Sunday, August 13, 2006

முன்னாள் நடிகையின் மார்க் CHEAT

கோவிந்தன் மிக்க கடுப்பில் இருந்தார். தனது நண்பன் தன் காதல் கதைகளை வலைப்பூவில் எல்லோரும் படிக்க எழுதிவருவதால் அது அவருக்கு கொஞ்சம் சங்கடம் தருகிறதாம். இதனால் அவரை சமாதானப் படுத்தும் வகையில் கொஞ்சம் பேச ஆரம்பித்தோம்.

என்ன கோவிந்தா இதுக்கெல்லாம் கோச்சுக்கிறே நான் என்ன இப்ப இல்லாததையா சொல்லி ஏமாத்திட்டேன்?

அதெல்லாம் இல்லப்பா முன்ன மாதிரி என்னோட கட்டுறையெல்லாம் அதிகமா எழுத மாட்டேங்கிற நீ.

சரி கோவிந்தா இனிமே அடிக்கடி எழுதுறேன் சரியா?

சரி சரி ஆமா உனக்கு ஒரு விஷயம் தெரியுமா?

என்னா?

எங்க
அத்தையோட மார்க் என்னான்னு சட்ட சபையில விவாதம் நடக்குதாமே?

ஆமாங் கோவிந்தா அம்மா சட்டசபையில பொய்சொல்லிட்டாங்களேன்னு அதிமுக காரங்க எல்லாருக்கும் வருத்தமாம்..

அட போனா போகுதப்பா விடு அவங்க என்னைக்கு உண்மை சொன்னாங்க முன்ன ஒருதடவை 55லட்சம் ஏக்கர் தரிசு நெலம் இருக்குன்னு பொய் சொன்னாங்க அதே மாதிரிதான் இதுவும்.
ஆனாலும் சிறுதாவூர் நிலமெல்லாம் அவங்க பேரில இல்லயாம் பா..

உனக்கெப்படி தெரியும்...

அது அவங்க அன்புச் சகோதரியோட சொந்தகாரங்க பேரில இருக்கு இளவரசி, தினகரன் இவங்க பேரில முன்னாடி சொத்து குவிப்பு வழக்கு நடந்துச்சில்ல அப்பவே அது பதிவாயிருக்குதாம் ...
ஆமா சட்ட சபையில பொன்முடி செருப்பால அடிப்பேன்னு சொன்னாராமே? இதெல்லாம் நல்லாவா இருக்குது?

அடிக்கலியா?

அடப் பாவி .!

பின்ன என்னாப்பா எப்பப் பாரு பேசிட்டிருக்கும் போதே ஏந்திரிச்சி கலைஞர் இருக்க எடத்துக்கு ஒடியார வேண்டிது அப்புரம் ஏன் சேலைய உறுவிட்டாங்க செருப்பால அடிச்சாங்கன்னு கதற வேண்டீது.

சேலைய உறுவினது செயலலிதாவுக்கு கோவிந்தா

..அட அதிமுக எம்மெலே எவன் வேட்டி கட்டீருக்கான் எல்லா பயலும் சேலைதான் இதுக்காக நான் பொம்பளைங்கள குறைச்சு சொல்றதா நினைக்காதே ...

சூரியா மேட்டர் தெரியுமா ?

நானே கேக்கனுமின்னு நெனைச்சேன் ஏன் இப்பல்லாம் நைட்டு படம் போடலை?

டேய் சூரியா-ஜோதிகாவுக்கு கல்யாணம்டா அது தெரியுமா?

அவங்க அக்கா நக்மா தானே?

இது மட்டும் நல்லா ஞாபகம் வச்சிக்கோ மத்ததை மறந்திடு...


கோவிந்தா உனக்கு தெரியுமா ரஜினி தாத்தா ஆகப்போறார்?

அவரு முன்னமே தாத்தா தானே?

டேய் தனுஷ் ஐஸ்வர்யா வுக்கு குழந்தை பிறக்க போகுதுடா..

ஐஸ்வர்யா அபிஷேக் பச்சன்ல?

