Wednesday, July 19, 2006

எங்கியாவது மூளை கிடச்சா

ஜெயா டிவியை பார்த்துவிட்டு பாண்டிமடம் பக்கம் போய் சேது சீயானாய் கிடந்தவரை கொஞ்சம் சரியானதும் ஒரு பார்ட்டி கொடுக்கலாம் என நினைத்து குவாட்டர் கோவிந்தனை அழைத்துக் கொண்டு அவரின் பேவரைட் இடமான ஒயின்சுக்கு அழைத்துச் சென்றதும் கொஞ்சமாய் போதையேறியபின் நிதானம் கொஞ்சம் பிடிபட்டது. அரசியல் சினிமா என பேச்சு மாறிக்கொண்டே வந்தாலும் அவரின் முழு கவணமும் அரசியலில் அதன் செய்திகளில் நிறைந்து கிடந்தது, சரிதான் ஆள் தேறிட்டார் இனிமே நெறையா செய்தி கிடைக்கும் என நானும் தூண்டிலை போட்டேன் இனி ஓவர் டு கு,கோ.

என்னாப்பா மகேந்திரா எல்லாம் எப்பிடி போகுது?

என்னத்த என்னமோ போகுது..

ஏன் ஒரே சலிப்பா சொல்ற?

இல்ல அன்னிக்கு நீ ஏன்கிட்ட கேட்ட ஒரு கேள்விய நம்ம ஆளுங்க கிட்ட கேட்டேன்பா எல்லாரும் அடிக்காத குறைதான் அது போகுட்டும் விடு உண்மையச் சொன்னா எல்லாருக்கும் கோபந்தான் வரும்.

ஆமா ஆமா உண்மைய சொன்னா எல்லாருக்கும் கொஞ்சம் கோவம் வரும்தான...

ஆமா ஒங்க தலைவரு என்னா பன்றாரு ?

அவருக்கு என்னப்பா சோக்கா இருக்காரு. இப்ப கூட பாரு நெய்வேலிய விக்கபோறாங்கன்னு சொன்னதும் தலை உட்டார் பாரு ஒரு அறிக்கை ஆதரவு வாபஸ்னு மத்தியில ஆடிபோச்சுல்ல...

ஆமா அவரு நிஜமா அப்பிடி சொல்லவே இல்லன்னு சொல்றாரு?

அதென்னமோப்பா ஆனா நெய்வேலிய வித்திருந்தா நான் கூட ஒரு பத்து சென்ட் இடம் வாங்கி போட்ருப்பேன்.

என்ன கோவிந்தா சொல்ற?

நெய்வேலி நிலக்கரி சுரங்க பங்கதான விகிறதா சொன்னாங்க?

ஆங்? அப்டியா? நான் ஏதோ ஊர விக்க போறாங்கன்னு நினைச்சேன்,,,, சரி விடு.. ஆனா மும்பைல குண்டு வச்சது யாருன்னு எனக்கு தெரியும் நிச்சயமா இது வெளிநாட்டு சதிதான்..

ஆமா இத நீவேற சொல்லனுமா? எதாவது சூடா சொல்லுப்பா நம்ம பாலச்சந்தர் கணேசன் வேற தமிழ்மனம் சூடேருது எல்லாரும் கூலாக்குங்கன்னு சொல்றாரு விட்டா கம்ப்யூட்டர தூக்கி தண்ணில போடுன்னு சொல்வார்..

சூடா வேனும்னா ஒரு ரம்மு சொல்லட்டா? பின்ன என்னடா? அவர் சொன்னா உனக்கென்ன அவரு முன்ன மாறி படம் அதிகமா எடுக்காங்காட்டியும் டிவில எதுனாவது கல்கி அப்டின்னு தொடர் போட்டு சம்பாரிப்பார் நீ ஏன் அதல்லாம் கண்டுக்கிற.. ஆனா பாரு பொய் படம் நல்லா வருமாம்.

டேய் கோவி நான் சொல்றது ஒன்னும் ஒன்னும் ரெண்டு பாலச்சந்தர் நீ டைரக்டர சொல்ற..

