Showing posts with label பெரியார். Show all posts
Showing posts with label பெரியார். Show all posts

Monday, April 16, 2007

திண்ணையும் அருணகிரியின் அயோக்கிய எழுத்தும்


திண்ணை பற்றி எனக்கு ஒரு நல்ல கருத்து இல்லை என்பதால் பார்ப்பதில்லை.


காந்தி-பெரியார் பற்றி அருணகிரி என்பவர் எழுதியிருந்ததைச் சொன்னார்கள்.அதற்கு உள்ள மரியாதை தரப்பட வேண்டுமல்லவா?மரியாதை கெட்டவர்களுக்கும் மரியாதை தருவது பெரியாரின் வழக்கம்.


28-8-1927 குடியரசு தலையங்கம்.


"முக்கியமாக மூன்று விஷயங்களைப் பற்றியேதான் ம்காத்மாவிடம் நானும்,நமது நண்பரான திரு எஸ்.ராமநாதனும் சம்பாஷித்தோம். அதாவது,என்னுடைய அபிப்பிராயமாக மகாத்மாவுக்கு எடுத்துச் சொன்னதெல்லாம் இந்தியாவின் விடுதலைக்கும் ,சுயமரியாதைக்கும் மூன்று முக்கியமான காரியங்கள் செய்து முடிக்கவேண்டுமென்றும்,அது முடிவு பெறாமல் நமது நாட்டுக்கு விடுதலை இல்லையென்றும் நாங்கள் முடிவு செய்திருக்கிறோம் என்பதாகச் சொன்னோம்.

அதாவது,ஒன்று காங்கிரஸ் என்பதை ஒழிக்க வேண்டியது.இரண்டாவது ஜாதி ஒழிக்கப்படவேண்டும்.இதற்கு இந்துமதம் என்பதை ஒழிக்க வேண்டியது.மூன்றாவது,பார்ப்பன ஆதிக்கத்தை ஒழிக்க வேண்டியது என்பதாகும்.இம்மூன்று விஷயங்களைப் பற்றியும் மகாத்மா சொன்ன சமாதானங்கள் எம்முடைய அபிப்பிராயத்தை மாற்ற்க்கூடியதாயில்லை யென்றும் சொல்லி மகாத்மாவிடம் உத்தரவு பெற்றுக் கொண்டு வந்துவிட்டோம்."


1-9-1939 ல் நவசக்தி ஆசிரியராக திரு.வி.க. என்று கையொப்பமிட்டு சாமி.சிதம்பரனார் எழுதிய 'தமிழர் தலைவர் பெரியார் ஈ.வெ.ரா வாழ்க்கை வரலாறு' நூலுக்கு முன்னுறை எழுதியுள்ளார்.


"இந் நூற்றலைவர் இராமசாமிப் பெரியார் அவர் ஈரோட்டில் பிறந்து வளர்ந்தவர்.அவர்தம் புகழோ தென்னாட்டிலும்,வடநாட்டிலும்,பிற நாடுகளிலும் மண்டிக்கிடக்கின்றன!காரணம் என்னை?தோழர் ஈ.வெ.ரா வின் உண்மையும்,வாய்மையும்,மெய்மையுஞ் செறிந்த அறத்தொண்டாகும்.அகவுணர்வு வளர்ச்சிக்கு ஊற்று எது?அஞ்சாமை. அஞ்சாமைக்குத் தோற்றுவாய் எது? உரிமை வேட்கை.உரிமை வேட்கை ஓங்க ஓங்க அஞ்சாமை எழுந்து பெருகும்.அஞ்சாமை பெருகப் பெருக அகவுணர்வு வளர்ந்துகொண்டே போகும்.அகவுணர்வு வளர்ச்சியினூடே பிறங்கி வருவது உண்மையும்,வாய்மையும்,மெய்மையும் செறிந்த அற்த்தொண்டு.


உரிமை வேட்கை,அஞ்சாமை முதலியன் சீர்துருத்தத் துறையில் ஈ.வெ.ரா செய்து வரும் பணி நாடறிந்த தொன்று.இன்னோரன்ன சிறப்புக்கள் பல மிடைந்துள்ள வாழ்வினராகிய பெரியாரின் வரலாற்ரைக்கொண்ட இத் தமிழ் நூலை நாடு பொன்னே போல போற்றி ஏற்கும் என்பதில் அய்யமில்லை." ஈ.வெ.ராமசாமி காங்கிரசிற்காக கடுமையாக உழைத்தவர்.செயலாளர்,தலைவர் பதவிகள் வகித்தவர்.ஒரு கால்த்தில் காங்கிரசே தென்னாட்டில் நாயுடு(கிருஷ்ணசாமி},நாயக்கர்{ஈ.வெ.ரா},முதலியார்{திரு.வி.க} கட்சியாகத்தான் கருதப் பட்டது.இந்து மதமும்,பார்ப்பனீயமும் ஒன்றும் பெரியாரைப் பொறுத்துக் கொண்டு அமைதி காக்கவில்லை.பேச்சில்,கூட்டங்களில் அடி தடி,செருப்பு மற்ற பாம்பு முதல் பலவும் வீசப்பட்டு,மாநாட்டில் தீவைத்து ,உயிருக்குக் குறி வைத்து என்று பலவிதமான எதிர்ப்புக்களை இந்து மதப் பழக்கப்படி செய்து பார்த்தனர்.ஒன்றும் பலனில்லாமல் அடங்கி விட்டனர் என்பது சரித்திரம். சரித்திரத்தை,


உண்மையை திரிப்பதும் அதற்கு திண்னை ஒரு ஆதரவு அளிப்பதும் பெரிய ரகசியம் ஒன்றுமில்லை.பெரியாரைப் பற்றி சிரியோரின் சின்ன புத்தி எழு்த்துக்கள் ஒன்றும் புதிதல்ல.பெரியார் அதுதான் எனக்கு விளம்பரம் என்றார்.


