Saturday, May 27, 2006

கருணாநிதி, ஜெயலலிதா நேரடி வாக்குவாதம்



2 ஏக்கர் நிலம் எப்போது?: முதலமைச்சர் கருணாநிதி, ஜெயலலிதா சட்டசபையில் நேரடி வாக்குவாதம் சென்னை, மே.
27-: நிலமற்றவர்களுக்கு 2 ஏக்கர் நிலம், தொடர்பாக முதலமைச்சர் கருணாநிதிக்கும் ஜெயலலிதாவுக்கும் சட்டசபையில் வாக்குவாதம்.
சட்டசபையில் நேற்று அ.தி.மு.க.-காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் இடையே மோதல்- கைகலப்பு ஏற்பட்டது. இதையடுத்து அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூண்டோடு வெளியேற்றப்பட்டனர். அதோடு இந்த கூட்டத்தொடர் முழுவதுக்கும் `சஸ்பெண்டு' செய்யப்பட்டனர். இதற்கிடையே அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் வெளியேற்றப் பட்டதை கண்டித்து முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா சட்டசபைக்கு தன்னந்தனியாக செல்லப்போவதாக நேற்று அறிவித்திருந்தார். விவாதம் தொடர்பாக முழு தகவல் களையும் அவையில் வெளியிடப்போவதாக தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் ஜெயலலிதா கோட்டைக்கு வந்தார். வருகை பதிவேட்டில் கையெழுத்திட்டார். பின்னர் சட்டசபையில் கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது விவாதம் நடந்தது.
அப்போது ஜெயலலிதாவுக்கும், முதல்-அமைச்சர் கருணாநிதிக்கும் நேரடியாக வாக்குவாதம் நடந்தது. அதன் விவரம் வருமாறு
:-(கமெண்டு நம்மளுதுங்க)
ஜெயலலிதா:- அரசியலில் என்னை உருவாக்கிய எம்.ஜி. ஆரை வணங்கி உரையை தொடங்குகிறேன். என்னை வெற்றிபெறச்செய்த ஆண் டிப்பட்டி தொகுதி வாக்கா ளர்களுக்கு முதலில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். ஆளுனர் உரையில் பல தவறுகள் இருக்கிறது. எனக்கு பேசுவதற்கு
30 நிமிடம் ஒதுக்கியது போதாது.( போன தடவ அப்பிடிதான் எல்லாறுக்கும் நேரம் ஒதுக்குனீங்க)ளாஆளுனர் உரையில் நிலமற்றவர்களுக்கு
2 ஏக்கர் நிலம் வீதம்
50 லட்சம் ஏக்கர் நிலம் கொடுப்பதாக குறிப்பிடப் பட்டு உள்ளது. அதை எந்த அடிப்படையில் கொடுக்க முடியும். தமிழ்நாட்டில் அரசுக்கு சொந்தமான
3 லட்சம் தரிசு நிலம் தான் உள்ளது. தனியாரிடம்
46 லட்சம் தரிசு நிலங்கள் இருக் கிறது. அப்படி இருக்கும் போது எவ்வாறு நிலமற்றவர்களுக்கு நிலம் கொடுக்க முடியும்.
(உடனே அமைச்சர் பொன்முடி குறுக்கிட்டு பேச எழுந்தார்)
அதற்கு
ஜெயலலிதா ‘‘நீங்கள் உட்காருங்கள், நான் இன்னும் சொல்லி முடிக்கவில்லை’’ என்றார்.(இப்படித்தான இருக்கும் போனதடவ )
சபாநாயகர்:- தவறுகளை சுட்டிக்காட்டும் போது அமைச்சர்கள் பதில் சொல்ல வேண்டும்.
