Thursday, May 25, 2006
முகமூடிகள் வேண்டாம்
இட ஒதுக்கீடும் வலைப் பதிவு விவாதங்களும்!
வலைப்பதிவில் கடந்த சில வாரங்களாக மிகப்பெரிய விவாதம் இட ஒதுக்கீடு தொடர்பாக தொடர்ந்து பதிவுசெய்யப் பட்டு வருவதை அனைவரும் அறிவோம். இதில் ஆரோக்கியமான விவாதங்கள் பலவும் சில விதண்டாவாத கேள்விக் கனைகளும் தொடர்ந்து அறங்கேற்றப்பட்டு வருகின்றன
எடுத்துக்காட்டாக குழலியின் பக்கம். அதில் அவர் ஆதரவாக தொடுத்துள்ள வாதத்திற்கு சிலரின் கேள்விகள் உண்மையில் குழலி யின் வாதங்களுக்காக அல்லாது அவரை நேரடியாக தாக்கும் விதத்தில் மறுமொழியிடப் படுகின்றன. என்னவோ இடஒதுக்கீட்டுக்கு அவர் குரல் கொடுப்பதால் தங்களின் எதிர்கால சந்ததியே பாதிக்கப் படும் என்பதுபோல். உண்மையில் அவரை கேள்வி கேட்பவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.
ஆனால் புறிந்துகொள்ள மறுக்கும் விதத்தில் முன்னறே தொடுக்கப்பட்ட மறு மொழிகளின் பால் அவரால் வைக்கப்பட்ட பதில்களில் இருந்து கேள்விகள் கேட்கப்படுவது கேலிக்கூத்தாக இருக்கிறது. மேலும் கேள்வி கேட்பவர் பதில் சொல்பவரிடம் இருந்து பதிலை பெறும் உத்தேசம் ஏதுமின்றி அவரை சரணடைய வைக்கவேண்டும் என்பதிலேயே குறியாக இருக்கிறார்கள். இல்லாவிட்டால் இருக்கவே இருக்கிறது சொந்த வலை.
அதில் பெயரை க் குறிப்பிடாது சில ஆட்சேபனைக்குறிய கருத்துக்களை எழுதுவது என பிரச்சணை உருவான தளத்தில் இருந்து அதை வேறு மட்டத்திற்கு நகர்த்தி செல்லுகின்றனர். இனைய பதிவுகள் கருத்து சுதந்திரத்தின் இருப்பிடமாக இருக்கிறது என்பது எத்தனை தூரம் உண்மை என்பது அனைவரும் அறிந்ததே. எளிதில் பதிவர் வட்டத்தில் பிரபலமாக வேண்டும் என்பதற்காக என்ன வேண்டுமானாலும் தாக்கி எழுதலாம் என்றால் சிலர் முகமூடி அனிந்துகொண்டு எத்தனை கவிதை வேண்டுமானாலும் எழுதலாம். உண்மையில் இனி இனையத்திற்கும் கடவுச்சீட்டு அளித்தால் தான் சில முகமூடிகளை நம்மால் கண்டுகொள்ள முடியும். அதுகூட அவரின் கருத்துக்கு மதிப்பளிக்க வேண்டும் என்பதில் எந்த மேல்கருத்தும் இருக்கமுடியாது. ஆனால் என்னுடைய கருத்துக்களின் மேல் உனக்கு கேள்வி கேட்க்க உனக்கு எத்தனை உரிமை இருக்கிறதோ அதே அளவு உரிமை உன்னை கேட்பதற்கும் எனக்கு இருக்கிறது என்பதில் உறுதியுடன் இருந்தால் ஒழிய நம்மால் ஒரு ஆரோக்கியமான விவாதத்தில் பங்குபெற அல்லது பதிலளளிக்க முடியாது போகும்.
இட ஒதுக்கீடு தேவையா இல்லையா என்று தொடங்கும் எத்தனையோ விவாதங்கள் முடிவில் நீ பெரியவனா அல்லது நான் பெரியவனா? எனும் போக்கில் இட்டுச் செல்கின்றன. இதில் கருத்தொற்றுமை ஏற்படும் வரை விவாதங்களும் விதண்டாவாதங்களும் தொடர்ந்துகொண்டுதானிருக்கும்.
