Thursday, July 05, 2007

சாருநிவேதிதாவும் சரோஜாதேவியும்.(எச்சரிக்கை இது எனது முதல் மீள் பதிவு)


பின் நவீனம், முன் நவீனம் கட்டுடைத்தல், நான் லீனியர், ரியலிஸம், சர்ரியலிசம், புதுக்கவிதை, புண்ணாக்கு, புல், பூண்டு,மலை,மழை,இலை,தழை,காடு,கருப்பு,காதல்,கன்றாவி.கஞ்சன் கருமி,கவிதை.புறநானூறு,புத்தம்புதுசு..........


என்ன ஒன்னும் புரியலையா? இப்படித்தான் இருந்தது அவரின் ஜீரோ டிகிரி....ஒரு வேற்றுகிரகவாசி நாவல்?!.. முதலில் ஏதோ எழுத்துப் பிழை அல்லது பக்கம் தவறு என்று நினைத்தேன். பிறகுதான் தெரிந்தது நாவல் அப்படித்தான் இருக்குமாம். அதுகூட என்னமோ நான் லினியரோ நீலினியரோ போட்டிருந்தாங்க இப்டி எழுதறது இப்ப ஸ்டைலாம்.


அப்பறம் அடுத்த பக்கம் பொறட்டுனா.... அங்கதான் வச்சிருந்தார் குண்டு.. நிசமாச் சொல்லுரன் நானும் சின்ன வயசில (ஒரு பதினஞ்சு வயசு?) ஊட்டுக்கு தெரியாத மைசூர் பதிப்பகத்தோட சரோசாதேவி கதையெல்லாம் படிச்சிருக்க்னுங்க.. அதுல கூட இம்மா விசயம் மில்லிங்க. தலிவரு சும்மா பச்ச மஞ்ச செவப்பு நீலம்னு உட்டு பேனாவுல இன்க்குக்கு பதிலா வேற எதையோ ஊத்தி எழுதிருந்தாருங்க..


அப்பத்தான் வந்துது கோவம் அவருமேல யில்லிங்க அந்த புக்க வாங்க சொல்லி தினந்தினம் அரிச்ச எம்பிரண்டு விசயன் மேல நேரா வூட்டுக்கு போயி கேட்டங்க ஒரு கேள்வி ....." நூறு ரூவா போட்டு இத வாங்குனத ஒரு பொட்டிக்கடையில பத்துருவாய்க்கி வாங்கிற்கிலாமேன்னு" அதுக்கு அவன் "போடா டுபுக்கு நீஏண்டா இங்கிலீஸ் படத்த பாத்தவனாட்டம் டைட்டில்ல இருந்து பாத்த ஒரு பத்து பக்கம் கழிச்சு பாருடான்னான்" நானும் பாத்தங்க ஆங் இப்பகொஞ்சம் பரவால்ல ஏதோ ஒன்னு ரண்டு பத்தி புரிஞ்சதுங்க ஆனா மொத்தமா யோசிச்சா ஒரு எழவும் புரியிலங்க. என்னடா இது " அந்தோன் சேகவ், லேவ் தல்ஸ்தோய். அலக்ஸாந்தர் குப்ரின், அலக்ஸேய் தல்ஸ்த்தோய் வல்லி கண்ணன், சுசாதா.....பாலகொமாரு எல்லாரும் புரிஞ்சாங்க இவரு மட்டும் புரியிலயான்னு எனக்கு ஒரே கொழப்பமுங்க சரி நம்புளுக்குத்தான் புரிலன்னு எங்க மாமா ஒருத்தரு இஞ்ஜினீரு அவரு இந்த இலக்கியம்லாம் படிப்பாரு அவருகிட்ட தந்தனுங்க. அவரும் சரி படிக்கிரேன்னு வாங்குனாருங்க மறுநா பாத்து கேட்டதுக்கு சொன்னாரு"


ஒங்க அக்காகாரி அந்த புத்தகத்த பாத்துட்டு இந்த வயசில இந்தமாரி புத்தகம் படிக்கிரியான்னு சொல்லி வாங்கி கிழிச்சு போட்டுட்டா மாப்ள நீ வேற வாங்கிக்கோன்னாறு. ஆஹா இவரு முதலுக்கே வேட்டு வக்கிறாறேன்னு போயி விசயங் கிட்ட சொன்னன்னுங்க அதுக்கு அவன் மலிவு வெலையில அதே புக்க ஜீ.ஏ. (அதாங்க க்ரைம் நாவல் அசோகன்) போடுராரு அத வாங்குவோம்னான்.


