ஜூனியர் விகடனில் கருத்து தெரிவித்திருக்கும் துக்ளக் அதி புத்திசாலிகளின் தலைவர் திரு சோவுக்கு இந்த பாமரனின் சந்தேகங்கள் (எனது கேள்விகள் அடைப்புக்குள்)
‘‘ஒரு சமுதாயம் வளர வேண்டும், எல்லோருக்கும் சமூக நீதி கிடைக்க வேண்டும் என்றால் இட ஒதுக்கீடு விகிதத்தையும், இட ஒதுக்கீடு செய்யப்படும் துறைகளையும் படிப்படியாகக் குறைத்துக் கொண்டேதான் வர வேண்டும். (வளர வேண்டுமென்றால் கூட்ட வேண்டுமா குறைக்க வேண்டுமா?)
அதைவிட்டுவிட்டு மேலும் மேலும் இட ஒதுக்கீடு இல்லாத இடங்களில், குறிப்பாக தனியார் நிறுவனங்களிலும்கூட அதைப் புகுத்துவதும், இருக்கிற இடங்களில் புதிது புதிதாக சில சாதியினரை சேர்த்து இட ஒதுக்கீடு அளிக்க வகைசெய்வதும் கொஞ்சமும் சரியல்ல. (பின்னே அரசு வேலை கிடைப்பதற்க்குள் தான் எங்கள் ஆயுளே முடிந்துபோகிறதே இப்படி தர முடியாது என்று எந்த தனியார் நிருவனமும் சொல்கிறதா இதுவரை?)
இந்தக் கருத்து எல்லோருக்கும் ஏற்புடையதுதான். (யாருக்கு ? எதிர்ப்பாளர்களுக்கா?)
இருந்தாலும், இந்த இடஒதுக்கீட்டு முறையை எதிர்த்தால் ஓட்டு பறிபோய்விடுமோ என்ற பயத்திலேயே எல்லோரும் எதிர்க்கத் தயங்குகிறார்கள். (அதிமுக பிஜேபி கூடவா?)
இட ஒதுக்கீட்டின் மூலம் கிடைக்கிற பெருவாரியான இடங்களை& வசதியும், கல்வி அறிவும் படைத்த குடும்பங்களைச் சார்ந்தவர்களே பெற்றுவிடுவதால், உண்மை யாக யாருக்கு இட ஒதுக்கீடு தேவையோ அவர்களுக்கு அது கிடைக்காமல் போய்விடுகிறது. (இப்போதே இப்படியென்றால் இடஒதுக்கீடு இல்லாவிட்டால் என்னவாகும்?)
ஆக, கல்வி அறிவு பெறாத குடும்பங்களில் இருந்து வருகிற சிறுவர்களுக்கும், சிறுமிகளுக்கும் ஆரம்பத்தில் இருந்தே சிறப்பான கல்வியைக் கொடுப்பதுதான் இதற்கெல்லாம் சரியான வழி. இதற்காக மத்திய&மாநில அரசுகள் ரெஸிடென்ஷியல் பள்ளிகளைத் தொடங்க வேண்டும். அங்கெல்லாம் தகுதிபெற்ற ஆசிரியர்களை நியமித்து, இந்த சிறுவர்&சிறுமிகளுக்கெல்லாம் பயிற்சி அளிக்க வேண்டும். அப்போதுதான் அவர்கள் மற்றவர்களோடு போட்டிப் போடும் அளவுக்குத் தங்கள் தகுதியை வளர்த்துக் கொள்வார்கள். ஆரம்பத்திலிருந்தே மட்டரகமான கல்வியைக் கொடுத்து, அவர்களைத் தகுதியற்றவர்களாக்கிவிட்டு, அதன்பிறகு இடஒதுக்கீடு தருகிறேன் என்று சொல்வது, ஒரு மோசடி வேலை! இதுதான் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது.(நீங்கள் சொல்வதை பார்த்தால் இப்போது ஒதுக்கினால் கூட இன்னும் இருபது ஆண்டுகள் ஆகுமே அதுவரை?)
