்த போலீஸ் நண்பன் சல்மாவின் பணத்தை திருடி விடுகிறான். அதைக் கேட்கப் போன இடத்தில் நடக்கும் தள்ளு முள்ளுகளில் போலீஸ்காரன் தன்னைத் தானே சுட்டுக் கொண்டு விட கொலைப் பழி , திருட்டுப் பழி எல்லாம் சல்மாவின் மேல் விழுகிறது.

சிறைச்சாலையில் விசாரணைக்குப் பின் சல்மாவுக்கு தூக்கு தண்டனை விதிக்கப் படுகிறது. இதுதான் கதை.

சல்மாவாக நடித்திருக்கும் ஜோர்க் (Bjork)க்கைத் தவிற வேறு யாராலும் இப்படி ஒரு நடிப்பை வெளிப்படுத்தி இருக்க முடியுமா என்பதை ஒவ்வொரு காட்சியிலும் நிரூபித்துக் கொண்டே இருக்கிறார். பேக்டரியில் வேலை செய்வதாக இருக்கட்டும் கண் பார்வை பறிபோய்க் கொண்டிருப்பதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் சமாளிப்பதாகட்டும் தன் காதலை ஏற்கச் சொல்லி வரும் ஜெஃப் இடம் (Peter Stomare) மறுக்கும் இடம் ஆகட்டும், தன் பார்வைக் குறைபாட்டை போலீஸ் கார நண்பன் பில்லிடம் (David Morse) சொல்லும் போதாகட்டும் இப்படி எல்லாக் காட்சிகளிலும் ஜோர்க் வாழ்ந்திருக்கிறார். 

படம் முழுக்க நெகிழத்தான் வைக்கிறது ஆனாலும் குறிப்பிட்டுச் சொல்லும் இடங்கள்  என்றால் பேக்டரியில் வேலை செய்து முடிந்த பின் ஜெஃப் தன் வண்டியில் வரும்படி அழைக்க சல்மா தனக்கு இப்போது ஒரு ஆண்துனை தேவையில்லை என்றும் அப்படி ஒரு வேளை தேவைப்பட்டால் உன்னைத்தான் தேர்ந்தெடுப்பேன் ஜெஃப் என்று சொல்லும் காட்சி ஒரு கவிதை என்றால் தனியே தண்டவாளத்தில் நடந்து போகையில் ஜெஃப்பும் சல்மாவும் பாடும்  I have seen it all பாடல் ஒரு காவியம். பாடல், இசை, நடனம், என்று எல்லாம் ஒட்டுமொத்தமாய் மயங்க வைக்கிறது 


பணம் காணாமல் போனபின் பில்லிடம் போய் பணம் கேட்கும் போது ஒரு அடிபட்ட பறவையைப் பார்ப்பது போல் உணர்ந்தேன் ஆனால் கொலைக்குப் பின்னால் வரும் அந்த பாடல் நம்மை கொலைக்குப் பின்னாலான அதிர்வுகளில் இருந்து மீட்டு விடுகிறது. படத்தின் எல்லாப் பாடல்களும் மேஜிகல் ரியலிசங்கள்தான் கொஞ்சம் கூட தொய்வடைய வைக்காத கதை, சிறையில் இருக்கும் போதும் ஒரு பாடல் வருகிறது, 

தனக்கு மரண தண்டனை என்று தெரிந்த பின் சிறையில் தன் பேக்டரி தோழியுடன் தொலை பேசியில் பேசிக் கொண்டே என் மகனுக்கு பார்வை முக்கியம் எனக்காக வக்கீல் வேண்டாம் என்று கதறும் காட்சி கண்களை குளமாக்குகிறது. முடிவில் தூக்கு தண்டனையின் போது எனக்கு தூக்கு வேண்டாம் பயமாய் இருக்கிறது என்று கதறுவதை பார்க்கும் போது என்னை அறியாமல் விம்மி வெடித்திருக்கிறேன் கல்நெஞ்சம் கொண்ட நானா இப்படி என்றெல்லாம் நினைத்தாலும் அதுதான் இந்த படத்தின் வெற்றி. 

