Sunday, August 20, 2006

ஞாநியின் பித்தலாட்டம்.

மீண்டும் கரடி பொம்மை ஞானியின் பித்தலாட்டம்.

கண்ணகி சிலை விவகாரத்தில் கடும் எதிர்ப்புகளை சந்தித்த பத்திரிகையாளர் ஞாநி இப்போது அதே ஓ..பக்கங்களில் ஒரு கருத்தை சொல்லியிருக்கிறார். புதுமையான விழிப்புணர்வுகள் சார்ந்த கருத்துக்கள் சொல்லுவதாக தனக்குத்தானே ஜல்லியடித்துக் கொள்ளும் ஞாநி தனது புதிதாக வைத்திருக்கும் கருத்து மூலம் தான் ஒன்றும் இயற்கை விதிகளுக்கு அப்பாற்பட்டவன் இல்லை என்ற தனது சுய முகத்தை சொல்லியிருக்கிறார். கருத்து சொல்ல யாருக்கும் உரிமை உண்டு என்பதில் எனக்கு மாற்று எண்ணமில்லை. ஆனால் தான் சொல்லுவது மிகச் சரியானவை எனச் சொல்லும் ஞாநி இந்த விவகாரத்தில சுமார் 100 நாட்களுக்குள் தனது கருத்து இப்படி மாறிப் போனதற்கான காரணம் எதையும் சொல்ல வில்லை. கீழே இருப்பது அவரின் இந்த வார விகடன் ஓ.. பக்கங்களில் எழுதியது.
"சிலைகள் வைப்பது அவசியம்தானா?’’

