Tuesday, August 15, 2006

இந்தியா 59

இப் பதிவில் இருப்பவை வெறும் எண்களும் அதன் விளக்கங்களும் அல்ல 59 ஆண்டுகால இந்தியாவின் ஒரு இன்னொரு பக்கம். இதில் இழப்புகளும் இன்பங்களும் நிறைந்திருக்கும் ஒரு உயிர்ப்பான தேசத்தின் அடையாளங்கள்.

671 மில்லியன் வாக்காளர்கள் இதில் 322 மில்லியன் பெண்கள் உலகின் மிகப்பெரிய தேர்தலை நடத்துகிறோம்.
4663 தேர்ந்தெடுக்கப் பட்ட லோக்சபா வேட்பாளர்கள் இங்கிலாந்து 643 மட்டும்.
283 தேர்தல்கள் 14 பொதுத் தேர்தல் உட்பட.
8% பெண் உறுப்பினர்கள் 14ம் லோக்சபாவில் ஆனால் இந்தியாவின் ஊராட்சிகளில் 34 சதவிகிதம் அதாவது 3.5 மில்லியன் பெண்கள்.
173000 சதுர கிலோமீட்டர் பெரிய பாராளுமன்ற தொகுதி லடாக். உலகில் பெரியது மேற்கு ஆஸ்திரேலிய கல்கூர்லி 2255000 சதுர.கி.மீ.
2004 தேர்தலில் 54 சதவிகித வாகுப் பதிவு அமெரிக்க 2004ல் 64% 14ம் லோக்சபாவில் 2 சுயேட்சைகள் முதல் லோக்சபாவில் 37. காங்கிரசும் ஜனதா தள் ம் தலா 6 முறை பிளவு பட்டன.
3.37 மில்லியன் வாக்காளர்களுள்ள உலகின் ஒரே தொகுதி தில்லி புற நகர்.
93 முறை நம் சட்டம் மாற்றி அமைக்கப் பட்டது அமெரிக்காவில் 27 முறை 217 ஆண்டுகளில்.
12.83 % நாடாளுமன்ற உறுப்பினர்கள் 25 முதல் 40 வயதுக்கு உட்பட்டோர் முதல் தேர்தலில் 28.85%.
136 எம்பிக்கள் 14ம் லோக்சபாவில் குற்றப் பின்னனி கொண்டவர்கள்., முதல் மன்றத்தில் 0(யாருமில்லை).
147 எம்பிக்கள் பட்டப் படிப்பு படித்தவர்கள் 1952 ல் 85 பேர்.
553 மில்லியன் மெட்ரிக் டன் கச்சா எண்ணையை 2003ல் செலவிட்டுள்ளோம்.
100 மில்லியன் செல்லிடப் பேசிகள் அமெரிக்காவில் இருப்பது 195 மில்லியன்.
அன்னிய முதலீடாக இந்தியா வரவு 181000 கோடி.
ஒரு நிறுவனம் தொடங்க 71 நாட்களும் 11 நடைமுறைகளும் தேவை அமெரிக்காவில் 5 நாள் 5 நடைமுறைகள்.
14862000 கோடி வீட்டு உபயோக பொருள்கள் வங்கும் திறன் 583 மாவட்டங்களில் 100 உள்ளூர் பெருங்கடைகள் உட்பட. 785000கோடி இயற்கை மற்றும் தங்க சுரங்க கையிருப்பு
2% அரசு கடன்கள் தள்ளுபடி ஆகின்றன.
576 பில்லியன் பயண கிலோமீடர் நம் ரயில்வே இயக்கி இருக்கிறது 2004-05 இல் சீனா 571 பில்லியன் கி.மீ.
அரசுக்கு வரி செலுத்த ஒரு நிருவணத்துக்கு 264 மணி நேரம் தேவை அமெரிக்கவில் 325 மணி நெரம்.
ஒரு நாளைக்கு 670 மில்லியன் ரூபாய்கு பங்கு வர்த்தகம் பி.எஸ்.இ, சென்செக்ஸ்ஸில்.
2005 இல் 2560000கோடிக்கு பரிவர்த்தனை நடைபெற்றது, சேவைத்தொழில் ஏற்றுமதியில் 18000 கோடிக்கு வருவய் 2004 இல் மட்டும் 1990 ரிலோ 21400 கோடி 870 ச்தம் வளர்ச்சி.