தொடரட்டும் திண்ணையில் விளம்பரம்.

Friday, April 13, 2007

ரஜினி- தி பாஸா ?

செந்தழல் ரவியிடம் சுடர் இருக்கும் போதே தெரியும் அது உங்களிடம்(லக்கி லுக்) வரும் என்று ஆனால் இப்படி ஆறு மாதம் சென்ற பின் எட்டிப் பார்த்து குழம்பி குட்டை குழப்பிக்கொண்டிருக்கும் அடியேனைத் தேடி அது வரும் என நான் நினைக்க வில்லை.

எப்படியோ வந்து விட்டது இது குறித்த அன்புக் கண்டணத்தை வலைப்பூ சுனாமி லக்கியின் மேல் இருத்தி அ.மு.க தோழர்களின் ஆசிகளுடன் இந்த சுடரை தொடர்கிறேன்.
(இதெல்லாம் லைட்டான கேள்வியா லக்கி நீங்க வர வர ஒரு மார்க்கமாத்தான் போறீங்க )
1) அமுக தோற்றுவிக்கப்பட்டதின் அவசியம் என்ன?
இந்த கேள்வி லைட்டாக இருப்பினும் பதிலை கொஞ்சம் ஹெவியாக சொல்லியாக வேண்டும். கடந்த வருடம் ஏப்ரல் மாதம் முதன் முதலில் குமுதம் ரிப்போர்ட்டரில் வந்த இணையத்தில் அன்னியன் எனும் ஒரு கட்டுரையில் போலியார் பற்றியும் டோண்டு பற்றியும் முதன் முதலாக படிக்கும் வரை எனக்கு தமிழ்மணம் பற்றியோ அல்லது வலைப்பூக்கள் பற்றியோ அறிந்திருக்கவில்லை.

அதன்பின் தமிழ் வலைப்பூக்கள் பற்றி கூகிளில் தேடியபோது தெரிந்துகொண்டதுதான் அந்திமழை அப்போது தமிழ்மணம் பற்றி தெரியாது அதில் ஒரு சில பக்கங்களை பதிவேற்றியபோது அவை எடிட் செய்யப்பட்டே வளியிடப் பட்டன எனது கருத்துக்களை என்னைக் கேட்காமல் எடிட் செய்த அந்த மழை எனக்குள் அயற்ச்சியை உண்டாக்கியது. அதில் இருந்த சில சுட்டிகளின் உதவியுடன் நான் வந்து சேர்ந்த இடம் தமிழ் மணம் .
தமிழ் மணம் வந்த முதல் நாளே கொஞ்சம் சுவாரஸ்யத்தை காட்டியது. அதன் பின் அதை எப்படி நாமும் எழ்ஹ¤துவது எனத் தெரிந்துகொள்ள அதிலிருந்த சில வலைப்பக்கங்களை படித்தபோது குழலி மற்றும், தமிழ்சசியின் கட்டுரைகள் காணக் கிடைத்தன அவற்றின் அரசியல் பார்வையும் சில அதிரடிக் கருத்துக்களும் என்னை ஈர்க்கவே நாமும் இப்படி எழுதினால் என்ன என ஆரம்பித்ததுதான் கிழுமத்தூர் எக்ஸ்பிரஸ். அதில் வந்த சில கட்டுரைகள்
அதில் இருந்த முகம் காட்ட மறுத்த பதிவர்கள் போலிகள் போலிகள் எனக் கூவி குத்தாட்டம்
போட்ட பார்ப்பணீய வலைப்பதிவர்கள் இவர்களை எதிர்த்து போலிக்கு ஆதரவாக எழுதிய யார் போலி எனும் கட்டுரை இணையத்தில் நிறைந்து கிடக்கும் சில போலிகளை இணம்காட்டியது .(உண்மையான போலியாரிடம் இருந்து பாராட்டு மின்மடல் வந்தது தனிக்கதை) ஆனால் அதே நேரம் சில பெரும் பதிவுகள் பதிவர்கள் எனக்கு கோப(அதேதான்) மடல் அனுப்பினார்கள் டோண்டுவும் தனது எல்லா பின்னூட்டங்களின் பின்னாலும் "ஆபத்தான அதர் மற்றூம் அனானி ஆப்ஷன் உங்கள் பதிவில் இருப்பதால் இதை உண்மையான டோண்டுதான் இட்டான் என்பதற்க்காக எனது ......... இட்டுக் கொள்கிறேன்" என்று புலம்பிக் கொண்டிருந்தார்