‘‘வீட்டுக்குள் அப்பா, அம்மா போட்டோவை மாட்டிவைப்பது போல, நாட்டுக்கு உழைத்தவர்களுக்கு சிலை வைப்பதும் அவசியமானதுதான். இது ஒரு நினைவுகூரல். ஆனால், சிலைகளுக்கு மாலை மரியாதையெல்லாம் செய்து, அதை வழிபாடாக மாற்றுவதுதான் தேவையற்றது. முக்கியமான முன்னோடிகளை நினைவுகூர மட்டும் சிலைகள் தேவை என்று இல்லை. மக்களிடம் நல்ல கலை உணர்வை, அழகு உணர்வை ஏற்படுத்த அழகான சிற்பங்கள் எல்லாப் பொது இடங்களிலும் தேவை. தாசில்தார் அலுவலக வராந்தாவில் ரோடினின் சிந்திக்கும் மனிதனின் சிற்பத்தை வைத்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்! ஐரோப்பா முழுவதும் தலைவர்களுக்கு மட்டுமல் லாமல், பொதுவான கலைச் சிற்பங்கள் தெருவுக்குத் தெரு வைக்கப்பட்டு இருக்கின்றன. அப்படிப்பட்ட சூழல் இங்கேயும் தேவைப்படுகிறது.
நமக்கு அது போல நல்ல சிலைகள் வைக்கத் தெரியாமல் இருப்பதால்தான், சிலைகள் மீது வெறுப்பு உருவாகிறது!’’
இனி எனது கருத்துக்கள்:
ஐரோப்பியர்களின் சிலை ஆர்வம் என்பது போலவே இந்தியர்களும் சிலை ஆர்வமும் கலை ஆர்வமும் கொண்டவர்கள் என்பது தெரியாதவரல்ல ஞாநி. அவர்களின் கலாச்சாரம் சாந்த கலை சார்ந்த சிலைகள் வைப்பதை ஆதரிக்கும் இவர் கண்ணகி சிலை வைக்க அத்தனை கடினமான வார்த்தை பிரயோகங்களோடு அதனை விமர்சித்தது ஏன்.?
தமிழர்களை பொறுத்த வரை கலாச்சாரமும் வாழ்கையும் கலையும் வேறு வேறு அல்ல. கண்ணகி வெறும் உறுவக் குறியீடு என முழங்கியவர் இப்போது ரோடினின் சிலையை கோவை தாசில்தார் அலுவலக வாசலில் வைக்கச் சொல்லவேண்டிய அவசியம் என்ன.
ஐரோப்பியர்களுக்கு ரோடின் எப்படியொ அதே போல தமிழர்களுக்கு கண்ணகியும், பெரியாரும். காமராசரும். கண்ணகி வெறும் காப்பியத்தலைவி மட்டுமல்ல், அது ஒரு கலாசாரத்தின் சின்னமாக அனேகம்பேரால் கருதப் படுகிறது. கற்பு குறித்த சர்சைகள் ஆயிரம் இருப்பினும் கண்ணகி கால வாழியல் முறைகள் தமிழருக்கு அறியக்கிடைக்க காரணம், சிலப்பதிகாரம். சிலப்பதிகாரம் என்றதும் நம் நின்ணைவுக்கு வருவது கண்ணகி.
அதுபோல திராவிடர்கள் மத்தியில் தனது கருத்துக்களால் விழிப்புணர்வுகளை ஊட்டிய, பெரியாரும், உலக மக்கள அனைவருக்கும் பொதுவான கருத்துக்களை எல்லோறாலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய சொன்ன வள்ளுவரும்.
கலாச்சாரமும் கலையும் வேறுவேறாக இருக்கும் ஐரோப்பிய, மேலை நாடுகளுக்கு வேன்டுமானால் ஞாநி சொன்னது சரியாக இருக்கும், நாம் கடவுள்களின் சிலையையைக் கூட கலைவண்ணத்துடன் தான் படைக்கிறோம், கலையும், கலாச்சாரமும் பின்னிப் பினைந்தது தான் தமிழகம்.
கலைக்கு சிலைவைத்தால் அது கலாச்சார சிலையே, சிலைகளை வழிபாட்டுக்கு உரியதாக ஆக்குவதை கண்டிக்கும், ஞாநி எல்லா சிலைகளுமா வழிபடப் படுகின்றன, தமிழன் தனக்கு வாழ்கையில் உதவுவதாக கருதும் எல்லாவற்றின் மேலும் அன்பு செலுத்துபவன். அதை பூசிப்பவன் , ஆத்திகர்கள் சாமிகும்பிடுவது போல.
அவர்கள் இல்லாத கடவுளை வணங்குகிறார்கள், இவர்கள் ரத்தமும் சதையுமாக தனது வாழ்க்கையை மக்களுக்காக அவர்களின் முன்னேற்றத்துக்காக பாடுபட்டவர்களை வணங்குகிறார்கள். இது கூட தனக்கு இருக்கும் அன்பை வெளிப்படுத்தும் ஒரு சின்னமே மாலைகள், வணங்குதல். எல்லாம், ஐரோபியர்கள், வழியில் பார்த்தால் ஹாய் சொல்லிப் போவதில்லை, அதுபோல.
அவர்களும் அங்கே சிலைகளுக்கு முத்தம் தருவது கட்டிப் பிடிப்பது என செய்கிறார்க்ளே அதை சரியென்று ஞாநி ஒத்துக் கொண்டால் இங்கே சிலைகளுக்கு மரியாதை தருவதையும் ஒத்துக்கொள்ள வேண்டும். முத்தம் கொடுப்பது அவர்கள் பழக்கம் மாலை போடுவது நமது பழக்கம் அவ்வளவுதான்.
பொங்கல் கொண்டாடும் போது மாடுகளை வணங்குபவன் தமிழன் அது அவன் அதன்மேல் கொண்ட அன்பின், அது செய்த உதவிகளுக்கு, நன்றி தெரிவிக்கும் வெளிப்பாடு. அதைப்போலவே சிலைகளும் அதை வணங்குவதும் வெறும் கலைகளுக்கு மட்டும் இல்லை தமிழர்களின் சிலை ஆர்வம் அது வெறும் சிலை அல்ல கலாச்சாரத்தின் சின்னம் அதை தமிழன் தனக்குகந்த முறையில் தனது அன்பை மரியாதையை வெளிப்படுத்த கடமையும் உரிமையும் உண்டு.
கல்லாக மட்டும் இருக்கும் கடவுளுக்கு பூசை வேண்டுமென்றால் மனிதர்களாய் இருந்த தலைவர்களுக்கு சிலையும் பூசையும் வேண்டும்.
ஞானிகள் தான் சொல்லுவது மட்டுமே சரியென்று எண்ணுவதில்லை அப்படி நம்பினால் அவர்கள் ஞானி இல்லை.
74 comments:

கோவி.கண்ணன் [GK] said...

கல்லிலே கலைவண்ணம் கண்டான் !

ஆமாங்க மகி,

நமது தமிழர் பண்பாடுகள் சிலைவடிவில் சிற்பங்களாக பல்வேறு வகையில் வடித்து வைக்கப்பட்டிருக்கின்றன...!

திடீர் பரபரப்பை பரப்ப நினைக்கிறவங்கதான் ஞானி மாதிரி ஆட்கள் தான்

(கடைசிவரியில் உ.கு உண்டு கவனமாக படிக்கவும் :)

:))))

Anonymous said...

இங்கே விளையாட அனுமதி உண்டா ?

Unknown said...

//திடீர் பரபரப்பை பரப்ப நினைக்கிறவங்கதான் ஞானி மாதிரி ஆட்கள் தான்//

அது சரிதான் எமக்குத் தொழில் கலகம் :)

அப்ப நானும் ஞானியா? இதில் எந்த குத்தும் இல்லை

கட்டுரைக்கு எதுவும் கருத்து இல்லையா ஜிகே? :(

கோவி.கண்ணன் [GK] said...

//கட்டுரைக்கு எதுவும் கருத்து இல்லையா ஜிகே? :( //

கல்லிலே கலைவண்ணம் கண்டான் !