இந்திய உள்னாட்டு முதலீடு 65.8 சதம், 2004இல் .
ஒரு நாளைக்கு 50 ரூபாய் கூட இல்லாத இந்தியர்களின் எண்ணிக்கை 260 மில்லியன்.
1 கி.மீக்கு 3 கார்கள் மோட்டர் வாகனங்கள் கானமுடியும்..
334 விமான நிலையங்கள். அமெரிக்காவில்
14883 பண்பட்ட நிலம் பயிர் செய்ய இருப்பது 558000 சதுர கீமி.
17189 கல்லூரிகள் பல்கலைகழகங்கள். 93000 ஆரம்ப பள்ளிகள் க்னிணி கொண்டவை.
19% ஆரம்ப பள்ளிகள் ஓராசிரியர் மட்டுமே.
25 சதவிகித பள்ளிக்கு மின்வசதி உண்டு.
நல்ல குடினீர் பெரும் பள்ளிகள் 76%. ,
900000 பள்ளிகள் இந்தியாவில் உண்டு..
500000 டாக்டர்கள் ஒவ்வொரு ஆண்டும் உறுவாகிறார்க்ள்.
9070 டாக்டர் பட்டங்கள் வழங்கப் பட்டன 2005 இல்.
350000 எஞினியர்கள் உறுவாகிறார்கள். 8
00000 எம்பிஏ பட்டதாரிகள் படித்து முடிக்கிறார்கள்,
1:41 விகித ஆசிரியர்கள் ஆரம்ப பள்ளிகளில் மொத்தம் இருப்பது 5.7 மில்லியன் ஆசிரியர்கள்.
400 மருத்துவக் கல்லூரிகள் அமெரிக்காவில் 125.
200000 அறிவியல் பட்டங்கள் வழங்கப் படுகின்றன.
ஆண்கள் 73% பெண்கள் 47% கல்வி பெற்றவர்கள்.
13 மில்லியன் குழந்தைகள் பள்ளி செல்வதில்லை.
9.9மில்லியன் மாணவர்கள் இந்தியாவெங்கும் நிறைந்திருக்கும் கல்லூரிகளில் படிக்கின்றனர்.
6 முதல் 14 வயதுக்கு உட்பட்ட 300000 குழந்தைகள் கிராம பள்ளிகளில் படிக்கின்றனர் அதாவது 16%.
25% பள்ளி ஆசிரியர்கள் ஆண்டு முழுவதும் பணிசெல்லவில்லை. உலக வங்கியில் இந்திய மதிப்பெண் 2.61, சீனா 4.21.
920 ரூபாய் தலைக்கு செலவழிக்கிறது இந்தியா தன் குடிமக்களுக்கு,/ஆண்டுக்கு.
கண்டு பிடிப்புகளில் இந்திய மதிப்பெண் 3.72.
119 பேர் ஆராய்ச்சி துறைகளில் ஒரு மில்லியனுக்கு.
2004 இல் இந்திய உயர் தொழில் நுட்ப ஏற்று மதி 13200 கோடி.
15 அணு உலைகள் தயார் நிலையில். 3087 மெகாவாட் மின்சார உற்பத்தி இந்திய மின் உற்பத்தியில் 20 சதவிகிதம்.
2001ல் 11076 அறிவியல் கட்டுரைகள் சமர்ப்பிக்கப் பட்டன.
116 கோடி காப்புரிமை வருமானம் இந்தியாவுக்கு2004 இல்.
14800 கோடி மருந்து ஏற்று மதி உலகின் 100%இல் 8% நமது பங்கு.
231 தயாரிப்புக்கு இந்தியா காப்புரிமை பெற்றுள்ளது.
2001 முதல் 2005 வரை ஏவப்பட்ட செயர்கை கோள்களில் இந்தியப் பங்கு 2% .
13 வின்கலங்கள் வெற்றிகரமாக.
125 பார்ச்சூன் கம்பெனிகள் இந்தியவிலும் .
2378 உயிர் தொழில்னுட்ப காப்புரிமைகள் பதிவுபெறக் காத்திருக்கின்றன.
