Thursday, August 31, 2006

அதிமுக DTS - கதை விவாதம்

படத்தின் அறிவிப்பு வந்தாலும் வந்தது , வினியோகஸ்தர்கள், ரசிகர்கள், நம்அன்பு அனானிகள் இட்மிருந்து ஒரே பின்னூட்ட ஆதரவு, ஆலோசனைன்னு என்னை படத்துக்கு கதை எழுதவே விடவில்லை....

சரி படத்துக்கு ஒன்லைன் தயாரித்துஅதை கதா நாயகிகளிடமும், கதா நாயகன் மற்றும் இயக்குனரிடம் காட்டி டிஸ்கஸன்செய்துவிட்டு வரலாம் என்று அவர்களின் அலுவலகத்திற்கு தொடர்புகொண்டபோதுஅங்கிருந்து நேராக சிறுதாவூர் பங்களாவுக்கு வரும்படி இளவரசியிடம் இருந்து போன் .

இனி சிறுதாவூரில் நடந்த கதை விவாதம்.

ஹீரோயின் ஜெயாவும் , சசிகலாவும் நமக்கு முன்பே அங்கே இருந்தனர், பாவம்நடராஜன் வழக்கம் போல் உள்ளே வர பயந்து பக்கத்து கெஸ்ட் ஹவுஸில் இருந்துவிடியோ கான்பரன்ஸில் பேச ஒத்துக் கொண்டார், சோ தனக்கு தனியாக மைக்கொடுத்தால் மட்டும் பேசுவேன் என்றார், கராத்தே கட்சி பேதம் இல்லாமல்கலந்து கொள்ள சம்மதித்தாலும் ஹீரோயின் அவர் வந்தால் குண்டர்களை வைத்துதாக்குவேன் என நேராகவே சொன்னதால் அவர் வழக்கம் போல செல்போனில்கலந்துகொள்ள வாக்களித்தார்.

முதலில் நமக்கு ஒரு தட்டு நிறைய திராட்சை வந்தது அதை கையில் எடுத்துக்கொண்டே,,,

"எங்க வாங்குனது என்றோம் "

இது சொந்த தோட்டத்தில் விளைந்தது"

என்ற ஜெயாவை பய பக்தியோடு பார்த்த சோ

"இன் 1976 நான் இவங்க கூட அந்த தோட்டத்துக்குபோனேன் அப்போ எனக்கு இவங்க அறிமுகம் அன்னிக்கு எனக்கு தெரியலை இவங்கமுதலமைச்சர் ஆவாங்கன்னு"

"ஆமாக்கா நான் கூட ஒங்களுக்கு விடியோ கேசட் வாடகைக்கு விடும்போதுநினைக்கலை"

என்ற சசியை முறைத்த ஜெயா

"சரி நாம கதைக்கு போகலாமா" என்றவாரே முன்னால் இருந்த கான்பரன்ஸ் ஸ்க்ரீனைதிறந்தார்.

நான் கதை சொல்ல ஆரம்பித்தேன் என் செல் போனை திறந்த வாரே.

நான்: " தமிழ் நாட்டில் ஒரு பெரிய நடிகர் சந்தர்ப வசமா அவர் அரசியலில்இறங்கி முதல்வர் ஆகிறார்.. அவர் கூட நீங்க கொஞ்ச படத்துல சோடியாநடிக்கறீங்க.....

சசி: யக்கோவ் இது என்னமோ தெரிஞ்ச கதை மாதிரி இருக்கே...

ஜெ: அதானே இது என்னமோ ஏற்கனவே கேட்ட கதிமாதிரி இருக்கே...

சோ: ஆக்சுவலி இன் இன்டியன் சினிமா பீல்ட் டூயிங் ரிப்பீட்டட் ஸ்டோரீஸ் பார் எ டெக்கெட் ...

நட: யோய் சோ நிருத்துய்யா எங்கப்போனாலும் ஒடனே இங்லீஸ் பாதி தமிழ்பாதின்னு மொட்டைத் தலைய தடவிக்கிட்டே பீனல் கோடு பேச் ஆரம்பிக்கிறே...

கராத்தே: செல் போனில்" எனக்கென்னா கேரக்டர்பா மேயர் கேரக்டரா?

நான்: கொஞ்சம் பொறுமை இன்னும் முடிக்கலை... அப்ப நீங்க அவர் கூட "நடிச்ச" பாசத்தில ஒங்களுக்கு கட்சியில முக்கிய பொறுப்பு குடுக்குறார்.கொஞ்ச நாளில் அவருக்கு ஒடம்புக்கு முடியாம போகுது...

ஜெ: யாருக்கு.... ?

நான்: உங்க கூட நடிச்சி உங்கள ஆளாக்குனவருக்கு.

ஜெ: ஓகோ...

சசி: எனக்கு என்னா வேசம்...

நான்: நீங்க டி.வி.டி. வாடகை கடை நடத்துர பொண்ணு. உங்க கிட்ட இவங்ககேசட் வாடகைக்கு வாங்க வராங்க..

நடரா: எனக்கு என்னாய்யா கேரக்டரு...

நான் : அதுதான் நீங்க இயக்குனர் இவங்க ரெண்டுபேரும் என்னா செய்யனும் என்ன செய்யக்கூடாதுன்னு சொல்ற வேலை. இவங்க கேக்குற எல்லாத்தையும் அரேஞ்பன்னுவீங்க ஆனா பேச மாட்டீங்க.. கிட்டத் தட்ட ஒரு மாமா மாதிரிஇவங்களுக்கு என்று சசியை நோக்கி கை காட்ட

நடரா: அப்படீன்னா சரி..

சோ: ஹீரோ நான் எனக்கு ஒன்னும் இல்லையா?

நான்: நீங்க ஹீரோயின் என்ன பன்னுனாலும் பின்னால நின்னு கோசம் போடுவீங்கஒங்கள இவங்க தன்னோட அரசியல் குருவா ஏத்துகிறாங்க... ஆனா நீங்க அப்ப அப்ப வேற பொண்னு கூட போர கேஸ் அதனால ஒங்கள கொஞ்சம் இவங்களுக்கு புடிக்காதுமேலும் நீங்க ஒருதடவை இவங்களுக்கு எதிரா வேற பொண்ணு கூட சுத்துனதை பாத்துகோபத்துல் இருக்காங்க...

கராத்தே: அப்ப நான்?

நான்: நீங்க வில்லன் .. முதல்ல இவங்க கூட இருந்து கொள்ளை அடிக்கறீங்கஅப்புறமா பங்கு பிரிக்கும் போது தகறாரு வந்து எதிர் கோஷ்டியில போய்சேந்து இவங்க பன்னுன அட்டூழியத்தை மேடை போட்டு சொல்றீங்க..

ஜெ: நாங்க கொள்ளை அடிக்கிறோமா? சசி என்ன சொல்றார் இவர்?

சசி: அதானே என்னாய்யா கதை சொல்றே?

நான்: அதாவது மக்கள் மனசை கொள்ளை அடிக்கறீங்க... உங்க "திறமைல" மயங்குற உங்க தலைவரோட அமைச்சர்கள் எல்லாறும் உங்களுக்கு ஆதரவு தராங்க.. அப்ப ஹீரோ உங்களுக்கு ஆதரவா இருக்காரு... திடீர்னு அந்த பேமஸ் நடிகர் செத்து போறார் நீங்க அவர்கூடவே செத்துப் போற மாதிரி ஒரு நாடகம் நடத்துறீங்க .... திரைல பாக்குற மக்கள் எல்லாம் கண்ணீர் விட்டு கதறும் படியான செண்டிமென்ட் சீன்அது...

நடரா: நான் என்னவா வரேன்?

நான்: நீங்க தான் மாமாவாச்சே கட்சிக்கு ஆள் புடிச்சி விடுவது உங்கவேலை... உங்க மனைவி சசி ஆனா நீங்க பேசிக்க மாட்டீங்க

சோ: டூயட் எதுவும் இல்லையா?

ஜெ: ஆமா டூயட் எதுவும் இல்லையா வேனும்னா மைசூர் பேலஸ்ல வச்சிக்கலாம்சொந்தக்காரங்கதான் அவங்க ...

நான்: டூயட் இல்லாமலா? உண்டு " பட்டத்து ராணி பார்க்கும் பார்வை வெற்றிக்கு தான்" இது இந்த வருசத்து சூப்பர் ஹிட்டா ஆகும் ஹீரோ கையில ஒரு சாட்டையோட வந்து உங்கள புறட்டி எடுப்பாரு நீங்க ஒரு குத்தாட்டம் போட்டு ஒரு சவுண்ட் விடுவீங்க சனங்க அள்ளி தெளிப்பாங்க ஜில்லுன்னு ஜொள்ளு...

சசி : அக்கோவ் இந்தாளு ஒன்னோட சொந்த கதையை எடுத்து தன்னோட கதைன்னு பீலாவிட்டு ஒன்னையும் அதுல நடிக்க வச்சி காசு தேத்த பாக்குறான் ஆமா,,,

ஜெ: என்ன மிஸ்டர் அப்படியா?

நான்: அதெல்லாம் இல்லீங்க கிட்டத் தட்ட ஒங்க கதைமாதிரிதான் ஆனா க்ளைமாக்ஸ் வேற ..

ஜெ: என்னது?

நான்: க்ளை மாக்ஸில ஹீரோயின் திருந்தி நல்லவங்களா ஆயிட்றாங்க...

ஜெ: அப்ப சரி... சசி இது நம்ம கதை இல்லை நாம என்னைக்கு திருந்தப் போறோம்...

சோ: நான் வழக்கம் போல சும்மா தானா? அப்ப நான் பிஜேபி கூடவும் காங்கிரஸ்கூடவும் பேசி கலைஞர் வசனத்தில ஒரு படம் பன்னுறேன் என்னா?

கராத்தே: யோவ் நான் வில்லன் எனக்கு சீனே இல்லயா?

நான்: நீங்க செல்போன் மூலம் மட்டும்தான் வரீங்க ஜூவி, நக்கீரன் இப்படிபத்திரிகைல பேட்டி வரும்... நீங்க டப்பிங் மட்டும் பேசுனா போதும்....

கராத்தே: நான் நேர்ல வரண்டீ ஒன்னையும் ஹீரோயினையும் வந்து பேசிக்கறேன்.

நடரா: நான் என்னய்யா மாமா கேரக்டர்தானா... அப்ப சசி எனக்கு ஹீரோயினா?நான் கூட வரனா இல்லை பேக்ஸ், இமெயில் இப்படி ஹைடெக் காதலா?

நான்: கப்புன்னு பாயின்ட் புடிச்சீங்க இதான் வேனும்... நீங்க பத்துபதினைஞ்சி வருசமா சசிய பாக்காமலே காதலிச்சி பரிதாபமா கதையைமுடிச்சிக்கரீங்க...

சசி: நான் என்ன ஆகுறேன்?

ஜெ: நீதான் என் கூடவே இருக்கியே உனக்கும் எனக்கும் என்ன தொடர்புன்னு தெரியாம ஜனங்க மண்டைய ஒடச்சி பட்டி மன்றம் வைக்கனும் கதைக்கு இதானேசஸ்பென்ஸ்?

நான்: அதே தான் ,,,, இதுக்கு நடுவுல ஒரு 30 வயசு குழந்தைய தத்தெடுத்துஅதுக்கு கோடிக் கணக்குல கல்யாணம் பன்னி கின்னஸ்ல இடம் புடிக்கறீங்க...அந்த பையன் கோவிச்சிகிட்டு வீட்ட விட்டு ஓடிப் போறான் அப்ப அந்த பையன்கொண்டுபோன பொம்மைகள் எல்லாத்தையும் திருப்பி வாங்க நீங்க கஞ்சா கேஸ்போட்டு அவன உள்ள தள்ளி விசாரிக்கறீங்க

ஜெ: கதை நல்லா பெரிசா இருக்கும் போல தெரியுதே?

நான் : இன்னு விசயம் இருக்கு !

ஜெ: எங்கிட்ட தைரியமாக பேசுற ஒரே ஆளு நீதான், சொல்லு

நான் : நீங்க தடலாடியா உங்களை எதிர்த்துப் பேசின அந்த சூப்பர் நடிகர் வீட்டுக் கல்யாணத்தில கலந்துக்கிறிங்க

ஜெ: என்ன மேன் கொஞ்சம் கூட பயமில்லம உளறுரே !