அமைச்சர் அன்பழகன்:- நீங்கள் ஏற்கனவே முதல்- அமைச்சராக இருந்தவர். அவை மரபு நன்றாக தெரியும். இப்போது உறுப்பினராக இருக்கிறீர்கள். உறுப்பினர்கள் கூறும் தவறை மறுக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டால் எழுந்து மறுப்பு சொல்ல அமைச்சர்களுக்கு உரிமை உண்டு.
ஜெயலலிதா:- நான் சொல்லி முடித்த பின்பு தான் மறுக்க வேண்டும்.(சரிங்க டீச்சர்)
அரசுக்கு சொந்தமாக
3 லட்சம் ஏக்கர் தரிசு நிலம் உள் ளது. தனியாருக்கு சொந்தமாக
46 லட்சம் ஏக்கர் தரிசு நிலம் உள்ளது. ஏழைகளிடம் தரிசு நிலங்கள் மேம்படுத்தப்படாமல் இருக்கிறது.(இன்னைக்கு பூரா இத எத்தன தடவ சொல்லுவீங்க)
முதல்-அமைச்சர் கருணாநிதி:- சில நேரங்களில் குறுக்கிட வேண்டிய அவசியம் உள்ளது. தாங்கள் எப்படி குறுக்கிடுவீர்கள் என்பதை நான் அறிவேன், நாடு அறியும். தேர்தல் அறிக்கையில் அரசு கைவசம் உள்ள இடம், தனியார் கைவசம் உள்ள இடம் என்று நாங்கள் தனியாக குறிப்பிடவில்லை.(தலைவரு இன்னும் கண்ணாடி ஒடஞ்சத மறக்கல )
50 லட்சம் ஏக்கர் நிலத்தை மேம்படுத்தி கொடுப்போம்.
ஜெயலலிதா:- எனக்கு 2 சந்தேகங்கள் எழுகின்றன. (போச்சுடா)
46 லட்சம் ஏக்கர் தனியார் நிலத்தை எப்படி பகிர்ந்து கொடுக்கப்போகிறீர்கள்?
கருணாநிதி:- ஏழைகளிடம் இருந்து தரிசு நிலத்தை எடுத்து அதை மேம்படுத்தி அந்த ஏழைகளுக்கே கொடுப் போம்.
ஜெயலலிதா:- உழவர் பாதுகாப்பு திட்டத்தின் மூலம் கணக்கெடுத்ததில் நிலமற்ற ஏழைகள் 86 லட்சம் பேர் உள்ளனர். முதல்-அமைச்சர் அறிவித்தபடி
2 ஏக்கர் நிலம் எப்படி தர முடியும்.
86 லட்சம் பேருக்கு கொடுக்க வேண்டும் என்றால் ஒரு கோடியே
72 லட்சம் ஏக்கர் நிலம் கொடுக்க வேண்டும். எங்கேயிருந்து கொடுக்கப்போகிறீர்கள்.(அம்மா தாயே போதுமே)
அமைச்சர் அன்பழகன்:- விவசாயிகள் அத்தனை பேருக்கும் கொடுக்கவில்லை. நிலமற்ற ஏழைகளுக்கு மட்டும் கொடுக்கிறோம். கருத்து விளக்கம் இல்லாததன் விளைவு இப்படி கேட்கிறீர்கள்.
ஜெயலலிதா:- வாக்குறுதியை கொடுத்துவிட்டு இப்போது முடியாது என்று நழுவ பார்க்கிறீர்கள்.(கீ கீ கீ ... கிளிதாங்க கத்துது)
அமைச்சர் பொன்முடி:- தேர்தல் வாக்குறுதிபடி
50 லட்சம் ஏக்கர் நிலம் பண்படுத்தி கொடுக்கப்படும். எதையும் தெள்ளத்தெரிந்து ஆராய்ந்து சொல்லும் முதல்வர் தான் கலைஞர்.
ஜெயலலிதா:- கருத்து பிழை இருக்கிறது. அதனால் வாக்குறுதியை நிறைவேற்ற முடியாது. தி.மு.க.வின் இன்னொரு வாக்குறுதியான கூட்டுறவு கடனை தள்ளுபடி செய்து அறிவித்து இருப்பது பதவி ஏற்பு விழாவில் முதல்வர் கையெழுத்திட்டுரூ.
6,866 கோடி கடன்களை, தோராயமாக சொல்லப் போனால் ரூ.
7 ஆயிரம் கோடி கடன் தள்ளுபடி செய்யப் பட்டுள்ளது. நாணயமாக கூட்டுறவு கடனை திருப்பி செலுத்தியவர்களுக்கு பணம் திரும்ப கொடுப்பீர்களா? அதுபோன்று ரூ.
500 கோடி கூடுதலாக ஒதுக்கீடு செய்ய வேண்டும்.
குறுவை சாகுபடிக்காக ஜூன்