சரின்னு அப்ப எங்க ஊருக்கு பக்கத்தில பெரம்பலூர்ல புத்தக கண்காட்சி போட்டுருந்துது அங்க போயி தேடிப்புடிச்சி சீரோ டிகிரியும் அப்பறம் கோனல் பக்கமும் வாங்கியாந்தமுங்க சரி மின்னயே சீரோ டிகிரி புரில இப்ப கோனல் பக்கத்த படிப்பமுன்னு எடுத்தா பூராம் அவுரோட காதல் வெளையாட்டு அனுபவங்க. என்னடா இதுன்னு அப்ப அப்ப கொஞ்சம் நல்ல கட்டுரையும் எழுதிர்ந்தாரு ஆனா எனக்கு ஒன்னும் புரிலிங்க.அதுல தான் இந்த கும்போனத்துல புள்ளைங்க நெருப்புல செத்து போச்சே அதபத்தி எழுதிர்ந்தாருங்க அதுல ஒருஎடத்தில ஒரு சினிமா ஹன்னிபால் பத்தி எழுதிருந்தாருங்க ஆனா நடிச்சவ்ரு பேர தப்பா போட்டுட்டாரு. அவ்ரு பேரு அந்தோனி ஹாப்கின்ஸுங்க இவருதான் மாத்தி போட்டாரு. அத ஏம்பிரண்டுகிட்ட காட்டுனதுக்கு அட போடா ஏதோ ஒரு தப்பு நடந்துபோச்சி அத சொல்ல வந்துட்ட மத்தது நல்லாருக்கான்னான் நாஞ்சொன்னன்


"அடே கோவத்த கிண்டாதடா எனக்கு அவுரு எழுதுனதுல இதான்டா புரிஞ்சுதுன்னு" சொன்னனுங்க.. அவன் ஒரு வார்த்த பேசலியே..இப்பயும் என்னமோ சாருஆன்லைனுன்னு ஒன்னுல எழுதுராரு இப்பவும் அதே ரஸ லீலா பாகம் இருவதுன்னு தொடர்ச்சியா அதே சொந்தக்கதைங்க ...இப்பலாம் அந்த வலைக்கே போரதில்லீங்க எதுக்கு வம்பு நம்பளே துபாய்ல இருக்கம் எதாவது ஒன்னுகெடக்க ஒன்னு ஆயிடிச்சின்னா என்ன பன்றது அப்பறம் எம் பிரண்டு இப்பவும் அவர படிக்கிரானுங்க.....


அவரு நம்ப கமலகாசன பத்திஎழுதிருக்காரு பார்ரான்னு சொன்னான் எனக்கு கமல்னா புடிக்குமுங்க நம்ப ரசினி ராம்கிக்கு ரசினி மாறி எனக்கு கமலுங்க சரின்னு பாத்தா விருமாண்டியை முன்வைத்துன்னு ஒரு கட்டுரங்க அதுல நெரயா லத்தீனு, பெரான்ஸு, ஈரானு இப்படி பலநாட்டு படத்தியும் போட்டு விமர்சனமுங்க. என்ன பன்றது அவரு நிலம அப்பிடி எனக்கு எப்பிடி சாருவ புரிலியோ அதே மாறி சாருவுக்கு கமல் படம் புரிலங்க, சரி கொரியாகாரன் எதோ தப்பான படத்துக்கு விருது கொடுத்துட்டான்னு விட்டுட்டனுங்க இப்பிடிதாங்க அவுருக்கும் நமக்கும் ஒத்தே வர்ல. இதுல இவரு இந்தியவுல இருக்க எல்லா எழுத்தாளர். நடிகர்,கவிஞர்.பத்தியும் விமர்சணம் பன்னி எழுதுவாருங்க ஆனா அவரப்பத்தி எழுத ஆருமில்லீங்க. நானே எனக்கு அவரு


எழுதறது புரிலன்னுதாங்க எழுதுரன் அவர ஒன்னும் சொல்லலீங்க. இதுவேற அனானிமசூ ,ஈ,கொசுன்னு பின்னூட்டம் போட்டா என்னாபன்றது.சரி இம்பூட்டு நாளா சும்மா இருந்துட்டு இப்ப ஏன்டா எழுதுரண்னு கேக்கரீங்களா.... நான் இப்பதாங்க சும்மா இருக்கன் படிச்சுட்டு எழுதுங்க......