13250 கோடி அடுத்த பத்தாண்டு களுக்கு வான்வெளி ஆராய்ச்சிக்கு ஒதுக்கீடு.
1000 த்துக்கு 32 பேரிடம் இணையவசதி.
12500 திரை அரங்குகள்,
250 மல்டி ப்ளக்ஸ்.
18.57 கோடி பேர் வாரம் 90 நிமிடம் ஒருமுறையாவது வானொலி கேட்கின்றனர்.
23மில்லியன் மக்கள் ஒரு நாளைக்கு படம் பார்க்கின்றனர். ஆண்டுக்கு 4பில்லியன் டிக்க்டுகள் விற்று தீர்கிண்ரன. பாலிவுட்டில் ஆண்டுக்கு 1.3பில்லியன் டாலர் வருமானம்.
108 மில்லியன் வீடில் தொலைக்காட்சி இருக்கிரது.
விளம்பர வருவாய் 13200 கோடி.
விளையாட்டு சந்தை ஆண்டுக்கு 30மில்லியன் டாலர்.
ஆண்டுக்கு 1050 படங்கள் வெளியீடு.
தினசரி டிவி பார்க்க 2 மணி நேரம் செலவிடுகிறோம். தொலைக்காட்சி வருவாய் 14800 கோடி.
47 பண்பலை வரிசை வானொலிகள்,
300 தொலைக்காட்சி அலைவர்சைகள்.
285 மில்லியன் டாலர் இந்திய அனிமேஷன் சந்தை மதிப்பு.
11000 பேர் தினம் செங்கோட்டையை தரிசிக்கிறார்கள்.
50 லட்சம் ஓலைச் சுவடிகள் உண்டு.
தொழிலாளர்களில் 28.3 % பெண்கள் அதில்.
36.1% 15 முதல்24 வயதுக்கு உட்பட்டவர்கள் .
308 மில்லியன் மக்கள் நகர்ப் புறங்களில் வசிக்கின்றனர் 29%.
1991 முதல் 2001 வரை 181 மில்லியன் மக்கள் பெருக்கம் ஒரு பிரேசில் அளவுக்கு.
86% மக்கள் சுத்த குடிநீர் கிடைக்கிரது.
43% மகப்பேறுகள் மருத்துவ மனைகளில் நடக்கின்றன.
51 % இந்திய அமெரிக்கர்கள் திறமைசார் வேலைகளில் வெள்ளை அமெரிக்கர்கள் 21.4%.
2004 இல் 33608 கொலைகள் 16137 பாலியல் பலாத்காரங்கள்.
1215 ரூபாய் ஒருவருக்கு அரசு மருத்துவ செலவுக்கு தருகிறது. .1.88 மில்லியன் இந்தியர்கள் அமெரிக்காவில் வசிக்கின்றனர்.
5.7 மில்லியன் பேருக்கு ஹெச்.ஐ.வி இருக்கிரது.
உலகில் முதல் இடம்.
40% மருத்துவர்கள் தங்களின் பணி நேரத்தில் வேலையில் இருப்பதில்லை.
80466 இந்திய மாணவர்கள் அமெரிக்காவில் படிப்பு 2005 இல்.
2.73 மில்லியன் சுற்றுலா பயனிகள் வருகை 2004 இல்.
மகிழ்ச்சி பட்டியலில் இந்தியா 125 வது இடத்தில் டென்மார்க் முதல் இடம்.
அமெரிக்க இந்தியர்கள் ஆண்டுக்கு 12 லட்சம் சம்பாதிக்கின்றனர். வெள்ளை அமெரிக்கன் 10.98 லட்சம்.
மனித வாழ்நாள் 64.71 ஆண்டுகள் இந்தியாவில் சீனா 72.58 ஆண்டுகள்.
உள்னாட்டு வருவாயில் 2.5 சதவிகிதம் ராணுவச் செலவு.
86% வெற்றிகரமாக TB நோயை குனப் படுத்துகிறோம் .
94.1%படித்து ஜெயின் கள் நல்ல படித்த சமூகம் என்றும் முஸ்லிகள் 59.1% படித்தும் கடைசி இடத்தில்.
500000 ராணுவத்தினர் எல்லை பதுகாப்புக்கு பட்டும் . அமெரிக்காவின் மொத்த படையே இவ்வளவுதான்.

