Thursday, September 27, 2007

தம்பி, அய்யனார், குசும்பன், அபிஅப்பா, மகேந்திரனாகிய நான் மற்றும் குசும்பன் - ஒரு பின் நவீனத்துவ பிதற்றல்


முடிவற்ற சூனிய பிரதேசத்தில் நிலைகொள்ளாமல் தவித்திடும் என் வாழ்வின் எல்லா பிராந்தியங்களும் தன் இருத்தலை சுய விளம்பரிப்பதற்க்காக ஏதாவது ஒரு சிறு தனலை பற்றமுடியுமா என எண்ணிய படியே காலையில் கண்விழிக்கும் எனக்கு ஏதாவது ஒரு கடை வாசல் திறந்தே கிடக்கிறதுதான். தன் எல்லா வாழ்வின் சூனியங்களையும் எதாவது ஒரு கால வெளியற்ற இருட்டுப் புள்ளியில் ஒளித்து வைத்துவிட முடியாதா என ஏங்கும் முப்பத்து சொச்சம் விளிம்பு நிலை மாந்தரின் எல்லா விளக்கங்களும் தனது வழியின் இரண்டு கண்களை மட்டுமாவது சிறக்க சிலாகித்த படியே காற்றும் அசையாத கடை மடு வழியே கால்கள் தள்ளாட நடக்கிறார் அய்யனார். எதிரே மார்புக் கச்சை பிதுங்க மது போதை கொண்டுவரும் விடுதி நடனப் பெண்ணின் கால் கொலுசில் சிக்கி சின்னாபின்னமானது தெரியாமலேயே எதாவது ஒரு பற்றுக்கிளை கிடைக்காதா என பின்பக்கம் பார்த்தே யோசித்த படியும் அடுத்த பெக்கை ஊற்றிய படியே மாலன் அரசியல் என்ன பெரிய மயிரா என்றபடியே அவரின் இலங்கா விருது பற்றி விசாரணைகளை அள்ளித் தெளித்த படியே இருக்கும் அய்யனாரின் கரம் பற்ற தம்பியின் தகிடுதத்தங்கள். விளிம்பின் முடிவில் வாழும் மாந்தர் எல்லாம் என் பக்கம் பாருங்கள் என்றபடியே பின் நவீனத்துவ வாதியாய் ஆக என்ன கொடுமையெல்லாம் செய்ய வேண்டும் என இல்லாத மாணவன் ஒருவனுக்கு பாடம் எடுத்த கோபம் கண்களில் பல்விளக்கி கொப்புளிக்க அடுத்த பாட்டில் பீரையாவது அரை நிம்மதியோடாவதாவது குடிக்க விடுவானா குசும்பன் என்ற பழைய ஞாபங்களை கிளறியபடியே ஈரான் பயனம் பாவனா காதல் என ஏதாவது ஒன்றை எழுதியபடியே என்ன கருமம்டா இந்த வலைப்பதிவு என எங்கும் கிடக்கும் சாக்கடை பன்றிகளை ஒதுக்க முடியாமல் குச்சி கொண்டு விரட்டிடும் கொலைவெறீப்பதிவர்களுக்கு கொஞ்சமாவது ஆசுவாசம் கிடைக்க வழிசெய்வோம் என இந்த வார அபி அப்பா நட்சத்திரம் இந்த கொடுமைகள் எல்லாம் இங்கேதான் நடக்க வேண்டுமா என் எண்ணிய படியே நைட் ஷிப்ட்டில் வேலை பார்க்கும் கோபி என பின் நவீனம் பீரா" யப்பட்ட ஒரு முன்னிரவு வேளையின் மகேந்திரன் சிறுநீர்க்குழாயில் கல்லாமே யாருக்கவது தெரியுமா என எல்லாரின் வயிற்றிலும் இருக்கும் எதாவது ஒன்றைப் பற்றி கேள்விகள் கேட்டபடியே வந்த அபி அப்பா அடர் கானகப் புலி அய்யனாரங்கே இருப்பதை பார்த்து ஜெர்க் விட்ட படியே மாது கொண்டு வந்த மதுவில் மூழ்க எத்தணிக்கும் அகோர காலை வேலையின் முற்பகுதிக்குப் பின்வந்த ஏதாவது ஒரு சிறிய இடைவேளையின் மைய்ய வெளிச்சம் மாலையாய் மங்கும் ரசங்கள் நிரப்பப்பட்ட ராத்திரிகளின் மிச்சம் இருக்கும் காலிப் புட்டிகளையும் காய்ந்த பரோட்டாக்களையும் கொஞ்சமாய் மிச்சம் இருந்த ஊருகாய் பாட்டிலையும் கைவைத்து துடைத்து நக்கியபடியே மதுவிடுதிப் மங்கையின் கொங்கைகளில் கொஞ்சம் கிக்காகி கிறங்கிக் கிடந்த அய்யனாரையும் எழுப்பி வருவதற்குள் ஏறியிருந்த ஒரு பாட்டில் பீரும் அதன் ஒத்துவராத சுவையும் பினாவானா ஆக விடாமல் மற்றவர்கள் செய்த மது களியாட்ட கோப வெறியில் கொஞ்சம் கொலை வெறி கொண்ட தம்பியின் கடைசி வரியாக வந்த வாந்திக் கவிதையில் ஹைக்கூவும் பின்நவீனமும் மரபுக் கவிதையும் சிலாக்கியங்களும் ஜெய மோகனும், மிலோஸ் போர்மெனும், தி மேன் இன் தி மூன் படமும் வின் டாக்கர்சும் அகிரோ க்ரோசாவும் சாரு நிவேதிதாவின் நான் லீனியரும் இன்னும் மிச்ச சொச்சம் இருக்கும் இலக்கிய முகமூடிகளும் தூக்கு போட்டு தொங்கும் முன்னரே விடுதிக் காவலாளியின் இருப்பை சமாளிக்க முடியாமல் என்ன கருமத்தியாவது செய்ங்கடா என உளறிய படியே இருட்டில் கரைந்து போனது " பின் நவீனத்தினை இன்றைக்காவது விளக்குவார்களா என ஆவலோடு வந்திருந்த என் கேள்வி"