Monday, July 02, 2007

பின்னூட்டம் வேனுமா பின்னூட்டம் ?


நல்லவங்களே இந்த வலைப்பூ ஒலகத்தில பின்னூடம் வாங்குற மாதிரி பதிவு எழுத ஒவ்வொருத்தனும் மண்டைய பிச்சிகிட்டு அடுத்தவன் பதிவு அடுத்தவங்க தளம் ஆனந்த விகடன்ல இருந்து அரிஸ்டாட்டில வரைக்கும் பரீட்ச எழுதப் போறவன் மாதிரி விழுந்து விழுந்து படிக்கிறான்
பள்ளிக்கூடத்தில ஒக்காந்து இவ்ளோ ஆராச்சியும் பன்னியிருந்தா இன்னேரம் ப்ளாக் எழுதும் பதிவர் எல்லாம் பில்கேட்ஸ மிஞ்சியிருக்கலாம்.


ஆனா ஆரியம் திராவிடம் அனானி ஆட்டம்னு அடிச்சிகிட்டு சாகுற தமிழ் வலைப்பூ ஒலகத்தில பின்னூட்ட பேதமை இருக்கு. நாலு பேர் வந்து படிக்கலின்னாலும் நல்லாருக்கு , கும்மி, மொக்கை, இல்லை தூன்னு மூஞ்சீல துப்பினாலும் புக்கர் பரிச வாங்குன அருந்ததி ராய் மாதிரி நம்மாளுக்கு முகமெல்லாம் மலந்து போகும் .


இந்த மாதிரி இருக்க ஒலகத்தில எவன் யாருக்கு பின்னூட்டம் போட்டா என்ன போடலைன்னா என்னன்னு போக முடியுமா எதோ என்னால முடிஞ்சது இன்னும் நாலுபேர் பதிவுக்கு போய் கும்மிதான் அடிக்க முடியும் அதையும் செய்யமாட்டேன் போன்னு சொல்றதுக்கு நான் ஒன்னும் பின்னூட்ட மே வேண்டாமுன்னு சொல்ற ஆள் இல்லே எனக்கு அந்தமாதிரி ஒறைக்கிற மாத்ரி நச்சுன்னுல்லாம் சொல்ல முடியாது.


எதுக்கு இவ்ளோ நீளமா இவன் பதிவு போட்றான்னு பாக்கிரவங்க கொஞ்சம் தமிழ்மணத்தையும் பாருங்க " நான் இனி எங்கும் பின்னூட்டம் போட மாட்டேன்" என்னை தூக்கில் போடுங்கள் , ஒரே தற்கொலை வாசணை என்னத்த சொல்ல அத்னால யாருக்காவது பின்னூட்டம் வேனுமான்னு சொல்லுங்க இன்னும் நாலுபேர வேண்டுமானாலும் கொண்டுவந்து விட்டு அடிச்சி ஆடி ஆசைய நிறைவேத்தி வைப்போம். ஓகேவா



இப்பவே கண்ணக் கட்டுதா?



Friday, June 29, 2007

செந்தழல் ரவிமேல் எக்ஸ்பிரஸ் ஏறியது?


ப்ரதீபா பட்டேலை கேள்வி கேக்குற சாக்கில் என்மேல கேள்விக் கணைய தொடுக்கிறார் செந்தழல் ரவி எனக்கு இப்போ இருக்கிர மூடுக்கு ஒன்னுதான் சொல்ல முடியும் ஏற்கனே ஒரு பஞ்ச் டயலாக் இருக்கு " தண்டவாளத்தில தலைய வச்சவனும் லக்கிலுக் மேல கைய வைச்சவனும் பொழச்சதா சரித்திரமே இல்ல" இப்படித்தான் ஆகும் காப்பாத்த ஸ்ரேயா வந்தாத்தான் உண்டு :) எனபதை தன்னடக்கத்துடன் தெரிவித்துக் கொல்கிறேன்.
பின்.குறிப்பு .கும்மி அடித்து நாட்கள் ஆனதால் இந்த பதிவை இடும்படி பரிந்துரைத்த செந்தழல் ரவிக்கு நன்றிசொல்லக் கடமைபட்டிருக்கிறேன்

