Tuesday, July 31, 2007

தராதரமில்லாத பதிவுகள்

கடந்த சில நாட்களாக தமிழ்மணத்தில் மொக்கை, கும்மிபதிவுகளுக்கு எதிராக "தரமான பதிவர்கள் என அறியப் பட்டவர்கள்" சொல்லும் கருத்துக்கள் விவாதத்துக்கு உரிய ஒரு விஷயமாக இருந்து வருகிறது. முதலில் தரமான பதிவு என்பதற்கு அளவுகோலாக எதைச் சொல்கிறார்கள் எனச் சொல்லுங்கள். பிறகு மற்ற பதிவர்களை தரமான பதிவு எழுதச் சொல்லலாம்.
ஒரு பதிவரை இதை இப்படித்தான் எழுதவேண்டும் என சொல்ல எந்த பதிவருக்கும் உரிமை இருப்பதாக நான் கருதவில்லை. என்னையும் இப்படித்தான் இதை இவை பற்றித்தான் எழுத வேண்டும் எனச் சொல்வதற்கு யாருக்கும் உரிமை இருப்பதாக நான் கருதவில்லை. அப்படிச் சொல்வது கூட நான் நம்பும் கருத்துரிமையை நீங்கள் மீறுவதாகத்தான் கருதுவேன்.
கும்மிப் பதிவுகள் மொக்கைப் பதிவுகள் எனத் தரம் பிரிக்க இங்கே யாருக்கு அதிகாரம் இருக்கிறது?. நடுநிலையாக எழுதுங்கள் எனச் சொல்பவர்களுக்கும் இது பொருந்தும். நடுநிலை என எதைச் சொல்கிறார்கள்?. "தினகரன் கருத்துக் கணிப்பும் 3 பேர் மரணமுற்ற விஷயத்தையும் நடுநிலையாக எப்படி எழுத முடியும்?" பத்திரிகை கணிப்பும் சரிதான் 3 பேர் அதனால் இறந்ததும் சரிதான் என்றா?.
இங்கே நடுநிலை, தரம் என்ற எதுவும் கண்ணுக்கு தெரியவில்லை. உங்கள் கண்ணுக்கு தரமான பதிவாக தெரியும் பல பதிவுகளை அதிகம் பேர் படிப்பதில்லை ஏன்பது உங்களுக்கு தெரியுமா? அற்புதமான எழுத்துக்கள் படைக்கும் பதிவர்களை ஊக்குவிக்கும் முகமாக நாம் என்ன செய்துவிடோம். மிஞ்சிப் போனால் ஒரு பின்னூட்டம்.?
ஆனால் கும்மிப் பதிவுகளை கூட்டமாகப் போய் கும்மி எடுக்கிறோம் ஏன். எல்லாம் ஒரு சந்தோஷத்துக்குத்தான். வலையில் எழுதிக் கிழிப்பதால் எல்லாம் இந்தச் சமூகம் திருந்திவிடும் என நீங்கள் எண்ணினால் அது உங்கள் கருத்துச் சுதந்திரம். நான் எழுதுவதால் எனது பதிவுகளை படித்து ஒரு தனி மனிதனிடத்திலாவது எனது எண்ணங்களின் பாதிப்பை , அது குறித்தான ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்த முடியும் என்றால் அதுவே எனது வெற்றி
என்பதாய் கருதுகிறேன் நான்.
உங்களை கும்மிப் பதிவுக்கு வாங்கள் எங்களோடு கும்மியடியுங்கள் எனச் சொல்ல எனக்கு எப்படி எந்த உரிமையும் இல்லையோ அதே போல இப்படி எழுது இதைப் பற்றி எழுது எனச் சொல்லவும் உங்களுக்கு எந்த உரிமையும் இல்லை.
ஒரு பதிவர் தொடர்ந்து மொக்கை போடுகிறார் (என்னையே எடுத்துக் கொள்ளுங்கள் அனல் பறக்கும் விவாதங்களுக்காக எனது பதிவுகள் எழுதப் பட்ட போது யாரும் விவாதத்துக்கு வந்ததாய் தெரியவில்லை விதிவிலக்கு ரஜினிகாந்த் பற்றிய பதிவுகள்" உடனே நாலு பதிவுக்களுக்கு லிங்க் கொடுத்து இங்கெல்லாம் விவாதம் நடக்கிறது பார் என சொல்லுபவரா நீங்கள் அந்த குறிப்பிட்ட பதிவுகளை தொடர்ந்து வாசித்துப் பாருங்கள்.
குறிப்பிட்ட நாலு பேர் மட்டும் தொடர்ந்து பின்னூட்டி விவாதம் நடந்துகொண்டிருக்கும் இப்படிச் செய்வதை விட யாகூ கான்பரன்ஸில் பேசிக்கொள்ளலாம்.
இன்னும் என்னைப் போல் பல பதிவுகளை படித்தும் விவாதம் எதிலும் பங்குபெறாமல் ஒர்துங்கி நின்று வேடிக்கை மட்டும் பார்க்கும் பதிவர்கள் எழுதும் பதிவுகளில் எக்காரணம் கொண்டும் பின்னூட்டக் கூடாது எனக் கொள்கை வைத்திருக்கும் அறிவுஜீவிப் பதிவர்களே. முதலில் தரமான பதிவு என்றால் என்ன என்று ஒரு விளக்கம் கொடுங்கள்.