எப்படியாவது முலாயம் சிங் போன்றவர்களுக்குப் போய்க்கொண்டிருக்கும் பிற்படுத்தப்பட்டவர்களின் ஓட்டுகளைத் தங்கள் பக்கம் திருப்பிவிட வேண்டும் என்ற ஆசையில் காங்கிரஸ் கட்சியினர் உயர்கல்வியிலும் இட ஒதுக்கீடு என்று கோஷமெழுப்ப ஆரம்பித்திருக்கிறார்கள். இது ஓட்டுகளை மட்டும் மையமாக வைத்து நடத்தப்படும் நாடகமே தவிர, உண்மையான சமூக நீதிக்காக அல்ல. இதனை மக்கள் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும். (எங்களுக்கு புரிவதால்தான் கேட்கிறோம் வீனாக முலாயம் எதற்கு இங்கே?. வெறும் மூன்று சதவிகிதம் பேருக்கு ஐம்பது சதவிகிதம் இடஒதுக்கீடு போதாதா மீதமிருக்கும் இடத்தில் பிற்பட்டவர்களுக்கு ஒதுக்கினால் என்ன தவறு என்று பா.ம.க கேட்கிறதே? )
ஆனால், இடஒதுக்கீட்டுக்கு எதிர்ப்பாளர்கள் என்று சொல்லிக் கொள்பவர்கள், ஆர்ப்பாட்டங்கள் நடத்து வதையும், பொதுமக்களை சங்கடத்துக்கு உள்ளாக்குவதையும் என்னால் ஏற்க முடியவில்லை. அந்த அணுகுமுறை தேவை இல்லாதது. குறிப்பாக, டாக்டர்கள் வேலை நிறுத்தம் செய்வதென்பது கண்டிக்கத்தக்க விஷயம் மட்டுமல்ல... பொறுப்பில்லாத்தனமுமாகும்’’ (இதை ஏன் முதலிலேயே சொல்லவில்லை)
11 comments:
இந்த உளறல்களை கண்டுகொள்வதில்லை என்று வலைபதிவாளர்கள் சங்கத்தில் முடிவெடுத்தோமே? அந்த தீர்மான நகல் உங்களுக்கு கிடைக்கவில்லையா?
சோ எல்லாம் அறிந்தவர். பாமரன் பதில்களை ஏற்கமாட்டார்கள்.ஏற்றால் ஆதிக்கம் போய்விடும் என்பது சோ வகையாறாவிற்குத் தெரியும்.
பாமரனுக்கு நன்றி.
//தீர்மான நகல்// இல்லை வரவில்லை ஆனாலும் என் சந்தேகங்களை கேட்டுத்தானே ஆகவேண்டும்?
//ஆதிக்கம் போய்விடும்// அதற்க்காகத்தானே இத்தனைப் போராட்டமும்
Thalaivar Pamaranukku,
my questions(answeres?) to your questions...
>>(வளர வேண்டுமென்றால் கூட்ட வேண்டுமா குறைக்க வேண்டுமா?)
... if a backward community is improving, then some improved sections of that community dont need reservations , we have to find a way to remove the creamy layer of that community. and provide Reservations to the real backward section of that community.
so obviously the reservation percentage has to go down.
(பின்னே அரசு வேலை கிடைப்பதற்க்குள் தான் எங்கள் ஆயுளே முடிந்துபோகிறதே இப்படி தர முடியாது என்று எந்த தனியார் நிருவனமும் சொல்கிறதா இதுவரை?)
.. Recently Wipro Premji said so. He wants only best talent, so Reservation is out of question there. CII- industry forum also rejected the idea of reservation in Private institutions.
(இப்போதே இப்படியென்றால் இடஒதுக்கீடு இல்லாவிட்டால் என்னவாகும்?)