Wednesday, June 27, 2007

ச்சும்மா பாத்தாலே அதிருதில்லே.... *18+

நம்ம மோகன்தாஸ் தினமும் படங்காட்றார், எல்லா பதிவர்களுமே எதாவது ஒரு சமயத்தில படங்காட்டுறாங்க அன்னைக்கு மட்டும் ஹிட்டு அதிகமாகிறதாவும் மத்த நாள்ள கம்மிதான்னும் எல்லாரும் ஒரே பொலம்பல்ஸ். ஜேகே என்னடான்னா புதுசா டாட் நெட்ல கவுஜ சொல்ற டூலை மெயில்ல அனுப்பி டெஸ்ட் பன்னு டெஸ்ட் பன்னுங்கிறார்.
இப்படி எல்லாரும் ஆளுக்கு ஒரு பொறி வச்சி எலியப் புடிக்கும் போது சிபி கொலவெறிக் கவுஜயாவே எழுதி எழுதி வயத்து வலி வந்து ரெண்டுநாளா கிடக்கார். கப்பி எட்டு போடு எட்டு போடுன்னு என்னமோ எனக்கு புதுசா துபாய் லைசன்ஸ் வாங்கப் போற மாதிரி தொல்லை குடுக்குறாப்ல அதனால என்னோட பதிவை பாக்கிறவங்க சூடானாலும் அவங்கள கூலாக்க படம் காட்ட முடிவு செஞ்சேன்.
என்ன நம்ம ப்ளாக்கே எப்பவும் சூடுதானே அப்ப தினமுமா படம் காட்ட முடியும் அதனால எப்பவுமே ப்ளாக் கூலா இருக்கமாதிரி சைட்ல பாருங்க எஃப் டிவி அது வேனாமா சி என் என் ஐபிஎன் லைவ் இரண்டுமே லைவ்தான் பாருங்க பாருங்க பாத்துகிட்டே இருங்க... பிடிக்கலலன்னா பின்னூட்டத்தில சொல்லுங்க
இங்கயும் படம்காட்டுறேன்

'

Tuesday, June 26, 2007

எனக்கு எய்ட்ஸ் இருக்கு

கப்பி பயலுக்கு எத்தனை நாளா என் மேல இந்த கொலவெறின்னு தெரியலை. ஏற்கனவே ஒரு தடவை என்னை ஆறு போட கூப்பிட்டு மாட்டிவிட்டது பத்தாதுன்னு இப்ப எட்டு போடச்சொல்லி தன்னோட பதிவில அழைப்பு விட்டதோட மட்டுமில்லாம கூகிள் டாக்லயும் போடுங்க போடுங்கன்னு மலையாளப்பட ரெட்டை அர்த்த வசனம் மாதிரி எட்டு போடச்சொல்லி ஒரே தொல்லை. நம்ம தெக்கிகாட்டான் என்னய்யா எட்டு இன்னுமா போடலைன்னு (அவரே இன்னும் எழுதலை எஸ்கேப் ஆகப் போறதா கூகிள் டாக்ல சொன்னாரு தருமி அய்யா கொஞ்சம் கவனிங்க).

எல்லாறும் பெருமையா நினைக்கிற எட்டை போட்டு தமிழ்மண எட்டு விவகாரம் சிவாஜி எட்டு சங்கர் எட்டுன்னு விவசாயி பதிவு போட்டு கலாய்க்கிறார். இப்படி பெருமையா பேசுற அளவுக்கு எனக்கு இருக்கிற எட்டுக்கள் ஒன்னும் அதிகம் இல்லைன்னாலும் நான் பெருமைப் பட்டுக்கலாம்னு சொல்ற எட்டு விஷயங்களை குட்டியாச் சொல்லிட்றேன் முதல்ல

1. பயம்னா என்னன்னு தெரியாம சண்டியர் மாதிரி இருக்கிறது பெருமையாடான்னு கேக்குறவங்க அனுபவிச்சி பாருங்க அப்ப தெரியும்)

2. எத்தனை கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் நட்பையும் கருத்து வேற்றுமையும் போட்டு கொழப்பிக்காம சரியான பாதைல போறது. இன்னைக்கு வரைக்கும் அப்படித்தான் இருக்கேன்