இப் பதிவுக்கு காரணமான தம்பியின் கொலைவெறிப் பதிவு இங்கே யாராவது என்னை கோபித்தால் அங்கே போய் கும்மவும்

6 comments:

அபி அப்பா said...

அடங்கொய்யால! அடி பின்னி பெடலெடுத்து தல சுத்தவச்சு, மானிட்டர்ல வாந்தி எடுத்து,நொந்து நூலாகி,காஞ்சு கருவாடா ஆக்கிபுடுச்சிப்பா இந்த பதிவு அருமை அருமை:-))

கப்பி | Kappi said...

அடங்கொக்கமக்கா :))

Unknown said...

யாருமே வா படிக்கல?

பின்னவீனம் எழுதுனா எல்லாருமே பிடரியில் கால்பட பறக்குறாங்கப்பா

குசும்பன் said...

எங்க மகி ஆளயே காணும், போன் செஞ்சா ஆபிஸ் வருவது இல்லை என்கிறார்கள், ஸ்டோன் எப்படி இருக்கு? முடிந்தால் ஆபிஸ் நம்பருக்கு போன் செய்யவும்!

கதிர் said...

இத படிச்சௌடனே சுடு தண்ணில சூ கழுவின மாதிரி இருக்கு. எனக்கே இப்படின்னா அய்யனாருக்கு....
அவ்வ்வ்வ்வ்வ்

ஆசிட்ட்டா.....

Unknown said...

ஆகா பதிவுக்கு சம்பந்தமான பின்னூட்டம் போட்டு இந்த மகியோட மானத்த காப்பாத்துன தம்பி அண்ணே நீங்க வாளுக