Thursday, August 16, 2007

வடகலை அய்யங்கார்களுக்கும் இடஒதுக்கீடு தேவை..

அரசு இட ஒதுக்கீடுகள் சாதி சார்பாக இருப்பதற்கு ஆயிரம் ஏற்கத்தக்க காரணங்கள் இருக்கின்றன. அதே சமயத்தில் சாதிரீதியாக இட ஒதுக்கீட்டில் உயர்சாதியைச் சேர்ந்த ஏழ்மை நிலையில் இருப்பவர்களில் வெகு சிலர் பாதிக்கப்படுவர்களாக இருக்கிறார்கள் என்பதையும் மறுப்பதற்கில்லை. (யப்பா பாலா வந்து திட்ட முடியாத அளவுக்கு ஒரு பதிவுக்கு கரு கிடைச்சிடுச்சி) :)

உயர்சாதி வகுப்பில் பிராமணர்கள் என்ற பிரிவில் தமிழகத்தை பொருத்து இரு பெரும் பிரிவுகளாக இருப்பது ஒன்று ஐயர் அடுத்து ஐயங்கார். ஐயர்கள் கோத்திரத்தில் பலபிரிவுகள் இருக்கின்றன என்பதை திருமண வரன் விளம்பரங்களைப் படித்தவர்களுக்கு நன்கு தெரியும். அதுபோல ஐயங்கார் என்ற பிராமணப் பிரிவில் முக்கிய இரண்டு பிரிவுகள் வடகலை மற்றும் தென்கலை. நாம வெறுபாடுகளை வைத்தே இவர்களை அடையாளம் கண்டு கொள்ளலாம் என்பது எந்த அளவுக்கு உண்மையோ அதே போன்று நிறத்தை வைத்தும் இவர்களை வடகலை ஐயங்கார் என்றும் தென்கலை ஐயங்கார் என்றும் கண்டு கொள்ளலாம்.

பார்ப்பனர்களுக்கே உரிய வெளிரிய மஞ்சள் நிறத்தில் இருப்பவர்கள் தென்கலை ஐயங்கார்கள், தமிழர்களின் பொது நிறமான மாநிறம் அல்லது கருப்பு நிறத்துடன் இருப்பவர்கள் வடகலை ஐயங்கார்கள். எல்லோரும் பிராமணர்கள் என்று இருக்கும் போது வடகலை ஐயங்கார்கள் மட்டும் ஏன் கருப்பாக இருக்கிறார்கள் என்று கேள்வி பலருக்கும் இருக்கக்கூடும். அதற்கு நாம் சமய வரலாற்றை திரும்பிப் பார்க்க வேண்டும்(நன்றி: ஜோசப் சார்).

இராமானுஜர் காலத்தில் தீண்டாமை கொடுமை தலை விரித்தாடியது, அதனைக் கண்டு மனம் நொந்த இராமானுஜர் மாற்றுவழியை கொண்டு வந்தார். பார்ப்பனர்கள் அல்லாதவர்களையும் பார்பனர்கள் ஆக்கிவிட்டால் தீண்டாமை கொடுமை தனியும் என்று நினைத்து பலதரப்பட்ட மக்களையும் அரவணைக்க ஆரம்பித்தார். அதன்படி மீனவர்களாக மீன்பிடித்துக் கொண்டவர்களிடம் வைணவத்தின் பெருமைகளைக் கூறி அவர்களை அரவணைத்தார். பிராமண பெரியவர்கள் தங்கள் மீனவ குலத்திடம் அன்பு செலுத்துவதை நினைத்து நெகிழ்ச்சியுற்றனர் அம்மீனவர்கள். பின்பு அவர்களையும், இன்னும் அந்நாளில் தாழ்த்தப்ப்பட்டு இருந்த பலரையும் வைணவ பிராமணர்களாக மாற்றுவதற்காக அவர்களுக்கு தீட்சை கொடுத்தார் இராமானுஜர். (பாத்துக்கோங்க வடகலை அய்யங்கார்கள் வந்தேரிகள் இல்லை )
தீட்சையின் போது இனிமேல் யாரும் தங்கள் பழைய சாதியைச் சொல்லிக் கொள்ளக் கூடாது என்று சத்திய பிரமாணமும் பெறப்பட்டது.(அட பாவமே இது தெரியாதா அவங்களுக்கு )இராமனுஜருக்குப் பின்பு ஐயங்கார்களில் இருந்த ஒரிஜினல் ஐயங்கார்கள் இந்த மாற்றத்தை ஏற்றாலும் அவர்களுடன் இரத்த உறவுகள் வைத்துக் கொள்ள விரும்பவில்லை. ஆகையால் புதிதாத ஐயங்கார்களாக மாறிய முன்னாள் மீனவர்களை அவர்கள் கூரேசர் வழிவாந்த வடகலை ஐயங்கார் என்று அடையாளப்படுத்தி வைத்தனர். அந்த அடையாளம் அப்படியே நிலைக்க வடகலை ஐயங்கார்களின் கரிய நிறமும் ஒரு காரணமாக இருந்தது. பழைய உண்மைகள் தெரியும் என்பதால், இன்றைய காலகட்டத்திலும் வடகலை ஐயங்கார்கள் வீட்டில் தென்கலை ஐயங்கார்கள் சம்பந்தம் வைத்துக் கொள்வது மிக மிக குறைவு.