3. என்னோட சொந்தக்காரர் ஒருத்தர் பஞ்சாயத்து எலக்சன்ல நின்னப்போ அவருக்கு ஆதரவா ஒத்தை ஆளா பிரச்சாரம் செஞ்சி ஜெயிக்க வைச்சது( இது ஏன் பெருமைன்னா தனிப்பட்ட முறையில் எனக்கும் அவருக்கும் ஆகாது குடும்ப விவகாரம். ஆனா மனுசன் நல்லவர் எதாவது செய்யனும்னு இருந்தவர் செஞ்சவர். அவருக்கு ஆதரவா களத்தில் இறங்கி ஓட்டுக் கேட்டபோது எங்க வீட்டுக்காரங்களே ஏண்டா ஒனக்கு இந்த வேலைன்னு கேட்டது) இதே போல இன்னொரு சட்டமன்ற தேர்தலை பூத் ஏஜெண்டா உள்ள ஒக்காந்து ஒத்த கள்ள ஓட்டுக் கூட இல்லாம தேர்தல் நடத்த உதவினதுக்காக தேர்தல் கண்காணிப்பாளரிடம் பாராட்டு பெற்றது.

4. படிச்சது மெக்கானிக்கல் இஞ்சினியரிங் அப்பவே பொட்டி தட்டவும் பழகுனது ஆனா இது சம்மந்தப்பட்ட வேலை எதுவும் செய்யாம 5 வருசம் விவசாயம் பாத்தது புதுப்புது உத்திகளை கையாண்டு விவசாய உரங்களை எங்க வயல்ல இருந்தே ஒழிச்சுக் கட்டுனது.

சரி இதுக்கு மேலயும் இப்பவே எழுதி உங்க கண்ணை கட்ட விரும்பலை அதனால தொடரும்..போட்றேன்பா (இதோட தொடர்ச்சி நாளைக்கு காலேல கதம்பத்தில் )

(மேல இருக்க படம் எதுக்கா இருக்கும்னு கேக்குறவங்களுக்கு...."எல்லாம் என்னோட டெஸ்க்டாப்பை வச்சி ஒரு விளம்பரம்தான் :)"

Monday, June 25, 2007

பா.ம.க வுக்கு பாடை ரெடி?










ஒரு ரேஞ்சாத்தான்யா கிளம்புனாய்ங்க அப்றம் என்ன ஆனது?

Saturday, June 23, 2007

இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கப்பட வேண்டிய அசுரகுணம் கொண்ட நக்சல் இயக்கங்கள்


மாசேதுங்கின் கொள்கைகளாக உலக வரலாறுகளை உதாரணம் காட்டும் நக்ஸல் இயக்கக் கொள்கைகள் மக்களை அடையாமல் வெற்றிபெற முடியாது. குழப்பும் வார்த்தைகளும் புரியாத சொற்றொடர்களும் கொண்டு தீவிர மாவோயிஸம் பேசுவதால்மட்டும் இந்தியாவை அடிமைத்தனத்தில் இருந்து மீட்டுவிட முடியும் என கண்களில் அரசுக்கு எதிரான போர் வெறியும் மனசில் அடுத்த நொடி பற்றிய உயிர் பயமும் கொண்டு ஒளிந்து வாழும் நக்ஸல் இயக்கங்கள் என்ன மாற்றத்தை கொண்டுவந்துவிட முடியும்?


முதலில் நக்ஸல் இயக்க கொள்கைகள் என்ன என்று மக்கள் அறியத் தர வேண்டும். மக்கள் ஆதரவு இல்லாமல் எந்த இயக்கமும் வெற்றிக்கனியை எட்டிவிட முடியாது. தீவிர வாதம் மட்டும் எல்லா அடிப்படை விதிகளையும் புரட்டிப் போட்டுவிடும் என்றால் உலகில் பாலாறும் தேனாரும் அல்லவா ஓடவேண்டும்? ஏன் இல்லை. ரத்த ஆறுதானே ஓடுகிறது?. அரசுக்கு எதிராய் கோசங்கள் எழுப்பி அது மக்களை அடைய வேண்டும் என்றால் அந்த கொள்கைகள் மக்கள் மத்தியில் இருந்து ஒலிக்கவேண்டும் அப்படியில்லாமல் தனிக்குரலாக ஒலித்தால் அது வெறும் ஓலமாகத்தான் இருக்கும் உரிமைக் குரலாக இல்லை.