... Thalaiva,Cho did not say to remove reservation completely. Cho wanted that we optimise the procedure, so that the benefit reaches the needy,poor sections. for e.g. dont you agree that Marans do not need reservations?
.(நீங்கள் சொல்வதை பார்த்தால் இப்போது ஒதுக்கினால் கூட இன்னும் இருபது ஆண்டுகள் ஆகுமே அதுவரை?)
we have to work hard. It takes time. there is no shortcut to make our India as Superpower.but unfortunately politicians just eye vote bank.
(எங்களுக்கு புரிவதால்தான் கேட்கிறோம் வீனாக முலாயம் எதற்கு இங்கே?. வெறும் மூன்று சதவிகிதம் பேருக்கு ஐம்பது சதவிகிதம் இடஒதுக்கீடு போதாதா மீதமிருக்கும் இடத்தில் பிற்பட்டவர்களுக்கு ஒதுக்கினால் என்ன தவறு என்று பா.ம.க கேட்கிறதே? )
... Thalaiva, there are two things here.
1. The remaining 50% is for "OPEN" competion. Even SC/ST/OBC can get seats here. There is no "Reservation" for Forward castes in OC. saying that ,the 50% OC is reserved just for Forward caste, is ridiculous statement.
2. btw, all over india,the so called Forward Caste are over 20%. Not just 3 %.
i hope you get my points in right sense. just to make it clear, i am not against reservations. i just want that the benefits reach the needy.
Thanks & Regards
indian
எச்சட்டமோ,மாற்றமோ தான் சார்ந்த சாதிக்கு பக்கவிளைவுகளை ஏற்படுத்துமென்ற எண்ணம், "சோ" அவர்களுக்கு வந்து விட்டால்; வார்த்தை ஜாலம் போடத் தொடங்கிவிடுவார்.அதிலொன்று தான் இது..;
யோகன் பாரிஸ்
//if the bacward community improving// because wee need reservations reservation is a key factor for improving the backward community
//wipro premji said// wipro premji cannot give the the posting for all to whom need jobs from the backward community and it was a statement " i need my company quality only not for the peoples".
//maran do not need reservations// we know marans backround and sure he did not need reservation but we are not from maran family
//not 3 % 20 persent // ok i agree with u but why the 20%people did not share the 50% even the backward communities will compatite in the open quaota. but for the other 80% people need only 50% and how can they will share each other?.
// we have work hard// so i said we will work hard but where? because the backward community asking the reservations. they need places to work hard.
and i will tanks for ur comments in my comments section
with thanks
mahendhiran.p
anna pamaran anna
PADICHA NEENGALAI EPADI PESALAMA
ORUTHAN ENTRANCE CUTOFF 96.5% EDUPAN AVANUKU MEDICAL SEAT KEDAIKATHU...
ENORUTHAN 80% KEDAIKKUM AVANUKKU MEDICAL SEAT KEDAIKKUM.
96.% EDUTHAVAN KATHI ENA SOLLUNGA
ANNA PAMARAN ANNA.,
PADICHA NEENGALAI EPADI PESALAMA.,
MEDICAL ENTRANCE EXAMLA ORUTHAN 96.5% EDUPAN AVANUKKU MEDICAL SEAT KEDAIKATHU...,
ENORUTHAN 80% EDUPAN AVANUKKU MEDICAL SEAT KEDAIKKUM.,
ANTHA 96.5% EDUTHAVANUKKU VAZHI ....
KEATTA "RESERVATION"
EHANNA RAILWAY RESERVATIONA..
NERAYAA PATICHA ANONYMOUS ANNA NEENGA SOLRATHA PAATHA BACKWARD COMMUNITILA YAARUME 80% KU MELA VAANGARATHILIAYA ? AYYA NAANGA ANTHA 96.5 % ETUTHTHUPUTTU ITAM KITAIKKAATHA IRUKKAANE AVANUKKUTHTHAAN ITANGEKKURAM 20%IRUKKAVANUKKU MICHA ETATHTHA KODUTHTHA ATHULAYUM THAAN NEENGA KAIVAIKKIRIINGANNU KEEPINGA APPA 96.5% EDUKKA AAL IRUKKAANLA?
