Thursday, July 27, 2006

அதனால் என்னன்னா

"மாயவரத்தில ஒரே நாற்றமாம்?

எதனால?

குவாட்டர் கோவிந்தனுக்கு போட்டியா ஒருத்தர் வாந்தியெடுக்கிராறாம்"

முதலில் இப் பதிவுக்கு வேறு ஒரு தலைப்பைத்தான் தெரிவு செய்தேன் ஆனால் அது அவ்வளவு நன்றாக இருக்குமா என்று தெரியவில்லை அதன்பின் தலைப்பை மாற்றி விட்டேன் முதலில் வைக்க நினைத்த தலைப்பு கடைசியில்.

முதலில் அதனால் என்னன்னா வுக்கு வருவோம் அது போனவாரம் இது இந்த வாரம் எழுதியதை படித்த வேகத்தில் பதில் பதிவு எழுதவேண்டுமே என்ற நோக்கில் இந்தவாரம் ஒருவர் எழுதினார் அதனால் என்னன்னு கேட்டீங்களா?. அதாவது அதுல எழுதியிருந்தார்னா பரவாயில்லையே குவாட்டர் கோவிந்தன் எடுத்த வாந்திய விட மோசமா இருக்கு. அதுக்கு பின்னூட்ட ஊறுகாய்வேறு.

அதிலும் திரு.வெட்டிகுமார் மரம் வெட்டி பற்றி ஒரு கருத்து சொன்னாருங்க. அத படிச்சதும் எனக்கு புல்லறிச்சு போச்சு. சினிமா படத்துல அன்னியன் வந்தா அவங்க எல்லாரும் பேப்பர கிழிச்சு போட்டு விசிலடிப்பாங்களாம் ஆனா நேர்ல வந்தா அவங்க மரம் வெட்டி. நல்ல நாய(ம்)ப்பா.

அன்னியன் ஆளக் கொன்னா தப்பில்ல ஆனா மரத்த யாருக்கு வெட்டுனாங்க சக மனுசனுக்குதானப்பா? பேருல மட்டும் வெற்றிய சேத்துகிட்டா எல்லாரும் செயிக்க முடியும்னா உலகத்துல எல்லா பயலும் பேர மாத்திக்க மாட்டானா?.

மாங்கா மடையர்கள்னு ஒரு உள்குத்து வேற வஞ்சப்புகழ்ச்சி அணின்னா என்னன்னு தெரியாதவங்க ஜெயிக்கிர அயோத்தியார் கிட்ட போயி பாடம் படிங்கப்பா. ஆனா அதனால் என்னன்னு நீங்க கேக்கறது புறீது பொறுங்க இன்னும் இருக்கு.

இதுல இடையில இளைய நிலா பிள்ளையார் வந்து "அப்பா தம்பி நீ எழுதுறது சரியில்ல முடிஞ்சா ஒழுங்கா எழுதுன்னு சொன்னாக்க அதுக்கு பதில் என்னவாயிருக்கும் இல்ல இருக்கனும்னு நீங்க எதிர்பாப்பீங்க? நீங்க நினைக்கிற எதுவும் இல்ல

" சங்கத்துல சேந்தாச்சா? "

இதுதான் பதில் இன்னும் இருக்கு அவரு எழுதுனது சரின்னு சொல்ற எல்லாரும் ஆதரிக்கிர எல்லாரும் சொந்த பேருல எழுதுவாங்க ஆனா எதிர்த்து எழுதுனவருக்கு பதில யாரு சொல்லனும்? பதிவிட்டவர் தான? ஆனா அங்க தாங்க வர்றார் அனானி ராசா.

நீங்க எல்லாரும் ஒரு விஷயத்த கவனிச்சிருக்கலாம். அதாவது தமிழ் வலைப்பூவில் "எந்த ஒரு பார்ப்பனரும் தான் ஒரு பார்பனர் அப்பிடின்னு சொல்ல தயங்கறதே இல்ல ஆனா வேர யாராவது பூடாகமா அட என்னையே எடுத்துக்குங்க ஒரு வார்த்த சொன்னாக்க அது சாதி வெறி. நல்ல நாய(ம்)ப்பா. யாரும் இன்னும் சொல்லிக்கல ஆனா எதாவது ஒரு விஷயத்துக்கு தான் சார்ந்த சாதிக்கு ஆதரவு சொல்லித்தான ஆகனும்?

