கப்பி பயலுக்கு எத்தனை நாளா என் மேல இந்த கொலவெறின்னு தெரியலை. ஏற்கனவே ஒரு தடவை என்னை ஆறு போட கூப்பிட்டு மாட்டிவிட்டது பத்தாதுன்னு இப்ப எட்டு போடச்சொல்லி தன்னோட பதிவில அழைப்பு விட்டதோட மட்டுமில்லாம கூகிள் டாக்லயும் போடுங்க போடுங்கன்னு மலையாளப்பட ரெட்டை அர்த்த வசனம் மாதிரி எட்டு போடச்சொல்லி ஒரே தொல்லை. நம்ம தெக்கிகாட்டான் என்னய்யா எட்டு இன்னுமா போடலைன்னு (அவரே இன்னும் எழுதலை எஸ்கேப் ஆகப் போறதா கூகிள் டாக்ல சொன்னாரு தருமி அய்யா கொஞ்சம் கவனிங்க).
எல்லாறும் பெருமையா நினைக்கிற எட்டை போட்டு தமிழ்மண எட்டு விவகாரம் சிவாஜி எட்டு சங்கர் எட்டுன்னு விவசாயி பதிவு போட்டு கலாய்க்கிறார். இப்படி பெருமையா பேசுற அளவுக்கு எனக்கு இருக்கிற எட்டுக்கள் ஒன்னும் அதிகம் இல்லைன்னாலும் நான் பெருமைப் பட்டுக்கலாம்னு சொல்ற எட்டு விஷயங்களை குட்டியாச் சொல்லிட்றேன் முதல்ல
1. பயம்னா என்னன்னு தெரியாம சண்டியர் மாதிரி இருக்கிறது பெருமையாடான்னு கேக்குறவங்க அனுபவிச்சி பாருங்க அப்ப தெரியும்)
2. எத்தனை கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் நட்பையும் கருத்து வேற்றுமையும் போட்டு கொழப்பிக்காம சரியான பாதைல போறது. இன்னைக்கு வரைக்கும் அப்படித்தான் இருக்கேன்
3. என்னோட சொந்தக்காரர் ஒருத்தர் பஞ்சாயத்து எலக்சன்ல நின்னப்போ அவருக்கு ஆதரவா ஒத்தை ஆளா பிரச்சாரம் செஞ்சி ஜெயிக்க வைச்சது( இது ஏன் பெருமைன்னா தனிப்பட்ட முறையில் எனக்கும் அவருக்கும் ஆகாது குடும்ப விவகாரம். ஆனா மனுசன் நல்லவர் எதாவது செய்யனும்னு இருந்தவர் செஞ்சவர். அவருக்கு ஆதரவா களத்தில் இறங்கி ஓட்டுக் கேட்டபோது எங்க வீட்டுக்காரங்களே ஏண்டா ஒனக்கு இந்த வேலைன்னு கேட்டது) இதே போல இன்னொரு சட்டமன்ற தேர்தலை பூத் ஏஜெண்டா உள்ள ஒக்காந்து ஒத்த கள்ள ஓட்டுக் கூட இல்லாம தேர்தல் நடத்த உதவினதுக்காக தேர்தல் கண்காணிப்பாளரிடம் பாராட்டு பெற்றது.
4. படிச்சது மெக்கானிக்கல் இஞ்சினியரிங் அப்பவே பொட்டி தட்டவும் பழகுனது ஆனா இது சம்மந்தப்பட்ட வேலை எதுவும் செய்யாம 5 வருசம் விவசாயம் பாத்தது புதுப்புது உத்திகளை கையாண்டு விவசாய உரங்களை எங்க வயல்ல இருந்தே ஒழிச்சுக் கட்டுனது.
சரி இதுக்கு மேலயும் இப்பவே எழுதி உங்க கண்ணை கட்ட விரும்பலை அதனால தொடரும்..போட்றேன்பா (இதோட தொடர்ச்சி நாளைக்கு காலேல கதம்பத்தில் )
(மேல இருக்க படம் எதுக்கா இருக்கும்னு கேக்குறவங்களுக்கு...."எல்லாம் என்னோட டெஸ்க்டாப்பை வச்சி ஒரு விளம்பரம்தான் :)"
14 comments:
What does the topic has to do with what you have inside the article?