APPARAM ITHU RESERVATIONGA NEENGA SONNA MAARI RAILWAYLA RESRVATION ILLANNA ENNA AAGUM KAASIRUKKAVANA VITA THEMBIRUKKAVAN MUNNA POYDUVAN ATHAALA THAAN RESERVATION PURITHUNGKALA?
இந்தி பேசுவோருக்கு தமிழகத்தில் இடஒதுக்கீடு உண்டு; தமிழ் முற்பட்டோருக்கு இல்லை
அன்புள்ள அய்யா,
தற்போதைய தமிழக அரசின் இடஒதுக்கீடு கொள்கை தமிழ் என்கிற அடிப்படையில் அல்லாமல் வெறும் ஜாதி என்கிற அடிப்படையில் உள்ளது.
நீங்கள் பிற்பட்டோர் பட்டியலை பார்த்தால் தமிழ் தவிற்று பிறமொழிகள் பேசும் ஜாதிகள் உள்ளன.
இதில் இந்தி பேசும் முஸ்லிம்கள், ஸவுராஷ்டிரியர்கள்; தெலுங்கு பேசும் ரெட்டியார்கள்,நாயுடுகள், கன்னடம் பேசும் கவுண்டர்கள் ஆகியோர்க்கெல்லாம் இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது.
தமிழ் பிராமிணர்களை அயோக்கியர்கள் என கருதும் தி மு க இந்தி பேசும் வடக்கர்கள் வாக்குகளை பெற இந்தி மொழி தேர்தல் பிரசுரங்களை வெளியிட்டது.
தமிழகத்தில் தமிழ் பிராமணர்கள் தமிழர்கள் அல்ல என பிரச்சாரம் செய்கின்றன ப ம க, தி மு க ஆகியோர்.
கர்ணாநிதிக்கு தமிழ் பிராமணர்கள் வெறுப்பு இந்தி மொழிக்கு மேலானது போலுள்ளது.
எனது வகுப்பில் இந்தி பேசும் மாணாக்கர் விலைக்கொடுத்து OBC சான்றிதழ் வாங்கி அண்ணா பல்கலைக்கழகம் சேர்ந்தார். இந்தி/உருது மட்டும் பேசும் முஸ்லிம் தமிழகத்தில் ஜாதிகள் இடஒதுக்கீடு பெறுகின்றனர்.
சென்னை விமானகத்தில் தமிழ் ஊழியர்கள் அவ்வளவு இல்லை. எல்லாமே இந்தி பேசுபவர்கள் தான்.
தமிழக CBSE பள்ளிகள் இந்தி திணிப்பு தான்.
இந்தி, கன்னடம், தெலுங்கு பேசும் ஜாதிகள் வருக; தமிழ் பிரமாணர் ஒழிக என கொள்கை வைத்துள்ளது தற்போதைய இடஒதுக்கீடு சட்டம்.
கர்நாடகத்தில் கன்னடத்திற்கு பிரதானம் அளிக்கப்படுகிறது. கன்னட பிராமணர் கன்னடர் ஆவார். தமிழகத்தில் தமிழ் பிராமணர் வெளியாள் எனவு இந்தி, உருது, கன்னடம், தெலுங்கு ஜாதிகள் தமிழர்கள் என்கிற பெயரில் இடஒதுக்கீடு வாங்குகின்றனர்.
தமிழக தமிழர்களுக்கா வெறும் ஜாதி கணக்கில் உகுந்தவருக்கா?
சோ ஒரு அறிவுகெட்ட முண்டம். அவனை எல்லாம் மதித்து கேள்வி கேட்கிறீர்களே மகேந்திரன்?
Post a Comment