நேற்று இந்திய கடல் எல்லையை தாண்டி ஈழ விடுதலைப் புலிகளுக்கு பெருமளவில் ஆயுதங்களையும் போராளிகளையும் சட்டவிரோதமாக அரசுக்கு தெரியாமல் கடத்தி போராளிகளின் போராட்டத்தில் பங்கெடுக்க புறப்பட்ட தேசிய விரோதி பழ.நெடுமாறனை கைது செய்ததன் மூலம் இந்தியா உலக அரங்கில் தன் பெருமையை நிலை நாட்டி உள்ளது.
செப்டம்பர் ஐந்தாம் தேதி இலங்கை பாராளுமன்ற எதிர்கட்சி எம்.பி ரணவக்க பேசியபோது. பழ.நெடுமாறன் தமிழகத்தில் இருந்து புறப்பட்டு கடல் மார்க்கமாக விடுதலைப் புலிகளுக்கு உதவி செய்ய வருவதாகவும் இதனை கருணாநிதி அரசும் இந்திய மைய்ய அரசாங்கமும் வேடிக்கை பார்ப்பதாகவும் குற்றம் சாட்டினார். அப்படி கருணாநிதியும் மைய்ய அரசும் வேடிக்கை பார்க்க காரணம் நெடுமாறன் தனது ஆதரவை விலக்கிக் கொண்டால் இந்திய பாராளுமன்றம் கலைக்கப் படும் அபாயம் இருப்பதாலேயே என்றும் ஒரு குண்டை போட்டு உறுப்பினர்களை திகைப்பில், வியப்பில் பின் சிரிப்பில் தள்ளினார் ரணவக்க.
தனது தேசியம் தான் முக்கியம் என என்னும் இந்திய அரசு காஷ்மீர் தீவிர வாதிகளோடும் பாகிஸ்தானோடும் தனது பேச்சு வார்த்தைகளை மூட்டை கட்டி வைத்துவிட்டு அடுத்த காரியமாக காஷ்மீரை பாகிஸ்தானுக்கு பத்திரம் செய்த்து கொடுக்கலாம் அங்கே வாழும் இந்துக்களை வெளியேற்றி விட்டு ஒரு அணுகுண்டு சோதனை நடத்தினால் எல்லாம் புஸ்ஸ்ஸ்ஸ்.... பிறகு பாகிஸ்தான் காஷ்மீர் வேண்டும் என்றே கேட்காது. நமக்கும் தொல்லை இல்லை.
மனிதாபிமான அடிப்படையிலான உணவுப் பொருள்களை கூட வழங்க மறுக்கும் இந்தியா எந்த அடிப்படையில் இலங்கைக்கு ஆயுத சப்ளை செய்கிறது என்று ஒரு கன்றாவியும் தெரியவில்லை. எல்லாம் பிராந்திய வல்லரசாக இலங்கையின் உதவி தேவை என எண்ணும் குட்டி மனப்பான்மையா இல்லை சீனா அங்கே காலடி வைத்தால் அல்லது பாகிஸ்தான் வைத்தால் பக்கத்து இந்தியாவை பதம்பார்த்து விடுவார்கள் என்ற பயமா என்று அந்த மன்(ண்)மோகன் சிங்குக்கே வெளிச்சம்.
பழ நெடுமாறன் அப்படி என்ன கள்ளத்தனமாக செல்ல முயன்றாரா என்ன? இல்லை 7 மாதங்களுக்கும் மேலாக இந்திய நடுவன் அரசு, தமிழக அரசு, செஞ்சிலுவை சங்கம் என எல்லா முயற்ச்சிகளையும் மேற்கொண்டு பலனளிக்காத காரணத்தினாலேயே இந்த முயற்ச்சி எடுக்கப் பட்டது. அவர்கள் எடுத்துச் செல்வது ஆயுதங்கள் அல்ல தமிழ் மக்களின் உணர்வுகள். அவர்கள் செய்வது உதவிகள் அல்ல கடமைகள் கடமை. கண்ணியம்
கட்டுப்பாடு என்ற தார்மீக மந்திரத்தை தனது கோஷ்மாக கொண்ட திராவிட முன்னேற்ற கழக ஆட்சி தனது கடமையில் இருந்து விலகுகிறதா?
