Showing posts with label பார்ப்பனீயம். Show all posts
Showing posts with label பார்ப்பனீயம். Show all posts

Thursday, August 16, 2007

வடகலை அய்யங்கார்களுக்கும் இடஒதுக்கீடு தேவை..

அரசு இட ஒதுக்கீடுகள் சாதி சார்பாக இருப்பதற்கு ஆயிரம் ஏற்கத்தக்க காரணங்கள் இருக்கின்றன. அதே சமயத்தில் சாதிரீதியாக இட ஒதுக்கீட்டில் உயர்சாதியைச் சேர்ந்த ஏழ்மை நிலையில் இருப்பவர்களில் வெகு சிலர் பாதிக்கப்படுவர்களாக இருக்கிறார்கள் என்பதையும் மறுப்பதற்கில்லை. (யப்பா பாலா வந்து திட்ட முடியாத அளவுக்கு ஒரு பதிவுக்கு கரு கிடைச்சிடுச்சி) :)

உயர்சாதி வகுப்பில் பிராமணர்கள் என்ற பிரிவில் தமிழகத்தை பொருத்து இரு பெரும் பிரிவுகளாக இருப்பது ஒன்று ஐயர் அடுத்து ஐயங்கார். ஐயர்கள் கோத்திரத்தில் பலபிரிவுகள் இருக்கின்றன என்பதை திருமண வரன் விளம்பரங்களைப் படித்தவர்களுக்கு நன்கு தெரியும். அதுபோல ஐயங்கார் என்ற பிராமணப் பிரிவில் முக்கிய இரண்டு பிரிவுகள் வடகலை மற்றும் தென்கலை. நாம வெறுபாடுகளை வைத்தே இவர்களை அடையாளம் கண்டு கொள்ளலாம் என்பது எந்த அளவுக்கு உண்மையோ அதே போன்று நிறத்தை வைத்தும் இவர்களை வடகலை ஐயங்கார் என்றும் தென்கலை ஐயங்கார் என்றும் கண்டு கொள்ளலாம்.

பார்ப்பனர்களுக்கே உரிய வெளிரிய மஞ்சள் நிறத்தில் இருப்பவர்கள் தென்கலை ஐயங்கார்கள், தமிழர்களின் பொது நிறமான மாநிறம் அல்லது கருப்பு நிறத்துடன் இருப்பவர்கள் வடகலை ஐயங்கார்கள். எல்லோரும் பிராமணர்கள் என்று இருக்கும் போது வடகலை ஐயங்கார்கள் மட்டும் ஏன் கருப்பாக இருக்கிறார்கள் என்று கேள்வி பலருக்கும் இருக்கக்கூடும். அதற்கு நாம் சமய வரலாற்றை திரும்பிப் பார்க்க வேண்டும்(நன்றி: ஜோசப் சார்).

இராமானுஜர் காலத்தில் தீண்டாமை கொடுமை தலை விரித்தாடியது, அதனைக் கண்டு மனம் நொந்த இராமானுஜர் மாற்றுவழியை கொண்டு வந்தார். பார்ப்பனர்கள் அல்லாதவர்களையும் பார்பனர்கள் ஆக்கிவிட்டால் தீண்டாமை கொடுமை தனியும் என்று நினைத்து பலதரப்பட்ட மக்களையும் அரவணைக்க ஆரம்பித்தார். அதன்படி மீனவர்களாக மீன்பிடித்துக் கொண்டவர்களிடம் வைணவத்தின் பெருமைகளைக் கூறி அவர்களை அரவணைத்தார். பிராமண பெரியவர்கள் தங்கள் மீனவ குலத்திடம் அன்பு செலுத்துவதை நினைத்து நெகிழ்ச்சியுற்றனர் அம்மீனவர்கள். பின்பு அவர்களையும், இன்னும் அந்நாளில் தாழ்த்தப்ப்பட்டு இருந்த பலரையும் வைணவ பிராமணர்களாக மாற்றுவதற்காக அவர்களுக்கு தீட்சை கொடுத்தார் இராமானுஜர். (பாத்துக்கோங்க வடகலை அய்யங்கார்கள் வந்தேரிகள் இல்லை )




தீட்சையின் போது இனிமேல் யாரும் தங்கள் பழைய சாதியைச் சொல்லிக் கொள்ளக் கூடாது என்று சத்திய பிரமாணமும் பெறப்பட்டது.(அட பாவமே இது தெரியாதா அவங்களுக்கு )இராமனுஜருக்குப் பின்பு ஐயங்கார்களில் இருந்த ஒரிஜினல் ஐயங்கார்கள் இந்த மாற்றத்தை ஏற்றாலும் அவர்களுடன் இரத்த உறவுகள் வைத்துக் கொள்ள விரும்பவில்லை. ஆகையால் புதிதாத ஐயங்கார்களாக மாறிய முன்னாள் மீனவர்களை அவர்கள் கூரேசர் வழிவாந்த வடகலை ஐயங்கார் என்று அடையாளப்படுத்தி வைத்தனர். அந்த அடையாளம் அப்படியே நிலைக்க வடகலை ஐயங்கார்களின் கரிய நிறமும் ஒரு காரணமாக இருந்தது. பழைய உண்மைகள் தெரியும் என்பதால், இன்றைய காலகட்டத்திலும் வடகலை ஐயங்கார்கள் வீட்டில் தென்கலை ஐயங்கார்கள் சம்பந்தம் வைத்துக் கொள்வது மிக மிக குறைவு.

ஆரியர்கள் குடியேறியவர்கள் என்ற வாதம் இருந்தாலும் வடகலை ஐயங்கார்கள் எனப்படும் பிராமணப் பிரிவுகள் இம்மண்ணின் மைந்தர்கள். தீண்டாமை இன்னும் பல சமூக கொடுமைகளில் இருந்து தங்களை விடுவித்துக் கொண்டவர்கள். இன்றைய கால ஓட்டத்தில் இடஒதுக்கீடு முறை இருப்பதால் மிகவும் பாதிப்புக்கு உள்ளாகுபவர்கள் வடகலை ஐயங்கார்களே. காரணம் மற்ற பிராமணப் பிரிவுகள் போல் இவர்களுக்கு பெரிய கோவில் மானியங்களோ, அரசர்களால் பெரிய அளவில் பொருளுதவி ஒதுக்கீடு செய்யவில்லை என்பதால் ஏழைகளாகவே கோவில்களில் கூலி வேலை செய்து சொற்ப வருமானத்திலேயே வாழ்ந்து வந்தார்கள்.

நமக்குத் தெரிந்து வடகலை ஐயங்கார்கள் இன்னும் அடிப்படை வசதி இல்லாமல் அன்றாட வருமானத்தில் வயிற்றைக்கழுவி வருகிறார்கள். எனவே அரசுகள் இடஒதுக்கீடு முறையில் வடகலை அய்யங்கார்களுக்கு முன்னாள் மீனவர்களக இருந்த பூர்வ குடிகள் என்றமுறையில் சமய வல்லுனர்களைக் கலந்து ஆலோசித்து, அவர்கள் ஏழ்மை நிலையை கருத்தில் கொண்டு சாதி ரீதியான இட ஒதுக்கீட்டில் 'பிற்பட்டுத்தப்பட்டோர்' பட்டியலில் இவர்களையும் இணைத்துக் கொள்ள வேண்டும்.