ஆரியர்கள் குடியேறியவர்கள் என்ற வாதம் இருந்தாலும் வடகலை ஐயங்கார்கள் எனப்படும் பிராமணப் பிரிவுகள் இம்மண்ணின் மைந்தர்கள். தீண்டாமை இன்னும் பல சமூக கொடுமைகளில் இருந்து தங்களை விடுவித்துக் கொண்டவர்கள். இன்றைய கால ஓட்டத்தில் இடஒதுக்கீடு முறை இருப்பதால் மிகவும் பாதிப்புக்கு உள்ளாகுபவர்கள் வடகலை ஐயங்கார்களே. காரணம் மற்ற பிராமணப் பிரிவுகள் போல் இவர்களுக்கு பெரிய கோவில் மானியங்களோ, அரசர்களால் பெரிய அளவில் பொருளுதவி ஒதுக்கீடு செய்யவில்லை என்பதால் ஏழைகளாகவே கோவில்களில் கூலி வேலை செய்து சொற்ப வருமானத்திலேயே வாழ்ந்து வந்தார்கள்.

நமக்குத் தெரிந்து வடகலை ஐயங்கார்கள் இன்னும் அடிப்படை வசதி இல்லாமல் அன்றாட வருமானத்தில் வயிற்றைக்கழுவி வருகிறார்கள். எனவே அரசுகள் இடஒதுக்கீடு முறையில் வடகலை அய்யங்கார்களுக்கு முன்னாள் மீனவர்களக இருந்த பூர்வ குடிகள் என்றமுறையில் சமய வல்லுனர்களைக் கலந்து ஆலோசித்து, அவர்கள் ஏழ்மை நிலையை கருத்தில் கொண்டு சாதி ரீதியான இட ஒதுக்கீட்டில் 'பிற்பட்டுத்தப்பட்டோர்' பட்டியலில் இவர்களையும் இணைத்துக் கொள்ள வேண்டும்.

9 comments:

கருப்பு said...

அப்போ நம்ம நோண்டு சார் வந்தேறி இல்லை. அவருக்கு இட ஒதிக்கீடு கொடுக்க வேண்டும் என்று சொல்றீங்க.

பிறகு ஏன் இரட்டை டம்ளர் முறையை ஆதரிக்கிறார் அந்தாள்?

Anonymous said...

Hello yenna yethavathu Iyangar ponnai love pannuriya? Ippadiyellam balti adikira?

ஜெகதீசன் said...

மகி,
இவர்களுக்கு கட்டாயம் இடஒதுக்கீடு தேவை தான்.

ஒரு சிறு சந்தேகம்...
//தீண்டாமை இன்னும் பல சமூக கொடுமைகளில் இருந்து தங்களை விடுவித்துக் கொண்டவர்கள்.//
இவர்கள் தற்போது மற்ற சாதியினரிடம(பிற்படுத்தப்பட்ட/தாழ்த்தப்பட்ட) எப்படி நடந்து கொள்கிறார்கள்? மற்ற சாதியினரைத் தீண்டத்தகாதவராகப் பார்க்கிறார்களா இல்லை சம்மாகப் பார்க்கிறார்களா?

Anonymous said...

//"வடகலை அய்யங்கார்களுக்கும் இடஒதுக்கீடு தேவை.." //

உங்கள் வேண்டுகோளை மகரநெடுங்குழைக்காதன் நிச்சயம் நிறைவேற்றுவான்

Anonymous said...

//"வடகலை அய்யங்கார்களுக்கும் இடஒதுக்கீடு தேவை.." //

உங்கள் வேண்டுகோளை மகரநெடுங்குழைக்காதன் நிச்சயம் நிறைவேற்றுவான்

TBCD said...

அடுத்தது....தென்கலை ஆளுங்க..மைனாரிட்டி..அதனால அவங்களுக்கும்...கேப்பீங்க..அப்படித் தானே....

Anonymous said...

போண்டா பதிவர் போலிக்கு எதிரிகளை உருவாக்கினால் அதன் மூலம் போலியின் எதிர்களாக மாறியவர்கள் தனக்கு நண்பர்களாகி தன் இழிசெயலுக்கெல்லாம் பின்னால் நிற்பார்கள் என்று கணக்கை போட்டு செயல்படுத்துகிறாராம்.

இதை மிகவும் குள்ள நரி குணத்துடன் செய்வதாக மோப்பம் பிடித்தவர்கள் சொல்லுகிறார்கள்.

