Thursday, August 10, 2006

வலைப் பதிவு எழுத்தாளர்களின் பத்திரிகை மோகம்

கடந்த சில வாரங்களாக தமிழ்மணம் வலைத்திரட்டியில் எழுதும் பல்வேறு எழுத்தாளர்களின் பெயர்கள் ஜனரஞ்சக பத்திரிகை எனப்படும், குங்குமம், ஆனந்த விகடன், தினமலர் போன்ற வழமையான காகித பத்திரிகைகளில் வர ஆரம்பித்திருக்கிறது.

இது வழக்கமாக எழுதும் வலை அன்பர்களின் கவனம் மேலும் நல்ல தரமான பதிவுகள் தர உதவும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் இப் பத்திரிகைகளில் பெயர்கள் வெளியானபின்னர் அன்பர்களும், அவர்களை ஊக்குவிப்போறும், வலை எழுத்தாளர் காகித எழுத்தாளர் ஆனதுக்காக அல்லது பெயர் வந்ததற்க்காக மகிழ்வது மீண்டும் ஒரு பத்திரிகை ஆசிரியர் சார்ந்த தனது எழுத்துக்களுக்கு ஒரு ஜனரஞ்சக அங்கீகாரம் தேடும் முயற்சியின் விளைவாகவே எனக்குத் தெரிகிறது.

எந்த ஒரு கருத்தும் பிற அல்லது வடிகட்டப் படும் ஒரு ஊடகத்தின் வாயிலாக வரும் வேளைகளில் அவை அவற்றின் சுயம் இழந்து நிற்கும். வலைப்பதிவில் பல வசதிகள் ஆனால் மிக முக்கியமானது சுதந்திரம். கருத்துச் சுதந்திரம். அதே போல சுயம் இழக்க மட்டுமா வலைப் பதிவுகள்?

18 comments:

லக்கிலுக் said...

////இது வழக்கமாக எழுதும் வலை அன்பர்களின் கவனம் மேலும் நல்ல தரமான பதிவுகள் தர உதவும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் இப் பத்திரிகைகளில் பெயர்கள் வெளியானபின்னர் அன்பர்களும், அவர்களை ஊக்குவிப்போறும், வலை எழுத்தாளர் காகித எழுத்தாளர் ஆனதுக்காக அல்லது பெயர் வந்ததற்க்காக மகிழ்வது மீண்டும் ஒரு பத்திரிகை ஆசிரியர் சார்ந்த தனது எழுத்துக்களுக்கு ஒரு ஜனரஞ்சக அங்கீகாரம் தேடும் முயற்சியின் விளைவாகவே எனக்குத் தெரிகிறது. /////

வழக்கம் போல நெத்தியடி தலைவரே.... கலக்குங்க....

ஆனாலும் Controversy டாபிக் தான் உங்க ஸ்பெஷாலிட்டி (ரஜினி ரசிகர்களுக்கு மூளை இல்லையா மாதிரி) அந்த மாதிரி ஏதாவது போட்டு சூட்டைக் கிளப்புங்களேன்.... சென்னையிலே ஒரே குளிர்....

Unknown said...

லக்கி லூக் நன்றி

வலை உலகம் தனது சுயம் என்பதன் சுருக்கமான சுதந்திரத்தை இழந்து காகித பத்திரிகைகளின் பின்னால் செல்கையில் எந்த ஒரு வலை எழுத்தாளரும் தான் நினைத்த, சொல்ல வந்த கருத்தை தனது வார்த்தைகளில் சொல்ல இயலாத போது, அவர்களின் கருத்து முழுமையாக புறிந்துகொள்ளப் படுமா?, அல்லது தமிழ் வலைப் பதிவுகள் என்பவை வெறும் சன ரஞ்சக பத்திரிகைகளின் வாயிலா?

//அந்த மாதிரி ஏதாவது போட்டு சூட்டைக் கிளப்புங்களேன்.... //

அது போல எழுதும் படியான சூட்டை கிளப்பும் நிகழ்வுகள் எதுவும் இன்னும் எனக்கு தெரிந்து இப்போது எதுவும் நடக்கவில்லை. நடந்தால் கண்டிப்பாய் சூட்டை கிளப்பும் "பட்டையையும்"

கப்பி | Kappi said...

//அதே போல சுயம் இழக்க மட்டுமா வலைப் பதிவுகள்?
//

இல்லை மகி..
இதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை..

சனரஞ்சக பத்திரிகைகளில் பதிவர்களின் படைப்புகள் வருவது ஒருபோதும் அவர்களின் சுயம் இழக்க வைக்காது...

