Wednesday, May 24, 2006

ரஜினி எனும் மாய பிம்பம்


"இந்தத் தேர்தலில் யாருக்கும் நான் ஆதரவு தெரிவிக்கவில்லை. அவரவரும் இஷ்டம் போல் வாக்களிக்கலாம். எனது மன்றக் கொடியையோ, மன்றத்தின் பேரையோ, என் படத்தையோ யாரும் பயன்படுத்தக் கூடாது’’ என்று சொல்லிவிட்டு ரஜினி ஒதுங்கிக் கொண்டார். , ‘‘தலைவா உங்கள் பேரைச் சொல்லிக் கையேந்தும் ரஜினி ரசிகர்களுக்கு நீங்கள் இறங்கி அடிக்கணும் ரிவீட்டு’’ என்று ஒரு போஸ்டர் அடிக்கப்பட்டது. ரஜினி ரசிகர் மன்றத்தின் தலைவர் கருப்பையாவைச் சந்தித்தோம்.
96 தேர்தலப்போ தலைவர் தி.மு.க. கூட்டணியை ஆதரிச்சார்; நாங்களும் வேலை செஞ்சோம். 2004_ல் வாஜ்பாய் நல்லவர்னு சொல்லி அ.தி.மு.க.வை ஆதரிச்சார். நாங்களும் வேலை செஞ்சோம். ‘இந்தத் தேர்தல்ல என் படம், கொடி, மன்றத்துப் பெயரை யாரும் பயன்படுத்தக் கூடாது, அப்படிச் செய்தால் மன்றத்தை விட்டு நீக்குவேன்’னு சொன்னார்.
ஆனா, திருச்சியில இப்போ சாகுல் தலைமையில ஒரு குரூப், கலீல் தலைமையில ஒரு குரூப், கர்ணன் தலைமையில ஒரு குரூப்புன்னு ரஜினி ரசிகர்கள் பிரிஞ்சு கெடக்குறாங்க. இதுல சாகுல், தலைவர் சொன்னபடி நடுநிலையா இருந்துட்டார். ‘நீங்க எவ்வளவு காசு வாங்குனீங்க?’னு கேக்குறாங்க. ‘நீங்க காசுக்கு மாரடிக்கிற கும்பல்தானே’னு சொல்லும்போது, ரொம்ப அவமானமா இருக்கு. அதுலயும் இப்ப தி.மு.க.வுக்கு அடிச்சிருக்கிற வாழ்த்துப் போஸ்டர்கள்ல ‘அனைத்து ரஜினி ரசிகர் மன்றங்கள்’னு அடிச்சிருக்காங்க.
இனியாவது, தலைவர் மௌனம் கலைக்க வேண்டும்; இந்தக் குழப்பத்துக்கு ஒரு முடிவு கட்ட வேண்டும்; இவர்கள் மேல் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று பொரிந்து தள்ளினார் அவர்.
அடுத்து நம் முன் வந்தார் ‘தம்பிக்கு எந்த ஊரு’ ரஜினி மன்றத்தின் ராஜா.
‘‘எப்பவும் தலைமை சொன்னதுக்கு மாறா நாங்க நடக்கிறதில்லை. இந்த முறையும் தலைமை சொன்னதைக் கேட்டு நாங்க அமைதியா இருந்தோம். இன்னிக்கு நேரு ஜெயிச்சதும் அவரவர் செய்யும் ரெண்டாம் நம்பர் தொழிலைக் காப்பாத்த நேருவை வாழ்த்தி போஸ்டர் அடிக்கிறார்கள். மக்கள் இந்த மாதிரி கருங்காலிகளை அடையாளம் கண்டு புறக்கணிக்கணும். தலைவரும் இவர்களை மன்றத்தை விட்டு நீக்கணும்’ என்றார் கோபத்தோடு.
‘‘ ‘எனக்கு ரசிகர் மன்றங்கள் வேண்டாம்; நான் ஆன்மிக வழியில் போகிறேன்’ன்னு தலைவர் சொல்லிரட்டும். ஒவ்வொரு அரசியல்வாதி கிட்டேயும் கையேந்துகிற நிலைமை எங்களுக்கு வேண்டாம்
. "(நன்றி-குமுதம்.காம்)