நான் : உளறல மேடம். அந்த ஆளுக்கு ஏகப்பட்ட வெறியனுங்க சாரி ரசிகனுங்க இருக்காங்க. அந்த ஆதரவு உங்களுக்கு கிடைக்கும். அப்பறம் அந்த ஆளும் உங்களை எதிர்த்து பேச மாட்டார்

ஜெ: சசி, இது நல்லா ஒர்கவுட் ஆகும் போல இருக்கே. சரி சீன் வச்சிடுங்க

நான் : அப்பறம் இன்னொரு சீனும் வைக்கனும்

ஜெ: பாத்து அப்பறம் எனக்கு சீனே இல்லாமல் போய்டப் போவுது

சசி : அக்கா கொஞ்சம் இருங்க, நல்ல ஐடியாவா கொடுக்கிறார். நமக்கு பணம் நூறு கோடி சாரி படம் நூறு நாள் ஓடனும் அதானே முக்கியம். நீங்க சொல்லுங்க

நான் : ஒரு ஆளு கருப்பு எம்ஜிஆருன்னு சொல்றார். நீங்க அவருக்கு மறைமுகமாக ஆதரவு கொடுக்கிற மாதிரி சீன்

ஜெ: போறப் போக்கப் பார்த்தால் கதை கந்தல் ஆயிடும் போலருக்கே. மிஸ்டர் என்ன சொல்ல வர்ரிங்க?

நான் : மேடம் கோவப் படக்கூடாது. இதை நீங்க செய்றதால அவுரு உசிப்பேறி சம்பாறிச்ச காசெல்லாம் அண்ணாமலைப் படத்தில வர்ரமாதிரி அரசியலுக்கு செலவு பண்ணி காணமால் போய்டுவார். அப்பறம் சிவப்பு எம்ஜிஆருன்னு கூடஎவனும் அவதாரம் எடுத்து உங்களை சீண்ட பயப்படுவானுங்க.

நான் : மிஸ்டர் வெரிகுட். சோ சொல்றதை விட இது உருப்படியான ஐடியாவா இருக்கே !

சோ: சந்தடி சாக்கில என்ன முட்டாள்னு சொல்றிங்க. என்ன பண்ணறது சாதி பாசம் தான் என்னைக் கட்டிப்போட்டு வச்சிட்டு.

ஜெ: மிஸ்டர் சோ. உங்களுக்கு சேர வேண்டியது சரியா வந்து சேர்ந்திடும்

சோ: எனக்கு துக்ளக் விளம்பரம் பன்னிடுங்க தனியா சம்பளம் வேண்டாம்

கராத்தே: யோவ் என்க்கு என்னா சிம்கார்ட் விளம்பரமா?

சசி: நம்ம விடியோ கடைக்கு மட்டும் ஒரு சின்ன விளம்பரம் ..

நடரா: எனக்கு எதுவும் வேனாம்பா சசி கூட சேத்து வக்கிற மாதிரி ஒரு சீன் வை படத்தில அது போதும்.. கனவு சீனா இருந்தா கூட பரவாயில்லை

சசி: கதைக்கு முடிவு இல்லையா?


நான் : எப்படியும் சுமுகமாக முடிக்கனும். ஆனால் படம் பாக்குற ஜெனங்க கிட்டதான் உண்மையான முடிவு இருக்கு

ஜெ: அதல்லாம் சென்டிமென்ட் சீனு வச்சி கவுத்துடலாம். ஒரு உண்ணாவிரத சீன் வச்சிடுங்க !

நான் : மேடம், இது கதைகூட ஒட்டவே இல்லையே

ஜெ: மிஸ்டர் சூப்பரோட கதை எத்தினி பாத்திருக்க, எதாவது ஒட்டி இருக்கா சொல்றதெ கேளுமேன், இங்கே நான் தான் புரொடியூசர், சசிதான் பைனான்சியர். எதாவது சொதப்பினால் அப்பறம் ஆட்டோக்களும் ஆளுங்களும் இருக்கவே இருக்காங்க

நான் : மேடம் பயமுறுத்தாதிங்க. நீங்க சொல்லியும் கேட்கமல் இருக்க எனக்கு கெரகாமா என்ன ?

அவசரமாக,

நடரா : ஐயோ மோசம் போய்டோம்

ஜெ: சசி, மாமா கலவரமாகிறார் என்னான்னு கேளு, மதுரை 30 கோடி இடைச் சொருகுனது நாம தான்னு மேட்டர் சிக்கிடுச்சா

நடரா : சசி, அதெல்லாம் ஒன்னுமில்லை, நாம படம் எடுக்கிற மேட்டர் எப்படியோ அந்த கிழவனுக்கு தெரிஞ்சி போச்சாம், இப்பதான் மா.செ ஒருத்தன் போன் பண்ணி இதை சொன்னான்

ஜெ: சசி உம்புருசனுக்கு எதாவது கழண்டு போயிடிச்சா?

நடரா : அம்மா தமாசா சொல்றாங்க! சசி அதே கதையை அந்த கிழவன் எடுக்க சொல்லி வசனம் எழுதிக் கொடுக்கிறதா ராமநாராயணனிடம் சொல்லியிருக்கிறாராம்.

நான் : மேடம் ஆபத்து , நாம ஒடேனே படத்த எடுத்து முடிச்சிடனும் கெளம்புங்க, கதைக்கு முடிவெல்லாம் ஜெனங்களுக்கு பரிசு கொடுத்து கண்டுபிடிச்சக்க சொல்லலாம் அதுக்கு பணத்தை மட்டும் ஏற்பாடு பண்ணுங்க.

ஜெ : சசி பிரசாரம் போகனும் ... சாரி சூட்டிங்க் போவனும் ஒடனே கேரவன ஏற்பாடு பண்ண சொல்லு

சசி : அக்கா, அப்பறம் மேக்கப்

ஜெ : மேக்கப் எல்லாம் கேரவன் உள்ளேர்ந்து போட்டுக்கலாம். ம் பேக்கப்! பேக்கப் !

Wednesday, August 30, 2006

அதிமுக-அடிவருடி திவாலா முன்னேற்ற கழகம்-DTS

லக்கிலுக் அதிமுக படம் காட்டுனார் நாம சும்மா இருந்தா தியேட்டர் வெறிச்சோடிப் போகுமில்லே அதான் நான் இப்ப ஒரு படத்துக்கு கதை எழுதிகிட்டிருக்கேன் அது முடிஞ்சதும் இன்னிக்கு சாயந்தரமே வெளியீடுப்பா...
தொழில் முறை வல்லுனர்கள்:


ஹீரோயின் 1 - முன்னாள் நடிகை செயலலிதா. செல்வி ?

ஹீரோயின் 2 - ஒட்டிப் பொறக்காத சகோதரி சசிகலா

ஹீரோ- சோ.ராமசாமி அய்யர்

வில்லன் - கராத்தே தியாகராஜன்

காமெடியன் - வேற யாரு எஸ்.வி.சேகர்.

சண்டை- சட்டமன்ற புகழ் எல்லா துணை அதிமுக நடிகர்களும்.

ஊமையன் வேடம்: ஓ.பன்னீர் செல்வம்

கதை திரைக்கதை வசனம் இயக்கம்: நடராஜன்.

ப்ளாகர் அக்கவுண்டில் வந்தால் டிக்கட் விலை உண்டு.

அனானிகளுக்கு டிக்கட் இலவசம்.....

புதிய தொழில் நுட்பம் டி,டி.எஸ், டால்பி டிஜிடல், ட்ரூ சர்ரவுண்டு சவுண்டு, 3டி கூட ட்ரை பன்னுறேன்

Sunday, August 27, 2006

வே.ஆனைமுத்து நூல் நிதி

வே.ஆனைமுத்து ஜூன் 21இல் 81-அய்த் தாண்டுகிறார். 60 ஆண்டுகள் - தமிழ் - தமிழன் - தமிழ்நாடு சிக்கல்களுக்கு தீர்வு காண உழைத்திருக்கிறார். களப்பணி - பிரச்சாரம் - எழுதிக் குவித்தது - எல்லாம் காற்றில் கலந்த பேரோசையாக! இவர் எழுத்தில் நூலானது - 1980இல் - ஒரு சிறு பகுதி மட்டுமே!

பெரியாருக்கும் ஆலோசகர்: பலருக்குத் தெரியாது - தோழர் ஆனைமுத்து பெரியாருக்கும் ஆலோசகர் என்பது. இலக்கிய - சட்ட - வரலாற்றுச் செய்திகளில் நாள் தேதி இடம் - உட்பட நினைவில் வைத்திருக்கும் கம்ப்யூட்டர் இவர். புத்தமதத்துக்குப் போனாலும் - நாத்திகன் ஆனாலும் - இந்து இல்லை என்று எழுதிக் கொடுத்தாலும் நீங்கள் இந்துதான் - என்ற செய்தியை ஆதாரங்களுடன் - நீதிமன்ற தீர்ப்பு சான்றுகளுடன் பெரியார் முன் வைத்தார் ஆனைமுத்து. "தப்பு பண்ணிட்டேன்” என்று பெரியார் தலையில் அடித்துக் கொண்டார். அதுமுதல் ஆனைமுத்தை முதன்மை பிரச்சாரகர் ஆக்கினார், பெரியார்.

இலக்கியச் சுரங்கம்: தமிழ் இலக்கியங்களை எழுத்தெண்ணிப் படித்தவர் - ஆனைமுத்து. எந்த இலக்கியத்தில் - எந்தச்சொல் - எந்த இடத்தில் இருக்கிறது என்று தெரிந்தவர். திருக்குறளில் பெரிய ஆராய்ச்சியே செய்து - அது ஒரு நீதி நூல் மட்டுமே - மனுநீதியிலும், அர்த்த சாஸ்திரத்திலும் இருக்கும் ஈவிரக்கமற்ற அரசக் கொடுங்கோன்மைக் கருத்துக்கள் - திருக்குறளில் இல்லை என்றவர் ஆனைமுத்து. மனு - கவுடில்யர்படி ஆண்டவர் வென்றார்கள். திருக்குறள்படி வாழ்ந்தவர்கள் - வீழ்ந்தார்கள். ஆட்சிக்கு வன்முறை அவசியம். இராணுவம் அவசியம். புத்தமத வீழ்ச்சிக்கு முதல் காரணம் - அசோகன் ராணுவத்தைக் கலைத்ததுதான் - என்பன போன்ற ஆனைமுத்து கருத்துகள் "அட்சரம் லட்சம்” பெறும்!

குடும்ப நிலைமை / பொருளியல்: மக்களுக்காகப் பாடுபடும் - தோழர் ஆனைமுத்துவின் பொருளியல் நிலை என்ன? குடும்ப நிலை என்ன? எங்கேயும் யாரிடமும் இவர் பேசாத செய்திகள் இவை. இருந்த 8 ஏக்கர் நிலத்தை - வந்த அந்நாள் (1950) ரூ.8000-10,000 பணத்தை - இயக்கம் வளர்த்ததிலும் பத்திரிகை நடத்தியதிலும் "பாழ் பண்ணியவர்” ஆனைமுத்து. ஒருபிடி நிலக்கடலையும் - இரண்டு பேரீச்சம்பழமும் இரவு உணவாகச் சாப்பிட்டு புத்தகம் - கட்சி அறிக்கை கட்டுகள் - இந்தக் கையில் 20 கிலோ - அந்தக் கையில் 20 கிலோவுடன் டெல்லி - மும்பை ரயில் மேம்பாலங்களில் இவர் ஏறும் காட்சி - துயரத்திலும் துயரம். அது அல்ல நம் கவலை! ஆனைமுத்துவின் சிந்தனை - எழுத்து - தன் வரலாறு - நூலாகாதது! பல ஆண்டுகளாக இவர் எழுதும் சிந்தனையாளன் Periyar Era - தலையங்கம் அனைத்தும் நூலாகத் தகுந்த - தமிழ்மக்கள் மேம்பாட்டு மாமருந்து. நூலாகவில்லை. அது நமக்கு இழப்பில்லையா? அதுவே நம் கவலை!