//காகித பத்திரிகைகளின் பின்னால் செல்கையில் எந்த ஒரு வலை எழுத்தாளரும் தான் நினைத்த, சொல்ல வந்த கருத்தை தனது வார்த்தைகளில் சொல்ல இயலாத போது, அவர்களின் கருத்து முழுமையாக புறிந்துகொள்ளப் படுமா?, //

பத்திரிகைகளில் வரும் படைப்புகளுக்கு வேண்டுமானால் நீங்கள் சொல்லும் இந்த நிலை வரலாம். ஆனால் பதிவுகள் எப்போதும் போலவே பதிவரின் முழு அதிகாரத்திலேயே (சரியான வார்த்தையா தெரியவில்லை) இருக்கும்.

தங்கள் படைப்பு சனரஞ்சக பத்திரிகையில் வருவது ஒரு வலைப்பதிவாளருக்கு ஒரு அங்கீகாரம்..அதற்கு மகிழ்வது இயற்கையே...

அதில் தவறேதும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை...

கப்பி | Kappi said...

நீங்க அங்க சொல்றதுக்கு முன்னாடியே இங்க தான் இருந்தேன் :))

Anonymous said...

சும்மா புகை உடாம, நீங்களும் விஷயத்தோட ஏதாவது எழுத முயற்சி பண்ணுங்க. உங்களுதும் பத்திரிக்கைல வரும்.

Unknown said...

கப்பி நன்றி
//சனரஞ்சக பத்திரிகைகளில் பதிவர்களின் படைப்புகள் வருவது ஒருபோதும் அவர்களின் சுயம் இழக்க வைக்காது...//
" நான் சொல்வது அவர்கள் தங்களுடைய வலைப் பூவில் சுயம் இழப்பார்கள் என்றில்லை, பத்திரிகை என்பது ஒரு கடிவாளமிட்ட குதிரை, அதில் பயனிக்கவா வலைப்பதிவுகள் உதவுகின்றன?

//சனரஞ்சக பத்திரிகையில் வருவது ஒரு வலைப்பதிவாளருக்கு ஒரு அங்கீகாரம்.//

அங்கீகாரம் பத்திரிகைகள் தரவேண்டும் என நினைப்பது எதைச் சுட்டுகிறது?

அனானி நன்றி...

//உங்களுதும் பத்திரிக்கைல வரும். //

அட இதப் பாருங்கைய்யா :))

பாலசந்தர் கணேசன். said...

paththirikkaikaLil valaipathivukaL paRRiya kavanam vanthiruppathu aNmai kaalamaaka nata-nthu koNdu varukiRathu. thinamalar pala maathangkaLaaka veLiyittu koNdu irunththa pOthilum, maRRavarkaL kavanam ippOthu thaan vanthu koNdirukkiRathu. enavE athai pathivarkaL makizchchiyaana cheythiyaaka eduththu koNdiruppathai naan viththiyaachamaaka paarkkavillai. naaLataivil ithuvum chaathaaraNamaaka aaki vidum.

நாமக்கல் சிபி said...

நீங்க சொல்றது ஒரு விதத்துல சரிதான்.
இப்ப என்னோட வலைப்பூல நான் என் இஷ்டத்துக்கு எதுவும் போட முடியாமப் போனது ஒரு வருத்தம் தான்...(வேலை தேடற கொஞ்சப் பேர் படிக்கறாங்கன்னும் போது நான் அதுல கண்டதையும் போட விரும்பல.
ஆனால் நம்ம எதுக்காக ஒரு விஷயும் செய்யறமோ அது அதனுடைய பலனை அடையும் போது சந்தோஷமே...)

ஆனால் வேணும்னா நான் புதுசா ஒரு வலைப்பூ தொடங்கி நான் இஷ்டப்படற எல்லாத்தையும் எழுதலாம். வலையுலகம் எனக்கு அந்த சுதந்திரம் கொடுத்திருக்கு...

நீங்க குறிப்பா என்னை சொல்லலனு தெரியும். இருந்தாலும் நீங்க சொன்ன கூட்டத்துல நானும் ஒருத்தன்றதால என்னோட கருத்தை பகிர்ந்து கொள்கிறேன்.

Unknown said...

//என்னை சொல்லலனு தெரியும். //
ஆம் வெட்டிப்பயல் அவர்களே நல்லவேளை நீங்களும் அனானி போல புகை விடாமல் நான் சொன்னதை புறிந்து கொண்டீர்களே...

//ஆனால் வேணும்னா நான் புதுசா ஒரு வலைப்பூ தொடங்கி நான் இஷ்டப்படற எல்லாத்தையும் எழுதலாம். வலையுலகம் எனக்கு அந்த சுதந்திரம் கொடுத்திருக்கு//

மீண்டும் ஒரு இடம் இடிக்கிறது வேறு ஒரு பெயரில்.... இதை யோசியுங்கள் ? நன்றி (பேரை மாற்றும் உத்தேசமுண்டா ?) நல்ல தகவல் தரும் நீங்கள் வெட்டிப் பயலா? :))//enavE athai pathivarkaL makizchchiyaana cheythiyaaka eduththu koNdiruppathai naan viththiyaachamaaka paarkkavillai.//
பாலச் சந்தர் கணேசன் நன்றி, சந்தோசப் படுவது என்பது அங்கீகாரத்தின் ஒரு வெளிப்பாடு, வலைப்பதிவு எழுத்தர்களுக்கு , பத்திரிகைகளின் அங்கீகாரம் தேவையா என்பதே எனது கேள்வி ( என்னாச்சு எல்லாம் தங்கிலீஸ்ல இருக்கு?)