அது உலக அழகி கோவிந்தா

ஆமா யாரோ கண்டரு மோகனார் மந்திரி யாருபா அது?

அது சபரிமலை தந்திரிடாஅவரு.

கோயில்ல இருக்க சாமிய ஜெயமாலா தொட்டதுக்கே குத்தமாமே இப்ப இந்த ஆசாமி இத்தனை தப்பு செஞ்சிறுக்கே சாமி சும்மாவா இருக்கு? ஒருவேளை ஆம்ம்பிளை தொட்டா சாமிக்கு தெரியாதா?

கோவிந்தா சாமி கண்ண கெடுக்கும் பாத்து பேசு..

அதெல்லாம் கெடுக்காது ஏன்னா சாமியே இல்லையே ..

ஒரு பாதர் பன்னின வேலைய பாத்தியா?

என்னவாம் ?

வீடு கட்டி தற்றதா சொல்லி 100 கோடி வசூல் பன்னிட்டாராம் பெரிய மன்மத ராசாவா இருக்காருப்பா..

சொந்த வீடா சின்ன வீடா?
.........
..........
............
.......
16666669

அப்பாடி......!

என்னா இது? 16666669 ?

இல்லை 100 கோடிக்கு எத்தனை குவாட்டர் வாங்கலாம்னு யோசிச்சேன்

டேய்................

36 comments:

Unknown said...

இடைச் செருகி மேம்பட்ட செய்தி

குழலி / Kuzhali said...

குவாட்டரு செம மீட்டருப்பா

Unknown said...

நன்றி குழலி...
எங்க கொஞ்ச நாளா ஆளையே காணோம்? மேட்டர் என்னாங்க?

சதுர் said...
This comment has been removed by a blog administrator.
சதுர் said...
This comment has been removed by a blog administrator.
சதுர் said...
This comment has been removed by a blog administrator.
PRABHU RAJADURAI said...

அது யாரு டிபிஆர் ஜோசப்...அந்த பாதரா?:-)

Unknown said...

அது யாரு டிபிஆர் ஜோசப்...அந்த பாதரா?:-)
:))

கப்பி | Kappi said...

//நானே கேக்கனுமின்னு நெனைச்சேன் ஏன் இப்பல்லாம் நைட்டு படம் போடலை?
//

:)))))

//கோவிந்தா சாமி கண்ண கெடுக்கும் பாத்து பேசு..

அதெல்லாம் கெடுக்காது ஏன்னா சாமியே இல்லையே //

அட்ரா சக்கை..அட்ரா சக்கை.. :))

Unknown said...

இப்ப தான் சூடு பிடிக்குது கப்பி நீ இங்க அங்க எல்லா பதிவிலும் பின்னூட்டம் போடு மொத்தம் 5 வலைப்பூ இருக்கு 10*5 =50 சரியா நான் ஒங்க இடத்தைல வந்து கதை சொல்வேன்

கப்பி | Kappi said...

அந்த பக்கம் போக கொஞ்சம் பயமா இருக்குபா.. ஹி ஹி கொஞ்ச நேரத்துல போறேன் இருங்க :))

கப்பி | Kappi said...

// பஜாஜ் ஸ்டார்ட் பன்னுர வாக்குல திரும்பி நின்னு விட்டேன் ஒரு உதை மெதுவாத்தான் என் நல்ல நேரமாட்டுக்கு அது காலோட வந்திருச்சி /

நீங்களும் வடப்ழனில தான் இருந்தீங்களா??

கதை ரொம்ப இண்டரஸ்டிங்க்...அப்புறம் பல்பா?? எல்லா பின்னூட்டமும் சேத்து தனி கதையா போடுங்களேன் :D

கப்பி | Kappi said...

//என்னடா இது ஆளையே கானோம்? கப்பி ஏஏஏஏஏஏஏஏஏஏஏஎ கப்பி எங்கயாவது லத்தீன் பிகர பாத்துட்டயா?
//

ரெஸ்பான்ஸ் கொஞ்சம் லேட்டா தான் வரும்..நீங்க வீட்டுக்கு போய் சுகமா கதை சொல்லிட்டு இருக்கீங்க..நான் ஆபிஸ்ல இருக்கேன்ல :(

பேசாம நாளைக்கு இந்த கதையை பதிவா போட்டா அங்க வந்து மொத்த அம்பதையும் அடிச்சுடலாம்..என்ன சொல்றீங்க :))))

Unknown said...