நமது தமிழர் பண்பாடுகள் சிலைவடிவில் சிற்பங்களாக பல்வேறு வகையில் வடித்து வைக்கப்பட்டிருக்கின்றன...!

ஏனுங்க மகி உ.கு மட்டும் சரியா படிக்கிறிங்க ... ! :))

மேலே சொன்னது கட்டுரைக்கான (ஆதரவு) கருத்துக்கள் தான் !

கோவம் வர்ர்து !!! :((

கோவி.கண்ணன் [GK] said...

கட்டுரைக்கு ஓ போடலாம் ... 'ஓ' ஞானிக்கு சொந்தமானது ... ஓ போட்டால் அவருக்கு ஓ போட்டதாகிவிடும் ! ஏற்கனவே உங்களுக்கு பின்னூட்டம் போடறதால 'கலகத்துக்கு கையெழுத்து' போடுகிறேன் என்று என் காதுகள் கடிபடுது ... :))

கட்டுரைக்கு கருத்தா ? அதெல்லாம் எதிர்பார்க்காதிங்க ... என் கடன் பின்னூட்ட எழுதிக் கிடப்பதே !

:))

Unknown said...

//ஏனுங்க மகி உ.கு மட்டும் சரியா படிக்கிறிங்க ... ! :))//

என்ன பன்ன உங்க பின்னூட்டம் வந்தாவே நான் முதல்ல அது உள்ள எங்க எங்க குத்து இருக்குன்னு பாக்கறது தான் முதல் வேலை... :)

//மேலே சொன்னது கட்டுரைக்கான (ஆதரவு) கருத்துக்கள் தான் //

அப்பன்னா ரொம்ப நன்றிங்க :))

//கோவம் வர்ர்து !!! //
இல்லைங்க :!

Unknown said...

//இங்கே விளையாட அனுமதி உண்டா ? //

அனானிகளுக்கு அனுமதி உண்டு அடித்து ஆடக்கூடாது

ஒன்லி கமெண்ட்ஸ் அலவ்டு பார் தி போஸ்ட்டட் ஆர்டிகல் :))

உங்கள் நண்பன்(சரா) said...

ஹலோ மகி! மற்றும் கோவி!
காலை வணக்கம்!

//திடீர் பரபரப்பை பரப்ப நினைக்கிறவங்கதான் ஞானி மாதிரி ஆட்கள் தான்//

இது யாரைனு கலகக்காரனுக்கு தெரியாதா என்ன?

அன்புடன்...
சரவணன்.

Unknown said...

// ஏற்கனவே உங்களுக்கு பின்னூட்டம் போடறதால 'கலகத்துக்கு கையெழுத்து' போடுகிறேன் என்று என் காதுகள் கடிபடுது ... :))
கட்டுரைக்கு கருத்தா ? அதெல்லாம் எதிர்பார்க்காதிங்க ... என் கடன் பின்னூட்ட எழுதிக் கிடப்பதே !//

தூற்றுவார் தூற்றட்டும் (உங்களைத்தானே :)
போற்றுபவர்கள் போற்றட்டும் :))
நீங்க கடனை கழிக்கும் வழியை பார்க்கவும் வட்டி குட்டி போடு பிறகு அதற்கும் சிலை வைப்பேன்

கோவி.கண்ணன் [GK] said...

//வார் தூற்றட்டும் (உங்களைத்தானே :)
போற்றுபவர்கள் போற்றட்டும் :))//

மகி,

தூதூ .. போபோ போகட்டும் கோவிகண்ணனுக்கே !

மிகச் சரி...!

நான் எதைப்பற்றியும் கவலைப்படுவதில்லை ! :)))

உங்கள் நண்பன் ... சரவணன் .. !

காலை வணக்கம் !

Unknown said...

//இது யாரைனு கலகக்காரனுக்கு தெரியாதா என்ன?//

வணக்கம் சரா ஏது விட்டா கலகக்காரனுக்கும் சிலை வைப்பீர்கள் போலிருக்கிறதே ?:)

கோவி.கண்ணன் [GK] said...

//வணக்கம் சரா ஏது விட்டா கலகக்காரனுக்கும் சிலை வைப்பீர்கள் போலிருக்கிறதே ?:) //

ஆசை தோசை அப்பளம் வடை...!

மகி,
யாராவது 'உலை' வைக்காமல் இருந்தால் சந்தோசப்படலாம் ... அநானி கைங்கர்யத்தில் ரவி 10 நாள் அஞ்ஞாதவாசம் இருந்த மாதிரி ஆகிடப்போவுது ... பார்த்து பார்த்து ... :)))

Unknown said...

//தூதூ .. போபோ போகட்டும் கோவிகண்ணனுக்கே !

மிகச் சரி...!

நான் எதைப்பற்றியும் கவலைப்படுவதில்லை ! :)))//


ஜிகே ஆகா எம்மாம் பெரிய மனசு உங்களுக்கு அடுத்த பதிவில உங்களுக்கு சிலைவைக்கட்டா? :)

உங்கள் நண்பன்(சரா) said...

