மாசேதுங்கின் கொள்கைகளாக உலக வரலாறுகளை உதாரணம் காட்டும் நக்ஸல் இயக்கக் கொள்கைகள் மக்களை அடையாமல் வெற்றிபெற முடியாது. குழப்பும் வார்த்தைகளும் புரியாத சொற்றொடர்களும் கொண்டு தீவிர மாவோயிஸம் பேசுவதால்மட்டும் இந்தியாவை அடிமைத்தனத்தில் இருந்து மீட்டுவிட முடியும் என கண்களில் அரசுக்கு எதிரான போர் வெறியும் மனசில் அடுத்த நொடி பற்றிய உயிர் பயமும் கொண்டு ஒளிந்து வாழும் நக்ஸல் இயக்கங்கள் என்ன மாற்றத்தை கொண்டுவந்துவிட முடியும்?
முதலில் நக்ஸல் இயக்க கொள்கைகள் என்ன என்று மக்கள் அறியத் தர வேண்டும். மக்கள் ஆதரவு இல்லாமல் எந்த இயக்கமும் வெற்றிக்கனியை எட்டிவிட முடியாது. தீவிர வாதம் மட்டும் எல்லா அடிப்படை விதிகளையும் புரட்டிப் போட்டுவிடும் என்றால் உலகில் பாலாறும் தேனாரும் அல்லவா ஓடவேண்டும்? ஏன் இல்லை. ரத்த ஆறுதானே ஓடுகிறது?. அரசுக்கு எதிராய் கோசங்கள் எழுப்பி அது மக்களை அடைய வேண்டும் என்றால் அந்த கொள்கைகள் மக்கள் மத்தியில் இருந்து ஒலிக்கவேண்டும் அப்படியில்லாமல் தனிக்குரலாக ஒலித்தால் அது வெறும் ஓலமாகத்தான் இருக்கும் உரிமைக் குரலாக இல்லை.
ஏழ்மைக்கும் வறுமைக்கும் முடிவுகட்ட தோட்டாக்களும் ரத்தங்களும் மட்டும் போதுமா? மக்கள் முதலில் ஒன்று சேர வேண்டும். அடர் கானகத்தில் ஒலிக்கும் காட்டுப்பூணைகளின் சத்தம் ஒரு நாளும் வீட்டுக் கோழிகளை பயத்தில் ஆழ்த்துவதில்லை. கோழிவேண்டும் என்றால் ஊருக்குள் வரவேண்டும். மக்கள் மனசைவெல்ல ஆயுதங்களும் மாவோயிசமும் ஒரு மண்ணுக்கும் பிரயோசனமில்லை.
ஆயுதங்கள் நக்ஸல்களை தனிமைப்படுத்தும். மாவோயிசம் மக்களை குழப்பத்தில் ஆழ்த்தும் எனவேதான் இந்தியாவில் எந்த தீவிரவாத இயக்கமும் மக்களை விட்டே தனித்து இருக்கிரது. இந்தியா ஒன்றும் இனி மாவோயிஸ லெனினிய இன்னும் என்ன என்ன தீவிர இஸங்கள் உண்டோ அவ்ற்றின் உதவியோடு எல்லாம் மறு கட்டமைப்புச் சூழலை உண்டாக்கும் அளவுக்கு பின் தங்கிப் போய்விட வில்லை.
ஜனநாயகம் இல்லாத நாடு அதற்க்காக அந்த சூழலை உருவாக்குவதற்க்காக ஆயுதங்களை ஏந்தி அரசாங்கத்தை அழிப்போம் என்பது கன்னித்தன்மையை காக்க வன்புணர்வுக்குள்ளாக்குவதை போலவேயன்றி வேறென்னவாக இருக்கமுடியும்?