ஆயுதப் போராட்டம் செய்யும் தமிழன் உணவும் மருந்தும் இல்லாமல் இறந்துபோக வேண்டும் என்பதே இந்திய தேசியம் பேசும் அரசாங்கத்தின் உணர்வாக இருக்கிறது. தனது எல்லா நடவடிக்கைகளும் இலங்கை இனவாத அரசாங்கத்தின் அடிப்பொடியாகவும் தமிழீழ விடுதலைப் புலிகளை அழித்தொழிப்பதையும் மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு செயல்பட்டு ராஜிவ் காந்தி கொலை என்னும் ஒரு விரும்பத் தகாத சம்பவத்துக்கு பழிவாங்கத் துடிக்கிறது.
எல்லா எல்லைகளும் அடைக்கப் பட்டாலும் எங்களுக்கான எல்லைகள் திறந்தே கிடக்கின்றன என்று வன்னியை தலைமையாகக் கொண்ட புலிகளின் தமிழீழம் மலரும். இந்தியா அப்போது தனது மிக நெருங்கிய நண்பனாக வடகிழக்கின் ஆதிக்கம் கொண்ட தமிழீழ அரசாங்கத்தையே நாடவேண்டி இருக்கும் தனது கடல் எல்லைகளை தமிழர்களின் எல்லைகளோடே பங்குபோடவேண்டி இருக்கும். பாரா முகம் காட்டும் இந்த மனோபாவம் தொடர்ந்து தொடர்ந்தால் அப்போது எந்த முகத்தோடு புலிகளின் அரசாங்கத்தை எதிகொள்ளும் இந்தியா?.
கடைசியாய் ஒன்று
ஈழத் தமிழர்களே எங்களையும் எங்கள் அரசாங்கத்தையும் மன்னித்துவிடுங்கள்.
14 comments:
பெரும்பான்மையான தமிழக மக்களின் உணர்வுகளை ஈழத் தமிழர்கள் நன்கு அறிவார்கள் என்றே நான் நம்புகிறேன்.
இந்திய/தமிழக ஊடகங்களில் வெளிவரும் செய்திகளும், அரசுகளில் இருக்கும் சில கொள்கை வகுப்பாளர்களின் செயல்களும் பெரும்பான்மையான தமிழக உறவுகளின் மன நிலைக்குப் புறம்பானவை என்பதை அதிகமான ஈழத் தமிழர்கள் அறிவர் என நினைக்கிறேன்.
இப்போது நடக்கும் நிகழ்வுகளைப் பார்க்கும் போது மறைந்த முதல்வர் அமரர் இராமச்சந்திரன் இன்னும் சில காலங்கள் வாழ்ந்திருக்கக் கூடாதா என மனம் ஏங்குகிறது. அமரர் இராமசந்திரனின் இழப்பு ஈழத் தமிழினத்திற்கு எத்தகைய பேரிழப்பு என்பதை ஈழத் தமிழர் போராட்ட வரலாற்றை அறிந்தவர் நன்கு உணர்வர்.
you are talking about this.
in TAMIL orkut group, few guys removed nedumaran's thread, and called him scumbag who has to die. One even went to request other indians not to socialize with sri lankan tamilians. sri lankan tamilians are called ltte who are vermin living in ghettos in the west.
All this in the name of a group TAMIL. Visit, join and voice your protest. if you like. Spread the word about this group to others too.
orkut TAMIL
மூன்று வேளை அல்ல ஒரு வேளை உணவுக்காக ஏங்கும் குழந்தைகள் உங்கள் அனைவரையும் மனதார வாழ்த்துவார்கள். செய்தி இருட்டடிப்பால் பல செய்திகள் மறைக்கப்படுகின்றது. இந்து போன்ற செய்தித்தாள்கள் செய்திகளைத் திரிக்கின்றன.
மருந்து மிக மிக அவசியமாகத் தேவைப்படுகின்றது.
உதவுங்கள்
ஒரு ஈழத் தமிழன்
மூன்று வேளை அல்ல ஒரு வேளை உணவுக்காக ஏங்கும் குழந்தைகள் உங்கள் அனைவரையும் மனதார வாழ்த்துவார்கள். செய்தி இருட்டடிப்பால் பல செய்திகள் மறைக்கப்படுகின்றது. இந்து போன்ற செய்தித்தாள்கள் செய்திகளைத் திரிக்கின்றன.