19 comments:

ILA (a) இளா said...

//முதலில் தரமான பதிவு என்றால் என்ன என்று ஒரு விளக்கம் கொடுங்கள்//
Blogs are meant for freelance writings. it has no limitations, so as internet. Reader should aware of their readings

TBCD said...

அமாம்...அதெப்படி நீங்கள் (தரம் பரிப்பவர்கள்) எல்லாம் காலய்க்கலாம்..
நாங்க தான் கலய்க்கனும்....ஹி!ஹி!

TBCD said...

மொக்கைகளின் உரிமை போராளி அப்படின்னு ஒரு பட்டம் இருக்கு..யாருக்கு வேனும்..

கதிர் said...

தலைவா...

தூற்றுபவர்கள் தூற்றட்டும் அவர்களின் வார்த்தையை கட்டிலில் உட்கார்ந்து இம்சை செய்து கொண்ட்டிருக்கும் ரிட்டையர்ட் தாத்தா சொல்லுவதாக எடுத்துக்கொள்வோம்.

லக்கிலுக் said...

தரமான பதிவுகள் என்பதற்கு ஒரு அளவுகோல் எதுவும் இல்லை என்பது உண்மை தான். கும்மி அடிக்கும் பதிவர்களால் தரமான பதிவுகள் எழுத முடியாது என்பது ஒரு மாயை. அதே நேரத்தில் தரமான பதிவு எழுதுபவர்கள் என்று தங்களை தாங்களே சொல்லிக் கொள்பவர்களால் கும்மி அடிக்க முடிவதில்லை என்பது முற்றிலும் உண்மை. ஒழுங்காக கும்மி அடிக்கத் தெரியாதவர்களே தங்களை தரமான பதிவர்களாக சொல்லிக் கொள்கிறார்கள்.

கதிர் said...

//தரமான பதிவுகள் என்பதற்கு ஒரு அளவுகோல் எதுவும் இல்லை என்பது உண்மை தான். கும்மி அடிக்கும் பதிவர்களால் தரமான பதிவுகள் எழுத முடியாது என்பது ஒரு மாயை. அதே நேரத்தில் தரமான பதிவு எழுதுபவர்கள் என்று தங்களை தாங்களே சொல்லிக் கொள்பவர்களால் கும்மி அடிக்க முடிவதில்லை என்பது முற்றிலும் உண்மை. ஒழுங்காக கும்மி அடிக்கத் தெரியாதவர்களே தங்களை தரமான பதிவர்களாக சொல்லிக் கொள்கிறார்கள். //

கும்மி தத்துவ புத்தகத்தில் முதல் பக்கத்தில் இதை பொறித்து விடுமாறு
பணிவண்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

Anonymous said...