அரசின் குரல் உலகெங்கும் ஒலிக்கும் அதனால்தான் புத்திசாலிதனமாக எல்லா பிரதான கட்சிகளும் ஜனநாயகப் பாதையான ஓட்டுப் பொருக்கிகள் என நக்ஸல் பாரிகளால் விமர்சிக்கப் படும் அரசியலை, மக்கள் விரும்பும் பாதையான ஒன்றை தேர்ந்தெடுக்கின்றனர் இதன்மூலம் தங்கள் குறைந்த பட்ச கொள்கைகளையாவது வென்றெடுக்க முடிகிறது. வெறும் நக்ஸல் சிந்தனைகள் தீவிர கோசங்கள் அன்றைய பொழுதை ஆரவாரமாயும் அடுத்த வேளை சோத்துக்கும் ஆளாய் பறக்கும் மக்களையும் குழப்பத்திலும் பயத்திலும் ஆழ்த்த பயப்படுமேயன்றி வேறு எந்த வகையிலும் நலன் தராது.
பிரச்சிணைகள் என்னவென்று அலசி அதற்க்கான தீவை கண்டுகொள்ள முயலாது பிரச்சிணைகளுக்கு காரணமான மைய நீரோட்டத்தில நஞ்சைக் கலப்பது எந்தவகை ஜனநாயகத்துக்கான தேடல் எனத் தெரியவில்லை. அப்படி இருப்பதை விட ஓட்டுப் பொறுக்கி அரசியல் ஆயிரம் மடங்கு உண்ணதமானது.
சொந்த மக்களை அதன் மண்ணில் நேருக்கு நேராய் சந்திக்க முடியாமல் என்ன விதமான புரட்சிக் கொள்கைகளை கட்டமைக்க முடியும்? நக்ஸல் இயக்கக் கொள்கை எந்த சனநாயகக் கொள்கைகளோடு ஒத்துப் போகிறது. அரசியல் சாக்கடை அதை சுத்தம் செய்யத்தான் நாங்கள் ஆயுதங்களை கையில் எடுத்தோம் என்பவர்கள் சுத்தம் செய்யவேண்டும் என்றால் சாக்கடையில் இருந்தல்லவா அதை செய்ய வேண்டும். சாக்கடையை சுத்தம் செய்ய சாக்கடையே அடைத்துவைத்தால் ஊர் நாறிப் போகாதா.
47 comments:
ஐயா அசுரன் இராமதாசை விமர்சித்தற்காக எழுதிய பதிவு போல் உள்ளது.
- இதுதான் கருத்து !
//சாக்கடையை சுத்தம் செய்ய சாக்கடையே அடைத்துவைத்தால் ஊர் நாறிப் போகாதா.
//
நச்சென்ற வரிகள் மகி!
மக்களுக்காகப் போராடுகிறேன் என்றால் முதலில் மக்கள் ஆதரவு வேண்டும். அதை அடையாத எந்த வித இயக்கமும் வெற்றி பெற முடிவதில்லை என்பது உண்மைதான்!
தங்கள் கொள்கைகள் முதலில் மக்களுக்குச் சென்றடைய வேண்டுமென்பதில் இவர்களுக்கு அக்கறை இருப்பதில்லை என நினைக்கிறேன் மகி!
கொள்கைகள் சென்று சேராத வரையில் மக்களைப் பொறுத்தவரை அரசுக்கும், மக்களுக்கும் எதிராகக் கழகம் செய்யும் தீவிரவாதிகளாகவே பார்க்கப் பட்டு ஒதுக்கப் படுகின்றனர் அல்லவா?
//ஐயா அசுரன் இராமதாசை விமர்சித்தற்காக எழுதிய பதிவு போல் உள்ளது.
//
இதிலே அசுரன், இராமதாஸ் எல்லாம் எங்கே வந்தாங்க கோவி?
:( ஒண்ணும் புரியலையே!