பெரியார் தமிழ்ப் பேரவை: எத்தனையோ பேரறிஞர்களின் சிந்தனைகள் - எழுத்துக்கள் - காற்றில் கலந்து மண்ணோடு மண்ணாகின - தமிழனின் பொறுப்பற்ற புறக்கணிப்பால்! ஆக்ஸ்போர்ட் படிப்பாளி - கம்யூனிசத் தந்தை - KTK தங்கமணியின் சிந்தனைகள் - தன் வரலாறு நூலானதா? தமிழை - புது பீடத்தில் ஏற்றிய பாவாணருக்குத் தன்வரலாறு இருக்கிறதா? சுர்ஜித் - நல்லகண்ணு - வரதராசன் என்று கம்யூனிசக் கனவில் தம் வாழ்வை அழித்த பேரறிஞர் - யாருக்கும் அவர் தம் சிந்தனைகள் நூலாக நாம் வழி செய்யவில்லையே! அதனால் பெரியார் தமிழ்ப் பேரவை களமிறங்கியிருக்கிறது - மக்களிடம் பணம் திரட்டி அறிஞர்களின் சிந்தனைகளை நூலாக்க! இதில் முதல் முயற்சி - உடன் இருப்பு - அருகாமை கருதி தோழர் ஆனைமுத்துவுக்கு. இந்த எம்பணி - எம் தொடர் திட்டத்தில் முதல்படி தான்!

கொடுங்கள் - அனைத்து நன்கொடைக்கும் முறையான ரசீது உண்டு. ஒரு பேரறிஞனை - அவர் வாழும் காலத்தில் பாராட்ட பணம் தாருங்கள்!

நன்கொடையை வே. ஆனைமுத்து, பா. இராமமூர்த்தி என்னும் இணை பெயரில் காசோலை வரைவோலைகளாக

அனுப்ப வேண்டிய முகவரி:

சங்கமித்ரா,
பெரியார் தமிழ்ப்பேரவை,
ப.எண்.1/429, தென்பெரும் நெடுஞ்சாலை,
வண்டலூர் வாயில்,
சென்னை - 600 048.
பேசி : 9841359717

Saturday, August 26, 2006

எது தனிமனித தாக்குதல்

வலைப் பதிவுகளில் தனிமனித தாக்குதலுக்கு வரையரை. வலைப்பதிவுகளில் தனிமனித தாக்குதல் கூடாதென்று நான் வலைப்பூ ஆரம்பித்த நாள்முதலே சொல்லிவருகிறேன்.

எனது கருத்துக்களை கிழித்து கூறுபோடுங்கள் முடிந்த வரை என்னால் பதில் சொல்லமுடியும் . எனது கருத்துக்களை மறுத்தும்., எதிர்த்தும் வாதிடுங்கள் பின்னூட்டப் பெட்டி அதற்குத்தான் இருக்கிறது.

மிகப்பெரிய பின்னூட்டமாய் இருப்பின் அல்லது எனது கருத்தில் இருந்து விவாதத்துக்குரிய இன்னொரு பொருள் கிடைப்பின் அதை உங்கள் பதிவிலேயே என்னைச் சுட்டி ஒரு கருத்துக் களத்தை உருவாக்குங்கள் யாரும் ஒன்றும் செய்துவிடப்போவதில்லை.

தனிமனித தாக்குதலுக்கு வரையரை என்று எதைச் சொல்ல முடியும். என்னைப் பொறுத்த வரை. உங்கள் கருத்தின் மூலம் என் மனசு சோர்வடந்தாலே நான் தனிமனித தாக்குதலுக்கு உள்ளானதாக எடுத்துக் கொள்வேன்.

அப்படியிருக்க நான் எழுதும் பதிவுகள் வெளிப்படையான எந்த பதிவரையும் தாக்காத போதும் அதைப் படிக்கும் ஒருவரின் மனதில் வருத்தம் கொடுக்கும். அப்படியென்றால் நான் செய்தது. தனிமனித தாக்குதல் ஆகுமா?.

உடல் மனம் இரண்டையும் தனிப்பட்ட முறையில் தாக்கி காயப்படுத்தும் எல்லா விஷயங்களும் தனிமனித தாக்குதலே அப்படியென்றால் இவைகளும் தனிமனித தாக்குதல்களா?

1. கருணாநிதியை நயவஞ்சகர், மோசக்காரர் என்பது?

2.ஜெயலலிதாவை அல்லிராணி, சண்டியர்களின் தலைவி என்பது ?

3.வைகோவை பொய்கோ என்பதும், அவரின் தன்மானம் பற்றிய கிண்டல்

4.ரஜினி ரசிகர்களை பற்றி கேள்வி எழுப்புவது?

5.பெரியாரை ராமசாமி நாயக்கர் எனும்போது ராஜாஜியை பார்பனர் என்பது?

6.ராமதாஸை மரம் வெட்டி குண்டர்களின் தலைவர் என்பது?

7.சரத் குமாரை சரக்கு குமார் என்பது?

8.இழிபிறப்பு என்பதும், பூனூல் திமிரு என்பதும்?

9.சிம்புவின் ஆண்குறியை அறுப்பதும், திராவிட பெத்தடின் என்பதும்?

10.எந்த ஒரு பார்பன விடயம் அல்லது திராவிட விடயத்தையும் ஆரம்பித்தால் அதை இடஒதுக்கிடு வரை இழுத்து வந்து அன்புமணிக்கு மரம்வெட்டி பட்டம் தருவது?

11.திமுகவை ஆதரித்தால் அல்லக்கை என்பதும் , அ.திமுகவை ஆதரிப்பவர்களை அடிவருடி என்பதும்?

12. ஒரு மாற்றுக் கருத்துசொன்ன நபரை அவரின் பெயர்சொல்லி இப்படி செய்தது சரியா எனக்கேட்பது?

13.உள்குத்தாக வைக்கப்படும் வெளியில் தெரியும் குத்துக்கள் பதிவரை காயப்படுத்தும் வகையில் இருப்பது?

14.களத்தில் தொடர்புபட்ட நபரைத் தாக்கி எழுதுவது தனிமனித தாக்குதல் என்று எடுத்துக்கொள்ளப் படாதபோது அதை எழுதிய நபரைத் தாக்கி எழுதுவது தனிமனித தாக்குதல்..அவர் குடும்பத்தை அதாவது அப் பதிவுக்கு தொடர்பற்றவரை தாக்கி எழுதுவது ?

இன்னும் இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். எந்த ஒரு கருத்துக் களத்திலும் நான் சொல்லுவதை மறுத்துப் பேச யாருக்கும் உரிமை உண்டு தனிமனித தாக்குதல் என்பது அந்த கருத்து சொன்ன பதிவரை தாக்குவதாக மட்டுமே எடுத்துக்கொண்டால், மற்ற ..

கருத்தில் விவாதிக்கப்படும் நபர் மீதான தனிமனித தாக்குதல் பற்றி என்ன சொல்வது அதை நாம் வரவேற்கிறோமா?

அப்படி கருத்துக் களத்தில் ஒரு நபரின் தனிமனித தாக்குதல் அனுமதிக்கப்படும் போது அக் கருத்தை சொன்ன பதிவர் மீதான தாக்குதல் இல்லாமல் இருக்க வேண்டும் என்பதே எலோரின் விருப்பமும்.

இப்படி மிகச் சிக்கலாக இருக்கும் தனிமனித தாக்குதலுக்கான வரையரையை யாரும் அறுதியிட்டு இதுதான் தனிமனித தாக்குதலின் எல்லை எனச் சொல்ல முடியாது.

அப்படி சொல்லுவோம் என்றால். நமது கருத்துக்களை இங்கே வாதமாக வைக்க நமக்கு தகுதியிருக்காது.

உங்களுக்கு தெரிந்து தனிமனித தாக்குதலுக்கு வரையரை என்று எதைச் சொல்லுவீர்கள்?.

Thursday, August 24, 2006

வலைப்பூவில் நாய்

என்னதான் ஓசில இடம் கிடைக்குதுன்னாலும் அதுக்காக என்னவேனும்னாலும் எழுதித் தள்ளுறோம். கொஞ்சம் நன்றி உணர்ச்சி வேண்டாமா?.

நானும் நேத்துல இருந்து பாக்கறேன் .ஒருவேளை எதாவது புது ஆளுக்கு கைமாறிப்போச்சா யாருமே கண்டுக்கலையேன்னு ஆனா என்னவோ தெரியலை இதை யாருமே கண்டுக்கலை அன்பர்களே ப்ளாகர் சின்னம் B இப்போது ஒரு குட்டி நாய் ஆகியிருக்கு கவனிச்சிங்களா யாரும்? அதிகமா தீனி போடு பசிய போக்குங்க அப்பு அப்புறம் இல்லைன்னா கடிச்சி வச்சிரப் போவுது ....


Tuesday, August 22, 2006

எய்ட்ஸ் பரவ ஆணா பெண்ணா யார் காரணம்?

இந்த பதிவை எழுத இந்த பின்னூட்டம் ஒரு தூண்டுதல். விடாது கருப்புவின் பதிவில் ஒரு அனானி அன்பர் இக் கருத்தை சொல்லியிருந்தார்

" மிழ்நாட்டு பெண்டிரெல்லாம் கற்புக்கரசிகளாக் இருந்தால், உலகளவிலேயே இங்கு ஏனய்யா எயிட்ஸ் அதிகமாக இருக்கிறது?"

உண்மையிலே பெண்களின் கற்போடு எயிட்ஸ் எனும் நோய் பரவுவது சம்மந்தப் பட்டிருக்கிரதா?. அதாவது பெண்களால் தான் எய்ட்ஸ் அதிகமாக பரவுகிறதா? இல்லை ஆண்களாலா? அப்படி பெண்தான் காரணம் என்றால் அது எப்படி அவளுக்கு வந்தது? ஆண் ஒரு காரணியில்லையா? அடக்கமாக பெண் இருக்க வேண்டும் என்று நினைக்கும் கயமை எண்ணம் கொண்ட ஆண்களின் மூலமே எயிட்ஸ் மிக வேகமாக பரவுகிறது என்பது எனது எண்ணம். அதாவது இந்தியாவை பொருத்த வரை குடும்பத்தில் உள்ள திருமணமான பெண்களுக்கே இந் நோய் அதிகம் உள்ளது என்பது கண்கூடு. இது குடும்பத்துக்கு வர எது காரணம்.

கற்பில்லாத பெண்களா.

இல்லை கற்பில்லாத ஆண்களா?

Sunday, August 20, 2006

ஞாநியின் பித்தலாட்டம்.

மீண்டும் கரடி பொம்மை ஞானியின் பித்தலாட்டம்.

கண்ணகி சிலை விவகாரத்தில் கடும் எதிர்ப்புகளை சந்தித்த பத்திரிகையாளர் ஞாநி இப்போது அதே ஓ..பக்கங்களில் ஒரு கருத்தை சொல்லியிருக்கிறார். புதுமையான விழிப்புணர்வுகள் சார்ந்த கருத்துக்கள் சொல்லுவதாக தனக்குத்தானே ஜல்லியடித்துக் கொள்ளும் ஞாநி தனது புதிதாக வைத்திருக்கும் கருத்து மூலம் தான் ஒன்றும் இயற்கை விதிகளுக்கு அப்பாற்பட்டவன் இல்லை என்ற தனது சுய முகத்தை சொல்லியிருக்கிறார். கருத்து சொல்ல யாருக்கும் உரிமை உண்டு என்பதில் எனக்கு மாற்று எண்ணமில்லை. ஆனால் தான் சொல்லுவது மிகச் சரியானவை எனச் சொல்லும் ஞாநி இந்த விவகாரத்தில சுமார் 100 நாட்களுக்குள் தனது கருத்து இப்படி மாறிப் போனதற்கான காரணம் எதையும் சொல்ல வில்லை. கீழே இருப்பது அவரின் இந்த வார விகடன் ஓ.. பக்கங்களில் எழுதியது.
"சிலைகள் வைப்பது அவசியம்தானா?’’