12-ந் தேதி மேட்டூர் அணை திறக்கப்படுவது வழக் கம். விவசாயிகளுக்கு ரூ.
1000 கோடி கடன் வழங்குவதாக அமைச்சர் கோ.சி.மணி கூறி யுள்ளார். குறுவை சாகுபடி தொடங்கப்பட்டு உள்ளது. அப்படி இருக்கும் போது எப்படி விவசாயிகளுக்கு ரூ.
1000 கோடி கடன் கொடுக்க போகிறீர்கள். ஏற்கனவே தொடக்க கூட்டு றவு வங்கிகள் நிதி இல்லாமல் செயல்பட முடியவில்லை. கடன் தள்ளுபடி அறிவிப்பு வந்த நாள் முதல் விவசாயிகள் கடனை திருப்பி கொடுக்க மறுத்து வருகிறார்கள். கூட்டுறவு பாங்கிகள் விவசாயி களுக்கு கடனாக
70 சதவீதம் கொடுத்து இருக்கிறது. இந்த நிலையில்
7,500 கோடி வங்கி களுக்கு கொடுத்தால் தான் திட்டத்தை நிறைவேற்ற முடியும்.
கூட்டுறவு வங்கிகளுக்கு நபார்டு வங்கி கடன் வழங்கு கிறது. நபார்டு வங்கிக்கு ரிசர்வ் பாங்கி கடன் கொடுக்கிறது. அதனால் விவசாயிகளுக்கு கடன் கொடுப்பதற்கு நபார்டு வங்கியிடம் அனுமதி பெறப்பட்டதா? எப்போது பெறுவீர்கள். டெல்டா விவசாயிகள் பெரு மளவில் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். கூட்டுறவு வங்கிகளில் மட்டுமல்ல தேசிய வங்கிகளிலும், நிலவள வங்கிகளிடமும், வணிக வங்கிகளிடமும் கடன் பெற்று இருக்கிறார்கள்.(ஹம்மாடி கொஞ்சம் மூச்சு விடுங்க அப்புறம் பேசலாம்)
அந்த வங்கிகளில் வாங்கிய விவசாயிகள் கடனை தள்ளுபடி செய்வீர்களா?
அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன்:- நீங்கள் எல்லா வங்கிக்கும் வட்டியை தள்ளுபடி செய்தீர்களா கூட்டுறவு வங்கிக்கு மட்டும் தானே வட்டி தள்ளுபடி செய்தீர்கள்.
அமைச்சர் அன்பழகன்:- விவசாயிகள் விவசாயத்திற்கு வாங்கிய கூட்டுறவு கடன்கள் மட்டுமே ரத்து செய்யப்படும். மாமன்-மச்சான் வாங்கிய கடன்களை ரத்து செய்ய முடி யாது.
ஜெயலலிதா:- அமைச்சர் ஜோக்காக பேசி சேம்சேடு கோல் அடிக்கிறார். மாமன்- மச்சான் கடனை தள்ளுபடி செய்ய நான் கேட்கவில்லை.(ஆமா ஆமா ஒங்களுக்கு அதெல்லாம் ஏது ஒரே ஒரு மகன் மட்டுந்தான)
அமைச்சர் அன்பழகன்:- சிறு குறு விவசாயிகள் கடன் களை தள்ளுபடி செய்வோம் என்றோம். இந்த சலுகை நிலச் சுவான்தார்களுக்கு இல்லை. கூட்டுறவு வங்கியில் கடன் வாங்கிய பெரிய பெரிய விவசாயிகள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். கூட்டுறவு பாங்கியில் கடன் பெற்றவர்கள் ஏழைகள் மட்டுமல்ல. தேசிய வங்கியில் கடன் பெற்ற டெல்டா விவசாயிகள் உண்மையாக கடன் பெற்ற வர்கள். அவர்களுக்கு கடனை தள்ளுபடி செய்ய வேண்டும்.
அமைச்சர் ஆற்காடு வீராசாமி:- கடந்த ஆட்சியில் அவர்களுக்கு வட்டி தள்ளு படி செய்யப்பட்டு இருந்தால் கடனும் தள்ளுபடி செய்யப்படும்.
ஜெயலலிதா:- தேர்தல் அறிக்கையில் கிலோ ரூ.
2-க்கு அரிசி வழங்கும் திட்டம் முழுக்க முழுக்க மாநில அரசினுடையது. அதற்கு மத்திய அரசு உதவுவதாக மத்திய மந்திரி சிதம்பரம் உத்தரவாதம் அளிக்கவில்லை.(வடைய சாப்பிட தந்தா நீங்க அதுல ஓட்டைய எண்ணுறீங்க)