மருந்து மிக மிக அவசியமாகத் தேவைப்படுகின்றது.
உதவுங்கள்
ஒரு ஈழத் தமிழன்
//
மனிதாபிமான அடிப்படையிலான உணவுப் பொருள்களை கூட வழங்க மறுக்கும் இந்தியா எந்த அடிப்படையில் இலங்கைக்கு ஆயுத சப்ளை செய்கிறது என்று ஒரு கன்றாவியும் தெரியவில்லை. எல்லாம் பிராந்திய வல்லரசாக இலங்கையின் உதவி தேவை என எண்ணும் குட்டி மனப்பான்மையா இல்லை சீனா அங்கே காலடி வைத்தால் அல்லது பாகிஸ்தான் வைத்தால் பக்கத்து இந்தியாவை பதம்பார்த்து விடுவார்கள் என்ற பயமா என்று அந்த மன்(ண்)மோகன் சிங்குக்கே வெளிச்சம்
//
இந்திய அரசின் சீழ் பிடித்த வெளி உறவுக் கொள்கையும், அந்தச் சீழை
மேலும் மேலும் அதிகமாக்கிக் கொண்டேயிருக்கும் தமிழ் எதிரிகளும்தான். வேறு ஒன்றுமில்லை.
அன்புடன்
நாக.இளங்கோவன்
concerned Why do you want to go to orkut tamil? They are for net new babies. Childish arguments and shouting matches. Look at their polls. Who is the beautiful actress? There may be no eelam tamils or their supporters over there. Half of the members are part of orkut iyer, orkut cho, orkut thuglak, orkut brahmin and orkut thehindu groups. What do you expect there?
The one or two moderators can kick you out if you do not agree with their or their friends' political views. They haven't changed a bit in years. Stay away.
மத்தியில் ஆளும் சீக்கியக் கிழவனுக்கு தான் நம் உணர்வுகள் புரியாது. மாநிலத்தில் ஆளும் திராவிடக் கிழவனுக்கு என்னாச்சோ தெரியலை :-(
// இப்போது நடக்கும் நிகழ்வுகளைப் பார்க்கும் போது மறைந்த முதல்வர் அமரர் இராமச்சந்திரன் இன்னும் சில காலங்கள் வாழ்ந்திருக்கக் கூடாதா என மனம் ஏங்குகிறது. அமரர் இராமசந்திரனின் இழப்பு ஈழத் தமிழினத்திற்கு எத்தகைய பேரிழப்பு என்பதை ஈழத் தமிழர் போராட்ட வரலாற்றை அறிந்தவர் நன்கு உணர்வர்.//
மறுக்க முடியாத உண்மை.
அவருக்கு மட்டும் தான் அவர்களின் மீது உண்மையான அக்கறை இருந்தது. (முதல்வர்களில்). இப்பொழுது உள்ளவர்கள் "பசப்பு வார்த்தையில்" வல்லவர்கள் ! :(
என்று தனியுமோ நமது ஈழத்து சகோதரர்களின் துயரம்
மகேந்திரன் - நிச்சயம், மூன்று வேளை அல்ல ஒரு வேளை உணவுக்காக ஏங்கும் குழந்தைகள் உங்களை மனதார வாழ்த்துவார்கள்.
லண்டனில் வசிக்கும் இந்தியத்தமிழன் என்கிற முறையில் சில வாதங்களை இங்கே வைக்கிறேன்.
- இப்போது தாயகத்திலிருந்து வெளியேறி உலகமெங்கும் வாழும் இலங்கைத்தமிழர்களில் பலர் பெரும் கோடீஸ்வரர்களாக
உள்ளனர். அவர்கள் நினைத்தால் ஒரு கோடி என்ன பலகோடி மதிப்பில் உணவுப்பொருட்களையும் மருந்து பொருட்களையும்
இலங்கையில் வாழும் தம் ரத்த உறவுகளுக்கு வழங்க முடியும், ஆனால் அவர்களுக்கு இல்லாத அக்கரை நெடுமாறனுக்கு எப்படி வந்தது.
- இங்கெ வாழும் இலங்கைத்தமிழர்களைப் பார்த்தால் அவர்களுக்கு உதவ வேண்டும் என்கிற எண்ணம் யாருக்கும் வராது.