TV -tuner card மூலம் எனது கணிணியில் இப்போது "கமாண்டோ" படம் K-TVல பார்த்துகிட்டு இருக்கேன்!,
இதனால் பின்னூட்டம் குறைந்து விடாது!
பின்னூட்ட கமாண்டோ"கோவி"


அன்புடன்...
சரவணன்.

உங்கள் நண்பன்(சரா) said...

நீ! மத்தவங்கள விட கொஞ்சம் வித்தியாசமா இருக்க! அதனால் உன்னக் கடைசியா கொல்லுவேன்!அன்புடன்...
சரவணன்.

கோவி.கண்ணன் [GK] said...

//ஜிகே ஆகா எம்மாம் பெரிய மனசு உங்களுக்கு அடுத்த பதிவில உங்களுக்கு சிலைவைக்கட்டா? :) //

யப்பா ... ஆளவிடுங்க ... என் பெயரில் ஏகப்பட்ட தனிமனித தாக்குதல் ஏற்கனவே நடந்து ஓய்ந்து விட்டது (சுட்டி வேண்டுமானால் தருகிறேன்)... போதும் !

:))

Unknown said...

சரா இன்னிக்கு எதாவது பதிவ பத்தி சேதி சொல்லுங்களேன் ஆமா அர்னால்ட் என்ன பன்றாரு?

உங்கள் நண்பன்(சரா) said...

//அநானி கைங்கர்யத்தில் ரவி 10 நாள் அஞ்ஞாதவாசம் இருந்த மாதிரி ஆகிடப்போவுது //

இதுக்கு ரவிதான் பதில் சொல்லனும்!அன்புடன்...
சரவணன்.

உங்கள் நண்பன்(சரா) said...

takeoff ஆகும்போது நிற்க்க்க கூடாதுனு அழகுப் பொண்ணு சொன்னதுக்கு

"எனக்கு பிரச்சனை இல்லை! நாங்கெல்லாம் பஸ்லயே புடிக்காமா நின்னுகிட்டு போரவங்க! இதெல்லாம் ஜுஜுபி அப்படினு சொல்லுராரு"


அன்புடன்...
சரவணன்.

கோவி.கண்ணன் [GK] said...

// மகேந்திரன்.பெ said...
சரா இன்னிக்கு எதாவது பதிவ பத்தி சேதி சொல்லுங்களேன் ஆமா அர்னால்ட் என்ன பன்றாரு?
//

மகி ... இதான் மருந்து குடிக்கிறப்ப குரங்க நெனெக்காதேன்னு சொல்றது...!
பதிவப் பத்தி கேட்டுவிட்டு அப்பறம் அர்னால்டு ...? என்ன ஆச்சு ஒரே குழப்பம் :))

nayanan said...

ஞாநியின் கட்டுரை குறித்த உங்கள்
அலசல் நன்று.

ஞாநி தனது குறைகளை பேணி வளர்த்துக்
கொண்டே போகிறார்.

உதாரணம்: அவர் கட்டுரையில் உள்ள இந்த வரி.

"நமக்கு அது போல நல்ல சிலைகள் வைக்கத் தெரியாமல் இருப்பதால்தான், சிலைகள் மீது வெறுப்பு உருவாகிறது!"

Unknown said...

//நீ! மத்தவங்கள விட கொஞ்சம் வித்தியாசமா இருக்க! அதனால் உன்னக் கடைசியா கொல்லுவேன்//

என்னது கடைசியா கொல்லுவீங்களா? இல்லை சொல்லுவீங்களா? ஓகோ அர்னால்டு அங்க கருப்பனை கொல்றாரா இல்லை ஒருத்தன் அவங்க பொன்ன கடத்துவானே அவ்ங்கிட்ட பேசுராரா?

Unknown said...

(சுட்டி வேண்டுமானால் தருகிறேன்)... போதும் !//

உங்கள் நண்பன்(சரா) said...

//அங்க கருப்பனை கொல்றாரா இல்லை ஒருத்தன் அவங்க பொன்ன கடத்துவானே அவ்ங்கிட்ட பேசுராரா?
//


ஆமா! சரியா சொன்னீங்க மகி!


அன்புடன்...
சரவணன்.

siva gnanamji(#18100882083107547329) said...

சிலைகள் வைக்கப் படுவதால்,
பழங்கலை ஒன்று அழியாமல் பாதுகாக்கப்படுகின்றதே;
சி(ப)லருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கின்றதே.
"கொள்வார்" இருந்தால்தானே "கடை விரிக்க" முடியும்?வாங்குவோர்(சிலை வைப்போர்?) இருந்தால்தானே
சிலை உற்பத்தி நடைபெறும்? சிற்பக்கலையை அழியாமல் பாதுகாக்க முடியும்!

Anonymous said...