கப்பி | Kappi said...

//பத்திரிகை என்பது ஒரு கடிவாளமிட்ட குதிரை, அதில் பயனிக்கவா வலைப்பதிவுகள் உதவுகின்றன? //

இங்கு இரட்டை குதிரை சவாரியும் சாத்தியம் தானே??

//அங்கீகாரம் பத்திரிகைகள் தரவேண்டும் என நினைப்பது எதைச் சுட்டுகிறது?
//

இதை மட்டும் குறிக்கோளாகக் கொண்டு யாரும் வலைப்பதியவில்லையே மகி...(வலைப்பதிவதாக எனக்குத் தெரியவில்லை ;))

அதிகமான பின்னூட்டங்கள் பெறும்போது எப்படி மகிழ்ச்சி தருகிறதோ அது போலவே தான் இதையும் கருத வேண்டும்...

தன் படைப்பை அதிகமான வாசகர்கள் படிக்கிறார்கள் என்ற மகிழ்ச்சியும் அதை தன் வலைப்பூவில் வெளிப்படுத்துவதையும் எந்த வகையிலும் குறை சொல்ல முடியாதே மகி..

பாலசந்தர் கணேசன் சொல்வது போல் பதிவுகள் பத்திரிகைகளில் வருவது நாளடைவில் சாதாரண நிகழ்வாகலாம்...

ஆனால் இந்த பதிவின் மற்றொரு விசயம் 'சுயம் இழத்தல்' நிகழுமானால் அது வருத்தம் தரக் கூடியது தான்...

Unknown said...

//ஆனால் இந்த பதிவின் மற்றொரு விசயம் 'சுயம் இழத்தல்' நிகழுமானால் அது வருத்தம் தரக் கூடியது தான்... //

கப்பி .....வெட்டிப்பயலின் பின்னூட்டத்தை படிக்கவும் நன்றி...

நாமக்கல் சிபி said...

//மீண்டும் ஒரு இடம் இடிக்கிறது வேறு ஒரு பெயரில்.... இதை யோசியுங்கள் ? நன்றி //
வேற பேரெல்லாம் இல்லைங்க...இன்னோரு வலைப்பூ ஆரம்பிச்சனா என் பேரை சொல்லித்தான் ஆரம்பிப்பேன்.

ஒரு வலைப்பூல நமக்கு தெரிஞ்சதெல்லாம்/பயனுல்லதெல்லாம் எழுதலாம். இன்னொனுல வெட்டியா எதாவது எழுதலாம்.

பேர மாத்தற ஐடியால்லாம் இல்லைங்க. எங்கம்மா கூட திட்னாங்க என்னடா பேர் (வெட்டிபையல்) இதுனு. யாருக்குங்க தெரியும் நம்ம வலைப்பூ பத்தியெல்லாம் விகடன்ல வரும்னு.

சிறில் அலெக்ஸ் said...

மகேந்த்ரன்,
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு குறிக்கோள் இருக்கும் அஹன்படி செய்யலாம்.

நீங்கள் சொல்லும் ;சுயம் தொலைக்கதே' என்பதை ஏற்றுக்கொள்கிறேன்.

வித்தியாசமான கோணத்தில் சிந்தித்திருக்கிறீர்கள்.

Unknown said...

//ஒரு வலைப்பூல நமக்கு தெரிஞ்சதெல்லாம்/பயனுல்லதெல்லாம் எழுதலாம். இன்னொனுல வெட்டியா எதாவது எழுதலாம்//

நன்றி வெட்டிப்பயல்


//வித்தியாசமான கோணத்தில் சிந்தித்திருக்கிறீர்கள்//

சிறில் அலெக்ஸ் சில நாட்களாக தமிழ்மணத்தை கவனித்ததன் விளைவு இது.. நன்றி

பொன்ஸ்~~Poorna said...

படம் ரொம்ப அழகா இருக்கு..

Unknown said...

//படம் ரொம்ப அழகா இருக்கு..//
:)

வசந்தன்(Vasanthan) said...

ஆம். நீங்கள் சொல்வது சரியே.
ஒருகட்டத்தில் வலைப்பதிவர் தன்வலைப்பதிவிற்கூட சமரசத்தன்மையோடு எழுத நேரிடும்.
காட்டாக,
தினமலர் பெயர் வெளியிட்ட வலைப்பதிவாளர்களில் எத்தனைபேரால் முன்னைய தீவிரத்தோடு தினமலரை விமர்சிக்க முடிகிறது?

கருப்பு said...

என்னய்யா பாப்பாத்திப் பதிவைப் படிக்கலாம் என்று வந்தால் காணோமே?