அவர்கள் அத்தணை ஆபத்தானவர்களா என்றால் இல்லை. அனானிகள் மூலமாகத்தான் நமது (லக்கி, செந்தழல் ரவி, கிழுமத்தூர் எக்ஸ்பிரஸ் ) வலைப்பூக்கள் பிரபலமாயின. அப்போது தான் நல்ல அனானிகளும் அகிலத்துக்கு தெரிய வந்தனர். ஆனால் சில உண்மைப் பதிவர்களே முகம் காட்ட மறுத்து அனானியாக வரும்போது ஏன் அனானி ஆப்சன் தவறு என்கிறார்கள் எனத்தேடியபோது அற்புதமான நகைச்சுவை உள்ளம் கொண்ட நல்ல அனானிகள் இந்த வலைப்பூவெங்கும் இருப்பதை கண்டுகொண்டோம் அதன் பின் ஒரு சில நாட்களில் அன்னிய லோகம் அடையாளச் சோதனை வந்தது. அதில் இருந்த கட்டுப்பாடுகளை பயன் படுத்த மறுத்த பதிவர்கள் அனானிகளால் ஆதரவளிக்கப் பட்டனர். அப்போது தோன்றிய எண்ணம் தான் இந்த
அனானிகள் முன்னேற்றக் கழகம்(அமுக)
இதை செயல்படுத்த வேண்டி செந்தழல் ரவி, நான் இன்னும் ஒரு அன்பர் ஆரம்பித்த வலைப்பூ அனானிகள் முன்னேற்றக் கழகம்.இதில் சில பெருந்தலைகள் எழுதியிருக்கிறார்கள் பெயர் இல்லாமல். தமிழ்மணத்தில் இணைக்கும் போது அவர்களும் ஒரு எச்சரிக்கை யோடே இணைத்தனர் இப்போதுவரை வெற்றி நடைதான் இன்று சிங்கையில் மாநாடும் சென்னையில் கூட்டமும் அகில உலக அங்கீகாரமும் பெற்று அமுக ஒரு நல்ல அமைப்பாக செயல்படுவது காணும்போது மகிழ்வாய் இருக்கிறது
2) தந்தைபெரியாரின் சிந்தனைகள் இன்னும் எவ்வளவு காலத்துக்கு தமிழ் சமூகத்துக்கு தேவை?
இன்னும் எவ்வளவு காலத்துக்கு தேவை என்ற ஒரு வரையரைக்குள் அடங்கும் அத்தியாவசிய பண்டமில்லை அவர் சிந்தனைகள் அவை ஒரு நூற்றாண்டுக் கலாச்சா¡ரம் மனித குலம் முழுமைக்கும் நிழல் கொடுக்கும் ஆலமரம் அவர். அவர் இருந்ததால் தான் நாம் சில தெளிவுகள் அடைய முடிந்தது வெளிச்சம் இருப்பதால் விளக்கை அணைத்துவிடலாம் என்றால் மீண்டும் இருட்டுக்குள் விழ வேண்டியதுதான். மனித குலம் இருக்கும் வரை அவர் சிந்தனைகள் தேவை ஆனால் அவரே சொன்னதுபோல் காலத்துக்கு தகுந்த மாதி, அல்லது நம்மால் சுயமாக சிந்த்க்கத் தெரியும் வரை.

ஒரு இனத்தின் அடையாளம் மட்டுமல்ல சுயமரியாதை அது உரிமை எல்லா மனிதனுக்கும் பொதுவானது என தனது எதிரிகளுக்கும் உணர்த்தியவர். ஒவ்வொரு மனிதனின் சுயமரியாதைக்கும் சொந்தக்காரர் பெரியார். கடவுளைக் காட்டி கண்கட்டி கிடந்தவனின் கரம்பற்றி வழிகாட்டியர் பெரியார் அதனால்தான்அவரின் சிந்தனைகள் இன்றும் நமக்கு தேவை, போலி அரசியல் வாதிகள் திராவிடம் பேசி மக்களை ஏமாற்றும் வரை பெரியாரின் சிந்தனைகள் மக்களுக்கு தேவைதான்

பெரியார் சிந்தனைகள் இல்லாத தமிழ் சமூகம் இருட்டுப் பாதையில் குருட்டுப் பூணையாகும்.
3) கிழுமத்தூர் எங்கே இருக்கிறது? அந்த ஊரைப் பற்றிய உங்கள் நினைவுகளைச் சொல்லுங்களேன்.
ஏன் சொன்னால் ஆள் வைத்து அடிப்பீர்களோ: :)

எனது முதல் பதிவில் அது இருக்கும் இடம் மிகத் தெளிவாக சொல்லப் பட்டுள்ளது இங்கே சில நினைவுகள் மட்டும் ,