//இதுதான் கருத்து ! //
யாரோட கருத்து ஜிகே?. பதிவை அதன் ஓட்டத்தில் இருந்து கடத்த முயல்கிறீர்கள்
//மக்களுக்காகப் போராடுகிறேன் என்றால் முதலில் மக்கள் ஆதரவு வேண்டும். அதை அடையாத எந்த வித இயக்கமும் வெற்றி பெற முடிவதில்லை என்பது உண்மைதான்! //
ஆம் சிபி மக்களை வென்றெடுக்கா எந்த இயக்கமும் வெற்றிபெற்றதாக சரித்திரம் இல்லை
கிழமத்தூர் மகி அய்யா,
நீங்க உருப்படியா எழுதின ஒரே பதிவு இது தான்.அப்படியே இந்த திராவிட கும்பலையும் தமிழ் நாட்டு மக்கள் ஒழிச்சுக்கட்டிட்டாங்கன்னா நாடே முன்னேறும்
//தங்கள் கொள்கைகள் முதலில் மக்களுக்குச் சென்றடைய வேண்டுமென்பதில் இவர்களுக்கு அக்கறை இருப்பதில்லை என நினைக்கிறேன்//
ஆம் மக்களில் கலக்காத வரை அவர்களின் சிந்தனைகள் வெறும் காற்றோடு கத்திச்சண்டை போடும் கோமாளி வீரனுக்கு ஒப்பானது
//இதிலே அசுரன், இராமதாஸ் எல்லாம் எங்கே வந்தாங்க கோவி?
:( ஒண்ணும் புரியலையே!
//
எனக்கும்தான்பா
//இந்த திராவிட கும்பலையும் தமிழ் நாட்டு மக்கள் ஒழிச்சுக்கட்டிட்டாங்கன்னா நாடே முன்னேறும்//
ஏன் ஆரிய கும்பல் இப்ப அனாதையா கெடக்காங்களா இவ்ளோ அக்கரை பட்றீங்க?
எனக்குக் கூடத்தான் ஒண்ணும் வெளங்கலை!
நான் ஏதாச்சும் கவலைப் படுறனா?
//இதிலே அசுரன், இராமதாஸ் எல்லாம் எங்கே வந்தாங்க கோவி?
:( ஒண்ணும் புரியலையே! //
பதிவு ஏன் வந்ததுன்னு கொஞ்சம் தோண்டி பாருங்க தெரியும் !
:)
எங்களை வெச்சி ஏதும் காமெடி கீமெடி பண்ணலையே!
:(
அப்போ நாங்களெல்லாம் மக்கள் ஆதரவோடதான பிரபலம் ஆனோம்!
அது மட்டும் என்னவாம்? நாங்க சாதிக்கலையா என்ன?
நாங்க மட்டும் என்ன இளக்காரமா?
//எனக்குக் கூடத்தான் ஒண்ணும் வெளங்கலை!//
என் இனமடா நீ
//பதிவு ஏன் வந்ததுன்னு கொஞ்சம் தோண்டி பாருங்க தெரியும் !
:)
//
டேய் பையா ஓடிப்போய் கோவி வீட்ல ரெண்டு மண்வெட்டி வாங்கியா தோண்டிப் பாத்துடலாம்
//எங்களை வெச்சி ஏதும் காமெடி கீமெடி பண்ணலையே//
இல்லடா செல்லம் எவ்ளோ அடிச்சாலும் தாங்குற ஒன்னய நான் காமெடிபன்னுவனா
//டேய் பையா ஓடிப்போய் கோவி வீட்ல ரெண்டு மண்வெட்டி வாங்கியா தோண்டிப் பாத்துடலாம் //
விவசாயியின் பையன் : அப்பா! அப்பா! அவரு ஓசி கொடுக்க மாட்டாராமா!
விவசாயி : "அப்படியா! சரியான கஞ்சம் அந்த ஆள். சரி சரி நம்ம வீட்டுல இருக்குற மண்வெட்டிய எடு தோண்டிப் பாத்துடலாம்"
யப்பா அவ்ருகிட்ட மம்புட்டி இல்லையாம்
மரம் வெட்ட கோடாலி இருக்காம்
அய்யா,
பா ம க வை சாக்கடை என்று சொல்கிறீர்களா அல்லது ம க இ க வை நாத்தமடிக்கிற பசங்கன்னு சொல்றீங்களா?
//விவசாயி said...
டேய் பையா ஓடிப்போய் கோவி வீட்ல ரெண்டு மண்வெட்டி வாங்கியா தோண்டிப் பாத்துடலாம்
///
மண்வெட்டி இருக்கு...'மரம் வெட்ட'கோடாலி இல்லை.