அதாவது தன்னுடைய நண்பர்கள், மற்றும் போண்டா பார்டியில் தன்னுடன் கலந்து கொள்பவர்களின் புகைப்படங்களையும், விவரங்களையும் தனது மெயிலில் வழி அனுப்பாமல் வேறு ஒரு மெயில் ஐடி மூலம் போலிக்கு அனுப்பி வைப்பாராம்.

போலி விவரத்தை ஆராயாமல், யார் அனுப்பினால் என்ன தனக்கு தகவல் வந்தால் போதும் என்று அந்த படத்தையும் விபரங்களையும் வெளி இட்டுவிடுகிறாராம்.

போலியின் வலைதளத்தில் புகைப்பட்டத்தை பார்த்த போண்டா பார்டியின் நண்பர்கள் குறிப்பாக பார்பன நண்பர்கள் அதன் பிறகு வேறு வழியே இல்லாமல் போண்டா பார்டியுடன் சேர்ந்து போலி வேட்டை ஆட தயார் ஆகிவிடுகிறார்களாம்.

ஆஸ்திரேலியாவுக்கு பக்கத்து தீவு அம்மாவின் புகைப்படம் போலி கையில் போனது இப்படித்தான் என்று விசயம் அமுக தொண்டர்கள் காதில் விழுந்துவிட்டது.

போண்டா பார்டியை சந்திக்க போகிறவர்கள் தனிப்பட்ட விபரங்களை கொடுக்காதீர்கள், புகைப்படம் எடுத்துக் கொள்ளாதீர்கள்.

போண்டா பார்டியின் சூழ்ச்சி அறியாத சின்ன மாமா சல்மாவாக மாறியது இப்படித்தான்.

Anonymous said...

நோண்டு ஒரிஜினல் பாப்பான் இல்லையா ? பாப்பான் மாதிரி பிலிம் காட்டுறான்

Anonymous said...

அன்புள்ள அய்யா,

தற்போதைய தமிழக அரசின் இடஒதுக்கீடு கொள்கை தமிழ் என்கிற அடிப்படையில் அல்லாமல் வெறும் ஜாதி என்கிற அடிப்படையில் உள்ளது.

நீங்கள் பிற்பட்டோர் பட்டியலை பார்த்தால் தமிழ் தவிற்று பிறமொழிகள் பேசும் ஜாதிகள் உள்ளன.

இதில் இந்தி பேசும் முஸ்லிம்கள், ஸவுராஷ்டிரியர்கள்; தெலுங்கு பேசும் ரெட்டியார்கள்,நாயுடுகள், கன்னடம் பேசும் கவுண்டர்கள் ஆகியோர்க்கெல்லாம் இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது.

தமிழ் பிராமிணர்களை அயோக்கியர்கள் என கருதும் தி மு க இந்தி பேசும் வடக்கர்கள் வாக்குகளை பெற இந்தி மொழி தேர்தல் பிரசுரங்களை வெளியிட்டது.

தமிழகத்தில் தமிழ் பிராமணர்கள் தமிழர்கள் அல்ல என பிரச்சாரம் செய்கின்றன ப ம க, தி மு க ஆகியோர்.

கர்ணாநிதிக்கு தமிழ் பிராமணர்கள் வெறுப்பு இந்தி மொழிக்கு மேலானது போலுள்ளது.

எனது வகுப்பில் இந்தி பேசும் மாணாக்கர் விலைக்கொடுத்து OBC சான்றிதழ் வாங்கி அண்ணா பல்கலைக்கழகம் சேர்ந்தார். இந்தி/உருது மட்டும் பேசும் முஸ்லிம் தமிழகத்தில் ஜாதிகள் இடஒதுக்கீடு பெறுகின்றனர்.

சென்னை விமானகத்தில் தமிழ் ஊழியர்கள் அவ்வளவு இல்லை. எல்லாமே இந்தி பேசுபவர்கள் தான்.

தமிழக CBSE பள்ளிகள் இந்தி திணிப்பு தான்.

இந்தி, கன்னடம், தெலுங்கு பேசும் ஜாதிகள் வருக; தமிழ் பிரமாணர் ஒழிக என கொள்கை வைத்துள்ளது தற்போதைய இடஒதுக்கீடு சட்டம்.

கர்நாடகத்தில் கன்னடத்திற்கு பிரதானம் அளிக்கப்படுகிறது. கன்னட பிராமணர் கன்னடர் ஆவார். தமிழகத்தில் தமிழ் பிராமணர் வெளியாள் எனவு இந்தி, உருது, கன்னடம், தெலுங்கு ஜாதிகள் தமிழர்கள் என்கிற பெயரில் இடஒதுக்கீடு வாங்குகின்றனர்.

தமிழக தமிழர்களுக்கா வெறும் ஜாதி கணக்கில் உகுந்தவருக்கா?