//இங்கே விளையாட அனுமதி உண்டா ? //

அடடா அடடா என்னவொரு பவ்யம்,பணிவு. இந்த அனானி அநியாயத்துக்கு நல்லவரா இருப்பார் போல

படித்ததும் வெடித்துச்சிரித்துவிட்டேன்.
:))))))))))))))))))))))))))

உங்கள் நண்பன்(சரா) said...

என்னைய நம்பு நான் உன்னை ஒன்னும் செய்ய மாட்டேன்! அந்தக் காரை ஃபாலோ பண்ணு!
ம்ம்ம்.. கீக்கிரம்!அன்புடன்...
சரவணன்.

Unknown said...

//சிலைகள் வைக்கப் படுவதால்,
பழங்கலை ஒன்று அழியாமல் பாதுகாக்கப்படுகின்றதே;
சி(ப)லருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கின்றதே.
"கொள்வார்" இருந்தால்தானே "கடை விரிக்க" முடியும்?வாங்குவோர்(சிலை வைப்போர்?) இருந்தால்தானே
சிலை உற்பத்தி நடைபெறும்? சிற்பக்கலையை அழியாமல் பாதுகாக்க முடியும்! //

ஆம் நீங்கள் சொல்வது சரிதான் ஆனால் அதை வழிபடக்கூடாது என்பது சரியா?

Unknown said...

//அடடா அடடா என்னவொரு பவ்யம்,பணிவு. இந்த அனானி அநியாயத்துக்கு நல்லவரா இருப்பார் போல

படித்ததும் வெடித்துச்சிரித்துவிட்டேன்//

ஆமாங்க நீங்களுமா அனானி? இப்பல்லாம் அனானிங்க ரொம்ப நல்லவங்களா இருக்காங்க

Unknown said...

பின்னூட்டம் போட்றது இருக்கட்டும் முதல்ல ஒரு ஓட்டு போடுங்க சரா :0

Unknown said...

என்னைய நம்பு நான் உன்னை ஒன்னும் செய்ய மாட்டேன்//

நம்புறேன் நம்புறேன் எனக்கு வேற வழி?

Unknown said...

ஜிகே நீங்களும் தான் எனக்கு ஒரு ஓட்டு டூல் பார்ல குத்துங்க :))

Unknown said...

முன்னாடியே வாசகர் பரிந்துரைல ஒரு 4 பதிவு கெடக்கு அது கூட இதுவும் சேரட்டும்

உங்கள் நண்பன்(சரா) said...

எங்கே அந்த பின்னூட்ட கமாண்டோவக் காணோம்..?

திரும்ப பத்திரிக்கைகளில் பெயர் அடிபடுர மாதிரி எதாவது "காரியம்" பண்ணப் போய்ட்டாறா?

அன்புடன்...
சரவணன்.

Unknown said...

//எங்கே அந்த பின்னூட்ட கமாண்டோவக் காணோம்..?

திரும்ப பத்திரிக்கைகளில் பெயர் அடிபடுர மாதிரி எதாவது "காரியம்" பண்ணப் போய்ட்டாறா//

இப்"போதைக்கு வருவாரா?


ஓட்டு போட்டிங்களா? :)

உங்கள் நண்பன்(சரா) said...

//ஓட்டு போட்டிங்களா? :) //


"ஓ!" போட்டாச்சு

அன்புடன்...
சரவணன்.

Unknown said...
This comment has been removed by a blog administrator.
Unknown said...

ஞாநி தனது குறைகளை பேணி வளர்த்துக்
கொண்டே போகிறார்.//

ஆம் அதுபோலவே இன்னும் சில கருத்துக்களை வெளியிட்டுள்ளார் வரிசையாக அலசுவேன் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நயனன்

Unknown said...

//ஓ!" போட்டாச்சு//


உள்குத்துதானே?...

நான் ஓட்டை கேட்டேன் :)

உங்கள் நண்பன்(சரா) said...

//நான் ஓட்டை கேட்டேன் :) //


ஐயா நானும் அதைத்தான் சொன்னேன்!
"ஓ"ட்டைப் போட்டாச்சு!

போதுமா..? இதில் ஏதும் உகு இல்லை!


அன்புடன்...
சரவணன்.

Unknown said...

//ஓ"ட்டைப் போட்டாச்சு!

போதுமா..? இதில் ஏதும் உகு இல்லை//

அது சரி நான் சொன்னதை நீங்கள் புரிந்துகொள்ளவில்லை உள்குத்து (தமிழ்மணம் டூல் பாரில் உள்பக்கம் + வெளிப்பக்கம் - )

சாமி நீங்க எந்த பக்கம் குத்துனீங்கன்னு கேட்டேன் போதுமா ?:))

உங்கள் நண்பன்(சரா) said...

//சாமி நீங்க எந்த பக்கம் குத்துனீங்கன்னு கேட்டேன் போதுமா ?:)) //


உள்ளேதான் மகி!