:)
காட்டுக்குள் இருக்கும் நக்சல் இயக்கங்கள், தீவிரவாத இயக்கங்கள் எப்படி வேண்டுமானாலும் எத்தனை வேண்டுமானாலும் இருக்கட்டும். நீங்கள் சொன்னமாதிரி மக்களோடு சேர்ந்து நியாயமான கோரிக்கைகளோடு போராடினால் கண்டிபா வெற்றி கிடைக்கும்.
காட்டில் இருப்பவர்களை விடுங்கள், நாட்டுக்குள்ளேயே இருந்துகொண்டு, தனக்கென ஒரு கொள்கை, தனக்கென ஒரு ராஜாங்கம், அராஜகம் பண்ணிக்கொண்டு திரியும் அ(சு)ர(சு)வாதிகளி என்ன பண்றது??? நீங்க அரசுவாதிகள்னு படிச்சாலும் சரி, அசுரவாதிகள்னு படிச்சாலும் சரி,
மனசு...
நக்சல் பாரி இயக்கம் சுத்த வேஸ்ட்.
இதைப் பற்றி துக்ளக்கில் பக்கம் பக்கமாக எழுதி இருக்கா...யார் படிக்கிறா ?
ஹூம்
என்னைய வச்சு காமடி பண்ணலையே ?
நான் ஆவியாக அலைகிறேன். நான் தான் நக்சல் இயக்கத்தின் ஆகாய படைதலைவி
இங்கு சர்க்கரை பாகு கிடைக்குமா ?
வெண்டைக்காய், பூசனிக்காய் இதில் மோர் குழம்பிற்கு ஏற்றது எது ?
குழப்பமாக இருக்கிறேன்
//'மரம் வெட்ட'கோடாலி இல்லை//
இபடியெல்லாம் சொல்லக் கூடாது.
அப்புறம் பைப்பாலயே அடிப்பேன்
இங்ஙன என்ன நடக்காம் ? இவ்விட நோக்கில் பட்டிகளும் குட்டிகளும் ஆட்டம் போட்டு இருக்குன்னு
//நாங்க மட்டும் என்ன இளக்காரமா? //
அதானே மகனே மனோகரா பொங்கி எழு இந்த எதோச்சை அதிகார அசுரர்களை அழித்துஒழி
//இங்கு சர்க்கரை பாகு கிடைக்குமா ?
//
கிடைக்காது! அது சர்க்கரை அடுத்த நாட்டு ஏகாத்திபத்தியத்தின் அடையாளம்.
//பா ம க வை சாக்கடை என்று சொல்கிறீர்களா அல்லது ம க இ க வை நாத்தமடிக்கிற பசங்கன்னு சொல்றீங்களா? //
பா.ம.கவை சாக்கடை எனக் கொண்டால் இரண்டாவது உங்கள் விருப்பம்
//பொறிகடலை said...
இங்கு சர்க்கரை பாகு கிடைக்குமா ? //
நான் இங்க அதுக்குத்தானே காத்திருக்கேன் போய் க்யூவில வாப்பா
என் நண்பன் போட்ட சோறு!
தினமும் தின்னேப் பாரு!
நட்பைக் கூட கற்பைப் போல எண்ணுவேன்!
(ஐய்யோ வயித்தக் கலக்குதே! சோத்துல சுண்ணாம்பு பொடுவான் போல வெண்ணப் பய)
//கண்ணம்மா said...
//
ஐ!
பாரதிக்குக் கண்ணம்மா! நீ எனக்கு உயிரம்மா!
@விஜய்
அட வெளங்காதவனே! எடு பட்ட பயலே!
அது வேற கண்ணம்மா!
நான் கண்ணாம்மா!
எழுதப் படிக்கத் தெரியாம கண்ணம்மான்னு எழுதிப்புட்டேன்!
என் உதவி ஏதாவது தேவையா?
//ஐய்யோ வயித்தக் கலக்குதே! சோத்துல சுண்ணாம்பு பொடுவான் போல வெண்ணப் பய) //
ஓ சாரி இன்னைக்கு உப்புன்னு நினைச்சி அதை போட்டுட்டேன்
//இரும்புக் கை ஆர்ச்சி said...