ஜெயலலிதா:- நீலகிரி மாவட்ட சிறு தேயிலை விவ சாயிகளுக்கு இழப்பு ஏற்பட்டு உள்ளது. இதுபற்றி ஆளுனர் உரையில் உண்மைக்கு மாறாக கொடுக்கப்பட்டுள்ளது. கடந்த ஆட்சியில் இந்தியாவின் வளர்ச்சி விகிதத்தில் தமிழ்நாட் டின் வளர்ச்சி விகிதம் அதிக அளவில் இருந்தது. நான் கொண்டு வந்த இலவச சைக்கிள் திட்டம் மாநில அரசின் திட்டம். கவர்னர் உரையில் இதற்கு மத்திய அரசு நிதி ஒதக்கியுள்ளது என்று குறிப்பிடப்பட்டு உள்ளது. மாநில அரசு சிறப் பாக செயல்பட்டால் ஒரு குறிப்பிட்ட தொகையைபமத்திய அரசு கொடுப்பது வழக்கம். ஆனால் இந்த திட்டத்துக்கு மத்திய அரசு உதவி அளிக்கவில்லை. அப்படி கொடுத்து இருந்தால் மற்ற மாநிலங்களிலும் இந்த திட்டம் இருந்து இருக்கும் அல்லவா? இது மத்திய அரசின் திட்டம் அல்ல.
கடந்த ஆட்சியில் மத மாற்ற தடை சட்டம் கொண்டுவரப் பட்டது. அந்த சட்டம் திரும்ப பெறப்பட்டது. அதற்கான ஒப்புதல் சட்டசபையில் பெறப்பட்டும் சட்டம் ரத்தாகாமல் உள்ளது என்று தேர்தல் அறிக்கையிலும், பிரசாரத் திலும் கூறினீர்கள். ஆனால் அந்த சட்டத்தை நீக்க மீண்டும் சட்டசபையில் மசோதா கொண்டு வருவதாக ஆளுனர் உரையில் கூறப்பட்டுள்ளது. இது இறந்து போன ஒருவரது பிரேதம் அடக்கம் செய்யப்பட்டு பின்னர் அவர் சாகவில்லை, உயிரோடு இருக்கிறார் என்று பிணத்தை தோண்டி உயிர் இருக்கிறதா? என்று பார்ப்பது போல் ஆகும்
.(டாக்டர் செயா அம்மா வாளுக)
கருணாநிதி:- பிரேதம் பற்றி அம்மையார் சொல்கிறார். சாவில் சந்தேகம் இருந்தால் அதையும் செய்து தான் பார்ப் போம்.
ஜெயலலிதா:- அவசர நடைமுறை சட்டம் மீண்டும் உயிர்பெறாது. ஒரு சட்டம் கொண்டு வந்து அதை திரும்ப பெற்றால் சபையில் விவா தித்து ஒப்புதல் பெற அவசியம் இல்லை என்று சுப்ரீம் கோர்ட்டு கூறியுள்ளது.
கருணாநிதி:- சுப்ரீம் கோர்ட்டு சொல்லி இருந்தாலும் கூட மீண்டும் சட்ட துறையில் வைத்து உறுதிப்படுத்துவதில் தவறு இல்லை. சந்தேகத்தை போக்க சட்டசபையில் வைத்து நிறைவேற்றுவதிலஞ தவறு இல்லை.
ஜெயலலிதா:- சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை முதல்வர் சரியில்லை என்கிறார்.(அப்ப ஒங்கள பத்தி கோர்ட்டு சொன்னது எல்லாம் நெசந்தானா)
கருணாநிதி:- சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு சரியில்லை என்று முன்னாள் முதல்- அமைச்சர் கூறுவது அவர் வகித்து வந்த பதவிக்கு அழகல்ல.
ஜெயலலிதா:- சிறுபான்மை யினரை திசை திருப்புவதற்காக கட்டாய மதமாற்ற தடை சட்டம் அமலில் இருப்பதாக கூறினீர்கள். அந்த சட்டம் அமலில் இல்லை. தெரிந்தே கூறி ஆளுனர் உரையிலும் குறிப்பிட்டு இருக்கிறீர்கள். நடைமுறையில் உள்ள சட்டத்தை ரத்து செய்த பிறகு மீண்டும் அதே சட்டத்தை ரத்து செய்ய மசோதா கொண்டு வர தேவையில்லை.
2004-க்கு பிறகு கட்டாய மதமாற்ற தடை சட்டம் அமலில் இல்லை. இத்துடன் என் உரையை முடித்துக் கொள்கிறேன்.(இத நீங்க நேத்தே செஞ்சிருந்தா ஒரு மைக்கும் மிச்சம் . ஒங்க புள்ளைகளும் ஒழுங்கா உள்ளேன் ஐயா போட்டுருக்கும்)
இவ்வாறு ஜெயலிலதா பேசினார்.ஜெயலலிதா