அன்புடன்...
சரவணன்.

Unknown said...

அப்ப உள்குத்துன்னு சொல்லுங்க :))))))))

Anonymous said...

யோவ் கலககாரன், உட்லண்ட்ஸ் சிக்கன் 65 சாப்பிட போய்யா.
எல்லாரும் வெயிட் பண்ணுறாங்க

அன்புடன்
கோண்டு கிராதகன்

Unknown said...

//யோவ் கலககாரன், உட்லண்ட்ஸ் சிக்கன் 65 சாப்பிட போய்யா.
எல்லாரும் வெயிட் பண்ணுறாங்க//


அங்க போண்டா மட்டும்தான்யா கிடைக்கும்

Anonymous said...

ஞானி பித்தாலாட்டம் - சுப்ரமனி மேட்ருன்னு எட்டிப் பார்த்தா ?

உப்பில்லாமல் இருக்கு.

இப்படிக்கு
சொர்ணமால்யா ரசிகர்மன்றம்

உங்கள் நண்பன்(சரா) said...

வாங்க மகி! என்ன இவ்வள்வு நேரம் ஆளைக்காணோம்? சாப்பிடப் போய்டீங்களா?


அன்புடன்...
சரவணன்.

Unknown said...

//வாங்க மகி! என்ன இவ்வள்வு நேரம் ஆளைக்காணோம்? சாப்பிடப் போய்டீங்களா?//


இல்லிங்க கமெண்ட் எதுவும் இல்லை அதான் சும்மா படிச்சேன் அப்புறம் கொஞ்சம் வேலையும் செஞ்சாதான சம்பளம் கிடைக்கிம்

Unknown said...

//ஞானி பித்தாலாட்டம் - சுப்ரமனி மேட்ருன்னு எட்டிப் பார்த்தா ?

உப்பில்லாமல் இருக்கு.

இப்படிக்கு
சொர்ணமால்யா ரசிகர்மன்றம் //ஆமா இம்மா வெவகாரமா இருக்கியளே நீங்க என்னா காமகேடிக்கு சொந்தமா?

உங்கள் நண்பன்(சரா) said...

மகி50க்கு வாழ்த்துக்கள்!!!


அன்புடன்...
சரவணன்.

Unknown said...

நன்றி சரா

Anonymous said...

ஞானியா ஞாநியா எது சரி?

Unknown said...

//ஞானியா ஞாநியா எது சரி? //


இவர் ஞாநி மட்டுமே ஞானி அல்ல இரண்டுமே சரிதான்

Anonymous said...

மகேந்திரன்,
சமீபத்தில் 1952 இல் நடந்தது .அப்போது எனக்கு 17 வயது பி.யூ.சி இறுதி ஆண்டு படித்துவந்தேன், முதன் முதலில் சென்னை கடற்கரையில் உழைப்பாளர் சிலைதான் வைக்கப்பட்டது. அதற்கு ஆதரவு தெரிவித்து இளைஞர்கள் சார்பில் ராஜாஜி ஹாலில் கூட்டம் கூடி வாழ்த்து தெரிவித்தோம்.இதுபற்றி அப்போதே கல்கியில் பரபரப்பாக எழுதப் பட்டது. ஹிந்துவில் தலைப்புச் செய்தியாக என் அப்பாவே எழுதினார். ஆகவே சிலை வைப்பது ஒரு நல்ல விசயம். ஞானி சொல்வது அதைத்தான் என்று நினைக்கிறேன்

அன்புடன்
போலி டோண்டு
சிம்ரன் ஆப்பக் கடை மேல்மாடி
துபாய்

இதை போலியான டோண்டுதான் எழுதினான் என்பதை அறிந்து கொள்ள எலியை பிடித்து உப்பு மிளகாய் தடவவும் பின் வானலில் இட்டு வருத்து சாப்பிடவும். இதையே எனது போலிப்பதிவான மிரட்டு வைத்தியம் 5ல் இடுகிறேன் இதோ பொந்து:

http://doondu.blogspot.com/hteruixdy.html

Unknown said...

போலி டோண்டு அவர்களே நீங்கள் சொன்னதற்கு என்ன ஆதாரம் , 1952 இல் ராஜாஜி ஹாலே இல்லை மேலும் அப்போது ராஜாஜி முதல்வர் இப்படியிருக்க ராஜாஜி ஹாலில் நடந்தது என்பதை எப்படி நான் ஏற்றுக் கொள்வது?

மேலும் உங்களின் பொந்து தவறு வேலை செய்யவில்லை வேறு எதாவது பாம்மு இருக்கும் என்று நினைக்கிறேன்

Anonymous said...