அப்ப அது திரும்ம்பி ஒரு பார்வை பாத்துதுபா அப்பிடி ஒரு பார்வை எனக்கு எம் பொண்டாட்டி கண்ணுக்குள்ள வந்து வந்து போறா( அப்பவே நான் கிழுமத்தூரில அஸ்திவாரம் போட்டாச்சு) ஆனாலும் இந்த குரங்கு மனசிருக்கே ரொம்ப பொல்லாதுப்பா

கப்பி | Kappi said...

//அப்படீன்னா நீங்களும் அங்க இருந்தீங்களா?
//

ஆமா மகி ;)

கப்பி | Kappi said...

//அப்பவே நான் கிழுமத்தூரில அஸ்திவாரம் போட்டாச்சு) ஆனாலும் இந்த குரங்கு மனசிருக்கே ரொம்ப பொல்லாதுப்பா
//

ரொம்ப பொல்லாதது ;)

கப்பி | Kappi said...

//சரி கப்பி இங்கயும் மணி 11.30 ஆச்சு இனிமே தான் போய் சாப்பிடனும் ஆமா அங்க மணி என்னா?

துபாய்ல இப்ப 11.30
//

இப்போ மாலை 4.30..

//நாளைக்கு இதையே ஒரு தனிப்பதிவா போடலாம் ஏன்னா அவங்க இதை படிச்சா ரொம்ப ரசிப்பாங்க நான் இன்ன்மும் அவங்க ப்ரண்டு
//

தனிப் பதிவா போடுங்க..நாங்களும் ரசிப்போம்ல...;)

Unknown said...

வடபழனில எங்க? நான் கவுரிசித்ரா கார்டன்(பஸ்டான்டு பக்கத்தில்) இருந்தேன்

கப்பி | Kappi said...

அதுக்கு பக்கத்துலயே தான்..

டெர்மினஸ் பின்னாடி குமரன் காலனி..

குமரன் காலனிக்கு அடுத்தது தனலட்சுமி காலனி..அங்க தான் இருந்தேன் ;)

பெருசு said...

அங்க இருந்து பொடி நடையா 100 அடி ரோடு கிராஸ் செஞ்சா
நம்ம ஏரியா..

Unknown said...

//அங்க இருந்து பொடி நடையா 100 அடி ரோடு கிராஸ் செஞ்சா
நம்ம ஏரியா//

Peru'su
தேர்தல் ஆனையர் அலுவலகம் பக்கமா? இல்லை அண்ணா நகர் போகும் பக்கமா?

Anonymous said...

ஆட்டோ ஆட்டோ ஸ்டார்ட்

Anonymous said...

ஆட்டோ ஆட்டோ ஸ்டார்ட்

லக்கிலுக் said...

புரட்சி ஆயா வாயில இருந்து என்னைக்கு தான் உண்மை வந்திருக்கு.... நிறைய ஆயா அடிவருடிகள் சொல்லுறாங்க.... அதாவது ஆயா தான் அப்போ மெட்ரிகுலேஷனில் மாநிலத்தில் முதலாவதாம்.... அது எந்த அளவுக்கு உண்மைன்னு கண்டுபிடிச்சி சொல்லுங்க அண்ணாத்தே....

Unknown said...

//அது எந்த அளவுக்கு உண்மைன்னு கண்டுபிடிச்சி சொல்லுங்க //

லக்கி ஆயாவோட மார்க் ஷீட்டே போடுருக்கனே அந்த சிவப்பு லிங்க் அதை க்ளிக் பன்னி பாருங்க

Anonymous said...

அம்மா மார்க்ஷீட்டையே போட்ட மகேந்திரன்.பெ நீங்க கில்லாடி தான் போங்க்

Anonymous said...