என் உதவி ஏதாவது தேவையா? //
கேட்டதும்கொடுப்பவணே கிருஷ்ணா கிருஷ்ணா பின்னூட்ட நாயகனே
//கர்ணன் said...
//இரும்புக் கை ஆர்ச்சி said...
என் உதவி ஏதாவது தேவையா? //
கேட்டதும்கொடுப்பவணே கிருஷ்ணா கிருஷ்ணா பின்னூட்ட நாயகனே
//
இந்தப் படத்துல அந்த பாட்டே கிடையாதே!
//கேட்டதும்கொடுப்பவணே கிருஷ்ணா கிருஷ்ணா //
என்னதான் பாட்டுப் பாடினாலும் இனிமே ஒரு நயா பைசா தரமாட்டேன்!
முதல்ல வாங்குன துட்டை வட்டியோட செட்டில் பண்ணு!
மகி
//"அசுர"குணம் கொண்ட நக்சல் இயக்கங்கள்...//
தலைப்பை உற்று நோக்கும் போது கோவி.கண்ணன் சொன்னா மாதிரி எனக்கு கூட கொஞ்சம் சந்தேகமா தான் இருக்கு....
நல்ல ஜோக் மகி..
மக இக ஒரு மாவோயிஸ்ட் அமைப்பு அல்ல. இந்த விடயத்தில் உங்கள் புரிதல் தவறு. மேலும் அவர்கள் துப்பாக்கி தூக்கிக் கொண்டு காட்டில் அலையும் கும்பலும் அல்ல ( அதைப் பரிந்துரைக்கும் அமைப்பும் அல்ல) .. இதுக்கு அசுரனிடம் இருந்து பதில் எதிர்பார்த்து பதிவு எழுதி இருந்தீர்களானால் ஒன்னும் சொல்வதற்கில்லை!
மாலடிமையை அசுரன் துவைத்துக் காயப்போட்டதில் உங்களுக்கு ஏதாவது வருத்தமிருந்தால் அவருடைய அந்தப் பதிவை எதிர்த்து தர்க்கப்பூர்வமான ஏதாவது பதிவு எழுதலாமே?
ஜஸ்ட் ஒரு யோசனை தான்
அய்யா,
/////இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கப்பட வேண்டிய "அசுர" குணம் கொண்ட நக்சல் இயக்கங்கள் ////
நான் கற்ற நூல்களில் எல்லாம் "அசுரர்கள்" என்ற குறிப்பு (ஆரிய இனத்தால் எழுதப்பட்ட நூல்களில்) "த்ராவிடா" என்று சீன யாத்திரீகர்களால் அழைக்கப்பட்ட ஆரியர்கள் வருகைக்கு முன்பு இமயமலைக்கு தெற்கே வாழ்ந்த இனமாக ஆய்வுகளில் காணக்கிடைக்கின்றன.
தங்களுடைய தலைப்பின் படி ("அசுர" குணம் கொண்ட நக்சல் இயக்கங்கள்) அசுரர்கள்(திராவிடர்கள்) நடத்துகிற இயக்கங்கள் என்கிற பொருள் வருகிறது.
ஆனால் உங்களுடைய பதிவுகளில் நீங்கள் திராவிட இயக்கங்களை ஆதரிக்கிறீர்கள்.
தங்களுடைய புரிதல் என்ன? அல்லது திராவிடர்கள் என்கிற இனத்தை பற்றிய தங்களுடைய நிலை என்ன?
நன்றி
நக்சல் மட்டுமல்ல ஆர்.எஸ்.எஸ் பயல்களையும் பிடித்து உயிரோட கட்டிப்போட்டு கொளுத்தனும்!
மகேந்திரன் அவர்களே,
உங்களை எட்டு போட அழைத்திருக்கிறேன். எங்கே எட்டு போட்டுக் காட்டுங்க பார்ப்போம்!
அன்புடன்,
கருப்பு.
Post a Comment