// மகேந்திரன்.பெ said...
போலி டோண்டு அவர்களே நீங்கள் சொன்னதற்கு என்ன ஆதாரம் , 1952 இல் ராஜாஜி ஹாலே இல்லை மேலும் அப்போது ராஜாஜி முதல்வர் இப்படியிருக்க ராஜாஜி ஹாலில் நடந்தது என்பதை எப்படி நான் ஏற்றுக் கொள்வது?//
தட்டச்சு பிழையால் சிறு தவறு நடந்துவிட்டது. 1962 என்று திருத்தி வாசிக்கவும். ராஜாஜி ஹால் 1962ல் கட்டப்பட்டு முதல் கூட்டத்தில் அப்போது சினிமாவில் பரபரப்பாக அரசியல் வசனம் போசி ஆச்சிரியமாக பார்க்கப்பட்ட இளைஞர் சோ தான் கூட்டத்துக்கு தலைமை தாங்கினார். அப்போதைய துக்ளக் ஆதராம் என்னிடம் இருக்கிறது.

அன்புடன்
போலி டோண்டு
சிம்ரன் ஆப்பக் கடை மேல்மாடி
துபாய்

Unknown said...

திரு போலி டோண்டு அவர்களே நீங்கள் மீண்டும் தவறான தகவல் தருகிறீர்கள். 1962 இல் சினிமாவி இருந்த சோ பத்திரிகை ஆரம்பிக்கவே இல்லை, மேலும் அப்போது அவர் இதுபோல காங்கிரஸ் பேரியக்க கூட்டங்களில் பங்கெடுக்கவும் இல்லை உங்களால் துக்ளக் ஆதாரத்தை தரமுடியுமா?

Anonymous said...

//திரு போலி டோண்டு அவர்களே நீங்கள் மீண்டும் தவறான தகவல் தருகிறீர்கள். 1962 இல் சினிமாவி இருந்த சோ பத்திரிகை ஆரம்பிக்கவே இல்லை, மேலும் அப்போது அவர் இதுபோல காங்கிரஸ் பேரியக்க கூட்டங்களில் பங்கெடுக்கவும் இல்லை உங்களால் துக்ளக் ஆதாரத்தை தரமுடியுமா?//

துக்ளக் பத்திரிக்கை ஆரம்பித்து சிறிய அளவில் விற்பனையும் நடந்தது. துக்ளக்கை எதிர்த்து அது பற்றிய விசமங்களை தொடர்ந்து விடுதலையில் கருணாநிதியும், அண்ணாத்துறையும் எழுதிவந்ததையும், அதை பாராட்டி இராமசாமி பெரியார் எழுதிய கடிதம் ஒன்று பழைய முரசொலியில் இருக்கிறது. ஆதாரம் இல்லாமல் நான் ஒரு வரி கூட எழுதுவதில்லை

அன்புடன்
போலி டோண்டு
சிம்ரன் ஆப்பக் கடை மேல்மாடி
துபாய்

Unknown said...

முதலில் கல்கி என்றீர்கள் பிறகு துக்ளக் இப்போது முரசொலி சரி முரசொலி ஆதாரமாவது தரமுடியுமா? உங்களை நினைத்தால் சிரிப்புத்தான் வருகிறது

Anonymous said...

ஞானி ஸொல்வது நல்ல விஷயம். ஹிந்துக்கள் தெய்வங்களை விக்ரகங்களாக ஸெய்து ஷேவித்தனர். சிலை வைப்பது நம் ஹிந்துகளின் நல்ல பழக்கம். டோண்டு அவர்கள் ஸொல்வதும், ஞானி அவர்கள் ஸொல்வதும் மெய்பொருள் தெரியாதவர்களுக்கு புரியாது. அரஸியல் காரணங்களுக்கு அப்பாற்பட்டு ஸிந்திக்க வேண்டும். ராமஸாமி நாயக்கருக்கும் சிலை இருக்கிறதே?

அன்புடன்
மவுஸ்

Anonymous said...

//மகேந்திரன்.பெ said...
முதலில் கல்கி என்றீர்கள் பிறகு துக்ளக் இப்போது முரசொலி சரி முரசொலி ஆதாரமாவது தரமுடியுமா? உங்களை நினைத்தால் சிரிப்புத்தான் வருகிறது
//

வலைப்பதிவர் கூட்டம் உட்லண்ட்ஸ் ஓட்டலில் போண்டாவுடன் ஆரம்பித்துவிட்டது. இதைப் பற்றி பேச இன்று நேரமில்லை. கூட்டத்தில் வலைப்பதிவர்களுடன் இது விசயமாக விவாதிக்கப்படும். எங்கும் ஓடி விட மாட்டேன். ஆதாரம் பிறகு தருகிறேன்.

அன்புடன்
போலி டோண்டு
சிம்ரன் ஆப்பக் கடை மேல்மாடி
துபாய்

Unknown said...