முடிவாக தூக்கிற்கு முன் கொடுக்கப் படும் கொஞ்ச அவகாசத்தில் சல்மா பாடிக் கொண்டிருக்கும் போதே அடிப்பலகை நகர்ந்து கொள்ள பாடல் பாதியில் துண்டிக்கப்பட தூக்கில் தொங்கும் கணத்தில் கண்களை மூடிக் கொண்டேன். ஒரு பத்து தடவைகளுக்கு மேல் பார்த்த இந்த  படத்தில் நான் அந்த ஒரு செகண்டை மட்டும் கண்களை மூடிக் கொண்டுதான் கழித்திருக்கிறேன் என்றால் நம்பித்தான் ஆகவேண்டும். ஒட்டு மொத்தமாக என்னை நெகிழச் செய்த படங்களின் உச்சத்தில் எப்போதும் இருக்கும் படம் இது.
Tuesday, November 25, 2014

நெகிழ வைத்த திரைப்படங்கள்-2 A Serbian Film (Un Serbski Film)

இந்த படத்தை ( எ ஸெர்பியன் ஃபில்ம் ) , ( Un Serbksi Film ) நெகிழவைத்த திரைப்படங்கள் வரிசையில் சேர்ப்பதை விட அதிர வைத்த திரைப்படங்கள் வரிசையில் சேர்ப்பதுதான் மிகச் சரியாக இருக்கும் என்றாலும் நான் அப்படி ஒரு தொடரை எழுத இதுவரை உத்தேசித்திருக்கவில்லை என்பதால் வேறு வழியே இல்லாமல் இதையும் நெகிழ வைத்த திரைப்படங்களின் வரிசையிலேயே சேர்க்க கட்டாயப் படுத்தப் பட்டுள்ளேன் ஒரு வேளை டின்ட்டோ பிராஸ் காவியங்களை (?) எழுதும் போதோ அல்லது ஸ்பார்ட்டகஸ் ப்ளட் அண்ட் சேண்ட் , காட்ஸ் ஆஃப் அரேனா, ரோம் சீரியல்கள் குறித்தோ எழுதினால் அந்த தலைப்பை வைக்கலாம் என உத்தேசித்திருக்கிறேன்.

முதலிலேயே சொல்லி விடுகிறேன், கற்பினிப் பெண்கள், குழந்தைகள் 18+ வயதாகாதவர்கள், இளகிய மனமுடையவர்கள், என்னை பிடிக்காதவர்கள் இந்த படத்தை தவிற்பது உங்களுக்கும் எனக்கும் நலம் பயக்கும்.கிடக்கட்டும் நம் கதைக்கு வருவோம். படத்தின் ஆரம்பத்திலேயே வரும் அறிமுகக் காட்சியில் அதிர ஆரம்பிக்கும் நாம் படம் முடியும் வரை அதில் இருந்து மீளப் போவதே இல்லை என்பதை கதாநாயகனும் மனைவியும் தன் மகன் பார்க்கும் "அந்த" காட்சியில் உணர்த்தி விடுகிறார்கள். கதை இதுதான். ஸெர்பியாவின் ஒரு முன்னாள் "ரிட்டயர்டு" பாலுணர்வு தூண்டும் சினிமாக்களின்  நடிகர் தன் குடும்ப பொருளாதார சூழலால் மீண்டும் அந்த பாலுணர்வு பட்டங்களுக்குள் நுழைந்து அதன் பின்னனியில் வலையில் சிக்கிக் கொள்ளும் ஒரு பாலியல் வன்முறைகள் நிறைந்த படம்தான் இது ஆனாலும் அதிர்வுகளுக்கு மட்டும் பஞ்சமே இல்லை.

மிலோஸ், மரியா, பீட்டர் என்ற அழகான குடும்பம், மிலோஸின் மனைவி  மரியா மேல் ஒரு கண் வைத்திருக்கும் மிலோஸின் தம்பி மார்கோஸ், மிலோஸின் முன்னாள் தொழில் முறை நண்பி லைலா (லேய்ஜா?) மீண்டும் மிலோஸை உக்மிர் என்னும் தொழில் முறை பாலியல் பட, நிஜத்தை, நிஜ கொலைகளை, நெக்ரோ பீலியாக்களை, படமாக்கி அதை பணமாக்கும்  இயக்குனரிடம் அறிமுகப் படுத்த அதன் பின் மிலோஸுக்கு நடப்பவைதான் கதை.