12 comments:

Unknown said...
This comment has been removed by a blog administrator.
Unknown said...

இப் பதிவை யாருமே கண்டுகொள்ளாததால் சுதந்திரமாக நானே இட்ட பின்னூட்டம் இதை நாந்தான் இட்டேன் என்பதற்கு சாட்சியாக இப்பதிவிலேயே இன்னொரு முறையும் இடப்படும்
அன்புடன்
மகேந்திரன்.பெ

Unknown said...

இப் பதிவை யாருமே கண்டுகொள்ளாததால் சுதந்திரமாக நானே இட்ட பின்னூட்டம் இதை நாந்தான் இட்டேன் என்பதற்கு சாட்சியாக இப்பதிவிலேயே இன்னொரு முறையும் இடப்படும்
அன்புடன்
மகேந்திரன்.பெ

Amar said...

இந்தியா டுடேவுக்கு நன்றி சொல்லியிருக்கலாம். :-)

ஆனால் பாதுகாக்கபட வேண்டிய பதிவு

Unknown said...

//இந்தியா டுடேவுக்கு நன்றி சொல்லியிருக்கலாம். //

சமுத்ரா இதை காலைல இருந்து மொழிபெயர்த்து டைப்படிச்சு முடிக்கறதுக்குள்ள என் கையொடின்ஞ்சு போச்சு இங்க ஆங்கில சர்வதேச பதிப்பு தான் கெடைக்கும் அதிகமா தமிழ்லயும் இதே டாபிக்கா?

நன்றி சமுத்ரா
நன்றி இந்தியா டுடே சுதந்திர சிறப்பிதழ்

கப்பி | Kappi said...

//இழப்புகளும் இன்பங்களும் நிறைந்திருக்கும் ஒரு உயிர்ப்பான தேசத்தின் அடையாளங்கள்//

உண்மை மகி...

சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்..

கப்பி | Kappi said...

//இந்தியா டுடேவுக்கு நன்றி சொல்லியிருக்கலாம்//

ஓ..கேட்க வேண்டுமென நினைத்தேன்...

Amar said...

வருத்தபடாதீங்க...நானும் இதை செய்யலாமுன்னா தான் நினைச்சுகிட்டு இருந்தேன்.

Unknown said...

//வருத்தபடாதீங்க...நானும் இதை செய்யலாமுன்னா தான் நினைச்சுகிட்டு இருந்தேன். //

ஆகா இனிமே நாம எல்லாத்திலயும் முந்திக்கனும்பா முன்னாடி பெரியார் பதிவுக்கு குழலி வந்து நான் போட நினைச்சத நீ போட்டாச்சுன்னான்ரு இப்ப சமுத்ரா வந்து நானும் இதையே பதிவாக்க இருந்தேன்றாரு ஒருவேளை நம்ம குவாட்டர் கோவிந்தன் மட்டும்தான் நமக்கு சொந்தமா?:))

Unknown said...

//உண்மை மகி...//


இன்னும் நிறைய எழுத நினைச்சேன் கப்பி ஆன டைமில்ல இடம் அதிகமா போனா பப்ளிஷ் பன்ன சிக்கலகும் அதனால விட்டாச்சு :

விடுதலை நாள் வாழ்த்துக்கள்
கப்பி மற்றும் சமுத்ரா ...

Santhosh said...

//இப் பதிவை யாருமே கண்டுகொள்ளாததால் சுதந்திரமாக நானே இட்ட பின்னூட்டம் இதை நாந்தான் இட்டேன் என்பதற்கு சாட்சியாக இப்பதிவிலேயே இன்னொரு முறையும் இடப்படும்
அன்புடன்
மகேந்திரன்.பெ//

:))
படிக்கும் பொழுது ஆகா மகேந்திரன் கேப்டன் மகேந்திரன் ஆகிட்டாரு போல அப்படின்னு நினைச்சேன் கடசியில சாப்டுவேர் மகேந்திரன் ஆயிட்டாரு.

Unknown said...

//கடசியில சாப்டுவேர் மகேந்திரன் ஆயிட்டாரு.//

நன்றி சந்தோஷ் அது சும்மா ஜாலிக்காக போட்ட பின்னூட்டம் :)) அவரு மாதிரி தனியா ஒரு பதிவு வச்சு அங்க பொயி இதை டெஸ்டு பன்னுங்கன்னு சொல்ரதை விட இன்கயே டெஸ்ட் இன்ஸ்டென்ட் டெஸ்டு :))