அன்னியனுக்கும் வன்னியனுக்கும் ஒரு எழுத்து தான் வித்தியாசம்னு நினைச்சு வார்த்தை வெளையாட்டு வெளையாடுறாங்க,. இங்க தமிழ்மனத்துல என்னா? சொடகு போட்டியா நடக்குது?.

இந்தமாதிரி அடுத்தவனுக்கு பதில் பதிவு போட்டு தாக்கறது. இல்ல ஆதரிச்சு வந்தா பின்னூட்டம் வெளியிட்டும் இல்லன்னா அதுக்கு பதிலா ஒரு அனானி அரசனை வச்சு பின்னூட்டம் போட்டு வெளாட்டு காட்டுறது இதெல்லாம் எதுக்கு.?

எல்லா ஆளுங்களும் தான் பிறந்த ஊருக்கு தனக்கு நல்ல பேரு சேத்துவைக்க ஆசைப் படுவான் ஆனா சில பேரு தன் பேருலயே ஊரையும் வச்சுகிட்டு அதக் கெடுக்கிறதே முதல் வேலையா செயல் படுறாங்க. இப்ப நான் மட்டும் என்னா யோக்கியமான்னு கேட்கிறீங்களா? நான் யோகியன் இல்லன்னு சொல்ல துனிச்சல் எனக்கு இருக்கு ஆனா அந்த போர்வைல இருந்துகிட்டு ஓட்டைவழியா உத்து உத்து பாக்கிற வேலை நான் செய்யமாட்டேன். என்னமோ எழுத வந்து என்னவெல்லாமோ எழுதிபுட்டனுங்க.


ஆனா நான் சொல்ல வந்தது என்னன்னு கொஞ்சம் புறிஞ்சா பதில் எழுதுங்க இல்லன்னா கேள்விய எழுதுங்க நமக்கு பின்னூட்டம் தான் முக்கியம். ஏன்னா எல்லாருமே வேண்டாம்னு தான் சொல்றாங்க நான் அப்பிடி இல்லைங்க நெறையா போடுங்க.

நம்மாளுங்க மட்டும் தான் இடஒதுக்கீடே வேண்டாம்னு சொல்வான் நான் பின்னூட்டத்த க் கூட விட்டு வைக்கமாட்டேன். அதனால் என்னன்னா நிறைய பின்னூட்டம் போடுங்க

இதற்கு முதலில் வைக்க நினைத்த தலைப்பு:

போன வாரமும் இந்தவாரமும் மயிலாடுதுரையும் மரம்வெட்டியும்.

(பின்குறிப்பு- இப்பதிவில் எந்த உள்குத்தும் இல்லை எல்லாமே வெளிக்குத்துதான். என்னை அடிவருடி என்று அழைக்கப் போகிறவர்களுக்கும் .அருமை என்று அணைக்கப் போகிறவர்களுக்கும் இப்போதே நன்றிகள்)

1 comment:

Unknown said...

உள்ளேன் அய்யா (ஒன்னுமில்ல அட்டனன்ஸ் குடுத்தனுங்க)
ஆமா எப்பிடி இந்த மாதிரி பதிலெல்லாம் குடுத்து வழுக்கிட்டு போறிங்க? அதனால் என்னவா? இல்ல உங்களோட தைரியத்த பாத்து சிரிப்பு இன்னும் அடங்கலிங்க.
இது உங்க பதிவுக்குள்ள நீங்க உட்ட அறிக்கைக்கு சுட்டிங்க வேற யாரும் படிக்கனும்னா இச் சுட்டிய கட்டி வெட்டி ஒட்டி போங்க.

http://mayavarathaan.blogspot.com/2006/07/369.html#c115401699348782601

அட உங்களுக்கு பதில் எதுக்கு இங்க சொன்னேன்னு பாக்கறீங்களா? நீங்க கண்டிப்பா படிப்பீங்கன்னு தெரியும்