ஊரில் இருக்கும் ஆறு... எங்கள் கிராமம் முழுவதும் விவசாய நிலம் என்பதால் ஆறு இன்றியமையாத ஒன்று அதில் தண்ணீர் வரும் வேளைகளில் குளிப்பதும் குளத்தில் நீந்துவதும் (எங்கள் ஏரியாவில் இருக்கும் மிகப் பெரிய குளம் எங்கள் ஊரில்தான் உண்டு) கிராமத் திருவிழாக்களும் நண்பர்களுடன் சேர்ந்து எல்லா இரவுகளும் பேசிக்கிடந்த அந்த ஏரிக் கரை அம்மன் கோவிலும் நான் திருமணத்துக்கு முன்னும் பின்னும் என் துணையின் கரம்பற்றி நடந்த கைப்பெரம்பலூர் சாலையும்(ரைஸ்மில் ரோடு) என் குடும்ப உறுப்பினர்களாய் இன்றும் இருக்கும் கணக்கில் அடங்கா நாய்களும் பூனைகளும் மறக்க முடியாதவை
4) சாருநிவேதிதா மீது உங்களுக்கு என்ன கோபம்? அவரைப்பற்றிய உங்கள் விமர்சனம் என்ன?
அவர்மேல் எனக்கு தனிப்பட்ட முறையில் எந்தக் கோபமும் இல்லை இன்னும் உண்மையைச் சொன்னால் இன்றுவரை என்னோடு யாகூவில் அரட்டை அடிக்கும் நல்ல நண்பர் அவர். முன்பே ஒருமுறை அவர் பேசியது பற்றி பதிவிட்டுள்ளேன்.
அவரின் படைப்புகள் மீது மட்டுமான விமர்சணங்கள் சில நேரங்களில் கோபத்தின் உச்சிக்கு சென்று அவரையும் சில நேரம் தாக்கியிருக்கலாம். அவரைப்பற்றி சொல்லவேண்டுமானால் நல்ல எழுத்தாளர். தனிப்பட்ட அவரை விமர்சணம் செய்யும் தகுதி எனக்கு இல்லை ஆனால்
ஒரு வாசகன் எனும் முறையில் அவரின் எழுத்துக்களுக்கு விமர்சனம் எழுதும் உரிமை எனக்கு உண்டு அதன்படி பின் வருவது அவர் படைப்புகள் மீதான விமர்சனமே அன்றி அவர் மீதான தாக்குதல் இல்லை சாரு நிவேதிதா தனக்குத்தானே புலம்ப வேண்டியவற்றின் பிரதிகளை காசாக்க வேண்டி ஜீரோ டிகிரி நாவலை எழுத் அதுவும் யாருக்கும் புரியாமலே நல்ல விற்பனையானது அவர் மேலான நல்ல புரிதல்கள் இல்லாமல் அவரின் படைப்புலகம் கேள்விக்குள்ளான போது லத்தீன் பிரான்ஸ் இத்தாலி என கண்ணுக்குத் தெரியாத தேசங்களின் நல்ல எழுத்தாளர்கள் துணைக்கு வருவார்கள்
இவர் எழுதுவதே புரியாத போது இவர் ரசிக்கும் புத்தகங்கள் நிணைக்கவே மண்டை காய்கிறது. யோனி பற்றியும் முலைகள் பற்றியும் இன்னும் உடலுறுப்புக்கள் பற்றியும் எழுதுவதே நல்ல இலக்கியம் என நம்பும் ஒரு சாதாரண கலகக் காரர்.
கோனல் பக்கம் அவரின் இன்னொரு பக்கம் நாம் வெளியிடத்தயங்கும் அந்தரங்க டைரிக் குறிப்புக்களை நல்லி குப்புசாமி உதவியோடு இணையத்தில் ஏற்றி தினமலருக்கு கொடிபிடிக்கும் ஒரு சாதாரன சிறுகதை எழுத்துக்கு சொந்தக்காரர். இன்னும் இந்த உலகில் எதுவெல்லாம் நல்லவையாக பார்க்கப் படுகிறதோ அவையெல்லால் நல்லவை யில்லை என்று தனியே புலம்பிக்கொண்டு கிடக்கும் ஒரு பரிதாப எழுத்தாளர். உதாரணம் சுந்தர ராமசாமி முதல் இப்போதைய சாய்பாபா வரையிலான அவரின் கட்டுரைகள்,
கமல்ஹாசன் எழுதினால் அது காமம் ஆபாசம். ஆனால் அதையே இவர் ஒரு மது பாரில் பார்த்த பெண்ணோடு அப்படியே பின்னால் இருந்து புணரலாம் என எழுதினால் அது இலக்கியம் என இரட்டை வேடம் போடும் எழுத்துக்களுக்கு சொந்தக்காரர்
5) நடிகர் ரஜினிகாந்தைப் பற்றிய உங்கள் மதிப்பீடு என்ன?
அவரின் ஆரம்பகால கருப்புவெள்ளை படங்களை அவரின் ஆரவாரமில்லாத நடிப்பை இன்றும் ரசிப்பவன் தான் நான் ரஜினியின் சேட்டைகள் அதிகமாகி தனக்கு இருக்கும் ரசிகர் பட்டாளத்தினை குஷிப்படுத்த கோமாளி வேடம் போட்டபின்னால் வெளிவந்த படங்களை குறிப்பாக ரஜினியை கெடுத்ததில் எஸ்.பி முத்துராமனுக்கு ஏவிஎம்முக்கு பஞ்சு அருணாச்சலத்துக்கு வைரமுத்துவுக்கு பெரும் பங்குண்டு. இந்த கேள்வியை என்னிடம் நீங்கள் கேட்டதன் அர்த்தம் எனக்கு புரிகிரது அவர்மேலும் எனக்கு எந்த கோபமும் இல்லை எல்லாம் அவ்ர் ரசிகர்கள் எனக் கூறிக்கொள்ளும் விசிலடிச்சான் குஞ்சுகள் மேல் உள்ள கோபம், பல காரணங்களுக்காக.

மதிப்பீடு எனக்கேட்டால் தமிழ் திரையுலகின் சில ஏற்றுக்கொள்ள முடியாத வெற்றிகளுக்கு சொந்தக்காரர்.

நல்ல மனிதர் என மற்றவர்கள் சொல்லக் கேட்டதுண்டு நல்ல நடிகர் இல்லை. இதுமட்டும் எனக்குத் தெரியும்
சாதணைகள்:
1. ஒரு பஸ் நடத்துனர் இன்று இந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகரானது
2. ரசிகர்களை போல் இல்லாமல் தன் சக போட்டி நடிகர்களோடும் நட்போடு இருப்பது
3. ஜெயலலிதா வந்தால் தமிழ் நாட்டை ஆண்டவனே காப்பாற்ற முடியாது என தூர்தர்சனில்
பேட்டி கொடுத்தது
4. அதே ஜெயலலிதாவுக்கு ஓட்டைப் போட்டுவிட்டு தைரிய லட்சுமி என்பது
5. அரசியலுக்கு வற்றேன் வற்றேன் எனக் கூறி இன்றுவரை பட்டினிகிடக்கும் தன் குஞ்சுகளின்
ஏக்கப் பார்வையை சமாளிப்பது
6. பாபா தோற்றபோது பணத்தை திருப்பித் தந்தது
7. காவேரி போராட்டத்துக்காக சென்னையில் உண்ணாவிரதம் இருந்தது
அவரின் சமீப சாதனை:
8. அகில உலகில் முதன் முதலில் ரிலீசுக்கு முன்னறே திருட்டு ஆடியோ சிடி
லக்கியின் எல்லா கேள்விகளுக்கும் பதில் அளித்துவிட்ட திருப்தி இருந்தாலும் இந்த சுடரின் தொடர்ச்சியாக இதே கேள்விகளுக்கு இன்னும் விரிவான பதில்கள் வந்தாலும் வரலாம் . இன்னும் ஓரிரு நாட்களே சுடரின் கடைசி நாளாக இருப்பதால் இச் சுடர் தொடரை இத்துடன் முடித்துக் கொள்கிற்றேன் அல்லது இன்னும் எழுத யாரையும் அழைக்கலாமென்றால் பின்னூட்டி விளக்கம் அளிக்கவும்
வெட்டிப்பயல் பின்னூட்டத்தில் கேட்டுக்கொண்டபடியும் அப்படியே நான் சுடரைக் கொடுப்பதால் நான் கடைசி ஆளாக இருப்பேன் என்பதாலும் இச் சுடரை வெட்டிக்கான கேள்விகளுடன் அவரிடமே அளிக்கிறேன்
கேள்விகள்:
1. திராவிடன் என்பவன் யார் என்ற உங்கள் நெடுநாள் சந்தேகம் தீர்ந்ததா?
2., அனானி கழக தோழர்களால் வலைப்பூ உலகம் ஏற்றம் அடைகிறதா இல்லையா
3.உங்களுக்கு நெருக்கமானவர் ஒரு போலி என்று அறிய வந்தால் உங்கள் நிலைப்பாடு என்ன ?
4.உயர்கல்வியில் இடஒதுக்கீடும் க்ரீமி லேயரும் எல்லோருக்கும் புரியும் விதமாக விளக்கவும்
5. நீங்கள் எழுதுவதெல்லாம் கற்பனை கதையா இல்லை சொந்த கதைகளா? அப்படி உண்மையாய் இருக்கும்பட்சத்தில் அவர்களுக்கு இது தெரியுமா?
யப்பா வெட்டி உங்களுக்கு கேள்வி கேக்கறதுக்குள்ள எனக்கு பெண்டு கழளுதுப்பா :)

