Saturday, August 12, 2006

ஆன்டன் பாலசிங்கம் - போரும் சமாதானமும்

இலங்கையின் யுத்தச் சத்தம் புலிகளுக்கும் அரசுப் படைகளுக்கும் ஆரம்பித்திருக்கும் வேளையில் அதற்கு சற்றும் குறையாத ஒரு புத்தகம் ஆன்டன் பாலசிங்கத்தின் எழுத்தில்.

புலிகளின் வரலாறு என்றே சொல்லலாம் புத்தகத்தின் உள்ளே புலிகள் இந்தியாவின் தலையீட்டை இன்னும் விரும்புகிறார்கள் என்பது மிகத் தெளிவாக சொல்லப் படுகிரது . ஆனால் புலிகள் மீதான இந்தியாவின் பார்வை மாறக் காரணமான ராஜீவ் காந்தி கொலை பற்றி ஒரு வார்த்தையும் ஆன்டன் பாலசிங்கம் எழுதிட வில்லை.

இது புலிகள் இன்னும் மிக வெளிப்படையான இந்தியாவுடனான அரசியல் காய் நகர்த்தல்களுக்கு தயாராகவில்லை என்பதை காட்டுகிறது. பிராந்திய வல்லரசான இந்தியாவின் தயவு தங்களுக்கு தேவை என்பதை புலிகள் அமைப்பு மிக நன்றாகவே உணர்ந்திருக்கும் வேளையில், அது இது நாள் வரை ஐரோபிய யூனியன் எனும் மலை போன்ற நம்பிக்கையை இழந்திருப்பதுடன் நார்வெ சமாதான முயர்ச்சிகளையும் கைதவற விட்டது அல்லது அதுவாகவே நழுவிப் போனது.

பாலசிங்கத்தின் நூல் ராஜீவ் காந்தி காலத்திலும் பின் ராஜீவ் காந்தி கொலையாகும் வரையிலும் இந்தியாவில் மேற்கொண்ட அதிகாரபூர்வ/பூர்வமற்ற நடவடிக்கைகளை விவரிக்கிரது.

அதில் இருந்து சில பகுதிகள்:
ராஜிவ்காந்தி- பிரபாகரன் ரகசிய உடன்படிக்கை:

ராஜிவ்காந்தி, பிரபாகரன், நான், பண்ட்ருட்டி ராமச் சந்திரன், நான்கு பேரும் கலந்துகொண்ட உரையாடலின் போது பிரதமர் அவர்கள்( ராஜிவை பிரதமர் என்றே ஆன்டன் குறிப்பிடுகிறார்)மிக்க உற்சாகத்துடனும், அயர்சியின்றியும் எதையோ சாதித்த பெருமித உணர்வுடனும் காணப்பட்டார்.

பிரபாவிடம் பிரதமர் " நாம் உங்களின் எல்லா ஆயுதங்களையும் கையளித்துவிடச் சொல்லவில்லை மிகக் குறைந்த அளவில் முன்னறே இந்தியா தந்தவற்றில் சிலவற்றை கொடுத்தால் போதும். அதே போல் உங்களின் கெரில்ல படையணியையும் கலைத்திட சொல்லவில்லை அது வடகிழக்கின் பகுதியில் இருக்க இந்திய ராணுவத்தின் கண்கானிப்பில் இலங்கை அரச படைகள் தங்களின் இடத்தில் அடைந்து கிடப்பார்கள் , உங்களின் ஆயுதம் அளிக்கப் படுவது சர்வதேச ச்முதாயத்தில் புலிகள் கட்டுப்பாட்டை மீறவில்லை எனும் வாதத்திற்கு வலு சேர்க்கும்" என்றார்...

இதற்று பதிலேதும் சொல்லாத பிரபாவிடம் பன்ட்ருடி ராமச் சந்திரன் அவர்கள் " நல்ல பயன்பாட்டில் இருக்கும் ஆயுத்ங்கள்கூட வேண்டாம் இந்தியா தந்த பழைய உதவாத ஆயுதங்களின் சிறு பகுதியை கொடுக்கலாமே?" என்றார்.

பிரபாகரன் அதற்கு கிண்டலாக அவர்கள் கொடுத்ததெல்லாமே பயன்படாத ஆயுதங்கள் தானே என்றார்.