///தரமான பதிவுகள் என்பதற்கு ஒரு அளவுகோல் எதுவும் இல்லை என்பது உண்மை தான்.///

இதென்ன கொடுமை...நான் எழுதும் எல்லா பதிவும் தரமான பதிவுதான்...

//கும்மி அடிக்கும் பதிவர்களால் தரமான பதிவுகள் எழுத முடியாது என்பது ஒரு மாயை. ///

உண்மை...நாமும் தரமான கும்மியை கட் அண்ட் பேஸ்ட் செய்தோ அல்லது யோசிச்சோ எழுதமுடியும்...

உதாரணத்துக்கு இன்னைக்கு அலுவலகத்துக்கு வரும்போது லொக் என்று இருமல் வந்தது...

அதை நினைத்து அப்போதே ஒரு கவிதை சமைத்தேன்..ப்ளாக் இல்லாததால் எழுதமுடியவில்லை...இங்கே எழுதுகிறேன்...பாரும்..

ட்ரைவின் போது லொக்கென இருமல்.
ஹய்யோ..
மறந்துவிட்டோமே !!! (ஆச்சர்யக்குறீ)
பாத்ரூமில் சிகெரெட் பாக்கட்டை...!!


///அதே நேரத்தில் தரமான பதிவு எழுதுபவர்கள் என்று தங்களை தாங்களே சொல்லிக் கொள்பவர்களால் கும்மி அடிக்க முடிவதில்லை என்பது முற்றிலும் உண்மை. ஒழுங்காக கும்மி அடிக்கத் தெரியாதவர்களே தங்களை தரமான பதிவர்களாக சொல்லிக் கொள்கிறார்கள்////

சரியான கூற்று...(ரிப்பீட்டேய்...)

அப்படியே எனக்கு தோன்றிய ஒரு ஜோக்கையும் இங்கே போட்டுவிடுகிறேன்...வேறு வாய்ப்பு இல்லை இன்றைக்கு எழுது...(இதுக்குத்தான் கும்மி)

ரவி: யோவ் மகி என்னய்யா நெத்தியில கீறல்
மகி: ஷேவ் பண்ணும்போது வெட்டிக்கிட்டேன்
ரவி: ஷேவ் பண்ணும்போது எப்படிய்யா நெத்தியில வெட்டிக்கிட்ட
மகி: நெத்தியில அரிச்சுது..ப்ளேடால சொறிஞ்சேன்...

இந்த ஜோக்கை ஆனந்தவிகடனுக்கு அனுப்புவது உங்கள் இஷ்டம்...இதை வைத்து தனித்த மொக்கை போடுவதும் அப்படியே...

வாழ்க வளமுடன்...

கோபிநாத் said...

\\ஆனால் கும்மிப் பதிவுகளை கூட்டமாகப் போய் கும்மி எடுக்கிறோம் ஏன். எல்லாம் ஒரு சந்தோஷத்துக்குத்தான். \\

தலைவா...அருமையாக சொன்னிங்க....இதை தான் நாங்களும் சொல்லிக்கிட்டு இருக்கோம். ஆனா யாருக்கும் புரியவில்லை

ILA (a) இளா said...

ரவி, உங்க பின்னூட்டம் சூப்பர். அந்தக் கவிதையும், சோக்கும் சூப்பர்பு.

//இதென்ன கொடுமை...நான் எழுதும் எல்லா பதிவும் தரமான பதிவுதான்...//
இது ஜோக்கு இல்லியே..

Anonymous said...

supoooooooooooooor mast maja madi.

கப்பி | Kappi said...

ஆழ்ந்த செரிவுள்ள கருத்து! ஒவ்வொன்றும் முத்து!!
கன்னத்துல விழப்போது குத்து!!
கும்மிதான்யா நம்ம சொத்து!! :))))

Anonymous said...