Saturday, January 20, 2007

கொலைகாரனிடமிருக்க வேண்டிய ஆயுதங்கள் கடவுளுக்கு எதற்கு?

ரண்டாயிரம், மூவாயிரம் ஆண்டுகளுக்குள் தோன்றியதுதான் இந்தக் கடவுள் சங்கதி. அதுவும் இந்தக் கடவுளை நமது ஆள் உண்டாக்கவில்லை. வெள்ளைக்காரன்தான் இந்தக் கடவுளையே உண்டாக்கியவன். அதைப் பார்ப்பான் ஒன்றுக்குப் பத்தாகப் பெருக்கி விட்டான். ஒரு கடவுள் பெயர் கூடத் தமிழ்ப் பெயரே கிடையாது. இங்கு இருக்கிற கடவுள்களின் பெயர்கள் எல்லாம் வடமொழிச் சொற்கள்தான். கடவுள் என்ற சொல்லே தமிழில் கிடையாது. தமிழனுக்குக் கடவுளே இல்லை. இன்றைக்கும் தமிழ்ச் சொல்லில் உள்ள ஒரு கடவுளும் கிடையாது.
வெள்ளைக்காரனும் காட்டுமிராண்டியாக இருந்த காலத்தில்தான் கடவுளைக் கற்பித்தான். அந்தக் கடவுளுக்கு நிறம் மஞ்சள் வர்ணம் என்றும் சொன்னான். அந்தக் கடவுளைக் காட்டு மனிதன் சிங்காரித்தான். அதற்கு உடை என்னடா என்றால் புலித்தோல் என்றான். தலை எல்லாம் சடை. காது எல்லாம் பெரிய ஓட்டை. நகைகள் எல்லாம் பாம்புகள். குடி இருக்கிற இடமோ சுடுகாடு. கையில் இருக்கிற கருவிகளோ மண்டை ஓடுகள். இவை எல்லாம் மனிதனுக்கு இருக்கக் கூடிய யோக்கியதையா? இவை எல்லாம் காட்டுமிராண்டித்தனமான சின்னங்கள் அல்லவா?
வெள்ளைக்காரனைப் பார்த்துதான் பார்ப்பான் இங்குக் கடவுளை உண்டு பண்ணினான். வெள்ளைக்காரன் கடவுள் ஜுபிடர்; பார்ப்பான் அதற்கு கொடுத்த பெயர் இந்திரன். வெள்ளைக்காரன் - மைனாஸ்; பார்ப்பான் வைத்த பெயர் எமன். வெள்ளைக்காரன் - நெப்டியூன்; பார்ப்பான் - வருணன். வெள்ளைக்காரன் - லூனஸ்; பார்ப்பான் - சந்திரன். வெள்ளைக்காரன் - சைனேஸ்; பார்ப்பான் - வாயு. வெள்ளைக்காரன் - அப்பல்லோ; பார்ப்பான் - கிருஷ்ணன். வெள்ளைக்காரன் - மெர்குரி; பார்ப்பான் - நாரதன். வெள்ளைக் காரன் - மார்ஸ்; பார்ப்பான் - கந்தன். இப்படியாக வெள்ளைக்காரனைப் பார்த்து காப்பி அடித்தவன்தான் இந்தப் பார்ப்பான். அப்படிக் காப்பி அடித்த கடவுள்களுக்கும் கதைகள் எழுதி, புராணங்கள் எழுதி, பார்ப்பான் வயிறு வளர்க்க ஆரம்பித்து விட்டான். அதை அப்படியே தமிழன் நம்பி ஏற்றுக் கொண்டு விட்டான்.
அப்படி ஏற்றுக் கொண்ட கடவுள்களில் ஒன்றுதான் இந்த விநாயகன். விநாயகன் என்ற சொல்லே தமிழ் கிடையாது. கடவுளுக்கு நாட்டில் என்ன பொதுவாக இலக்கணம் சொல்கிறார்கள். கண்ணுக்குத் தெரியாது - கைக்குச் சிக்காது புத்திக்கும் எட்டாது என்கிறான். அப்படியானால் எப்படிக் கடவுளை நம்புவது என்று கேட்டால், நம்பு என்கிறான். நம்பு என்பதில்தான் கடவுளை வைத்து இருக்கிறான். கிறித்துவனும், துலுக்கனும் அதைத்தான் சொல்கிறான். கண்ணுக்குத் தெரியாத கடவுளுக்கு எப்படி உருவத்தை உண்டாக்கினான்? கருணையே வடிவானவர் என்கிறான். அவன் கையில் ஏன் சூலாயுதம்? வேலாயுதம்? அரிவாள், மண்வெட்டி, கோடாரிகள் எல்லாம்? இவை எல்லாம் கருணையின் சின்னங்களா? கொலைகாரப் பசங்களுக்கு இருக்க வேண்டிய கருவிகள் எல்லாம் கடவுளுக்கு எதற்கு? கடவுளுக்கு ஒழுக்கத்தையாவது நல்ல முறையில் கற்பித்து இருக்கிறானா? எந்தக் கடவுள் இன்னொருத்தனுடைய மனைவியை கெடுக்காமல் இருந்திருக்கிறான்? விபச்சாரம் செய்யாத கடவுள் ஒன்றாவது உண்டா? இருந்தால் சொல்லட்டுமே, ஏற்றுக் கொள்கிறேன். கடவுள் பிறப்பைப் பற்றி தான் எழுதி வைத்து இருக்கிறானே கொஞ்சமாவது யோக்கியம் வேண்டாமா? விநாயகன் பிறப்பு எவ்வளவு ஆபாசமானது!
இன்றைக்கு நாம் சூத்திரர்களாக இருக்கிறோம் என்றால், அது பார்ப்பானால் மட்டுமல்ல - நாமே அதை ஒத்துக் கொண்டு இருக்கிறோம். பார்ப்பான் நம்மைச் சூத்திரன் என்று சொல்லப் பயந்து விட்டான். ஆனால், நாமே நாம் இந்து என்று ஒப்புக் கொண்டு, கோயில்களுக்குச் செல்வதன் மூலமாகவும், நெற்றியில் சாம்பலைப் பூசிக் கொள்வதன் மூலமாகவும் சூத்திரன் என்பதை ஏற்றுக் கொண்டு இருக்கிறோம். இன்றைக்கு இருக்கிற அரசாங்கம் நமது அரசாங்கம் என்று பேர். என்னத்துக்காக இந்தப் பண்டிகைகளுக்கு எல்லாம் லீவு விட வேண்டும்? நம்மை இழி மகன் என்று முத்திரைக் குத்திக் கொள்ளவா? துணிச்சலாக இந்த லீவுகளை எல்லாம் கேன்சல் செய்ய வேண்டும். இந்த அரசாங்கங்கூட, இந்த இடிந்து போன கோயில்களை எல்லாம் பழுது பார்த்துப் புதுப்பித்துக் கொண்டு இருக்கிறது. என்ன அர்த்தம்? நம்மை என்றென்றும் இழிமக்களாக்கச் செய்யும் முயற்சிதானே இது? வெட்கப்பட வேண்டாமா?
எங்களுடைய இயக்கம் இந்த நாட்டில் தோன்றிப் பாடுபடவில்லை என்றால், இந்தக் கடவுளைச் செருப்பாலடித்து, சாத்திரங்களைக் கொளுத்தி எரிக்கவில்லை என்றால், நமக்குப் படிப்பு ஏது? உத்தியோகம் ஏது? இன்றைக்கு நூற்றுக்கு நூறு தமிழனாக இந்த நாட்டை ஆட்சி செய்கிறார்களே! இது எப்படி வந்தது? நம்முடைய முயற்சியால் அல்லவா?
(29.8.73 அன்று சிதம்பரத்தில் விநாயக சதுர்த்தி கண்டனப் பொதுக் கூட்டத்தில் ஆற்றி உரை)