விதண்டா வாதங்களை வளர்த்து போலி டோண்டுக்கள் ஆதிக்கம் நிறைந்த தளமாக வலைப்பூக்களை மாற்றுவதில்லை நமது நோக்கம். ஒருவரைப் பற்றி தனிப்பட்டதாக்குதலில் இறங்குவது தான் நோக்கமென்றால் முகமூடிகளை கழட்டி எறிந்துவிட்டு அரசியல் மேடைகளில் பேசப்போகலாம். அம்மாக்களும், அய்யாக்களும் அதற்க்குத்தான் ஆள்தேடிக் கொண்டிருக்கிறார்கள்.
இந்தப் பதிவின் மூலம் நான் குழலிக்கோ பிறருக்கோ ஆதரவு தெரிவிப்பதாக எண்ணவேண்டாம். ஆரோக்கியமான கருத்து தளங்கள் பல உருவாக்கப் பட வேண்டும் என்பதற்க்காகவே என் பதிவின் நோக்கம்.
பிறகு. பா.ம.க. தி.மு.க. அ.இ.அ.தி.மு.க. போன்ற கட்சிகளுக்கு ஆதரவாக எவரேணும் கருத்து தெரிவித்திருப்பின் அதை மறுக்கவோ ஆதரிக்கவோ அனைவருக்கும் உரிமை உண்டு ஆனால் அது அவரவர் தெரிவிக்கும் கருத்துக்களுக்காக இருக்கவேண்டுமேயன்றி அவைசார்ந்திருக்கும் கட்சிகளுக்காக இருப்பது என் அளவில் அநாகரீகமாக தோன்றுகிறது. இதன் மூலம் ஒருவரின் முகவரி சாதி அல்லது கட்சி முத்திரை குத்தப்படுகிறது.
இது நாகரீகம் பேசும் கனிணியுலக நண்பர்கள் செய்வது மேலும் வியப்பளிக்கிறது. நீஆதரிக்கும் கட்சி எனக்கு பிடிக்கவில்லையா இந்தா பிடி சாபம் என்று அந்த கட்சி சார்ந்தவர்கள் மீதான தனிநபர் விமர்சணங்கள் மறுமொழியிடப்படுகின்றன. இது சரியான விவாதமே அல்ல.
இப்படித்தான் திருமதி குஷ்பு சுந்தரின் கருத்தும் திரு.தங்கர்பச்சானின் கருத்தும் தவறாக புரிந்துகொள்ளப்பட்டு தனிநபர் தாக்குதலில் முடிந்தது. குஷ்புவின் கருத்துக்களுக்கும் தங்கர்பச்சானின் கருத்துக்களுக்கும் எதிர்ப்பு தெரிவிப்பதை விடுத்து தனிநபர் தாக்குதலில் இறங்கினர். குஷ்புவின் கருத்துக்கு ஆதரவு தெரிவித்த சுஹாசினிக்கும் அதே கதி. கருத்து சுதந்திரம் என்பது பிடியற்ற கத்தி. இரண்டு புறமும் குத்தவல்லது கவனம் நண்பர்களே
கடைசியாக
"கருத்துக்களுக்கு உங்கள் விமர்சணங்களை தெரிவித்து மறுமொழி யிடுங்கள் .கருத்து சொன்னவருக்கல்ல"
Subscribe to:
Post Comments (Atom)
4 comments:
எல்லாம் சரி தான். அப்புறம் எதுக்காக உங்க பதிவிலே 'அநாநிமஸ்' 'other' ஆப்ஷனை வெச்சிருக்கீங்க? என்னைக்காச்சும் நாம யாரயாச்சும் திட்டணும்னா பயன்படும்னா? முதல்ல அதை தூக்கிட்டு வந்து ஊருக்கு உபதேசம் பண்ணுங்க ராசா.
- அன்புள்ள அநாநிமஸ்
சரியான சிந்தனை. ஒருவரின் கருத்தை அவர் சார்ந்த சாதி, மதம் , கட்சியால் ஏற்பட்டதாக முன்முடிவு செய்து அவரது கருத்தை எதிர்ப்பதை விட்டு பிறப்பையும் பிடிப்பையும் எதிர்ப்பதே நடக்கிறது.
அனேகமாக நீங்கள் விடாது சிகப்பு, முகமூடி பதிவுகளை படித்து நொந்து போயிருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன்...
அன்புள்ள அனானிமஸ் அது எனக்காக வைத்ததல்ல .. உங்களை போல் அனானிமஸ் களுக்காக:))
//விடாது சிகப்பு, முகமூடி பதிவுகளை படித்து நொந்து //
அதெல்லாம் ஒன்னுமில்ல லக்கிலுக் சும்மா வலைக்கு என்னாலான கருத்து.. இதுவேர யாராவது என்ன மசாலா பதிவுன்னு சொல்லிட்டா?
Post a Comment