10.22 மணிக்கு பேச்சை தொடங்கினார்.
11 மணிக்கு பேச்சை முடித்தார். சிறிது நேரம் அவையில் உட்கார்ந்து இருந்து விட்டு புறப்பட்டுச்சென்றார். நன்றி- விகடன்

11 comments:

theevu said...

//(தலைவரு இன்னும் கண்ணாடி ஒடஞ்சத மறக்கல )//

:):)

VSK said...

விதியை மதியால் வெல்லலாம் என்பதற்கு இது ஒரு நல்ல உதாரணம்.

கலகம் செய்ததாகச் சொல்லி அத்தனை அதிமுக எம்.எல். ஏ.க்களையும் வெளியேற்றியது விதி என்னும் வடிவில் ஆவுடையப்பனும், அன்பழகனும்!

அன்று சட்டசபைக்குச் செல்லாத ஒரே எம்.எல்.ஏ.வாக இருந்ததால், அதிமுகவின் இருப்பை நிலைநாட்டியது, ஜெயலலிதாவின் மதி!

எப்படியோ, அவர் மாதிரி இல்லாமல், இவர் சபைக்குச் சென்றது மகிழ்ச்சியே!

நல்லதே நடக்கட்டும்!

இதிலும் குறை காணுவோரை என்ன சொல்ல!!