ஏழ்மைக்கும் வறுமைக்கும் முடிவுகட்ட தோட்டாக்களும் ரத்தங்களும் மட்டும் போதுமா? மக்கள் முதலில் ஒன்று சேர வேண்டும். அடர் கானகத்தில் ஒலிக்கும் காட்டுப்பூணைகளின் சத்தம் ஒரு நாளும் வீட்டுக் கோழிகளை பயத்தில் ஆழ்த்துவதில்லை. கோழிவேண்டும் என்றால் ஊருக்குள் வரவேண்டும். மக்கள் மனசைவெல்ல ஆயுதங்களும் மாவோயிசமும் ஒரு மண்ணுக்கும் பிரயோசனமில்லை.


ஆயுதங்கள் நக்ஸல்களை தனிமைப்படுத்தும். மாவோயிசம் மக்களை குழப்பத்தில் ஆழ்த்தும் எனவேதான் இந்தியாவில் எந்த தீவிரவாத இயக்கமும் மக்களை விட்டே தனித்து இருக்கிரது. இந்தியா ஒன்றும் இனி மாவோயிஸ லெனினிய இன்னும் என்ன என்ன தீவிர இஸங்கள் உண்டோ அவ்ற்றின் உதவியோடு எல்லாம் மறு கட்டமைப்புச் சூழலை உண்டாக்கும் அளவுக்கு பின் தங்கிப் போய்விட வில்லை.


ஜனநாயகம் இல்லாத நாடு அதற்க்காக அந்த சூழலை உருவாக்குவதற்க்காக ஆயுதங்களை ஏந்தி அரசாங்கத்தை அழிப்போம் என்பது கன்னித்தன்மையை காக்க வன்புணர்வுக்குள்ளாக்குவதை போலவேயன்றி வேறென்னவாக இருக்கமுடியும்?


அரசின் குரல் உலகெங்கும் ஒலிக்கும் அதனால்தான் புத்திசாலிதனமாக எல்லா பிரதான கட்சிகளும் ஜனநாயகப் பாதையான ஓட்டுப் பொருக்கிகள் என நக்ஸல் பாரிகளால் விமர்சிக்கப் படும் அரசியலை, மக்கள் விரும்பும் பாதையான ஒன்றை தேர்ந்தெடுக்கின்றனர் இதன்மூலம் தங்கள் குறைந்த பட்ச கொள்கைகளையாவது வென்றெடுக்க முடிகிறது. வெறும் நக்ஸல் சிந்தனைகள் தீவிர கோசங்கள் அன்றைய பொழுதை ஆரவாரமாயும் அடுத்த வேளை சோத்துக்கும் ஆளாய் பறக்கும் மக்களையும் குழப்பத்திலும் பயத்திலும் ஆழ்த்த பயப்படுமேயன்றி வேறு எந்த வகையிலும் நலன் தராது.


பிரச்சிணைகள் என்னவென்று அலசி அதற்க்கான தீவை கண்டுகொள்ள முயலாது பிரச்சிணைகளுக்கு காரணமான மைய நீரோட்டத்தில நஞ்சைக் கலப்பது எந்தவகை ஜனநாயகத்துக்கான தேடல் எனத் தெரியவில்லை. அப்படி இருப்பதை விட ஓட்டுப் பொறுக்கி அரசியல் ஆயிரம் மடங்கு உண்ணதமானது.


சொந்த மக்களை அதன் மண்ணில் நேருக்கு நேராய் சந்திக்க முடியாமல் என்ன விதமான புரட்சிக் கொள்கைகளை கட்டமைக்க முடியும்? நக்ஸல் இயக்கக் கொள்கை எந்த சனநாயகக் கொள்கைகளோடு ஒத்துப் போகிறது. அரசியல் சாக்கடை அதை சுத்தம் செய்யத்தான் நாங்கள் ஆயுதங்களை கையில் எடுத்தோம் என்பவர்கள் சுத்தம் செய்யவேண்டும் என்றால் சாக்கடையில் இருந்தல்லவா அதை செய்ய வேண்டும். சாக்கடையை சுத்தம் செய்ய சாக்கடையே அடைத்துவைத்தால் ஊர் நாறிப் போகாதா.