தராத ரம்னா? அது என்ன ப்ராண்டு??

கோவி.கண்ணன் said...

//"தராதரமில்லாத பதிவுகள்" //

மதிப்பெண் நிறைய பெற்ற மாணவர்களை அறிவாளிகள் என்று நினைத்துக் கொள்வதும்...சிலர் கொடுக்கும் தர நிர்ணய சான்றிதழும் ஒண்ணுதான்.

:)

வெட்டிப்பயல் said...

பதிவும் சூப்பர், லக்கி/செந்தழல் ரவி பின்னூட்டங்கள் படு சூப்பர்...

Anonymous said...

சக பொரிக்கி குஞ்சுக்களால் மகி என்று கேவலமாக அழைக்கப்படும் கீழ மத்து முண்டமே,

நீ ஏன் தரத்தைப் பற்றி பேசற?நீ என்னிக்குமே கீழ்த்தரம் தான்.இதில் என்ன சந்தேகம்

வெற்றி said...

/* சொல்லும் கருத்துக்கள் விவாதத்துக்கு உரிய ஒரு விஷயமாக இருந்து வருகிறது. முதலில் தரமான பதிவு என்பதற்கு அளவுகோலாக எதைச் சொல்கிறார்கள் எனச் சொல்லுங்கள். */

நல்ல கேள்வி. ஒவ்வொருவரின் வாசிப்பு இரசனையும் மாறுபட்டது. எனக்கு மிகவும் நல்ல பதிவாகத் தெரியும் ஒரு பதிவு, மற்றொருவருக்குத் பிடிக்காததாக இருக்கலாம். எனக்குப் பிடித்த பதிவு அவருக்குப் பிடிக்கவில்லையென்பதெற்காக அவரை நான் வாசிப்பு இரசனையற்ற ஞான சூனியம் எனச் சொல்ல முடியுமா? அப்படிச் சொன்னால் அது என் அறியாமை.

என்னைப் பொறுத்த வரையில் தரமான பதிவென்பதற்கு அளவுகோல்கள்:
[1] ஆபாசமற்ற சொற்பிரயோகம்,
[2]தனிநபர் தாக்குதல் இல்லாமை

Unknown said...

இது தரமானது, இது தரமில்லைனு சொல்ல இங்கே அளவுகோல்லாம் இல்லே! அவங்கவங்களுக்குப் புடிச்சதை தெரிஞ்சத தட்டி உட வேண்டியதுதான்..

எந்தலையிலே துப்பாக்கி வச்சு மெரட்னாகூட எனக்கு மொக்கை போட தெரியாது (னு நினைக்கிறேன்). ஆனா சில பேரு மொக்க போட்ரத பாத்தா, நல்லாதான் இருக்கு.

நமக்கும் அப்பப்போ கொஞ்சம் ரிலாக்ஸ் தேவைதானே.

மொக்கசாமிகளா, தொடரட்டும் உங்கள் மொக்கப் பணி. தனி மனித விமர்சனம்(ஆபாசமாக) இல்லாதவரைக்கும்.

Anonymous said...

யோவ், பதிவை தரம் பிரிப்பதை விடுங்கய்யா, பதிவர்களை தரமானவர்களா ? பாருங்கய்யா.

நம்ம எலிக்குட்டி மாமா தரத்தோடு நடந்துகொள்கிறாரா ? சமீபத்தில் 1956 ல் என்று தொடங்கு தற்புகழ்ச்சி எழுத்தும். பார்பனவெறியும் தரமா ?

என்னமோ போங்கய்யா ?

Anonymous said...

வீட்டுக்கு கள்ள புருசன் வைத்துக் கொண்டு பாதுகாப்புடன் இருக்க ஆணுறை உபயோகிக்க வேண்டும் என்ற அறிவுறுத்தல் தரமான பதிவா ?