இது அத்தனை யும் ரஜினி ரசிகர்களின் வாய்ஸ். 1996 தேர்தலின் போது "வாய்ஸ்" ஆக இருந்த ரஜினிகாந்த் கடந்த நாடாளு மன்ற தேர்தலின் போது தான் வெறும் "நாய்ஸ்"(சவுண்டுதான் ) என்றே தெரியவைத்தார் ஆனாலும் சில இடங்களில் மட்டும் பா.ம.க வுக்கு எதிராக அவர்களை அரசியலில் இருந்து ஒழித்தே கட்டுகிறேன் பார் என்று சவால் விட்டு காற்று போன பலூனானார். ஆனாலும் இந்த பத்திரிகைகள் அவரை விடுவதாக இல்லை எங்கோ மூலைக்கு மூலை குரூப் பிரித்துக்கொண்டு தங்கள் தலைவரின் வாய்ஸ் வேண்டும் என்று காத்துக் கிடப்பவர்களை பிடித்து பேட்டி வெளியிட்டு விற்பனைக்கு வழிகோளுகிறது. இப்போது நடந்து முடிந்த தேர்தலில் கூட அவர் என் மன்ற கொடியை பயன் படுத்த கூடாது என்று அறிவித்திறுப்பது சரிதான் எனினும் மன்றத்தில் இருப்பவர்கள் தேர்தல் வேலை செய்யாமல் இருக்க அவரால் கட்டளையிட முடியாது. அது அவர் அவர் விருப்பமாக இருக்கும் மேலும் ரஜினி ரசிகர்களை பொறுத்தவரை தலைவர் என்ற ஒருவர் சொல்வதை தவிர வேறு யாரையும் நம்புவதில்லை என்ற பிம்பம் உடைந்துபோனதாகவே தெரிகிறது. அதனாலேயே குரூப்( இதென்ன காங்கிரஸை விட மோசமால்ல இருக்கு)போஸ்டர் அடிக்கிறார்கள்" சந்திரமுகி" வெற்றியில் சுகம் கண்டுவிட்ட அவர் இனியும் வாய்ஸ் கொடுப்பது வேண்டாத வேலை என்பதை தெரிந்தே வைத்திருக்கிறார். பாபா படுத்துக்கொண்டபோது " நான் யானை யில்ல குதிர " என்றார். அவருக்கும் அவர் ரசிகர்களுக்கும் பொதுமக்களுக்கும் ஒன்று தெரியவேண்டும்" ரேஸில் ஓடிக்கொண்டிருந்தால்தான் குதிரை இல்லாவிட்டால் அது குதிரை யில்லை ....தை" இத்தனை தூரம் ரசிகர்கள் ஆவலுடன் இருந்தாலும் நேரடி அரசியல் அவருக்கு ஏனோ பயமாகவே இருக்கிறது, காரணம் தனது சினிமா முகம் அரசியலில் இரங்கிய பிறகு சேதப்படுத்தப் பட்டால் என்னாவது என்ற பயம் " ஒரு விஷயத்தில் விஜயகாந்த் ரஜினியை விஞ்சுகிறார் அரசியலாக இல்லாத ரஜினி மன்றம் குரூப் போஸ்டர் அடிக்கிறது ஆனால் அரசியல் இயக்கமான விஜயகாந்த் குரூப் இல்லாமல் செயல்பட முடிகிறது

அதே போல் பத்திரிகைகள் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும் அரசியலுக்கு ரஜினி வந்துவிட்டால் மட்டும் தமிழகம் தேன்மழையில் நனையப்போவதில்லை பத்தோடு பதினொன்று அவ்வளவே அவரின் ரசிகர்களை பேட்டிகண்டு பத்திரிகையின் பக்கங்களை வீனாக்காது மக்களுக்கு பயனுள்ள செய்திகளை வெளியிடலாம் மேலும் இதில் ஒரு குழப்பம் தற்போது " ரஜினியும் அரசியலும்" செய்திகளை சினிமா பகுதியில் வெளியிடுவதா? அல்லது அரசியல் பகுதியில் வெளியிடுவதா?.....

4 comments:

Anonymous said...

சரியா சொன்னிங்க அவர் ஒரு 0 அவருடைய முதலிடு நம் மானிலத்திலும் 0 அதுதான் உன்மை.

Maha said...

nice ..have also blogged about the same..

Anonymous said...

சிவாஜி வரட்டும் மாய பிம்பமா ?
விஷ்வரூபமா அப்போது தெரியும்.
தமிழ் நாட்டின் தலைவிதையை எழுதப்போகும் எங்கள் தலைவனை கேலி செய்பவர்கள் தலை கவிழும் நாள் தொலைவில் இல்லை.

ரஜினிராஜா
தலைவர்
ஏ.வி.எம் சிவாஜி ரசிகர் மன்றம்
தாம்பரம் கிழக்கு.

உடல் மண்ணுக்கு !
உயிர் ரஜினிக்கு !

Unknown said...

//சிவாஜி வரட்டும் மாய பிம்பமா ?
விஷ்வரூபமா அப்போது தெரியும்.
தமிழ் நாட்டின் தலைவிதையை எழுதப்போகும் எங்கள் தலைவனை கேலி செய்பவர்கள் தலை கவிழும் நாள் தொலைவில் இல்லை.//


ஆமா ஆமா அந்தா மாயும் பிம்பத்துக்குத் தான் நானும் காத்திருக்கேன்... இப்படி நடிகன் கையில் நாட்டைக் கொடுக்க நினைக்கும் உங்களை போல் ரசிகனால் தான் இன்னும் தமிழ் நாடு சினிமா பின்னால் பைத்தியம் பிடித்து அலைகிரது.... அவருக்கு தலையில ஒன்னுமில்லேன்னு கேள்விப்பட்டேன் அவரு எப்படி தமிழன் தலைவிதியை நிர்ணயிப்பார்?