நேற்று கொரியாவில் இருந்தவாரே என்னோடு சாட்டில் பேசிக் கொன்றிருந்த செந்தழல் கொரிய பாசையில் வணக்கம் சொன்னார் என்னடா திடீரென்று நம்மிடம் பேச்சே இல்லை ஆனால் கழகச் செம்மல் டைப்பிங் டைப்பிங் என்று காட்டுகிறெதென்று யோசித்தவாரே இருந்தால் தமிழ் மணத்தில் என்னையும் வைத்து காமெடி பண்ணியிருந்தார் சரி போனால் போகட்டும் என்று விட்டுவிட்டேன் இன்று காலையில் பார்த்தால் மீண்டும் ஒரு போட்டோ போட்டு பாஸ்டன் பாலாஜிக்கு கண்டனம் என்ன கொடுமை இதெல்லாம் கேட்க ஆளில்லை என்ற எண்ணமா?
சலங்கை ஒலி படத்தில கமல்ஹாசனை ஒரு குண்டுப் பையன் புடிப்பானே அத விட நல்ல காமிரா என்கிட்டயும் இருக்குன்னு ஒங்களுக்கும் தெரியனும்ல..
எங்களாலும் செந்தழலை விட நல்ல பிகர்களை வைத்து போட்டோ பிடிக முடியும் என்ற போதிலும் கொரிய, தாய்லாந்து, டுனீசிய பிகர்களோ ஏன் நம் பக்கத்து ஊர் கருவாச்ச்சி காவிய கதாநாயகிகளோ ஒத்துக் கொள்ளாத காரணத்தாலும், (கொடுத்து வைச்ச ரவிக்கு ஒரு கண்ணடிப்போடு எனக்கு கிடைச்ச சப்ஜெக்டுகளை வைத்து எனது புகைப்பட ஆல்பத்தை காட்சிக்கு வைக்கிறேன் . பாத்துடுவோம் நானா இல்லை ரவியொட தாய்லாந்து பிகரான்னு

"எல்லா மொழியும் கத்துக்கிற வரைக்கும் தான் ரவி பஞ்சு போல இருக்கும், கத்துகிட்டா காத்துமாதிரி ஆகிடும்"

என்னோட இந்த கொலவெறிய எல்லாம் தீர்த்துக் கொள்ள புதுசா ஒரு போட்டொ ப்ளாக்கும் ஆரம்பிக்கிர எண்ணம் இருக்குங்கிறதை தாழ்மையா தெரிவிச்சுக்க கடமப் பட்டிருக்கேன்