மவுஸ் நீங்கள் சொல்வது சரியென்ன்ற போதும் திரு ஞானி தனது கருத்தாக சிலைகளை வழிபடுவதை தவறு என்கிறார் அது எல்லா சிலைகளுக்குமா? நீங்கள் கடவுள் சிலைகளை வணங்குவது போல நாங்கள் மனிதனை வணங்குகிறோம், பெரியாருக்கு சிலை இருப்பது வேண்டாம விஷ்ணுவுக்கும் பிள்ளையாருக்கும் இருக்கும் போது பெரியார் சிலை வைத்தால் என்ன, நீங்கள் வணங்கும் லிங்கம் என்ன என்பதை அறிவீர்கள் அதையும் வணங்கும் போது பெரியார் சிலை என்ன மட்டமா?
பின் குறிப்பு இனிமேலும் பெரியாரை ராமஸாமி நாயக்கர் எனச் சொன்னால் எனக்கும் என்ன பதிலுக்கு எழுத வேண்டும் என்பது தெரியும்

உங்கள் நண்பன்(சரா) said...

மகி! "வழக்கம்போல்" முக்கியமான டிஸ்கசன்ல இருக்க போல!
நான் ஒதுங்கி நின்னுக்கிறேன்!
i will join later

அன்புடன்...
சரவணன்.

Unknown said...

//மகி! "வழக்கம்போல்" முக்கியமான டிஸ்கசன்ல இருக்க போல!
நான் ஒதுங்கி நின்னுக்கிறேன்! //


அதெல்லாம் இல்லீங்க சும்மா வாங்க
ஆட்டத்துக்கு

vivasayi said...

நல்ல பதிவு!

vivasayi said...

நல்ல பதிவு!

ரவி said...

அவர் ஏன் இப்படி எல்லாம் எழுதறாரு ? ஒன்னுமே புரியல போங்க..

ஆமாம் நீங்க ஏன் இப்படி எல்லாம் எழுதறீங்க..எல்லாம் புரிஞ்சுடுச்சு போங்க...

:))))

உங்க பதிவின் டெம்ப்ளேட்டை மாத்தினா நல்லா இருக்கும்...:)) அடிக்குது...

Anonymous said...

கெட்ட பதிவு

Anonymous said...

என் கூண்டில் எலி ஒன்று சிக்கிவிட்டது.ஆனால் அது தான் ஒரு புலி என்று சாதிக்கிறது.

எலிக்குட்டி சோதனை செய்தேன். இனிமேல் அது சாதிக்காது. காரணம் போலி டோண்டு கூறியது போல் அதை வறுத்து தின்றேன்.

இனிமே எங்க அது பேசறது ?

அதனால் ஒரு கூண்டு ஒன்று செய்து, அடுத்த எலியை பிடிக்க முயற்ச்சி செய்துகொண்டு இருக்கிறேன்.

ஆனால் இது உண்மையான கூண்டு இல்லை என்றும், மெய்யான கூண்டு தன்னிடம் தான் உள்ளது என்றும், மிருகங்கள் பாஷயை டிராண்ஸிலேட்டு செய்யும் காட்டுவாசி ஒருவர் கூறினார்.

அவர் மேலும் கூவுகையில், அவர்கள் காட்டு சாதியில் கற்பு என்பது யாருக்கும் தெரியாது என்று கூவினார்.

ஆமா, என்னுடைய கூண்டு உண்மையிலேயே போலி கூண்டா ? நான் இனிமே எலி புடிக்க முடியுமா முடியாதா ?

Anonymous said...

ஒரு பின்னூட்டம் போட்டு எவ்வளவு நேரம் வெயிற் செய்வது, சீக்கிரம் பப்மிலிஸ் செய்யப்பா..ஏதாவது ரீ.வி. கீவி பாத்துக்கினு இருக்கியா ?

ரவி said...

///திடீர் பரபரப்பை பரப்ப நினைக்கிறவங்கதான் ஞானி மாதிரி ஆட்கள் தான///

என்ன மொக்கை உ.கு இது..நல்லா ரெண்டுவரி வாங்கி விடாம ?

Anonymous said...

ஆமாம், ஜானி ஜானி அப்படீங்கறீங்களே? அவர் உண்மையில் எந்த புத்தகம் எழுதினார் ?

Anonymous said...

ஞாநி அவர் கருத்தை சொல்லியிருக்கிறார்.நீங்கள் உங்கள் கருத்தை சொல்லியிருக்கிறீர்கள்...இதிலெங்கே வந்தது 'பித்தலாட்டம்'...பொருந்தவில்லையே..ஞானியின் கருத்துக்களோடு மோதுவது தவறேயில்லை..ஏற்கனவே ஞாநியை பற்றி ஒரு முடிவு எடுத்துவிட்டு இக்கட்டுரை எழுதியது போல் உள்ளது.

Unknown said...

செல்வமணி அவர்களே முன்னொறு கருத்தும் அதில் இருந்து மாறுபட்டு வெவ்வேறு கருத்தும் எந்த முகாந்திரமும் இல்லாமல் மாறி மாறி மற்றிச் சொன்னால் அது பித்தலாட்டம்தானே?