Monday, September 11, 2006

கம்யூனிஸ்டுகள் ஏன் அழுகிறார்கள் ?


Photobucket - Video and Image Hosting
Photobucket - Video and Image Hosting


Photobucket - Video and Image Hosting


Photobucket - Video and Image Hosting


26 comments:

Anonymous said...

இடதுசாரிகள் இருபது ஆண்டுகளாக ஆண்ட மாநிலத்தில் தான் இந்த வறுமையும், பசியும்!

ஐம்பது ஆண்டுகளாக தவறான கொள்கைகளை பின்பற்றிய பின்னரும் இத்தனை விவசாயிகள் செத்த பின்னரும் அதே பழைய குழியில் விவசாயிகளை தள்ளிவிடும் கம்யூனிஸ்ட்டுகளை என்ன செய்வது?

முப்பது லட்சம் மக்களை கலாச்சார புரட்சி நடத்தி கொன்ற மாவோவும், மூன்று கோடி மக்களை தி கிரேட் பர்ஜிலும் கொன்ற மாவீரன் ஸ்டாலினையும் வழிபடும் கொக்கிகளுக்கு கொஞ்சமாவது சுய-அறிவு வேண்டாமா?

Anonymous said...

The news is from West Bangal and Communists are ruling that state since last 20 years
Kindly make a note of it

Unknown said...

//இடதுசாரிகள் இருபது ஆண்டுகளாக ஆண்ட மாநிலத்தில் தான் இந்த வறுமையும், பசியும்! //
இது இந்தியாவில் தானே நடக்கிறது? வங்கத்தை விட எல்லா மா நிலங்களிலும் பசி பஞ்சம் , எனும் வ்ருமையின் கோரத்தாண்டவம் நடக்கிரதே? முப்பது லட்சம் மக்களை கொன்ற மாவோவின் நாடுதான் இன்று பொருளாதார முன்னேற்றத்தில் நம்பர் ஒன் என்பதை நினைவில் வைக்கவும்

Unknown said...

//The news is from West Bangal and Communists are ruling that state since last 20 years
Kindly make a note of it //

ஒரு கட்சி ஆட்சி நடத்துவதற்கும் அதன் கொள்கைகளை அமல் படுத்துவதற்கும் வித்தியாசம் உண்டு அனானி ... அதே கம்யூனிஸ்டுகள் ராசாங்கம் நடத்திய கேரளா இப்படியில்லையே?

Anonymous said...

//முப்பது லட்சம் மக்களை கொன்ற மாவோவின் நாடுதான் இன்று பொருளாதார முன்னேற்றத்தில் நம்பர் ஒன் என்பதை நினைவில் வைக்கவும்//

கிழித்தார்கள்.

இரண்டாவது குழந்தை பெற்றால் அரசே ஊசி போட்டு கொன்றுவிடுவது, தியான்மென் சதுகத்தில் மானவர்கள் மீது டாங்கிகளை ஓடவிடுவது, அதைபற்றி இனையத்தில் கூட விவாதிக்க முடியாமல் தடைவிதிப்பது, திபெத் மக்களை கூண்டோடு அழிப்பது, தைவானை மிரட்டுவது...


இதில் தான் சீனா நம்பர் ஒன்.

சீனாவில் மட்டும் பத்திரிக்கை சுதந்திரம் வரட்டும்..அப்போதும் தெரியும் கம்யூனிஸ்ட்டுகளின் அலங்கோலம்.

Amar said...

//அதே கம்யூனிஸ்டுகள் ராசாங்கம் நடத்திய கேரளா இப்படியில்லையே?
//

எது பாதி மக்கள் படித்துவிட்டு(அதற்க்கு கூட ஏகபட்ட பேர் தமிழ் நாட்டுக்கு வர்றாங்க) அரேபியாவில் வேலை தேட வேண்டிய அவலம் உங்களுக்கு நல்ல விஷயமாகபடுகிறதா?

சும்மாவா உலகத்துல எல்லா இடத்துலையும் மலையாளிகள் இருக்கிறார்கள்? பிழைப்பை தேட வேண்டிய நிர்பந்தம்.

சொந்த மாநிலத்தில் அத்தனை தரித்திரம்.

கம்யூனிஸ்ட்டுகளின் சாதனை தான்.

Anonymous said...

//கொள்கைகளை அமல் படுத்துவதற்கும் வித்தியாசம் உண்டு அனானி//

கடைசியாக "கொள்கைகளை" அமல் படுத்திய சோவியத் யூனியனில் சோற்றுக்கு இல்லாமல் மேற்க்கு பெர்லின் நகருக்கு ஏழு அடுக்கு சோவியத் இரானுவ வேலிகளை தாண்டி பிழைப்பை தேடி சென்ற போது கம்யூனிஸ்ட்டு இரானுவம் சுட்டு செத்தவர்கள் நூற்றுகனக்கில் உள்ளனர்.

வித்தியாசம் உண்டு தான்.

ஒழுக-ஒழுக சமத்துவம் பேசுவதற்க்கும் பின்னர் ஆட்சிக்கு வந்தவுடன் கேள்வி கேட்பவனை எல்லாம் போட்டு தள்ளுவதற்க்கும் வித்தியாசம் உண்டு தான்.

திபெத், செசன்யா, யூகோஸ்லேவியா....

Muse (# 01429798200730556938) said...

பின்னூட்டம் பதிந்தவர்களும், கட்டுரை பதிந்த மகேந்திரனும் கவனிக்கவிட்டுவிட்ட ஒரு விஷயம், இத்தனை நாட்களாக தன்னுடைய கம்யூனிஸ ஜால்ராவை உரத்து அடித்துவந்த டெஹெல்காவிற்கு வங்காளத்தில் ஏழைகள் இருப்பது திடீரென்று ஏன் ஞாபகம் வந்தது என்பதுதான்.

வேறு ஒன்றுமில்லை. மேற்கு வங்காளம் முட்டாள்தனமான கம்யூனிஸ சித்தாந்தங்களை விட்டுவிட்டு காபிடலிஸ பார்வையில் புத்ததேவ் பட்டாச்சார்யாவின் தலைமையில் நடைபோடத் தொடங்கியுள்ளது. இது தொடர்ந்து வெற்றி பெற்றுவிட்டால், டெஹெல்கா போன்ற பத்திரிக்கைகளுக்கு இதுபோன்ற ஏழைகளின் படங்களைப் போட வாய்ப்பு இல்லாமல் போய்விடும் என்பதாலும், காப்பிடலிஸத்தால் விளையும் நன்மை இந்தியாவிற்கு கிடைக்ககூடாது என்கிற வழக்கமான இந்திய கம்யூனிஸ கருத்துருவாக்கத்தாலும், எந்த வகையிலும் இந்தியாவில் எங்கும் நல்லது நடந்துவிடக்கூடாது என்கிற அக்கறையினாலும்தான் இந்த படத்தையும், கட்டுரையையும் போட்டுள்ளது. இதுபோன்ற விஷயங்கள் "முற்போக்குத்தனமானவை" என்கிற மயக்கத்தால் வேலை மெனக்கிட்டு இதை ஸ்கேன் வேறு செய்து போட்டுள்ளார் மகேந்திரன்.

கம்யூனிஸ்ட்டுக்களிடம் இருக்கின்ற தனிமனித நேர்மையும், மனிதாபிமானமும், காப்பிடலிஸத்தோடு இயைந்தால் ஒரு நல்ல ஸமூகம் உருவாகும்.

இதை இழிவாகக் காட்டாவிட்டால் டெஹல்காவிற்கு பிஸ்கட் போடுபவர்கள் வருத்தப்பட மாட்டார்களா? எனவே மேலும், மேலும் இதுபோன்ற கட்டுரைகளை டெஹல்காவிலிருந்து நாம் எதிர்பார்க்கலாம்.

Muse (# 01429798200730556938) said...

முப்பது லட்சம் மக்களை கொன்ற மாவோவின் நாடுதான் இன்று பொருளாதார முன்னேற்றத்தில் நம்பர் ஒன் என்பதை நினைவில் வைக்கவும்ஐயன்மாரே, மாவோவின் கொள்கைகளை ஏறக்கட்டிவிட்டு காப்பிட்டலிஸப் பாதையில் நடைபோட சீனா அரம்பித்தபின்னால்தான் நீங்கள் சொல்லுகிற "நம்பர் ஒன்" இடத்திற்கு சீனாவால் வரமுடிந்திருக்கிறது. அத்தோடு எல்லா வகையிலும் மனித உரிமை மீறல்களை நடத்த கம்யூனிஸத்தை பயன்படுத்தியதும் இந்த வளர்ச்சிக்குக் காரணம்.

சீனர்கள் நடைமுறையில் எது வெற்றி தரும் என்று அறிந்தவர்கள். மனித உழைப்பை சுரண்ட கம்யூனிஸத்தையும், பொருளாதாரத்திற்கு காப்பிடலிஸத்தையும் பின்பற்றுபவர்கள்.

அவர்கள் மாவோயிஸம் நாடு பிடிக்கவும், வாயை திறக்கும் மக்களை போட்டுத்தள்ளவும் பயன்படும் ஒரு கருவி.

Anonymous said...

அனானி கொஞ்சம் சூடா இருக்கார் போல..

நமீதா ஜூஸ் செண்டர் பெங்களூர் கிளைக்கு வந்து ஒரு மொசாம்பி ஜூஸ் பருகவும்.

Anonymous said...

http://www.globalpolicy.org/socecon/develop/2002/1112starvation.htm

Look here for Starvations

குழலி / Kuzhali said...

இந்த பதிவு ஹைஜாக் செய்யப்படுவதாக கருதுகிறேன், செல்வன் கம்யூனிஸ்ட்கள் ஏன் அழுகிறார்கள் என பதிவு போட்டார், அதாவது இந்தியா முன்னேற்ற பாதையில் செல்கிறது விக்கிப்பீடியாவின் புள்ளிவிவரத்தோடும் :-) உலக வங்கியின் புள்ளிவிவரத்தோடும் வறுமைக்கோட்டுக்கி கீழே உள்ளவர்களின் எண்ணிக்கை குறைந்திருக்கிறது ஆனாலும் கம்யூனிஸ்ட்கள் அழுகிறார்கள் என்பது போன்ற பதிவிட்டிருந்தார், அதற்கு பதில்சொல்லும் விதமான பதிவு இது, ஆனால் இது இந்தியதேசிய அபிமானிகளினால் கம்யூனிஸ்ட்களை திட்டுவதற்கு கடத்தப்படுகின்றது

Anonymous said...

here in this post communist party not a issue and he just notified Why they speaking about povertery and starvation in india if we are in a good Place

Unknown said...

//இது இந்தியதேசிய அபிமானிகளினால் கம்யூனிஸ்ட்களை திட்டுவதற்கு கடத்தப்படுகின்றது //

இதைப் பாத்துதான் குழலி நான் இப்போ பேயறைஞ்சா மாதிரி கிடக்கேன் நான் சொன்னது என்னா இவங்க எழுதுறது என்னா ? ஒன்னுமே புறியெலே உலகத்திலே

Unknown said...

அய்யா வணக்கத்துடன் எங்க கத்துகிட்டீங்க இந்த குத்து குத்த? ஒருவேளை எங்கயாவது மாட்டு ஆஸ்பத்திரியில ஊசி போட்டீங்களோ? இல்லை பசுவப் பத்தி நல்லா தெரிஞ்சி வச்சிருக்கீங்களே? :))

Anonymous said...

இங்கே எங்கள் உதவி தேவையா ?

அனானிகள் அமெரிக்க கிளை,
பசுமேய்க்கும் பிரிவு,
நியூயார்க்

Anonymous said...

ஆமா புனிதப் பசி ச்சே பசு ஏன் இப்ப டாலரை எடுத்துட்டு சும்மா சுத்துது? தேசப்பற்று வேற பொங்கி வழியிது? பி.ஜே.பி கணக்கா?

Anonymous said...

மாடு மேய்ப்பதை விட யானை மேய்ப்பதை விரும்புகிறேன் நான்.

Anonymous said...

//மாடு மேய்ப்பதை விட யானை மேய்ப்பதை விரும்புகிறேன் நான்.
//

யானை படகில் ஏறுமா? இல்லை அமெரிக்கா போய் கம்மூனிசம் பேசுமா?

அசுரன் said...

கலாச்சார புரட்சி பற்றிய விசயத்தில் அரைகுறையாக ஆடுபவர்களுக்கு ஒரே ஒரு விசயம்தான்,
ஒரு நாட்டின் வரலாறை முழுமையக புரிந்து கொண்டு பேசவும், குறைந்த பட்சம் எந்த விசய்ததைப் பற்றி பேசுகிறோமோ அந்த காலகட்டத்தின் வரலாற்று தொடர்புகளை தெரிந்து கொண்டு பேசவும்.

இது போன்ற அனுகுமுறை பாசிச மத வெறி பன்றிகளுக்கு கிடையாது என்பதை பல இடங்களில் அம்பலப்படுத்தியதுதான். அதனால் அவர்களைப் பற்றி மேற்கொண்டு சொல்ல ஒன்றுமில்லை. ஆனால் மற்ற வாசகர்களுக்கு சில விசயங்களை சொல்வது சரி என்று படுகிறது.

#1) மேற்கு வங்க பற்றிய செய்தி உண்மையா பொய்யா என்ற விரிவான பகுதிக்கு நான் செல்ல அவசியமில்லை. எனது கருத்துப்படி வோட்டுக் கட்சி கம்யுனிசத்தின் விளைவு ஒன்றும் மக்கள் நலமல்ல. அது கம்யுனிசமே கிடையாது என்பதுதான் எனது நிலைப்பாடு அதனால் கம்யுனிசம் இல்லாத ஒன்றை கம்யுனிசம் என்று தூக்கிக் கொண்டு பேசுவது திரிபுவாதம்.

ஒரு மருந்தை, ஒரு பத்தியத்தை அரைகுறையாக எடுக்கலாம் என்று எங்காவது படித்ததுண்டா? அப்படி அரைகுறையாக எடுத்தால் என்னாகும்? கேடு விளையும். அதே விசயம்தான் கம்யுனிசத்திலும். அதை வெட்டிக் குறுக்கி நமது மன உந்துதலுக்கேற்ப பயன்படுத்துவது ஆபத்தே. மக்கள் மக்கள் மட்டுமே கம்யுனிசத்தின் ஒரே உந்து சக்தி.


#2) சீனாவில் தியன்மென் சதுக்கத்தில் - நாட்டின் நிலைமை, விடுதலையைப் பெற அந்த நாடு செய்த தியாகம் பற்றி எல்லாம் கிஞ்சித்தும் புரிந்துண்ர்வு இன்றி ஏகாதிபத்திய நுகர்வு வெறி பிடித்து ஆட்டம் போட்டவர்களை என்ன செய்வது?

அய்யா.. ஒரு விசயத்தை புரிந்து கொள்ளவும் சீனாவின் புரட்சி ஒரு நாள் இரண்டு நாளில் நடந்து விடவில்லை சில பத்து வருடங்கள் தொடர்ந்து நடந்த ஒரு விசயம். குறீப்பாக மக்கள் மன்றங்களை கட்டியமைத்து எல்லா அரசு அதிகாரத்திலும் மக்களின் முழுமையான பாத்திரத்தை உறுதிப்படுத்திய ஒரு புரட்சி அது.

அதனால் அங்கு ஆட்சிக்கு வரும் ஒரு தலைமை மக்கள் விரோதமாக இப்படி அப்பட்டமாக வெல்லாம் நடந்து கொள்ள் முடியாது. அப்படி நடந்து கொண்டு ஆட்சியில் நிலைக்க முடியாது. ஒவ்வொரு பகுதி அளவிலும் மக்களின் கைகளீல்தான் அதிகாரமுள்ளது. இது சீனாவின் அந்த கால நிலைமைகளை நேரில் சென்று பார்த்து எழுதிய பல்வேறு முதலாளித்துவ அறிஞர்களின் கட்டுரைகளைப் படித்தால் தெரியும்(எழுதிய பலர் கம்யுனிசம் மாற்று என்று நம்பிக்கை இல்லாதவர்கள் என்பதை கவனத்தில் கொள்க).


அன்றைய கம்யுனிஸ்டு கட்சியில் இரு விதமான போக்கு நிலவியது: ஒன்று கட்ரியில் அதிகாரம் செலுத்திய முதலாளித்துவ கோஸ்டிகள், இரண்டு மக்களின் தலைவரான மாவோவின் தலைமையிலான சோசலிச குழு. முதல் குழுவால் கட்சியில் அதிகாரம் செலுத்தியும் நாட்டின் கொள்கை முடிவுகளில் அதிகாரம் செலுத்த இயலாத நிலைமையை ஒப்பிட்டு புரிந்து கொள்ளவும். இதற்க்கு காரணம் கீழே மக்கள் மீது ஆதிக்கம் செலுத்திய சோசலிச குழு(இந்த அதிகார பிரிவினை எவ்வாறு இப்படி perfect ஆக ஏற்பட்டது என்பதை புரட்சி நடந்த வரலாறைப் படித்தல் புரிந்து கொள்ளலாம்).

அதாவது முதாலாளித்துவ மீட்சிக்கான திட்டங்களை தலைமையின் ஒரு பகுதி வைக்கும் போதெல்லாம் மாவோ அதை எதிர்த்து அம்பலப்படுத்துவார், அதை மக்கள் மத்தியில் கொண்டு சென்று நாடு தழுவிய விவாதத்தை ஏற்படுத்துவார். இது அடிமட்டத்தில் கிளப்பும் அழுத்தம் தாங்காமல் மவோ தலைமையிலான குழுவின் கூற்றுக்களே கடைசியில் பெரும்பான்மை பலம் பெறும்.

இந்த முதலாளித்துவ மிட்சி முயற்சியை மாவோ இருந்த வரை கட்டுப்படுத்த முடிந்தது. மாவொவிற்க்கு பிறகு கட்சியில் ஏற்கனவே ஆதிக்கம் செலுத்திய முதலாளித்துவ தலைமை அதிகாரத்துக்கு வந்து நிதானமாக மக்களின் கண்ணை உறுத்தா வண்ணம் தனது திட்டத்தை நிறைவேற்றியது.

சரி மாவோ தலைமையிலான கொள்கை முடிவுகளை நடைமுறைப்படுத்துவதில் ஏற்ப்பட்ட சிக்கல் என்ன? இதை நடைமுறையில் சீர்குலைக்க கட்சி அதிகாரத்தில் இருந்த எதிரணி தனது அதிகார வலிமையைக் கொண்டு திட்டங்களை பாய்ச்ச்லாக நடைமுறைப்படுத்தும் ஒரு முனைக்கு செல்வது அல்லது நடைமுறைப்படுத்தாமல் கிடப்பில் போடும் இந்த முனைக்கு செல்வது என்று அழிவு வேலைகளில் நைச்சியாக ஈடுபட்டனர்(ஒரு பகுதியில் உற்பத்தி குறித்து ஒரு அள்வு-எ.காவுக்கு ஒரு டன் - என்று நிர்ணயித்தால் இந்த குழு ஒன்று பாய்ச்சல் வேகம் பத்தாது அதனால் 10 டன் என்று மாற்றச் செய்து அழிவுண்டாக்கும், இல்லை சூழ் நிலை சரியில்லை அதனால் 0 டன் என்று அழிவுண்டாக்கும்). இவையெல்லாம் கட்சியில் அம்பலப்படுத்தப்பட்டு அவர்கள் மக்கள் மத்தியில் பதில் சொல்லவைக்கப்பட்டனர், பலர் தண்டிக்கப்பட்டார்கள்.

குறிப்பாக (அவரது பெயர் தற்பொழுது ஞ்பாகம் இல்லை) ஒரு தலைவரை இருமுறை மக்கள் மத்தியில் அம்பலப்படுத்திய மாவோ அவரை கடைசிவரை கட்சியிலிருந்து நீக்கவில்லை. இதன் காரணம் வேறொன்றுமில்லை, மக்கள்... மக்கள்... மக்கள் முடிவு செய்வார்கள் என்ற நம்பிக்கை. ஆனால் மக்களிடம் தலைமையில் உள்ள எதிரணீகளீன் சதியை கொண்டு செல்லும் இணைப்பு இழை மாவோவுக்கு பிறகு அறுந்தது. அந்த இருமுறை மன்னிக்கப்பட்ட தலைவரே அதிகாரத்தைப் பிடித்தார்.

மற்றபடி அபின் தேசம் என்ற அறியப்பட்ட சீனா, தொடர்ந்து 30 வருட உள் நாட்டு, வெளி நாட்டு, ஆக்கிரமிப்பு யுத்தத்தால் முற்றிலும் சீர்குலைந்து, அதே காலகட்டத்தில் இந்தியாவின் வளர்ச்சியை விட பல மடங்கு அதல பாதாளத்தில் இருந்த ஒரு நாடு. புரட்சிக்கு பிறகு அபரிமிதமான வளர்ச்சி பெற்றது. எந்த நாட்டையும் சுரண்டாமல். இது அதிசயம்தான். இதில் முந்தைய சமூகத்தின் படு கேவலமான நிலைமையின் பாதிப்பின்றியா நடந்திருக்கும்? பாதிப்பு இருக்கும்.. அவைதான் ஏகாதிபத்தியங்களால் ஊதிப் பெருக்கப்பட்டது.

மாவோவின் ஒரு அரைகூவலுக்கு மக்கள் எதையும் தியாகம் செய்ய தயாராயிருந்தார்கள். கொசு ஒழிப்பு இயக்கம், நதிகளை கட்டுப்படுத்தும் அதிசயங்கள் பல செய்த இயக்கம், நாட்டின் ஐந்தாண்டு திட்டங்களை திட்டமிட்ட காலத்தைவிட குறுகிய காலத்தில் சாதித்து மிக விரைவாக் சோசலிசத்தை எட்டிய பொருளாதார வளர்ச்சி. பொருளாதாரம் சோசலிசத்தை எட்டுவது ஒன்றும் சாதரணமான விசயமில்லை. அதுவும் சீனா ட்புள் ஜம்ப் செய்தது - ஒன்று இந்தியாவைவிட படுபாதளத்தில் இருந்த பொருளாதாரத்தை முதலாளித்துவ பொருளாதராத்துக்கு நாடு முழுவதும் பரவலாக கொண்டு வந்தது, அடுத்து சோசலிச பொருளாதாரத்துக்கான கட்டுமானங்களை வெற்றிகரமாக நிறுவியது..... இப்படி பல சாதனைகள் கொண்ட காலகட்டம் அது. அதனால்தான் இன்றும் மாவோ, சீனாவின் மக்கள் நாயகன்.

ரஸ்யா ஸ்டாலின் பற்றீயதும் கூட பல புரளிகளின் அணிவரிசைதான். இது குறித்து பல இடங்களில் எழுதியாயிற்று.

இவர்களின் ஆட்சிக்காலங்களில் பலர் இறந்தனாரா? ஆம், ஆனால் அவை சுற்றீ வளைத்து எதிரி நாடுகள் செயற்கையாக உருவாக்கிய பொருளாதார நெருக்கடிகள், ஏற்கனவே உலகப்போரில் அழிந்து நாசமான உள்கட்டமைப்புகள்(குறிப்பாக ரஸ்யா, ஒரு உலகப் போர், தொடர் உள் நாட்சு யுத்தம், எல்லை அபகரிக்கும் யுத்தம்(இந்த யுத்தத்தில் மாஸ்கோவில் 4 லட்சம் தொழிலாளர்கள் லெனின் அழைப்பை ஏற்று அதிகப்படியாக உழைக்க முன் வந்தார்கள்- சிலர் சொல்வது போல மக்கள் எதிராக இருந்தால் எப்படி ஆட்சி நிலைத்து நிற்க்க முடியும்?), பிறகு வந்த பஞ்சம், ஒரு உள் நாட்டுச் சதி, இரண்டாம் உலகப் போர்), புரட்சிக்கு பிந்தய உள் நாட்டு, வெளி நாட்டு ஏகாதிபத்திய சதிகள்...

இன்னும் சிறப்பாக சொன்னால் அன்றைய நிலைமையில் வேறு விதமான ஆட்சியிருந்தால் இதைவிட படுகேவலாமன நிலை ஏற்பட்டிருக்கும் ஆனால் அதை ஊதிப் பெருக்க வேண்டிய அவசியம் ஏகாதிபத்தியத்துக்கு இருக்காது. நாமும் அதைப் பற்றி இன்றுவரை விவாதம் செய்து கொண்டிருக்க மாட்டோ ம்.


ஒன்னுமில்லாத லோக்கல் ரௌடி சதாம் அண்ணாச்சியை ஆப்படிக்கவே பல தில்லாலங்கடி வெலை செய்த ஏகாதிபத்தியம்(பிபிசி யின் முக்கிய பிரமூகரின் மர்ம மரணம், டாகுமெண்ட் போர்ஜரி, அதிபயங்கர ஆயுதம் பற்றிய டூபாக்கூர், இதில் கொடுமையாக் செப் 11 யை அரசே செய்திருக்கு என்று பல முதலாளித்துவ அறிஞர்களே ஆதாரத்துடன் பேசுகிறார்கள்). ஸ்டாலின், மாவோ விசயத்தில் எந்த அள்வு வேலை செய்திருப்பார்கள்?

சாதாமுக்கே இப்படியென்றால். அமேரிக்காவின் இருப்பையே கேள்விக்குள்ளாக்கியா மாபெரும் தலைவர்கள் பற்றி என்னவிதமான முயற்சிகள் நடந்திருக்கும் என்பது கற்பனைக்கெட்டாத ஒரு விசயம்.


அதனால் இந்த அவதூறுகள் பற்றி எடை போட விரும்புகிறவர்கள் சீனா, ரஸ்யா பற்றிய தங்களது வரலாற்று , பொருளாதார அறிவை வளர்த்துக் கொள்ளவும்.

இது குறித்து மேலும் ஆணித்தரமான தகவல்களுக்கு:

tamilcircle.net (இங்கு சுந்தர ராமசாமி பற்றீய ஒரு விமர்சன கட்டுரையில் விரிவாக பேசியிருக்கிறார்கள் - புத்தகங்கள் பகுதி)

புதியகாற்று எனும் வலைப்பூவில் சில கட்டுரைகள் உள்ளன.


யார் வேண்டுமானலும் வந்து எனது வாயை பிடுங்கலாம். தக்க பதில் கொடுக்கப்படும்.....

நன்றி,
அசுரன்

அசுரன் said...

செல்வனின் அரைகுறை பிதற்றல் பதிவிற்க்கு(வழக்கம் போல), கம்யுனிசம் பற்றிய வலைப்பூ மக்களின் அறிமுகம் போதாமையை கணக்கில் கொண்டு இந்தப் பதில்:

*************

இந்தியாவில் ஒரு சில
பகுதிகள் வீங்கிப்
பெருப்பதும் பெரும்
பகுதிகள் ஒன்றுமில்லாமல்
சுருங்குவதும் நடந்து
வருகீறது என்பதை கவனத்தில்
கொள்க. நாட்டில் ஒரு கிராம
மக்களின் சராசரி வருமானம்
என்பது
அதளபாதாளத்திற்க்குப்
போய்விட்டதாக அரசு புள்ளி
விவரம் சொல்கிறது(சாய்
நாத் கட்டுரை)(இதே
நேரத்தில் 100 புதிய
மில்லினியர்கள்
இந்தியாவில்
உருவாகியிருக்கிறார்கள் -
ஆக சராசரி என்னவோ அதேதான்
இருக்கும் போல). சமீபத்தில்
வறுமை கோடு பற்றிய அரசு
வரையறையை மாற்றீயது
தொடர்பாக கடும் விவாதம்
நடந்ததைக் கவனிக்க நமது
டாலர் செல்வனுக்கு
நேரமிருந்திருக்காது.

அப்புறம் அப்படியே,
அதிகமாகியிருக்கும்
பட்டினி சாவுகள்(அரைப்
பட்டினி ஆசாமிகள்
அதிகமுள்ள் நாடு அதாவது
சஹாரா பாலைவனத்தை விட
அதிகம் என்று UNO புள்ளி
விவரம் சொல்கிறது)(இந்த
தொடர்ச்சியான பட்டினி
சாவுகள் 1990 க்கு முன்பு
கிடையாது என்பதை மனதில்
கொள்க),


social indicator தர வரிசையில்
சறுக்கி 20 புள்ளிகள்
இந்தியா இறங்கியிருப்பது
பற்றி(இதுவும் UNO தான்),
விவசாயிகள் தற்கொலை(இதுகூட
1990க்கு முன்பு இந்தளவுக்கு
கிடையாது(இரு வருடத்தில் 1
லட்சம்)), அதளபாதாளத்தில்
தொங்கும் விவசாய குடிகளின்
ஆண்டு சராசரி
வருமானம்(இதுவும் அரசு
புள்ளிவிவரம்தான்),
குழந்தைகளுக்கான ஆபத்தான
நாடுகளில் 7 வது இடம்(இது
மட்டும்தான் அரசு புள்ளி
விவரம் கிடையாது).


அப்புறம் வெளிப்படையாக
நாட்டை அடகு வைத்துள்ள
விதை நெல் சீர்திருத்த
சட்டம்(விவசாயி
விதைப்புக்கு நெல்
செர்த்து வைப்பதை தடை
செய்யும் சட்டம்), அணு ஆயுத
ஒப்பந்தம், தண்ணீர்
தனியார்மய சட்டங்கள்,
ராணுவ ஓப்பந்தங்கள்,
காப்புரிமை சட்டம் காரணமாக
மருத்துவ
வசதியின்றி(குறிப்பாக
ரேபிஸ்) சமீபத்தில் மாண்ட
ஒரிஸ்ஸா, தமிழக, கர் நாடக
அப்பாவிகள், விலை அதிகமான
அத்தியாவசிய மருந்துகள்,
அப்படி மருத்துவ வசதி
மறுக்கப்பட்ட நோயாளிகளை,
ஏழை நோயாளிகளை சோதனை
எலியாக பயன்படுத்த அனுமதி
கொடுக்கும் சட்ட
திருத்தம், இந்த மருத்துவ
துறை அவலங்களை கூட \'இந்தியா
மெடிக்கல் டூரிஸ
மைய்யா\'மாகி வருகிறது
என்று பிரச்சாரம் செய்து
மறைக்கலாம்.


இந்த சட்டங்களைப் பற்றி
நாடாளுமன்றத்தில் இது வரை
ஒரு விவாதம் கூட
நடக்கவில்லையே அதைப் பற்றி
டாலர் செல்வன் என்ன
சொல்வார்?


ஒரு பக்கம் சர்க்கரை போன்ற
பொருட்களீன் சந்தை விலை
ஏறீவருவது, அதே நேரத்தில்
விவசாய்யிகளிடம் இவற்றை
கொள்முதல் செய்யும் விலை
குறைந்து கொண்டே வருவதும்
பற்றியெல்லாம் டாலருக்கு
கவலையில்லை. அவரது கவலை
எப்படி இந்த
கம்யுனிஸ்டுகள் மக்களிடம்
உண்மைகளை சொல்வதிலிருந்து
கெடுப்பது என்பதுதான்.


டாலர் செல்வனின் டாலர்
பாசமும் அவரது போலி
தேசப்பற்றும் எனக்கு
புதிதல்ல.


லட்சக்கணக்கில் அத்துக்
கூலிக்கு நவீன நடோ டிகளாக
விவசாய நிலத்தை விட்டு
விட்டு ஓடி வரும்
கிராமப்புற மக்கள்
நாட்டின் வளர்ச்சிக்கு ஒரு
அடையாளம் என்பவன் ஒரு
வக்கிர பாண்டியனாகத்தான்
இருக்க முடியும்.
அடுத்தமுறை வசந்த
பவன்களுக்கு சென்றால் இலை
பொறுக்கும் சிறுவனிடம்
பேசிப்பாருங்கள்,
நாகப்பட்டினம், தஞ்சை,
புதுக்கோட்டைகளின் ஏக்கம்
தெரியவரும். தங்கையின்
படிப்பு, அக்காவின்
திருமணம், மருத்துவ
செல்வுகள், அடுத்த
விதைப்புக்கு ஏற்பாடு
செய்வது.... இதேல்லாம்
டாலரில்
சம்பாதிப்பவருக்கான
கவலைகள் கிடையாது.


அப்படி உண்மையில் இவருக்கு
கவலையிருந்தால் வலைப்பூ
உலகில் ஒரு விவாசாயி
மாதமாதம் கட்டுரை எழுதி
கதுறுகிறார், அதற்க்கு
இதுவரை ஒரு பதில் ஒரு
கட்டுரை, பின்னூட்டம்
எழுதியிருக்கிறாரா இந்த
அறிவு ஜீவி(??) டாலர் செல்வன்?


வேலைவாய்ப்பு குறைந்து
விட்டது என்று நான்
சொல்லவில்லை இந்தியாவின்
RBI(reserve bank of India) சொல்கிறது. ஏழு
வருடத்தில் 70,000 சிறு
தொழிற்சாலைகள் கர்
நாடகாவில்
மூடப்பட்டுவிட்டதாக நான்
சொல்லவில்லை அரசு
சொல்கிறது, இப்படி இந்தியா
முழுவதும் வேலை
இழந்தவர்கள் 15
லட்சத்திற்க்கும்
அதிகமானவர்கள் இவர்கள்
இன்று காண்ட்ராக்ட்
தொழிலாளர்களாக
பிழியப்படுகிறார்கள்.
இதைப் பற்றி கூட டாலர்
செல்வன் ஒரு கட்டுரை
எழுதியுள்ளார்(அவர்
முரன்பாடு முத்தன்னா
என்பதை இங்கும்
நிருபிக்கீறார்).


இந்தியா is no more a low cost destination என்றூ
கூறி MNCக்கள் சிறிது
சிறிதாக கடையை கிளப்பிக்
கொண்டிருக்கிறார்கள்.


மிக சமீபத்தில் WTO வால்
இந்தியாவுக்கு ஒரு மசிரும்
கிடைக்கலன்னு எல்லா
அரசியல், அதிகார வர்க்க
தலைகளும் கட்டுரைகள்,
மேடைப்பேச்சுகள்,
பேட்டிகளில் சொன்னதை
அவதனிக்கும் அவசியம் டாலர்
செல்வனுக்கு கிடையாது.


அப்துல் கலாம் ஒரு நல்ல
நடிகர் அதுவும்
நயவஞ்சமமிக்க ஒரு காமெடி
நடிகர். மக்கள் பிரச்சனை
எதிலும் மிக கவனமாக
கருத்துச் சொல்வதை
தவிர்த்து \'கனவு காண் கனவு
காண்\' ஊரை ஏமாற்றும் ஒரு
பதர்....