//[Photo] //
நீங்க இவ்ளோ நல்லவரா?
நீங்க இவ்ளோ நல்ல நல்லவரா ?
"எனக்கு எய்ட்ஸ் இருக்கு"
ரொம்பவும் தான் தெகிரியம்
ஆனா இது சம்மந்தப்பட்ட வேலை எதுவும் செய்யாம 5 வருசம் விவசாயம் பாத்தது புதுப்புது உத்திகளை கையாண்டு விவசாய உரங்களை எங்க வயல்ல இருந்தே ஒழிச்சுக் கட்டுனது.//
அதனைப் பற்றி இன்னும் விரிவா எழுதணும் நீர்...
உங்களுடைய அனுபவம் ரசாயன உரங்கள் பயன்படுத்தினதாலே விளைச்சல் என்னானுச்சு, பின் வந்த வருடங்களில், எப்படி நீங்களே கண் கூடாக சில வியாதிகளை தருவிச்சுக் கொடுத்தீங்க அப்படின்னு சொல்லணும்.
நிறைய படிச்ச மக்களை கலப்பை எடுக்க வைக்கணும் உங்க விளக்கம்.
நம்ம தெக்கிகாட்டான் என்னய்யா எட்டு இன்னுமா போடலைன்னு (அவரே இன்னும் எழுதலை எஸ்கேப் ஆகப் போறதா கூகிள் டாக்ல சொன்னாரு தருமி அய்யா கொஞ்சம் கவனிங்க).//
ஏதாவது இருந்தாத்தானே போடுறதுக்கு... என்னாத்த எழுதுறது நான் உதவாக்கரை ஆனது எப்படின்னா... :-))
ரைட்டு :))
தெகா சொன்னதுக்கு ஒரு ரிப்பீட்டு!
//உங்களுடைய அனுபவம் ரசாயன உரங்கள் பயன்படுத்தினதாலே விளைச்சல் என்னானுச்சு, பின் வந்த வருடங்களில், எப்படி நீங்களே கண் கூடாக சில வியாதிகளை தருவிச்சுக் கொடுத்தீங்க அப்படின்னு சொல்லணும்.//
கண்டிப்பா தெகா இதுக்காக தனி தொடர் போடலாம்னு இருக்கேன் ஆரம்பிக்கலாமா?
:)
//ரைட்டு :))
தெகா சொன்னதுக்கு ஒரு ரிப்பீட்டு!
..///
உசுரோடதான் இருக்கியாப்பா?
கப்பி எங்கிருந்தாலும் கூகிள் டாக் வரவும்
//கப்பி பயலுக்கு எத்தனை நாளா என் மேல இந்த கொலவெறின்னு தெரியலை.//
எனக்கும்தான், யாராவது 60 போட கூப்பிட்டா மொத ஆளா உங்களைதான் கூப்பிட்டு இருப்பேன். அதுல நமக்கு ஒரு சந்தோசம்
//எல்லாறும் பெருமையா நினைக்கிற எட்டை போட்டு தமிழ்மண எட்டு விவகாரம் சிவாஜி எட்டு சங்கர் எட்டுன்னு விவசாயி பதிவு போட்டு கலாய்க்கிறார்//
ஹிஹி.. நல்லா இருங்க மஹி
//பயம்னா என்னன்னு தெரியாம சண்டியர் மாதிரி இருக்கிறது//
சிவாஜி ரஜினி மாதிரி தைரியமா வர ரயிலுக்கு(உங்க எக்ஸ்ப்ரெஸ்னே வெச்சுகிலாம்) முன்னாடி தண்டவாளத்துல கால் விட்டுகிட்டு நிக்க முடியுமா
(கண்டிப்பா ஸ்ரேயா காப்பாத்த ஓடி வந்தா தடுத்து நிறுத்த ஆளை ஏற்பாடு பண்ணிருவோம்)
//எனக்கும்தான், யாராவது 60 போட கூப்பிட்டா மொத ஆளா உங்களைதான் கூப்பிட்டு இருப்பேன். அதுல நமக்கு ஒரு சந்தோசம் //
ஏன் ஏன்யா நானும் விவ்சாயிதானே ஏன் இந்த கொலவெறி?
Post a Comment