Friday, December 15, 2006

பெரியார்சிலை உடைப்பும் பேடிகளின் கொண்டாட்டமும்

பெரியார் சிலைக்கு சந்தனம் பூசி அவமானப் படுத்திய பன்றிகள் குனம் கொண்ட ஜந்துக்கள் வேலை தொடர்ந்து பெரியாரின் சிலை உடைக்கப் பட்டது. இதை வெறும் சிலையாக மட்டும் பார்க்கும் பேடிகள் அதை தங்களின் வெற்றி என நினைத்து கொட்டமடிக்கின்றன.

பெரியார் வெறும் சிலை மட்டும் அல்ல அவர் தமிழக அரசியல் சமூக விழிப்புணர்வின் அழிக்க முடியாத சின்னம். சுயமரியாதை என்றால் என்ன என தமிழர்களுக்கு சொல்லித் தந்த தந்தை.

அவரை அவமானப் படுத்தும் எவனும். ஒரு சமுதாயத்தை, தனது சுயமரியாதையை, ஒரு இனத்தின் மதிப்பை, அதன் மொழியின் சிறப்பை கேளிக்குள்ளாக்குகிறான். பெரியாரை அவமதிப்பதாய் கருதி தனது சக இனத்தின் மதிப்பை கேள்விக்குள்ளாக்கும் மூடன், அவனுக்கு துனை போகும், சுயமரியாதை இல்லாத தமிழன் இன்னும் இருக்க வேண்டும் என நினைக்கும் ஆதிக்க வெறிபிடித்த ஆரிய கும்பல் அதன் அளவற்ற வெறி, பார்ப்பனீயம் செத்துப் போகும் என நினைக்கும், கொள்கை வெறி பிடித்த கயமைக் கேடிகள், இவர்கள் தூண்ட நினைக்கும் வன்முறை ஆட்டம் எல்லாம் சேர்ந்து....

எங்களுக்கு,

பெரியாரை பின்பற்றும் எங்களுக்கு மேலும் மேலும் ஊக்கமும் ஆக்கமும் தருகின்றன. அதற்க்காகவாவது ஒரு நன்றி. அவமதிக்க நினைக்கும் அனைவருக்கும் ஒரு செய்தி...