அவர்கள் செய்யும் அடாவடிகளும், திருட்டுதனங்களும், வாழவந்த இடத்தில் செய்யும் ரவுடிஸமும் நம்மை தமிழன்
என்று கூறிக்கொள்ளவே வெட்கம் கொள்ளச்செய்கின்றன.
- தாயகத்தில் மக்கள் உணவுக்காக ஏங்கும் இந்த நேரத்தில் இங்குள்ள இலங்கைத் தமிழர்கள், பணத்திற்காக கிறிஸ்துவ கூட்டங்களில்
பங்கேற்பது, அதற்கு வீடு வீடாக சென்று ஆட்களை அழைப்பது, நோட்டீஸ் கொடுப்பது போன்ற வேலைகளிலும் ஈடுபடுகின்றனர்.
- சுனாமி சமயத்தில் தாயகத்தில் இருப்பவர்களுக்கு உதவுவதற்காக இங்குள்ள இலங்கைத்தமிழ் இளைஞர்கள் வசூலித்த பணத்தில் ஒரு பைசா கூட
அவர்களுக்கு செல்லவில்லை.
இலங்கைத்தமிழர்களுக்கு எவ்வளவு தான் நீங்கள் உதவினாலும் அவர்கள் நன்றி மறந்தவர்களாகவே இருப்பார்கள் என்பதற்கு
பல சான்றுகள் உண்டு. உதாரணமாக அவர்களை வளர்த்துவிட்ட இந்திராவின் மகனையே கொன்றது, இன்று அவர்களுக்கு
உதவிய தமிழக மீனவர்களேயே துன்புறுத்துவது என் பலவற்றைக்கூறலாம்
"குப்பி" என்று ஒரு படம் பார்த்திருப்பீர்கள். அதில் விடுதலைப் புலிகளுக்கு பல ஆண்டுகளுக்கு முன் நன்கொடை கொடுத்த
ஒரே காரணத்திற்காக, ஒரு குடும்பம் ராஜிவ் கொலையாலிகளால் எவ்வளவு அவதிக்குள்ளானது என்பதை மிகத்தெளிவாக
விளக்கியுள்ளனர். அதைப்பார்த்த பிறகாவது, தமிழகத்தமிழர்கள் திருந்துவது நல்லது.
நல்ல விடயத்தை கவர்ச்சியான தலைப்புடனும் சுவை படவும் எழுதியிருக்கிறீர் நன்றி
அன்று மதுரையில் பெருந்தலைவர் பிறந்த நாளைக் கொண்டாட மாபெரும் மாநாட்டைக்கூட்டியவர்
அன்னைஇந்திரா காந்தியை திமுக ரவுடிகளிடம் தலையனை வைத்து காத்தவர் தான் இந்த நெடுமாறன்.
இன்று இப்படி சென்றால் அங்கு இலங்கை ராணுவம் அவரை கொன்று விடும் என்பதற்காக இந்திய அரசே அவரைக்காப்பாற்றிவிட்டது போலும்
ஈழத்தில் சிக்கிக் கொண்டிருக்கும் அப்பாவி சகோதரர்களுக்கு நிச்சயம் உதவி கிடைக்கவேண்டுமென்பதில் மாற்றுக் கருத்தில்லை...
ஆனால் அதற்கான உத்திகள் சரியில்லையோ என்பதுதான் என் கவலை...
திருவாளர் பித்தர்..தெளிந்துவிட்டதா பித்தம்...
//*தமிழ்பித்தன் said...
நல்ல விடயத்தை கவர்ச்சியான தலைப்புடனும் சுவை படவும் எழுதியிருக்கிறீர் நன்றி *//
இப்போது நடக்கும் நிகழ்வுகளைப் பார்க்கும் போது மறைந்த முதல்வர் அமரர் இராமச்சந்திரன் இன்னும் சில காலங்கள் வாழ்ந்திருக்கக் கூடாதா என மனம் ஏங்குகிறது. அமரர் இராமசந்திரனின் இழப்பு ஈழத் தமிழினத்திற்கு எத்தகைய பேரிழப்பு என்பதை ஈழத் தமிழர் போராட்ட வரலாற்றை அறிந்தவர் நன்கு உணர்வர்.
miga miga sari
Post a Comment