‘‘வீட்டுக்குள் அப்பா, அம்மா போட்டோவை மாட்டிவைப்பது போல, நாட்டுக்கு உழைத்தவர்களுக்கு சிலை வைப்பதும் அவசியமானதுதான். இது ஒரு நினைவுகூரல். ஆனால், சிலைகளுக்கு மாலை மரியாதையெல்லாம் செய்து, அதை வழிபாடாக மாற்றுவதுதான் தேவையற்றது. முக்கியமான முன்னோடிகளை நினைவுகூர மட்டும் சிலைகள் தேவை என்று இல்லை. மக்களிடம் நல்ல கலை உணர்வை, அழகு உணர்வை ஏற்படுத்த அழகான சிற்பங்கள் எல்லாப் பொது இடங்களிலும் தேவை. தாசில்தார் அலுவலக வராந்தாவில் ரோடினின் சிந்திக்கும் மனிதனின் சிற்பத்தை வைத்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்! ஐரோப்பா முழுவதும் தலைவர்களுக்கு மட்டுமல் லாமல், பொதுவான கலைச் சிற்பங்கள் தெருவுக்குத் தெரு வைக்கப்பட்டு இருக்கின்றன. அப்படிப்பட்ட சூழல் இங்கேயும் தேவைப்படுகிறது.
நமக்கு அது போல நல்ல சிலைகள் வைக்கத் தெரியாமல் இருப்பதால்தான், சிலைகள் மீது வெறுப்பு உருவாகிறது!’’
இனி எனது கருத்துக்கள்:
ஐரோப்பியர்களின் சிலை ஆர்வம் என்பது போலவே இந்தியர்களும் சிலை ஆர்வமும் கலை ஆர்வமும் கொண்டவர்கள் என்பது தெரியாதவரல்ல ஞாநி. அவர்களின் கலாச்சாரம் சாந்த கலை சார்ந்த சிலைகள் வைப்பதை ஆதரிக்கும் இவர் கண்ணகி சிலை வைக்க அத்தனை கடினமான வார்த்தை பிரயோகங்களோடு அதனை விமர்சித்தது ஏன்.?
தமிழர்களை பொறுத்த வரை கலாச்சாரமும் வாழ்கையும் கலையும் வேறு வேறு அல்ல. கண்ணகி வெறும் உறுவக் குறியீடு என முழங்கியவர் இப்போது ரோடினின் சிலையை கோவை தாசில்தார் அலுவலக வாசலில் வைக்கச் சொல்லவேண்டிய அவசியம் என்ன.
ஐரோப்பியர்களுக்கு ரோடின் எப்படியொ அதே போல தமிழர்களுக்கு கண்ணகியும், பெரியாரும். காமராசரும். கண்ணகி வெறும் காப்பியத்தலைவி மட்டுமல்ல், அது ஒரு கலாசாரத்தின் சின்னமாக அனேகம்பேரால் கருதப் படுகிறது. கற்பு குறித்த சர்சைகள் ஆயிரம் இருப்பினும் கண்ணகி கால வாழியல் முறைகள் தமிழருக்கு அறியக்கிடைக்க காரணம், சிலப்பதிகாரம். சிலப்பதிகாரம் என்றதும் நம் நின்ணைவுக்கு வருவது கண்ணகி.
அதுபோல திராவிடர்கள் மத்தியில் தனது கருத்துக்களால் விழிப்புணர்வுகளை ஊட்டிய, பெரியாரும், உலக மக்கள அனைவருக்கும் பொதுவான கருத்துக்களை எல்லோறாலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய சொன்ன வள்ளுவரும்.
கலாச்சாரமும் கலையும் வேறுவேறாக இருக்கும் ஐரோப்பிய, மேலை நாடுகளுக்கு வேன்டுமானால் ஞாநி சொன்னது சரியாக இருக்கும், நாம் கடவுள்களின் சிலையையைக் கூட கலைவண்ணத்துடன் தான் படைக்கிறோம், கலையும், கலாச்சாரமும் பின்னிப் பினைந்தது தான் தமிழகம்.
கலைக்கு சிலைவைத்தால் அது கலாச்சார சிலையே, சிலைகளை வழிபாட்டுக்கு உரியதாக ஆக்குவதை கண்டிக்கும், ஞாநி எல்லா சிலைகளுமா வழிபடப் படுகின்றன, தமிழன் தனக்கு வாழ்கையில் உதவுவதாக கருதும் எல்லாவற்றின் மேலும் அன்பு செலுத்துபவன். அதை பூசிப்பவன் , ஆத்திகர்கள் சாமிகும்பிடுவது போல.
அவர்கள் இல்லாத கடவுளை வணங்குகிறார்கள், இவர்கள் ரத்தமும் சதையுமாக தனது வாழ்க்கையை மக்களுக்காக அவர்களின் முன்னேற்றத்துக்காக பாடுபட்டவர்களை வணங்குகிறார்கள். இது கூட தனக்கு இருக்கும் அன்பை வெளிப்படுத்தும் ஒரு சின்னமே மாலைகள், வணங்குதல். எல்லாம், ஐரோபியர்கள், வழியில் பார்த்தால் ஹாய் சொல்லிப் போவதில்லை, அதுபோல.
அவர்களும் அங்கே சிலைகளுக்கு முத்தம் தருவது கட்டிப் பிடிப்பது என செய்கிறார்க்ளே அதை சரியென்று ஞாநி ஒத்துக் கொண்டால் இங்கே சிலைகளுக்கு மரியாதை தருவதையும் ஒத்துக்கொள்ள வேண்டும். முத்தம் கொடுப்பது அவர்கள் பழக்கம் மாலை போடுவது நமது பழக்கம் அவ்வளவுதான்.
பொங்கல் கொண்டாடும் போது மாடுகளை வணங்குபவன் தமிழன் அது அவன் அதன்மேல் கொண்ட அன்பின், அது செய்த உதவிகளுக்கு, நன்றி தெரிவிக்கும் வெளிப்பாடு. அதைப்போலவே சிலைகளும் அதை வணங்குவதும் வெறும் கலைகளுக்கு மட்டும் இல்லை தமிழர்களின் சிலை ஆர்வம் அது வெறும் சிலை அல்ல கலாச்சாரத்தின் சின்னம் அதை தமிழன் தனக்குகந்த முறையில் தனது அன்பை மரியாதையை வெளிப்படுத்த கடமையும் உரிமையும் உண்டு.
கல்லாக மட்டும் இருக்கும் கடவுளுக்கு பூசை வேண்டுமென்றால் மனிதர்களாய் இருந்த தலைவர்களுக்கு சிலையும் பூசையும் வேண்டும்.
ஞானிகள் தான் சொல்லுவது மட்டுமே சரியென்று எண்ணுவதில்லை அப்படி நம்பினால் அவர்கள் ஞானி இல்லை.




Saturday, August 19, 2006

கருணாநிதியின் மார்க் ஷீட் - EXCLUSIVE



போன முறை குவாட்டர் கோவிந்தன் வெளியிட்ட ஜெயலலிதாவின் மார்க் ஷீட்டை பார்த்துவிட்டு அனைத்து நண்பர்களும் கலைஞரின் மதிப்பெண் பட்டியலை வெளியிட வேண்டும் என பெரிய பின்னூட்ட போராட்டமே நடத்திவிட்டார்கள் , நான் இதை ஒரு சவாலாகவே எடுத்துக் கொண்டு அப் பட்டியலை தேடியதில் கிடைத்தது .



Thursday, August 17, 2006

நான் ஏன் கலகம் செய்கிறேன் ?

நான் வலைப்பூவில் எழுத ஆரம்பித்து நான்கு மாதம் ஆகிறது. அதற்குள் ஒரு கலகக்காரனாக பல பதிவர்களாலும் சித்தரிக்கப் பட்டிருக்கிறேன் . ஒருவேளை அது உண்மையாக இருக்கும் . ஆனால் ஏன் நான் இப்படி கலகம் செய்கிறேன்?,
எனக்கு ரஜினியையும் அவர் ரசிகர்களையும் பிடிக்கவில்லை ஏன்? கலைஞருக்கு ஆதரவாக எழுதுகிறேன் ஏன்? ராமதாஸை ஆதரிக்கிறேன் ஏன்? பெரியாரின் கொள்கைகள் பேசுக்களை வலையில் மறுபதிக்கிறேன் ஏன்? சாருனிவேதிதாவை ரசித்து படித்தாலும் ஒன்றும் புரியாமல் அவரின் எழுத்தை நக்கலடிக்கிறேன் ஏன், பெரியாரை ராமஸாமி நாயக்கர் என்று சொல்லும் ம்யூஸ் அவர்களுடன் சண்டைக்கு போகிறேன் ஏன்? இஸ்ரேலுக்கு ஆதரவாக இருப்பவர்களின் பதிவில் போய் லெபனானுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்கிறேன் ஏன்?டோண்டு அவர்களின் பதிவில் போய் அவர் எப்படி அதிக பின்னூட்டம் பெறுகிறார் என்று ரகசியம் சொல்கிறேன் ஏன்?
ரஜினி ரசிகர்களுக்கு மூளை இருக்கிறதா எனக் கேட்கிறேன் ஏன்?, ஜெயலலிதாவையும், அதிமுகவையும், அடியாள் திராவிட முன்னேற்ற கழகம் என்கிறேன் ஏன்? சேகுவேரா புத்தகங்கள் படித்து அவரின் எழுத்துக்கு கொடி பிடிக்கிறேன் ஏன்? பெரியாரை ஆதரித்தாலும் அவரின் கொள்கைகளை ஆதரித்தாலும் வீரமணியை பிடிக்கவில்லை ஏன்? சோனியாவை ஆதரித்தாலும், வாசன் அண்டு கம்பெனியை பிடிக்க வில்லை ஏன், சிதம்பரத்தை ஏன் பிடிக்கிறது?.
குன்றக்குடி அடிகளை பிடிக்கும், காஞ்சி 'காம'கேடி மடத்தை பிடிக்கவில்லை ஏன்? இந்தியா டுடே விகடனை பிடிக்கிறது தினமலரை, தந்தியை பிடிக்கவில்லை ஏன்?, எம்.எஸ். சுப்புலட்சுமி பிடிக்கிறது , கு.கு.வைத்தியநாதனை பிடிக்கவில்லை ஏன்?, இங்கிலாந்தை, ரஸ்யாவை பிடிக்கிறது அமெரிக்கா பிடிக்கவில்லை ஏன்?. இலங்கை பிடிக்கவில்லை ஈழத் தமிழர்களை பிடிக்கிறது ஏன்?, நானும் கப்பியும் பின்னூட்ட கயமை செய்தது போதாதென்று இப்போது வெட்டிப்பயலையும் கெடுப்பது ஏன்? வ.வா சங்கம் உடைகிறது என்று குவாட்டர் கோவிந்தனாய் இடையிடயே போய் எதாவது ஜோக்கடிப்பது ஏன்? வடமொழி எழுத்தை கலந்து எழுதும் ம்யூஸ் எழுத்தை அவர்போலவே எழுதி கிண்டல் அடிக்கிறன் ஏன், குழலி எழுதினாலும் ஆதரிக்கும் நான் மாயவரத்தான் எழுதினால் மறுப்பது ஏன்? விடுதலைப்புலிகளை ஆதரிக்கும் நான் வைகோவை ஏன் திட்டுகிறேன்?
டி.என் சேஷனுக்கு ஆதரவு தரும் நான் சோவை ஏன் எதிர்க்கிறேன்?, மதுராவின் எழுத்தும் துளசிம்மாவின் எழுத்தும் பிடித்திருந்தாலும் பின்னூட்டம் இடுவதில்லை ஏன்? இதே போல் மிக ரசித்து படிக்கும் பதிவுகளில் என் பின்னூட்டம் ஏன் இடப்படுவதில்லை? ஒன்றை வைத்தே(வலைப்பூ) ஒழுங்காக எழுதாத நான் 4 செடி நட்டது ஏன்? பரம பிதா , தெருவில் கிடப்பது என்றால் கோபம் வருவது ஏன்? எல்லோரும் திருப்பதி லட்டு பற்றி பாலாஜி பற்றி எழுதினால் நான் மட்டும் ஏற்றுமதியாகும் முடியை பற்றி எழுதுவது ஏன்?
இப்படி பல ஏன்களுக்கும் இப் பதிவில் பதில் கிடைக்கும்.........................என எதிர்பார்த்து ம்யூஸ் அவர்கள் போல் துள்ளிக் குதித்து உள்ளே வந்திருந்தால் உங்களுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்.....

சொல்லப்போகும் செய்தி வேறு இங்கிலாந்து இளவரசர் ஹாரி ஒரு பெண்ணோடு மிக நெருக்கமாய் இருக்கும் ஒரு புகைப்படம் பத்திரிகையில் வெளியாகி அரச குடும்பத்தின் கண்டனத்துக்கு ஆளானது... நேற்று மன்னிப்பு கேட்டார்கள் பத்திரிகை காரர்கள். வாழ்க அரசகுடும்ப பத்திரிகை சுதந்திரம்.!!
அந்த உலகப் புகழ்பெற்ற படம்தான் மேலே


Tuesday, August 15, 2006

இந்தியா 59

இப் பதிவில் இருப்பவை வெறும் எண்களும் அதன் விளக்கங்களும் அல்ல 59 ஆண்டுகால இந்தியாவின் ஒரு இன்னொரு பக்கம். இதில் இழப்புகளும் இன்பங்களும் நிறைந்திருக்கும் ஒரு உயிர்ப்பான தேசத்தின் அடையாளங்கள்.