இதில் நீங்கள் அதிர அதிர என்று அதிர்ந்து கொண்டே இருக்க படம் முழுக்க காட்சிகளும் விவரணைகளும் உண்டு. மிலோஸ் உக்மிரின் படத்தில் நடிக்க ஆரம்பிக்கும் போது ஒரு சிறு குழந்தையை அவளின் அம்மா அடித்து இழுத்துக் கொண்டு போகும் போது ஆரம்பிக்கிறது , பின்னர் எதுவுமே சினிமா இல்லை எல்லாமே உண்மைதானோ என்ற எண்ணம் வந்து மிலோஸ் மரியாவிடம் பேசிக் கொண்டிருக்கும் போதும், அந்த சிறுமியோடு, அவளின் முன்னிலையில் தன்னால் நடிக்க முடியாது என்னும் போதும் தன் மனைவியிடமும் தன் தம்பியிடமும் பேசும் போதும் உக்மிரின் படத்தில் நடிக்கையில் தன்னை போதைக்குள்ளாக்கி படம் எடுப்பதை பின் ஃபாளாஷ் பேக்கில் கண்டு திகைப்பதையும் காணுகையில் நெகிழச் செய்வதை விட படம் நம்மை அதிரத்தான் செய்கிறது.

நான் நல்ல விமர்சகனாக இல்லாமல் போகலாம் என்னடா இவன் வள வள என்று இழுக்கிறானே என்று அது பற்றியெல்லாம் நான் கவலைப்படப் போவதில்லை ஆனால் நல்ல சினிமாக்களின் ரசிகன் என்ற முறையிலும், கொஞ்சம் ஹாரர்,கல்ட்,மேஜிக்கல் ரியலிச படங்களின் ரசிகன் என்ற முறையிலும் இந்த படத்தை பற்றி எழுதாவிட்டால் என் ஜென்மம் சாபல்யம் ஆகாது.

எல்லாவற்றையும் விஞ்சி இந்த படத்தில் எஞ்சி நிற்பது கொஞ்சமே கொஞ்சமாய் ஒட்டிக் கொண்டு நிற்கும் செண்டிமெண்ட்.

For Example  an dialog from the film, after Milos Saw the Agreement and speaking with his Wife Maria.

Maria: You fucked every one in the Industry and you just throw them like a Condom but why you couldn't don't to me?

Milos: Because i just Fucked them but i love you.

Maria: So it means you don't just like to fuck me?

இதன் பின்னர் வரும் இரண்டு நிமிடங்களும் காதலின் , காமத்தின் உச்சம், இதில் என்ன உணரவைக்கும் நெகிழ்த்தும் நிமிடங்கள் என்று கேட்பவர்கள் படம் பார்த்துக் கொள்ளவும்.

ஆனால் உங்களை அதிர்வின் உச்சத்துக்கே கொண்டு செல்ல இருக்கவே இருக்கிறது படத்தின் உச்ச காட்சி, இதைக் கண்டும் அதிராமல் போனீர்கள் என்றால் உங்களை ஒரு நல்ல மன நல காப்பகத்தில் கொண்டு சேர்ப்பது நல்லது, அதிராமல் மகிழ்வீர்கள் என்றால் உங்களையும் அங்கேயேதான் கொண்டு சேர்க வேண்டும் என்பது நிச்சயம்.

உங்களை அதிரவைக்கவோ இல்லை உறைய வைக்கவோ இந்த படம் பற்றி எழுதவில்லை, என்னை கொஞ்சம் உலுக்கிய படங்களுல் ஒன்று இது.  இன்னும் கொஞ்சம் இந்தப் படத்தை உற்றுப் பார்த்தீர்களே ஆனால் என் கண்களுக்கும் தெரியாத காட்சிகள் உங்களுக்கு கிட்டும்.