தமிழில் நடந்த இப் பேச்சை அப்படியே பிரதமருக்கு அமைச்சர் பன்ட்ருட்டி மொழிபெயர்த்தார். இதை தலையசைத்து ஆமோதித்தார் பிரதமர்.
இரவு இரண்டு மணி அளவிலும் பிரதமர் மிக்க உற்சாகத்துடன் இருந்தார்... ஒரு உடன்பாடு எட்டப் பட்டவுடன் காலை ஒன்பது மணி விமானத்தில் கொழும்பு சென்று மூன்று மணி மதியத்துக்கு இலங்கை இந்திய ஒப்பந்ததில் கைச்சாத்திட வேண்டும்.

நான் அமைச்சரிடம், "இரண்டு பேருக்கும் இடையில் ஏற்றுக்கொண்டவற்றை ஒரு ஒப்பந்தமாக்கி அதில் கைச்சாத்திட்டால் என்ன அது மேலும் உடன்பாட்டுக்கு வலு சேர்க்குமே?" என்றேன்.
அப்படியே அவர் முகம் வாடிப் போனது " நாங்கள் ஏற்கனவே ஆயுதங்கள் மற்றும் மாதம் ஐம்பது லட்சம் கருப்புப் பணமாக உங்களுக்கு கப்பம் கட்ட சம்மதித்திருக்கிரோம் இதை ஒப்பந்தமாகினால் இந்திய அரசியலில் பெரும் குழப்பம் உண்டாகும்" என்றார்.

பிரதமரும் இது ஒரு ஜென்டில் மேன் அக்ரீமெண்ட்டாகவே இருக்கட்டும் நான் நிச்சயம் வாக்கை காப்பாற்றுவேன் என்றார்.
காலப் போக்கில் பிரதமரின் வாக்குறுதி குப்பைக்கூடையில் வீசப் பட்டது
எம்.ஜி.ஆர், நான், பிரபாகரன்.:

பிரபா புலிகளின் தொலைத் தொடர்பு ஆயுதங்களை திரும்ப வழங்கக் கோரி உண்ணாவிரதம் இருந்தார். அது தமிழக முதலமைச்சருக்கு பெரும் சங்கடத்தை உண்டாக்கியது, புலிகளின் போராட்டத்துக்கு காவலன் எனும் தன் பிம்பம் உடைந்து போகும் எனக் கலங்கினார் மேலும் பிரபாவுக்கு எதுவும் ஆகிவிடுமோ என்றும் அஞ்சினார்.

அதே நேரம் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் புலிகளின் தகவல் தொடர்பு சாதனங்கள் பறிமுதல் செய்யப் பட்டதில் மத்திய அரசுக்கு பங்கில்லை எனவும் ஒரு அறிக்கை விட்டார். அது எம்ஜிஆருக்கு மேலிம் கோபத்தை உண்டாக்கியது என்னை அழைத்து புலிகளின் தகவல் தொடர்பு சாதனங்களை உடனே தரும்படி உத்தரவிடுவதாகவும் இது மோகன் தாஸ் போலீஸ் அதிகாரியின் வேலை என்றும் சொன்னார்.

அதே போல் எல்லா சாதனங்களும் பிரபாவின் முன் வைத்தார் மோகன் தாஸ் உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டார் பிரபா பின்னர் இச் சர்சைகள் நடந்துமுடிந்த பின்னர் ஒரு நாள் நானும் பிரபாவும் முதல்வரை அவரின் இல்லத்தில் சந்தித்தோம் அப்போது இரண்டு கோடி ரூபாய் தானம் தந்தார்.

இப்படி நல்ல வாய்ப்பை வீனாக்க விரும்பாத நாம் எங்களிடம் இருந்து பறிக்கப் பட்ட ஆயுத்ங்கள் மற்றும் பிற் போராளிக் குழுக்களிடம் இருந்தும் பெறப்பட்டவற்றை எங்களின் அமைப்புக்கு தரவேண்டும் என்றூ சொன்னோம் சற்றும் தயங்காது சம்மதித்தார் அதே போல் எங்களுக்கு ஆயுதங்களும் கிடைத்தன.

அது எங்களின் ஆயுத சேகரிப்பை கனிசமான அளவு உயர்த்தியது.
காளிமுத்துவுடன் பாலசிங்கம்...