ஒரு முன்னாள் முதலமைச்சர் தனது தவறான முடிவை மாற்றி, கண்ணியமான ஒரு உரையை ஆற்றியிருக்கிறார்.

அதற்கு இன்னாள் முதலமச்சரும் மிகக் கண்ணியமான பதில்களைச் சொல்லியிருக்கிறார்!

இதனைப் பாராட்டுவதை விட்டுவிட்டு, பரிகாசம் செய்திருக்கும் உங்களை என்னவென்று சொல்ல!!

அது சரி, முன்னப் பின்னே செத்திருந்தாத்தானே சுடுகாடு தெரிஞ்சிருக்கும்!

குழலி / Kuzhali said...

கமெண்ட்ஸ் கலக்கல் :-) கலக்குங்க

Sivabalan said...

மகேந்திரன்,


கமென்டுகள் சூப்பர்..

கலக்கீடீங்க...

ஆமா, ஜெ தொடர்ந்து வருவாரா?

அப்பிடினா வி.காந்த் வேளை இல்லாமல் போயிரும் போல.

Anonymous said...

blog nalla thaan potrukinga

unga comment thaan sakikala

match aagala

adutha mura nalla try pannunga

சந்தர் said...

என்ன பண்றது ஐயா, ஜெயா அம்மாவுக்கு அவர்களது கூட்டத்தினருக்கிடையே தைரியசாலி என்று காட்ட வேண்டிய நிர்பந்தம். அதனால் தான் ஏதோ பேசிவிட்டு பதிலைக்கூட பெறாமல் ஓடிபோய்விட்டார்.

Unknown said...

//விதியை மதியால் வெல்லலாம்//
ரொம்ப சரியா சொன்னீங்க
எஸ்.கே.
அதென்ன //முன்ன பின்ன செத்தா சுடுகாடு// கொஞ்சம் விளக்குங்க ஒருவேள செயலலிதாவுக்கு சொன்னீங்களா? இந்த பதிவில் ஒரு முன்னாள் முதல்வர் என்ற முறையில் தான் கேட்டதை யே திருப்பி திருப்பி கேட்ட கிளி மாதிரி சொன்ன தால் தான் கமெண்ட் அடிக்கிற நெலம இல்லாட்டா நானும் பாராட்டுவேன் எனக்கென்ன அவங்க கூட சண்டையா? :))

நன்றி குழலி/
//சிவபாலன்// அவர் தொடர்ந்து வரவேண்டும் என்பதே அடியேன் மட்டுமல்ல அனைவரின் விருப்பமும் /அதெப்படி விஜயகாந்துக்கு வேல போகும் புள்ளி விபரமெல்லாம் யார் சொல்ரதாம்?

செல்வன்/why there is no comments on DMK side.
/ இது ஆரம்பம்தான் அங்கயும் வச்சிருக்கன் வேட்டு/

அனானிமஸ்//சகிக்கல// இனிமே நல்லா ட்ரை பன்னுரங்க

ப்ரதிமா//ஓடிப்போய்விட்டார்// ஆகா இது எனக்கு தோனாம போச்சே

Anonymous said...

http://manamay.blogspot.com/2006/04/blog-post_24.html

ஜெயலலிதாவ பத்தி இங்க போய் பாருங்க வாய்விட்டு சிரிக்கலாம்

நியோ / neo said...

மகேந்திரன்!

அருமையான 'கலாய்த்தல்'! தொடர்ந்து கலக்குங்க! :)

Unknown said...

Thanks neo and vote for my poll
and the readers recomend on" sattamanra sandiyarkal"

துபாய் ராஜா said...

///"ஜெயலலிதா:- சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை முதல்வர் சரியில்லை என்கிறார்.(அப்ப ஒங்கள பத்தி கோர்ட்டு சொன்னது எல்லாம் நெசந்தானா)"///

மகி!!மேட்டரை விட கமெண்டுகள்தான்
சூப்பரப்புபுபுபுபுபு!!!!!!