671 மில்லியன் வாக்காளர்கள் இதில் 322 மில்லியன் பெண்கள் உலகின் மிகப்பெரிய தேர்தலை நடத்துகிறோம்.
4663 தேர்ந்தெடுக்கப் பட்ட லோக்சபா வேட்பாளர்கள் இங்கிலாந்து 643 மட்டும்.
283 தேர்தல்கள் 14 பொதுத் தேர்தல் உட்பட.
8% பெண் உறுப்பினர்கள் 14ம் லோக்சபாவில் ஆனால் இந்தியாவின் ஊராட்சிகளில் 34 சதவிகிதம் அதாவது 3.5 மில்லியன் பெண்கள்.
173000 சதுர கிலோமீட்டர் பெரிய பாராளுமன்ற தொகுதி லடாக். உலகில் பெரியது மேற்கு ஆஸ்திரேலிய கல்கூர்லி 2255000 சதுர.கி.மீ.
2004 தேர்தலில் 54 சதவிகித வாகுப் பதிவு அமெரிக்க 2004ல் 64% 14ம் லோக்சபாவில் 2 சுயேட்சைகள் முதல் லோக்சபாவில் 37. காங்கிரசும் ஜனதா தள் ம் தலா 6 முறை பிளவு பட்டன.
3.37 மில்லியன் வாக்காளர்களுள்ள உலகின் ஒரே தொகுதி தில்லி புற நகர்.
93 முறை நம் சட்டம் மாற்றி அமைக்கப் பட்டது அமெரிக்காவில் 27 முறை 217 ஆண்டுகளில்.
12.83 % நாடாளுமன்ற உறுப்பினர்கள் 25 முதல் 40 வயதுக்கு உட்பட்டோர் முதல் தேர்தலில் 28.85%.
136 எம்பிக்கள் 14ம் லோக்சபாவில் குற்றப் பின்னனி கொண்டவர்கள்., முதல் மன்றத்தில் 0(யாருமில்லை).
147 எம்பிக்கள் பட்டப் படிப்பு படித்தவர்கள் 1952 ல் 85 பேர்.
553 மில்லியன் மெட்ரிக் டன் கச்சா எண்ணையை 2003ல் செலவிட்டுள்ளோம்.
100 மில்லியன் செல்லிடப் பேசிகள் அமெரிக்காவில் இருப்பது 195 மில்லியன்.
அன்னிய முதலீடாக இந்தியா வரவு 181000 கோடி.
ஒரு நிறுவனம் தொடங்க 71 நாட்களும் 11 நடைமுறைகளும் தேவை அமெரிக்காவில் 5 நாள் 5 நடைமுறைகள்.
14862000 கோடி வீட்டு உபயோக பொருள்கள் வங்கும் திறன் 583 மாவட்டங்களில் 100 உள்ளூர் பெருங்கடைகள் உட்பட. 785000கோடி இயற்கை மற்றும் தங்க சுரங்க கையிருப்பு
2% அரசு கடன்கள் தள்ளுபடி ஆகின்றன.
576 பில்லியன் பயண கிலோமீடர் நம் ரயில்வே இயக்கி இருக்கிறது 2004-05 இல் சீனா 571 பில்லியன் கி.மீ.
அரசுக்கு வரி செலுத்த ஒரு நிருவணத்துக்கு 264 மணி நேரம் தேவை அமெரிக்கவில் 325 மணி நெரம்.
ஒரு நாளைக்கு 670 மில்லியன் ரூபாய்கு பங்கு வர்த்தகம் பி.எஸ்.இ, சென்செக்ஸ்ஸில்.
2005 இல் 2560000கோடிக்கு பரிவர்த்தனை நடைபெற்றது, சேவைத்தொழில் ஏற்றுமதியில் 18000 கோடிக்கு வருவய் 2004 இல் மட்டும் 1990 ரிலோ 21400 கோடி 870 ச்தம் வளர்ச்சி.
இந்திய உள்னாட்டு முதலீடு 65.8 சதம், 2004இல் .
ஒரு நாளைக்கு 50 ரூபாய் கூட இல்லாத இந்தியர்களின் எண்ணிக்கை 260 மில்லியன்.
1 கி.மீக்கு 3 கார்கள் மோட்டர் வாகனங்கள் கானமுடியும்..
334 விமான நிலையங்கள். அமெரிக்காவில்
14883 பண்பட்ட நிலம் பயிர் செய்ய இருப்பது 558000 சதுர கீமி.
17189 கல்லூரிகள் பல்கலைகழகங்கள். 93000 ஆரம்ப பள்ளிகள் க்னிணி கொண்டவை.
19% ஆரம்ப பள்ளிகள் ஓராசிரியர் மட்டுமே.
25 சதவிகித பள்ளிக்கு மின்வசதி உண்டு.
நல்ல குடினீர் பெரும் பள்ளிகள் 76%. ,
900000 பள்ளிகள் இந்தியாவில் உண்டு..
500000 டாக்டர்கள் ஒவ்வொரு ஆண்டும் உறுவாகிறார்க்ள்.
9070 டாக்டர் பட்டங்கள் வழங்கப் பட்டன 2005 இல்.
350000 எஞினியர்கள் உறுவாகிறார்கள். 8
00000 எம்பிஏ பட்டதாரிகள் படித்து முடிக்கிறார்கள்,
1:41 விகித ஆசிரியர்கள் ஆரம்ப பள்ளிகளில் மொத்தம் இருப்பது 5.7 மில்லியன் ஆசிரியர்கள்.
400 மருத்துவக் கல்லூரிகள் அமெரிக்காவில் 125.
200000 அறிவியல் பட்டங்கள் வழங்கப் படுகின்றன.
ஆண்கள் 73% பெண்கள் 47% கல்வி பெற்றவர்கள்.
13 மில்லியன் குழந்தைகள் பள்ளி செல்வதில்லை.
9.9மில்லியன் மாணவர்கள் இந்தியாவெங்கும் நிறைந்திருக்கும் கல்லூரிகளில் படிக்கின்றனர்.
6 முதல் 14 வயதுக்கு உட்பட்ட 300000 குழந்தைகள் கிராம பள்ளிகளில் படிக்கின்றனர் அதாவது 16%.
25% பள்ளி ஆசிரியர்கள் ஆண்டு முழுவதும் பணிசெல்லவில்லை. உலக வங்கியில் இந்திய மதிப்பெண் 2.61, சீனா 4.21.
920 ரூபாய் தலைக்கு செலவழிக்கிறது இந்தியா தன் குடிமக்களுக்கு,/ஆண்டுக்கு.
கண்டு பிடிப்புகளில் இந்திய மதிப்பெண் 3.72.
119 பேர் ஆராய்ச்சி துறைகளில் ஒரு மில்லியனுக்கு.
2004 இல் இந்திய உயர் தொழில் நுட்ப ஏற்று மதி 13200 கோடி.
15 அணு உலைகள் தயார் நிலையில். 3087 மெகாவாட் மின்சார உற்பத்தி இந்திய மின் உற்பத்தியில் 20 சதவிகிதம்.
2001ல் 11076 அறிவியல் கட்டுரைகள் சமர்ப்பிக்கப் பட்டன.
116 கோடி காப்புரிமை வருமானம் இந்தியாவுக்கு2004 இல்.
14800 கோடி மருந்து ஏற்று மதி உலகின் 100%இல் 8% நமது பங்கு.
231 தயாரிப்புக்கு இந்தியா காப்புரிமை பெற்றுள்ளது.
2001 முதல் 2005 வரை ஏவப்பட்ட செயர்கை கோள்களில் இந்தியப் பங்கு 2% .
13 வின்கலங்கள் வெற்றிகரமாக.
125 பார்ச்சூன் கம்பெனிகள் இந்தியவிலும் .
2378 உயிர் தொழில்னுட்ப காப்புரிமைகள் பதிவுபெறக் காத்திருக்கின்றன.
13250 கோடி அடுத்த பத்தாண்டு களுக்கு வான்வெளி ஆராய்ச்சிக்கு ஒதுக்கீடு.
1000 த்துக்கு 32 பேரிடம் இணையவசதி.
12500 திரை அரங்குகள்,
250 மல்டி ப்ளக்ஸ்.
18.57 கோடி பேர் வாரம் 90 நிமிடம் ஒருமுறையாவது வானொலி கேட்கின்றனர்.
23மில்லியன் மக்கள் ஒரு நாளைக்கு படம் பார்க்கின்றனர். ஆண்டுக்கு 4பில்லியன் டிக்க்டுகள் விற்று தீர்கிண்ரன. பாலிவுட்டில் ஆண்டுக்கு 1.3பில்லியன் டாலர் வருமானம்.
108 மில்லியன் வீடில் தொலைக்காட்சி இருக்கிரது.
விளம்பர வருவாய் 13200 கோடி.
விளையாட்டு சந்தை ஆண்டுக்கு 30மில்லியன் டாலர்.
ஆண்டுக்கு 1050 படங்கள் வெளியீடு.
தினசரி டிவி பார்க்க 2 மணி நேரம் செலவிடுகிறோம். தொலைக்காட்சி வருவாய் 14800 கோடி.
47 பண்பலை வரிசை வானொலிகள்,
300 தொலைக்காட்சி அலைவர்சைகள்.
285 மில்லியன் டாலர் இந்திய அனிமேஷன் சந்தை மதிப்பு.
11000 பேர் தினம் செங்கோட்டையை தரிசிக்கிறார்கள்.
50 லட்சம் ஓலைச் சுவடிகள் உண்டு.
தொழிலாளர்களில் 28.3 % பெண்கள் அதில்.
36.1% 15 முதல்24 வயதுக்கு உட்பட்டவர்கள் .
308 மில்லியன் மக்கள் நகர்ப் புறங்களில் வசிக்கின்றனர் 29%.
1991 முதல் 2001 வரை 181 மில்லியன் மக்கள் பெருக்கம் ஒரு பிரேசில் அளவுக்கு.
86% மக்கள் சுத்த குடிநீர் கிடைக்கிரது.
43% மகப்பேறுகள் மருத்துவ மனைகளில் நடக்கின்றன.
51 % இந்திய அமெரிக்கர்கள் திறமைசார் வேலைகளில் வெள்ளை அமெரிக்கர்கள் 21.4%.
2004 இல் 33608 கொலைகள் 16137 பாலியல் பலாத்காரங்கள்.
1215 ரூபாய் ஒருவருக்கு அரசு மருத்துவ செலவுக்கு தருகிறது. .1.88 மில்லியன் இந்தியர்கள் அமெரிக்காவில் வசிக்கின்றனர்.
5.7 மில்லியன் பேருக்கு ஹெச்.ஐ.வி இருக்கிரது.
உலகில் முதல் இடம்.
40% மருத்துவர்கள் தங்களின் பணி நேரத்தில் வேலையில் இருப்பதில்லை.
80466 இந்திய மாணவர்கள் அமெரிக்காவில் படிப்பு 2005 இல்.
2.73 மில்லியன் சுற்றுலா பயனிகள் வருகை 2004 இல்.
மகிழ்ச்சி பட்டியலில் இந்தியா 125 வது இடத்தில் டென்மார்க் முதல் இடம்.
அமெரிக்க இந்தியர்கள் ஆண்டுக்கு 12 லட்சம் சம்பாதிக்கின்றனர். வெள்ளை அமெரிக்கன் 10.98 லட்சம்.
மனித வாழ்நாள் 64.71 ஆண்டுகள் இந்தியாவில் சீனா 72.58 ஆண்டுகள்.
உள்னாட்டு வருவாயில் 2.5 சதவிகிதம் ராணுவச் செலவு.
86% வெற்றிகரமாக TB நோயை குனப் படுத்துகிறோம் .
94.1%படித்து ஜெயின் கள் நல்ல படித்த சமூகம் என்றும் முஸ்லிகள் 59.1% படித்தும் கடைசி இடத்தில்.
500000 ராணுவத்தினர் எல்லை பதுகாப்புக்கு பட்டும் . அமெரிக்காவின் மொத்த படையே இவ்வளவுதான்.