ராகுலுக்கு கல்யாணமாமே? ஆனா பாருப்பா இந்த காங்கிரஸ்காரன் சுத்த மோசம் ஒரு கூட்டணி கட்சி மூத்த தலைவர கூப்பிடுல பாரு எல்லாம் பிஜேபி யோட சதி அல்லாரும் போவாங்க ஆனா கலைஞருக்கு மட்டும் அழைப்பில்ல....

ராகுலுக்கு கல்யாணமா? எப்படா?

ஆமாம்பா நான் பாத்தனே மும்பைல நடந்துது ஆனா பிஜேபி காரங்க யாரும் வர்ல.

டேய் அது ராகுல் மகாஜன்டா... நீவேர அய்யரு கிய்யருன்னு திரும்ப சண்டைய உண்டாக்காத...அந்த பொன்னு அவரோட காதலியாம் பைலட்டா இருக்காங்க அப்பா இருக்கும் போதே அனுமதி வாங்கிட்டாராம் ஆனா இப்பத்தான் கல்யாணம்.

ஓகோ...சரி சரி ஆமா இந்தியாவுல இருக்க விவசாயிங்களுக்கு கஷ்டம் மேல கஷ்டம்னு பாத்தியா இப்ப ஒரு பூவ தடை பன்னிட்டாங்க பாவம் இனிமே அவங்க எந்தவகைல விவசாயம் பன்னுவாங்க?

பூவா எனக்கெதும் தெரியாதே.?ஆமாம்பா யாரோ பதியன் போடுறவங்க எல்லாரும் பேசிகிட்டத கேட்டேன் ஒருவேள எதும் கஞ்சா செடியோட பூவா இருக்குமா? ஆனா என்னமோ புது வழியில எல்லாரும் செய்யலாம்னும் அப்ப தமிழ் மணத்த பாக்கலாம்னும் சொல்றாங்க...


டேய் கோவிந்தா வர வர ஒனக்கு மூளையே இல்லாம போகுதுபாரு அது வலைப்பூடா ப்ளாக் எழுதுறது இப்ப நான் எழுதுறன்ல அந்த மாறி அது நம்ம இந்தியாவுல வரல்லையாம் அதுதான் சேதி .

நீ மூளை பத்தி கேட்டதும்தான் எனக்கு ஒரு ஞாபகம் வருது ஒரு பிளேட் மூளை சொல்லுப்பா..

ஆமா இல்லாதத கேளு கெடைக்கும்? இன்னைக்கு என்னா நாள் மூளை கிடையாதுன்னு வெளில போர்டு போட்டிருக்கு பாரு..

அதுக்கு ஏண்டா கத்துற இல்லன்னா இல்லன்னு சொல்லு இருந்தா வாங்கிகுடு ஒனக்கு போதை அதிகமா போச்சு அதான் இப்பல்லாம் சீக்கிறமா டென்ஸனாவுற..

இல்லடா அதென்னமோ தெரீல மூளைய பத்தி பேச்செடுத்தாவே கோவம் தானாவருது

திருமாவளவன் புலிகளும் ஈழமும் ஒன்னுன்னு சொல்லீருக்காறே அப்ப அவரு புலிகளுக்கு ஆதரவா?

ஆமா

ஆனா அவரு சிறுத்தைன்னு சொன்னாங்க? இப்ப பொடா சட்டத்துல உள்ள போடுங்கன்னு ஏன் ஜெயா சொல்லல? ஒருவேள அம்மாவும் புலிகளுக்கு ஆதரவா?

இருக்காதுடா சும்மா அறிக்கைவிட்டு என்னா திருமா கேட்கவா போரார்னு சும்மா இருக்காங்க.

ஆனா ஒன்னு மகேந்திரா... ஜெயாம்மா தான் ஒரு விவசாயிங்கறத நிரூபிக்கிறாங்க இப்ப பாரு களையெடுக்க போறாங்களாம். தான் ஒரு முன்னாள் முதல்வர்ங்கறத மறந்து வயல்ல வேலை செய்ய யாருக்கு மனசு வரும்.