தலையை தயார் படுத்தி வையுங்கள் பிடறியில் இறங்கும் இடி



Saturday, December 09, 2006

நான் வன்னியன்

நீண்ட நாட்களாய் தமிழ் மணம் பதிவுகளில் தலை காட்டாமல் இருந்த நான் இன்று எழுத காரணம் இருக்கிறது. சகோதரர் விடாது கருப்புவை நீக்கி விட்டது குறித்து இப்போது அறிந்தேன்.

இப்போது எனக்கு எழும் கேள்விகள். பதில் சொல்ல விரும்புவோர் கூறலாம்.

1. தமிழ் மணத்தில் பார்ப்பணீயம் பற்றி எழுதுவது தவறா?

2. திராவிடத்தை இழித்தும் பழித்தும் எழுதுபவர்கள் என்ன வேண்டுமானாலும் எழுதலாமா?

3. அதை எழுதுபவர்களின் பெயர் சொல்லி பதிலுக்கு சில கோபக் கணைகளை வீசிடின் அது தமிழ் மண விதிகளுக்கு புறம்பானதா?

4. விடாது கருப்புவையும், சிலரையும் பெயர் சொல்லி, இழி பிறவி, என விளிப்பவர்களை என்ன செய்ய போகிறது தமிழ்மண நிர்வாகம்?

//ஹரிஹரன்களை விட கருப்புவின் செயல்களில் குற்றம் காண்பது எவ்வகையில் நியாயம் என்று புரியவில்லை. அவரை பகிரங்கமாக குற்றம் சாட்டிய மாயவரத்தான்களை பற்றி கணக்கில் எடுத்தீர்களா என்றும் புரியவில்லை// செந்திலின் இக் கருத்துடன் நான் முற்றிலும் உடன் படுகிறேன்.

//உங்களை உறுத்தியது அவரின் மொழி என்றால், ஒடுக்கப்பட்டவர்கள் கேலிச் சீண்டலுக்கு ஆளாகும் போது அவர்களிடமிருந்து எங்ஙணம் நாகரீக வார்த்தைகளை எதிர்பார்க்கிறீர்கள்???// இதையும்தான்.

தமிழ் மண நிர்வாகம் எடுக்கும் முடிவுகளை பார்க்கையில் இது முற்றிலும் பிராமணீயத்தை வளர்க்க மட்டுமே பயன்படுமே அன்றி ஒரு நல்ல சூழலையும், தமிழையும் அல்ல.

தான் அய்யர் என்பதை வீராவேசத்துடன் சொல்லும் ஒருவர் தனது நிலையில் இருந்து நல்ல வார்த்தைக்குள் நஞ்சை வைத்து நான் இப்படித்தான் இருப்பேன் என கூறினால் அது நியாயம்.

ஒடுக்கப் பட்ட மக்களின் அவலம் குறித்து ஆற்றாமை கொண்டு எழுதும் ஒருவருக்கு தடை நல்ல நீதி.

" மனு நீதி... ஒரு குலத்துக்கு ஒரு நீதி".

இப்படி பார்ப்பணீயம் பற்றி அதை எதிர்த்து கேள்வி கேட்க்க ரோசா வசந்தை போல பார்ப்பணராய் இருக்க வேண்டுமா? அவருக்கு அனுமதி.. அதையே எழுதும் கருப்புவுக்கு தடை?..

நான் வன்னியன். நான் எழுதினால் என்ன செய்வீர்கள்?

வாழ்க தமிழ்மண நீதி.

Sunday, August 20, 2006

ஞாநியின் பித்தலாட்டம்.

மீண்டும் கரடி பொம்மை ஞானியின் பித்தலாட்டம்.

கண்ணகி சிலை விவகாரத்தில் கடும் எதிர்ப்புகளை சந்தித்த பத்திரிகையாளர் ஞாநி இப்போது அதே ஓ..பக்கங்களில் ஒரு கருத்தை சொல்லியிருக்கிறார். புதுமையான விழிப்புணர்வுகள் சார்ந்த கருத்துக்கள் சொல்லுவதாக தனக்குத்தானே ஜல்லியடித்துக் கொள்ளும் ஞாநி தனது புதிதாக வைத்திருக்கும் கருத்து மூலம் தான் ஒன்றும் இயற்கை விதிகளுக்கு அப்பாற்பட்டவன் இல்லை என்ற தனது சுய முகத்தை சொல்லியிருக்கிறார். கருத்து சொல்ல யாருக்கும் உரிமை உண்டு என்பதில் எனக்கு மாற்று எண்ணமில்லை. ஆனால் தான் சொல்லுவது மிகச் சரியானவை எனச் சொல்லும் ஞாநி இந்த விவகாரத்தில சுமார் 100 நாட்களுக்குள் தனது கருத்து இப்படி மாறிப் போனதற்கான காரணம் எதையும் சொல்ல வில்லை. கீழே இருப்பது அவரின் இந்த வார விகடன் ஓ.. பக்கங்களில் எழுதியது.
"சிலைகள் வைப்பது அவசியம்தானா?’’