Monday, August 14, 2006

இந்திய சுதந்திரம் - சில நினைவுகள்


பிரிவினைக்கு காத்திருக்கும் இந்தியர்கள்

ஆவனங்கள் பிரிவினை

பஞ்சாபில் கலவரம்
பிரிவினை கால முகாம்கள்


பயணம் பலவிதங்களில்




பயணம் பலவிதங்களில்

பயணம் பலவிதங்களில்

கல்கத்தாவில் உண்ணாவிரதம் 1947 ஆகஸ்டு 15



கொண்டாட்டம்


கொண்டாட்டம்
முதல் உரை

கிடைத்தே விட்டது




இரு குழந்தைகள்

முதல் செய்தி

வழியனுப்பு விழா


முதல் ஆண்டு நிறைவு




இங்கிலாந்தின் கடைசி உரை
இந்த சுதந்திரம் வலியும் ரத்தமும் வாழ்க்கைகளும் நிரம்பியது வெறும் வெற்று வாழ்த்துக்களுக்கும் வசைகளுக்கும் மட்டுமல்ல இது ஒரு தேசத்தின் வரலாறு. ஒரு பேரரசின் வீழ்ச்சியின் கதை. ஒரு புதிய தேசத்தின் பிறப்பு, ஒரு தேசத்தின் பிரிவினை

Sunday, August 13, 2006

முன்னாள் நடிகையின் மார்க் CHEAT

கோவிந்தன் மிக்க கடுப்பில் இருந்தார். தனது நண்பன் தன் காதல் கதைகளை வலைப்பூவில் எல்லோரும் படிக்க எழுதிவருவதால் அது அவருக்கு கொஞ்சம் சங்கடம் தருகிறதாம். இதனால் அவரை சமாதானப் படுத்தும் வகையில் கொஞ்சம் பேச ஆரம்பித்தோம்.

என்ன கோவிந்தா இதுக்கெல்லாம் கோச்சுக்கிறே நான் என்ன இப்ப இல்லாததையா சொல்லி ஏமாத்திட்டேன்?

அதெல்லாம் இல்லப்பா முன்ன மாதிரி என்னோட கட்டுறையெல்லாம் அதிகமா எழுத மாட்டேங்கிற நீ.

சரி கோவிந்தா இனிமே அடிக்கடி எழுதுறேன் சரியா?

சரி சரி ஆமா உனக்கு ஒரு விஷயம் தெரியுமா?

என்னா?

எங்க
அத்தையோட மார்க் என்னான்னு சட்ட சபையில விவாதம் நடக்குதாமே?

ஆமாங் கோவிந்தா அம்மா சட்டசபையில பொய்சொல்லிட்டாங்களேன்னு அதிமுக காரங்க எல்லாருக்கும் வருத்தமாம்..

அட போனா போகுதப்பா விடு அவங்க என்னைக்கு உண்மை சொன்னாங்க முன்ன ஒருதடவை 55லட்சம் ஏக்கர் தரிசு நெலம் இருக்குன்னு பொய் சொன்னாங்க அதே மாதிரிதான் இதுவும்.
ஆனாலும் சிறுதாவூர் நிலமெல்லாம் அவங்க பேரில இல்லயாம் பா..

உனக்கெப்படி தெரியும்...

அது அவங்க அன்புச் சகோதரியோட சொந்தகாரங்க பேரில இருக்கு இளவரசி, தினகரன் இவங்க பேரில முன்னாடி சொத்து குவிப்பு வழக்கு நடந்துச்சில்ல அப்பவே அது பதிவாயிருக்குதாம் ...
ஆமா சட்ட சபையில பொன்முடி செருப்பால அடிப்பேன்னு சொன்னாராமே? இதெல்லாம் நல்லாவா இருக்குது?

அடிக்கலியா?

அடப் பாவி .!

பின்ன என்னாப்பா எப்பப் பாரு பேசிட்டிருக்கும் போதே ஏந்திரிச்சி கலைஞர் இருக்க எடத்துக்கு ஒடியார வேண்டிது அப்புரம் ஏன் சேலைய உறுவிட்டாங்க செருப்பால அடிச்சாங்கன்னு கதற வேண்டீது.

சேலைய உறுவினது செயலலிதாவுக்கு கோவிந்தா

..அட அதிமுக எம்மெலே எவன் வேட்டி கட்டீருக்கான் எல்லா பயலும் சேலைதான் இதுக்காக நான் பொம்பளைங்கள குறைச்சு சொல்றதா நினைக்காதே ...

சூரியா மேட்டர் தெரியுமா ?

நானே கேக்கனுமின்னு நெனைச்சேன் ஏன் இப்பல்லாம் நைட்டு படம் போடலை?

டேய் சூரியா-ஜோதிகாவுக்கு கல்யாணம்டா அது தெரியுமா?

அவங்க அக்கா நக்மா தானே?

இது மட்டும் நல்லா ஞாபகம் வச்சிக்கோ மத்ததை மறந்திடு...


கோவிந்தா உனக்கு தெரியுமா ரஜினி தாத்தா ஆகப்போறார்?

அவரு முன்னமே தாத்தா தானே?

டேய் தனுஷ் ஐஸ்வர்யா வுக்கு குழந்தை பிறக்க போகுதுடா..

ஐஸ்வர்யா அபிஷேக் பச்சன்ல?

அது உலக அழகி கோவிந்தா

ஆமா யாரோ கண்டரு மோகனார் மந்திரி யாருபா அது?

அது சபரிமலை தந்திரிடாஅவரு.

கோயில்ல இருக்க சாமிய ஜெயமாலா தொட்டதுக்கே குத்தமாமே இப்ப இந்த ஆசாமி இத்தனை தப்பு செஞ்சிறுக்கே சாமி சும்மாவா இருக்கு? ஒருவேளை ஆம்ம்பிளை தொட்டா சாமிக்கு தெரியாதா?

கோவிந்தா சாமி கண்ண கெடுக்கும் பாத்து பேசு..

அதெல்லாம் கெடுக்காது ஏன்னா சாமியே இல்லையே ..

ஒரு பாதர் பன்னின வேலைய பாத்தியா?

என்னவாம் ?

வீடு கட்டி தற்றதா சொல்லி 100 கோடி வசூல் பன்னிட்டாராம் பெரிய மன்மத ராசாவா இருக்காருப்பா..

சொந்த வீடா சின்ன வீடா?
.........
..........
............
.......
16666669

அப்பாடி......!

என்னா இது? 16666669 ?

இல்லை 100 கோடிக்கு எத்தனை குவாட்டர் வாங்கலாம்னு யோசிச்சேன்

டேய்................

Saturday, August 12, 2006

ஆன்டன் பாலசிங்கம் - போரும் சமாதானமும்

இலங்கையின் யுத்தச் சத்தம் புலிகளுக்கும் அரசுப் படைகளுக்கும் ஆரம்பித்திருக்கும் வேளையில் அதற்கு சற்றும் குறையாத ஒரு புத்தகம் ஆன்டன் பாலசிங்கத்தின் எழுத்தில்.

புலிகளின் வரலாறு என்றே சொல்லலாம் புத்தகத்தின் உள்ளே புலிகள் இந்தியாவின் தலையீட்டை இன்னும் விரும்புகிறார்கள் என்பது மிகத் தெளிவாக சொல்லப் படுகிரது . ஆனால் புலிகள் மீதான இந்தியாவின் பார்வை மாறக் காரணமான ராஜீவ் காந்தி கொலை பற்றி ஒரு வார்த்தையும் ஆன்டன் பாலசிங்கம் எழுதிட வில்லை.

இது புலிகள் இன்னும் மிக வெளிப்படையான இந்தியாவுடனான அரசியல் காய் நகர்த்தல்களுக்கு தயாராகவில்லை என்பதை காட்டுகிறது. பிராந்திய வல்லரசான இந்தியாவின் தயவு தங்களுக்கு தேவை என்பதை புலிகள் அமைப்பு மிக நன்றாகவே உணர்ந்திருக்கும் வேளையில், அது இது நாள் வரை ஐரோபிய யூனியன் எனும் மலை போன்ற நம்பிக்கையை இழந்திருப்பதுடன் நார்வெ சமாதான முயர்ச்சிகளையும் கைதவற விட்டது அல்லது அதுவாகவே நழுவிப் போனது.

பாலசிங்கத்தின் நூல் ராஜீவ் காந்தி காலத்திலும் பின் ராஜீவ் காந்தி கொலையாகும் வரையிலும் இந்தியாவில் மேற்கொண்ட அதிகாரபூர்வ/பூர்வமற்ற நடவடிக்கைகளை விவரிக்கிரது.

அதில் இருந்து சில பகுதிகள்:
ராஜிவ்காந்தி- பிரபாகரன் ரகசிய உடன்படிக்கை:

ராஜிவ்காந்தி, பிரபாகரன், நான், பண்ட்ருட்டி ராமச் சந்திரன், நான்கு பேரும் கலந்துகொண்ட உரையாடலின் போது பிரதமர் அவர்கள்( ராஜிவை பிரதமர் என்றே ஆன்டன் குறிப்பிடுகிறார்)மிக்க உற்சாகத்துடனும், அயர்சியின்றியும் எதையோ சாதித்த பெருமித உணர்வுடனும் காணப்பட்டார்.

பிரபாவிடம் பிரதமர் " நாம் உங்களின் எல்லா ஆயுதங்களையும் கையளித்துவிடச் சொல்லவில்லை மிகக் குறைந்த அளவில் முன்னறே இந்தியா தந்தவற்றில் சிலவற்றை கொடுத்தால் போதும். அதே போல் உங்களின் கெரில்ல படையணியையும் கலைத்திட சொல்லவில்லை அது வடகிழக்கின் பகுதியில் இருக்க இந்திய ராணுவத்தின் கண்கானிப்பில் இலங்கை அரச படைகள் தங்களின் இடத்தில் அடைந்து கிடப்பார்கள் , உங்களின் ஆயுதம் அளிக்கப் படுவது சர்வதேச ச்முதாயத்தில் புலிகள் கட்டுப்பாட்டை மீறவில்லை எனும் வாதத்திற்கு வலு சேர்க்கும்" என்றார்...

இதற்று பதிலேதும் சொல்லாத பிரபாவிடம் பன்ட்ருடி ராமச் சந்திரன் அவர்கள் " நல்ல பயன்பாட்டில் இருக்கும் ஆயுத்ங்கள்கூட வேண்டாம் இந்தியா தந்த பழைய உதவாத ஆயுதங்களின் சிறு பகுதியை கொடுக்கலாமே?" என்றார்.

பிரபாகரன் அதற்கு கிண்டலாக அவர்கள் கொடுத்ததெல்லாமே பயன்படாத ஆயுதங்கள் தானே என்றார்.

தமிழில் நடந்த இப் பேச்சை அப்படியே பிரதமருக்கு அமைச்சர் பன்ட்ருட்டி மொழிபெயர்த்தார். இதை தலையசைத்து ஆமோதித்தார் பிரதமர்.
இரவு இரண்டு மணி அளவிலும் பிரதமர் மிக்க உற்சாகத்துடன் இருந்தார்... ஒரு உடன்பாடு எட்டப் பட்டவுடன் காலை ஒன்பது மணி விமானத்தில் கொழும்பு சென்று மூன்று மணி மதியத்துக்கு இலங்கை இந்திய ஒப்பந்ததில் கைச்சாத்திட வேண்டும்.

நான் அமைச்சரிடம், "இரண்டு பேருக்கும் இடையில் ஏற்றுக்கொண்டவற்றை ஒரு ஒப்பந்தமாக்கி அதில் கைச்சாத்திட்டால் என்ன அது மேலும் உடன்பாட்டுக்கு வலு சேர்க்குமே?" என்றேன்.
அப்படியே அவர் முகம் வாடிப் போனது " நாங்கள் ஏற்கனவே ஆயுதங்கள் மற்றும் மாதம் ஐம்பது லட்சம் கருப்புப் பணமாக உங்களுக்கு கப்பம் கட்ட சம்மதித்திருக்கிரோம் இதை ஒப்பந்தமாகினால் இந்திய அரசியலில் பெரும் குழப்பம் உண்டாகும்" என்றார்.