இன்னொரு விஷயம் இது முழுக்க முழுக்க ஸெர்பியன் மொழியில் இருக்கும் படம் கொஞ்சமே கொஞ்சம் சிரமப் பட்டு ஸப் டைட்டிலை படித்து விடுங்கள்.

படம் பற்றிய தகவல்களுக்கு இங்கே சொடுக்கவும்.

படத்தை முழுதாகக் காண இங்கே சொடுக்கவும்.Thursday, November 20, 2014

நெகிழ வைத்த திரைப்படங்கள்- 1 Room in Rome

இப்போதெல்லாம் எந்த படத்தை பார்த்தாலும் சில காட்சிகள் என்னை ஒரு நிமிடம் குபுக் என்று நெகிழ்த்தி விடுகிறது. முன்பெல்லாம் சில காட்சிகளை பார்த்தால் என்ன கொடுமைய்யா இதெல்லாம் ரொம்பவே செண்டிமெண்ட் போட்டு தாளிக்கிறார்களே என்ற கிண்டலோடு படம் பார்த்த நானா இப்படி ஆகிவிட்டேன் என்று யோசிக்க வைப்பது என் நாற்பதை நெருங்கும் வயதா இல்லை சுமார் பத்தாண்டுகளாக நீண்ட இடைவெளிகளில் குடும்பத்தை பிரிந்து வாழும் துயரா என்று தெரியவில்லை. எதுவாக இருந்தாலும் கிடக்கட்டும் என்னை எத்தனை முறை திரும்பத் திரும்ப பார்த்தாலும் நெகிழ்த்திய படங்கள் என்று ஒரு தொடரை உத்தேசித்திருக்கிறேன். டாப் டென் போல இது வரிசைப் படுத்துவதற்காகவோ இல்லை படங்களை விமர்சிப்பதற்க்காகவோ அல்ல. வெறுமனே என்னை நெகிழச் செய்த படங்களை, காட்சிகளை உங்களோடு பகிர்ந்து கொள்ள. 

Room In Rome.இரண்டு முற்றிலும் அறிமுகமில்லாத (ஆல்பா, நடாஷா ) பெண்களின் ஒரு நாள் இரவின் கதை, கொஞ்சம் பிசகினாலும் பாலியல் படங்களின் (Porn) வரிசையில் சேர்ந்துவிடக் கூடிய திரைக்கதை, ஆனால் அதை காட்சிப் படுத்திய விதத்திலும், பின்னனி இசையிலும் கொஞ்சம் கூட ஆபாசம் எட்டிப் பார்த்துவிடாமல் நிர்வாணத்தை அழகாக்கி இருக்கும் இயக்குனர், Julio Medem ( ஒளிப்பதிவாளர் Alex Catalán இரண்டு பேரையும் விட இரண்டு கதை நாயகிகளும்  கூட படத்தை ஒரு சேர அழகாக்குகிறார்கள்.

சரி இது ஏன் நெகிழ வைத்தது என்ற விஷயத்துக்கு வருகிறேன் , ஏனென்றால் படத்தை நான் விமர்சிக்க விரும்பவில்லை.  இரண்டு பெண்களும் ஒரு நாள் இரவில் அறிமுகமாகி ஆல்பா நடாஷாவை தன் அறைக்கு அழைக்கும் தருணம் நடாஷா ஆல்பாவின் கையை விட்டு விலக எண்ணி இழுத்துக்கொண்டு போகையில் ஆல்பா, நடாஷாவிடம் என்னிடம் போட்டியிட்டால் நான் தோற்றுப் போவேன் ஆனால் உன் அறைக்கு வந்து விடுவேன் என்னும் போது இருவரின் முகத்திலும் குறும்பு கொப்பளிக்கும்,