‘‘வீட்டுக்குள் அப்பா, அம்மா போட்டோவை மாட்டிவைப்பது போல, நாட்டுக்கு உழைத்தவர்களுக்கு சிலை வைப்பதும் அவசியமானதுதான். இது ஒரு நினைவுகூரல். ஆனால், சிலைகளுக்கு மாலை மரியாதையெல்லாம் செய்து, அதை வழிபாடாக மாற்றுவதுதான் தேவையற்றது. முக்கியமான முன்னோடிகளை நினைவுகூர மட்டும் சிலைகள் தேவை என்று இல்லை. மக்களிடம் நல்ல கலை உணர்வை, அழகு உணர்வை ஏற்படுத்த அழகான சிற்பங்கள் எல்லாப் பொது இடங்களிலும் தேவை. தாசில்தார் அலுவலக வராந்தாவில் ரோடினின் சிந்திக்கும் மனிதனின் சிற்பத்தை வைத்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்! ஐரோப்பா முழுவதும் தலைவர்களுக்கு மட்டுமல் லாமல், பொதுவான கலைச் சிற்பங்கள் தெருவுக்குத் தெரு வைக்கப்பட்டு இருக்கின்றன. அப்படிப்பட்ட சூழல் இங்கேயும் தேவைப்படுகிறது.
நமக்கு அது போல நல்ல சிலைகள் வைக்கத் தெரியாமல் இருப்பதால்தான், சிலைகள் மீது வெறுப்பு உருவாகிறது!’’
இனி எனது கருத்துக்கள்:
ஐரோப்பியர்களின் சிலை ஆர்வம் என்பது போலவே இந்தியர்களும் சிலை ஆர்வமும் கலை ஆர்வமும் கொண்டவர்கள் என்பது தெரியாதவரல்ல ஞாநி. அவர்களின் கலாச்சாரம் சாந்த கலை சார்ந்த சிலைகள் வைப்பதை ஆதரிக்கும் இவர் கண்ணகி சிலை வைக்க அத்தனை கடினமான வார்த்தை பிரயோகங்களோடு அதனை விமர்சித்தது ஏன்.?
தமிழர்களை பொறுத்த வரை கலாச்சாரமும் வாழ்கையும் கலையும் வேறு வேறு அல்ல. கண்ணகி வெறும் உறுவக் குறியீடு என முழங்கியவர் இப்போது ரோடினின் சிலையை கோவை தாசில்தார் அலுவலக வாசலில் வைக்கச் சொல்லவேண்டிய அவசியம் என்ன.
ஐரோப்பியர்களுக்கு ரோடின் எப்படியொ அதே போல தமிழர்களுக்கு கண்ணகியும், பெரியாரும். காமராசரும். கண்ணகி வெறும் காப்பியத்தலைவி மட்டுமல்ல், அது ஒரு கலாசாரத்தின் சின்னமாக அனேகம்பேரால் கருதப் படுகிறது. கற்பு குறித்த சர்சைகள் ஆயிரம் இருப்பினும் கண்ணகி கால வாழியல் முறைகள் தமிழருக்கு அறியக்கிடைக்க காரணம், சிலப்பதிகாரம். சிலப்பதிகாரம் என்றதும் நம் நின்ணைவுக்கு வருவது கண்ணகி.
அதுபோல திராவிடர்கள் மத்தியில் தனது கருத்துக்களால் விழிப்புணர்வுகளை ஊட்டிய, பெரியாரும், உலக மக்கள அனைவருக்கும் பொதுவான கருத்துக்களை எல்லோறாலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய சொன்ன வள்ளுவரும்.
கலாச்சாரமும் கலையும் வேறுவேறாக இருக்கும் ஐரோப்பிய, மேலை நாடுகளுக்கு வேன்டுமானால் ஞாநி சொன்னது சரியாக இருக்கும், நாம் கடவுள்களின் சிலையையைக் கூட கலைவண்ணத்துடன் தான் படைக்கிறோம், கலையும், கலாச்சாரமும் பின்னிப் பினைந்தது தான் தமிழகம்.
கலைக்கு சிலைவைத்தால் அது கலாச்சார சிலையே, சிலைகளை வழிபாட்டுக்கு உரியதாக ஆக்குவதை கண்டிக்கும், ஞாநி எல்லா சிலைகளுமா வழிபடப் படுகின்றன, தமிழன் தனக்கு வாழ்கையில் உதவுவதாக கருதும் எல்லாவற்றின் மேலும் அன்பு செலுத்துபவன். அதை பூசிப்பவன் , ஆத்திகர்கள் சாமிகும்பிடுவது போல.
அவர்கள் இல்லாத கடவுளை வணங்குகிறார்கள், இவர்கள் ரத்தமும் சதையுமாக தனது வாழ்க்கையை மக்களுக்காக அவர்களின் முன்னேற்றத்துக்காக பாடுபட்டவர்களை வணங்குகிறார்கள். இது கூட தனக்கு இருக்கும் அன்பை வெளிப்படுத்தும் ஒரு சின்னமே மாலைகள், வணங்குதல். எல்லாம், ஐரோபியர்கள், வழியில் பார்த்தால் ஹாய் சொல்லிப் போவதில்லை, அதுபோல.
அவர்களும் அங்கே சிலைகளுக்கு முத்தம் தருவது கட்டிப் பிடிப்பது என செய்கிறார்க்ளே அதை சரியென்று ஞாநி ஒத்துக் கொண்டால் இங்கே சிலைகளுக்கு மரியாதை தருவதையும் ஒத்துக்கொள்ள வேண்டும். முத்தம் கொடுப்பது அவர்கள் பழக்கம் மாலை போடுவது நமது பழக்கம் அவ்வளவுதான்.
பொங்கல் கொண்டாடும் போது மாடுகளை வணங்குபவன் தமிழன் அது அவன் அதன்மேல் கொண்ட அன்பின், அது செய்த உதவிகளுக்கு, நன்றி தெரிவிக்கும் வெளிப்பாடு. அதைப்போலவே சிலைகளும் அதை வணங்குவதும் வெறும் கலைகளுக்கு மட்டும் இல்லை தமிழர்களின் சிலை ஆர்வம் அது வெறும் சிலை அல்ல கலாச்சாரத்தின் சின்னம் அதை தமிழன் தனக்குகந்த முறையில் தனது அன்பை மரியாதையை வெளிப்படுத்த கடமையும் உரிமையும் உண்டு.
கல்லாக மட்டும் இருக்கும் கடவுளுக்கு பூசை வேண்டுமென்றால் மனிதர்களாய் இருந்த தலைவர்களுக்கு சிலையும் பூசையும் வேண்டும்.
ஞானிகள் தான் சொல்லுவது மட்டுமே சரியென்று எண்ணுவதில்லை அப்படி நம்பினால் அவர்கள் ஞானி இல்லை.