பேபி சுப்பிரமணியத்தின் நண்பர் காளிமுத்து அவர்கள் (அதிமுக) அப்போது சென்னையில் எதுவும் செயலகம் இல்லாத நேரம் செயலக்ம் தொடங்கும் வரை எங்களின் விடுதி, செலவுகளின் பொறுப்பை ஏற்றார் செயலகத்துக்கும் ஏற்பாடு செய்வதாக உறுதியளித்தார்....
டி.ஜி.பி அலெக்ஸாண்டர்,

சந்திரகாசனை வெட்டியாடிவிட்டு ராவிடம் இருந்தும் தலைமறைவாக இருந்த நேரம் இந்திய உளவுப் பிரிவில் நெருக்கம் காண தலைமை விரும்பியது அது சாத்தியப் படாது போகவே தமிழக உளவுப் பிரிவுத் தலைவர் அலக்ஸாண்டரை தொடர்பு கொண்டோம்,

அப்போது சாந்தோமில் ஒரு வீட்டில் தங்கியிருந்த நம்மை அழைத்து பேசிய அவர் மிக்க அன்பும் நேர்மையும், ஈழம் பற்றிய தெளிவும் கொண்டிருந்தார். சென்னை ப்ளூ டைமண்ட் எனும் புக்ழ்பெற்ற விடுதியில் இருக்கும் சந்திரகாசனை பற்றியும் எந்த எந்த ரா அதிகாரிகளுடன் அவருக்கு நெருக்கம் என்பது பற்றியும் எங்களுக்கு சேதி சொன்னார் அதே நேரம் அந்த அறை முழுதும் ஒட்டுக் கருவிகள் கொண்டு எல்லா பேச்சையும் கேட்டு வருவதாகவும் சொன்னர்.
கலைஞர் கருணாநிதி..

1988 இல் இந்திய அமைதிப்படை தேடியழிப்பு வேலையில் இருந்தபோது தலைமறைவாக பெங்களூரில் இருந்த நேரம் என்னை உடனே வந்து பார் என்று கலைஞரிடம் இருந்து அழைப்பு, மற்ற சில போராளிகளிடம் இருந்து எனக்கு வந்தது. அன்று மாலையே சென்னையின் ரகசிய இடம் ஒன்றில் நான் அவரை சந்தித்தேன், அப்போது உடன் முரசொலி மாறன் இருந்தார்.

"உங்களை அழிப்பதில் மிகத் தீவிரமாக இருக்கிரது அமைதிப் படை, இது மிகவும் எனக்கு கவலை தருகிறது இந்திய படைபலம் முன்னால் உங்கள் பலம் என்ன செய்யமுடியும் அதைவிட ஆயுதங்களை விடுத்து சரணடையலாமே அது புத்திசாலித் தனமில்லையா"? என்றார்.

ஈழவிடுதலைக்காக உயிரை விடவும் தயார் ஆனால் சரணடைய விரும்பவில்லை என்றேன் நான். குறைந்த பட்ச ஆட்சிப் பங்கீடேனும் முன்வைக்கப் பட்டால் ஒழிய போராட்டம் நிற்க்காது என்றும் சொன்னேன்.
இப் புத்தகம் இக் காலகட்டத்தில் வந்திருப்பது அதுவும் தமிழில் எல்லோரையும் கவனமடையச் செய்யும் என்பதில் சந்தேகமில்லை அதே நேரம் இது இந்திய அரசின் கவனத்தை எப்படி திசைதிருப்பும் தங்களுக்கு சாதகமாக என்பதையும் பொறுத்திருந்து பார்க்கலாம்.


போரும் சமாதானமும்- ஆன்டன் பாலசிங்கம்
பெயரிக்ஸ் பதிப்பகம்
லண்டன் இங்கிலாந்து.
பக்கங்கள் - 790

5 comments:

Unknown said...
This comment has been removed by a blog administrator.
Anonymous said...

இப்போது???

இது பழசு

Unknown said...

//இப்போது???

இது பழசு //


ஆங்கிலத்தில் 2004 இல் வந்தது தமிழில் இப்போது வந்ததாகவே அறிகிறேன் அதில் எதூம் வேறு பதிப்பு தகவல் இல்லை.

அனானிமஸ் நன்றி

Unknown said...

சோதனைமட்டும்

Anonymous said...

நான் பல தடவை வாசித்துள்ளேன்..