பிரதமரும் இது ஒரு ஜென்டில் மேன் அக்ரீமெண்ட்டாகவே இருக்கட்டும் நான் நிச்சயம் வாக்கை காப்பாற்றுவேன் என்றார்.
காலப் போக்கில் பிரதமரின் வாக்குறுதி குப்பைக்கூடையில் வீசப் பட்டது
எம்.ஜி.ஆர், நான், பிரபாகரன்.:

பிரபா புலிகளின் தொலைத் தொடர்பு ஆயுதங்களை திரும்ப வழங்கக் கோரி உண்ணாவிரதம் இருந்தார். அது தமிழக முதலமைச்சருக்கு பெரும் சங்கடத்தை உண்டாக்கியது, புலிகளின் போராட்டத்துக்கு காவலன் எனும் தன் பிம்பம் உடைந்து போகும் எனக் கலங்கினார் மேலும் பிரபாவுக்கு எதுவும் ஆகிவிடுமோ என்றும் அஞ்சினார்.

அதே நேரம் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் புலிகளின் தகவல் தொடர்பு சாதனங்கள் பறிமுதல் செய்யப் பட்டதில் மத்திய அரசுக்கு பங்கில்லை எனவும் ஒரு அறிக்கை விட்டார். அது எம்ஜிஆருக்கு மேலிம் கோபத்தை உண்டாக்கியது என்னை அழைத்து புலிகளின் தகவல் தொடர்பு சாதனங்களை உடனே தரும்படி உத்தரவிடுவதாகவும் இது மோகன் தாஸ் போலீஸ் அதிகாரியின் வேலை என்றும் சொன்னார்.

அதே போல் எல்லா சாதனங்களும் பிரபாவின் முன் வைத்தார் மோகன் தாஸ் உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டார் பிரபா பின்னர் இச் சர்சைகள் நடந்துமுடிந்த பின்னர் ஒரு நாள் நானும் பிரபாவும் முதல்வரை அவரின் இல்லத்தில் சந்தித்தோம் அப்போது இரண்டு கோடி ரூபாய் தானம் தந்தார்.

இப்படி நல்ல வாய்ப்பை வீனாக்க விரும்பாத நாம் எங்களிடம் இருந்து பறிக்கப் பட்ட ஆயுத்ங்கள் மற்றும் பிற் போராளிக் குழுக்களிடம் இருந்தும் பெறப்பட்டவற்றை எங்களின் அமைப்புக்கு தரவேண்டும் என்றூ சொன்னோம் சற்றும் தயங்காது சம்மதித்தார் அதே போல் எங்களுக்கு ஆயுதங்களும் கிடைத்தன.

அது எங்களின் ஆயுத சேகரிப்பை கனிசமான அளவு உயர்த்தியது.
காளிமுத்துவுடன் பாலசிங்கம்...

பேபி சுப்பிரமணியத்தின் நண்பர் காளிமுத்து அவர்கள் (அதிமுக) அப்போது சென்னையில் எதுவும் செயலகம் இல்லாத நேரம் செயலக்ம் தொடங்கும் வரை எங்களின் விடுதி, செலவுகளின் பொறுப்பை ஏற்றார் செயலகத்துக்கும் ஏற்பாடு செய்வதாக உறுதியளித்தார்....
டி.ஜி.பி அலெக்ஸாண்டர்,

சந்திரகாசனை வெட்டியாடிவிட்டு ராவிடம் இருந்தும் தலைமறைவாக இருந்த நேரம் இந்திய உளவுப் பிரிவில் நெருக்கம் காண தலைமை விரும்பியது அது சாத்தியப் படாது போகவே தமிழக உளவுப் பிரிவுத் தலைவர் அலக்ஸாண்டரை தொடர்பு கொண்டோம்,

அப்போது சாந்தோமில் ஒரு வீட்டில் தங்கியிருந்த நம்மை அழைத்து பேசிய அவர் மிக்க அன்பும் நேர்மையும், ஈழம் பற்றிய தெளிவும் கொண்டிருந்தார். சென்னை ப்ளூ டைமண்ட் எனும் புக்ழ்பெற்ற விடுதியில் இருக்கும் சந்திரகாசனை பற்றியும் எந்த எந்த ரா அதிகாரிகளுடன் அவருக்கு நெருக்கம் என்பது பற்றியும் எங்களுக்கு சேதி சொன்னார் அதே நேரம் அந்த அறை முழுதும் ஒட்டுக் கருவிகள் கொண்டு எல்லா பேச்சையும் கேட்டு வருவதாகவும் சொன்னர்.
கலைஞர் கருணாநிதி..

1988 இல் இந்திய அமைதிப்படை தேடியழிப்பு வேலையில் இருந்தபோது தலைமறைவாக பெங்களூரில் இருந்த நேரம் என்னை உடனே வந்து பார் என்று கலைஞரிடம் இருந்து அழைப்பு, மற்ற சில போராளிகளிடம் இருந்து எனக்கு வந்தது. அன்று மாலையே சென்னையின் ரகசிய இடம் ஒன்றில் நான் அவரை சந்தித்தேன், அப்போது உடன் முரசொலி மாறன் இருந்தார்.

"உங்களை அழிப்பதில் மிகத் தீவிரமாக இருக்கிரது அமைதிப் படை, இது மிகவும் எனக்கு கவலை தருகிறது இந்திய படைபலம் முன்னால் உங்கள் பலம் என்ன செய்யமுடியும் அதைவிட ஆயுதங்களை விடுத்து சரணடையலாமே அது புத்திசாலித் தனமில்லையா"? என்றார்.

ஈழவிடுதலைக்காக உயிரை விடவும் தயார் ஆனால் சரணடைய விரும்பவில்லை என்றேன் நான். குறைந்த பட்ச ஆட்சிப் பங்கீடேனும் முன்வைக்கப் பட்டால் ஒழிய போராட்டம் நிற்க்காது என்றும் சொன்னேன்.
இப் புத்தகம் இக் காலகட்டத்தில் வந்திருப்பது அதுவும் தமிழில் எல்லோரையும் கவனமடையச் செய்யும் என்பதில் சந்தேகமில்லை அதே நேரம் இது இந்திய அரசின் கவனத்தை எப்படி திசைதிருப்பும் தங்களுக்கு சாதகமாக என்பதையும் பொறுத்திருந்து பார்க்கலாம்.


போரும் சமாதானமும்- ஆன்டன் பாலசிங்கம்
பெயரிக்ஸ் பதிப்பகம்
லண்டன் இங்கிலாந்து.
பக்கங்கள் - 790

Friday, August 11, 2006

பாப்பாத்தியின் சாட்டைக்கு ஆடும் பம்பரம்

கூட்டணி கட்சியினரிடம் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதாவின் அணுகுமுறை எப்படியிருக்கிறது?

‘‘ரொம்ப அருமையாக இருக்கிறது. எப்போது வேண்டுமானாலும் தொலைபேசியில் தொடர்பு கொள்கிறோம். சந்திக்கிறோம். சகோதர பாசத்துடன் மதிப்பளித்து நடந்து கொள்கிறார்கள். சுருக்கமாக சொன்னால், தி.மு.க. தலைமையிலான கூட்டணியைவிட வலிமையாக, நெருக்கமாக இருக்கிறோம்’’ தி.மு.க. தான் கூட்டணி கட்சிகளை வஞ்சிக்கிறது. ஏமாற்றுகிறது.
15 எம்.பிக்களுக்கு
7 மந்திரி பதவிகளை பிளாக்மெயில் செய்து காங்கிரஸிடம் வாங்கிய தி.மு.க. தாங்கள் தனி மெஜரிட்டி இல்லாத நிலையில், தமிழக அமைச்சரவையில் இடம் பெறுங்கள் என காங்கிரஸ் தலைவர் திருமதி. சோனியாகாந்தியை கேட்டாரா? இல்லையே மாறாக, வேகவேகமாக அமைச்சர் பட்டியலை அறிவித்தார்.’’

உங்கள் கூட்டணி கட்சி தலைவர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீது சிறுதாவூர் தலித் நிலப்பிரச்னையில் குற்றஞ்சாட்டப்படுகிறதே?
‘‘முன்னாள் முதல்வர் தங்குவதற்கு பயன்படுத்தும் வீடோ, அதை சுற்றியுள்ள பகுதியோ தலித் மக்களிடமிருந்து வாங்கப்பட்ட நிலம் அல்ல.
1967 செப்டம்பரில் பேரறிஞர் அண்ணா இருபது பேருக்கு தலா
2 ஏக்கர் நிலம் கொடுத்தார்கள். அதில் ஷேக்மஸ்தான் என்கிற இஸ்லாமியரும் அடக்கம். அந்த நிலங்களை வைத்துக்கொண்டு, முன்னாள் முதல்வரின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்க நடத்தப்படும் விபரீத நாடகமே இந்தக் குற்றசாட்டு. இந்த நாடகத்தை இயக்கும் சூத்திரதாரி கலைஞர். விசாரணை கமிஷனை சந்திக்க தயார் என முன்னாள் முதல்வர் அறிவித்துள்ளார்.

1996 தேர்தல் அறிக்கையில் பஞ்சமி நிலங்களை மீட்போம் என அறிவித்த தி.மு.க. இதுவரை எத்தனை ஏக்கர் நிலங்களை மீட்டிருக்கிறது?
அறிவாலயம் இருக்கும் இடமும், முரசொலி இடமும் பஞ்சமி நிலம் என்ற குற்றச்சாட்டு உள்ளதே? இதற்கொரு விசாரணை கமிஷன் வைப்பாரா கலைஞர்? பழிவாங்கும் குணம் என்பது, கலைஞரின் இரத்தத்தோடு ஊறியது.’’

குமுதத்தில் வைகோவின் பேட்டி..

மைக்கை நீட்டியதும் உளரத்துவங்கிவிடும் வைகோ இப்போதெல்லாம் தன் அன்புத் தங்கையின் ஆசைப்படி ஆடத் துவங்கியிருக்கிரார். திமுக தலைமை அலுவலகமான அறிவாலயம் பஞ்சமி நிலத்தில் இருப்பதாக வெளியான தகவல் இப்போது தான் தெரியுமா அல்லது அன்புத் தங்கையின் அறிவுருத்தலா?

ஏனென்றால் வைகோ திமுகவில் இருந்து விலகியதும் அறிவாலயம், திமுக எல்லாம் எனக்கே சொந்தம் என்று வழக்குப் போட்டவர் தானே அவர்.

இப்படி உளரல் கள் மட்டுமே பேட்டிகள் மேடைக் கூட்டங்கள் என இருக்கும் வைகோ அவரின் அன்புத் தங்கை, சர்வாதிகார, பாசிச வெறிபிடித்த, கொலைகாரி, பாப்பாத்தி ஜெயலலிதாவின் ஆனைப்படி ஆடத் துவங்கியிருப்பது அவரின் போலியான கொள்கை காவலர் எனும் சுயத்தை கொஞ்சம் கொஞ்சமாக இழந்து தன் நிஜ முகத்தை வெளிக்காட்டுகிறார்.

பெரியாரின் தம்பி என தன்னை கூறிக்கொள்ளும் இவரெல்லாம் இப்படி ஒரு பாப்பாத்தியின் பா....பல்லக்கு தூக்கி அதில் அவரின் பாதக் கமலங்களின் ஒளிபடாதா எனக் காத்திருப்பதை விட எங்காவது தெருவில் நின்று.............லாம்

..இனி வைகோவின் உளரல்களுக்கு ஒரே விமர்சனம்தான் உண்டு,

கொஞ்சம் தள்ளி நில்லுங்கள் ..

தூ.....

Thursday, August 10, 2006

வலைப் பதிவு எழுத்தாளர்களின் பத்திரிகை மோகம்

கடந்த சில வாரங்களாக தமிழ்மணம் வலைத்திரட்டியில் எழுதும் பல்வேறு எழுத்தாளர்களின் பெயர்கள் ஜனரஞ்சக பத்திரிகை எனப்படும், குங்குமம், ஆனந்த விகடன், தினமலர் போன்ற வழமையான காகித பத்திரிகைகளில் வர ஆரம்பித்திருக்கிறது.