நீங்க மார்க்ஷீட் காமிச்சாலும் சரி. காமிக்காட்டாலும் சரி. அம்மா 200க்கு 200 வாங்குனதா தான் மரமண்டை மடத்தமிழன் கிட்டே நாங்க பிரச்சாரம் பண்ணுவோம். என்னதான் இருந்தாலும் நம்மவா நம்மவா தானே?

Unknown said...

//அம்மா 200க்கு 200 வாங்குனதா தான் //

ஆமா ஆமா இதுக்கு தனியா சொல்லியா தரனும் அடியாள் திராவிட முன்னேற்ற கழகத்துக்கு அம்மா போட்ட கையெழுத்தே என்னோடது இல்லைன்னு சொன்னவங்க தானே

Anonymous said...

மார்க் சீடுன்னா என்னா?

கருப்பு said...

இந்த சொத்தும் நகையும் மைசூர் மகாராஜா கொடுத்தது என்று சொன்னவரிடம் வேறு எப்படி எதிர்பார்க்க முடியும்?

Anonymous said...

Can you release kalaignar and stalin mark sheet also.Let us see whether they are better than Jaya.

Anonymous said...

//இந்த சொத்தும் நகையும் மைசூர் மகாராஜா கொடுத்தது என்று சொன்னவரிடம் வேறு எப்படி எதிர்பார்க்க முடியும்?//

Why kalaignar is not opening is mouth about how come of his prperty. He came to chennai without train ticket. Now he can buy Indian railway department itself.

Anonymous said...

//மார்க் சீடுன்னா என்னா?//

Kalaignarukku theriyuma karpura vasanai.

Anonymous said...

Mr.Mahendran, You did not ask for the luckylook question. He asked who was the first rank in the state and what was the amma rank.

Anonymous said...

//புரட்சி ஆயா //

Hallow Mr.Luckylook, jaya ஆயா endral, kalaignar enna chinna paiyana and stalin enna pal kudikkira kulanthaya.

Unknown said...

வாங்க அனானிமஸ் என்னடா அம்மாவ பத்தி போட்டும் இன்னும் ஒரு ஆங்கில அனானி கூட வரலியேன்னு காத்துகிட்டு இருந்தேன் வந்துட்டீங்க
உங்க ளுக்கு பதில் இங்கன பாருங்க :


//Can you release kalaignar and stalin mark sheet also.Let us see whether they are better than Jaya.//
அது கிடைச்சதும் கண்டிப்பா போடுவேன் கவலையே வேண்டாம்ங்க

//Why kalaignar is not opening is mouth about how come of his prperty.//

அவரு சொல்லவேண்டியதில்லை. ஏன்னா எப்படி வந்ததுன்னு எல்லாருக்கும் தெரியும். கைவசம் தொழில் இருக்கு ராசா .,கதை எழுதுனார், பத்திரிகை நடத்தினார், படம் எடுத்தார், பாட்டு எழுதினார், வசன்ம் எழுதினார், நாடகம் நடிச்சார், இந்த வயசிலயும் கண்ணம்மா வுக்கு கதை வுட்றாரு போதுமா, அப்புரம் அஞ்சு தடவை முதல்வரா இருந்தார், அதுக்கு சம்பளம் வாங்கினார், அம்மா மாதிரி 1 ரூபா மட்டும் வாங்கல .

//Kalaignarukku theriyuma karpura vasanai//
ஓ கற்பூரமா அப்புறமா ஏன் அதை சீட்டு சீட்டுன்னு சொல்றாங்க?

//Mr.Mahendran, You did not ask for the luckylook question. He asked who was the first rank in the state and what was the amma rank//

எனக்கு தெரிஞ்சா சொல்லமாட்டேனுங்களா? தெரிஞ்சதும் சொல்றேன்,


//Hallow Mr.Luckylook, jaya ஆயா endral, kalaignar enna chinna paiyana and stalin enna pal kudikkira kulanthaya.
//
ஆமாங்க அது தப்புதாங்க, அவங்க இன்னமும் செல்வி தானுங்களே? எனக்கு தேவையில்லாம மயிலாடுதுரை சிவா ஞாபகம் வருது