முதன் முதலாய் ஒரு பெண் என்னை இப்படிப் பார்ப்பது இதுதான் முதல் முறை என்னும் போது நடாஷாவின் வெட்கமும் ஆல்பாவின் காதல் பார்வையும் ஒரு அழகிய கவிதை,  அதன் பின் ஆபா உறங்குகையில் நடாஷா தன் அறைக்குச் செல்லும் முன் தன் பெயரை ஆல்பாவின் காதில் சொல்லும் " ஷா, நடாஷா" எனும் போதும் தவறுதலாய் ஆல்பாவின் உள்ளாடையை அணியும் போது அது கிழிந்து போனதை பார்த்து சிரிப்பதும் என இதெல்லாம் கதையை சுவாரஸ்யம் ஆக்குகின்றன, நடாஷாவின் செல்போனை ஆல்பாவின் அறையில் விட்டு விட்டு வந்து அதை திரும்ப எடுக்க வரும் போது இருவருக்கும் இடையில் ஆரம்பிக்கிறது கதை.

ஆல்பா தன்னைப் பற்றி சொல்லும் போது தன் தாயாருடன் ஒரு அரபு ஷேக்கின் அந்தப்புரத்தில் இருந்த போது கர்பமாகி அங்கே  இருந்தால் தன் குழந்தையும் ஒரு அந்தப்புரத்தில் இருப்பதை விரும்பாமல் அதுவும் பெண் குழந்தை என்றதால் கருவைக் கலைத்து விடுவதையும் சொல்லும் போதும் அந்த குழந்தைக்கு வைக்க விரும்பிய பெயரைத்தான் தனக்கான பெயராக வைத்துக் கொண்டதையும் சொல்லும் போது ஒரு கணம் நம்மை உலுக்கி விடுகிறதுதான். ஆனால் நடாஷாவும் ஆல்பாவும் தங்களை பற்றி பொய் மட்டுமே சொல்லிக் கொண்டு அந்த ரோமின் மைய்யத்தில் இருக்கும் ஹோட்டல் அறையின் சித்திரத்தின் கேரக்டர்களை பற்றியும் அதனை தொட்ட வாரே ஊரும் கதை அமைப்பையும் கவணித்து வந்தால் தான் இது ஒரு மேஜிகல் ரியலிசம் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது.

நடாஷாவும் ஆல்பாவும் தங்களை யார் என்றும் தங்களின் காதலையும் தெரிந்து கொண்ட பிறகும் இருவரும் பிரிந்து போவது என்று முடிவு செய்யும் போதும் என்று படம் முழுக்க நெகிழ வைக்கும் இடங்கள் ஏராளம், அதிலும் கடைசி காட்சியில் ஆல்பாவை பாத் டப்பில் கிடத்தி அந்த கற்பனை அம்பை நடாஷா பிடுங்கும் வேளை க்ளாஸ்.

மற்றபடி இந்த படத்தை சிலாகித்துச் சொல்ல வசனங்கள் தான் இருக்கிறது ஆனால் நிறைய நேரங்கள் மவுனங்களின் அழகை அனுபவிக்கலாம், பின்னனி இசை காதில் ஒலித்துக் கொண்டே இருக்கும்.  அதிகமாய் எழுதி படத்தை பார்க்கப் போகிறவர்களின் சுவாரஸ்யத்தை குறைக்க விரும்ப வில்லை.

படம் பற்றிய குறிப்புகளுக்கு இங்கே சொடுக்கவும்.

முழு படத்தையும் காண இங்கே சொடுக்கவும்.

பின் குறிப்பு ; படம் முழுக்க நிறைந்து கிடக்கிறது நிர்வாண அழகு என்பதால் முன் கூட்டி எச்சரிக்க வேண்டியது அவசியம்.  இது ஒரு 18+ படம். ஆனால் ஆபாசப் படம் அல்ல .

நம் பின் நவீனத்துவ எழுத்தாளர்கள் யாருமே இந்த மேஜிக்கல் ரியலிச படத்தை இன்னும் பார்க்கவில்லையா இல்லை இப்படி நிர்வாணங்கள் நிறந்த படங்களை எல்லாம் மக்களிடம் கொண்டு சேர்த்தால் ஆபாசம் என்று சொல்லி விடுவார்களோ என்று பயந்து விட்டார்களா என்று தெரியவில்லை.