இது வழக்கமாக எழுதும் வலை அன்பர்களின் கவனம் மேலும் நல்ல தரமான பதிவுகள் தர உதவும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் இப் பத்திரிகைகளில் பெயர்கள் வெளியானபின்னர் அன்பர்களும், அவர்களை ஊக்குவிப்போறும், வலை எழுத்தாளர் காகித எழுத்தாளர் ஆனதுக்காக அல்லது பெயர் வந்ததற்க்காக மகிழ்வது மீண்டும் ஒரு பத்திரிகை ஆசிரியர் சார்ந்த தனது எழுத்துக்களுக்கு ஒரு ஜனரஞ்சக அங்கீகாரம் தேடும் முயற்சியின் விளைவாகவே எனக்குத் தெரிகிறது.

எந்த ஒரு கருத்தும் பிற அல்லது வடிகட்டப் படும் ஒரு ஊடகத்தின் வாயிலாக வரும் வேளைகளில் அவை அவற்றின் சுயம் இழந்து நிற்கும். வலைப்பதிவில் பல வசதிகள் ஆனால் மிக முக்கியமானது சுதந்திரம். கருத்துச் சுதந்திரம். அதே போல சுயம் இழக்க மட்டுமா வலைப் பதிவுகள்?

Saturday, August 05, 2006

சாரி நான் கொஞ்சம் லேட்

பெரியாளுங்களே சின்ன புள்ளைங்களாட்டம் கூவிக்கினுருக்கும் போது நான் சின்னப் புள்ள சொன்னா ஒன்னும் தப்பில்ல அதனால எல்லாருக்கும் சொல்றது என்னான்னா...

பெரியாளுங்களே சின்ன புள்ளைங்களாட்டம் கூவிக்கினுருக்கும் போது நான் சின்னப் புள்ள சொன்னா ஒன்னும் தப்பில்ல அதனால எல்லாருக்கும் சொல்றது என்னான்னா.....(எக்கோ தானுங்க)

இது என்னோட 166வது பதிவு

கிழுமத்தூர் எக்ஸ்பிரஸ் 48

கதம்பம் 52

கவிதைகள் 27

தமிழ் மணத்தில் இன்று 35 (அதை தேடவேண்டாம் மக்களே) இப்போது அது

வனவாசமாகிவிட்டது 3

இந்த பதிவோட சேத்து 166 வது பதிவு நீங்க எந்த கணக்க வேணும்னாலும் வச்சுக்கோங்க

Thursday, August 03, 2006

ஒரு தவளையின் மரணஓலம்

மச்சக்கார தவளைக்கு இப்போது நேரம் சரியில்லை போலும். கால் டு ஹானர் எழுதியவருக்கு ஹானர் இருக்கிறதா என்பதை சோதிக்கும் காலம் இது.

புத்தகத்தில் சொல்லியதை இல்லை என்றும் மறுக்கவில்லை ஆனால் அதில் சொன்னது யாரைஎன்று சொல்லவும் தைரியமில்லை. இன்று இந்தியாடுடேஹெட்லைன்ஸ் டுடே இல் பிரபு சாவ்லாவுக்கு அளித்த பேட்டியில் இந்த தவளை தனக்குத்தானே குழிபறித்துக் கொண்டது.

நரசிம்ம ராவ் ஆட்சி காலத்தில் மன்மோகன் சிங் நிதியமைச்சர் எனவே அமெரிக்காவுக்கு உளவு பார்த்தது யாரென்று இப்போது பிரதமராக இருப்பவருக்கு தெரியும் என்றது. 1995ல் நடத்தப் படுவதாக இருந்த அணுசக்தி சோதனை அதனால் தான் தள்ளிவைக்கப் பட்டது.

எனவே அமெரிக்கா உளவுகளை கண்டு கொண்டதும் சோதணை தள்ளிவைக்கப் பட்டது என்றும் அது கதை கட்டியது.

இது உண்மையாய் இருக்கும் வேளையில் அதை பூடாகமாகவும் மன்மோகன் சிங் கேட்பது போல ஒரு சாதாரண கேள்விக்கான பதிலை மறைத்தும் தெரிவிக்க வேண்டிய அவசியம் என்ன?

கேள்வி இதுதான் : அந்த உளவாளி யார் ?

தானிருக்கும் நம்பிக்கை எனும் தண்ணீர் வற்றிய குளத்தில் கொஞ்சம் கொஞ்சமாக செத்துக்கொண்டிருக்கும் தவளையின் மரண ஓலம் அது, அதனால் பதில் சொல்ல முடியாது என்பது தெரிகிறது.

ஆதார நீர் நிலைகளான பாஜக வும் ஆர் எஸ் எஸ் எனும் இந்து வெறிபிடித்த கிணறும் அடிப்படையிலேயே கொஞ்சம் கொஞ்சமாக விஷமாகிப் போனதால் அந்த குட்டைகளிலும் இனி இந்த தவளையால் காலம் தள்ள முடியுமா என்பது சந்தேகமே. இது போன்ற நாட்டு நலனில் அக்கரை கொண்ட தவளை இன்னும் தன் தேசப்பற்றை வெளிப்படுத்துகிறது இப்படி....

பிரபு சாவ்லா: இந்த பிரச்சனையை ஏற்படுத்தியது தாங்கள் யார் அந்த உளவாளி?

தவளை : அந்த பெயரை கண்டுகொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டியது அரசு மேலும் இதுபோல நடக்காமல் இருக்க ஆயத்தம் ஆகவேண்டும். நான் எப்போதும் உளவாளி இருந்ததாக சொல்லவில்லை அமெரிக்கா வுக்கு அணுஆயுத ரகசியம் சொல்லப்பட்டது பிரதமர் அலுவலகத்தில் இருந்து அதுமட்டும் உண்மை உளவாளியாரென்று அரசே கண்டுபிடிக்கட்டும். மன்மோகன் சிங்குக்கு அது யாரென்று தெரியும் நான் சுட்டிக்காட்ட மட்டும்தான் முடியும் .

இந்த தவளை மீது பாராளுமன்றத்தில் உரிமைமீறல் பிரச்சணை கொண்டுவர முடிவுசெய்யப் பட்டுள்ளது

தன் வாயால் கெடும் தவளைகள் வாழ்க




Tuesday, August 01, 2006

ஜஸ்வந்த் சிங்கின் மச்சம்


"எ கால் டு ஹானர்"
முன்னாள் பி.ஜே.பி அரசின் வெளியுறவுத் துறை அமைச்சரும் பி.ஜே.பி யின் வெறுந்தலைகளுள் ஒருவருமான ஜஸ்வந்த் சிங் எழுதிய புத்தகம்.

நரசிம்ம ராவ் ஆட்சி காலத்தில் அவரின் அலுவலகத்தில் ஒரு அமெரிக்க உளவாளி வேலை பார்த்து வந்ததாகவும் அவர் இந்திய அணு ஆயுத ரகசியங்களை அமெரிக்காவுக்கு அனுப்பியதாகவும் அது தனக்கு தெரியும் என்றும் அது பற்றிய தகவல்களை வெளியிட தான் தயாராக இருப்பதாகவும் எழுதியிருக்கிறார்.

இது குறித்த விவாதங்கள் பாராளுமன்றத்தில் எழுப்பப் பட்ட போது அது பற்றிய முழு தகவல்களையும் பிரதமர் மன்மோகன் சிங்கிடம் மட்டுமே தெரிவிக்க முடியும் என்று ஒரு பதிலைச் சொல்லி நழுவினார்.

பின்னர் பிரதமருக்கு ஒரு கடிதம் எழுதிஅனுப்பினார் அதில் அந்த உளவாளி யார் என்பது நரசிம்ம ராவுக்கு தெரியும் என்றும் பெயரை தான் கடிதத்தில் தெரிவித்திருப்பதாகவும் பத்திரிகைகளில் தெரிவித்தார். ஆனால் பிரதமர் அலுவலகம் தங்களிடம் வழங்கப் பட்ட ஜஸ்வந்தின் கடிதத்தில் எந்த பெயரும் இல்லை என்றும் அதுவும் அவரின் கையெழுத்திடப் படாத கடிததின் நகல் மட்டுமே என்றும் சொன்னது.

இதே கடிதம் இந்தியா டுடே விலும் வெளியானது. அக்கடிதம் தங்களுக்கு அனுப்பிய கடித நகல் என்றும் பிரதமர் அலுவலகம் உறுதி செய்துள்ளது. இந்தியா டுடேயில் வெளியான கடிதத்திலும் உளவாளி பற்றிய எந்த தகவலும் இல்லை.

அமெரிக்க உளவாளி பற்றி மட்டுமின்றி ஆப்கனுக்கு கடத்தப்பட்ட இந்திய விமான பயணிகளை மீட்பதற்க்காக பெரும் தொகை பேரம் பேசப்பட்டு அது வழங்கப்பட்டது என்றும் அவர் தெரிவித்திருக்கிறார் தனது புத்தகத்தில்.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ஆர் எஸ் எஸ் இன் பஞ்சசன்ய பத்திரிகை " பிரதமர் அலுவலகத்தில் இருந்த உளவாளி குறித்த தகவலை முன்னறே ஏன் தெரிவிக்க வில்லை என்றும் 10 ஆண்டுகள் கழிந்து தெரிவிப்பதை விட கடந்த பி.ஜே.பி அரசின் கவனத்தில் சொல்லியிருந்தால் கூட அவர்களை பொதுமக்கள் முன்னிலையில் தூக்கில் போட்டிருக்கலாம். அதுவும் அவ் அரசில் பெரிய அமைச்சராக இருக்கும் வேளையில் தெரிவிக்காமல் இப்போது தெரிவிப்பது ஏன் என்றும் அது கேள்விகளை எழுப்பியுள்ளது மேலும் அது அதிகம் கவலைப் படுவது கந்தகார் விமான கடத்தல் பணபேரம் குறித்து ஆதாரமற்ற தகவல்களை வழங்குவதாக அவர் மேல் குற்றமும் சாட்டுகிறது "

மேலும் இன்று ஜஸ்வந்த் வெளியிட்ட அறிக்கையில் தான் உளவாளி பற்றிய தகவல் களை பாதுகாக்க வில்லை என்றும் கூறி புது சர்ச்சைக்கு வழிகோளுகிறார் பி.ஜே.பி இதில் எதுவும் பேசாமல் அமைதி காக்கிறது இதுவே ஒரு காங்கிரஸ் உறுப்பினர் செய்திறுப்பின் பாராளுமன்றம் பட்டிமன்றமாகி வேலைகளை முடக்குவார்கள்.

இப்போது எனக்கு தோன்றும் சில கேள்விகள்:

1. நரசிம்மராவ் காலத்தில் இதை தெரிவிக்காமல் இப்போது சொல்லவேண்டிய அவசியம் என்ன?

2.தேசிய பாதுகாப்பு என்பது இந்துக்கள் பாதுகாப்பு என்று மட்டுமே கருதுகிறதா பி.ஜே.பி?

3. இப்படி முன்னுக்கு பின் முரன்பட்ட தகவல்களை தரும் ஜஸ்வந்தின் ஆட்சி காலத்தில் இன்னும் என்னவெல்லாம் நடந்திருக்கும்.?

4. இதுபோல் தவறான செய்திகளை சொன்னதற்க்காக ஜஸ்வந்த் மேல நடவடிக்கை எடுப்பார்களா?

5 . அப்போது பி.ஜே.பி. சும்மா இருக்குமா.?

6. அல்லது ஆர். எஸ்.எஸ் இப்போது சொன்னதை தொடர்ந்து காப்பாற்றுமா.

7. இதுபோல் நாட்டின் பாதுகாப்பில் அக்கரையோடு செயல்பட்ட ஒரு முன்னாள் அமைச்சர் இனியும் எம்பி பதவி வகிக்க தகுதி உடையவர் தானா?

8. தனக்கு தெரிந்த உளவாளி பற்றியும் தகவல் சொல்லாமல் இருந்தவர் உளவாளிக்கு உடந்தை இல்லையா?

9. பி.ஜே.பி செய்த எல்லா நன்மைகளுள் இதுவும் ஒன்றா?

10 . எ கால் டு ஹானர் புத்தக விற்பனையை கூட்ட எழுதப்பட்ட நேர்மையற்ற தகவல் மட்டுமா இது?

எப்படியோ ஒரு மச்சத்தை பற்றி எழுதி ஆட்சியாளர்களின் நேர்மையை உலகுக்கு சொல்லியிருக்கிரார் அதற்க்காகவாவது நன்றி

கடைசி செய்தி: புதிதாக எழுதியுள்ள கடிதத்தில் உளவாளியின் பெயர் தெரிவிக்கப் பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றனஇது குறித்த

முழுமையான செய்தி அறிக்கைகளுக்கு: