Wednesday, January 07, 2015

ராம லட்சுமனர்கள்தான் ரைட் பிரதர்ஸ் !

இரண்டு நாட்களுக்கு முன்னால் வாஷிங்டன் போஸ்டில் " இந்தியர்கள் 7000 ஆண்டுகளுக்கு முன்னே விமானங்கள் கண்டுபிடித்துவிட்ட்டார்கள்" என்று அறிவியல் காங்கிரஸில் பேசிய ஆட்களை மேற் குறிப்பிட்டு ஒரு செய்தி வெளியிட்டார்கள் அதன் பின்னூட்டங்களில் இத்தனை ஆண்டுகளாய் கொஞ்சமாய் கொடி கட்டிப் பறந்த இந்துத்துவ வாந்திகளின் மானத்தை காற்றுக்கு மேலே கிரகங்கள் தாண்டியெல்லாம் பறக்கவிட்டுக் கொண்டிருக்கிறார்கள் சர்வதேசத்தினர். ஏற்கனவே நாசா எடுத்த மணல் திட்டை ராமனின் பாலம் என்று பாஜக ஆட்சியிலும் அதன் பின்னரான காங்கிரஸ் ஆட்சியிலும் ஊதி ஊதியே தமிழகத்தின் வளத்தை குறுக்கியும் அதன் பின்னர் அமைந்த தற்போதைய ஆட்சியில் சிங்கள இனவாத அரசுக்கு உதவிசெய்யும் விதமாக பல்லாயிரம் கோடிகள் கொட்டிக் கொடுக்கும் வருமான வழியை அடைக்கவேண்டாம் என்ற நல் எண்ணத்தாலும் சுப்பிரமணியன் ஸ்வாமி போன்ற நாசகார சக்திகள் மூலம் ஒரு இயக்கமாகவே முன்னெடுத்த பாஜக இப்போது இன்னும் ஒரு படி மேலே போய் அறிவியல் காங்கிரஸ் மாநாட்டில் கூட தன் முட்டாள்தனங்களை அவிழ்த்துவிட்டுக் கொண்டிருக்கிறது.

7000 ஆண்டுகளுக்கு முன்னர் விமானம் அதுவும் கிரகம் விட்டுக் கிரகம் ( காலக் கிரகமடா) போகும் எந்திரங்கள் கொண்டிருந்த ஆட்கள் என்ன டேஷுக்காக ராமரின் வானரப் படையும் அந்த மூன்று கோட்டு அணிலும் கொண்டு ராமேஸ்வரத்தில் இருந்து இலங்கைக்கு பாலம் கட்டிக்கொண்டு இருந்தார்கள்? சரி கட்டியதுதான் கட்டினீர்கள் எங்கள் கரிகாலன் கட்டிய அணையைப் போல கொஞ்சம் திடமாகவாவது கட்டித் தொலைத்திருக்கக் கூடாதா என்றால் அதுவும் இல்லை. கடல் அழிப்பில் ஒழிந்து போனதாம் . எந்த எஞ்சினியரிங் காலேஜில் ராமர் பட்டித்தாரோ யாருக்குத் தெரியும்? 

உங்கள் அறிவியல் ஞானமெல்லாம் என்ன லட்சணம் என்பது உலகுக்கே தெரிந்த ஒன்று. பாஜக ஆட்சிக்கு வந்தது முதலே இன்று வரை ஆறு மாதங்களுக்கு மேலாக ஒரு டேஷையும் பிடுங்காமல் இப்படி இந்துத்துவ கொடிகளை மட்டுமே தூக்கிக் கொண்டு திரிந்தால் உலகம் காரித் துப்பாதா? துப்பத்தான் செய்யும் செய்கிறதுதான். 

7000 ஆண்டுகளுக்கு முன்னர் இங்கே விமானம் கண்டுபிடித்தோம் என்பதெல்லாம் உங்களின் கற்பனையாக கிடந்துவிட்டுப் போகட்டும் ஆனால் 7000 ஆண்டுகளுக்கு முன்னால் நீங்கள் இங்கே இல்லவே இல்லை என்றுதானே சரித்திர ஆய்வாளர்கள் சொல்கிறார்கள்? 

சிந்துச் சமவெளி நாகரீகம் முதல் , ஆதிச்சநல்லூர் அகழ்வுகள் வரை இதைத்தானே சொல்கிறார்கள்? உங்களுக்கு மட்டும் எங்கிருந்தய்யா வந்தது 7000 ஆண்டு பாரம்பரியம் எங்களின் நாட்டில்?.  இந்த லட்சணத்தில் நீங்கள் இதை இந்துக்களின் தேசம் என்கிறீர்கள்? 60000 மனைவிகளைக் கொண்ட தசரதனுக்கு நாளைக்கு ஒன்றென்றால் கூட கூடி வாழ பல்லாண்டுகள் ஆகுமே சாமி என்ற என் தாத்தன் பெரியாரின் கேள்விக்கே இன்று வரை உங்களால் பதில் சொல்ல முடியவில்லையே?

ரோம், எகிப்து, சீனா, சிந்து, திராவிட, நாகரிங்கள் எல்லாம் ஒற்றை ஆவணங்களையாவது கொண்டு எங்களின் இருப்பை நாங்கள் யார் என்பதை சொல்லிக் கொண்டிருக்கிறதே உங்களுக்கு அப்படி ஏனய்யா ஒன்றுமே கிடைக்கவில்லை? ராவணன் கட்டிய கோவில் , அசோகவனம் என்ற சிதிலங்களை காட்டவாவது இலங்கையில் கொஞ்சம் கிட்டி இருக்கிறது என்கிறார்கள் வரலாற்றாளர்கள், திராவிட நாகரீகம் பற்றி சொல்லவே வேண்டியதில்லை, கல்வெட்டுக்களாகவும், அகழ்வாய்வின் மிச்சங்களாகவும் ,சங்க இலக்கியங்களாகவும் எங்களிடம் ஏகப் பட்ட பாடல்கள் உண்டு, ஆதாரபூர்வமாகவே. உங்களிடம் கீதையும், ராமாயணத்தையும் விட்டால் கோவணத் துணிகூட மிஞ்சவில்லையே? 

திப்புசுல்தான் தான் ராக்கெட் விட்ட முதல் இந்தியன் என்கிறது 1000 ஆண்டுகளுக்குள் ஆன வரலாறு, வெடி மருந்தைக் கண்டுபிடித்தது சீனா என்று உலகமே ஏற்றுக் கொள்கிறது. 7000 ஆண்டுகளுக்கு முன் ஏரோப்ளேன் கண்டு பிடித்தது நாங்கள்தான் என்று நீங்கள் சொல்லும் போதே உலகம் தன் சகல துவாரங்களையும் திறந்து சிரிக்க ஆரம்பித்து விடுகிறதே ஏன் என்று கொஞ்சமாவது சிந்தித்தீர்களா? 

உங்கள் இலக்கியம் வரலாறு எல்லாமே எங்கள் மேல் செலுத்தவென்றே உங்களால் உங்கள் சனாதன பயமுறுத்தல்களால் எங்கள் மேல் தினிக்கப் பட்டு மக்கள் மாக்களாய் இருந்ததால் கடவுள்களின் பேரைச் சொல்லி இதிகாசங்கள் புராணங்களைச் சொல்லி வயிறு வளர்த்த ஆட்களால் உண்டானது என்று எங்களுக்கு தெரிந்து பல்லாண்டுகள் ஆயின ஆனலும் ஆட்சியும் அதிகாரமும் எதையும் சொல்லி ஏமாற்றும் திறனும் உங்களிடம் இருக்கிறது என்பதாலேயே ஏழாயிரம் ஆண்டுகளுக்கு முன்னாலேயே எங்களிடம் ஏரோப்பிளேன் இருந்ததென்று பேசிக் கொண்டிருக்கிறீர்கள் நாங்களும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம்!!

குஜராத்தின் கடல் எல்லையில் துவாரகா என்ற இடம்தான் துவாரகை என்ற மகாபாரத வரலாற்றின் இடம் என்று சொல்லி ஒரு கடலாய்வு செய்தீர்களே என்ன ஆயிற்று என்ற சர்வதேசத்தின் கேள்விகளுக்கு உங்களிடம் இருந்து பதிலே இல்லை. மாட்டை புனிதமாக்கியது போல நாட்டை புனிதமாக்கும் உங்கள் செயலால் மானம் கப்பல் ஏறிக் கொண்டிருக்கிறது. ஆன்மீகத்தைத் தாண் ஆண்டுகொண்டீர்கள் அறிவியலைக் கொஞ்சம் மிச்சம் வைய்யுங்கள்.

இப்படியே போனால் உங்கள் அமைச்சர்களில் யாராவது ராம லட்சுமனர்கள்தான் ரைட் பிரதர்ஸ் என்று சொன்னாலும் சொல்வார்கள்!!


3 comments:

நம்பள்கி said...

Excellent! சிந்தனையை தூண்டும் நல்ல இடுகை!

தமிழ்மணம் +1

பின்குறிப்பு:
நான் தமிழ்மணம் +1 ஒட்டு உங்களுக்கு போட்டதிற்காக என் இடுகைக்கு ஒட்டு போடவேண்டாம். இது மொய் அல்ல. பதில் மொய் வைக்க வேண்டாம். நான் என் ஆசைக்காக எழுதுகிறேன்..!

ஏனென்றால்..உங்கள் பதிவு அருமை!

Gurunathan said...

பெரும் மலையைப் பெயர்த்தெடுத்து பறந்து சென்றார் அனுமார்.
இதன்மூலம் ஜெசிபி இயந்திரம், சரக்கு விமானம் என இரு கண்டுபிடிப்புகளுக்கு அப்போதே அடிகோலியவர் அனுமார்.

#பள்ளி நூல்களில் இனி இப்படியும் அறிவியல் சொல்லித் தரக் கூடும்.
அறிவியலுக்கு உண்டான மரியாதை போச்சே உங்களால், பாவி காவிகளே!!

செங்கதிரோன் said...

such a wonderful article....you have written very nicely. the words which you used are very simple and attractive...