Thursday, November 20, 2014

நெகிழ வைத்த திரைப்படங்கள்- 1 Room in Rome

இப்போதெல்லாம் எந்த படத்தை பார்த்தாலும் சில காட்சிகள் என்னை ஒரு நிமிடம் குபுக் என்று நெகிழ்த்தி விடுகிறது. முன்பெல்லாம் சில காட்சிகளை பார்த்தால் என்ன கொடுமைய்யா இதெல்லாம் ரொம்பவே செண்டிமெண்ட் போட்டு தாளிக்கிறார்களே என்ற கிண்டலோடு படம் பார்த்த நானா இப்படி ஆகிவிட்டேன் என்று யோசிக்க வைப்பது என் நாற்பதை நெருங்கும் வயதா இல்லை சுமார் பத்தாண்டுகளாக நீண்ட இடைவெளிகளில் குடும்பத்தை பிரிந்து வாழும் துயரா என்று தெரியவில்லை. எதுவாக இருந்தாலும் கிடக்கட்டும் என்னை எத்தனை முறை திரும்பத் திரும்ப பார்த்தாலும் நெகிழ்த்திய படங்கள் என்று ஒரு தொடரை உத்தேசித்திருக்கிறேன். டாப் டென் போல இது வரிசைப் படுத்துவதற்காகவோ இல்லை படங்களை விமர்சிப்பதற்க்காகவோ அல்ல. வெறுமனே என்னை நெகிழச் செய்த படங்களை, காட்சிகளை உங்களோடு பகிர்ந்து கொள்ள. 

Room In Rome.



இரண்டு முற்றிலும் அறிமுகமில்லாத (ஆல்பா, நடாஷா ) பெண்களின் ஒரு நாள் இரவின் கதை, கொஞ்சம் பிசகினாலும் பாலியல் படங்களின் (Porn) வரிசையில் சேர்ந்துவிடக் கூடிய திரைக்கதை, ஆனால் அதை காட்சிப் படுத்திய விதத்திலும், பின்னனி இசையிலும் கொஞ்சம் கூட ஆபாசம் எட்டிப் பார்த்துவிடாமல் நிர்வாணத்தை அழகாக்கி இருக்கும் இயக்குனர், Julio Medem ( ஒளிப்பதிவாளர் Alex Catalán இரண்டு பேரையும் விட இரண்டு கதை நாயகிகளும்  கூட படத்தை ஒரு சேர அழகாக்குகிறார்கள்.

சரி இது ஏன் நெகிழ வைத்தது என்ற விஷயத்துக்கு வருகிறேன் , ஏனென்றால் படத்தை நான் விமர்சிக்க விரும்பவில்லை.  இரண்டு பெண்களும் ஒரு நாள் இரவில் அறிமுகமாகி ஆல்பா நடாஷாவை தன் அறைக்கு அழைக்கும் தருணம் நடாஷா ஆல்பாவின் கையை விட்டு விலக எண்ணி இழுத்துக்கொண்டு போகையில் ஆல்பா, நடாஷாவிடம் என்னிடம் போட்டியிட்டால் நான் தோற்றுப் போவேன் ஆனால் உன் அறைக்கு வந்து விடுவேன் என்னும் போது இருவரின் முகத்திலும் குறும்பு கொப்பளிக்கும்,

முதன் முதலாய் ஒரு பெண் என்னை இப்படிப் பார்ப்பது இதுதான் முதல் முறை என்னும் போது நடாஷாவின் வெட்கமும் ஆல்பாவின் காதல் பார்வையும் ஒரு அழகிய கவிதை,  அதன் பின் ஆபா உறங்குகையில் நடாஷா தன் அறைக்குச் செல்லும் முன் தன் பெயரை ஆல்பாவின் காதில் சொல்லும் " ஷா, நடாஷா" எனும் போதும் தவறுதலாய் ஆல்பாவின் உள்ளாடையை அணியும் போது அது கிழிந்து போனதை பார்த்து சிரிப்பதும் என இதெல்லாம் கதையை சுவாரஸ்யம் ஆக்குகின்றன, நடாஷாவின் செல்போனை ஆல்பாவின் அறையில் விட்டு விட்டு வந்து அதை திரும்ப எடுக்க வரும் போது இருவருக்கும் இடையில் ஆரம்பிக்கிறது கதை.

ஆல்பா தன்னைப் பற்றி சொல்லும் போது தன் தாயாருடன் ஒரு அரபு ஷேக்கின் அந்தப்புரத்தில் இருந்த போது கர்பமாகி அங்கே  இருந்தால் தன் குழந்தையும் ஒரு அந்தப்புரத்தில் இருப்பதை விரும்பாமல் அதுவும் பெண் குழந்தை என்றதால் கருவைக் கலைத்து விடுவதையும் சொல்லும் போதும் அந்த குழந்தைக்கு வைக்க விரும்பிய பெயரைத்தான் தனக்கான பெயராக வைத்துக் கொண்டதையும் சொல்லும் போது ஒரு கணம் நம்மை உலுக்கி விடுகிறதுதான். ஆனால் நடாஷாவும் ஆல்பாவும் தங்களை பற்றி பொய் மட்டுமே சொல்லிக் கொண்டு அந்த ரோமின் மைய்யத்தில் இருக்கும் ஹோட்டல் அறையின் சித்திரத்தின் கேரக்டர்களை பற்றியும் அதனை தொட்ட வாரே ஊரும் கதை அமைப்பையும் கவணித்து வந்தால் தான் இது ஒரு மேஜிகல் ரியலிசம் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது.

நடாஷாவும் ஆல்பாவும் தங்களை யார் என்றும் தங்களின் காதலையும் தெரிந்து கொண்ட பிறகும் இருவரும் பிரிந்து போவது என்று முடிவு செய்யும் போதும் என்று படம் முழுக்க நெகிழ வைக்கும் இடங்கள் ஏராளம், அதிலும் கடைசி காட்சியில் ஆல்பாவை பாத் டப்பில் கிடத்தி அந்த கற்பனை அம்பை நடாஷா பிடுங்கும் வேளை க்ளாஸ்.

மற்றபடி இந்த படத்தை சிலாகித்துச் சொல்ல வசனங்கள் தான் இருக்கிறது ஆனால் நிறைய நேரங்கள் மவுனங்களின் அழகை அனுபவிக்கலாம், பின்னனி இசை காதில் ஒலித்துக் கொண்டே இருக்கும்.  அதிகமாய் எழுதி படத்தை பார்க்கப் போகிறவர்களின் சுவாரஸ்யத்தை குறைக்க விரும்ப வில்லை.

படம் பற்றிய குறிப்புகளுக்கு இங்கே சொடுக்கவும்.

முழு படத்தையும் காண இங்கே சொடுக்கவும்.

பின் குறிப்பு ; படம் முழுக்க நிறைந்து கிடக்கிறது நிர்வாண அழகு என்பதால் முன் கூட்டி எச்சரிக்க வேண்டியது அவசியம்.  இது ஒரு 18+ படம். ஆனால் ஆபாசப் படம் அல்ல .

நம் பின் நவீனத்துவ எழுத்தாளர்கள் யாருமே இந்த மேஜிக்கல் ரியலிச படத்தை இன்னும் பார்க்கவில்லையா இல்லை இப்படி நிர்வாணங்கள் நிறந்த படங்களை எல்லாம் மக்களிடம் கொண்டு சேர்த்தால் ஆபாசம் என்று சொல்லி விடுவார்களோ என்று பயந்து விட்டார்களா என்று தெரியவில்லை.




1 comment:

Anonymous said...

thanks

Juergen