கோவிந்தா அந்த கிளாஸ்ல இன்னொரு ரவுண்டு ஊத்திகிட்டே கேளு அவங்க வயல்ல களையெடுக்கல கட்சில எடுக்கிறாங்க..அதாவது தன்னோட கட்சி எலக்சன்ல தோத்து போனதுக்கு காரணமா இருந்தவங்கள பதவிகள விட்டு தூக்குறாங்க.

அவங்கமட்டும் பொதுச்செயலாளரா இன்னுமிருக்காங்க? என்னாப்பா ஞாயம் இது?

கோவி நீ மெதுவா குடிச்சுட்டு வா நான் கொஞ்சம் அவசர வேலையா போய்ட்டு வாரேன்.

சீக்கிரமா வாடா அப்பிடியே எங்கியாவது மூளை கிடச்சா வாங்கியா..............


13 comments:

குழலி / Kuzhali said...

//இல்லடா அதென்னமோ தெரீல மூளைய பத்தி பேச்செடுத்தாவே கோவம் தானாவருது
//
ஹா ஹா....

//அவங்கமட்டும் பொதுச்செயலாளரா இன்னுமிருக்காங்க? என்னாப்பா ஞாயம் இது?
//
ஆசிட் வேணுமானு கேக்குறாங்கப்பா...

Unknown said...

//ஆசிட் வேணுமானு கேக்குறாங்கப்பா//

அட்ரஸ் வேணுமான்னு கேட்டு சொல்லுங்க குழலி :)

aathirai said...

govindhan kalakkarar

Unknown said...

//கோவிந்தன் கலக்கறார்//

கலக்காம குடிச்சா குடல் வெந்துபோகும்னு கோவிந்தனுக்கு தெரியும்ங்க :)

நாகை சிவா said...

மறுபடியும் மூளையா?

Unknown said...

நாகை சிவா இது நம்ம கு.கோ கடைசியா சொன்ன வார்த்தைங்க நீங்கபேசாம போயி நாமக்கல் சிபி இன்னம் இருக்கிற ஆளுங்களையும் கூட்டிட்டு வராதீங்க

Boston Bala said...

:-)

மனதின் ஓசை said...

//நீங்கபேசாம போயி நாமக்கல் சிபி இன்னம் இருக்கிற ஆளுங்களையும் கூட்டிட்டு வராதீங்க //

தோ.. நானும் வந்துட்டேன்... :-)

**************

நல்லா எழுதி இருக்கீங்க..

Unknown said...

வாங்க மனதின் ஓசை....நன்றி

என்னங்க பாஸ்டன் பாலா சும்மாங்காட்டியும் சிரிச்சுட்டு போயிருக்கீங்க? நன்றி

நாமக்கல் சிபி said...

////நீங்கபேசாம போயி நாமக்கல் சிபி இன்னம் இருக்கிற ஆளுங்களையும் கூட்டிட்டு வராதீங்க //


வந்துட்டம்ல! நமக்கு கூட ஒரு ஹால்ஃப் பிளேட் ஆர்டர் பண்ணுங்கப்பா!

நாமக்கல் சிபி said...

தப்பா நினைச்சிக்காதப்பா!

:) போட மறந்துட்டேன்!

நாமக்கல் சிபி said...

அது ஏன் :) தனியா போடறேன்னு பார்க்கறீங்களா?

உங்களை மட்டும் போலீஸ் புடிக்க வேணாம்? அதுக்குதான்!

:)

Unknown said...

//நமக்கு கூட ஒரு ஹால்ஃப் பிளேட் ஆர்டர் பண்ணுங்கப்பா!//

சாருக்கு ஒரு பிளேட் பார்சல்:)

//உங்களை மட்டும் போலீஸ் புடிக்க வேணாம்? அதுக்குதான்! //

ஹா,,ஹா,,ஹா போலீசுக்கே போலீசா? நாங்க தான் முன் ஜாமீன் வாங்கிட்டமே?:)

1.நன்றி நாமக்கல் சிபி
2.நன்றி நாமக்கல் சிபி
3.நன்றி நாமக்கல் சிபி

மூனுக்கும் சேத்து பிடிங்க ஒன்னு

4.நன்றி நாமக்கல் சிபி இது எக்ஸ்ட்ரா