ஆம திரு டாலர் சொல்வது போல
இந்தியா முன்னேறும்.... ஒரு
விசயத்தை கவனத்தில்
கொண்டால்....


இந்தியாவின் எல்லைகள்
நாட்டைச் சுற்றி ஓடவில்லை
நாட்டின் குறுக்காக
ஒடுகிறது என்பதை கவனத்தில்
கொண்டால் எந்த இந்தியா
ஒளிர்கிறது என்பதும் எந்த
இந்தியா தேய்கிறது
என்பதும் தெளிவாகும்.


அய்யா செல்வன் தங்களுக்கு
உண்மையில் மிகவும் வலு
இருந்தால் எனது பொருளாதார
கட்டுரை எதையாவது
சீண்டிப்பாருங்களேன்....


இதோ Url: kaipulla.blogspot.com
poar-parai.blogspot.com


கான்சர் திட்டுக்களும்
வளர்ச்சிதான் என்ன செய்ய
நாங்கள் அவற்றை
வெட்டியெறிந்துதான்
பழக்கம்

***********

CIA புள்ளீவிவரத்தை நம்புவது
அவரவர் விருப்பம். CIAவின்
நம்பகத்தனமை பற்றி குறைந்த
பட்ச பகுத்தறிவு
உள்ளவனுக்கும் தெரியும்.
இப்போ கூட அது
நைஜீரியாவில் போர்
குழுக்களுடன் இணைந்து
செயல்பட்டது தொடர்பான
இமெயில் பேச்சுக்கள்
பத்திரிக்கைகளில்
அம்பலமாகி நாறியுள்ளது.
டாலரின் டாலர் பற்று
புள்ளியறுக்க வைக்கிறது...
சீ... ஸாரி
புல்லரிக்கவைக்கிறது.

அசுரன்.

Unknown said...

அன்புள்ள அசுரன் அவர்களே இதை ஏன் தனிப்பதிவாக தாங்கள் இடக்கூடாது? இன்னும் அதிகப் பேர் படிக்க ஏதுவாய் இருக்கும் .

அசுரன் said...

Pottutaa poochi....

aanaa, ennooda thalaththukku vanthu aatharavu kodukkanum....

Unknown said...

//aatharavu kodukkanum....//

இது எப்படி இருக்குன்னா யானை வந்து எரும்புகிட்ட ஹெல்ப் கேட்ட மாதிரி இருக்கு :)

நாடோடி said...

யாப்பா...யாப்பா... தங்கமுடியலையா...
கம்யுனிச வாந்திய தாங்கமுடியல...

இப்படி புள்ளிராஜா லெவலுக்கு ஒவ்வருத்தரும் புள்ளிவிரமா கொடுத்து கொல்லாரங்கய்யா...

பின்னூட்ட பொட்டியில தனி பதிவே போடுராங்கய்யா...

அய்யா கடந்த 2 வருசத்தில petrol விலை இவ்வளவு ஏறியாதுனாலதான் இந்தியா ஒளிர்கிறதா?... அல்லது அதற்கு போர்கொடி தூக்கி கூலை கும்பிடு போட்ட சிவப்பு கொடிகளா இந்திய வறுமையை போக்க போகிறார்கள்?..

எது இருக்கோ இல்லையோ கம்யூனிஸம் நல்ல காமடியா இருக்குதுபா...

இறையடியான் said...

கம்யுனிஸ்ட் அன்பர்களே!!

கம்யுனிஸம் எப்போழுதோ முதலாளிதுவத்திடம் தோற்று பல வருடங்கள் ஆகிவிட்டன.இப்போழுது இருப்பது கம்யுனிஸ்ப் போர்வையில் உள்ள முதலாலிதுவமே.நமது கம்யுனிஸ்ட்டுக்கள் பெப்சியை குடித்துக் கொன்டே அவர்களால் ஆதாயமும் பெற்றுக்கொண்டே மேடையில் அவர்களை எதிர்ப்பவர்கள் (சும்மாகாச்சும்). இவர்களால் சமுதாயத்திற்க்கு ஒரு பயனுமில்லை.கம்யுனிஸ்த்தை செயல் படுத்திய நாடுகள் அரசு ஊழியர்களுக்கே ஊதியம் கொடுக்கமுடியாத "வல்லரசுகளாக???!" உள்ளது. அன்பர் ஒருவர் சீனாவை பற்றி சொன்னார் அங்கு இருப்பது பாசிஸமாகும். கம்யுனிஸமும் பாசிஸத்தின் ஒரு பகுதியே. முதலாளி தொழிலாளர்களை சுரண்டினால் அது முதலாளித்துவம். அரசு மக்களை சுரண்டினால் அது கம்யுன்ண்னிஸம். முதளாளித்துவமும் கம்யுனிசமும் தோற்று போய்விட்டன. இவைகள் அல்லாமல் வேறு ஒரு பொருளாதாரக் கொள்கையை உருவாக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. இனியாவது "செங்கொடி வேந்தர்கள்" விழிப்பார்களா?